search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223237"

    • பள்ளி மாணவ - மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பயனடைந்தனர்.
    • 50-க்கும் மேற்பட்ட கால்நடைகள் மற்றும் செல்ல பிராணிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    சுவாமிமலை:

    கும்பகோணம் அருகே சிவபுரத்தில் சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகம், ஸ்ரீனிவாச ராமானுஜன் மைய நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் சிறப்பு முகாம் நடந்தது.

    முகாமை புலத்தலைவர் ராமசாமி தொடங்கி வைத்தார்.

    இதில் உழவாரப்பணி, இலவச கண் பரிசோதனை, சித்த மருத்துவ பரிசோதனை முகாம்கள் நடைபெற்றது.

    இதன் மூலம் 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ - மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பயனடைந்தனர்.

    தொடர்ந்து, நடந்த கால்நடை மருத்துவ முகாமில் 50-க்கும் மேற்பட்ட கால்நடைகள் மற்றும் செல்ல பிராணிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    மேலும், இளைஞர்களின் திறன் மேம்பாடு மற்றும் வாழ்வியல் முறை குறித்த கருத்தரங்கில் பேராசிரியர்கள் நரசிம்மன் மற்றும் வீரக்குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    பின்னர், கோவில் வளாகத்தில் 50-க்கும் மேற்பட்ட பூச்செடிகள் நடப்பட்டது.

    முகாமில் சிவபுரம் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் ராஜேந்திரன், சிவபுரம் ஊராட்சி செயலாளர் சங்கர், கோவில் தலைமை அர்ச்சகர் சதீஸ், தாமரைச்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    முகாமிற்கான ஏற்பாடுகளை பல்கலைக்கழக துணைவேந்தர் வைத்திய சுப்பிரமணியம் வழிகாட்டுதல்படி, நாட்டுநலப்பணி திட்ட அலுவலர்கள் கணேசன், வெங்கடேஷ், ரம்யா ஆகியோர் செய்திருந்தனர்.

    • கடவூர் அருகே கிராம மக்களுக்கு சிறுதொழில் பயிற்சி முகாம் நடைபெற்றது
    • புதிய தொழில் முனைவோரை உருவாக்கி, தற்சார்பு வாழ்வியல் கொண்ட மக்கள் வசிக்கும் பஞ்சாயத்தாக மாற்றும் முயற்சியில் இப்பயிற்சி அளிக்கப்பட்டது.

    கரூர்,

    கடவூர் அருகே, வரவணை பஞ்சாயத்து மற்றும் பசுமைக்குடி தன்னார்வ இயக்கம் சார்பில் வேப்பங்குடி, கோட்டபுளிப்பட்டி, குளத்துார், பாப்பணம்பட்டி பகுதி மக்களுக்கு குறைந்த முதலீட்டில் நிரந்தர வருமானம் பெறும் வகையில் சிறு தொழில் பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு பஞ்சாயத்து தலைவர் கந்தசாமி தலைமை வகித்தார்.

    சிறு தொழில் பயிற்சியாளர்கள் ராமலட்சுமி, கவிதா ஆகியோர் கலந்து கொண்டு பினாயில், சோப் ஆயில், பேனா மை, சொட்டு நீலம், சோப்புத்துாள், பாத்திரம் விளக்கும் பவுடர் ஆகியவற்றை சிறு தொழிலாக செய்து வருமானம் பெறுவது குறித்து பயிற்சி அளித்தனர். புதிய தொழில் முனைவோரை உருவாக்கி, தற்சார்பு வாழ்வியல் கொண்ட மக்கள் வசிக்கும் பஞ்சாயத்தாக மாற்றும் முயற்சியில் இப்பயிற்சி அளிக்கப்பட்டது. பசுமைக்குடி இயக்க தன்னார்வலர்கள் கருப்பையா, காளிமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • பா.ஜ.க. புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது
    • ஆர்வத்துடன் கலந்து கொண்ட நிர்வாகிகள்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக புதிய உறுப்பினர் சேர்க்கை, பூத்கமிட்டிகள் அமைப்பது உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்ய மூன்று நாள் முனைப்பு முகாம் நடைபெற்றது.

    மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகளும், சார்பு அணிகள், பிரிவுகளின் நிர்வாகிகளும் முகாமில் பங்கேற்று பணியாற்றினர். முன்னதாக மாவட்ட தலைவர் விஜயகுமார் விராலிமலை ஒன்றியத்திலும், மாவட்ட பொது செயலாளர் ஏவிசிசி கணேசன் அன்னவாசல் ஒன்றியத்திலும் முகாம் பணிகளை தொடங்கி வைத்து ஆய்வு செய்தனர்.

    புல்வயல் ஊராட்சியில் அன்னவாசல் ஒன்றிய அமைப்பாளர் ரவிச்சந்திரன்,நெசவாளர் பிரிவு மாவட்ட தலைவர் ரெங்கையா, உள்ளாட்சி பிரிவு மாவட்ட தலைவர் சுப்பிரமணியன், ஒன்றிய துணை தலைவர்கள் சாமிநாதன், சோலை ஆகியோரும், விராலிமலை ஒன்றியத்தில் ஒன்றிய தலைவர் சுந்தரம், மாவட்ட பொது  செயலாளர் சண்முகசுந்தரம், மாவட்ட துணைத்தலைவர் ராஜ்குமார், தரவு மேலாண்மை பிரிவு மாநில செயலாளர் கார்த்திகேயன், பாராளுமன்ற தொகுதி முழுநேர ஊழியர் சத்தியபாமா மற்றும்  கிளை தலைவர்களும் கலந்து கொண்டனர். இம்முகாமில் அனைத்து பா.ஜ.க .நிர்வாகிகளும் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

    • கரூர் போலீசார் சார்பில் நடைபெற்றது
    • 101 மனுக்கள் பெறப்பட்டு 51 மனுக்களுக்கு தீர்வு

    கரூர், 

    கரூர் மாவட்ட காவல் துறை சார்பில், சிறப்பு மனு விசாரணை முகாம், தான்தோன்றிமலையில், தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. முகாமை கரூர் எஸ். பி. சுந்தரவதனம் தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து, புகார்தாரர் மற்றும் எதிர் மனுதாரர்களிடம், ஸ்டேஷன் வாரியாக போலீசார் விசாரணை மற்றும் குறைகளை கேட்டறிந்தனர். இறுதியாக, 101 மனுக்கள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டு, 51 மனுக்கள் மீதான விசாரணை முடித்து வைக்கப்பட்டது.முகாமில், ஏ.டி.எஸ்.பி., கண்ணன், டி.எஸ்.பி.,க்கள் சரவணன், முத்தமிழ் செல்வன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள் மற்றும் போலீசார் பங்கேற்றனர்.

    • இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
    • கண்ணில் விழிலென்ஸ் பொருத்தி மீண்டும் பார்வை பெற ஏற்பாடு செய்யப்பட்டது

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் சோழவந்தானில் நகர அரிமா சங்கம், வேலம்மாள் மருத்துவ கல்லூரியுடன் இணைந்து இலவச கண் மருத்துவ முகாமை நடத்தியது.

    சோழவந்தான் நகர அரிமா சங்க தலைவர் லயன்ஸ் டாக்டர் எம்.வி.எம்.மருதுபாண்டியன் ஏற்பாட்டில் நடைபெற்ற இம்முகாமில் அரிமா சங்க ஆளுநர் சசிகுமார் முன்னிலை வகித்தார்.

    முன்னாள் ஆளுநர் செல்லப்பாண்டி முகாமை தொடங்கி வைத்தார். இதில் சோழவந்தான் அரிமா சங்க பொருளாளர் காந்தன் மற்றும் நிர்வாகிகள், வேலம்மாள் மருத்துவ குழுவினர் கலந்து கொண்டனர்.

    முகாமில் கண்புரை நோயால் கண் பார்வை குறைவாக உள்ளவர்களுக்கு மற்றும் கண்பார்வை இல்லாதவர்களுக்கும் இலவசமாக கண்ணில் விழிலென்ஸ் பொருத்தி மீண்டும் பார்வை பெற ஏற்பாடு செய்யப்பட்டது.

    அரிமா சங்க முன்னாள் தலைவர் ராசி கண்ணன் நன்றி கூறினார். சோழவந்தான் மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் முகாமில் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

    • அரசு கல்லூரி மாணவர்களின் நாட்டு நலதிட்ட பணி முகாம் கந்தர்வகோட்டையில் நடைபெற்றது
    • தூய்மை பணியில் ஈடுபட்ட மாணவர்கள்

    கந்தர்வகோட்டை,

    தொந்தரவு கோட்டை அருகே அரசு கல்லூரி மாணவர்களின் நாட்டு நடப்பனி முகாம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அடுத்த புதுப்பட்டி அரசு தொழில்நுட்ப கல்லூரி மாணவர்களின் நாட்டு நல பணி திட்ட முகாம் மட்டங்கால் கிராமத்தில் நடைபெற்றது. மட்டங்கால் கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவில், கருப்பு கோவில், பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளை நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் தூய்மைப்படுத்தி வர்ணம் அடித்து அழகுப்படுத்தினர்.. மேலும் கிராம மக்களிடம் சுகாதாரம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். முகாமில் தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர், இயக்குனர் சங்க மாநில செய்தி தொடர்பாளர் முத்தையன் கலந்து கொண்டு பேரிடர் விழிப்புணர்வு பற்றி மாணவர்களுக்கு எடுத்துக் கூறினார். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் அசோக் ராஜன், முகாம் ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார், செஞ்சிலுவை சங்க பொறுப்பாளர் சையது ஆலம், கல்லூரி மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை நடக்கிறது.
    • ஓய்வூதியர்கள் மின்னணு உயிர்வாழ் சான்று பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    நாகப்பட்டினம்:

    திருச்சி மண்டல இ.பி.எப். முதன்மை ஆணையர் முருகவேல் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இ.பி.எப். (வருங்கால வைப்பு நிதி நிறுவனம்) சார்பில் "நிதி ஆப்கே நிகத்" என்ற பெயரில் இ.பி.எப் தொடர்பான குறைதீர்க்கும் கூட்டம் மற்றும் விழிப்புணர்வு முகாம் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி நாகை மாவட்டத்திற்கான குறை தீர்க்கும் முகாம் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வரும் 27- ந்தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை நடக்கிறது.

    இந்த முகாமில் இ.பி.எப். தொடர்பான சந்தேகங்களுக்கு தெளிவான விளக்கம் அளிக்கப்பட உள்ளது.

    செட்டில்மெண்ட் பெறுவது, வெவ்வேறு இ.பி.எப். கணக்குகளை ஒரே கணக்கில் இணைப்பது, இ.பி.எப். சந்தாதாரர்கள் தங்களது யு.ஏ.என். கணக்கினை பயன்படுத்தும் முறை, ஆதார் வங்கி கணக்குகள் உள்ளிட்ட தங்களது சுய விபரங்களை தங்களது யு.ஏ.என். கணக்கில் இணைத்தல் தொடர்பான சந்தேகங்களுக்கு தெளிவான விளக்கம் அளிக்கப்பட உள்ளது.

    மேலும் ஓய்வூதியர்கள் மின்னணு உயிர்வாழ் சான்று பதிவு செய்ய இந்த முகாமிலேயே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சந்தாதாரர்கள் தங்களது பெயர் மாற்றக் கோரிக்கை உட்பட அனைத்து கோரிக்கைகளையும் தகுந்த ஆதாரங்களுடன், எழுத்துப்பூர்வமாக முகாமில் சமர்ப்பிக்கலாம்.

    இ.பி.எப். சந்தாதாரர்கள், தொழில் நிறுவனங்களின் முதலாளிகள், முகவர்கள் மற்றும் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் விலக்கு பெற்ற தொழில் நிறுவனங்களின் உறுப்பினர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தைராய்டு பரிசோதனை முகாம் நடந்தது.
    • ஜமாத் தலைவர் ஜெய்னுலாபுதீன் முன்னிலை வகித்தார்.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் தெற்கு மாவட்டம் வாலிநோக்கம் கிளை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், தனியார் மருத்துவமனை இணைந்து தைராய்டு பரிசோதனை மற்றும் பொது மருத்துவ முகாமை நடத்தியது. கிளைத் தலைவர் நூர் முகம்மது தலைமை தாங்கினார். ஜமாத் தலைவர் ரஹ்மத்துல்லா, மஸ்ஜித் துல்ஹுதா ஜமாத் தலைவர் ஜெய்னுலாபுதீன் முன்னிலை வகித்தனர்.

    த.மு.மு.க. தலைவர் வாவா ராவுத்தர், செயலாளர் சம்சு கனி, மாவட்ட பொருளாளர் சாகுல் ஹமீது ஆகியோர் முகாமை தொடங்கி வைத்தனர். கடலாடி ஒன்றியத் தலைவர் முகமது அலி புட்டோ வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக ஹுசைன் கனி, ம.ம.க. மாநில பிரதிநிதி- மாநில செயற்குழு உறுப்பினர் முகம்மது முஹிதுல்லா, வாலிநோக்கம் ஊராட்சி தலைவர் பீர்முகம்மது, ஒன்றிய தலைவர் காதர் சுல்தான் அலி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இதில் 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பயனடைந்தனர். சமூக நீதி மாணவர் இயக்கத்கின் மாவட்ட செயலாளர் ஹபீப் ரஹ்மான் நன்றி கூறினார்.

    • காரைக்கால் மாவட்டம் சமுதாய நலப்பணித் திட்டம் சார்பில், போதைப்பொருள் ஒழிப்பு குறித்து ஒரு நாள் சிறப்பு முகாம் சிறப்பாக நடைபெற்றது.
    • இம்முகாமில் காரைக்கால் மாவட் டத்தில் உள்ள 10 பள்ளிகளில் இருந்து 250 மாணவர்கள் பங்கேற்றார்கள்.



    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்டம் சமுதாய நலப்பணித் திட்டம் சார்பில், போதைப்பொருள் ஒழிப்பு குறித்து ஒரு நாள் சிறப்பு முகாம் சிறப்பாக நடைபெற்றது. காரைக்கால அடுத்த ராயன் பாளையம் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை, புதுச்சேரி போக்குவரத்து அமைச்சர் சந்திர பிரியங்கா கலந்துகொண்டு குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இம்முகாமில் காரைக்கால் மாவட் டத்தில் உள்ள 10 பள்ளிகளில் இருந்து 250 மாணவர்கள் பங்கேற்றார்கள்.

    இம்முகாமில் மாணவர்க ளுக்கு போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் எதிர்ப்பு, சத்தான உணவுகள், மரங்களின் முக்கியத்துவம், தூய்மையின் அவசியம் பற்றியும் தன்னார்வலர்க ளுக்கு விழிப்புணர்வு அளிக்கப் பட்டது. இந்நிகழ்ச்சியில், காரைக்கால் மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்ட் லோகேஸ்வரன், சமுதாய நலப்பணித் திட்டத்தின் மாநில அதிகாரி சதீஷ்குமார், கல்வித்துறையின் மேல்நிலைக் கல்வி துணை இயக்குனர் ராஜேஸ்வரி, காரை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராஜசேகரன். நவோதயா பள்ளியின் முதல்வர் நந்தகுமார், போக்குவரத்து துறையைச் சார்ந்த கல்விமாறன், நாட்டு நலப்பணி திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் லட்சு மணபதி, சமுதாய நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    • 21 வகையான மாற்றுத்திறன் குழந்தைகளின் தன்மைகள் குறித்து எடுத்துரைத்தார்.
    • அனைத்து விதமான அரசு நலத்திட்ட உதவிகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை அடுத்த மருதங்காவெளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வட்டார வளமையம் சார்பில் 18 வயது வரை உள்ள மாற்றுத்திறன் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.

    இதற்கு வட்டார வள மைய மேற்பார்வையாளர் இளையராஜா தலைமை தாங்கினார். இதில் வட்டார கல்வி அலுவலர்கள் சிவக்குமார், ராமசாமி ஆகியோர் பயிற்சியை தொடங்கி வைத்தனர்.

    சிறப்பு கருத்தாளரான முத்துப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் புனிதா பயிற்சி குறித்து பேசுகையில்:-

    ஆரம்ப காலத்தில் மாற்றுத்திறன் குழந்தைகளின் தன்மைகளை அடையாளம் காண்பதன் மூலம் மற்றும் அதற்கான மருத்துவ சிகிச்சை முறையை பின்பற்றுவதன் மூலம் முற்றிலும் மாற்றுத்திறன் குழந்தைகள் இல்லாத நிலையை எதிர்காலத்தில் உருவாக்க முடியும் என்றார். மேலும், 21 வகையான மாற்றுத்திறன் குழந்தைகளின் தன்மைகள் குறித்து எடுத்துரைத்தார்.

    அதனை தொடர்ந்து பயிற்சியில் அடையாள அட்டை முக்கியத்துவம், கல்வி உதவித்தொகை, பெண் கல்வி ஊக்கத்தொகை, பராமரிப்பு உதவித்தொகை, போக்குவரத்து மற்றும் பாதுகாவலர் தொகை, மேல் மருத்துவ அறுவை சிகிச்சை முறை, உதவி உபகரணங்கள் உள்ளிட்ட அனைத்து விதமான அரசு நலத்திட்ட உதவிகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

    பயிற்சியில் ஆசிரிய பயிற்றுனர் சுரேஷ், சிறப்பாசிரியர்கள், இயன்முறை மருத்துவர், ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் முத்துப்பேட்டை ஒன்றியத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறன் குழந்தைகளின் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • பல்வேறு பகுதிகளில் இருந்து 43 தனியார் நிறுவனங்கள் வந்திருந்தனர்.
    • 200-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர்.

    திருத்துறைப்பூண்டி:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நகர தி.மு.க. சார்பில் திருத்துறைப்பூண்டியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.

    முகாமை திருத்துறைப்பூண்டி நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன், தி.மு.க. நகர செயலாளர் பாண்டியன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    இதில் கோட்டூர் ஒன்றிய செயலாளர் ஞானி, மாவட்ட வர்த்தக அணி துணை செயலாளர் சிக்கந்தர், மாநில இளைஞரணி துணை செயலாளர் இளையராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முகாமில் சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 43 தனியார் நிறுவனங்கள் வந்திருந்தனர். இதில் திருத்துறைப்பூண்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் பெண்கள் பலர் கலந்து கொண்டனர்.

    முகாமில் 68 பேரை தேர்வு செய்து அவர்களுக்கு தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

    • நீதிபதி மகாலெட்சுமி தலைமையில் நடடைபெற்றது
    • மக்கள் பிரச்சினைகள் 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என்று உறுதி

    அரியலூர்,

    அரியலூர்மாவட்டம், திருமானூர்ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குழு சார்பில் பாதிக்கப்பட்டவர் கள், கடத்தல், மற்றும் வணிகரிதியான பாலியல் சுரண்டல் குறித்த சட்டஉதவி மற்றும் சட்டவிழிப்புணர்வு முகாம் மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குழு தலைவருமான மகாலெட்சுமி தலைமையில் நடைபெற்றது. அப்போது அவர் பேசியதாவது : -மக்கள் தங்களது பிரச்சனைகளுக்கு தயங்காமல் மாவட்ட சட்டப்பணிகள் ஆணை க்குழு அலுவலகத்தை நேரில் அணுகினால் இருதரப்பினரையும் நேரில் அழைத்து விசாரித்து சுமூக தீர்வு காண்பதற்கு ஏற்பாடு செய்து தரப்படும். மக்கள் நியாயமாக கிடைக்க வேண்டிய உரிமை பறிபோகக்கூடாது. படிப்பறிவு இல்லை என்பதற்காகவும் ஏழ்மை என்பதற்காகவும் எழுத்தறிவு இல்லை என்பதற்காகவும் நீதி மறுக்கப்படக்கூடாது. நீதி மன்றத்தையும், காவல்து றையையும் மக்கள் ஒதுக்கி வைக்கிறார்கள். ஒரு வழக்கு முடிவதற்கு குறைந்தபட்சம் 5 வருட காலம் நீடிப்பதாலும் மக்கள் மிகவும் விரக்தியாகிறார் கள். பல நாட்கள் கழித்துதான் தீர்ப்பு கிடைக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மைதான். சட்டம் ஒரு நியதிக்கு உட்பட்டுதான் இயங்கும். இது நடைமுறை சிக்கல்கன், காலதாமதம் போன்ற இடர் பாடுகளினால் ஏற்படுகின்றது.இதனால் மக்களுக்கு விரக்தி ஏற்பாடாமலிருக்க வேண்டும் என்தன் பொருட்டு மாவட்ட வாரியாக தீர்வு காண்பதற்கு மாற்றுமுறை தீர்வாக சட்டப்பணிகள் ஆணைக்குழு ஒரு அங்கமாகநியமிக்கப்பட்டது.எல்லா பிரச்சனைகளும் நீதிமன்றங்கள் மாதிரியே எடுத்துக்கொள்ளும். அதாவது, முக்கியமாக குற்றவியல் வழக்கு, கொலை வழக்கு, குடும்ப வழக்கு, அடிதடி வழக்கு மற்றும் கணவன், மனைவி சம்மந்தப்பட்ட பிரச்சனைகள், சொத்து பிரச்சனைகள், விபத்து வழக்குள் குறித்து தீர்வு காண சுமூகமாக மாவட்ட சட்டப்பணிகள் ஆணை க்குழுவை அணுகலாம். மக்கள் நேராக வந்து தமது பிரச்சனையை சொன்னால் போதும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் மிக விரைவில் 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும்.

    மேலும் மக்கள் பயனடையும் வகையில் ஒவ்வொரு தாலுக்காவிலும் சட்டப்பணிகள் குழு இயங்குகிறது என்றும் கூறினார்.சட்ட பணிகள் ஆணைக்குழு செய லாளர் அழகேசன் முன்னிலை வகித்தார், திருமா னூர்ஊராட்சி மன்ற தலைவர் உத்திராபதி வரவேற்று பேசினார், வக்கில் சங்க பொறுப்பாளர் மனோகரன், செல்வராஜ், முத்துகுமார், செந்தி ல்குமார், தேவேந்திரன், காவல்ஆய்வாளர் சகாயம் அன்பரசு, சட்ட பணிகள் நிர்வாக அலுவலர் வெள்ளை சாமி உட்பட பலர் கலந்துகொண்டனர், நிகழ்ச்சி முடிவில் ஊராட்சி மன்ற துணைதலைவர் மணிமாறன் நன்றி கூறினார்.


    ×