search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223237"

    • அறந்தாங்கியில் கால்நடை சிறப்பு முகாம் நடைபெற்றது
    • கால்நடைகளை சிறப்பாக பராமரித்த விவசாயிகள் பொதுமக்களுக்கு பரிசு வழங்கப்பட்டது

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே விக்னேஷ்வரபுரத்தில் கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. ஊராட்சி மன்றத் தலைவர் ஏகாம்பாள் சந்திரமோகன் ஏற்பாட்டில் நடைபெற்ற முகாமில் சட்ட மன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்தார்.அப்போது கால்நடைகளுக்கு பரவிவரும் நோய்கள் குறித்தும், அவற்றிலிருந்து எவ்வாறு பாதுகாப்பது என்று எடுத்துக் கூறப்பட்டது. மேலும் கால்நடைகளுக்கு தடுப்பூசி, மருத்து, மாத்திரைகள் வழங்கப்பட்டதோடு கால்நடைகளை சிறப்பாக பராமரித்த விவசாயிகள் பொதுமக்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

    இதில் விக்னேஷ்வரபுரம், பாக்குடி, பஞ்சாத்தி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்தவர்கள் பயனடைந்தனர். அதே போன்று கானாடு ஊராட்சியில் கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டம் மூலம் பொதுமக்களுக்கான சிறப்பு மருத்துவமுகாம் நடைபெற்றது. ஒன்றியக்குழு தலைவர் பரணி கார்த்திகேயன் முன்னிலையில், சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.நிகழ்ச்சியில் துறை மருத்துவர்கள், கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.




    • ஜெயங்கொண்டம் அருகே சட்ட உதவி விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது
    • மோட்டார் வாகன விபத்துகளில் இழப்பீடு மற்றும் ஆலோசனை எப்படி பெறுவது என விளக்கி பேசினர்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மீன்சுருட்டி கிராமத்தில் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட சட்ட பணிகள் ஆணையக் குழு மற்றும் ஜெயங்கொண்டம் சட்ட பணிகள் குழு இணைந்து நடத்தும் இலவச சட்ட உதவி மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் சட்ட விழிப்புணர்வு அறிக்கையில் சட்டத்தினை பற்றி அனைத்து பிரிவு மக்களும் அறிந்து கொள்ளும் வகையில் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணையர் குழு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    முகாமில் தலைவர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி, செயலாளர் சார்பு நீதிபதி, தலைவர் சார்பு நீதிபதி, சட்ட பணிக்குழு ஜெயங்கொண்டம் நீதிபதிகள் ஆகியோர் பேசியதாவது:- சிவில் வழக்குகள் சம்பந்தமாக குடும்ப நல வழக்குகள், வங்கி கடன் சம்பந்தப்பட்ட வழக்குகள் மற்றும் ஜாமீனில் வெளியில் வருதல் வழக்குகளை நேரடியாக நீதிமன்ற நடைமுறையில் அல்லாமல் மாற்று முறையில் தீர்வு காண்பது, பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிமைகளை பற்றி விழிப்புணர்வு பெற மக்கள் நீதிமன்றம் நடுவர் அரங்கங்கள் பற்றிய விழிப்புணர்வு, மோட்டார் வாகன விபத்துகளில் இழப்பீடு மற்றும் ஆலோசனை எப்படி பெறுவது, காசோலையில் கொடுக்கல் வாங்கல் ஆகியவற்றில் ஏற்படும் பிரச்சினைகளை எப்படி சரி செய்வது, குறித்தும் தொழிலாளர்களுக்கு ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளை குறித்தும் பொதுமக்கள் அவர்களது பிரச்சனைகளை எப்படி அணுகுவது என்பன குறித்து விளக்கி பேசினர்.


    • அரியலூரில் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது
    • இம்முகாமில் 22 நிறுவனங்கள் கலந்து கொண்டு, தகுதியான நபர்களை தேர்வு செய்து அவர்களுக்கு பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்புகளை வழங்கினர்.

    அரியலூர்:

    அரியலூர் ஊராட்சி ஒன்றிய வளாகத்தில், மகளிர் திட்டம், ஊரக வாழ்வாதர இயக்கம் சார்பில் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பயிற்சிக்கான ஆணையை அரியலூர் எம்.எல்.ஏ. வக்கீல் சின்னப்பா வழங்கினார். மேலும் அவர் பேசியதாவது:- ஒருவர் சிறந்த கல்வியைப் பெற்று உயர்ந்த பதவிகளை பெறும் போது பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் அவரது வாழ்க்கைதரம் உயர்வடைகின்றது. எந்த வேலையாக இருந்தாலும் உழைப்பு, நேர்மை இருக்க வேண்டும். பெண்கள் திருமணத்துக்கு பிறகு சுயமாக சம்பாதிக்க வேண்டும். ஆகவே தான் இது போன்று பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பை தமிழக முதல்வர் அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.

    எனவே இந்த அரிய வாய்ப்பினை ஒவ்வொரு இளைஞர்களும் பயன்படுத்திக் கொண்டு வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றார்். இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க இணை இயக்குநர் முருகண்ணன் தலைமை வகித்தார். ஒன்றியக் குழுத் தலைவர் செந்தமிழ்செல்வி, துணைத் தலைவர் சரஸ்வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முடிவில் உதவி திட்ட அலுவலர் சிவக்குமார் நன்றி தெரிவித்தார். இம்முகாமில் சென்னை, காஞ்சிபுரம், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 22 நிறுவனங்கள் கலந்து கொண்டு, தகுதியான நபர்களை தேர்வு செய்து அவர்களுக்கு பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்புகளை வழங்கினர்.


    • சிறு, குறு தொழில் மேம்பாட்டு மைய விழிப்புணர்வு முகாம் நடந்தது.
    • விவசாயம் சார்ந்த தொழில்களை ஊக்குவிக்கும் மானிய உதவி, பயிற்சியுடன் கடன் உதவி உள்ளிட்ட திட்டங்கள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.

    உசிலம்பட்டி

    உசிலம்பட்டி அருகே உள்ள பாப்பாபட்டி கிராமத்தில் பொதுமக்கள் மற்றும் மகளிர், இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் மேம்பாட்டு நிறுவனத்தின் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

    மகளிர் சுய உதவி குழு, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம், தொழில் வாய்ப்பு முகாம் மற்றும் அனைத்து வகையான வேலைகளுக்கும் மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் மேம்பாட்டு நிறுவனத்தில் இருந்து நிதி ஒதுக்கப்பட்டு அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. எம்.எஸ்.எம்.இ. தலைவர் முத்துராமன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    மதுரை மாவட்ட திட்ட இயக்குனர் ஜெயசெல்வம், செல்லம்பட்டி வட்டார ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகர், திட்ட இயக்குனர் காளிதாஸ், பாப்பாபட்டி ஒன்றிய கவுன்சிலர் வீரலட்சுமி செந்தில்குமார் மற்றும் பலர் பங்கேற்றனர். விவசாயம் சார்ந்த தொழில்களை ஊக்குவிக்கும் மானிய உதவி, பயிற்சியுடன் கடன் உதவி உள்ளிட்ட திட்டங்கள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.  

    • போலீசாரின் சிறப்பு முகாமில் 21 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.
    • மீதமுள்ள மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சிறப்பு மனு முகாம் நேற்று முன்தினம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷியாம்ளா தேவி தலைமை தாங்கினார். மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் மதியழகன், பாண்டியன், போலீஸ் துணை சூப்பிரண்டுகள் தங்கவேல், வளவன், சஞ்சீவ்குமார், ஜனனி பிரியா ஆகியோர் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றனர்.

    மேலும் முகாமில் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களை சேர்ந்த போலீசாரும், சிறப்பு பிரிவு போலீசாரும் கலந்து கொண்டனர். இந்த சிறப்பு மனு முகாம் மூலம் பெறப்பட்ட 28 மனுக்களில், 21 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    • போலீசாரின் சிறப்பு முகாமில் 2 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.
    • மற்ற மனுக்கள் மீது தீர்வு காண மேல் விசாரணை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    அரியலூர்

    அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின் பேரில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சிறப்பு மனு விசாரணை முகாம் நடந்தது. இதற்கு மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு காமராஜ் தலைமை தாங்கினார். போலீஸ் துணை சூப்பிரண்டுகள் ராஜாசோமசுந்தரம், வெங்கடேசன், சங்கர் கணேஷ் முன்னிலையில் நடைபெற்ற சிறப்பு முகாமில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 25 மனுக்களில், 2 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. மற்ற மனுக்கள் மீது தீர்வு காண மேல் விசாரணை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.




    • திருமானூர் அருகே கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது
    • முகாமில் 380 பசுக்களும், 560 வெள்ளாடுகளும், 180 கோழிகளும் பயன்பெற்றன.

    திருமானூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்திற்குட்பட்ட கண்டிராதீர்த்தம் கிராமத்தில் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறை மூலம் கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. அரியலூர் மாவட்டத்தில் ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு 20 முகாம் என்ற கணக்கில் மொத்தம் 120 முகாம்கள் நடைபெற உள்ளது. கண்டிராதீர்த்தம் கிராம ஊராட்சியில் நடைபெற்ற முகாமை கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் சொக்கலிங்கம் துவக்கி வைத்தார். முகாமானது ஊராட்சி மன்ற தலைவர் சந்திரா ராமமூர்த்தி முன்னிலையில் நடைபெற்றது. முகாமில் பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. இதில் 380 பசுக்களும், 560 வெள்ளாடுகளும், 180 கோழிகளும் பயன்பெற்றன. மேலும் சிறப்பாக வளர்க்கப்படும் 10 கிடேரி கன்றுகள் வளர்க்கும் விவசாயிகளுக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டது. பயனாளிகளுக்கு கால்நடை பராமரிப்புத்துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டம், அரசு திட்டங்களையும், வங்கிகள் மூலம் வழங்கப்படும் வேளாண் கடன் அட்டை ஆகியவற்றை பெற விண்ணப்பங்களும் வழங்கப்பட்டது. மேலும் கால்நடைகளுக்கு வரும் தொற்று நோய்கள் பற்றியும் அது வராமல் இருப்பதற்கான விளக்கங்களையும் கால்நடை நோய் புலனாய்வு பிரிவு மூலம் விளக்கப்பட்டது. குறிப்பாக கால்நடைகளுக்கு தற்போது பரவி வரும் தோல் கழலை நோயிற்கான தடுப்பூசி 380 மாடுகளுக்கு செலுத்தப்பட்டது. முகாமிற்கு கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் மருத்துவர் ஹமீதுஅலி மற்றும் உதவி இயக்குநர் மருத்துவர் ரிச்சர்ட் ராஜ் தலைமை வகித்தனர். இதில் கால்நடை உதவி மருத்துவர்கள் பிரபாகரன், மணிகண்டன், அருண் நேரு, கால்நடை ஆய்வாளர் செல்வராணி, கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் மாரிமுத்து, செல்வராஜ் மற்றும் நசீமா ஆகியோர் கலந்து கொண்டனர்.


    • ராஜபாளையம் அருகே நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடந்தது.
    • “வளமான பாரதத்திற்கு நலமான இளைஞர்கள்” என்ற தலைப்பில் 7 நாள் சிறப்பு முகாம் அ.முத்துலிங்காபுரம் கிராமத்தில் நடந்தது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அன்னப்ப ராஜா நினைவு மேல்நிலைப்பள்ளியின் நாட்டுநலப் பணித்திட்டத்தின் சார்பில் "வளமான பாரதத்திற்கு நலமான இளைஞர்கள்" என்ற தலைப்பில் 7 நாள் சிறப்பு முகாம் அ.முத்துலிங்காபுரம் கிராமத்தில் நடந்தது.

    பள்ளிச் செயலர் கிருஷ்ணமூர்த்தி ராஜா தலைமை தாங்கினார். இயக்குநர் விசுவநாதன், ஊர் நாட்டாமை மற்றும் ஊர்ப்பெரியவர்கள் முன்னிலை வகித்தனர். திட்ட அலுவலர் பிரான்சிஸ் அருள்ராஜ் வரவேற்றார். தலைமையாசிரியர் ரமேஷ், உதவித் தலைமையாசிரியர் இளையபெருமாள் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    கிராமத்தில் சாலை யோரம் முட்புதர்களை அகற்றுதல், சுற்றுப்புறத்தூய்மை, கோவில்களில் உழவாரப்பணி மேற்கொள்ளப்பட்டது. மாவட்டத் தொடர்பு அலுவலர் செய்யது முகம்மது ஆரீப் தலைமையில், இயற்கைப் பேரிடர் மேலாண்மை பயிற்சி முகாம் சத்ய சாயி அமைப்பினரால் நிகழ்த்தப்பட்டது.

    அரவிந்த் ஹெர்பல் லேப்ஸ் நிறுவனம் சார்பில் இலவச சித்த மருத்துவ முகாம் நடந்தது. அதில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர். முகாமில், மாணவர்களும் நாட்டு நலப்பணித் திட்டமும் என்னும் தலைப்பில் தலைமையாசிரியர், அன்பின் வலிமை என்னும் தலைப்பில் சிவக்குமார், எழுமின் விழிமின் என்னும் தலைப்பில் கருத்தாளர்.பழனியப்பன், ''நிழல்களும் நிஜங்களும்'' என்ற தலைப்பில் மாரியப்பன், யோகக்கலை என்னும் தலைப்பில் உடற்கல்வி இயக்குநர் வெங்கடேசன் ஆகியோர் பேசினர்.

    ஆசிரியர் விஜயானந்தி கிராம பெண்களுக்குக் கலைப்பயிற்சி வழங்கினார். நிறைவு நாளன்று சங்கமம் பசுமை இயக்கத்தின் சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டன. உதவித் திட்ட அலுவலர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.

    முகாமிற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் பிரான்சிஸ் அருள்ராஜ், பழனிவேல் ராஜன் உள்ளிட்ட ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    • கரூரில் போக்சோ சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது
    • குழந்தைகள் நலன் மற்றும் போக்சோ சட்டம், பாலியல் துன்புறுத்தலில் இருந்து குழந்தைகள், பெண்கள் தற்காத்து கொள்ளுதல் குறித்து விளக்கமளிக்கப்பட்டது

    கரூர்:

    கரூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில், செல்லாண்டிப் பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில், போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. அதில், குழந்தைகள் நலன் மற்றும் போக்சோ சட்டம், பாலியல் துன்புறுத்தலில் இருந்து குழந்தைகள், பெண்கள் தற்காத்து கொள்ளுதல் குறித்து, கரூர் ஜே.எம்., –2 நீதிபதி சுஜாதா விளக்கம் அளித்து பேசினார். இம்முகாமில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான பாக்கியம், டாக்டர் சிவகுமார் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


    • தாட்கோ திட்ட விழிப்புணர்வு முகாமில் இளைஞர்களுக்கு மானிய உதவித்தொகை வழங்கப்பட்டது
    • ரூ.3.90 லட்சம் மானியமாக வழங்கப்பட்டது

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் தாலுகா, தென்னலூர் கிராமத்தில், தாட்கோ திட்டங்கள் பற்றி விழிப்புணர்வு முகாம், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் (தாட்கோ) மேலாண்மை இயக்குநர் கே.எஸ்.கந்தசாமி தலைமையில், மாவட்ட கலெக்டர் கவிதா ராமு முன்னிலையில் நடைபெற்றது.இம்முகாமில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் (தாட்கோ) மேலாண்மை இயக்குநரால் தாட்கோ திட்டங்கள் குறித்து விளக்கி கூறப்பட்டது.இந்த விழிப்புணர்வு முகாமில் தாட்கோ மூலம் தொழில் முனைவோர் திட்டத்தின்கீழ், சுற்றுலா வாகனம் வாங்குவதற்கு திட்டத்தொகை ரூ.10,79,088ல் தாட்கோ மானியம் ரூ.2,25,000 மற்றும் இளைஞர்களுக்கான சுயவேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ் பால்மாடு வாங்குவதற்கு திட்டத்தொகை ரூ.5,50,000ல் தாட்கோ மானியம் ரூ.1,65,000 வழங்கப்பட்டது. பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.இம்முகாமில், இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் குழந்தைசாமி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கருணாகரன், மாவட்ட மேலாளர் (தாட்கோ) முத்துரெத்தினம், தனி வட்டாட்சியர் ஜமுனா, வட்டாட்சியர் வெள்ளைசாமி மற்றும் அலுவலர்கள், தென்னலூர் பழனியப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • முதலிப்பட்டியில் கால்நடை தடுப்பூசி முகாம் நடைபெற்றது
    • பல்வேறு நோய்களை தடுக்கும் தடுப்பூசிகளைப் பற்றி மாணவிகள் அட்டவணையைக் கொண்டு விழிப்புணர்வு விளக்கமளித்தனர்.

    தொட்டியம்:

    திருச்சி மாவட்டம் தொட்டியம் பகுதியில் முதலிப்பட்டி சிற்றூரில் சிறப்பு கால்நடை தடுப்பூசி முகாம் கால்நடை மருத்துவர் பாரிவேல் தலைமையில் நடந்தது. உதவி மருத்துவர் டாக்டர் அஞ்சலி, ஆய்வாளர் கார்த்திகேயன், தொடர்பு பணியாளர்கள் பேபி, பாபு மற்றும் பராமரிப்பு கால்நடை பராமரிப்பு உதவியாளர் சேகர் ஆகியோர் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தினர். இதில் முசிறி எம்.ஐ.டி வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரியை சேர்ந்த வேளாண் மாணவிகள் ஆஷிஹா, பவானி, சசி பாலா, தீபிகா, தீபா, தாரணி மற்றும் கௌசல்யா ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் சுமார் 534 கால்நடைகள், 4 எருமைகள், 416 வெள்ளாடுகள், 385 செம்மறி ஆடுகள் மற்றும் 20 கோழிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது . மேலும் பல்வேறு நோய்களை தடுக்கும் தடுப்பூசிகளைப் பற்றி மாணவிகள் அட்டவணையைக் கொண்டு விழிப்புணர்வு விளக்கமளித்தனர்.

    • முசிறி அருகே ஊரக பங்கேற்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.
    • மாணவிகள் கிராமத்தின் நிலவரம், பருவ காலம், சமூகம் பற்றி விளக்கமளித்தனர்

    முசிறி:

    முசிறி அடுத்த கல்லூர் கிராமத்தில் ஊரக பங்கேற்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு வேளாண்மை உதவி இயக்குனர் நளினி, வேளாண்மை அலுவலர் பிரியங்கா, துணை வேளாண்மை அலுவலர் கணேசன், பாண்டியராஜன், மேலாளர் சுகந்தா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் முசிறி எம்.ஐ.டி வேளாண்மை கல்லூரி மாணவிகள் ஆர்த்தி, ஆசியா, அபிநயா, அழகேஸ்வரி, அனிஷா, அபிநயா, அபிதாஸ்ரீ ஆகியோர் கலந்து கொண்டு கல்லூர் கிராமத்தில் ஊரக பங்கேற்பு பயிற்சியில் நான்கு விதமான வரை படங்களான, பருவ கால வரைபடம், சமூக வரைபடம், நிலவள வரைபடம், வெண் வரைபடம் வரைந்து அதன் மூலம் ஒரு கிராமத்தின் நிலவரம், பருவ காலம், சமூகம் பற்றி அறியலாம் எனவும், மேலும் ஊரக பங்கேற்பு பயிற்சி மூலம் ஊரின் தேவை பொதுமக்களுடன் கேட்டறியப்பட்டு அவ்வூரின் பஞ்சாயத்து தலைவரின் மூலம் அத்திவாசிய தேவை தீர்க்கப்படும் என கூறினர்.

    ×