search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223237"

    • மதுரையில் 10 ஆயிரம் பேருக்கு கண் பார்வை கிடைத்துள்ளது என டிரஸ்டி சவுமியா விஜயகுமார் தகவல் தெரிவித்துள்ளார்.
    • குடும்ப பிரச்சினை, வாழ்க்கையில் விரக்தியடைந்த பெண்களுக்கு பிரம்மகுமாரிகள் அமைப்புடன் இணைந்து இலவசமாக கவுன்சிலிங்கும் வழங்கப்பட்டு வருகிறது.

    மதுரை

    மதுரை விளாங்குடி பகுதியில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவின் மகன் நினைவாக தொடங்கப்பட்ட ஆர்.ஜெ.தமிழ்மணி அறக்கட்டளை சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது.

    இந்த மருத்துவ முகாமில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மற்றும் அறக்கட்டளை தலைவர் ஜெயந்தி ராஜூ, டிரஸ்டிகள் சவுமியா விஜயகுமார், கணேஷ்பிரபு, ரம்யா ஆகியோர் பங்கேற்றனர். அறக்கட்டளையின் செயல்பாடுகள் குறித்து டிரஸ்டி சவுமியா விஜயகுமார் கூறியதாவது:-

    எனது சகோதரன் ஆர்.ஜெ. தமிழ்மணி நினைவாக கடந்த 2014-ம் ஆண்டு முதல் அறக்கட்டளை தொடங்கப்பட்டு மதுரையில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு மருத்துவ முகாம்கள், நலத்திட்ட உதவிகள் செய்து வருகிறோம். 27-வது பொது மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த முகாம்களில் அரவிந்த் கண் மருத்துவமனை, பிரீத்தி மருத்துவமனை, ராதா பல் மருத்துவமனைகளை சேர்ந்த சிறந்த மருத்துவ நிபுணர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பரிசோதனை செய்து அதில் பாதிப்பு உள்ளவர்களை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    குறிப்பாக கண் பார்வை தொடர்பான அறுவை சிகிச்சைகள், கண் கண்ணாடிகள் மற்றும் பல் தொடர்பான பிரச்சினைகள், முடநீக்கியல், காது-மூக்கு-தொண்டை சிகிச்சைகள், எலும்பு தொடர்பான சிகிச்சைகள் அனைத்தும் அறக்கட்டளை சார்பில் இலவசமாக செய்து தரப்படுகிறது.

    இந்த மருத்துவ முகாம்கள் மூலம் 10 ஆயிரம் பேர் கண் பார்வை பெற்றுள்ளனர். 1000 பேருக்கு அறுவை சிகிச்சைகளின் மூலம் பார்வை கிடைத்துள்ளது. 3 ஆயிரம் பேருக்கு கண் கண்ணாடிகளை வழங்கியுள்ளோம்.

    மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இந்த மருத்துவ முகாம்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கிராமப்புற ஏழை, எளிய மக்கள் பயனடையும் வகையில் இந்த முகாம் தொடர்ந்து நடத்தப்படும்.

    மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஏழைகள் அனைவருக்கும் உரிய மருத்துவ வசதிகளை செய்து முடித்தவுடன் மற்ற பகுதிகளிலும் அறக்கட்டளை சார்பில் மருத்துவ முகாம்களை நடத்த உள்ளோம்.

    மேலும் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் கம்ப்யூட்டர், தையல், எம்பிராய்டரி ஆகிய மூன்று மாத இலவச பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இந்த பயிற்சியின் மூலம் 1,200 பெண்கள் பயனடைந்துள்ளனர். மேலும் குடும்ப பிரச்சினை, வாழ்க்கையில் விரக்தியடைந்த பெண்களுக்கு பிரம்மகுமாரிகள் அமைப்புடன் இணைந்து இலவசமாக கவுன்சிலிங்கும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த கவுன்சிலிங்கில் ஏராளமான பெண்கள் பங்கேற்று பயன் அடைந்துள்ளனர்.

    இவ்வாறு சவுமியா விஜயகுமார் கூறினார்.

    • இலவச சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது.
    • அரசு பள்ளி வளாகத்தில் நடைபெற்றது

    புதுக்கோட்டை:

    கல்லா லங்குடி தேசிய ஆயுஷ் குழுமம் மற்றும் இந்திய மருத்துவம் ஓமியோ பதி துறை திருவரங்குளம் வட்டார ம் சார்பில் இலவச சித்த மருத்துவ முகாம் கல்லாலங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வளா கத்தில் நடைபெற்றது. முகாமில் கல்லாலங்குடி ஊராட்சி மன்றதலவர் மலர் பழனிசாமி துவக்கி வைத்தார். பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் அய்யப்பன் அனைவரையும் வரவேற்றார். முகாமில் மூட்டுவலி இடுப்பு வலி தோல் நோய்கள் சர்க்க ரை நோய் மூலம் ஆகியவற்றுக்கு சிகி ச்சை அளிக்கப்பட்டது.

    திருவரங்குளம் அரசு சித்த மருத்துவர் டாக்டர் ரெங்கநாயகி மற்றும் ஆலங்குடி சித்த மருத்துவர் டாக்டர் மணிவண்ணன் ஆகியோர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர். இந்த முகாமில் கல்லாலங்குடி ஊராட்சி மன்ற துணை தலைவர் விமலா அறிவழகன் வார்டு உறுப்பினர்கள் கமல் மணிமேகலை ஊராட்சி செயலர் ஜெனித் அரிஸ்டாட் டில் என சுமார் 200 க்கும் அதிக மானோர் பயனடைந்தனர்.

    • மாற்றுத்தி–றனாளிகளுக்கான குறைதீர்ப்பு முகாமை நடத்த மாவட்ட கலெக்டர் சமீரன் உத்தரவிட்டிருந்தார்.
    • மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை மனுக்களாக பொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவிடம் வழங்கினர்.

    ெபாள்ளாச்சி:

    கோவை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்தி–றனாளிகளுக்கான குறைதீர்ப்பு முகாமை நடத்த மாவட்ட கலெக்டர் சமீரன் உத்தரவிட்டிருந்தார். இதன் அடிப்படையில் பொள்ளாச்சி மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்ப்பு முகாம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

    இந்த முகாமில் பொள்ளாச்சி , ஆனைமலை, கிணத்துக்கடவு தாலூக்காக்களில் இருந்து பயனாளிகள்பங்கேற்றனர். மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை மனுக்களாக பொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞான தேவ் ராவிடம் வழங்கினர். மொத்தம் 175 மனுக்கள் வழங்கினர். இந்த முகாமில் அரசு மருத்துவர் ராஜா மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • வேதாரண்யம் வட்டார அட்மா திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட பயிற்சியில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் செல்வகுமார் வரவேற்றார்.
    • இப்பயிற்சியில் வட்டார உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் ரஞ்சித் மற்றும் மோகன் தகட்டூர் கிராம விவசாயிகள் திரளானோர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த தகட்டூர் வருவாய் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி பாலகுரு தலைமையில் கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சித் திட்டம் தொடர்பான சிறப்பு முகாம் நடைபெற்றது.

    முகாமில் வேதாரண்யம் வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின் கீழ் மீன் வளர்ப்பது குறித்து மீன்வளத்துறை அலுவலர்கள் மூலம் மாவட்டத்திற்குள்ளான விவசாயிகள் பயிற்சி அளிக்கப்பட்டது.

    கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சித் திட்டம் தொடர்பான வேளாண்மைத் துறை சார்ந்த திட்டங்கள் குறித்து வேதாரண்யம் வட்டார வேளாண்மை அலுவலர் யோகேஷ், வேளாண்மை உதவி அலுவலர்கள் இந்திரா, தமிழன்பன், அனீஷ்தோட்டக்கலைத் துறை சார்பாக தோட்டக்கலை உதவி அலுவலர் நிறைமதி வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை சார்பாக உதவி வேளாண்மை அலுவலர் கந்தசாமி கலந்துகொணடு விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர் .

    வேதாரண்யம் வட்டார அட்மா திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட பயிற்சியில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் செல்வகுமார் வரவேற்றார். இப்பயிற்சியில் பயிற்சிக்கான முன்னேற்பாடுகளை வட்டார உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் ரஞ்சித் மற்றும் மோகன் தகட்டூர் கிராம விவசாயிகள் திரளானோர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

    • நாமக்கல் மாவட்டம் 15-வது பட்டாலியன் என்.சி.சி. சார்பில் உலக யோகா தினத்தை–யொட்டி சிறப்பு முகாம் நடைபெற்றது.
    • உலக சமாதான ஆலயம் சார்பில் 10 நாட்கள் இலவச யோகாசன முகாம் நேற்று தொடங்கியது.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் 15-வது பட்டாலியன் என்.சி.சி. சார்பில் கமாண்டிங் அலுவலர் அணில்வர்மா, நிர்வாக அலுவலர் கிருஷ்ணமூர்த்தி வழிகாட்டுதலில் உலக யோகா தினத்தை–யொட்டி என்.சி.சி. மாணவர்கள் யோகா சிறப்பு முகாம் எஸ்.எஸ்.எம். பாலிடெக்னிக் கல்லூரியில் கல்லூரி தலைவர் இளங்கோ தலைமையில் நடைபெற்றது. நிர்வாகிகள் ஈஸ்வர், புருஷோத்தமன் , கல்லூரி முதல்வர் பாலமுருகன் வாழ்த்தி பேசினார்கள். அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை சேர்ந்த என்.சி.சி. மாணவ, மாணவியர்கள் 220 பேர் பங்கேற்றனர். என்.சி.சி. அலுவலர்கள் அந்தோணிசாமி, பிரபுதாஸ், முருகேஸ்வரி, சிவகுமார், ரமேஷ்குமார், கோகுலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    உலக சமாதான ஆலயம் சார்பில் 10 நாட்கள் இலவச யோகாசன முகாம் நேற்று தொடங்கியது. முகாமை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி தொடங்கி வைத்தார். சப்- இன்ஸ்பெக்டர் மலர்விழி குத்துவிளக்கேற்றினார். தொழிலதிபர்கள் இளங்கோ, சிவக்குமார் உள்பட வாழ்த்தி பேசினர்.

    அரசு பி.எட்.கல்லூரியில் யோகா தினத்தையொட்டி மருத்துவ முகாம் நடைபெற்றது. யோகா தினத்தையொட்டி நீதிபதிகள், வக்கீல்கள், நீதிமன்ற ஊழியர்கள் நீதிமன்ற வளாகத்தில் யோகா பயிற்சி செய்தனர்.

    நகராட்சி நடுநிலைப்பள்ளியில் யோகா பயிற்சி முகாம் தலைமை ஆசிரியை கவுசல்யாமணி தலைமையில் நடைபெற்றது.

    • கல்வராயன் மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட கிராமங்களில் காசநோய் முகாம் நடந்தது.
    • காசநோயாளிகளுக்கான அரசின் நலத்திட்டங்கள் குறித்து மலை கிராம மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    வாழப்பாடி:

    கல்வராயன் மலை கருமந்துறையை அடுத்த சூலாங்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட சூலாங்குறிச்சி, கோவில்புதூர், ஒடுவன்காடு, தாழ்வள்ளம், கலக்கம்பாடி கிராமங்களில் மருத்துவர் அலுவலர் ராஜா தலைமையில் காசநோய் சுகாதார மேற்பார்வையாளர் சின்னதுரை, சுகாதார செவிலியர் சியாமலா, ஆஷா மற்றும் குழுவினர், வீடு வீடாக சென்று காசநோயின் அறிகுறிகள், பரவும் விதம், தடுப்பு முறைகள், சிகிச்சை முறைகள், காசநோயாளிகளுக்கான அரசின் நலத்திட்டங்கள் குறித்து மலை கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பொதுமக்களை பரிசோதித்து காசநோய் அறிகுறிகளை கண்டறிந்து, உரிய சிகிச்சைகள் அறிவுறுத்தினர்.

    • சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.
    • இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க விரும்புவோா் கல்விச் சான்றுகள், ஆதாா் அட்டை, குடும்ப அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு வரலாம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மதுகுமாா் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சாா்பில், வெள்ளிக்கிழமைதோறும் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. அதில், 10-ம் வகுப்பு தோ்ச்சியடைந்தோா் முதல் பட்டதாரிகள் வரையில் தகுதிக்கு ஏற்ப தனியாா் துறையினா் தங்களுக்கான பணியாளா்களைத் தோ்வு செய்து பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு வருகிறது.

    வருகிற 24-ந்தேதி (வெள்ளிக்கிழமை) ராமநாதபுரம் மாவட்டம் ஏா்வாடியில் சந்தனக்கூடு விழா நடைபெறுவதால், உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அன்று நடைபெற இருந்த வேலைவாய்ப்பு முகாமை, நாளை (வியாழக்கிழமை) நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க விரும்புவோா் கல்விச் சான்றுகள், ஆதாா் அட்டை, குடும்ப அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு வரலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • முகாமில், பிறந்த தேதி, பாலினம் போன்றவற்றை திருத்தம் செய்தல் ஆகிய சேவைகள் மேற்கொள்ளப்பட்டன.
    • ஆதார் சேவை முகாமில், 350-க்கும் மேற்பட்ட பயனாளிகள் பயன்பெற்றனர்.

    சுரண்டை:

    சுரண்டை கருவந்தா ஆர்.சி. கோவில் வளாகத்தில் 3 நாட்கள் நடந்த ஆதார் சேவை முகாமில், குழந்தைகளுக்கான புதிய ஆதார் அட்டை எடுத்தல், 5 முதல் 15 வயது வரையிலான குழந்தைகளுக்கான கைரேகை மற்றும் கருவிழி பதிவுகளை மேற்கொள்ளுதல், பெயர், முகவரி, செல் நம்பர், பிறந்த தேதி, பாலினம் போன்றவற்றை திருத்தம் செய்தல் ஆகிய சேவைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்மூலம் 350-க்கும் மேற்பட்ட பயனாளிகள் பயன்பெற்றனர்.

    முகாமில் போஸ்ட் மாஸ்டர்கள் தனுசியா, ஞான துரை, ஆய்வாளர் வேதமாணிக்கம், ஓவர்சியர் கள் முத்துராஜ், கணேசன், அலுவலகப் பணியாளர்கள் கலையரசன், கார்த்தி, சேகர், பிச்சை பாண்டி ஆகியோர் கலந்து கொண்டு ஆதார் சேவைகளை வழங்கினர்.

    முகாம் ஏற்பாடுகளை கருவந்தா பஞ்சாயத்து தலைவர் தானியேல், துணைத்தலைவர் மங்களம் மற்றும் உறுப்பினர்கள் செய்து இருந்தனர்.

    • திருப்பத்தூர் போலீஸ் நிலையங்களில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது
    • முதல்வர் தனிப்பிரிவுக்கு அனுப்பிய மனுக்களும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட திருப்பத்தூர் நகர் காவல் நிலையம், திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையம், கண்டவராயன்பட்டி, கீழச்சிவல்பட்டி, நாச்சியாபுரம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையிலுள்ள புகார் மனுக்கள் மீதும், முதல்வர் தனிப்பிரிவுக்கு அனுப்பிய மனுக்களும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

    விசாரணைக்கு பின், 53 புகார் மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டது. மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ஆத்மநாபன் தலைமையில் காவல் ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள், காவலர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த முகாமில் நிலப் பிரச்சினை, சிறு குற்ற வழக்குகள் குறித்து பொதுமக்கள் மனு அளித்தனர். மனு அளித்தவர்கள், தொடர்புடையவர்கள் என இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத் தீர்வு காணப்பட்டது. 53 புகார் மனுக்கள் பெறப்பட்டு உடனடி தீர்வு காணப்பட்டது.

    • வடகரையாத்துர் கிராமத்தில் சிறப்பு மண் ஆய்வு முகாம் நடைபெற்றது.
    • விவசாயிகளிடமிருந்து மண் மாதிரி மற்றும் நீர் மாதிரிகளை பெற்று தொடங்கி வைத்தனர்.

    பரமத்திவேலூர், ஜூன்.20-

    நாமக்கல் மாவட்டம் கபிலர்மலை வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்டுள்ள வடகரையாத்தூர் கிராமத்தில் சிறப்பு மண் ஆய்வு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமில் விவசாயிகளிடமிருந்து மண் மாதிரி மற்றும் நீர் மாதிரிகளை பெற்று கபிலர்மலை வேளாண்மை உதவி இயக்குனர் ராதாமணி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    நடப்பாண்டில் கபிலர்மலை வட்டாரத்தில் வடகரையாத்தூர், ஆனங்கூர், சுள்ளிபாளையம், சிறுநல்லிக்கோயில் ஆகிய கிராமங்கள் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ளன. திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களில் கட்ட முறையில் மண் மாதிரிகள் இறவை பாசன நிலங்களிலிருந்து 2.5 எக்டருக்கு ஒரு மண் மாதிரியும், மானாவாரி நிலங்களில் 10 ஏக்கருக்கு ஒரு மாதிரியும் சேகரிக்கப்பட்டு வருகிறது. ஆகவே விவசாயிகள் தங்கள் நிலங்களில் இருந்து மண் மாதிரிகளை சேகரித்து அந்தந்த பகுதி உதவி வேளாண்மை அலுவலர்களிடம் வழங்கிட வேண்டும்

    முகாமில் திரளான விவசாயிகள் கலந்து கொண்டு மண் மற்றும் நீர் மாதிரிகளை வழங்கி ஆய்வு செய்து ஆய்வு முடிவுகளை அன்றைய தினமே பெற்றனர். விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட மண் மற்றும் நீர் மாதிரிகளை நடமாடும் மண் பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர்கள் சவுந்தர்ராஜன் , அருள்ராணி மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் ஜெயமணி ஆகியோர் ஆய்வு செய்து அதன் முடிவுகளை மண்வள அட்டையாக வழங்கினர். முகாம் ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் ஸ்ரீதர் செய்திருந்தார்.

    • 215 பேர் கண் பரிசோதனை முகாமில் பங்கேற்று பயன் பெற்றனர்.
    • ஆறுமுகநேரி பேரூராட்சி துணை தலைவர் கல்யாணசுந்தரம் முகாமை தொடங்கி வைத்தார்.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி இந்து மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

    ஆறுமுகநேரி தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி கிளையின் சார்பில் தூத்துக்குடி மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்க நிதி உதவியுடன் தூத்துக்குடி அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இந்த முகாமில் வங்கியின் கிளை மேலாளர் சரவணன் முன்னிலை வகித்தார்.

    ஆறுமுகநேரி பேரூராட்சி துணை தலைவர் கல்யாணசுந்தரம் முகாமை தொடங்கி வைத்தார். 215 பேர் முகாமில் பங்கேற்று பயன் பெற்றனர்.

    இவர்களில் 18 பேர் கண் அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

    ஆறுமுகநேரி நகர தி.மு.க செயலாளர் நவநீத பாண்டியன், வார்டு கவுன்சிலர் வெங்கடேசன், இந்து மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் குமரன் உள்பட பலர் முகாமில் கலந்து கொண்டனர்.

    • சோழவந்தான் அருகே உள்ள நெடுங்குளம்கிராமத்தில் விவசாயிகளுக்கான மண் பரிசோதனை விழிப்புணர்வு முகாம் நடந்தது.
    • மண் மாதிரி எடுக்கும் முறை மற்றும் மண்ணின் வளங்கள்குறித்தும் ஊட்டச்சத்துக்கள் குறித்தும் விளக்கம் அளித்தனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே உள்ள நெடுங்குளம்கிராமத்தில் விவசாயிகளுக்கான மண் பரிசோதனை விழிப்புணர்வு முகாம் நடந்தது. வாடிப்பட்டி வட்டார வேளாண் உதவி இயக்குநர் வாசுகி, மண் பரிசோதனை நிலைய அலுவலர் ஜோஸ்பின் ஆகியோர் மண் மாதிரி எடுக்கும் முறை மற்றும் மண்ணின் வளங்கள்குறித்தும் ஊட்டச்சத்துக்கள் குறித்தும் விளக்கம் அளித்தனர்.

    இதில் ஜி.எச்.சி.எல் நிறுவனத்தின் துணை பொது மேலாளர் அசோக் குமார், சி.எஸ்.ஆர் அலுவலர் சுஜீன், ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணி, கிராம நிர்வாகஅலுவலர் முத்துராமலிங்கம், உதவிவேளாண்அலுவலர் தங்கையா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×