search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223237"

    • மருந்தியலில் டிப்ளமோ அல்லது இளங்கலை பட்டம் பெற்றவர்கள் பங்கேற்கலாம்.
    • அலுவலக வேலைநாட்களில் நேரில் அணுகியோ அறிந்து கொள்ளலாம்.

    தருமபுரி,

    இந்திய விமானப்படையில் மருத்துவ உதவியாளர் தேர்விற்கான முகாம் பிப்ரவரி 1 முதல் 8 வரை நடைபெற உள்ளது.

    இம்முகாமில் அறிவியல் பிரிவில் 12-ஆம் வகுப்பு படித்தவர்கள் மற்றும் மருந்தியலில் டிப்ளமோ அல்லது இளங்கலை பட்டம் பெற்றவர்கள் பங்கேற்கலாம்.

    மேலும் 12-ம் வகுப்பில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண் பெற்றிருத்தல் வேண்டும். திருமணமாகாத இளைஞர்கள் 27.06.1999 முதல் 27.06.2004 தேதிக்குள்ளும், திருமணமான இளைஞர்கள் 27.06.1999 முதல் 27.06.2002 தேதிக்குள்ளும் பிறந்திருக்க வேண்டும்.

    குறைந்தபட்சம் 152.5 செ.மீ உயரம் உடையவராக இருத்தல் வேண்டும். தகுதியுடைய இளைஞர்கள்bஎழுத்துத் தேர்வு மற்றும் உடற்தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். மேலும், விவரங்களுக்கு www.airmenselection.cdac.in என்ற இணையதளம் வாயிலாகவோ அல்லது தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை அலுவலக வேலைநாட்களில் நேரில் அணுகியோ அறிந்து கொள்ளலாம்.

    தருமபுரி மாவட்டத்தைச் சார்ந்த தகுதி வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இம்முகாமில் பங்கு பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு மாவட்ட கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.

    • மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்வதற்கு சிறப்பு முகாம் வருகிற 24-ம் தேதி நடைபெறுகிறது.
    • வருகிற 24-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நாமக்கல் மோகனூர் ரோட்டில் கூட்டுறவு காலனியில் அமைந்துள்ள நாமக்கல் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் கோட்டத்தில் மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்வதற்கு சிறப்பு முகாம் வருகிற 24-ம் தேதி நடைபெறுகிறது . இது குறித்து நாமக்கல் கோட்ட மின் வாரிய செயற்பொறியாளர் நாகராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாமக்கல் மின் விநியோக கோட்டத்திற்கு உட்பட்ட நாமக்கல் நகரம், வளையப்பட்டி, எருமப்பட்டி, சேந்தமங்கலம், புதன்சந்தை, புதுசத்திரம், காளப்பராயப்பன்பட்டி, பேளுகுறிச்சி, கொல்லி மலை உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் உள்ளவர்கள் பெயர் மாற்றம் செய்வதற்கான சிறப்பு முகாம் வருகிற 24-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நாமக்கல் மோகனூர் ரோட்டில் கூட்டுறவு காலனியில் அமைந்துள்ள நாமக்கல் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

    மின் இணைப்பு பெயர் மாற்றத்திற்கு வருகை தரும் பொதுமக்கள் வீடு மற்றும் கடைகள் மின் இணைப்புகளுக்கு வீட்டு வரி ரசீது, பத்திர நகல் , வாரிசுதாரிடம் இருந்து ஆட்சேபனை இன்மை கடிதம் கொண்டு வரவேண்டும். விவசாய மின் இணைப்பு–களுக்கு பத்திர நகல் அல்லது பட்டா, கிராம நிர்வாக அலுவலரின் உரிமை சான்று, புலவரைபடம், தாழ்வழுத்த ஒப்பந்த பத்திரம் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும்.

    தொழில்துறை மின் இணைப்புகளுக்கு தாழ்வ–ழுத்த ஒப்பந்த பத்திரம், சொத்து வரி ரசீது, பத்திர நகல் போன்ற சான்றுகள் மற்றும் ஆவணங்களுடன் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பெயர் மாற்றம் செய்து பயனடையலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

    • சுமார் 3 கி.மீ தூரம் நடந்து சென்று அரசு தொடக்கபள்ளிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
    • மழை காலங்களில் பேரிடர் மீட்பு முகாமாகவும் செயல்பட்டு கிராம மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

    வேதாரண்யம்:

    தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் விவசாய பிரிவு மாநில பொதுச்செயலாளர் சுர்ஜித் சங்கர் முதல்-அமைச்சருக்கு அனுப்பி யுள்ள மனுவில் கூறியிருப்ப தாவது:-

    நாகை மாவட்டம், தலைஞாயிறு ஒன்றியத்தில் வேளானிமுந்தல் கிராமம், முனீஸ்வரன் கோவில் தெரு, லிங்கத்தடி தெரு ஆகிய பகுதிகளில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு விவசாயமே பிரதான தொழில் ஆகும்.

    இந்த 3 கிராமங்களிலும் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் அதிகம் உள்ளனர். இந்நிலையில், அவர்கள் படிப்பதற்கு ஒரு பள்ளிக்கூடம் கூட அப்பகுதியில் இல்லை.

    அங்குள்ள குழந்தைகள் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்றால் சுமார் 3 கி.மீ தூரம் நடந்து சென்று சந்தானம் தெரு கிராமத்தில் இருக்கும் அரசு தொடக்கபள்ளிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    எனவே, இப்பகுதியில் ஒரு பள்ளி இருந்தால் குழந்தைகள் படிப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.

    மேலும், மழை காலங்களில் இப்பகுதி வெள்ள காடாக காட்சி அளிக்கும். அப்போது அப்பகுதி மக்கள் தங்கள் உடைமைகளோடு நீண்ட தொலைவில் உள்ள அரசு முகாம்களுக்கு தான் செல்ல வேண்டும்.

    இதுவே, இப்பகுதியில் பள்ளி இருந்தால் மழை காலங்களில் பேரிடர் மீட்பு முகாமாகவும் செயல்பட்டு கிராம மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

    எனவே, லிங்கத்தடி தெரு கிராமத்தில் பள்ளி அமைத்தால் 3 கிராமங்களில் இருந்து வரும் குழந்தைகளுக்கு அருகாமையில் இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • குழந்தைகளுக்காக ஈசிஜி, பல் மருத்துவம், காது குறைபாடுகளை எளிதில் கண்டறியும் ஆடியோ மெட்ரிக் முறை.
    • பல்வேறு பிரத்தியேக உபகரணங்கள் கொண்டு முகாம் நடைபெற்றது.

    நாகப்பட்டினம்:

    நாகையில் மாற்றுத்திற னாளி குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் நடை பெற்றது ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி வட்டாரவள மையம் சார்பாக 18 வயதிற்குட்பட்ட மாற்றுத்தி றனாளி குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

    கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

    மருத்துவ முகாம் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளி குழந்தைகள் பங்கேற்றனர். மருத்துவ முகாமில் 6 மருத்துவர்களை கொண்டு மாற்றுத்திறனாளி குழந்தைகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    குறிப்பாக கலந்து கொண்ட குழந்தைகளுக்கு தேசிய அடையாள அட்டை, இலவச பேருந்து அட்டை, அதி நவீன மருத்துவ உபகரணங்கள், மாத பராமரிப்பு உதவி தொகை, கல்வி தொகை போன்ற உதவிகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

    மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக ஈசிஜி, பல் மருத்துவம், காது குறைபாடுகளை எளிதில் கண்டறியும் ஆடியோ மெட்ரிக் முறை, மனநல ஆலோசகர் மூலம் ஆலோசனை வழங்கப்பட்டது பல்வேறு பிரத்தியேக உபகரணங்கள் கொண்டு முகாம் நடைபெற்றது.

    • சிறப்பு பொது வினியோக திட்ட குறைதீர்க்கும் முகாம்கள் நாளை நடக்கிறது.
    • முகாம்கள் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறவுள்ளது.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் சிறப்பு பொது வினியோக திட்ட குறைதீர்க்கும் முகாம்கள் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறவுள்ளது. முகாம் நடைபெறும் இடங்கள் கிராமங்கள், விவரம் வருமாறு:-பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் வட்டாரத்திற்கு நொச்சியம், வேப்பந்தட்டை வட்டாரத்திற்கு தொண்டமாந்துறை (மேற்கு), குன்னம் வட்டாரத்திற்கு ஒகளூர் (கிழக்கு), ஆலத்தூர் வட்டாரத்திற்கு வரகுபாடி ஆகிய 4 கிராமங்களில் முகாம் நடக்கிறது.

    இதே போல் அரியலூர் மாவட்டத்தில், அரியலூர் வட்டாரத்திற்கு கீழக்கொளத்தூர், உடையார்பாளையம் வட்டாரத்திற்கு தண்டலை, செந்துறை வட்டாரத்திற்கு (பெரியாக்குறிச்சி), ஆண்டிமடம் வட்டாரத்திற்கு கூவத்தூர் (வடக்கு) ஆகிய 4 கிராமங்களில் முகாம் நடக்கிறது.கூட்டத்தில் பொதுமக்கள் ரேஷன் கடைகள் தொடர்பான குறைகளை தெரிவித்தும், மின்னணு குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், செல்போன் எண் பதிவு மாற்றம் செய்தல், புதிய ரேஷன் கார்டு, நகல் மின்னணு குடும்ப அட்டை, மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள் ஆகியோர்களுக்கு அங்கீகார சான்று வழங்குதல், குடும்ப தலைவர் இறந்திருந்தால் அவரது புகைப்படத்தை மாற்றம் செய்வதற்கு, புதிய குடும்ப தலைவரின் புகைப்படத்துடன் விண்ணப்பம் செய்தல் உள்ளிட்டவை மேற்கொள்ளலாம்.

    மேலும் தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார்களை அளித்து நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்-2019-ன் படி பயன்பெறலாம் என பெரம்பலூர்-அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
    • ஆதார் எண்ணை இணைக்காமல் நிலுவையில் உள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தஞ்சை நகர செயற்பொறியாளர் மணிவண்ணன் வெளியி ட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை நகரிய கோட்டத்தில் உள்ள வீடு, விவசாயம், கைத்தறி மற்றும் விசைத்தறி மின் இணைப்புகளின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 2 ஆயிரத்து 463 ஆகும். இவற்றில் 80 ஆயிரத்து 364 எண்ணிக்கையிலான மின் இணைப்புகளுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டு விட்டது. மீதமுள்ள 22 ஆயிரத்து 99 எண்ணிக்கை மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணைஇணைக்க மீண்டும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    நீலகிரி, தஞ்சை மேற்கு, நீதிமன்றசாலை, மானம்பு ச்சாவடி, அருளானந்தநகர், ஈஸ்வரிநகர், கரந்தை, அரண்மனை ஆகிய இடங்களில் உள்ள அலுவலகங்களில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

    எனவே நகரிய கோட்டத்தில் இதுவரை மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காமல் நிலுவையில் உள்ள 22 ஆயிரத்து 99 மின் நுகர்வோர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்து கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ராமநாதபுரத்தில் வேலைவாய்ப்பு முகாம் நாளை நடக்கிறது
    • வேலை தேடும் இளைஞர்களும் பயன் பெறலாம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் சார்பில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் மதுக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    தமிழக அரசின் சார்பில் ஒவ்வொரு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திலும் வேலைநாடும் இளைஞர்கள் பயன்பெறும் பொருட்டு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ேவலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. இம்முகாம் மூலம் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதினால் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எக்காரணத்தை கொண்டும் ரத்து செய்யப்பட மாட்டாது.

    மேலும் தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் வேலைநாடுநர்களுக்கு கட்டணம் ஏதுமின்றி முற்றிலும் இலவசமாக தமிழக அரசால் தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையம் Tamil Nadu Private Job Portal www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள சேவை வழங்கப்படுகிறது.

    இவ்விணையதளத்தில் பதிவு செய்து தனியார் துறை நிறுவனங்களும் வேலை தேடும் இளைஞர்களும் பயன் பெறலாம்.

    இவ்வாறு அவர் அறிக்கை யில் தெரிவித்துள்ளார்.

    • அரசு மருத்துவர்கள் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்து மருத்துவ சான்று வழங்க உள்ளனர்.
    • அடையாள அட்டை பெறாத மாற்றுதிறனாளிகள் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ் பள்ளியில் படிக்கும் மாற்று திறனாளி மாணவர்களுக்கு மருத்துவ சான்று வழங்குவதற்கு வட்டார வாரியாக சிறப்பு மருத்துவ முகாம் 15 நாட்கள் நடைபெற உள்ளது. இம்முகாமில் அரசு மற்றும் தனியார் பள்ளியில் படிக்கும் 18 வயதுக்கு உட்பட்ட மாற்று திறனாளிகள் மட்டும் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    இந்த முகாமில் எலும்பு முறிவு மருத்துவர், மனநல மருத்துவர், கண், காது, மூக்கு, தொண்டை மருத்துவர், குழந்தைகள் நல மருத்துவர் ஆகிய அரசு மருத்துவர்கள் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்து மருத்துவ சான்று வழங்க உள்ளனர். மேற்படி மருத்துவ அலுவலர் வழங்கும் சான்றிதழின் அடிப்படையில் மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது.

    தஞ்சாவூர் நகரத்தை சேர்ந்தவர்களுக்கு தஞ்சாவூர் மேம்பாலம் அரசு காதுகேளாதோர் மேல்நிலைப்பள்ளியில் நாளை (வியாழக்கிழமை ) இந்த முகாம் நடைபெற உள்ளது.

    இதேபோல் ஒரத்தநாடு வட்டாரத்தை சேர்ந்தவர்களுக்கு வருகிற 21-ந் தேதி கும்பகோணம் கே.எம்.எஸ்.எஸ் உலகத்தில் இந்த முகாம் நடைபெறுகிறது. கும்பகோணம் வட்டாரத்தில் உள்ளவர்களுக்கு வரும் 24-ந் தேதி புனித தூய நடுநிலைப் பள்ளியிலும், சேதுபாவாசத்திரம் வட்டாரத்தை சேர்ந்தவர்களுக்கு வருகிற 28-ந் தேதி பள்ளத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், தஞ்சாவூர் ஊரகத்தை சேர்ந்தவர்களுக்கு வரும் 31-ந் தேதி வல்லம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும், திருவிடைமருதூர் வட்டாரத்தை சேர்ந்தவர்களுக்கு அடுத்த மாதம் 1-ந் தேதி திருவாவடுதுறை அம்பலவாண தேசிகர் நடுநிலைப் பள்ளியிலும் நடைபெறுகிறது.

    திருவையாறு வட்டாரத்தை சேர்ந்தவர்களுக்கு அடுத்த மாதம் 3-ந் தேதி திருவையாறு சீனிவாசராகவ மேல்நிலைப் பள்ளியிலும், திருப்பனந்தாளை சேர்ந்தவர்களுக்கு அடுத்த மாதம் 4-ந் தேதி எஸ்.கே.ஜி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியிலும், பூதலூரை சேர்ந்தவர்களுக்கு அடுத்த மாதம் 8-ந் தேதி திருக்காட்டுப்பள்ளி சிவசாமி ஐயர் உயர்நிலைப் பள்ளியிலும், பேராவூரணியை சேர்ந்தவர்களுக்கு அடுத்த மாதம் 10-ந் தேதி பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெறுகிறது.

    பட்டுக்கோட்டை வட்டாரத்தை சேர்ந்தவர்களுக்கு கண்டியன் தெரு நகராட்சி நடுநிலைப் பள்ளியில் அடுத்த மாதம் 11-ந் தேதியும், அம்மாபேட்டையை சேர்ந்தவர்களுக்கு அடுத்த மாதம் 14-ந் தேதி ரெஜினா சேலி மேல்நிலைப் பள்ளியிலும், திருவோணம் வட்டாரத்தை சேர்ந்தவர்களுக்கு அடுத்த மாதம் 16-ந் தேதி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், மதுக்கூரை சேர்ந்தவர்களுக்கு அடுத்த மாதம் 17-ந் தேதி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், பாபநாசம் வட்டாரத்தை சேர்ந்தவர்களுக்கு அடுத்த மாதம் 18-ந் தேதி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகளும் நடைபெறுகிறது.

    இந்த சிறப்பு முகாமில் கலந்து கொள்ளும் மாற்றுதிறனாளிகள் ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் -5, இதற்கு முன் சிகிச்சை பெற்ற ஆவணங்களுடன் வந்து கலந்து கொள்ள வேண்டும்.

    தஞ்சை மாவட்டத்தில் இதுநாள் வரை மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெறாத மாற்று திறனாளிகள் இந்த சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெறாதவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை , ஆதார் அட்டை நகல் மற்றும் புகைப்படம் -2 ஆகிய ஆவணங்களுடன் நேரில் வந்து கலந்து கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • டாக்டர்கள் வழங்கும் சான்றின் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது.
    • மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெறாதவர்கள் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    நீடாமங்கலம்:

    வலங்கைமான் வட்டார வளமைய மேற்பார்வை யாளர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திகு றிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் ஒன்றியத்தில் 1 முதல் 18 வயது வரையுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் வருகிற 20-ந் தேதி வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் நடைபெறுகிறது.

    முகாமில் எலும்பு முறிவு, மனநலம், கண், காது, மூக்கு, தொண்டை, குழந்தைகள் நலம் ஆகிய பிரிவு டாக்டர்கள் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்து சான்று வழங்க உள்ளனர்.

    டாக்டர்கள் வழங்கும் சான்றின் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது.

    முகாமில் கலந்து கொள்ளும் மாற்றுத்தி றனாளிகள் ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-5 மற்றும் இதற்கு முன் சிகிச்சை பெற்ற ஆவணங்களுடன் கலந்து கொள்ளலாம்.

    வலங்கைமான் ஒன்றியத்தில் இதுநாள் வரை மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    மேலும், தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெறாதவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, ஆதார் அட்டை நகல் மற்றும் புகைப்படம் -2 ஆகிய ஆவணங்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 40 பேருக்கு இலவச கண் கண்ணாடியும் வழங்கப்பட்டது.
    • கண் சிகிச்சை சிறப்பு முகாம் நடைபெற்றது.

    கரூர்

    தரகம்பட்டி அருகே உள்ள வரவனை கிராமம் வேப்பங்குடியில் இலவச கண் சிகிச்சை சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமை வரவணை ஊராட்சி மன்றத் தலைவர் கந்தசாமி தொடங்கி வைத்தார். தனியார் கண் மருத்துவமனை டாக்டர்கள் பங்கேற்று பொதுமக்களுக்கு சிறந்த முறையில் கண் பரிசோதனை மற்றும் மருத்துவ சிகிச்சை அளித்தனர். முகாமில் மொத்தம் 98 பேருக்கு இலவச கண் பரிசோதனை நடைபெற்றது. இதில் கிட்டப்பார்வை குறைபாடுகள் உள்ள 40 பேருக்கு இலவச கண் கண்ணாடியும் வழங்கப்பட்டது.

    • பொதுமக்கள் பதிவு செய்து கொண்டனர். 
    • மருத்துவ காப்பீட்டு திட்ட முகாம் நடந்தது.

    கரூர்

    புகழூர் நகராட்சிக்குட்பட்ட கக்கன்காலனி பகுதியில் முதல்-அமைச்சர் மற்றும் பிரதம மந்திரியின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட முகாம் நடைபெற்றது. முகாமில் கக்கன் காலனி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களது ஆதார் மற்றும் குடும்ப அட்டையை கொண்டு வந்து முதல்-அமைச்சர் மற்றும் பிரதமர் மதுரையின் விரிவான காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்தவரிடம் கொடுத்து பதிவு செய்து கொண்டனர். 

    • சேலம் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்கும் பொருட்டு, ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமையன்று வட்டங்கள் வாரியாக மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
    • 2-வது சனிக்கிழமை போகி பண்டிகை வருவதால் 3-வது சனிக்கிழமையான வருகிற 21-ந்தேதி ஒவ்வொரு வட்டாட்சியர் அலுவலகத்திலும் குறைதீர் முகாம் நடைபெறுகிறது

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளி

    யிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-

    சேலம் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்கும் பொருட்டு, ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமையன்று வட்டங்கள் வாரியாக மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. 2-வது சனிக்கிழமை போகி பண்டிகை வருவதால் 3-வது சனிக்கிழமையான வருகிற 21-ந்தேதி ஒவ்வொரு வட்டாட்சியர் அலுவலகத்திலும் குறைதீர் முகாம் நடைபெறுகிறது

    இந்த முகாமில் பொதுமக்கள் தங்களது குறைகளை வட்ட வழங்கல் அலுவலரிடம் தெரிவித்து நிவர்த்தி பெறலாம். இக்குறைதீர் முகாமில், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல் ஆகிய சேவைகளை வேண்டி முகாமில் கோரிக்கையினை அளிக்கும் பொதுமக்கள் மற்றும் அட்டைதாரர்கள் சார்பாக ஆன்லைன் பதிவுகளை அந்தந்த வட்ட அலுவலகங்கள் மூலமாக மேற்கொள்ளலாம்.

    மேலும், செல்போன் எண் பதிவு , மாற்றம் செய்தலுக்கான தனியான கோரிக்கை மனு தேவைப்படின் அவற்றை யும் பெற்று நடவடிக்கை மேற்கொள்ளலாம். பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்கள் அளிக்கலாம். தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார்களை நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019-ன்படி மேற்கொள்ள உரிய அறிவுரைகள் வழங்கும் வகையிலும் நடவடிக்கை மேற்கொள்வதற்குரிய மனுக்களை முகாம்களில் அளித்து பயனடையலாம்.

    இவ்வாறு அவர், அதில் தெரிவித்துள்ளார்.

    ×