search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223237"

    • ரேசன் கார்டு சம்மந்தமான கோரிக்கைகளுக்கு தீர்வு காணலாம்.
    • சமூக இடைவெளியை கடைபி டிக்க வேண்டும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் ரேசன் கார்டுதாரர்க ளுக்கான குறைதீர் கூட்டம் நாளை(சனிக்கிழமை) காலை 10 மணி முதல் பிற்ப கல் 1 மணி வரை, நாமக்கல், ராசிபுரம், மோகனூர், சேந்த மங்கலம், கொல்லிமலை, திருச்செங்கோடு, பரமத்தி வேலூர் மற்றும் குமாரபா ளையம் தாலுகா வழங்கல் அலுவலகங்களில், சம்பந்தப் பட்ட வட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது.

    பொதுமக்கள் இந்த குறைதீர் முகாமில் கலந்து கொண்டு, ரேசன் கார்டு சம்மந்தமான கோரிக்கை களுக்கு தீர்வு காணலாம். மேலும், பொது விநியோ கத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் தொடர்பான தங்கள் குறைகளை தீர்வு செய்து கொள்ளலாம். முகாமில் கலந்து கொள்ளும், பொது மக்கள் அனைவரும், கொரோனா முன்னெச்ச ரிக்கை அறிவு ரைகளை தவறாமல் கடை பிடித்து, மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியை கடைபி டிக்க வேண்டும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

    • சேலம், அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் பிரதம மந்திரி தேசிய தொழிற்ப ழகுநர் சேர்க்கை முகாம் நடைபெறவுள்ளது.
    • இப்பயிற்சியின் இறுதியில் தேசிய தொழிற்பழகுனர் சான்றிதழ் மத்திய அரசால் வழங்கப்படுகின்றது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனி யார் தொழிற்நிறுவனங்க ளில் காலியாக உள்ள தொழிற்பழகுனர் இடங்களை பூர்த்தி செய்யும் பொருட்டு வருகிற 10-ந்தேதி காலை 10 மணிக்கு சேலம், அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் பிரதம மந்திரி தேசிய தொழிற்ப ழகுநர் சேர்க்கை முகாம் நடைபெறவுள்ளது.

    முகாமில் ஐ.டி.ஐ, டிப்ளமோ மற்றும் டிகிரி முடித்த மாணவர்ள் தங்க ளுக்கு உரிய தொழிற்பழ குனர் இடங்களை தேர்வு செய்து உதவித்தொகை யுடன் தொழிற்பழகுநர் பயிற்சி பெற அழைக்கப்படுகிறார்கள். இப்பயிற்சியின் இறுதியில் தேசிய தொழிற்பழகுனர் சான்றிதழ் மத்திய அரசால் வழங்கப்படுகின்றது.

    ஏனவே இதுநாள் வரை தொழிற்பழகுனர் பயிற்சி முடிக்காத ஐ.டி.ஐ, டிப்ளமோ மற்றும் டிகிரி முடித்த மாண வர்கள் அனைவரும் தங்க ளது அனைத்து உண்மை சான்றுகள் மற்றும் சுய விவரத்துடன் (பயோ டேட்டாவுடன்) தொழிற்பழ குநர் முகாமில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கலெக்டர் கார்மேகம் கேட்டுகொண்டுள்ளார்.

    • அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் காய்ச்சல் பாதித்த பலர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
    • பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.

    பல்லடம் :

    தமிழ்நாட்டில் புதுவகை வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் காய்ச்சல் பாதித்த பலர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்த காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாநிலம் முழுவதும் சிறப்பு காய்ச்சல் தடுப்பு மருத்துவ முகாம் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி பல்லடம் அருகே உள்ள வடுகபாளையம் புதூரில் சிறப்பு காய்ச்சல் தடுப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமை பல்லடம் வட்டார மருத்துவ அலுவலர் சுடர்விழி, ஊராட்சி மன்ற தலைவர் புனிதா சரவணன் துவக்கி வைத்தனர். இந்த மருத்துவ முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.

    தொடர்ந்து அந்தப் பகுதிகளில் கொசு ஒழிப்பு பணியும் நடைபெற்றது. இதில் சுகாதார மேற்பார்வை யாளர் தமிழ்ச்செல்வி, வார்டு உறுப்பினர் செல்வராஜ் மற்றும் சுகாதாரப் பணியா ளர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நான்கு கிராமங்களில் முகாம் நடைபெறுகிறது
    • பொதுமக்கள் வந்து திருத்தங்கள் செய்து கொள்ள பெரம்பலூர் கலெக்டர் அழைப்பு

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் வட்டாரத்திற்கு லாடபுரம், வேப்பந்தட்டை வட்டாரத்திற்கு பூலாம்பாடி (கிழக்கு), குன்னம் வட்டாரத்திற்கு கீழப்புலியூர் (தெற்கு), ஆலத்தூர் வட்டாரத்திற்கு சிறுகன்பூர் ஆகிய 4 கிராமங்களில் முகாம் நடக்கிறது. இதேபோல் அரியலூர் மாவட்டத்தில், அரியலூர் வட்டாரத்திற்கு மேலப்பழுவூர், உடையார்பாளையம் வட்டாரத்திற்கு தர்மசமுத்திரம், செந்துறை வட்டாரத்திற்கு வஞ்சினபுரம், ஆண்டிமடம் வட்டாரத்திற்கு விளந்தை (வடக்கு) ஆகிய 4 கிராமங்களில் முகாம் நடக்கிறது. கூட்டத்தில் பொதுமக்கள் ரேஷன் கடைகள் தொடர்பான குறைகளை தெரிவித்தும், மின்னணு குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், செல்போன் எண் பதிவு மாற்றம் செய்தல், புதிய ரேஷன் கார்டு, நகல் மின்னணு குடும்ப அட்டை, மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள் ஆகியோர்களுக்கு அங்கீகார சான்று வழங்குதல், குடும்ப தலைவர் இறந்திருந்தால் அவரது புகைப்படத்தை மாற்றம் செய்வதற்கு, புதிய குடும்ப தலைவரின் புகைப்படத்துடன் விண்ணப்பம் செய்தல் உள்ளிட்டவை மேற்கொள்ளலாம். மேலும் தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார்களை அளித்து நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019-ன் படி பயன்பெறலாம், என்று பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    • வரும் செவ்வாய்க்கிழமை நடக்கிறது
    • பெரம்பலூர் கலெக்டர் கற்பகம் அறிவிப்பு

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 11-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மதியம் 3 மணியளவில் பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறவுள்ளது. வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை மனுவில் குறிப்பிட்டு, தக்க சான்றுகளுடன் நேரில் அளிக்கலாம். இந்த கோரிக்கை மனுக்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட அலுவலர்களால் பரிசீலிக்கப்பட்டு, தகுதியின் அடிப்படையில் நலத்திட்ட உதவிகள் வழங்க ஆவண செய்யப்படும், என்று கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.

    • பரமக்குடியில் தொழில் பழகுநர் தேர்வு முகாம் வருகிற 10-ந்தேதி நடக்கிறது.
    • 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்தவர்கள், பட்டயம் பட்டதாரி மாணவர்கள் அனைவரும் நேரடியாக கலந்துகொண்டு பயன்பெறலாம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அரசு தொழில் பயிற்சி நிலைய வளாகத்தில் பிரதமரின் தேசிய தொழில் பழகுபவர் பயிற்சிக்குரிய தேர்வு முகாம் வருகிற 10-ந்தேதி காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரையில் நடைபெறுகிறது. இந்த முகாமில் 5-க்கும் மேற்பட்ட அரசு நிறுவனங்கள் (தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், தமிழ்நாடு மின்சார வாரியம், வழுதூர் இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிறுவனம்,தமிழ்நாடு அரசு உப்பு உற்பத்தி கழகம்,தமிழ்நாடு அரசு பணிமனை) மற்றும் 50-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் நேரடியாக தொழில் பழகுநர் பயிற்சிக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.

    இதில் ஐ.டி.ஐ-யில் என்.சி.வி.டி,எஸ்.சி.வி.டி பயிற்சி முடித்த வர்கள் 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்தவர்கள், பட்டயம் பட்டதாரி மாணவர்கள் அனைவரும் நேரடியாக கலந்துகொண்டு பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ரத்ததானம் வழங்கினர்.
    • 120 -க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர்.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா ரெகுநாதபுரம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் கபிஸ்தலம் வட்டார சுகாதார நிலையத்தின் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் தமிழரசி முகாமினை தொடங்கி வைத்தார். முதல்வரின் நேர்முக உதவியாளர் முகமது பீரான் ஷெரிப் முன்னிலை வகித்தார்.

    தஞ்சாவூர் அரசு ராஜா மிராசுதார் மருத்துவமனை ரத்த வங்கி டாக்டர் காயத்ரி தலைமையிலான மருத்துவ குழுவினர்கள் ரத்தம் சேகரித்தனர். இதில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ரத்ததானம் வழங்கினார்கள் 300-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ரத்த வகை கண்டறியப்பட்டது.

    120 -க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் உடல் பரிசோதனை செய்து கொண்டனர். பொது மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட அனைவருக்கும் மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது. வட்டார மருத்துவ அலுவலர் தீபக் டாக்டர்கள் ராம்குமார், ஜெகநாதன், பாரதி சுகாதார ஆய்வாளர்கள் செல்லப்பா, நாடிமுத்து ஆகியோர்கள் கலந்து கொண்டனர். முடிவில் இதற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பனைத் திட்ட ஒருங்கிணைப்பாளர் கோபாலகிருஷ்ணன் செய்திருந்தார்.

    • கமுதியில் தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாமை காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.
    • மத்திய ஒன்றிய செயலாளர் சண்முகநாதன் வரவேற்றார்.

    கமுதி

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் தி.மு.க. புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் பஸ் நிலையம் முன்பு நடந்தது. மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான காதர் பாட்சா முத்துராமலிங்கம் தலைமை தாங்கினார். முதுகுளத்தூர் தொகுதி பொறுப்பாளரும், மதுரை முன்னாள் மேயருமான குழந்தைவேலு, முகாமை தொடங்கி வைத்தார். கமுதி பேரூர் செயலாளர் பாலமுருகன், வடக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன் முன்னிலை வகித்தனர். ஊராட்சி ஒன்றியகுழு தலைவர் தமிழ் செல்விபோஸ், துணைத் தலைவர் சித்ராதேவி அய்யனார், ஊராட்சி மன்ற தலைவர் காவடிமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதே போல் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் நடந்த புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமிற்கு மாவட்டச் செயலாளர் காதர்பாட்சாமுத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.தொகுதி பொறுப்பாளர் குழந்தைவேலு தொடங்கி வைத்தார்.மத்திய ஒன்றிய செயலாளர் சண்முகநாதன் வரவேற்றார்.

    • சிவகங்கையில் தி.மு.க. உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடந்தது.
    • இதனை அமைச்சர் பெரிய கருப்பன் தொடங்கி வைத்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை நகர தி.மு.க. சார்பில் நகர செயலாளரும் நகர்மன்ற தலைவருமான துரைஆனந்த் ஏற்பாட்டில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. இதை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.

    மருத்துவர் யாழினி, மாவட்ட துணை செயலாளர்கள் சேங்கைமாறன், ஊராட்சி மன்ற தலைவர் மணிமுத்து, கவுன்சிலர்கள் ஜெயகாந்தன், அயூப்கான், விஜயகுமார், துபாய்காந்தி, ராஜபாண்டி, சரவணன், மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்துகொண்டு உறுப்பினர் சேர்க்கை படிவத்தை பெற்றுக்கொண்டனர்.

    தமிழகம் முழுவதும் உடன்பிறப்பு களாய் இணைவோம் என்ற தலைப்பில் உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் தி.மு.க. வினர் சார்பில் நடைபெற்று வருகிறது.

    திருப்பூர்:

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறு த்தலின்படி, தமிழகம் முழுவதும் உடன்பிறப்பு களாய் இணைவோம் என்ற தலைப்பில் உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் தி.மு.க. வினர் சார்பில் நடைபெற்று வருகிறது. அதன்படி திருப்பூர் மாவட்டத்திலும் உறுப்பினர் சேர்க்கை முகாம் மும்முரமாக நடந்து வருகிறது. திருப்பூர் மாநகரா ட்சி 43-வது வார்டு கரு வம்பாளையம் பகுதியில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் எம்.எஸ்.ஆர். ராஜ் தலைமையில் முகாம் நடந்தது.

    இதில் வட்ட செயலாளர் பி.கே.கணேஷ் முன்னிலை வகித்தார். இதில் தி.மு.க. நிர்வாகிகள் தம்புராஜ், சிட்டி பாபு, ஜின்னா பாய், சுலோச்சனா, கண்ணன், சிவக்குமார் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கழக அறுவுறுத்தலின்படி உறுப்பினர்கள் சேர்க்கை நடந்தது.

    • காசநோய் தடுப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட்டது
    • ரத்த பரிசோதனை உள்ளிட்ட உடல் பரிசோதனைகள் நடைபெற்றது

    கரூர்,

    கரூர் மாவட்டம் புகழூர் நகராட்சி காந்தி மண்டபத்தில் பொதுமக்களுக்கு காச நோய் கண்டறிதல் குறித்த எக்ஸ்ரே பரிசோதனை முகாம் நடைபெற்றது.முகாமில் காசநோய் பிரிவு துணை இயக்குனர் டாக்டர் சரவணன் தலை மையில் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் விஜயகுமார், சுகாதார ஆய்வாளர்கள் ஜெகதீஸ்வரன், தமிழரசன், சுகாதார மேற்பார்வையாளர் சரண்யா மற்றும் உதவியாளர்கள் கொண்ட குழுவினர் கலந்து கொண்டனர்.இதில் பொது மக்களுக்கு காசநோய் உள்ளதா என பரிசோதனை செய்யும் வகையில் காச நோய்குறித்த எக்ஸ்ரே பரி சோதனை வாகனத்திற்கு அனுப்பி வைத்து அங்கு அவர்களுக்கு நுரையீ ரல், நெஞ்சு புகைப்படம் எடுத்து நுரையீரலில் சளி தொற்று உள்ளதா என்றும், காச நோய் உள்ளதா என் றும் பரிசோதனை நடை பெற்றது.அதனைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு காச நோய் வராமல் இருப்பது குறித்த விழிப்புணர்வு பிர சாரம் செய்தனர் அதே போல் முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு ரத்த பரிசோதனை செய்து ரத் தத்தில் சர்க்கரை அளவு, உடல் பரிசோதனை செய்து உடலில் ரத்த அழுத்த அளவு குறித்து பரிசோதனை செய்தனர்.

    • தூய்மை பணி முகாம் 6-வது வார்டு பகுதியில் நடைபெற்றது.
    • இதில் 90-க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றாக இணைந்து பணிகளை மேற்கொண்டனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பொத்தனூர் பேரூராட்சியில் 4-ம் கட்ட ஒருங்கிணைந்த தூய்மை பணி முகாம் 6-வது வார்டு பகுதியில் நடைபெற்றது.

    முகாமில் பேரூராட்சி மன்றத் தலைவர் கருணாநிதி தலைமையில் பேரூராட்சி செயல் அலுவலர் ரவிசங்கர், பேரூராட்சி இளநிலை உதவியாளர் ஜெயசேகர், துப்புரவு மேற்பார்வையாளர் குணசேகரன், பில் கிளர்க்குகள் குணசேகரன், பன்னீர்செல்வம், வார்டு உறுப்பினர், தூய்மைப் பணியாளர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் உட்பட 90-க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றாக இணைந்து பணிகளை மேற்கொண்டனர்.

    இதில், பொது சுகாதாரப் பணிகளான மழைநீர் வடிகால்கள் தூர்வாறுதல், செடி, கொடி, முட்புதர்கள் அகற்றுதல், தெருக்களை சுத்தம் செய்தல், குடிநீர் பைப்லைன் பழுதுகள் சரி செய்தல், தெரு மின்விளக்குகள் மற்றும் மின் இணைப்புகள், மின்மோட்டார்கள் பராமரிப்பு செய்தல் போன்ற பொது மக்களின் அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டது.

    ×