search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223230"

    • வீடு உள்பட 3 இடங்களில் நகை-பொருட்கள் கொள்ளைபோனது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள மகாராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் பிச்சை கனி (வயது 35). இவர் சம்ப வத்தன்று வீட்டின் கதவை சாத்தி விட்டு வெளியே சென்று விட்டார். இதை நோட்டமிட்ட மர்ம நபர் கள் வீட்டுக்குள் புகுந்து பீரோவில் இருந்த ரூ.27 ஆயிரம் ரொக்கத்தை திருடிக்கொண்டு தப்பினர்.

    இதுகுறித்து பிச்சைகனி வத்திராயிருப்பு போலீசில் புகார் செய்தார். அதில், அம்பேத்கர் தெருவை சேர்ந்த தர்மராஜ், பால்பாண்டி ஆகியோர் மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    வத்திராயிருப்பு அருகே உள்ள மகாராஜபுரம் அம்பேத்கர் தெருைவ சேர்ந்தவர் கருப்பசாமி. இவர் மாவூத்து பகுதியில் வெல்டிங் பட்டறை வைத்துள்ளர்.

    சம்பவத்தன்று வெல்டிங் பட்டறையில் ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள குத்து விளக்கை மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர். இதுகுறித்து வத்திராயிருப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வத்திராயிருப்பு அருகே உள்ள ராமசாமியாபுரத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (33). இவரது வீட்டில் இருந்த 1.4 பவுன் நகை திருடுபோனது.

    இதுகுறித்து எம்.கூமாபட்டி போலீசில் சுப்பிரமணியன் புகார் செய்தார். அதில், நகை திருடு தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த ராமசாமி, சிவா, குட்டி ஆகியோர் மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    • தலைமறைவான கொள்ளையனை பிடிக்க 2 தனிப்படை
    • கைதான அரசு ஊழியர் சஸ்பெண்டு

    கன்னியாகுமரி :

    குளச்சல் அருகே பெத்தேல் புரம் படுவாக்க ரை பகுதியைச் சேர்ந்தவர் ஜார்ஜ் (வயது 71). இவர் செம்பன் விளை- திக்க ணங்கோடு சாலையில் நாட்டு மருத்துவ வைத்திய சாலை நடத்தி வருகிறார். கடந்த 24-ந் தேதி வைத்தியசாலைக்கு வந்த ஒருவர் வைத்தியர் ஜார்ஜின் கழுத்தில் கிடந்த 4 பவுன் நகையை பறித்து விட்டு தப்பி ஓடிவிட்டார்.

    இது குறித்து ஜார்ஜ் குளச்சல் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.அப்போது வைத்தியரிடம் நகை பறித்த கொள்ளை யனின் உருவம் சிக்கியது. மேலும் அவர் வெளியே தயாராக இருந்த மோட்டார் சைக்கிளில் தப்பி செல்வது போன்ற காட்சியும் பதிவாகி இருந்தது.

    அதை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி தலைமையிலான போலீசார் கொடுப்பைகுழி பகுதியில் ரோந்து சென்ற போது சந்தேகப்படும்படி யாக நின்ற 4 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தனர். அவர்களை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரித்த போது வைத்தியர் ஜார்ஜிடம் திருடியதை ஒப்புக்கொண்ட னர். இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்த னர்.

    கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்திய போதுபிடிப்பட்ட வர்கள் நட்டாலம் பொற்றைவிளை பகுதியை சேர்ந்த அபிஷேக்( 22 )சாந்தபுரத்தைச் சேர்ந்த சுபின் (19 )கொடுப்பை குழியை சேர்ந்த சிவசங்கு( 53 )அவரது மகன் ஜோதி (29) என்பது தெரிய வந்துள்ளது. போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் இந்த வழக்கில் சிவசங்குவின் மற்றொரு மகன் சிவா என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவரை பிடிக்க இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் அவரை தேடி வருகிறார்கள்.

    கைது செய்யப்பட்ட அபிஷேக் ராஜாக்கமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வேலை பார்த்து வருவதும் தெரிய வந்துள்ளது .அவரது தந்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் கருணை அடிப்ப டையில் அபிஷேகத்திற்கு வேலை கிடைத்துள்ளது. தற்பொழுது ஒரு வாரமாக அபிஷேக் விடுமுறையில் உள்ளார். இந்த நிலையில் அவரது நண்பருடன் சேர்ந்து இந்த கொள்ளையில் ஈடுபட்டு சிக்கி கொண்டார். அபிஷேக் கைது செய் யப்பட்டதையடுத்து அவர் மீது துறை வாரியாக நடவ டிக்கை எடுக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்ட னர்.

    இதைதொடர்ந்து அபிஷேக்கை சஸ்பெண்ட் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சிவசங்கு ஜோதி மீது குமரி மாவட்டத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும். கொள்ளை வழக்கில் கைதான 4 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை பறிக்கப்பட்டது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    அருப்புக்கோட்டை அருகே உள்ள மேலகுருணை குளத்தை சேர்ந்தவர் கலைச்செல்வி(36). இவர் அருப்புக்கோட்டையில் இருந்து மேலகுருணை குளத்திற்கு பஸ்சில் சென்றார். அப்போது டிக்கெட் எடுப்ப தற்காக தான் வைத்திருந்த பையில் மணிபர்சை பார்த்தபோது அது காணாமல் போயிருந்தது. அதில் 11/2 செயின் மற்றும் ரூ.5 ஆயிரம் பணம் வைத்திருந்தார். பஸ்சில் யாரோ மர்மநபர் அவரது மணிபர்சை திருடி சென்றுள்ளார். இதுகுறித்து அருப்புக்கோட்டை டவுன் போலீஸ் நிலையத்தில் கலைச்செல்வி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு சாமி கும்பிட வந்தபோது நடை அடைக்கப்பட்டதால் அங்கேயே தங்கி விட்டு மறுநாள் வழிபாடு செய்யலாம் என முடிவு செய்தனர்.
    • அப்போது தங்கள் பையில் வைத்திருந்த 6 பவுன் நகை, செல்போன், ரொக்க பணம் ரூ.6800 ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது

    தேனி:

    தேனி மாவட்டம் தேவாரம் போலீஸ் நிலையம் அருகே காளியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் மணிகண்டன் (வயது40). இவரது மனைவி மாலதி. இவர்கள் கேரளாவில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.

    சம்பவத்தன்று வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு சாமி கும்பிட வந்தனர். அப்ேபாது நடை அடைக்கப்பட்டதால் அங்கேயே தங்கி விட்டு மறுநாள் வழிபாடு செய்யலாம் என முடிவு செய்தனர்.

    அதன்படி கோவிலில் மாவிளக்கு எடுக்கும் இடத்தில் தூங்கிவிட்டு மறுநாள் காலையில் எழுந்து பார்த்தனர். அப்போது தங்கள் பையில் வைத்திருந்த 6 பவுன் நகை, செல்போன், ரொக்க பணம் ரூ.6800 ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.1 லட்சத்து 72 ஆயிரத்து 800 ஆகும். அக்கம் பக்கத்தில் விசாரித்தபோதும் தெரியவில்லை. இது குறித்து வீரபாண்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    அதன்பேரில் கோவிலில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு காமிரா க்களை ஆராய்ந்து கொள்ளையர்களை போலீ சார் தேடி வருகின்றனர். கோவிலுக்கு சாமி கும்பிட வந்த இடத்தில் நகை, பணம் கொள்ளை போன சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சி யை ஏற்படுத்தி உள்ளது.

    • மோட்டார் சைக்கிளில் தப்பியவர்களை பிடிக்க போலீசார் தீவிரம்
    • 4 பவுன் நகையை பறித்து விட்டு அந்த வாலிபர் ஓட்டம் எடுத்தார்.

    கன்னியாகுமரி :

    குளச்சல் அருகே உள்ள பெத்தேல்புரம் படுவாக்க ரையை சேர்ந்தவர் ஜார்ஜ் (வயது 71). இவர் செம்பொன் விளையில் நாட்டு மருத்துவ வைத்தியசாலை நடத்தி வருகிறார்.

    நேற்று மாலை இவர் நோயாளி ஒருவருக்கு மருந்து எண்ணை கொடுத்து விட்டு உள் அறையில் கையை கழுவிக்கொண்டிருந்தார். அப்போது வைத்திய சாலைக்குள் நுழைந்த ஒரு வாலிபர், ஜார்ஜை பின்னால் இருந்து கீழே தள்ளி விட்டுள்ளார். இதில் அவர் நிலைகுலைந்த நேரத்தில் கழுத்தில் கிடந்த 4 பவுன் நகையை பறித்து விட்டு அந்த வாலிபர் ஓட்டம் எடுத்தார்.

    இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த ஜார்ஜ், பின்னர் சுதாரித்துக் கொண்டு திருடன்...திருடன்.. என கூச்சலிட்ட படியே விரட்டினார். அப்போது சாலையில் 2 பேர் மோட்டார் சைக்கிளுடன் தயாராக இருந்துள்ளனர். நகை பறித்த வாலிபர் அந்த மோட்டார் சைக்கிளில் ஏறி யதும், 3 பேரும் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.

    கொள்ளையர்கள் சென்ற மோட்டார் சைக்கிள், குளச்சல் ரோடு நோக்கி சென்றது. இந்த சம்பவம் குறித்து குளச்சல் போலீசில் ஜார்ஜ் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி னர்.

    மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி.கேமரா பதிவுகளை கைப்பற்றியும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். வைத்திய சாலைக்குள் புகுந்து வைத்தி யரிடம் நகை பறித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கோவிலுக்கு சென்று மீண்டும் திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் கதவு திறந்து கிடந்துள்ளது.
    • பீரோவில் இருந்த 18 பவுன் தங்கம், 100 கிராம் வெள்ளி நகைகள் மற்றும் பணம் ரூ.5000 மாயமாகி இருந்தது.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி அருகே தேவாரத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 40). இவர் செங்கல் காலவாசல் வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று தனது குடும்பத்துடன் மதுரை பாண்டி கோவிலுக்கு சென்றார்.

    அவசரத்தில் வீட்டு கதவை பூட்டாமல் சென்றுள்ளனர். மீண்டும் திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் கதவு திறந்து கிடந்துள்ளது.

    பீரோவில் இருந்த 18 பவுன் தங்கம், 100 கிராம் வெள்ளி நகைகள் மற்றும் பணம் ரூ.5000 மாயமாகி இருந்தது. இது குறித்து தேவாரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து நகை, பணம் திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    தேவாரம் அருகே கிருஷ்ணம்பட்டியைச் சேர்ந்தவர் அன்பரசு (31). இவர் சிலிண்டர் டெலிவரி செய்யும் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று குடும்பத்துடன் உறவினர் வீட்டுக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. மேலும் பொருட்களும் சிதறிக்கிடந்ததால் அதிர்ச்சியடைந்த அன்பரசு உள்ளே சென்று பார்த்தார்.

    அங்கு வெள்ளி க்கொலுசு உள்ளிட்ட பொருட்கள் திருடு போயிருந்தது. இது குறித்து தேவாரம் போலீசில் புகார் அளித்தார். அதில் சிலிண்டர் வாங்க வந்த மோகன் மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

    • பிஐஎஸ் ஹால்மார்க் நகைகளை மட்டுமே பொதுமக்கள் வாங்க வேண்டும்.
    • மதுரை ஸ்ரீபாலகோபாலன் ஜுவல்லரி உரிமையாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை ஸ்ரீபால கோபாலன் ஜூவல்லரி உரிமையாளர் எஸ்.டி.செந்தில்குமார் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    மத்திய அரசு கடந்த 1-ந் தேதி முதல் தங்க நகைகளுக்கு பிஐஎஸ் ஹால் மார்க் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்து ள்ளது. இனிமேல் பிஐஎஸ் தர குறியீடு கொண்ட தங்கம் மட்டுமே விற்கவும், வாங்கவும் வேண்டும்.

    ஹால் மார்க் முத்திரை என்பது 3 குறியீடுகளை கொண்டது. பிஐஎஸ் குறியீடு, தரம் மற்றும் எண் ஆகியவை இடம் பெற்று இருக்கும். எந்த தங்க நகையும் முழுமையான தங்கம் கிடையாது. கண்டிப்பாக இதர உலோகங்கள் சேர்க்கப் படும்.

    அதன் மூலம் தான் நமக்கு தேவையான தங்க நகைகளை வடிவமைக்க முடியும். எனவே தங்கத்துடன் சேர்க்கப்படும் உலோகங்களின் அளவை பொறுத்து அதன் விலை நிர்ணயம் செய்யப்படும்.

    ஹால் மார்க் முத்திரை 3 சதவீதமாக பிரிக்கப்ப டுகிறது. 22 கே 916 என்றால் 22 காரட் தங்கம். இதில் 91.6 சதவீதம் தங்கம் இடம் பெற்று இருக்கும். 18கே750 என்றால் 18 காரட் தங்கம். இதில் 75 சதவீதம் தங்கம் இடம் பெற்று இருக்கும். 14கே858 என்றால் 14 காரட் தங்கம். இதில் 58.5 சதவீதம் தங்கம் இடம் பெற்று இருக்கும்.

    உண்மையான ஹால்மா ர்க் முத்திரை பதித்த நகைகளை வாங்கும் போது அதற்கான நன்மை களும் நமக்கு கிடைக்கும். வங்கியில் தங்க நகை கடன் வாங்க, நகைகளை மீண்டும் விற்பனை செய்வதற்கு ஹால்மார்க் முத்திரை அவசியமாக உள்ளது.

    எனவே பொதுமக்கள் சிறிது சிறிதாக சேமித்து வாங்கும் தங்க நகைகளில் கண்டிப்பாக ஹால்மார்க் முத்திரை உள்ளதா? என்பதை கவனித்து வாங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தனிப்படை போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
    • வீடுகளில் நகை -பணத்தை கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை தெற்கு போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட இடங்களில் வீட்டின் பூட்டை உடைத்து இரவு நேரங்களில் குற்றச்சம்பவம் நடைபெற்று வந்தது.

    இதை அடுத்து போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் உத்தரவின் பேரில் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா மேற்பா ர்வையில் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் போலீஸ்காரர்கள் கோதண்ட பாணி, திருக்குமரன், அருண்மொழிவர்மன், ரகு ஆகியோர் அடங்கிய தனிப்ப டைகள் அமைக்கப்பட்டது.

    இந்த தனிப்படை போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

    இந்த நிலையில் ரகசிய தகவலின் அடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை மெயின் ரோடு கரசங்கால் பகுதியைச் சேர்ந்த வினோத் (வயது 26 ) என்பவரை பிடித்து விசாரித்தனர்.அதில் அவர் தஞ்சையில் வீடுகளில் நகை -பணத்தை கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டார்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து வினோத்தை கைது செய்தனர்.குற்றவாளியை பிடிப்ப தற்கு மாவட்ட சைபர் கிரைம் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் குபேந்திரன், பிரகதீஸ்வரன், திருவரம்பூர் உட்கோட்ட குற்ற பிரிவு தலைமை காவலர் ஹரி மற்றும் ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு தலைமை காவலர் ஜவகர் ஆகியோர் உறுதுணையாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    குற்றவாளியை விரைந்து பிடித்த தனிப்படை போலீசார் மற்றும் உறுதுணையாக இருந்த போலீசாரை , மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் பாராட்டினார்.

    • நேற்று மாலையில் குழந்தைகளை அழைப்பதற்காக சுனிதா மோட்டார் சைக்கிளில் சென்றார்.
    • 3 பேரும் முககவசம் அணிந்து பதிவு எண் இல்லாத மோட்டார் சைக்கிளில் தப்பி செல்வது போன்ற காட்சி பதிவு

    கன்னியாகுமரி :

    திருவட்டார் அருகே கொற்றிக்கோட்டம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 38), லாரி டிரைவர்.

    இவரது மனைவி சுனிதா (36) இவர்களுக்கு ஒரு மகளும் ஒருமகனும் உள்ளனர்.மகள்ஏற்ற கோடு பகுதி யில் உள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு மகன் மூன்றாம் வகுப்பு படித்து வந்தனர். தினமும் குழந்தைகளை பள்ளிக்கு மோட்டார் சைக்கிளில் சுனிதா அழைத்து செல்வது வழக்கம். நேற்று மாலையில் குழந்தைகளை அழைப்பதற்காக சுனிதா மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    மூவாற்றுமுகம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர் சுனிதாவின் கழுத்தில் கிடந்த 7 பவுன் நகையை பறித்தனர்.இதையடுத்து சுனிதா அவர்களுடன் போராடினார். உடனே அந்த நபர்கள் சுனிதாவை சரமாரியாக தாக்கினார்கள்.இதில் அவர் கீழே தவறி விழுந்தார். இதற்குள் அந்த வாலிபர்கள் நகையுடன் தப்பி ஓடிவிட்டனர்.

    படுகாயம் அடைந்த சுனிதாவை சிகிச்சைக்காக அந்த பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது பற்றி திருவட்டார் போலீசுக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. சப்-இன்ஸ் பெக்டர் ஜானகி மற்றும் போலீசார் சம்பவத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். சம்பவ இடத்தில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்த னர். அப்போது கொள்ளை யர்கள் 3 பேரும் முககவசம் அணிந்து பதிவு எண் இல்லாத மோட்டார் சைக்கிளில் தப்பி செல்வது போன்ற காட்சி பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டது. கொள்ளையடிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப் பட்டது.

    மேலும் மாவட்டம் முழு வதும் கொள்ளையர்கள் குறித்த விவரங்கள் தெரி விக்கப்பட்டு போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடு பட்டனர். நாகர்கோவில் கோட்டார் பகுதியில் உள்ள நகைக்கடையில் வாலிபர் ஒருவர் நகையை விற்பனை செய்வதற்காக வந்தார். நகை கடைக்காரர் நகை குறித்த விவரங்களை கேட்டறிந்தார்.அவர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தார். உடனே இது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு விரைந்து வந்து அந்த வாலிபரை பிடித்தனர்.

    பிடிபட்ட நபரிடம் விசாரணை நடத்திய போது அவர் திருவட்டார் பகுதியில் நடந்த செயின் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர் கொடுத்த தகவலின் பெயரில் மேலும் இரண்டு வாலிபர்களையும் போலீ சார் பிடித்தனர்.பிடிபட்ட மூன்று பேரையும் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பிடிபட்டவர்களில் ஒருவர் சுசீந்திரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். மற்ற இருவரும் குளச்சல் பகுதியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் மாவட்டத்தில் வேறு சில பகுதிகளிலும் கைவரிசை காட்டி இருப்பது தெரிய வந்துள்ளது.

    இதையடுத்து அவர்களிடம் தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • 6 இலக்க தனித்துவ அடையாள எண் கட்டாயம் இடம் பெற வேண்டும்.
    • நான்கு இலக்க ஹால்மார்க் தங்க நகைகளை ஏப்ரல் முதல் விற்க முடியாது.

    திருப்பூர் :

    வரும் ஏப்ரல் முதல் விற்பனை செய்யும் தங்க ஆபரணங்களில் முக்கோ ண வடிவிலான ஹால்மார்க் முத்திரையுடன், 6 இலக்க தனித்துவ அடையாள எண் கட்டாயம் இடம் பெற வேண்டும்என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அவை இல்லாத தங்க ஆபர ணங்களை விற்பனை செய்யக்கூடாது என்று அறி வித்துள்ளது.தங்கத்தின் தூய்மைக்கான சான்றிதழாக ஹால்மார்க் முத்திரை வழங்கப்படுகிறது.

    ஹால் மார்க்கின் நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்காக தனித்துவ அடையாள எண் வழங்க ப்படுகிறது.இதில் 3 இலக்கங்கள் ஆங்கில எழுத்துக்களாலும், 3 இலக்கங்கள் எண் வடி விலும் இருக்கும். இந்த அடையாள எண் முன்பு நான்கு இலக்கங்களில் வழங்கப்பட்டது. ஏப்ரல் முதல் 6 இலக்க அடையாள எண் கட்டா யமாக்கப்பட்டு ள்ளது. பழைய நான்கு இலக்க ஹால்மார்க் தங்க நகைகளை ஏப்ரல் முதல் விற்க முடியாது.இது குறித்து தர நிர்ணயத்தினர் கூறுகையில், வரும் ஏப்ரல் முதல் தங்க ஆபரணங்களில் 6 இலக்கங்களை கொண்ட தனித்துவ அடையாள எண் இருக்க வேண்டும். அப்படி இல்லாத நகைகள் பறிமுதல் செய்யப்படும்.சம்மந்த ப்பட்ட ஹால்மார்க்கிங் மையத்தின் மீதும், விற்ப னையாளர்கள் மீதும் நட வடிக்கை மேற்கொள்ள ப்படும்.

    பழைய நடைமுறை யில் ஹால்மார்க் முத்திரை மற்றும் 4 இலக்க எண்ணு டன் கூடிய தங்க ஆபரண ங்கள் விற்பனை யை முடிக்க கால அவகாசம் மார்ச் 31-ந் தேதி நிறை வடைகி றது என்றனர். நகை வியாபாரிகள் கூறுகையில், பழைய ஹால் மார்க் முத்திரை நகைகளை விற்பனை செய்ய ஓராண்டு கால அவகாசம் வழங்க வேண்டும். அதே சமயம் பழைய ஹால்மார்க் பதித்து விற்பனை செய்த நகை களின் தரத்துக்கு மக்களிடம் என்ன சொல்லப்போ கிறார்கள் என்பதை அறிவிக்க வேண்டும் என்றார். 

    • வங்கியில் இருந்த ரூ.40 ஆயிரம் பணத்தை கூகுள் பே மூலம் மாற்றிக் கொண்டனர்.
    • அவிநாசிபாளையம் போலீசார் சுங்கம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் ஒன்றியம் பெருந்தொழுவு பகுதியை சேர்ந்த ராசு என்பவரது மகன் சந்திரன் (வயது 47). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் இவரிடம் கரட்டுப்பாளையம் புதூரை சேர்ந்த சேகர் என்பவரது மனைவி கலாராணி என்கிற கலாவதி (45) என்பவர் சந்திரன் அலுவலகத்திற்கு வந்துள்ளார். தனக்கு ரூ. 10 லட்ச ரூபாய் அவசர தேவை இருப்பதாகவும்,அதற்கு ஈடாக தன்னிடம் உள்ள 14 பத்திரங்களை வைத்துக்கொ ண்டு கடன் தருமாறும் கேட்டுள்ளார்.இதனைத் தொடர்ந்து சந்திரன் கடந்த 12-ம் தேதி காலை கலாராணி வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கே பதுங்கியிருந்த 4 நபர்கள் சந்திரனை வீட்டிற்குள் அழைத்துச் சென்று மிரட்டி அவர் அணிந்திருந்த ஐந்தரை ப்பவுன் தங்கச்செயின் மற்றும் சட்டை பையில் வைத்திருந்த ரூ.26 ஆயிரம் ஆகியவற்றை பறித்துள்ளனர்.

    பின்னர் வங்கியில் இருந்த ரூ.40 ஆயிரம் பணத்தை கூகுள் பே மூலம் மாற்றிக் கொண்டனர். மேலும் 6 பத்திர தாள்களில் சந்திரனின் கைரேகையை பதித்துக் கொண்ட அந்த கும்பல் அவரிடம் இருந்து 3 வங்கி காசோலைகளையும் கையெழுத்திட்டு பெற்றுக் கொண்டுள்ளது.பின்னர் அங்கிருந்த சுமதி என்ற பெண்ணுடன் சந்திரனை அருகே அமர வைத்து போட்டோவும் எடுத்துள்ள னர்.அதன் பின்னர் அவரை விட்டுவிட்டு அங்கிருந்து சென்று விட்டனர்.இதுகுறித்து சந்திரன் அவரது மனைவி மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.அதன்பின்னர் போலீஸ் நிலையம் வந்து புகார் தெரிவித்தார்.இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.இந்நிலையில் கலாராணி மற்றும் ஐயப்பன் என்பவரது மனைவி சுமதி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.மேலும் தலைமறைவாக இருந்த மற்ற 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.இந்த நிலையில் நேற்று அவிநாசிபாளையம் போலீசார் சுங்கம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது சந்தேகத்திற்கு இடம் தரும் வகையில் வந்த மூன்று நபர்களைப் பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் பெருந்தொழுவு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் என தெரியவந்தது.இதனைத் தொடர்ந்து திருப்பூர் கல்லாங்காட்டை சேர்ந்த சுபாஷ் (32),அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (30 ) மற்றும் திருப்பூர் புது பஸ் நிலையத்தைச் சேர்ந்த சிங்காரவேலன் (33 ) ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர்.பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • விருதுநகர் அருகே வீடு புகுந்து நகை, பணம் திருடப்பட்டது.
    • ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள மதுராபுரி என்ற கம்மாபட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 32). இவரும், இவரது மனைவியும் நூற்பாலைகளில் வேலை செய்கின்றனர். சம்பவத்தன்று செல்வராஜ் வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டுக்குள் பொருட்கள் சிதறி கிடந்தது. பீரோவும் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 5½ பவுன் நகைகள் மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கப்பணம் திருடப்பட்டது தெரிய வந்தது. இது குறித்து கீழராஜகுலராமன் போலீஸ் நிலையத்தில் செல்வராஜ் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் லவகுசா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் சண்முகசுந்தரபுரத்தை சேர்ந்தவர் வேலு(வயது64). இவர் சம்பவத்தன்று அடகு நகைகளை மீட்க ரூ.70 ஆயிரத்தை பையில் வைத்துக்கொண்டு தனியார் நிதி நிறுவனத்துக்கு சென்றார். ஆனால் அடுத்த மாதம் தான் நகையை மீட்க முடியும் என்று ஊழியர்கள் தெரிவித்தனர். இதையடுத்து பணத்துடன் வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் மோட்டார்சைக்கிளை நிறுத்திவிட்டு கடைக்கு சென்றார். இதை நோட்டமிட்ட மர்ம நபர் மோட்டார் சைக்கிளில் இருந்த பணப்பையை திருடிக்கொண்டு தப்பினார். இதுகுறித்த புகாரின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×