search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223237"

    • இல்லம் தேடி கல்வித் திட்ட தொடக்க நிலை தன்னார்வலர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் ராசிபுரம் அண்ணா சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
    • இதில் 135 தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் ஒன்றியத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை இல்லம் தேடி கல்வித் திட்ட தொடக்க நிலை தன்னார்வலர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் ராசிபுரம் அண்ணா சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. பயிற்சியை ராசிபுரம் வட்டார கல்வி அலுவலர் அருள்மணி தொடங்கி வைத்தார். பயிற்சிக்கு வட்டார வள மைய மேற்பார்வையாளர் ராஜசேகரன் தலைமை தாங்கினார்.

    பயிற்சியில் இல்லம் தேடி கல்வி வட்டார ஒருங்கி ணைப்பாளர் கலைச்செல்வி, ஆசிரிய பயிற்றுநர்கள் மல்லிகேஸ்வரி, கவிதா, லட்சுமி நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டு தன்னார்வலர்களுக்கு எண்ணும் எழுத்தும், குறைதீர் கற்பித்தல் என்ற தலைப்பில் வகுப்பறைகளின் செயல்பாடுகள் குறித்து பயிற்சி அளித்தனர். இதில் 135 தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

    • சிறப்பு திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமில் கலந்துகொள்ள மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
    • 25-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

    புதுக்கோட்டை:

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், பள்ளிக்கல்வித்துறை நடத்திய உலகத்திறனாய்வு தேர்வில் சிறப்பிடம் பெற்ற 14 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவியருக்கான ஆறு மாத கால சிறப்பு திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது.

    மிக இளம் வயதிலேயே திறனாய்வாளர்களைக் கண்டறிவது விளையாட்டு திறமையினை மேம்படுத்துவதற்காக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் சார்பில், புதுக்கோட்டை மாவட்ட பிரிவிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட கூடைப்பந்து விளையாட்டில் 14 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவியர்களின் விளையாட்டு திறமைகளை கண்டறிந்து, அதில் தேர்வு செய்யப்படும் 10 மாணவியர் மற்றும் 10 மாணவர் களுக்கு 6 மாத காலத்திற்கு சிறப்பு திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது.

    பள்ளிக்கல்வித் துறை மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்திய உலக உடற்திறனாய்வு தேர்வுகளில் சிறப்பிடம் பெற்றவர்கள். 2020-2021 மற்றும் 2021-2022 மற்றும் 2022-2023 (தேர்வு நாள் வரை) ஆகிய கல்வியாண்டுகளில் அரசு, அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு அமைப்புகள் நடத்திய போட்டிகளில் மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் பதக்கம் வென்ற மாணவ,மாணவியா; இத்திட்டத்தில் பயன்பெறலாம்.

    தேர்வு செய்யப்பட்ட 10 மாணவர்கள் மற்றும் 10 மாணவிகளுக்கு அவர்களது விளையாட்டுத் திறமைகளை மேம்படுத்தி சர்வதேச, தேசிய மற்றும் மாநில அளவில் பதக்கங்களை வெல்லும் நோக்கில் புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டரங்கத்தில் தொடர்ந்து 6 மாத காலத்திற்கு பயிற்சி அளிக்கப்படும்.

    சிறப்பு திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் 14 வயதிற்குட்பட்ட விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவ, மாணவியர் இணைய தள முகவரியில் வரும் 25தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்திற்கான சேர்க்கை வரும் 28 முதல் 30 ஆம் தேதிக்குள் நடைபெறும் என மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.

    • கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது
    • 384 பசு, 575 வெள்ளாடுகளுக்கு பரிசோதனை

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம் சாத்தமங்கலம் அருகே உள்ள மேலவண்ணம் கிராமத்தில் கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் மருத்துவர் ஹமீதுஅலி தலைமை தாங்கினார். இதில் கால்நடை மருத்துவர்கள் கலந்து கொண்டு கால்நடைகளுக்கு சினை பரிசோதனை, கன்றுகளுக்கு மற்றும் வெள்ளாடுகளுக்கு குடற்புழு நீக்க மருந்துகள், ஆண்மை நீக்கம் செய்தல், செயற்கை முறை கருவூட்டல் செய்தல், நீண்ட நாள் சினை பிடிக்காத பசுக்களுக்கு மலடு நீக்க சிகிச்சை, அறுவை சிகிச்சை உள்ளிட்டவை செய்யப்பட்டது. தொடர்ந்து கால்நடை நோய் புலனாய்வு குழுவினர் மூலம் அப்பகுதியில் உள்ள கால்நடைகளுக்கு ரத்தம், சாணம், பால் மாதிரிகள் ஆகியவற்றை சேகரித்து நோய் பரிசோதனை செய்தல் போன்ற பரிசோதனைகளும் நடைபெற்றன. இந்த முகாமில் 384 பசுக்களும், 575 வெள்ளாடுகளும், 400 கோழிகளும் பயன்பெற்றன. இம்மருத்துவ முகாமில் சினை பிடிக்காத மாடுகளுக்கும், கிடேரிக்கன்றுகளுக்கும் தாது கலவைகள் விலையில்லாமல் வழங்கப்பட்டது. மேலும் 10 கிடேரி கன்றுகளை சிறப்பாக வளர்க்கும் விவசாயிகளுக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டது. இதில் உதவி இயக்குனர் அரியலூர் மருத்துவர் சொக்கலிங்கம், கால்நடை ஆய்வாளர் செல்வராணி, கால்நடை உதவி மருத்துவர்கள் பலர் கலந்து கொண்டனர்."

    • கால்நடை சுகாதார விழிப்புணர்வு சிறப்பு முகாம் நடைபெற்றது
    • குளித்தலை அருகே பொய்யாமணி நடை பாலத்தில்

    கரூர்:

    குளித்தலை அருகே பொய்யாமணி ஊராட்சிக்குட்பட்ட நடைபாலம் கிராமத்தில் அப்பகுதியிலுள்ள கால்நடைகளுக்கு கோமாரி நோய் மற்றும் பல்வேறு கால்நடை நோய்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறை கரூர் மாவட்டம், குளித்தலை கோட்டம் சார்பாக சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது,

    முகாமில் கால்நடைகளுக்கு தடுப்பு மருந்து வழங்கி குளித்தலை எம்.எல்.ஏ. ரா மாணிக்கம் தொடங்கி வைத்தார், முகாமில் மாடு, ஆடு, கோழி, நாய், ஆகியவைகளுக்கு தடுப்பூசி மற்றும் தடுப்பு மருந்து வழங்கப்பட்டது, தொடர்ந்து கால்நடைகளுக்கு பல்வேறு பரிசோதனைகளும், மாடுகள் சினை பிடிப்பதற்கான மருந்துகளும் இலவசமாக வழங்கப்பட்டது,

    கால்நடைகளை நன்கு பராமரிக்கும் விவசாயிகளுக்கும் பொது மக்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது, கரூர் மாவட்ட கால்நடை துறை உதவி இயக்குனர் முரளிதரன், மாவட்ட கவுன்சிலர் தேன்மொழி தியாகராஜன், மாவட்ட அவைத் தலைவர் ராஜேந்திரன், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் பொய்யாமணி தியாகராஜன், வைகநல்லூர் ஊராட்சி முன்னாள் துணைத் தலைவர் வைபுதூர் பெரியசாமி நங்கவரம் பேரூராட்சி துணைத் தலைவர் அன்பழகன், குளித்தலை நகர பொருளாளர் தமிழரசன், குளித்தலை நகர துணைச் செயலாளர் கே எம் செந்தில்குமார் மற்றும் கால்நடை மருத்துவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • வீடுகளை விட்டு முகாமில் தங்க வைக்கப்பட்டு உணவுகள் வழங்கப்பட்டு வந்தன.
    • சாலை மறியலால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சூரக்காடு கிராமத்தில் கனமழையால் வீடுகள் தண்ணீர் சூழ்ந்து பாதிக்கப்பட்டது. மக்கள் வீடுகளை விட்டு முகாமில் தங்க வைக்கப்பட்டு உணவுகள் வழங்கப்பட்டு வந்தன.

    இந்த நிலையில் தற்போது தண்ணீர் வடிந்த நிலையில் வீட்டிற்கு திரும்பிய மக்கள் தங்கள் பகுதிகளுக்கு அதிகாரிகள் யாரும் பார்க்க வரவில்லை, நிவாரணமும் வழங்கவில்லை.

    இதனால் வாழ்வாதாரம் இழந்து சமைப்பதற்கு கூட பொருட்கள் இல்லாமல் குழந்தைகளை வைத்து கொண்டு சிரமபடுவதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சீர்காழி - நாகப்பட்டினம் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சீர்காழி வட்டாட்சியர் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் மறியல் விலகிக் கொள்ளப்பட்டது. இந்த சாலை மறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது
    • கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 4 ஒன்றியங்களிலும் பார்வைத்திறன், செவித்திறன் குறைபாடுடையோர், மனவளர்ச்சி குன்றியோர், உடல் இயக்க குறைபாடுடையோர் மற்றும் பல்வேறு குறைபாடுகளை உடையோர்களுக்கான அனைத்து கிராம மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ், தேசிய அடையாள அட்டை வழங்குதல் மற்றும் புதுப்பித்தல், யூ.டி.ஐ.டி. அட்டை பதிவு செய்தல், மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை, உதவி உபகரணங்கள் மற்றும் அறுவைச் சிகிச்சை தேவைப்படும் மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்து அவர்களுக்கென பிரத்யேகமாக சிறப்பு மருத்துவமுகாம் எசனை அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று தொடங்கி நடந்தது. முகாமை மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதில் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் பொம்மி, பெரம்பலூர் தாசில்தார் கிருஷ்ணராஜ், முடநீக்கியல் வல்லுனர் ஜெயராமன் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். இதனைத் தொடர்ந்து வேப்பந்தட்டை வட்டம் அன்னமங்கலம் ஆர்.சி.தொடக்கப்பள்ளியில் இன்றும் (புதன்கிழமை), மலையாளப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நாளையும் (வியாழக்கிழமை), பிரம்மதேசம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வருகிற 18-ந் தேதியும், வி.களத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 22-ந் தேதியும், பாண்டகப்பாடி மானிய தொடக்கப்பள்ளியில் 23-ந்தேதியும், அல்லிநகரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 24-ந் தேதியும், கீழமாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 25-ந்தேதியும், இரூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் 29-ந்தேதியும், காரை அரசு மேல்நிலைப்பள்ளியில் 30-ந்தேதியும் நடக்கிறது. மேலும் டிசம்பர் மாதத்திலும் சிறப்பு மருத்துவமுகாம்கள் தொடர்ந்து நடக்கிறது. குறிப்பிட்ட நாட்களில் மாற்றுத்திறனாளிகள் தங்களது போட்டோ-6 மற்றும் உரிய ஆவணங்களுடன் நேரில் சென்று தங்கள் அருகாமையில் நடைபெறும் இச்சிறப்பு முகாம்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு கலெக்டர் கேட்டுக்கொண்டுள்ளார்.

    • நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை மற்றும் நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறையும் இணைந்து ரத்த தான முகாம் நடத்தப்பட்டது.
    • முகாமில் சங்க விவசாயிகள் சுமார் 100 பேர் பங்கேற்று மருத்துவ பரிசோதனை செய்து மருந்து மற்றும் மாத்திரைகளை இலவசமாக பெற்றுச் சென்றனர்.

    நாமக்கல்:

    அனைத்திந்தியக் கூட்டுறவு வாரவிழாவை முன்னிட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை மற்றும் நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறையும் இணைந்து ரத்த தான முகாம் நடத்தப்பட்டது.

    முகாமை நாமக்கல் மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் செல்வக்குமரன் தொடங்கி வைத்தார். முகாமில் கூட்டுறவுச்சங்கங்களைச் சேர்ந்த 46 பேர்கள் பங்கேற்று ரத்ததானம் அளித்தனர். இதே போல் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கான பொது மருத்துவ முகாம் நாமக்கல் திருச்செங்கோடு சாலையில் உள்ள நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் நடைபெற்றது.

    முகாமில் சங்க விவசாயிகள் சுமார் 100 பேர் பங்கேற்று மருத்துவ பரிசோதனை செய்து மருந்து மற்றும் மாத்திரைகளை இலவசமாக பெற்றுச் சென்றனர். மேலும் முகாமில் நாமக்கல் அரசு மருத்துவமனை மருத்துவ குழுவினர் மற்றும் கூட்டுறவுத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

    • 23-ந்தேதி முதல் நடக்கிறது
    • குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் தகவல்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய் திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தமிழ்நாடு சிறுபான்மை யினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (டாம்கோ ) மற்றும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் ( டேப்செட்கோ ) மூலம் தனி நபர் கடன், சுயஉதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கு கடன் திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

    இந்த திட்டங்களை சிறுபான்மையினர் மக்கள் அறிந்து கடன் பெறுவதற்கான சிறப்பு முகாம்கள் தாலுகா வாரியாக நடைபெற உள்ளது.

    அதன்படி கிள்ளியூர் தாலுகா அலுவலகத்தில் வருகிற 23-ந் தேதியும், திருவட்டார் தாலுகா அலுவலகத்தில் 24-ந் தேதியும், விளவங்கோடு தாலுகா அலுவலகத்தில் 25-ந் தேதியும் , கல் குளம் தாலுகா அலுவலகத்தில் 28-ந் தேதியும் , தோவாளை தாலுகா அலுவலகத்தில் 29- ந் தேதியும், அகஸ்தீஸ்வரம் தாலுகா அலுவலகத்தில் 30-ந் தேதியும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் . இந்த சிறப்பு முகாம்களில் சிறுபான்மையினர் கடன்பெற விண்ணப்பங்கள் அளிக்கலாம்.

    தனிநபர் கடனுக்கு விண் ணப்பிக்கும்போது சாதிச் சான்று, வருமானச்சான்று, இருப் பிடச் சான்று, ஆதார் அட்டை நகல், தொழில் திட்ட அறிக்கை, கூட்டுறவு வங்கி புத்தக நகல் மற்றும் கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கும்போது பள்ளி மாற்று சான்றிதழ் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் போன்றவை சமர்ப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஆலங்குடியில் மருத்துவ முகாம் நடந்தது
    • பரிசோதனைகள் செய்யப்பட்டது

    புதுக்கோட்டை:

    ஆலங்குடி அரசு மருத்துவமனையி்ல் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகத்தில் சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு சிறப்பு மருத்துவமுகாம் நடைபெற்றது. முகாமிற்கு தலைமை மருத்துவர் மு.பெரியசாமி தலைமை வகித்தார். இதில் மருத்துவர்கள் அருண்குமார், ஜோதிராஜன், லிபர்த்தி செவிலியர்கள் வேலுமணி, ஜான்,செல்வாம்பிகை,காயத்திரி,ஆய்வக நுட்புநர்கள், லெட்சுமிபிரபா, பூபாலன் ஆகியோர் கலந்துகொண்டனர். முகாமில் ரத்த அழுத்தம், உடல்பருமன், சரக்கரை அளவு, ரத்த வகை, ரத்த சோகை, உயரம், எடை , இசிஜி ஆகிய பரிசோதனைகள் செய்யப்பட்டது. முடிவில் செவுலியர் கண்கா ணிப்பாளர் ஜெயந்தி நன்றி கூறினார்.

    • சர்க்கரை நோய் விழிப்புணர்வு பரிசோதனை முகாம் நடந்தது
    • டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில்

    புதுக்கோட்டை:

    உலக சுகாதார மையம் மற்றும் சர்வதேச சர்க்கரை நோய் கூட்டமைப்பு இணைந்து இன்சுலின் மருந்தை கண்டுபிடித்த பேண்டிங் என்ற விஞ்ஞானி பிறந்தநாளான நவம்பர் 14-ம் தேதியை உலகமெங்கும் "உலக சர்க்கரை நோய் தினம்" என்று அனுசரிக்கப்படுகிறது.

    இதனை முன்னிட்டு டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை வளாகத்தில் சர்க்கரை நோய் பற்றிய விழிப்புணர்வு பரிசோதனை முகாம் மற்றும் உணவுக் கண்காட்சி நடைபெற்றது.

    மாவட்ட அரசு மருத்துவ சங்கத் தலைவர் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர் சலீம் அப்துல் குத்தூஸ், இருதய நோய் சிறப்பு மருத்துவர் வெங்கடேசன், மகப்பேறு மற்றும் மகளிர் நோய் சிறப்பு மருத்துவர் அனிதா தனசேகரன் மற்றும் இருக்கை மருத்துவர் பிரியங்கா கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

    டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் மற்றும் சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர் கே.ஹெச்.சலீம் அனைவரையும் வரவேற்று பேசினார்.

    விழாவில் உணவுக் கண்காட்சி மற்றும் சர்க்கரை நோயின் விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்பட்டு மக்களுக்கு சர்க்கரை நோயின் தாக்கம் பற்றி விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

    உணவுக் கண்காட்சி ஏற்பாடுகளை உணவியல் நிபுணர் மகாலெட்சுமி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் ஜெயபாரதி ஏற்பாடுகளை செய்திருந்தனர். மருத்துவமனையின் பொது மேலாளர் ஜோசப் அனைவருக்கும் நன்றி கூறினார். இவ்விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். அனைவருக்கும் சர்க்கரை நோய் பற்றிய விழிப்புணர்வு கையேடு வழங்கப்பட்டது.

    • வாக்காளர் சேர்க்கை, நீக்கல், திருத்தம் உள்ளிட்ட பணிகளுக்கான சிறப்பு முகாம்.
    • புதிய வாக்காளர்களை கண்டறிந்து, பட்டியலில் சேர்க்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டத்தில் இரண்டாவது நாளாக நேற்று வாக்காளர் சேர்க்கை, நீக்கல், திருத்தம் உள்ளிட்ட பணிகளுக்கான சிறப்பு முகாம்கள் நடைபெற்றது.

    மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நடைபெற்ற இப்ப பணிகளில் புதிய வாக்காளர்களை பெயர் பட்டியலில் சேர்க்கும் வகையில் அரசியல் கட்சியினர் தீவிரமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தனர்.

    கட்சி நிர்வாகிகளை முடுக்கிவிட்டு, விடுதல் இல்லாமல் அனைத்து புதிய வாக்காளர்களையும் சேர்க்கும் வகையில் விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டனர்.

    தி.மு.க.வின் திருவாரூர் மாவட்டச் செயலாளர் பூண்டி.கலைவாணன் எம்.எல்.ஏ திருவாரூர் நகரம் மற்றும் ஒன்றிய பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி சிறப்பு முகாம் பணிகளை நேரில் பார்வையிட்டு உற்சாகப்ப டுத்தினார்.

    வாக்குச்சாவடி சேர்க்கை முகாம்களில், வாக்காளர் சேர்க்கை பணிகள் தொய்வின்றி நடைபெறுகிறதா என்பதை யும் கேட்டறிந்தார்.

    மேலும் அப்பகுதியில் உள்ள புதிய வாக்காளர்களை கண்டறிந்து, பட்டியலில் சேர்க்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் கட்சியி னரை கேட்டுக் கொண்டார்.

    இந்த நிகழ்வின் போது திருவாரூர் ஒன்றியச் செயலாளர் தேவா உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • பொது விநியோகத் திட்ட குறைதீர்க்கும் முகாம் நடந்தது.
    • ஸ்மார்ட் கார்டில் பெயர் சேர்க்க 15 மனுக்களும், பெயர் நீக்க 12 மனுக்களும், திருத்தங்களுக்காக 9 மனுக்களும் அளிக்கப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் தாலுகா தேவிபட்டணம் அருகே நாரணமங்கலம் கிராமத்தில் உள்ள ரேசன் கடையில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் தனி வட்டாட்சியர் குடிமைப்பொருள் வழங்கல் தமிம் ராசா தலைமையில் நடந்தது. ஊராட்சி தலைவர் காளிமுத்தன் முன்னிலை வகித்தார்.

    இதில் ஸ்மார்ட் கார்டில் பெயர் சேர்க்க 15 மனுக்களும், பெயர் நீக்க 12 மனுக்களும், திருத்தங்களுக்காக 9 மனுக்களும் அளிக்கப்பட்டது. இந்த மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. முதுநிலை வருவாய் அலுவலர் சிவக்குமார், ஆதி ஆகியோர் கலந்து கொண்டனர். 

    ×