search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223237"

    • மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது.
    • சுகாதார ஆய்வாளர் ஜேசுராஜ், செவிலியர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தினர்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் அருகே சாலைபுதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் ஆசீர்வாதபுரம் டிஎன்டிடிஏ குருகால்பேரி மேல்நிலைப்பள்ளி, அம்பலச்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,

    பழனியப்பபுரம் டிஎன்டிடிஏ நடுநிலைப்பள்ளியில் 12 முதல் 14 வயது வரையிலான மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது.

    இதில் சுகாதார ஆய்வாளர் ஜேசுராஜ், செவிலியர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தினர். இதில் 15 மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

    • மதுரையில் 3,415 மையங்களில் நடந்த தடுப்பூசி முகாம் நடந்தது.
    • 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியில் உள்ளனர்.

    மதுரை

    சென்னை, செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதையடுத்து தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு தடுப்பூசி முகாம்களை நடத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது.

    மதுரை மாவட்டத்தில் இன்று கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் காலை முதல் தொடங்கி நடந்து வருகிறது. பொதுமக்கள் நேரடியாக வந்து தடுப்பூசிகளை போட்டு சென்றனர்.

    வாக்குச்சாவடி மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்புற சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள் உள்பட 3415 மையங்களில் தடுப்பூசி முகாம் நடந்தது.

    இதுகுறித்து மதுரை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் செந்தில்குமார் கூறுகையில், மதுரை மாவட்டத்தில் 3 ஆயிரத்து 415 மையங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடந்து வருகிறது. இங்கு 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியில் உள்ளனர்.

    முதல் தவணை தடுப்பூசியை 86.5 சதவீதம் பேரும், 2-வது தவணையை 67 சதவீதம் பேரும் தடுப்பூசி போட்டு உள்ளனர் என்றார்.

    • ஈரோடு மாவட்டத்தில் இன்று 3,194 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கியது
    • இன்று மட்டும் 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இந்த பணியில் மாவட்டம் முழுவதும் 4,260 ஊழியர்கள் பங்கேற்று வருகின்றனர்.இதற்காக 67 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்கும் பொருட்டு மக்கள் நலனை முதன்மையாக கொண்டு மக்களை தேடி மருத்துவம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் மாபெரும் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த முகாமில் 12 வயதிற்கு மேற்பட்ட மாணவர்கள், 18 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவருக்கும் முதல் தவணை மட்டும் 2-ம் தவணை, இரு தவணை தடுப்பூசி செலுத்தி க்கொண்டே முன் களப்பணியாளர்கள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போடப்பட்டு வருகிறது.

    இதன்படி ஈரோடு மாவட்டத்தில் இன்று அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் பள்ளிகள் என மொத்தம் 3,194 மையங்களில் காலை 7 மணிக்கு கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கியது.

    இதுபோல் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. ஈரோடு பஸ் நிலையத்தில் நடைபெறும் முகாமில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று தடுப்பூசி செலுத்தி கொண்டு வருகின்றனர்.

    குறிப்பாக 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளா தவர்கள் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர். மாலை 7 மணி வரை இந்த தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

    இன்று மட்டும் 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இந்த பணியில் மாவட்டம் முழுவதும் 4,260 ஊழியர்கள் பங்கேற்று வருகின்றனர்.இதற்காக 67 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    சேலம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.

    சேலம்;

    தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் 2-ம் தவணை மற்றும் பூஸ்டர் தடுப்பூசி போடாதவர்கள் உடனடியாக போட்டுக்கொள்ளுமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

    அதன்படி தமிழகம் முழுவதும் இன்று காலை கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் தொடங்கியது. இந்த முகாமில் பொதுமக்கள் 2-ம் தவணை மற்றும் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

    சேலம் மாவட்டத்தில் 5 ஆயிரத்து 240 இடங்களில் தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடந்தது. ஊரகப்பகுதியில் 4 ஆயிரத்து 565 இடங்களிலும், சேலம் மாநகராட்சி பகுதியில் 675 இடங்களிலும் முகாம் நடத்தப்பட்டது.

    இந்த பணியில் 15 ஆயிரத்து 500 பணியாளர்கள் ஈடுபட்டனர். எனவே, இதுவரை தடுப்பூசி போடாதவர்களும், ஏற்கனவே முதல் தவணை தடுப்பூசி போட்டவர்களும், இரண்டாம் தவணை தடுப்பூசி மற்றும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    • மதுரையில் பொது விநியோகத்திட்ட குறைதீர்க்கும் முகாம் நாளை நடக்கிறது.
    • முகாமில் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    ராமநாதபுரம்

    தமிழக அரசின் ஆணைக்கிணங்க மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமை மாவட்டத்தின் அனைத்து வட்டங்களிலும் ஒரு கிராமத்தில் சுழற்சி முறையில் பொது விநியோ கத்திட்ட குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

    அதன் தொடர்ச்சியாக ஜூன் மாதத்தின் கீழ்க்காணும் கிராமங்களில் நடத்தப்பட உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் வட்டம் - கழுகூரணி, ராமேசுவரம் வட்டம்-பாம்பன், திருவாடானை வட்டம் -ஊரணிகோட்டை, பரமக்குடி வட்டம்- தெளிச்சாத்தாநல்லூர், முதுகுளத்தூர் வட்டம் -காக்கூர், கடலாடி வட்டம்- எம்.சவேரியார் பட்டிணம், கமுதி வட்டம் - பேரையூர்.

    கீழக்கரை வட்டம் -காஞ்சிரங்குடி, ஆர்.எஸ்.மங்கலம் வட்டம்-புல்லமடை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களுக்கு மின்னணு குடும்ப அட்டை விண்ணப்பம் செய்தல், குடும்ப அட்டைகளில் பிழைத்திருத்தம், புகைப்படம் பதிவேற்றம், பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு, மாற்றம் செய்தல் மற்றும் புதிய குடும்ப அட்டை நகல், குடும்ப அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல் ஆகிய சேவைகள் மேற்கொள்ளப்படும்.

    மேலும் ரேஷன் கடைகளில் பொருள்பெற வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் மற்றும் நோய்வாய்ப்பட்ட பயனாளிகளுக்கு அங்கீகாரச்சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் நாளை (11-ந்தேதி) காலை 10 மணியளவில் நடைபெற உள்ள குறைதீர்முகாமில் மனுக்களை அளித்து இந்த சேவையினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    • 12 வயதை கடந்த சிறுவர், சிறுமியருக்கு மீண்டும் ‘கோர்பாவேக்ஸ்’ தடுப்பூசி பள்ளிகளில் செலுத்தப்பட உள்ளது.
    • பள்ளி விடுமுறை விடப்பட்டதால், பள்ளி அளவில் நடத்தப்பட்ட முகாம் நிறுத்தப்பட்டது.

    திருப்பூர்,

    கோடை விடுமுறைக்கு பின் வருகிற 13-ந் தேதி 1 முதல் 10-ம் வகுப்பு வரையும், பிளஸ் 2 மாணவருக்கு, 20-ந் தேதியும், பிளஸ் 1 மாணவருக்கு 27-ந்தேதியும் பள்ளி திறக்கப்படுகிறது.

    12 வயதை கடந்த சிறுவர், சிறுமியருக்கு மீண்டும் 'கோர்பாவேக்ஸ்' தடுப்பூசி பள்ளிகளில் செலுத்தப்பட உள்ளது. அந்தந்த மாவட்ட அளவில் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் - சுகாதாரத்துறையினர் ஆலோசித்து, மேல்நிலை, உயர்நிலை பள்ளி அளவில் தடுப்பூசி முகாம் நடத்திக் கொள்ள மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சில மாவட்டங்களில் 85 சதவீத மாணவர்கள் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.

    ஒரு சில மாவட்டங்களில் 65 சதவீதம் மட்டுமே செலுத்தப்பட்டுள்ளது.இந்த வயது பிரிவில் புதிதாக பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஏதுவாக முன்கூட்டியே முகாம் அமைக்க ஆலோசிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் 12 முதல் 14 வயதுக்குரிய தடுப்பூசியை 24.45 லட்சம் பேரும், 15 முதல் 17 வயதுக்குரிய தடுப்பூசியை, 43.48 லட்சம் பேரும் செலுத்திக் கொண்டுள்ளனர்.

    இது குறித்து திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், பள்ளி மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசி செலுத்துவது வழக்கமானது தான். பள்ளி விடுமுறை விடப்பட்டதால், பள்ளி அளவில் நடத்தப்பட்ட முகாம் நிறுத்தப்பட்டது. நடப்பு கல்வியாண்டுக்கு பள்ளிகள் திறக்கப்படுவதால், முகாம் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட்டுள்ளது என்றனர்.

    • ஈரோடு மாவட்டத்தில் வருகிற 12-ந் தேதி 3,194 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.
    • இந்த மாபெரும் தடுப்பூசி முகாமில் ஈரோடு மாவட்டம் முழுவதும் 4260 பணியாளர்கள் ஈடுபடுகின்றனர்.

    ஈரோடு:

    தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்கும் பொருட்டு மக்கள் நலனை முதன்மையாக கொண்டு மக்களை தேடி மருத்துவம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் மாபெரும் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த முகாமில் 12 வயதிற்கு மேற்பட்ட மாணவர்கள், 18 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவருக்கும் முதல் தவணை மட்டும் 2-ம் தவணை, 2 தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டே முன் களப்பணியாளர்கள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போடப்பட்டு வருகிறது.

    இதன்படி ஈரோடு மாவட்டத்தில் வருகிற 12-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் பள்ளிகள் என மொத்தம் 3,194 மையங்களில் காலை 7 மணி முதல் மாலை 7 மணிவரை 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்க ப்பட்டுள்ளது.

    இந்த மாபெரும் தடுப்பூசி முகாமில் ஈரோடு மாவட்டம் முழுவதும் 4260 பணியாளர்கள் ஈடுபடுகின்றனர். 67 வாகனங்கள் முகாமிற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    எனவே இந்த மாபெரும் தடுப்பூசி முகாமில் இதுவரை தடுப்பூசி செலுத்தாதவர்கள் கலந்து கொண்டு தடுப்பூசியை செலுத்தி கொள்ள வேண்டும் என கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கேட்டுக்கொண்டுள்ளார்.

    நாமக்கல்லில், நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல்லில் நாளை (வெள்ளிக்கிழமை) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் தனியார் துறை நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான நபர்களை அவர்களது நிர்வாகிகளை கொண்டோ அல்லது நேரில் வந்தோ தேர்வு செய்துகொள்ளலாம்.

    இம்முகாமில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு மேலாளர், கணினி இயக்குபவர், விற்பனை பிரதிநிதி, ஏரியா மேனேஜர், டீம் லீடர், சூப்பர்வைசர், கணக்காளர், காசாளர், தட்டச்சர் போன்ற பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளன.

    இதில் அனைத்துவித கல்வித் தகுதி உள்ளோரும் கலந்துகொண்டு பயன் பெறலாம்.

    எனவே, மேற்படி பணிகளுக்கு தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் அனைவரும் நாளை காலை 10.30 மணிக்கு நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ள தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயன் அடையலாம் கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்து உள்ளார்.

    பரமத்தி வட்டார கிராமங்களில் ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    பரமத்தி வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் மேல்சாத்–தம்பூர், நடந்தை, ராமதேவம் மற்றும் கோதூர் ஆகிய இடங்களில் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாம்களில் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    மேலும் விழாவில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு வேளாண்மை திட்டங்கள் மற்றும் மானிய திட்டங்களை பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கோவிந்தசாமி தலைமையில் வேளாண்மை அலுவலர் பாபு, தோட்டக்கலை அலுவலர் மஞ்சு, வேளாண்மை பொறியியல் துறையின் உதவி பொறியாளர் கோவிந்தன், மற்றும் வேளாண்மை துணை அலுவலர் குழந்தைவேல் ஆகியோர் வழங்கினர்.

    முகாமில் மானியத்துடன் கூடிய வேளாண்மை மற்றும் தோட்டக்கலை இடுபொருட்களும் வழங்கப்பட்டது. கோதூர் மற்றும் ராமதேவம் வருவாய் கிராமங்களில் கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் டாக்டர் கலைசெல்வி மற்றும் டாக்டர்அனிதா ஆகியோரால் கால்நடை–களுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது.

    கால்நடைகளுக்கான தடுப்பூசிகள், ஆடுகளுக்கு குடற்புழுநீக்க மருந்துகள், ஆடு மாடுகளுக்கான நுண்ணூட்ட கலவை தூள்கள் விநியோகிக்கப்பட்டது. மேலும் கிசான் கடன் அட்டைக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

    சிறப்பு முகாம் ஏற்பாடுகளை பரமத்தி வட்டார உதவி வேளாண்மை அலுவலர்கள் நாகராஐன், பிரபு, கவுசல்யா, ரகுபதி மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர்கள் சத்தியராஜ், நவநீதகிருண்னன் மற்றும் அட்மா அலுவலர் ரமேஷ் ஆகியோர் செய்திருந்தினர்.

    • நெல்லை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் நிதி உதவியுடன் கண் சிகிச்சை முகாம்.
    • முகாமில் பலர் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்

    கடையம்:

    நெல்லை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் நிதி உதவியுடன் கிராம உதயம் மற்றும் கடையம் ரிலையபிள் கல்வி நிறுவனம் மற்றும் தனியார் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம், கடையம் ரிலையபிள் கல்வி நிறுவனத்தில் நடைபெற்றது.

    நிறுவன தலைவர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். முகாமிற்கு சிறப்பு அழைப்பாளராக கீழக்கடையம் ஊராட்சி மன்ற தலைவர் பூமிநாத், ஒன்றிய கவுன்சிலர் மாரி குமார்,

    கடையம் வட்டார காங்கிரஸ் துணைத்தலைவர் சாத்தா ஆகியோர் கலந்து கொண்டனர். முகாமில் பலர் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்.இதற்கான ஏற்பாடுகளை கணேசன் ஒருங்கிணைத்தார்.

    ×