search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223237"

    • குழந்தைகள், மாணவர்கள் பயன்பெறும் வகையில் நடைபெற்றது.
    • மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தொடக்கப்பள்ளி வளாகத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மற்றும் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல வாரியம் சார்பில் மாற்றுத்திற னாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம் 0 வயது முதல் 18 வயது வரையுள்ள குழந்தைகள், மாணவர்கள் பயன்பெறும் வகையில் நடைபெற்றது.

    முகாமிற்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி தலைமை தாங்கினார். ஒசூர் மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) கோபாலப்பா முன்னிலை வகித்தார். வட்டார வள மைய பொறுப்பு மேற்பார்வையாளர் முகாமை வழி நடத்தினார்.

    முகாமில் 83 பேர் கலந்து கொண்டனர். அவர்களை மருத்துவர்கள் உடனுக்குடன் பரிசோதனை செய்து தகுதியுள்ள 38 மாணவர்களுக்கு மாற்றுத் திறனாளி அடையாள அட்டை வழங்க பரிந்துரைத்தனர்.

    அட்டை புதுப்பித்தல் 12 மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் சக்கர நாற்காலி 2 பேருக்கும், காதொலி கருவி 4 பேருக்கும் வழங்கப்பட்டது.

    விழாவில் கலந்து கொண்ட மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாசிரியர்கள் செய்திருந்தனர். ஒருங்கிணைப்பாளர் வித்யாலட்சுமி கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

    • எஸ்.பி. அலுவலகத்தில் சிறப்பு மனு முகாம் நடைபெற்றது
    • இதில் அனைத்து போலீஸ் ஸ்டேசன் மற்றும் சிறப்பு பிரிவு காவல்துறையினர் கலந்துகொண்டனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட காவல்துறை சார்பில் எஸ்பி அலுவலகத்தில் சிறப்பு விசாரணை மனு முகாம் நடந்தது.எஸ்.பி. ஷ்யாம்ளாதேவி தலைமை வகித்து சிறப்பு விசாரணை மனு முகாமினை தொடங்கி வைத்தார். இதில் ஏடிஎஸ்பிக்கள் மதியழகன், பாண்டியன், டிஎஸ்பிக்கள் தங்கவேல், வளவன், ஜனனிபிரியா, பழனிசாமி ஆகியோர் கொண்ட குழுவினர் பொதுமக்களிடம் மனுவினை பெற்று விசாரணை நடத்தினர். முகாமில் 24 மனுக்கள் பெறப்பட்டு 5 மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டது.

    மீதமுள்ள மனுக்கள் சம்மந்தப்பட்ட போலீஸ் ஸ்டேசன்கனுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. முகாமின்போது மனு அளிக்க வந்த மாற்றுத்திறனாளியை பார்த்த எஸ்பி ஷ்யாம்ளாதேவி எழுந்து சென்ற அவரிடம் மனு பெற்று உடனடியாக விசாரணை செய்து தீர்வு காண போலீஸ் அதிகாரிக்கு உத்தரவிட்டார். இதில் அனைத்து போலீஸ் ஸ்டேசன் மற்றும் சிறப்பு பிரிவு காவல்துறையினர் கலந்துகொண்டனர்.

    • மக்களை தேடி மருத்துவம் தமிழகம் முழுவதும் செயல்பட்டு வருகிறது.
    • இந்த முகாமில் கலந்து கொண்ட தொழிலாளர்களுக்கு இலவச எக்ஸ்ரே எடுக்கப்பட்டது.

     குன்னூர்

    தமிழக அரசின் சார்பில் மக்களை தேடி மருத்துவம் தமிழகம் முழுவதும் செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் முதியவர்கள் பலரும் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழக அரசின் காசநோய் பிரிவு சார்பில் குன்னூர் வி.பி.தெருவில் தொழிலாளர்களுக்கு காசநோய் மற்றும் நுரையிரல் சம்பந்தமான நோய் குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கலந்து கொண்ட தொழிலாளர்களுக்கு இலவச எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. நிகழ்ச்சியில் குன்னூர் வியாபாரிகள் சங்க தலைவர் பரமேஸ்வரன், செயலாளர் எம்.ஏ.ரகீம் மற்றும் தலைமை மருத்துவ சூப்பர்வைசர் சரத்குமார், ஆண்டனி செபஸ்டின், ஸ்ரீராம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கீழக்கரையில் ரத்ததான முகாம் நடந்தது.
    • கீழக்கரை சுற்றியுள்ள தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் முகாமில் கலந்து கொண்டனர்.

    கீழக்கரை

    கீழக்கரை சதக்கத்துன் ஜாரியா நடுநிலைப்பள்ளியில் ரத்த உறவுகள், கீழை மக்கள் உரிமைக்குரல் மற்றும் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இணைந்து ரத்ததான முகாமை நடத்தியது. மாவட்ட தலைமை மருத்துவமனை ரத்த வங்கியின் மருத்துவ அலுவலர் தலைமையில் மருத்துவக் குழுவினர் ரத்தம் பெற்றுக் கொண்டனர். ஏராளமான இளைஞர்கள் ரத்தத்தை கொடையாக வழங்கினர். அவர்களுக்கு சான்றிதழ்களை சிறப்பு அழைப்பாளர்கள் வழங்கினர்.

    கீழக்கரை நகர்மன்ற தலைவர் செஹானாஸ் ஆபிதா, துணைத் தலைவர் ஹமீது சுல்தான், கீழக்கரை டவுன் காஜி காதர் பாக்ஸ், ரோட்டரி சங்கத் தலைவர் கபீர், சட்ட விழிப்புணர்வு இயக்க நிறுவனர் சாலிக் ஹுசைன், ரெட் கிராஸ் சொசைட்டி மாவட்ட தலைவர் சுந்தரம், ரத்த உறவுகள் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜாவுல்ஹக், அனைத்து சமுதாயக் கூட்டமைப்பு கவுரவ ஆலோசகர் சேக் அப்துல் காதர், செயலர் தாஜுல் அமீன், தி.மு.க. செயலாளர் பஷீர் அகமது, இளைஞரணி அமைப்பாளர் இப்த்திகர், கவுன்சிலர்கள் நசூருதீன், ஷேக் உசேன், மீரான் அலி, சமூக ஆர்வலர் அஜிகர், என்.டி.எப். மாநில நிர்வாகி முகமது பருஸ், மாவட்ட தலைவர் அப்துல் நசீர், வி.சி.க.தொகுதி செயலாளர் அற்புதகுமார், எஸ்.டி.பி.ஐ. நகர தலைவர் அபுதாஹிர், மக்கள் டீம் காதர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். கீழக்கரை சுற்றியுள்ள தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் முகாமில் கலந்து கொண்டனர்.

    • இலவச கண்சிகிச்சை முகாம் நடந்தது.
    • ஏற்பாடுகளை திட்ட இயக்குநர் ஜாகிர் உசேன், அரவிந்த் ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர் செய்திருந்தனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் நண்பர்கள் ரோட்டரி சங்கம், அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து சர்க்கரை நோயாளிகளுக்கான இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தியது. ரோட்டரி சங்கத் தலைவர் அங்குராஜ் தலைமை தாங்கினார்.

    துணை ஆளுனர் சத்யா குமரேசன் தொடங்கி வைத்தார். பட்டயத் தலைவர் வேலாயுதம் முன்னிலை வகித்தார். முகாமில் 175 பேர் கலந்து கொண்டனர். இவர்களுக்கு கண் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் குழுவினர்கள் ரத்தத்தில் சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், பார்வை குறைபாடுகள் மற்றும் கண்களை ஸ்கேன் செய்து சிகிச்சை அளித்தனர்.

    17 பேருக்கு புரை நோய் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்க மதுரைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இதில் ரோட்டரி கிளப் நிர்வாகிகள் முருகதாசன், கந்தசாமி, வினோத், ஜனார்த்தனன், மகாத்மா முருகேசன், விக்ரம் முருகன், நாராயணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    செயலாளர் பால்சாமி நன்றி கூறினார். ஏற்பாடுகளை திட்ட இயக்குநர் ஜாகிர் உசேன், அரவிந்த் ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர் செய்திருந்தனர்.

    • 1.46 லட்சம் கால்நடைகளுக்கு தடுப்பூசி போட திட்டம்
    • கலெக்டர் ரமண சரஸ்வதி தகவல்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: விவசாய மக்களே நீங்கள் கால்நடைகளை நல்லமுறையில் வளர்த்து வருகின்றீர்கள். கால்நடைகளை தாக்கும் முக்கிய நோய்களில் ஒன்று கால் மற்றும் வாய் நோய் என்கிற கோமாரி (கசப்பு) நோய். இந்நோய் மிக கொடிய வைரஸ் கிருமிகளால் பரவுகிறது. மழைக்காலத்திலும், பனிக்காலத்திலும் இக்கிருமியானது தண்ணீர் மூலமாகவும், காற்றின் மூலமாகவும் மிக விரைவில் பரவக்கூடியது. இந்நோயினால் பாதிக்கப்பட்ட கால்நடைகளின் வாயிலும், நாக்கிலும், கால் குளம்புகளுக்கிடையிலும் புண்கள் ஏற்படும். அவைகள் தீனி உட்கொள்ள முடியாமல் மிகவும் பாதிக்கப்படும்.மிகவும் மெலிந்துவிடும். வெயில் காலத்தில், நோயினால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு மூச்சிரைக்கும். தோலின் தன்மை கடினமாகவும், அடர்த்தியான ரோமமும் காணப்படும். பால் கறவை முற்றிலும் குறைந்துவிடும். கறவைப்பசுக்களில் பால் குடித்துவரும் கன்றுகள் உடனடியாக இறந்துவிடும். மலட்டுத்தன்மை ஏற்படும். கால்நடை வளர்ப்போர்க்கு மிகப்பெரிய பொருளாதார இழப்பு ஏற்படும். எனவே, இந்நோய் தாக்கா வண்ணம் இருப்பதற்கு, மாடுகளுக்கு வருடத்திற்கு இருமுறை தடுப்பூசிப் பணி மேற்கொள்வது ஒன்றே சிறந்த நிவாரணம்.இம்மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறையினரால், தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழான கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசித் திட்டம் 3-ஆவது சுற்றின் கீழ் நாளை (1ந் தேதி) முதல் தொடங்கி 21 நாட்களுக்கு, மாவட்டத்தில் உள்ள 1லட்சத்து 46 ஆயிரத்து 700 கால்நடைகளுக்கு கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. ஆதலால் கால்நடைகள் வளர்ப்போர் தங்கள் கிராமத்திற்கு தடுப்பூசி குழுவினர் வரும்பொழுது 3 மாதம் வயதுள்ள கன்று முதல் சினை, கறவை உள்ளிட்ட தங்களின் அனைத்து மாடுகளுக்கும் தவறாமல் கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி போட்டுக்கொண்டு, தங்கள் கால்நடை செல்வங்களை இக்கொடிய நோய் வராமல் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நாளை திருவையாறு தாலுகா, விளாங்குடி கிராமத்தில் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெறுகிறது.
    • தங்களது கோரிக்கை தொடர்பாக மனுக்களை அளித்து தீர்வுபெற்றுக்கொள்ளுலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்யும் பொருட்டு 1969 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் "மக்கள் நேர்காணல் முகாம்" என்ற திட்டம் தொடங்கப்பட்டு நடைபெற்று வந்ததை தொடர்ந்து நடத்திட அரசாணை வெளியிடப்பட்டது.

    அதன்படி நாளை (செவ்வாய்க்கிழமை) தஞ்சை மாவட்டம் திருவையாறு வட்டம், விளாங்குடி கிராமத்தில் "மக்கள் நேர்காணல் முகாம்" நடைபெறுகிறது .

    மேற்படி முகாமில் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை தொடர்பாக மனுக்களை அளித்து தீர்வுபெற்றுக்கொள்ளுலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மானாவாரி பயிர் மேம்பாடு குறித்த பயிற்சி முகாம் நடந்தது.
    • 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    காரிமங்கலம்,

    தருமபுரிமாவட்டம், காரிமங்கலம் ஒன்றியம், இராமியம்பட்டி கிராமத்தில் வேளாண்மைத்துறை மற்றும் அட்மா திட்டத்தின்கீழ் மானாவாரி பயிர் மேம்பாடு குறித்த பயிற்சி முகாம் நடந்தது.

    நிகழ்ச்சியில் வேளாண்மை உதவி இயக்குநர் புவனேஷ்வரி கலந்து கொண்டு பயிற்சி முகாமை தொடங்கி வைத்து பேசினார்.

    வட்டார தொழிநுட்ப மேலாளர் ரவி வரவேற்று உழவன் செயலி பயன்பாடுகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கி பேசினார்.

    கால்நடை டாக்டர் கவுதமன் கோடைக்காலங்களில் கால்நடைகள் பராமரிப்பு குறித்து பயிற்சி அளித்தார்.இதில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் பெரியசாமி, ரேணுகா ஆகியோர் செய்திருந்தனர்.

    • 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
    • போலீசாருக்கு கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டத்தில் போலீசாருக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் இலவச கண் சிகிச்சை சிறப்பு மருத்துவ முகாம் தண்ணீர்பந்தலில் உள்ள மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நேற்று நடந்தது. முகாமில் தனியார் மருத்துவமனை டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் அடங்கிய குழுவினர் போலீசாருக்கும், போலீசாரின் குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கும் கண் சிகிச்சையை மேற்கொண்டனர். இதில் 100-க்கும் மேற்பட்ட போலீசாரும், அவர்களின் குடும்பத்தினரும் பயனடைந்தனர்."

    • முகாமில் மொத்தம் 710 பயனாளிகள் கலந்து கொண்டனர்.
    • வேணுகோபாலு, செயலாளர் கே.வி.விஷ்ணு செந்தூரன் ஆகியோர் வரவேற்றனர்.

     தாராபுரம்:

    தாராபுரம் ராமகிருஷ்ண நல்லம்மை பாலிடெக்னிக் கல்லூரியின் நிறுவனர் அ.சேனாபதி கவுண்டரின் 31-வது நினைவு நாள் மற்றும் கல்லூரியின் 39-வது ஆண்டு விழா நடைபெற்றது. இதையொட்டி கோவை அரவிந்த் கண் மருத்துவமனை, ராமகிருஷ்ண நல்லம்மை பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் தாராபுரம் நகர அரிமா சங்கம் சார்பில் 26-ம் ஆண்டு மாபெரும் இலவச கண்சிகிச்சை முகாம் நடைபெற்றது. கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த முகாமுக்கு பழனி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ராமகிருஷ்ண நல்லம்மை பாலிடெக்னிக் கல்லூரியின் தாளாளருமான கே. எஸ். என் .வேணுகோபாலு தலைமை தாங்கினார். தாராபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு தனராசு கலந்து கொண்டு கல்லூரி நிறுவனர் சேனாபதி கவுண்டர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து, ரிப்பன் வெட்டி முகாமை தொடங்கி வைத்தார்.

    அரவிந்த் கண் மருத்துவமனை தலைவர் நரேந்திரன்,கல்லூரி பொருளாளர் கே.வி.தேன்மொழி வேணுகோபாலு, செயலாளர் கே.வி.விஷ்ணு செந்தூரன் ஆகியோர் வரவேற்றனர். அாிமா மாவட்ட நல்லெண்ணத்தூதுவா் கோபாலகிருஷ்ணன்,பசுவதா டெய்ரி செல்வரத்தினம், மணிவண்ண சுதேவன்,கல்லூரி அறங்காவலர்கள் சுவாதி ஹர்சன், டாக்டர் ஹர்சன், டி. அபிராமி விஷ்ணு செந்தூரன், சங்கரண்டாம்பாளையம் இளைய பட்டக்காரர் கணேஷ், அறங்காவலர்கள் சவுந்திரராஜன், எஸ்.கே.முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் மொத்தம் 710 பயனாளிகள் கலந்து கொண்டனர். அதில் 165 பேர் கண் அறுவை சிகிச்சைக்காக கோவை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு 4 பஸ்களில் அனுப்பி வைக்கப்பட்டனர்.இதுவரை நடைபெற்ற முகாம்களில் 14 ஆயிரத்து 855 பேர் கலந்து கொண்டதில் 5ஆயிரத்து 31 பயனாளிகளுக்கு இலவச கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    நிகழ்ச்சியில் அரிமா ஆலோசனை குழு உறுப்பினா்கள் தங்கராசு, செல்லமுத்து, மண்டல தலைவா் சண்முகவேல், வட்டார தலைவா் கோபால கிருஷ்ணன்,நகர அாிமா சங்க தலைவா் ஆயிமுத்து ரத்தினம்,செந்தில் குமார்,சங்கரண்டாம்பாளையம் இளைய பட்டக்காரர் கணேஷ்,அ.தி.மு.க. மாவட்ட பொருளாளர் சின்னப்பன் என்கிற பழனிசாமி, காடேஸ்வரா பெரியசாமி, பொறியாளர் ஜேம்ஸ், நஞ்சியம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ரஜினிகாந்த், இ.பி.கோவிந்தசாமி, ஆபிஸ் தோட்டம் செல்லமுத்து உட்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா். முடிவில் கல்லூரி முதல்வர் முரளி நன்றி கூறினார்.

    • கந்தர்வகோட்டை அருகே மருத்துவ முகாம் நடைபெற்றது
    • இதில் இரத்த அழுத்தம், கண் சிகிச்சை, காசநோய் கண்டறிதல் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது.

    கந்தர்வகோட்டை:

    கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் நெப்புகை ஊராட்சி முள்ளிக்காப்பட்டி கிராமத்தில் தமிழக அரசின் மக்களைத் தேடி மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் முல்லை ஆறுமுகம் தலைமை தாங்கினார். முகாமில் வட்டார மருத்துவ அலுவலர் மணிமாறன், நடமாடும் மருத்துவக் குழு மருத்துவர் சசிவர்மன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு சிகிச்சை அளித்தனர். இதில் இரத்த அழுத்தம், சர்க்கரை பரிசோதனை, கண் சிகிச்சை, காசநோய் கண்டறிதல் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. முகாமில் நம்புரான் பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மதியழகன், நடுப்பட்டி தலைவர் சந்திரசேகரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். இதில் சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.


    • ஆலங்குடியில் மருத்துவ முகாம் நடைபெற்றது
    • இந்த முகாமில் மூட்டு வலி, இடுப்பு வலி, தோல் நோய்கள், சைனஸ் சர்க்கரை நோய் ஆகியவற்றிற்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டது

    ஆலங்குடி:

    ஆலங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆலங்குடி மருத்துவமனை, சித்த மருத்துவ பிரிவு, அரசு ஊராட்சி ஒன்றியப்பள்ளி சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு பேரூராட்சி தலைவர் ராசி முருகானந்தம் தலைமை வகித்தார். இதில் செயல் அலுவலர் பாலசுப்பிரமணியன், பனையப்பன் மற்றும் சித்த மருத்துவர் மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த முகாமில் மூட்டு வலி, இடுப்பு வலி, தோல் நோய்கள், சைனஸ் சர்க்கரை நோய் ஆகியவற்றிற்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டது.

    ஆலங்குடி அரசு மருத்துவமனை சித்த மருத்துவர் டாக்டர் மணி வண்ணன் மற்றும் பரம்பூர் சித்த மருத்துவர் டாக்டர் சுயமரியாதை ஆகியோர் சிகிச்சை அளித்தனர். இதில் பீட்டர் குமார், துப்புரவு மேற்பார்வையாளர் ராஜேந்திரன் இலவச கசாய குடிநீர் மற்றும் சித்த மருந்துகளை வழங்கினர். முகாமில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஆலங்குடி பேரூராட்சி நிர்வாகம் செய்திருந்தது.

    ×