search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223237"

    • சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது
    • மழைக்கால நோய்கள் பரவாமல் தடுக்க

    புதுக்கோட்டை:

    ஆலங்குடி அருகே உள்ள கொத்தமங்கலம் ஊராட்சியில் டெங்கு உள்ளிட்ட மழைக்கால நோய்கள் பரவாமல் தடுக்கும் வகையில், கொத்தமங்கலம் ஆரம் சுகாதார நிலையம், திருவரங்குளம் வட்டா ர நடமாடும் மருத்துவக்குழுவினர் மூலம் கொத்தமங்கலம் கிழக் கு அரசுப்பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில், பொதுமக்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டன. மேலும், மக்கள் அதிகளவில் கூடக்கூடிய கோயில்கள், அரசு வளாகங்கள், பள்ளிகள், பேருந்து நிறுத்தம், கடைவீதிகளில் தூய்மை பணியாளர்கள் மூலம் தண்ணீர் தேங்காத வகையில் தூய்மைபடுத்தப்பட்டன.

    • தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் நடந்தது
    • ஆலங்குடி வட்டாட்சியர் வழங்கினார்

    புதுக்கோட்டை:

    மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் ஆலங்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் உலகநாதன் தலைமையில் நடைபெற்றது.

    நடைபெற்றது ஆலங்குடி வட்டாட்சியர் செந்தில்நாயகி, தமிழ்நாடு அரசு நல வாரிய உறுப்பினர் தங்கம் ஆகியோர் மாற்றுத்திறனாளிகளுக் கான தேசிய அடையாள அட்டைகளை வழங்கினர்.

    முகாமில் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் மாநில சங்கத்தி ன் மாவட்ட துணைச்செயலாளர் பங்கராஜ், சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் யோகேஸ்வரன், மண்டல துணை வட்டாட்சியர் பாலாகோபாலன், எலும்பு முறிவு மருத்துவர் உமா மகேஸ்வரன், மனநல மருத்துவர் முத்தமிழ்செல்வி, மருத்துவர் செந்ல்குமார், சிவக்குமார், பாஸ்கரன், கோவிந்தசாமி, லூயிஸ்மேரி மற்றும் 500 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

    • தூய்மை பணியாளர் மூக்காண்டியை பாராட்டி பேரூராட்சி மன்றத் தலைவர் கோமதி சங்கரி, சுந்தர வடிவேலு பரிசுகள் வழங்கி கவுரவித்தார்.
    • தீவிர தூய்மைப்பணி முகாம் முக்கிய பகுதிகளில் நடைபெற்றது.

    சிவகிரி:

    சிவகிரி பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் சிறப்பாக செயல்பட்டு, வார்டு பகுதியை தூய்மையாக மாற்றி குப்பைகளை தரம் பிரித்து சிறப்பாக செயல்பட்ட 17-வது வார்டு தூய்மை பணியாளர் மூக்காண்டியை பாராட்டி பேரூராட்சி மன்றத் தலைவர் கோமதி சங்கரி, சுந்தர வடிவேலு பரிசுகள் வழங்கி கவுரவித்தார்.

    செயல் அலுவலர் நவநீதகிருஷ்ணன், கவுன்சிலர்கள், நியமனக்குழு உறுப்பினர் விக்னேஷ், ரத்தினராஜ், அருணாசலம், முத்துலட்சுமி, பேரூராட்சி அலுவலர்கள், சக பணியாளர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர் லாசர் எட்வின், தூய்மை மேற்பார்வையாளர் குமார், குழு மேற்பார்வையாளர் தினேஷ்குமார் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து சிவகிரி பேரூராட்சி சார்பாக தீவிர தூய்மைப்பணி முகாம் 15-வது வார்டு நாடார் கடை பஜாரில் உள்ள பாலம், வடகால் ஓடை மற்றும் முக்கிய பகுதிகளில் நடைபெற்றது.

    • சித்த மருத்துவ முகாம் நடந்தது.
    • இதில் 230 பேர் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

    சிங்கம்புணரி

    சிங்கம்புணரி ஒன்றியம் காப்பரப்பட்டி சமுதாயக்கூடத்தில் பிரான்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் சித்த மருத்துவ விழிப்புணர்வு மற்றும் மருத்துவ முகாம் நடந்தது. கண்ணமங்கலப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் செம்மலர் சந்திரன் தலைமை தாங்கினார்.

    மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் பிரபாகரன் முன்னிலை வகித்தார். பிரான்மலை வட்டார மருத்துவ அலுவலர் நபிஷாபானு, ஊராட்சி மன்ற துணை தலைவர் ஜெயசுந்தரி சக்திவேல் முன்னிலை வகித்தனர்.

    முகாமில் சித்த மருந்து வழங்குதல், வர்ம சிகிச்சை, மூலிகை கண்காட்சி, சித்த மருத்துவம் குறித்த விழிப்புணர்வு, யோகா பயிற்சி, ரத்த பரிசோதனை, எக்ஸ்ரே, கண் பரிசோதனை ஆகியவை பொதுமக்களுக்கு செய்யப்பட்டது. இதில் 230 பேர் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

    • 491 பயனாளிகளுக்கு ரூ.44.76 லட்சம் மதிப்பீட்டில் நலத் திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் வினீத் வழங்கினாா்.
    • காங்கயம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் டி.மகேஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

    காங்கயம்:

    காங்கயம் ஒன்றியம், படியூா் ஊராட்சியில் மக்கள் தொடா்பு முகாம் நடைபெற்றது.இம்முகாமுக்கு மாவட்ட கலெக்டர் தலைமை வகித்தாா்.இதில், வருவாய்த் துறை சாா்பில் 20 பயனாளிகளுக்கு ரூ.4.18 லட்சம் மதிப்பீட்டில் இலவச வீட்டுமனை பட்டா, 8 பயனாளிகளுக்கு ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் சாலை விபத்து நிவாரண நிதி,67 பயனாளிகளுக்கு ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் முதியோா் உதவித் தொகை, 10 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் விதவை உதவித் தொகை, 1 பயனாளிக்கு ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் மாற்றுத் திறனாளி உதவித் தொகை, 12 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் இயற்கை மரண உதவித் தொகை என பல்வேறு துறைகளின் சாா்பில் மொத்தம் 491 பயனாளிகளுக்கு ரூ.44.76 லட்சம் மதிப்பீட்டில் நலத் திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் வினீத் வழங்கினாா்.

    இந்நிகழ்ச்சியில் தாராபுரம் வருவாய் கோட்டாட்சியா் குமரேசன், சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை கலெக்டர் அம்பாயிரநாதன், மாவட்ட வழங்கல் அலுவலா் முருகன், தோட்டக்கலை மற்றும் மலைப் பயிா்கள் துறை துணை இயக்குநா் சுரேஷ்ராஜா, ஆதிதிராவிடா் நலத் துறை அலுவலா் ரவிச்சந்திரன், காங்கயம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் டி.மகேஷ்குமாா், படியூா் ஊராட்சித்தலைவா் ஜீவிதா சண்முகசுந்தரம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

    • பல்வேறு தனியார் நிறுவனங்கள் பங்கேற்று வேலைக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.
    • திருப்பூர் வட்டாரங்களில் உள்ள இளைஞர்களுக்கு அக்டோபர் 8-ந்தேதி பல்லடம் அரசு மேல்நிலைப்பள்ளியில் முகாம் நடக்கிறது

    திருப்பூர் :

    மாநில ஊரகம் மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் வட்டார அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் திருப்பூர் மாவட்டத்தில் தொடங்கி உள்ளது.

    திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் மற்றும் காங்கயம் வட்டாரத்தை சேர்ந்தவர்களுக்கு வெள்ளக்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இன்று தாராபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. வருகிற 2-ந்தேதி குண்டடம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 3-ந் தேதி குடிமங்கலம் என்.வி., பாலிடெக்னிக் கல்லூரியிலும், 7-ந் தேதி உடுமலை மடத்துக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் நடக்கிறது. ஊத்துக்குளி மற்றும் அவிநாசி பகுதி இளைஞர்களுக்கு 17-ந் தேதி அவிநாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், அக்டோபர் 1-ந் தேதி மூலனூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், பல்லடம், பொங்கலூர் திருப்பூர் வட்டாரங்களில் உள்ள இளைஞர்களுக்கு அக்டோபர் 8-ந்தேதி பல்லடம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் முகாம் நடக்கிறது

    இதில் ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், விற்பனை நிறுவனங்கள், பழுதுபார்ப்பு நிறுவனங்கள், ஐ.டி., நிறுவனங்கள், மருந்து விற்பனை நிறுவனங்கள், உணவு உற்பத்தி நிறுவனம், நிதி நிறுவனம் என பல்வேறு தனியார் நிறுவனங்கள் பங்கேற்று வேலைக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.இந்த முகாமில் இளைஞர்கள் பங்கேற்று பயனடையுமாறு கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    • மின் பாதுகாப்பு பயிற்சி முகாம் நடந்தது
    • பல்வேறு ஆலோசனை வழங்கப்பட்டது

    கரூர்:

    கரூர் தாந்தோண்றிமலையில் மின் பாதுகாப்பு குறித்து பயிற்சி முகாம் நடந்தது. கரூர் மின்பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் வேல்முருகன் தலைமை வகித்தார். மின்னகம் மூலம் பெறப்படும் புகார்கள் குறித்த சிறப்பு கவனம் செலுத்துதல், விபத்தில்லாமல் பணி செய்ய கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறை உட்பட பல்வேறு ஆலோசனை வழங்கப்பட்டது. முகாமில் மின்வாரிய செயற்பொறியாளர் கணிகைமார்த்தாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது
    • நாளை நடைபெறுகிறது

    கரூர்:

    கரூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது என்று கலெக்டர் பிரபு சங்கர் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

    கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம், டாடா எலக்ட்ரானிக்ஸ் இணைந்து நடத்தும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (25-ந் தேதி) கரூர் வெண்ணெய்மலையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது.

    முன்னதாக அன்று காலை 8.30 மணி முதல் காலை 9.30 வரை அங்கே பதிவு செய்துகொண்டு தொடர்ந்து நடைபெறும் நேர்முகத்தேர்வில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வேலைவாய்ப்பு முகாமில் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் கலந்து கொண்டு 6,000 பெண் வேலை நாடுநர்களை தேர்வு செய்யவுள்ளனர்.

    இம்முகாமில் 2021 மற்றும் 2022 கல்வியாண்டில் பிளஸ் 2 வகுப்பு தேர்ச்சி பெற்று வயது வரம்பு 18 முதல் 20க்குள் இருப்பவர்கள் கலந்து கொண்டு பணி வாய்ப்பினை பெறலாம். இம்முகாம் முற்றிலும் இலவசமானது. இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் பெண் வேலை நாடுநர்கள் தங்களுடைய 10 மற்றும் 12ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், மாற்றுச்சான்றிதழ், ஆதார் அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் நகலினை எடுத்து வருமாறு தெரிவிக்கப்படுகிறது.

    மேலும் விபரங்களுக்கு அலுவலக தொலைபேசி எண்: 04324- 223555ற்கு தொடர்புக் கொள்ளுமாறும் தெரிவித்துள்ளார்.

    • மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பம் வழங்கும் முகாம் நடைபெற்றது
    • தேசிய அடையாள அட்டை ெபறுவதற்கு

    புதுக்கோட்டை:

    மாற்றுத்தி றனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த மத்திய அரசால் வழங்கும் தேசிய அடையாள அட்டைக்கான விண்ணப்பம் பெரும் முகாம் பொன்னமராவதி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது.

    இதில் மருத்துவ குழுவின் மூலமாக மாற்றுத்திறனாளிகள் கண்டறிந்து, மருத்துவ சான்றுடன் தேசிய அடையாள அட்டைக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. ஏற்கனவே விண்ணப்பித்திருந்த மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டையை மாவட்ட மாற்றுத்திறனாளிநலத்துறை அலுவலர் உலகநாதன், பொன்னமராவதி வட்டாட்சியர் பிரகாஷ், சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் பழனிச்சாமி உள்ளிட்டோர் வழங்கினர்.

    இதில் பொன்னமராவதி சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கான அடையாள அட்டைக்காக விண்ணப்பித்தனர்.

    • சிறப்பு தொழில் கடன் முகாம் நடைபெற உள்ளது
    • வருகிற 2-ந் தேதி வரை நடக்கிறது.

    பெரம்பலூர்:

    தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம், மாநில அளவில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு நிதிக்கழகமாகும். இந்த கழகம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும், தற்போது இயங்கி கொண்டிருக்கும் பிரிவுகளை விரிவுபடுத்துவதற்கும், உற்பத்தியை பன்முகப் படுத்துவதற்கும் பல்வேறு சிறப்பு திட்டங்களின் கீழ் கடன் உதவி வழங்கி வருகிறது. இதன்படி திருச்சி கண்டோன்மெண்ட் பிராமினேட் ரோடு கே.ஆர்.டி. பில்டிங்கில் 2-வது தளத்தில் உள்ள அதன் கிளை அலுவலகத்தில் கடந்த 17-ந் தேதி தொடங்கிய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம் அடுத்த மாதம் (செப்டம்பர்) 2-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இச்சிறப்பு முகாமில் டி‌.ஐ.ஐ.சி.யின் பல்வேறு திட்டங்களின் சிறப்பு அம்சங்கள் மத்திய-மாநில அரசுகளின் மானியங்கள் (மூலதன மானியம் மற்றும் இதர மானியங்கள்) புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் போன்றவை குறித்த விரிவான விளக்கங்கள் தரப்பட உள்ளது. தகுதி பெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவீத முதலீட்டு மானியம் ரூ.1 கோடியே 50 லட்சம் வரை வழங்கப்படும். இந்த முகாம் காலத்தில் சமர்ப்பிக்கப்படும் பொது கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை அளிக்கப்படும். இந்த வாய்ப்பினை பெரம்பலூர் மாவட்டங்களை சேர்ந்த புதிய தொழில் முனைவோர்கள், தொழிலதிபர்கள் பயன்படுத்தி தொழில் திட்டங்களுடன் வந்து தொழில் கடன் மற்றும் மத்திய-மாநில அரசுகளின் மானிய சேவைகளை பயன்படுத்தி கொள்ளலாம். பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • புற்றுநோய் பரிசோதனை முகாம் நடைபெற்றது
    • அனைத்து வகையான நோய்களுக்கும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள ராசியமங்கலம் கிராமத்தில் புதுக்கோட்டை பல்நோக்கு சேவை மையம் மற்றும் எழுதுவோம் இயக்கம் என்ற திட்டத்தின் கீழ் புற்று ேநாய் பரிசோதனை முகாம் பல்நோக்கு சேவை மையத்தின் இயக்குனர் யாகப்பா ராஜரத்தினம் தலைமையில் நடைபெற்றது. முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் அனைத்து வகையான புற்று நோய்களும் கண்டறிவதற்கான தீர்வுகளும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டது. 

    • மோகனூர் அரிமா சங்கம், நாமக்கல் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து இலவச கண் பரிசோதனை முகாமை நடத்தின.
    • இதில் சுமார் 250 நபர்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு 72 நபர்கள் கண் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டார்கள்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் மோகனூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மோகனூர் அரிமா சங்கம், நாமக்கல் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து இலவச கண் பரிசோதனை முகாமை நடத்தின. முகாமிற்கு அரிமா சங்கத் தலைவர் பிரபாகரன் தலைமை வகித்தார். மாவட்ட துணை ஆளுநர் தமிழ்மணி, 2-ம் துணை ஆளுநர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அரிமா சங்க செயலாளர் வினோத் வரவேற்றார். செயலாளர்( சேவை) சரவணன் அறிமுக உரை யாற்றினார். முகாமில் மாவட்ட கண்ணொளி திட்ட தலைவர் விஸ்வநாதன் முகாமை தொடங்கி வைத்தார். ஜி. எல்.டி. ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன், மோகனூர் சுப்பிரமணியம் கல்லூரியின் சேர்மேனும் ,லியோ கிளப்ஸ் மாவட்ட தலைவருமான பழனியாண்டி, உன்னியூர் எஸ்.எஸ்.பாலிடெக்னிக் மருத்துவமனை நிர்வாக இயக்குனரும் , மாவட்ட தலைவருமான டாக்டர் செந்தில்ஆண்டவன், மோகனூர் அரிமா சங்க கண்ணொளி திட்ட தலைவர் டாக்டர் சந்திரமோகன், மாவட்ட தலைவர் ராமலிங்கம் ,மண்டல தலைவர் தனபால், வட்டாரத் தலைவர் சுரேஷ் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    முகாம் முடிவில் பொருளாளர் என்ஜினியர் சக்கரவர்த்தி நன்றி கூறினார். இதில் சுமார் 250 நபர்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு 72 நபர்கள் கண் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டார்கள். இவர்கள் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு பெண்கள் மேல் நிலைப்பள்ளிப் பள்ளியில் இருந்து பேருந்து மூலம் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.

    ×