search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223237"

    • சிறப்பு மனு முகாம் நடைபெற்றது.
    • போலீஸ் அலுவலக வளாகத்தில் நடந்தது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் பொதுமக்கள் சிறப்பு மனு முகாம் நேற்று நடந்தது. முகாமை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி தொடங்கி வைத்தார். இந்த முகாமில் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்கள், சிறப்பு பிரிவு காவல்துறையினர் கலந்து கொண்டார்கள். இந்த சிறப்பு மனு முகாம் மூலம் பொதுமக்களிடம் இருந்து 24 மனுக்கள் பெற்றப்பட்டு அந்த மனுக்கள் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்திற்கு நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.

    • திருவாலந்துறை கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் 30-ந்தேதி நடக்கிறது.
    • இந்த முகாமில் திருவாலந்துறை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் முன்னதாகவே மனுக்களை அளித்து பயன் அடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா திருவாலந்துறை கிராமத்தில், மக்கள் தொடர்பு திட்ட முகாம் மாவட்ட கலெக்டர் கற்பகம் தலைமையில் வருகிற 30-ந்தேதி நடைபெறுகிறது. இந்த முகாமில் திருவாலந்துறை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் முன்னதாகவே மனுக்களை அளித்து பயன் அடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மக்கள் தொடர்புத்திட்ட முகாமிற்கு முன்னதாக பொது சுகாதாரத்துறையின் சார்பில் மருத்துவ முகாம் இன்று (புதன் கிழமை) நடக்கிறது. கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் கால்நடைகளுக்கான மருத்துவ முகாம் நாளை (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. எனவே, மக்கள் தொடர்புத் திட்ட முகாமினை சம்பந்தப்பட்ட பகுதி மக்கள் தவறாது பயன்படுத்தி பயனடையுமாறு மாவட்ட கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.

    • அவசர பராமரிப்பு பணிகள் தவிர வேறு பணிகளுக்கு மின்தடங்கள் ஏற்படுத்த கூடாது
    • நெல்லை மாவட்டத்தில் இடி- மின்னல் மழை, சூறைக்காற்று அதிகமாக இருக்கிறது.

    நெல்லை:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பாக நெல்லை மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட நெல்லை நகர்ப்புற கோட்டத்தின் மக்கள் குறை தீர்க்கும் முகாம் கே.டி.சி. நகரில் உள்ள செயற் பொறி யாளர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

    உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவு

    கூட்டத்திற்கு நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி கலந்து கொண்டு பொதுமக்கள் அளித்த புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க செயற்பொறியாளர் நெல்லை நகர்ப்புற கோட்டம் முத்துக்குட்டி மற்றும் ஏனைய அதிகாரி களுக்கும் உத்தரவிட்டார்.

    நிகழ்ச்சியில் நெல்லை நகர்ப்புற கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து மின் பொறியாளர்களும் கலந்து கொண்டனர். குறைதீர்க்கும் கூட்டம் முடிந்தவுடன் பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் மத்தியில் மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி பேசியதாவது:-

    மின்துறை அமைச்சர் உத்தரவின் பேரில் வருகிற 31-ந்தேதி கோடை காலம் முடியும் வரை தங்கு தடையின்றி மின் வினியோகம் செய்வதற்கு ஏதுவாக அவசர பராமரிப்பு பணிகள் தவிர வேறு பணிகளுக்கு மின்தடங்கள் ஏற்படுத்த கூடாது

    நெல்லை நகர்ப்புற கோட்டத்தில் இயற்கை இடர்பாடுகள் காரணமாக ஏற்பட்ட மின்தடங்களை இரவு-பகல் பாராது உடனடியாக சரி செய்த அனைத்து மின் பொறி யாளர்கள், அலுவலர்கள், மற்றும் பணியாளர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். அனைவரும் மிகுந்த கவனத்துடனும் பாதுகாப்பு நெறிமுறை களுடனும் பணிபுரிய வேண்டும்.

    கோடைகாலத்தில் ஏற்படும் இயற்கை இடர்பாடுகள் காரணமாக நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் கடும் இடி- மின்னல் மழை பொழிவு சூறைக்காற்று அதிகமாக இருக்கிறது.

    இதனால் அனைத்து மின் பொறியாளர்களும் தொடர் கண்காணிப்பில் பணி புரிந்து மின் தடங்கள் ஏற்பட்டால் உடனடியாக மின் வினியோகம் வழங்குவதற்கு அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

    வருகின்ற காலங்களில் இயற்கை இடர்பாடுகள் காரணமாக மின் பாதையில் மின்தடங்கள் ஏற்படுத்தும் மரக்கிளைகளை அப்புறப் படுத்தவும், பீங்கான் வட்டு பதிலாக இயற்கை இடர் பாடுகளின் போது முடிந்த வரை மின் தடங்கள் ஏற்படுத்தாமல் இருக்கும் பாலிமர் வட்டு மற்றும் பாலிமர் முள் சுருள் பொருத்துவதற்கு தேவை யான மதிப்பீடு தயார் செய்து பணிகளை உடனடி யாக தொடங்க வேண்டும்.

    மேலும் மின் நுகர் வோர்கள் கேட்கின்ற வினாக்களுக்கு உரிய பதிலை கனிவுடன் தெரி விக்க அறிவுரை வழங்கி னார். பொதுமக்கள் மின்சாரம் சம்பந்தமாக ஏதேனும் உதவி தேவைப் பட்டால் மின்னகம் மின் நுகர்வோர் சேவை மையம் தொலைபேசி எண் 94987 94987 அனைத்து மின் நுகர்வோர்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.

    மேலும் பொதுமக்களும் தங்களுக்கு தேவையான மின்சார சம்பந்தமான அனைத்து தேவைகளையும் மின்னகம் மின் நுகர்வோர் சேவை மையம் 94987 94987 தொடர்பு கொண்டு பூர்த்தி செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர் பேசினார்.

    • 6 இடங்களில் கடன் வழங்கும் முகாம் நாளை நடக்கிறது.
    • காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது.

     திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் 6 இடங்களில் கனரா வங்கி சார்பில் வீடு மற்றும் வாகனம் வாங்க கடன் உதவி வழங்கும் முகாம் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது. இதன்படி கனரா வங்கி கிளைகளான திருப்பூர் கொங்குநகர் அப்பாச்சி நகர் மெயின் ரோட்டில் குறிஞ்சி டவர்சில் உள்ள எஸ்.எம்.இ. கிளையிலும், உடுமலை தளி ரோட்டில் உள்ள உடுமலை கிளையிலும், திருப்பூர் ரோட்டில் உள்ள பெருமாநல்லூர் கிளையிலும், வெள்ளகோவிலில் தாராபுரம் ரோட்டில் உள்ள கிளையிலும், தாராபுரத்ல் பிக்பஜார் தெரு கிளையிலும், பல்லடத்தில் திருச்சி ரோட்டில் உள்ள கிளையில் என 6 இடங்களில் கடன் வழங்கும் முகாம் நாளை நடக்கிறது.

    வீட்டுக்கடனுக்கு 8.55 சதவீத வட்டியும், வாகனக்கடனுக்கு வட்டியாக 8.80 சதவீதமும் வசூலிக்கப்படும். குறைந்த பரிசீலனை கட்டணம் பெறப்படும். பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளும்படி கனரா வங்கி துணை பொது மேலாளர் வி.எஸ்.சந்தோஷ், மண்டல மேலாளர் எல்.சங்கரநாராயணன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

    • சிறப்பு விசாரணை முகாமில் 42 மனுக்கள் பெறப்பட்டது
    • மனு அளிக்க வந்தவர்களுக்கு சிறப்பு பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலக வளாகத்தில் சிறப்பு மனு விசாரணை முகாம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி தலைமையில் நடந்தது. முகாமில் போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி மற்றும் போலீசார் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றனர். இதில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 42 மனுக்கள் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்திற்கு நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை தோறும் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் நடைபெற்று வரும் இந்த சிறப்பு மனு விசாரணை முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். முகாமில் கலந்து கொள்ள வருபவர்களுக்கு ஏதுவாக போலீசார் சார்பாக பாலக்கரையில் இருந்து மாவட்ட போலீஸ் அலுவலகத்திற்கும், மீண்டும் போலீஸ் அலுவலகத்தில் இருந்து புதிய பஸ் நிலையம் செல்வதற்கும் பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது, என்று போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி தெரிவித்தார்.

    • உயர்கல்வி குறித்து ஆலோசனை முகாம் நடக்கிறது
    • பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கலந்து கொள்ள அழைப்பு

    அரியலூர்

    ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் அரியலூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 11 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவிகளுக்கு உயர்கல்வி சேர்க்கை விகிதத்தை உயர்த்தும் நோக்கோடு தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அதிகமுள்ள படிப்புகள் மற்றும் அப்படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனங்கள் குறித்து தன்னார்வ இயக்கத்தின் மூலம் ஆலோசனை முகாம் நாளை (சனிக்கிழமை) காலை 9.30 மணியளவில் கலெக்டர் அலுவலக பிரதான கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது. இதில் மாணவ-மாணவிகளும், அவர்களின் பெற்றோர்களும் கலந்து கொள்ளலாம், என்று கலெக்டர் ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.

    • விழிப்புணர்வு முகாம் நடந்தது
    • அரசின் நலத்திட்டங்கள் பற்றி எடுத்துக் கூறப்பட்டது

    கரூர்,

    கரூர் பள்ளப்பட்டியில் சிறுபான்மையினருக்கான நலத்திட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு பள்ளப் பட்டி நகராட்சி தலைவர் எஸ்.ஏ.முனவர்ஜான் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையர் கே.பி. குமரன் முன்னிலை வகித்தார். சிறுபான்மை மக்களுக்கு வங்கி கடன், தொழில் தொடங்க கடன், மாணவ மாணவிகளுக்கு கல்விக்கடன் உள்ளிட்ட பலதரப்பட்ட அரசின் நலத்திட்டங்கள் பற்றி ஒவ்வொரு துறை வாயிலாக எடுத்துக் கூறப்பட்டது.

    • 100-க்கும் அதிகமான காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்ய உள்ளனர்.
    • 8 முதல் 12-ம் வகுப்பு வரை படித்தோர், டிப்ளமோ, ஐ.டி.ஐ, பட்டதாரிகள் ஆகியோர் கலந்து கொள்ளலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பாக வேலை தேடும் இளைஞர்களுக்காக மாதந்தோறும் மூன்றாவது வெள்ளிக்கிழமையில் சிறு அளவிலான வேலைவாய்ப்பு முகாம் அலுவலக வளாகத்திலேயே நடத்தப்பட்டு வருகின்றன.

    இதன்படி நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் தனியார்த்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் தஞ்சாவூரில் உள்ள முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 100-க்கும் அதிகமான காலிப்பணியி டங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

    இம்முகாமானது தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்த வேலை தேடும் இளைஞர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இம்முகாமில் 8-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்தோர், டிப்ளமோ, ஐ.டி.ஐ, பட்டதாரிகள் ஆகியோர் கலந்து கொள்ள லாம்.

    மேலும் வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான ஆட்களை இம்முகாமில் கலந்து கொண்டு நேரடியாக தேர்வு செய்து கொள்ளலாம்.

    இம்முகாமில் கலந்து கொள்பவர்கள் தங்களின் சுய விவர அறிக்கை, கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை மற்றும் இதர சான்றிதழ்களின் நகல்களுடன்;-

    கலந்து கொண்டு பணி வாய்ப்பினை பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்து கொள்ளப்படுகிறது.

    மேலும் விவரங்களுக்கு 04362-237037 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சோழவந்தானில் புதிய உரம் அறிமுக நிகழ்ச்சி-உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.
    • சங்கத்தின் செயலாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டாரத்தில் டான்பெட்டின் புதிய உரம் அறிமுக நிகழ்ச்சி மற்றும் உறுப்பினர் கல்வி திட்டம், உறுப்பினர் சேர்க்கை முகாம் சோழவந்தான் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நடந்தது. துணைப்பதிவாளர் பார்த்திபன் தலைமை தாங்கினார். மதுரை மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் மேலாண்மை இயக்குநர் கார்த்திகேயன், வாடிப்பட்டி கள அலுவலர் தங்க நாககுரு மற்றும் ராமலிங்கம் வடிவேலன் உள்பட பலர் கலந்து கொண்டர்.

    வாடிப்பட்டி வட்டாரத்தில் உள்ள சோழவந்தான் 1, 2 திருவேடகம், தென்கரை , இரும்பாடி, கருப்பட்டி, கரட்டுப்பட்டி, மன்னாடிமங்கலம், சித்தாலங்குடி , கச்சைகட்டி , ராமையன்பட்டி, போடிநாயக்கன்பட்டி, நீரேத்தான் ஆகிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் செயலாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • புதுக்கோட்டையில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெ உள்ளது
    • வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 19-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10.30 மணி முதல் நடைபெற உள்ள இந்த தனியார் வேலை வாய்ப்பு முகாமில், பல்வேறு தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

    இத்தனியார்துறை வேலை வாய்ப்பு முகாமில் எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ, டிப்ளமோ போன்ற கல்வித்தகுதியுடைய 18 முதல் 35 வயதிற்குட்பட்ட வேலைநாடுவோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொள்ளலாம். தங்களது சுயவிவர குறிப்பு, ஆதார்அட்டை மற்றும் கல்வி ச்சான்று நகல்களுடன் வந்து கலந்து கொள்ள வேண்டும். மேலும், வேலைநாடும் இளைஞர்கள் "தமிழ்நாடு தனியார்துறை வேலை இணையம்" என்ற இணையதளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    • மதுரை வேலைவாய்ப்பு மையத்தில் 19-ந் தேதி ஆட்கள் தேர்வு முகாம் நடக்கிறது.
    • மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மைய துணை இயக்குநர் சண்முகசுந்தர் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் தனியார்துறை சார்பில் ஆட்கள் தேர்வு முகாம் வருகிற 19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதில் 50-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.

    10-ம் வகுப்பு முதல் முதுநிலை பட்டப்படிப்பு வரை படித்தவர்கள் மற்றும் ஐ.டி.ஐ., டிப்ளமோ பட்டதாரிகள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம். முகாமில் பங்கேற்க விரும்பும் தனியார் நிறுவனங்கள் http://www.tnprivatejobs.tn.gov.in இணையதளத்தில் சுய விவரங்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

    மதுரை புதூரில் மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தில் தனியார் ஆட்கள் தேர்வு முகாமில் கலந்து கொள்ள விரும்புவோர் கல்விச் சான்றிதழ், குடும்ப அடையாள அட்டை, ஆதார் அட்டை மற்றும் போட்டோவுடன் 19-ந் தேதி காலை 10 மணிக்கு நேரில் ஆஜராக வேண்டும். தனியார் நிறுவனங்களில் பணி பெறுவதால், வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு எந்த வகையிலும் பாதிக்காது.

    மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மைய துணை இயக்குநர் சண்முகசுந்தர் தெரிவித்துள்ளார்.

    • பெரம்பலூரில் நாளை ரேஷன் குறைதீர் முகாம் நடைபெற உள்ளது
    • நாளை (13-ந்தேதி) காலை10 மணியளவில் நடைபெறுகிறது

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டம் சார்ந்த குறைபாடுகளைக் களைவதற்கும், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், பிழை திருத்தம் செய்தல் போன்ற கோரிக்கைகளின் மீது உடனுக்குடன் தீர்வு காண்பதற்கும், சிறப்பு பொது விநியோகத் திட்ட குறை தீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் மேலப்புலியூர், தழுதாழை, திருமாந்துரை, நாட்டார்மங்கலம் ஆகிய கிராமங்களில் நாளை (13-ந்தேதி) காலை10 மணியளவில் நடைபெறுகிறது. முகாமில், பொதுமக்கள் கலந்து கொண்டு, உணவு பொருள் வழங்கல் மற்றும் குடும்ப அட்டைகள் சம்பந்தமான, குறைகளைத் தெரிவித்து பயன்பெறலாம் என கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.

    ×