search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223226"

    • மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் திடீரென மாரிமுத்து பாக்கெட்டில் வைத்து இருந்த செல்போனை பறித்தனர்.
    • போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    கோவை:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ராசாக்கா பாளையத்தை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 33). விவசாயி. சம்பவத்தன்று இவர் தனது மொபட்டில் தனது தோட்டத்துக்கு சென்றார்.

    மொபட் பொள்ளாச்சி - பல்லடம் ரோட்டில் சென்றது. அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த 2 வாலிபர்கள் திடீரென மாரிமுத்து பாக்கெட்டில் வைத்து இருந்த செல்போன், 1,160 ரொக்க பணம் ஆகியவற்றை பறித்தனர்.

    இதில் நிலை தடுமாறி மாரிமுத்து கீழே விழுந்தார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் செல்போன் மற்றும் பணத்தை பறித்து தப்பிச் செல்ல முயன்ற ஒரு வாலிபரை மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை நெகமம் போலீசில் ஒப்படைத்தனர்.

    போலீசார் நடத்திய விசாரணையில் அவர் தொண்டாமுத்தூர் அருகே உள்ள ஓணாப்பாளையத்தை சேர்ந்த அப்துல் ரகுமான் (27) என்பது தெரிய வந்தது. பின்னர் போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். தப்பி ஓடிய கோட்டூரை சேர்ந்த ரமேஷ் (28) என்பவரை தேடி வருகிறார்கள்.  

    • ஆலோசனை கூட்டம் காரணமாக பி.ஏ.பி. விவசாயிகள் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
    • பி.ஏ.பி. திட்டத்தில் நீர்ப்பற்றாக்குறை உள்ள–தால் ஆனைம–லையாறு மற்றும் நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.

    பொள்ளாச்சி

    பி.ஏ.பி. திட்டத்தில் நீர்ப்பற்றாக்குறை உள்ள நிலையில் ஆழியாறு அணையில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை கோவை, திருப்பூர் மாவட்ட பி.ஏ.பி விவசாயிகள் சார்பில் பொள்ளாச்சியில் கடையடைப்பு மற்றும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் ஆழியார் கூட்டுக்குடிநீர் திட்டத்தை செயல்படுத்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், அது தொடர்பாக வருகிற 1-ந் தேதி சென்னை, தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

    இது தொடர்பாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தின் கீழ் உள்ள ஆழியார் அணையில் இருந்து ஓட்டன்சத்திரம் நகராட்சி பகுதிக்கு குடிநீர் வழங்குவதற்காக கூட்டு குடிநீர் திட்டம் ஒன்றை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் செயல்படுத்தி உத்தேசித்துள்ளது. இதற்கு பி.ஏ.பி.பாசன விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

    எனவே இப்பிரச்சினை குறித்து அனைத்து தரப்பினரையும் கலந்து ஆலோசித்து சுமுக தீர்வுகாண நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன், நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் வருகிற 1-ந் தேதி சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மேலும் இந்த கூட்டத்தில் பி.ஏ.பி.விவசாயிகள் பங்கேற்கவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை அலுவலகத்தில் விவசாய பிரதிநிதிகள், பரம்பிக்குளம்-ஆழியாறு திட்ட நீர் பாதுகாப்பு கூட்டமைப்பின் அவசர கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் வரும் 1-ந்் தேதி அரசு சார்பில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க முடிவு செய்யப்பட்டதுடன், நாளை நடைபெற இருந்த போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. அரசு நடத்தும் பேச்சுவார்த்தைக்கு பிறகு போராட்டம் குறித்து முடிவு எடுக்கப்படும் என பி.ஏ.பி. முன்னாள் திட்டக்குழு தலைவர் மெடிக்கல் பரமசிவம் தெரிவித்தார்.

    இதுகுறித்து பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. கூறியதாவது:-

    பி.ஏ.பி. திட்டத்தில் நீர்ப்பற்றாக்குறை உள்ள–தால் ஆனைம–லையாறு மற்றும் நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.

    தண்ணீர் பற்றாக்குறை உள்ள நிலையில் ஆனைம–லையாறு மற்றும் நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற விவசாயிகள் எதிர்பார்ப்பு உள்ள நிலையில் நீர்ப்பற்றாக்குறையை மேலும் அதிகமாக்கும் வகையில், பிஏபி திட்டத்தை ஆதாரமாக கொண்டு ஆழியாறு அணையிலிருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டுசெல்லும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தால் பிஏபி விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

    விவசாயிகள் போராட்டம் அறிவித்துள்ள நிலையில் திட்டத்தை அரசு கைவிடு வதை விட்டுவிட்டு பேச்சுவார்த்தைக்கு அழை–ப்பது விவசாயிககளையும், பொதுமக்களையும் ஏமாற்றும் செயல். பேச்சுவார்த்தை அவசியம் இல்லாத ஒன்று. திட்டத்தை அரசு கைவிடவேண்டும். அரசு திட்டத்தை கைவி–டாவிட்டால், திட்டத்தை கைவிட வைக்க அதிமுக போராடும்.இவ்வாறு அவர் கூறினார்.

    • மாணவிக்கும், மானூரை சேர்ந்த மணிகண்டன் ( வயது 29) என்பவருக்கு பழக்கம் ஏற்பட்டது.
    • இந்த காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவியை கண்டித்தனர்.

    கோவை:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன்முத்தூரை சேர்ந்த 17 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

    அப்போது மாணவிக்கும், மானூரை சேர்ந்த மணிகண்டன் ( வயது 29) என்பவருக்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும் செல்போனில் பேசியும் தங்களது காதலை வளர்த்து வந்தனர். இந்த காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவியை கண்டித்தனர்.

    இந்தநிலையில் மணிகண்டன் மாணவியை கடத்தி சென்று திருமணம் செய்வது என முடிவு செய்தார். அதன்படி தனது நண்பர்கள் 2 பேருடன் சேர்ந்து மாணவியை கடத்தினார்.

    பின்னர் பொன்மாலை யூரில் உள்ள விநாயகர் கோவில் வைத்து மாணவியை திருமணம் செய்தார். இது குறித்து மாணவியின் பெற்றோர் பொள்ளாச்சி தாலுகா போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி மாணவியை மீட்டனர்.

    பின்னர் அவரை திருமணம் செய்த மணிக ண்டன், அவரது நண்பர்கள் ராமாபட்டிணத்தை சேர்ந்த சின்னராஜ் (30), பொன்ராஜ் (27) ஆகியோரை கைது செய்தனர். பின்னர் 3 பேர் மீது போக்சோ சட்டத்தின் வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். 

    • 30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு பஸ் சீனிவாசபுரம் ெரயில்வே தரைப்பாலத்தின் கீழ் சென்று கொண்டிருந்தது.
    • எதிரே வந்த அரசு பஸ் மீது லாரி பக்கவாட்டில் எதிர்பாராதவிதமாக உரசியது.

    பொள்ளாச்சி:

    -

    சர்க்கார்பதியில் இருந்து பொள்ளாச்சிக்கு இன்று காலை அரசு பஸ் சென்றது.

    30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு பேருந்து சென்று கொண்டிருந்த நிலையில் சீனிவாசபுரம் ெரயில்வே தரைப்பாலத்தின் கீழ் சென்று கொண்டிருந்தது. அப்போது, திருச்சியிலிருந்து திருச்சூர் செல்லும் சிமெண்ட் லாரி தனக்கு முன்னால் வந்த வாகனத்தை முந்த முயன்றது.

    இதில் எதிரே வந்த அரசு பஸ் மீது லாரி பக்கவாட்டில் எதிர்பாராதவிதமாக உரசியது. லாரி உரசுவதை உணர்ந்த அரசு பஸ் டிரைவர் சுரேஷ்குமார் பஸ்சை இடது புறமாக திருப்பினார்.

    அப்போது தரை பாலத்தின் பக்கவாட்டில் அரசு பஸ்சின் முன்பக்கம் மோதியது. இந்த விபத்தில் அரசு பஸ்சில் பயணம் செய்த 7 பேர் லேசான காயம் அடைந்தனர். லாரி டிரைவர் முஹம்மது சாலி என்பவரிடம் பொள்ளாச்சி மேற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த 20-ந் தேதி திருமண ஆசை காட்டி மாணவியை சென்னைக்கு தனியார் பஸ்சில் கடத்தி சென்றார்.
    • ரெயில் நிலையத்தில் மாணவியுடன் சுற்றிய உட்டாம் பாவூரியை கைது செய்தனர்.

    கோவை:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாரை சேர்ந்த 16 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்தநிலையில் மாணவிக்கும், ஆழியாறு பூங்காவில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்த மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த உட்டாம் பாவூரி (வயது 27) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    இவர் கடந்த 20-ந் தேதி திருமண ஆசை காட்டி மாணவியை சென்னைக்கு தனியார் பஸ்சில் கடத்தி சென்றார். மேலும் அவர் பஸ்சில் செல்லும் போது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இது குறித்து சிறுமியின் தந்தை ஆழியாறு போலீசில் புகார் செய்தார்.

    ஆழியாறு போலீசார் சென்னை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் ரெயில் நிலையத்தில் மாணவியுடன் சுற்றிய உட்டாம் பாவூரியை கைது செய்தனர். பின்னர் அவர்களை ஆழியாறு போலீசில் ஒப்படைத்தனர்.

    10-ம் வகுப்பு மாணவியை திருமண ஆசை காட்டி கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்த உட்டாம் பாவூரி மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ெஜயிலில் அடைத்தனர்.

    • ஒட்டன்சத்திரத்துக்கு தண்ணீர் கொண்டு செல்ல எதிர்ப்பு
    • அமைச்சர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி

    பொள்ளாச்சி :

    பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணையில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை, திருப்பூர் மாவட்ட விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்தநிலையில் பொள்ளாச்சியில் வருகிற 27-ந்தேதி காலை 10 மணிக்கு பல்லடம் ரோட்டில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக திருமூர்த்தி பாசன விவசாயிகள் முடிவு செய்து உள்ளனர். இதற்கு அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

    மேலும் பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் நீர் பாதுகாப்பு கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில் பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபையில் நீர் பாது காப்பு கூட்டமைப்பின் கூட்டம் நடைபெற்றது. இதில் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் நித்தியானந்தம், தொழில் வர்த்தக சபை தலைவர் ஜி.டி.கோபால கிருஷ்ணன், திருமூர்த்தி நீர்தேக்க திட்ட குழு தலைவர் மெடிக்கல் பரமசிவம். மற்றும் பல்வேறு அமைப்பினர் கலந்துகொண்டனர்.

    கூட்ட முடிவில் பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் நீர் பாதுகாப்பு கூட்டமைப்பினர் கூறியதாவது:

    பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதிகளில் இன்னும் பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் வசதி செய்து கொடுக்காம லும், ஏற்கனவே குடிநீர் தட்டுப்பாடு உள்ள நிலையில் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் விவசாயத்திற் கும் போதுமான தண்ணீர் கிடைக்காததால் தரிசு நிலங்க ளாக உள்ளன. இந்த நிலையில் ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்வது ஏற்று கொள்ள முடியாது.

    இந்த திட்டத்தால ்கோவை, திருப்பூர் மாவட்ட விவசாயி கள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே இந்த திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. எனவே வருகிற 27-ந் தேதி நடைபெறும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அன்று மதியம் 1 மணி வரை கடைகளை அடைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் ஒட் டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்வதை கைவி டும் வரை தொடர் போராட்டங்கள் நடத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    இதற்கிடையே போராட்டத்தை கைவிடக் கோரி திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் அமைச்சர் வெள்ளக்கோவில் மு.பெ.சாமிநாதன் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் பி.ஏ.பி. விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. 

    • ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.
    • கோவை திருப்பூர் மாவட்டங்களில் 4.25 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    பொள்ளாச்சி:

    பரம்பிக்குளம் ஆழியாறு எனும் பிஏபி திட்டத்தில் தமிழகத்திற்கு 10 டிஎம்சி வரை தண்ணீர் பற்றாக்குறை இருந்து வருகிறது.

    தமிழகத்தில் கோவை திருப்பூர் மாவட்டங்களில் 4.25 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதுதவிர, கோவை திருப்பூர் மாவட்டங்களில் குடிநீர் ஆதாரமாகவும் இந்த திட்டம் இருந்து வருகிறது.

    மேலும், கேரளாவில் பாலக்காடு மாவட்டத்திற்கு பாசனத்துக்கும் குடிநீருக்கும் இந்த திட்டத்தில் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

    ஏற்கனவே தண்ணீர் பற்றாக்குறை இருந்து வரும் நிலையில், பிஏபி திட்டத்தை ஆதாரமாகக் கொண்டு ஆழியாறு அணையிலிருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது.

    இந்த திட்டத்தை கோவை திருப்பூர் மாவட்டவிவசாயிகள் பல்வேறு அமைப்புகள் பொதுமக்கள்கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.

    ஏற்கனவே விவசாயிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்ட நிலையில், இன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பொள்ளாச்சி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை கைவிடக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் பழனிச்சாமி, நிர்வாகிகள் பெரியசாமி, மணிகண்டன், கார்த்தி உட்பட பலர் முன்னிலை வகித்தனர்.

    500க்கும் அதிகமானோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில், திட்டத்தை கைவிடக் கோரியும், திட்டம் நிறைவேற்றப்பட்டால் கோவை, திருப்பூர் மாவட்ட விவசாயிகள் கடுமையாக பாதிக்கப் படுவதுடன் இரண்டு மாவட்ட குடிநீர் பற்றாக்குறையும் ஏற்படும் என்றும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    • பொள்ளாச்சியில் 27-ந் தேதி நடக்கிறது
    • விவசாயிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    பொள்ளாச்சி,

    ஆழியாரில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை கைவிடக்கோரி பொள்ளாச்சியில் வருகி 27-ந் தேதி 25 ஆயிரம் பேர் பங்கேற்கும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பிஏபி திட்டக்குழுத்தலைவர் தெரிவித்துள்ளார்.

    பிஏபி திட்டத்தில் தண்ணீர் பற்றாக்குறை இருந்துவரும் நிலையில், பிஏபி திட்டத்தை ஆதாரமாக கொண்டு ஆழியாறு அணையிலிருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.

    இந்த திட்டத்திற்கு கோவை, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பிஏபி விவசாயிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். நேற்றுமுன்தினம் ஆழியாறு அணை விவசாயிகள் பொள்ளாச்சியில் 1500-க்கும் அதிகமானோர் பங்கேற்று ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டுசெல்லும் திட்டத்தை கைவிடக்கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    இந்நிலையில், திருமூர்த்தி அணை பாசன சங்க நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோச னைக்கூட்டம் நெகமத் தில் தனியார் திருமண மண்ட பத்தில் நடைபெற்றது. இந்த ஆலோச னை கூட் டத்தில் திருமூர்த்தி அணை பாசன சங்கங் களை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர். ஆழியாறு அணை யிலிருந்து ஒட ்டன்சத் திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை கைவிட அரசுக ்கோரிக்கை வைத்து வருகிற 27-ந் தேதி பொள் ளாச்சியில் ஆர்ப ்பாட்டம் நடத்து வது என முடிவு செய்யப் பட்டது.

    இது குறித்து பிஏபி திட்டக் குழுத் தலைவர் மெடிக்கல் பரம சிவம் கூறு கையில், வருகிற 27-ந் தேதி நடைபெறும் ஆர்ப் பாட்டத்தில் பாலாறு படுகையை சேர்ந்த திருமூர்த்தி அணை பாசன நீரை பயன்படுத்தும் 25 ஆயிரம் விவ சாயிகள் பங்கேற்க உள்ளோம் என்றார். 

    • பெண்கள் உள்பட 3 பேர் மீது வழக்கு
    • காசு இல்லை பிறகு வாங்கி தருவதாக கூறினார்.

    கோவை, ஜூன்.8-

    பொள்ளாச்சி எறிப்பட்டி மதுரை வீரன் கோவில் வீதியை ேசர்ந்தவர் முருகன் (வயது 27). கூலி தொழிலாளி. இவரது உறவினர் அதே பகுதியை சேர்ந்தவர் வீரன் (41). கூலி தொழிலாளி.

    சம்பவத்தன்று முருகன் வீட்டின் அருகே நின்றிருந்தார். அப்போது வீரன் அங்கு வந்தார். சிறிது நேரம் முருகனிடம் பேசி கொண்டு இருந்தார். பின்னர் தனக்கு சாப்பிட பஜ்ஜி வாங்கி தருமாறு கேட்டார்.

    அதற்கு முருகன் தன்னிடம் தற்போது காசு இல்லை பிறகு வாங்கி தருவதாக கூறினார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை பார்த்த அங்கிருந்த வீரனின் மனைவி கொண்டம்மா (40) மற்றும் மகள் சத்தியா (21) அங்கு வந்தனர்.

    அவர்களும் முருகனிடம் தகராறில் ஈடுபட்டனர். இதில் ஆத்திரம் அடைந்த 3 பேரும் முருகனை தகாத வார்த்தைகளால் திட்டி அங்கிருந்த கல்லை எடுத்து சரமாறியாக தாக்கி மண்டையை உடைத்தனர்.

    பலத்த காயமடைந்த அவர் வலி தாங்க முடியாமல் சத்தம் போட்டு சுருண்டு விழுந்தார். அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். பின்னர் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுகுறித்து முருகன் நெகமம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் கணவன்-மனைவி- மகள் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல எதிர்ப்பு
    • ஆண்கள், பெண்கள் என 1500-க்கும் மேற்பட்ட வர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.

    பொள்ளாச்சி,

    பி.ஏ.பி. திட்டத்தில் நீர்ப்பற்றாக்குறை உள்ள நிலையில் ஆழியாறு அணையிலிருந்து ஒட்டன்சத்திரத்திற்கு குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்தை கைவிடக்கோரி ஆழியாறு விவசாயிகள் பொள்ளாச்சியில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    பரம்பிக்குளம் ஆழியாறு எனும் பிஏபி திட்டத்தில் தமிழகத்திற்கு 30.5 டி.எம்.சி. நீரும், கேரளத்திற்கு 19.55 டி.எம்.சி. நீரும் பகிர்மானம் செய்துகொள்ளவேண்டும். பிஏபி திட்டத்தில் தமிழகம் எடுத்துக்கொள்ள வேண்டிய 30.5 டி.எம்.சி. தண்ணீர் தமிழகம் ஒரு ஆண்டு கூட முழுமை யாக எடுத்துக ்கொள்ளமு டியவில்லை.

    ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 20 டிஎம்சி வரை மட்டுமே தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்கிறது.இந்த திட்டத்தில் தண்ணீர் பற்றாக்குறை இருந்து வருகிறது. இதனால் கடைக்கோடி பகுதி விவசாயிகளுக்கு பாசனத்திற்கும், குடிநீருக்கும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.பிஏபி திட்டத்தில் ஆழியாறு அணையில் இருந்து 50 ஆயிரம் ஏக்கரும், திருமூர்த்தி அணையில் இருந்து 3.77 லட்சம் ஏக்கரும் பாசனம் செய்யப்படுகிறது. இந்த பகுதிகளுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே தண்ணீர் கிடைக்கிறது.

    இந்தநிலையில், இங்கி ருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு பிஏபி விவசாயிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இன்று ஒட்டன் சத்திரத்துக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை கைவிட கோரிஆழியாறு அணை பாசன விவசாயிகள் ஆண்கள், பெண்கள் என 1500-க்கும் மேற்பட்ட வர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.பொள்ளாச்சி பல்லடம் சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஒட்டன்சத்திரத்துக்கு தண்ணீர் கொண்டு செல்வதால் இங்குள்ள 10 சட்டமன்ற தொகுதி விவசாயிகளும் பாதிக்கப்படுவர். எனவே இந்த திட்டத்தை அரசு உடனடியாக கைவிட வேண்டும். இல்லாவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம், இதன் தாக்கம் பாராளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும் என விவசாயிகள் தெரிவி த்தனர். 

    ×