search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223237"

    • கலைஞர் வரும்முன் காப்போம் திட்டம் மூலம் வெள்ளூர் ஊராட்சியில் நடைபெற்றது
    • ஏராளமானவர்கள் பங்கேற்றனர்

    அறந்தாங்கி

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே வெள்ளூர் ஊராட்சியில் கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டம் மூலம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.மணமேல்குடி தாலுகா வெள்ளூர் ஊராட்சியில் நடைபெற்ற முகாமில் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் எஸ்டி ராமச்சந்திரன் தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் சித்த மருத்துவம், கண் பரிசோதனை, காசநோய், மதுமேகம் (சுகர்),இரத்த அழுத்தம், பல், காது, மூக்கு, தொண்டை ஆகியவ ற்றிற்கான நோய்களை கண்டறிந்து அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு, மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது.மேலும் மேல் சிகிச்சை தேவைப்படு வோருக்கு மாவட்ட தலைமை மருத்து வமனைக்கு சிபாரிசு செய்ய ப்பட்டது. அதனை தொடர்ந்து கர்ப்பிணி தாய்மார்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் ஊட்டச்சத்து பெட்ட கங்களை வழங்கினார். மேலும் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று க்கொண்டார். அதே போன்று கரகத்திக்கோ ட்டையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்ட சட்டமன்ற உறுப்பினர் பொதுமக்களின் கோரிக்கை களை கேட்டறிந்து அவர்க ளிடம் மனுகளைப் பெற்று க்கொண்டார்.நிகழ்ச்சியில் கட்சி நிர்வா கிகள், அரசு அலுவலர்கள், மருத்து வர்கள், செவிலியர்கள், பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.




    • பரமத்தி வட்டார வள மையத்திற்கு உட்பட்ட பள்ளிகளில் பயிலும் மாற்றுதிறன் கொண்ட மாணவ, மாணவிகளின் பெற்றோர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.
    • இதில் பள்ளி ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளின் பெற்றோர் கலந்துகொண்டனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வட்டார வள மையத்திற்கு உட்பட்ட பள்ளிகளில் பயிலும் மாற்றுதிறன் கொண்ட மாணவ, மாணவிகளின் பெற்றோர்களுக்கான பயிற்சி முகாம் நடை பெற்றது. பயிற்சியை வட்டார கல்வி அலுவலர் கவுரி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் சுபா, மாவட்ட ஒருங்கிணைப் பாளர் ராமேஷ், ஒருங்கிணைப்பாளர் ராஜா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    இதில் கருத்தாளர்களாக கிராம சுகாதார செவிலியர் சிந்தாமணி, அங்கன்வாடி பணியாளர் விஜயலட்சுமி, இயன்முறை மருத்துவர் மலர்விழி ஆகியோர் கலந்து கொண்டு சரியான உடல் சமநிலை மற்றும் குழந்தைகளை தூக்கி செல்லும் முறைகள், ஆரம்பகால குறைபாடுகள் அடையாளம் கண்டு கொள்ளுதல், மருத்துவம் உள்ளடக்கிய கல்வி மையங்களில் வழங்கப்படும் சேவைகள் பற்றி எடுத்துரைத்தனர்.

    சிறப்பு பயிற்றுநர்கள் கவிதா, மகேஷ்வரி மற்றும் பெரியசாமி ஆகியோர் குழந்தைகளுக்கான சுற்றுச்சூழல் மாற்றி அமைப்பதன் முக்கியத்துவம் மற்றும் அன்றாட வாழ்க்கைக்கு பயன்படுத்தப்படும் உதவி உபகரணங்கள் மற்றும் அதன் பராமரிப்பு பற்றி பேசினர்.

    இதில் பள்ளி ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளின் பெற்றோர் கலந்துகொண்டனர்.

    • 1498 பேருக்கு பணிநியமன சான்றிதழ்
    • போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்

    அரியலூர்,

    அரியலூர் அரசுகலைக்கல்லூரி வளாகத்தில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடை பெற்றது. கலெக்டர் ரமணசரஸ்வதி, எம்.எல்.ஏ. சின்னப்பா முன்னிலையில் போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் கலந்துகொண்டு 1498 நபர்களுக்கு பணிநியமன ஆணையை வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் தெரிவித்ததாவது,இம்முகாம்களில் இளைஞர்களின் தகுதி மற்றும் திறன்களுக்கு ஏற்றவாறு பணியமர்வு செய்யப்படுகின்றனர். வட்டார அளவில் ஏற்கனவே நடைபெற்ற பணி திறன் மேம்பாட்டு பயிற்சிகள் பெற்றவர்கள் இம்முகாமை பயன்படுத்தி கொள்ளவேண்டும். இம்முகாமில் பல்வேறு தனியார் துறைகளைசேர்ந்த 56 தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டன.முதலமைச்சர் இரண்டு மாதங்களுக்கு முன்பு பெரம்பலூர் மாவ ட்டத்திற்கு வருகைதந்த பொழுது புதிய தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டி சென்றுள்ளார். அதன் மூலம் புதிய 10000 நபர்களுக்கு வேலை கிடைக்கும் என்ற உத்திரவாதம் கிடைத்துள்ளது. இன்னும் ஓராண்டு காலத்திற்குள் தொழிற்சாலை செயல்ப டும்போது நம்முடைய பகுதியை சேர்ந்தவர்களுக்கும் வேலை வாய்ப்பு கிடைக்க ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.அரசு கலைக்கல்லூரிக்கு வரும் மாணவ மாணவியர்கள் தற்பொழுது மருத்துவக் கல்லூரி அமைக்கப்ப ட்டுள்ளதால் சுற்றிவர வேண்டிய நிலை உள்ளது. இதை கருத்தில்கொண்டு மாவட்ட கலெக்டருடன் கலந்து ஆலோசித்து குறுகிய சாலைகளை சரி செய்தபின் விரைவில் அரசு கலைக்கல்லூரி வரை பேருந்து இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.இம்முகாமில் இணை இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் முருகண்ணன், அரியலூர் நகர்மன்ற தலைவர் க.சாந்தி, அரசு கலைக்கல்லூரி முதல்வர் மலர்விழி, உதவி திட்ட அலுவலர் சிவக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்


    • வை.முத்துராஜா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • வாகவாசல் ஊராட்சியில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை வட்டாரம் ஆதனக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட வாகவாசல் ஊராட்சியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமினை புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா துவக்கி வைத்து கர்ப்பிணி ப்பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்ட கங்களை வழங்கினார்.

    புதுக்கோட்டை துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் ச.ராம்கணேஷ் வரவேற்புரை ஆற்றினார். வட்டார மருத்துவ அலுவலர் பொன்.சரவணன் திட்ட விளக்க உரை ஆற்றினார். மேலும் வாகவாசல் ஊராட்சி மன்றத் தலைவர் மஞ்சுளா முத்தையா தலைமை வகித்தார் மற்றும் ஒன்றிய பெருந்தலைவர் சின்னையா, ஒன்றிய கவுன்சிலர் செல்வராஜ்,

    ஊராட்சி மன்றத் துணை தலைவர் பாஸ்கர், மாவட்ட கல்வி அலுவலர் மணிவண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் குமாரவேல், உதவி தலைமை ஆசிரியர் சந்திரசேகரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

    • சேலம் தலைமை தபால் அலுவலக கட்டிடத்தில் உள்ள முதுநிலை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வருகிற 29-ந்தேதி காலை 10 மணிக்கு நடக்கிறது.
    • வாடிக்கையாளர்கள் தபால் சம்பந்தமாக ஏதேனும் குறைகள் இருப்பின் புகார்களை வருகிற 22-ந்தேதிக்குள் நேரிலோ, தபால் மூலமோ தெரிவிக்க வேண்டும்.

    சேலம்:

    சேலம் கிழக்கு கோட்ட தபால் முதுநிலை கண்காணிப்பாளர் அருணாசலம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சேலம் கிழக்கு கோட்ட அளவில் தபால் குறித்த குறை தீர்க்கும் கூட்டம், சேலம் தலைமை தபால் அலுவலக கட்டிடத்தில் உள்ள முதுநிலை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வருகிற 29-ந்தேதி காலை 10 மணிக்கு நடக்கிறது. வாடிக்கையாளர்கள் தபால் சம்பந்தமாக ஏதேனும் குறைகள் இருப்பின் புகார்களை வருகிற 22-ந்தேதிக்குள் நேரிலோ, தபால் மூலமோ தெரிவிக்க வேண்டும்.

    மணியார்டர், பதிவு தபால், விரைவு தபால், காப்பீடு தபால் பற்றிய புகார்கள் என்றால், அனுப்பிய தேதி, முழு விலாசம், பதிவு அஞ்சல் எண், அலுவலக பெயர் அனைத்தும் இடம் பெற்று இருக்க வேண்டும். சேமிப்பு வங்கி அல்லது தபால் காப்பீடு பற்றிய புகார்கள் என்றால், கணக்கு எண், பாலிசி எண், வைப்புத்தொகையாளரின் பெயர், வசூலிக்கப்பட்ட விவரங்கள் மற்றும் வேறு ஏதேனும் குறிப்புகள் இருந்தால் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • 14 மனுக்கள் மீது உடனடி தீர்வு
    • பஸ் வசதி செய்யப்பட்டிருந்தது

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலக வளாகத்தில் சிறப்பு மனு விசாரணை முகாம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி தலைமையில் நேற்று நடந்தது. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் மதியழகன், பாண்டியன், போலீஸ் துணை சூப்பிரண்டுகள் தங்கவேல், வளவன் ஆகியோர் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றனர். மேலும் முகாமில் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களை சேர்ந்த போலீசாரும், சிறப்பு பிரிவு போலீசாரும் கலந்து கொண்டனர். இந்த சிறப்பு மனு விசாரணை முகாம் மூலம் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மொத்தம் 31 மனுக்களில், 14 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள மனுக்கள் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்திற்கு நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை தோறும் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் நடைபெற்று வரும் இந்த சிறப்பு மனு விசாரணை முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம், முகாமில் கலந்து கொள்ள வருபவர்களுக்கு ஏதுவாக போலீசார் சார்பாக பாலக்கரையில் இருந்து மாவட்ட போலீஸ் அலுவலகத்திற்கும், மீண்டும் போலீஸ் அலுவலகத்தில் இருந்து புதிய பஸ் நிலையம் செல்வதற்கும் பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது, என்று போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி தெரிவித்தார்.

    • அரியலூரில் நாளை தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது என்று கலெக்டர் தகவல்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளதாவது, அரியலூர் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் தீன் தயாள் உபாத்யாய கிராமின் கெளசல்யா யோஐனா திட்டத்தின் கீழ், கிராமம் மற்றும் நகர்புறத்திலுள்ள படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (17-ந் தேதி) அன்று அரியலூர் அரசினர் கலைக் கல்லூரியில் காலை 9 முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெற உள்ளது. இம்முகாமில் 5 ஆம் வகுப்பு முதல் ஐடிஐ, டிப்ளமோ, இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு மற்றும் பொறியியல் படித்த வேலைவாய்ப்பற்ற 18 முதல் 45 வயது வரை உள்ள ஆண் பெண் இருபாலரும், தங்களது சுய விபர குறிப்பு, ஆதார் அட்டை நகல், கல்விச் சான்றிதழ் நகல்கள் மற்றும் புகைப்படம் ஆகியவற்றுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    • தி.மு.க. சார்பில் ரத்ததான முகாம் நடந்தது.
    • காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.

    ராமநாதபுரம்

    முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு மண்டபம் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் ஒன்றிய கழக செயலாளர் கே.ஜே. பிரவீன் ஏற்பாட்டில் சாத்தான் குளத்தில் ரத்ததான முகாம் நடந்தது. மாவட்ட செயலாளாரும், ராமநாதபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான காத ர்பாட்சா முத்துராம லிங்கம் தலைமையில் தாங்கி னார்.

    ரத்ததானம் செய்வதன் அவசியம் குறித்தும், ரத்தத்தை தானம் செய்வதனால் அடையும் பயன்கள் குறித்தும் காதர் பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. பேசினார். தொடர்ந்து ரத்ததானம் செய்தவ ர்களை பாராட்டி னார்.ராமநாதபுரம் மருத்து வக்கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கியின் மருத்துவர் குழுவினர் கலந்துகொண்டு ரத்தம் பெற்று க்கொண்டனர்.

    இந்த முகாமில் மாவட்ட கவுன்சிலர் கவிதா கதிரேசன், இளைஞரணி யூசப், கிளை செயலாளர் புகாரி, பிரதிநிதி வினோத், ஊராட்சி மன்றத்தலைவர் குப்பைக்கனி, முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் ராஜா உள்பட ஏராள மானோர் கலந்து கொண்டனர்.

    • தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை மறுநாள் நடக்கிறது.
    • www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது கல்வித்தகுதியை பதிவு செய்துவிட்டு வர வேண்டும்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வாயிலாக மாதத்தின் 3-ம் வெள்ளிக்கிழமையில் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி படித்த வேலை தேடும் மனுதாரர்களுக்காக நாளைமறுநாள்(17-ந் தேதி) காலை 10 மணி முதல் 2 மணி வரை தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

    இந்த முகாமில் மாற்றுத்திறனா ளிகளுக்கென சிவகாசி மற்றும் விருதுநகரில் உள்ள CIEL Services Pvt Ltd., Lovely Offset மற்றும் Pentagon போன்ற நிறுவனங்களும், சாய்ராம் அறக்கட்டளை போன்ற 20-க்கும் மேற்பட்ட பிரபல முன்னணி நிறுவனங்களும் கலந்து கொண்டு 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டிஐ., டிப்ளமோ ஆகிய கல்வித் தகுதி உடைய பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

    இந்த வாய்ப்பை பயன்படுத்த விரும்பும் வேலைநாடுநர்கள் 17-ந் தேதி நடக்கும் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்கு முன்பு www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது கல்வித்தகுதியை பதிவு செய்துவிட்டு வர வேண்டும். முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் துறை நிறுவனங்கள் விருதுநகர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வருகை புரிந்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை தொடர்பு கொள்ள வேண்டும்.

    தனியார் வேலை வாய்ப்பு முகாம் மூலம் பணி நியமனம் பெற்றவர்களது வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எந்த விதத்திலும் பாதிக்கப்படாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திருச்சி மாநகராட்சி சார்பில் நடைபெற்றது 18 இடங்களில் நடைபெற்றது
    • பொது இடங்களில் செல்லும் போது முகக்கவசம் அணிந்து கொள்ள அறிவுறுத்தல்

    திருச்சி,

    திருச்சி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருவதாகவும், பொதுமக்கள் பொது இடங்களுக்கு செல்லும்போது முகக்கவசம் அணிந்து கொள்ளுமாறும் மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்குமார் வேண்டுகோள் விடுத்தார். மேலும் தமிழக அரசின் சுகாதாரத்துறை சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் காய்ச்சல் தடுப்பு முகாம்கள் பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது.அந்த வகையில் இன்று நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் சார்பில் காய்ச்சல் தடுப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி பீமநகர் பகுதியில் அடைக்கலமாதா கோவில், பீரங்கிகுளம் கள்ளர்தெரு, இ.பி. ரோடு கீழவாசல் அக்ரஹாரம், எடமலைப்பட்டிபுதூர் கீழபஞ்சப்பூர், காந்திபுரம் பெருமாள்கோவில் தெரு, இருதயபுரம் சங்கிலியாண்டபுரம், மேலகல்கண்டார்கோட்டை அருணாச்சலம் நகர் அங்கன்வாடி மையம், பெரியமிளகுபாறை குளத்துக்கரை, ராமலிங்கநகர் குமரன் நகர், ஸ்ரீரங்கம் வடக்கு வாசல், தெப்பக்குளம் கீழ ஆண்டாள் வீதி, திருவானைக்காவல் புலிமண்டப சாலை, உறையூர மேட்டுத்தெரு ஆகிய இடங்களில் மாலையிலும், காமராஜ் நகரில் ராஜாராம் சாலையில் காலையிலும், தென்றல் நகரில் மாலையிலும், காட்டூர் பாத்திமாபுரத்தில் காலையிலும், வடக்கு காட்டூர் நூலகத்தில் மாலையிலும், சுப்பிரமணியபுரத்தில் எல்.எஸ்.பி. காலனியில் காலையிலும், தாமரை நகரில் மாலையிலும், தென்னூர் காஜாத்தோப்பில் காலையிலும், ஜாகீர் உசேன் தெருவில் மாலையிலும், திருவெறும்பூர் கக்கன் காலனியில் காலையிலும், எலியட் காலனியில் மாலையிலும் காய்ச்சல் தடுப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு உரிய பரிசோதனை செய்து பயன்பெறுமாறு திருச்சி மாநகராட்சி சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.

    • விராலிமலை செக்போஸ்டில் முகாம் நடைபெற்றது
    • முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஏற்பாடு

    விராலிமலை, 

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை செக்போஸ்டில் சிவிபி அறக்கட்டளை மற்றும் ஜோசப் ஆரஞ்ச் கண் பரிசோதனை மையம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.இந்த முகாமை முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர்.சி.விஜயபாஸ்கர் தனது சிவிபி அறக்கட்டளை மூலம் ஏற்பாடு செய்திருந்தார்.இதில் மருத்துவ குழுவினர் கலந்துகொண்டு கண்புரை, சக்கரைநோய், மற்றும் கண்நீர் அழுத்த நோய், கிட்டப்பார்வை, தூரப்பார்வை, வெள்ளெழுத்து போன்ற நோய்களுக்கு இலவச சிகிச்சை அளித்தனர்.இதில் கலந்துகொண்ட கண் குறைபாடு உள்ளவர்களுக்கு இலவசமாக மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. இம்முகாமில் கண் குறைபாடுகள் உள்ள பலர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை முதல் மருந்துகள் வரை முழுவதுமே இலவசமாக வழங்கப்பட்டது குறிப்பிடதக்கது.இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆவின் சேர்மன் பழனியாண்டி, மாவட்ட கவுன்சிலர் சிவசாமி, ஒன்றிய செயலாளர் நாகராஜ், விராலிமலை ஊராட்சி மன்ற துணை தலைவர் தீபன் சக்ரவர்த்தி, ஒன்றிய கவுன்சிலர்கள் மணிகண்டன்,கல்குடி அய்யப்பன், ஆவின் ராஜா, ஐடி விங்க் அப்பு மற்றும் ஏராளமான கழக நிர்வாகிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

    • அண்ணா பல்கலை. பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது
    • 39 யூனிட் ரத்ததானம் வழங்கப்பட்டது

    அரியலூர்,

    அரியலூர் அடுத்த விளாங்குடி அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் நாட்டு நலப் பணித் திட்டம் சார்பில் ரத்ததான முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.அக்கல்லூரியின் முதல்வர் செந்தமிழ்ச்செல்வன் ரத்ததானம் வழங்கி முகாமை தொடக்கி வைத்தார். முகாமில் மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள் கலந்து கொண்டு 39 யூனிட் ரத்ததானம் வழங்கினர். அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி ரத்தவங்கி மருத்துவக் குழுவினர் ரத்தானத்தை சேகரித்தனர்.இதற்கான ஏற்பாடுகளை இளைஞர் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் ஆ. ஆதிலட்சுமி மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர் க. சத்யபிரியா ஆகியோர் செய்திருந்தனர்.

    ×