search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223246"

    • கஞ்சா விற்பனை செய்தவர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் உட்பட 37 பேரின் வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    • குட்கா விற்பனை செய்ததாக 409 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 429 பேர் கைது செய்யப்பட்டனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் உத்தரவின்பேரில் பொதுமக்களுக்கு இடையூறு செய்தல் போன்ற பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக இந்த ஆண்டில் இதுவரை 66 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    கஞ்சா விற்பனை

    தொடர்ந்து மாவட்டம் முழுவதும் போலீசார் கஞ்சா விற்பனையை தடுக்கும் பொருட்டு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த ஆண்டில் இதுவரை சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ததாக 79 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 106 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 49.6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    14 பேர் மீது குண்டர் சட்டம்

    தொடர் கஞ்சா விற்பனை செய்ததாக இதுவரை 14 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    மேலும் கஞ்சா விற்பனை செய்தவர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் உட்பட 37 பேரின் வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    409 வழக்கு

    சட்டவிரோதமாக குட்கா விற்பனை செய்ததாக 409 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 429 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 2,340 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    மேலும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தவர்களின் கடைகளுக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளின் மூலம் ரூ. 2 லட்சத்து 95 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு 49 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

    எஸ்.பி. எச்சரிக்கை

    மாவட்டத்தில் கஞ்சா, குட்கா விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • பழையபாளையம் இந்திரா காந்தி வீதியில் உள்ள ஒரு மளிகை கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, ஹான்ஸ் பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • இதையடுத்து அந்த கடையில் இருந்த சுமார் 20 கிலோ தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மது விலக்கு சிறப்பு இன்ஸ்பெக்டர் செந்தில், சூரம்பட்டி சப்- இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் தலைமையிலான போலீசார் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்படு கிறதா என பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் பழையபாளையம் இந்திரா காந்தி வீதியில் உள்ள ஒரு மளிகை கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, ஹான்ஸ் பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் சப்- இன்ஸ்பெக்டர்கள் அந்தப் பகுதியில் உள்ள ஒவ்வொரு கடையாக தீவிர சோதனை நடத்தினர். அப்போது ஒரு மளிகை கடையில் சோதனை செய்த போது அங்கு மூட்டை மூட்டையாக ஹான்ஸ், புகையிலை பொருட்கள், பான் மசாலா பாக்கெட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து அந்த கடையில் இருந்த சுமார் 20 கிலோ தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த கரோல் பிரான்சிஸ் (36) என்பவரை போலீசார் கைது செய்தனர். யார் யாரிடம் இருந்து புகையிலை பொருட்கள் வாங்கப்பட்டது. என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதே போல் சூரம்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி கேயன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். சூரம்பட்டி பெட்ரோல் பங்க் அருேக 2 பேர் சந்தேகம் படும்படி நின்று கொண்டிருந்தனர்.

    அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி சோதனை செய்த போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், புகையிலை பொருட்கள், பான் மசாலா 90 பாக்கெட்டுகள் இருந்தது தெரிய வந்தது.

    அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்திய போது அவர்கள் அதே பகுதியை சேர்ந்த சாஸ்லிங் (55), செல்வராஜ் (56) என தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து ஹான்ஸ் -புகையிலை பொருட்களை பறி முதல் செய்தனர்.

    • வெள்ளகோவில் போலீசார் கஞ்சா மற்றும் புகையிலை பாக்கெட் விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
    • கஞ்சா மற்றும் புகையிலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட நபர்களின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் பகுதியில் திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில், வெள்ளகோவில் போலீசார் கஞ்சா மற்றும் மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய புகையிலை பாக்கெட் விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொண்டு, புகையிலை மற்றும் கஞ்சா பொருட்களை கைப்பற்றி சம்மந்தப்பட்ட நபர்களை சிறையில் அடைத்து வருகின்றனர்.

    வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி கஞ்சா மற்றும் புகையிலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட நபர்களின் வங்கிக் கணக்கை முடக்க நடவடிக்கை மேற்கொண்டதில் வெள்ளகோவில் காவல் நிலைய வழக்கில் சம்பந்தப்பட்ட 8 நபர்கள் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது. இன்னும் 8 நபர்கள் வங்கி கணக்கு முடக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வெள்ளகோவில் பகுதியில் கஞ்சா மற்றும் உயிருக்கு தீங்கு விளைவிக்க கூடிய புகையிலை பாக்கெட் விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமா தேவி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • சிவகிரி நகர பஞ்சாயத்து சுகாதார அலுவலர்கள் பள்ளிக்கூடங்கள் அருகே புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என சோதனை செய்தனர்.
    • 6 கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்பட்டது.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சாந்தி சரவணபாய் உத்தரவின் பேரில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சரபோஜி தலைமையில், சுகாதார ஆய்வாளர் ரவிக்குமார், விஷ்ணு, ராஜாராம், சிவகிரி நகர பஞ்சாயத்து சுகாதார மேற்பார்வையாளர் குமார், தினேஷ் குமார் மற்றும் அலுவலர்கள் சிவகிரி பகுதியில் குமாரபுரம், சிவராமலிங்கபுரம் மேலத்தெரு, பஜார், அம்பேத்கர் பகுதி, சிவகிரி முக்கிய ரத வீதிகள் ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளிலும் மற்றும் பள்ளிக்கூடங்கள் அருகே உள்ள கடைகளிலும் புகையிலை மற்றும் போதைப் பொருட்கள், பீடி, சிகரெட் போன்ற பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என சோதனை செய்தனர்.

    இவற்றில் பள்ளிக்கூடம் அருகே உள்ள கடைகளில் புகையிலை விற்பனை செய்து கொண்டிருந்ததாக 6 கடை உரிமையாளர்களை பிடித்து கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    • போலீசார் தினமும் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
    • கூரியர் மூலமாக கஞ்சா பார்சலில் அனுப்பப்பட்டு விற்பனை

    நாகர்கோவில்:

    தமிழகம் முழுவதும் கஞ்சா மற்றும் குட்கா புகையிலை விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    குமரி மாவட்டத்திலும் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின்பேரில் மாவட்ட முழுவதும் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி, நாகர்கோவில், தக்கலை, குளச்சல் சப்-டிவிசன்களுக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் தினமும் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

    கடந்த சில நாட்களில் மட்டும் கஞ்சா விற்பனை செய்வதாக 250-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதில் பலரது வங்கி கணக்குகளை போலீசார் முடக்கி உள்ள னர். தொடர்ந்து தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வரு வதன் காரணமாக வெளியூர்களி லிருந்து கஞ்சா மற்றும் குட்கா புகையிலை கொண்டு வருவது கட்டுப்படுத்தப்ப ட்டுள்ளது.

    இந்த நிலையில் தற்போது கூரியர் மூலமாக கஞ்சா பார்சலில் அனுப்பப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் கூரியர் நிறுவனங்களிலும் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். வெளி மாநிலங்களில் இருந்து ரெயில்கள் மூலமாக கஞ்சா மற்றும் குட்கா விற்பனையை தடுக்கவும் ரெயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    இன்ஸ்பெக்டர் கேத்தரின் சுஜாதா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் பழனியப்பன், குமார்ராஜ் ஆகியோர் பெங்களூருரில் இருந்து நாகர்கோவில் வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் சோதனை மேற்கொ ண்டனர்.

    நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் சோதனை மேற்கொண்டபோது முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் சந்தேகப்ப டும்படியாக 4 பேக்குகள் இருந்தது. போலீசார் அந்த பேக்குகளை கைப்பற்றி சோதனை செய்தனர். அதில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    பேக்கில் இருந்த 36 கிலோ குட்கா புகையிலையை போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட குட்கா புகையிலையை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். புகையிலையை கடத்தி வந்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்த ப்பட்டு வருகிறது.

    • புகை பழக்கம் காரணமாக உலகம் முழுவதும் தினமும் சுமார் 2,000 பேர்வரை இறக்கின்றனர்.
    • புகை பழக்கத்திற்கு செலவிடும் பணத்தை உங்களுக்கு சேமிக்க சொல்லுங்கள்.

    பல்லடம் :

    பல்லடத்தில், அரசு பள்ளி மாணவர்களுக்கு புகையிலை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது .

    பல்லடம் அரசு பெண்கள்மற்றும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுகாதாரத்துறை சார்பாக புகையிலை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட நலகல்வி அலுவலர் ஜெயப்பிரகாஷ் தலைமையில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.தலைமையாசிரியர் காஞ்சனா வரவேற்றார். புகையிலை பாதிப்புகள் குறித்து பல்லடம் வட்டார மருத்துவ அலுவலர் சுடர்விழி பேசியதாவது:- புகையிலை பழக்கமுள்ள நபரை மீட்க கவுன்சிலிங் அவசியம். புகைப்பிடிப்பதன் மூலம் என்ன விளைவு ஏற்படுகிறது என்னென்ன நோய்கள் ஏற்படுகின்றன என்று இங்கு நீங்கள் கேட்டதை வீட்டில் உள்ளவர்களிடம் கூறுங்கள். புகை பழக்கத்திற்கு செலவிடும் பணத்தை உங்களுக்கு சேமிக்க சொல்லுங்கள். புகை பழக்கம் காரணமாக உலகம் முழுவதும் தினமும் சுமார் 2,000 பேர்வரை இறக்கின்றனர்.

    இவ்வாறு அவர் பேசினார். பின்னர் ஆசிரியர்கள், மாணவர்கள், அனைவரும் புகையிலை எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    • சங்கராபுரத்தில் அதிரடி 3 கடைகளில் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
    • பொ து இடங்களி ல் புகை பி டித்த 3 பேருக்கு தலா ரூ.100 அபராதம் விதித்து எச்சரி த்து அனுப்பினர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில் கள்ளக்குறிச்சி மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர்பூங்கொடி உத்தரவி ன் பே ரி ல், புதுப்பே ட்டை வட்டார மருத்துவ அலுவலர் சம்பத்குமார் தலைமையில், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவி , சுகாதார ஆய்வாளர்கள் சரவணன், பாசில், பா லமுருகன், குணதீபன், ராமச்சந்திரன்ஆகியோரை கொண்ட குழுவினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போ து பொ து இடங்களி ல் புகை பி டித்த 3 பேருக்கு தலா ரூ.100 அபராதம் விதித்து எச்சரி த்து அனுப்பினர்.

    மேலும், கடைவீ தி, கள்ளக்குறிச்சி மெயின் ரோட்டில் உள்ள பெட்டிக்கடைகளில் சோதனை செய்த போது 3 கடைகளில் புகையிலை பொருட்கள் வை த்திருந்ததை கண்டுபிடித்த அதிகாரிகள் கடை உரி மையாளர்களுக்கு தலா ரூ.500 அபராதம் விதித்து எச்சரித்ததோடு அவர்களிடம் இருந்து புகையிலைப் பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

    • தக்கலை போலீசார் சோதனை நடத்தினர்.
    • 20 பாக்கெட் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    கன்னியாகுமரி:

    தக்கலை அருகே உள்ள கல்குறிச்சி கொல்லன் விளையை சேர்ந்தவர் கோலப்பன். இவர் இரணியல் ரோட்டில் கடை நடத்தி வருகிறார். இங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக தக்கலை போலீசுக்கு தகவல் கிடைத்தது.

    இதன் அடிப்படையில் சம்பவ இடம் விரைந்து சென்ற சப் இன்ஸ்பெக்டர் கணேஷ் குமார் தலைைமயிலான போலீசார் சோதனை நடத்தி கோலப்பனை கைது செய்தனர். அவரிடமிருந்து 20 பாக்கெட் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    • புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
    • ஆனந்த செல்வன்மற்றும் தேவராஜ் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது காவல்துறை மற்றும் உணவு பாதுகாப்புத் துறையினர் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இதன்படி பாவூர்சத்திரம் அருகே சின்ன குமார்பட்டியை சேர்ந்த ஆனந்த செல்வன் (வயது 25) மற்றும் செட்டியூர் அருகே பஞ்சபாண்டியூரை சேர்ந்த தேவராஜ் (40) ஆகிய இருவரும் பாவூர்சத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா மற்றும் குட்கா பொருட்களை விற்பனை செய்து வந்துள்ளனர்.

    தகவலின்பேரில் தனிப்படை போலீசார் சோதனை நடத்தி விற்பனைக்காக வைத்திருந்த ரூ. 2 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர்.

    • பலமுறை வழக்குப் பதிவு செய்தும், எச்சரித்தும் தொடர்ச்சியாக கடையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்து வந்ததால் கடையை சீல் வைத்தனர்.
    • புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர்களை கண்டறிந்து கடை உரிமையாளர்களை கைது செய்து வருகின்றனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களுக்கு அருகிலும், கடை வீதிகளிலும் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர்களை போலீசார் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கண்டறிந்து அவற்றை பறிமுதல் செய்து கடை உரிமையாளர்களை கைது செய்து வருகின்றனர்.

    இதன்படி பாவூர்சத்திரத்தில் நெல்லை - தென்காசி மெயின் ரோட்டில் அரசு மகளிர் பள்ளி அருகில் நடராஜன் என்பவர் பாவூர்சத்திரம் காவல் அதிகாரிகள் மற்றும் உணவுத்துறை அதிகாரிகள் பலமுறை வழக்குப் பதிவு செய்தும், எச்சரித்தும் கூட தொடர்ச்சியாக கடையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்து வந்ததால் தென்காசி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி டாக்டர் சசிதீபா, வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் மகாராஜன் மற்றும் பாவூர்சத்திரம் சப்- இன்ஸ்பெக்டர் கவிதா ஆகியோர் அங்கிருந்த குட்கா பொருட்களை பறிமுதல் செய்து கடையை சீல் வைத்தனர்.

    தென்காசி மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடையை சீல் வைப்பது முதன்முறை ஆகும்.

    • குட்கா மற்றும் கூல் லிப் போன்ற பொருட்களை கடைகளிலிருந்து வாங்கி பயன்படுத்த கூடாது
    • போதை பழக்கத்திற்கு ஆளாகி எதிர்க்கால வாழ்க்கையை இழக்க கூடாது

    கன்னியாகுமரி :

    பள்ளி, கல்லூரி மாணவர்கள் புகையிலை போதைக்கு ஆளாகுவதை தடுக்கும் வகையில் குமரி மாவட்ட எஸ்.பி.ஹரி ஹிரண் பிரசாத் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.

    அதன் ஒரு பகுதியாக வி.கே.பி. மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் குளச்சல் சப் - இன்ஸ்பெக்டர் தேவராஜ் மாணவர்களிடம் குட்கா மற்றும் கூல் லிப் போன்ற பொருட்களை கடைகளிலிருந்து வாங்கி பயன்படுத்த கூடாது, புகையிலை போதை பழக்கத்திற்கு ஆளாகி எதிர்க்கால வாழ்க்கையை இழக்க கூடாது. படிப்பில் மட்டும் கவனம் செலுத்தி பெற்றோர்களின் கனவை நனவாக்க வேண்டும் என அறிவுரை வழங்கி பேசினார்.

    உடன் சிறப்பு சப் - இன்ஸ்பெக்டர் அருள்தாஸ், பள்ளி தலைமையாசிரியர் இளங்கோ ஆகியோர் கலந்து கொண்டனர்

    • சத்தியமங்கலம் அருகே மளிகை கடையில் ஹான்ஸ்-புகையிலை பொருட்கள் விற்றவர் கைது செய்யப்பட்டனர்
    • தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை-ஹான்ஸ் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மொத்தம் 475 கிராம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

     ஈரோடு:

    சத்தியமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் குட்டி அண்ணன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சத்தியமங்கலம் அடுத்த கோட்டுவீராம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு மளிகைக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வடக்குபேட்டை அடுத்த கோட்டுவீராபாளையம் பகுதில் உள்ள மளிகை கடையை சோதனை செய்தபோது சந்தேகத்திற்கு இடமான வகையில் சிறிய வெள்ளை சாக்கு பை ஒன்று இருந்தது.

    அதனை சோதனை செய்தபோது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை-ஹான்ஸ் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மொத்தம் 475 கிராம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சதாசிவம் (29) என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×