search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223297"

    • ஆலோசனைக் கூட்டம் குன்னூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது.
    • நீலகிரி மாவட்ட செயலாளர் பா.முபாரக் தலைமை தாங்கினார்.

    குன்னூர்,

    குன்னூர் நகர தி.மு.க சார்பில் நகர பகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி பாக நிலை முகவர்கள், பொறுப்பாளர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் குன்னூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது.

    நீலகிரி மாவட்ட செயலாளர் பா.முபாரக் தலைமை தாங்கினார்.குன்னூர் நகர செயலாளர் ராமசாமி முன்னிலை வகித்தார். சட்டமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளர் பாண்டிய செல்வன் பூத் கமிட்டி அமைக்கும் பணி குறித்தும், புதிய உறுப்பினர்கள் படிவத்தை எவ்வாறு பூர்த்தி செய்து புதிய உறுப்பினர்களை சேர்ப்பது குறித்தும் விளக்கி பேசினார்.

    இதில் மாநில சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் அன்வர்கான், பொதுக்குழு உறுப்பினர்கள் சதக்கத்துல்லா, செல்வம், குன்னூர் நகர மன்ற தலைவர் ஷீலா கேத்ரின், துணைத் தலைவர் வாஷிம் ராஜா, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் ஊட்டி நகர அவை தலைவர் ஜெயகோபி தலைமையில் நடைபெற்றது.
    • முடிவில் முன்னாள் மாவட்ட பிரதிநிதி ராஜா நன்றி கூறினார்.

    ஊட்டி,

    ஊட்டி நகரத்திற்கு உட்பட்ட பாக நிலை முகவர்கள் கூட்டம், நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் ஊட்டி நகர அவை தலைவர் ஜெயகோபி தலைமையில் நடைபெற்றது. ஊட்டி நகர செயலாளர் ஜார்ஜ் அனைவரையும் வரவேற்றார்.

    நீலகிரி மாவட்ட தி.மு.க செயலாளர் பா.மு.முபாரக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.ஊட்டி சட்டமன்ற தொகுதி பார்வையாளர், மாநில பொறியாளர் அணி செயலாளர் கு.கருணாநிதி பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கினார்.

    மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார், மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர் முஸ்தபா, உதகை தெற்கு ஒன்றிய செயலாளர் பரமசிவன், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் தொரை, சத்தக்கத்துல்லா, உதகை நகரமன்ற தலைவர் வாணீஸ்வரி, நகர துணை செயலாளர்கள் இச்சுபாய், ரீட்டாமேரி, கிருஷ்ணன், பொருளாளர் அணில்குமார், மாவட்ட பிரதிநிதிகள் கார்த்திக், தம்பி இஸ்மாயில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் காந்தல் ரவி, எல்கில் ரவி, துணை அமைப்பாளர்கள் நாகராஜ், மேத்யூஸ், ஜெயராம், ஆட்டோ ராஜன், தியாகு, மார்க்கெட் ரவி, அமலநாதன், சசிகுமார், வில்லியம், சித்திக், உதகை நகரமன்ற உறுப்பினர்கள் ரமேஷ், ரகுபதி, விஷ்ணு, செல்வராஜ், மேரி பிளோரினா, பிரியா வினோதினி, திவ்யா, மீனா உட்பட கழக நிர்வாகிகள், பூத் கமிட்டி உறுப்பினர்கள், கழக முன்னணியினர் திரளாக கலந்துகொண்டனர்.முடிவில் முன்னாள் மாவட்ட பிரதிநிதி ராஜா நன்றி கூறினார்.

    • ராஜேந்திரன் 4 கிலோ மீட்டர் நடந்து சென்று போக்குவரத்தை சீர்படுத்தியுள்ளார்.
    • வாகன ஓட்டிகளில் சிலர் இந்த காட்சியை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு பிரதமர் மோடி வந்தார். பிரதமரின் வருகைக்காக தமிழகம் முழுவதும் இருந்து 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    இதனால் மிகவும் குறைந்த அளவிலான போலீசார் மட்டுமே பிற பகுதிகளில் போக்குவரத்தை சீர்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    இந்நிலையில் அதே தினம் மதியம் கோத்தகிரியில் இருந்து ஊட்டி செல்லும் சாலையில் ஊட்டிக்கு நோயாளி ஒருவரை சிகிச்சைக்காக ஏற்றிச் சென்று கொண்டிருந்த ஆம்புலன்ஸ் வாகனம் தொட்டபெட்டா காட்சி முனை அருகே போக்குவரத்து நெரிசலில் சிக்கியது.

    அப்போது அங்கு பணியில் இருந்த கோத்தகிரி போக்குவரத்து சப்-இ ன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தொட்டபெட்டா முதல் சேரிங்கிராஸ் வரை சுமார் 4 கிலோ மீட்டர் நடந்து சென்று போக்குவரத்தை சீர்படுத்தி அங்கிருந்து பிற போலீசார் உதவியுடன் நோயாளியை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதைக் கண்ட அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகளில் சிலர் இந்த காட்சியை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதுடன், அவரைப் பாராட்டி விட்டு சென்றனர். இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர், சப்- இன்ஸ்பெக்டர் ராஜேந்திரனை பாராட்டியதுடன் சான்றிதழ் வழங்கி ஊக்குவித்தார்.

    • செல்வகுமார் ஊராட்சி செயலாளரிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
    • போலீசார் வழக்குபதிவு செய்து செல்வகுமாரை கைது செய்தனர்.

    பந்தலூர்

    பந்தலூர் அருகே சேரங்கோடு ஊராட்சி மன்ற அலுவலக்கதில் ஊராட்சி செயலாளர் சஜீத் பணியில் இருந்துள்ளார். அப்போது சேரம்பாடி பகுதியை சேர்ந்த தொழிலாளியான செல்வகுமார் (வயது 50) அங்கு சென்று, ஊராட்சி செயலாளரிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் சேரம்பாடி போலீல் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தினேஸ்குமார் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து செல்வகுமாரை கைது செய்தனர்.

    • போலீசார் ஊட்டி சுற்றுவட்டார பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
    • கள்ளச்சாராயம் காய்ச்சினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

    ஊட்டி

    ஊட்டி அருகே வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

    கள்ளச்சாராயம் நீலகிரி மாவட்டம் ஊட்டி சுற்று வட்டார பகுதியில் டாஸ்மாக் கடைகளில் மது வாங்கி சட்ட விரோதமாக இரவு நேரங்களில் கூடுதல் விலைக்கு விற்பதாகவும், சில நேரங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாகும் தொடர்ந்து புகார்கள் வந்தது.

    இதன் பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு விஜயலட்சுமி, இன்ஸ்பெக்டர் தர்மராஜ் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் தலைமையிலான போலீசார் ஊட்டி சுற்றுவட்டார பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் தும்மனட்டி மதுரை வீரன் காலனி பகுதியில் மர்ம நபர்கள் நடமாட்டம் அதிக அளவில் இருந்தது. மேலும் சந்தேகத்திற்கிடமான வகையில் இங்கு தொழில் நடப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

    அப்போது அங்கு இருந்த ஒரு வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்கு கொண்டு செல்வது தெரியவந்தது. உடனடியாக போலீசார் வீட்டில் இருந்த 3 பேரை மடக்கி பிடித்து, கைது செய்தனர்.விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த பொன்னுசாமி (வயது 51), வெள்ளியங்கி (41), செல்வன் (63) என்பது தெரியவந்தது. இதன் பின்னர் அவர்கள் கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படுத்திய பானைகள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் கள்ளச்சாராயம் காய்ச்சினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.

    ஏராளமான அலுவலக ஊழியர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

    குன்னூர்

    குன்னூரில் உள்ள டேன்டீ அலுவலகம் முன்பு நேற்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 5 வருட காலமாக நிறுத்தி வைத்த அகவிலைபடியை உடனடியாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கை உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் ஏராளமான அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    • வருடம் தோறும் 22 நாட்கள் வெகு சிறப்பாக திருவிழா நடைபெறுவது வழக்கம்.
    • விநாயகர் கோவிலில் பூஜைகள் நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    கோத்தகிரி

    கோத்தகிரி கடைவீதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில் மிகவும் பழமையானதும், பிரசித்தி பெற்றதும் ஆகும். இந்தக் கோவிலில் வருடம் தோறும் 22 நாட்கள் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இந்தநிலையில் நேற்று கோத்தகிரி மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தின் உபயத்தில் பால்குட ஊர்வலம் மற்றும் அம்மனுக்கு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றது.

    இதையொட்டி நேற்று காலை 9.30 மணிக்கு கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    பின்னர் சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் பால்குடங்களை தங்கள் தலையில் சுமந்தவாறு ராம்சந்த் சதுக்கம், காமராஜர் சதுக்கம், மார்க்கெட் திடல், பஸ் நிலையம் வழியாக மேளதாளங்களுடன் ஊர்வலமாகச் சென்று கடைவீதி மாரியம்மன் கோவிலை அடைந்தனர். பகல் 12 மணிக்கு அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டு பின்னர் அலங்கார பூஜை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் மார்க்கெட் வியாபாரிகள், பொதுமக்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டுச் சென்றனர். இன்று காலை 11 மணிக்கு அபிஷேக அலங்கார பூஜையும், பகல் 1 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானமும், மாலை 3 மணிக்கு கோத்தகிரி மகளிர் மன்றம் நடத்தும் திருவிளக்கு பூஜையும், 6 மணிக்கு அக்கினி கம்பம் பூச்சாட்டுதல் நடைபெறுகிறது.

    • 17-ந்தேதி குன்னூர் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும்.
    • கருப்பு பேட்ஜ் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஊட்டி

    டேன்டீ அரசு ஊழியர்களுக்கு கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் 29-ந்தேதி அன்று சட்டசபையில் நடந்த வனத்துறை மீதான மானிய கோரிக்கையில் 7-வது ஊதியகுழு பரிந்துரையின்படி ஊதியம் நடைமுறைபடுத்த அரசாணை வெளியிடப்படடு அதனை நடைமுறைபடுத்த ரூ.6 கோடி தமிழக அரசால் வழங்கப்பட்டு உள்ளது.

    ஆனால் இதுநாள் வரை டேன்டீ நிர்வாகம் அதனை நடைமுறை படுத்தாமல் ஊழியர்களை ஏமாற்றி வருவதை கண்டித்து நெல்லியாளம் டேன்டீ கோட்ட அலுவலகம் முன்பு கருப்பு பேட்ஜ் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்கபொது செயலாளர் பொன்னுசாமி தலைமை தாங்கினார். இதில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும் வருகிற 17-ந்தேதி குன்னூர் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று டேன்டீ ஊழியர்கள் தெரிவித்தனர்.

    • கடந்த 3-ந் தேததி கொடியேற்றத்துடன் கோவில் திருவிழா தொடங்கியது.
    • 10-ந் தேதி குந்தாபாலம் ஆற்றில் இருந்து கம்பம் கொண்டு வரப்பட்டது.

     மஞ்சூர்,

    நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் சக்தி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் இந்த கோவிலில் வருடாந்திர திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

    இந்நிலையில் நடப்பாண்டு 50ம் ஆண்டை முன்னிட்டு பொன்விழா ஆண்டு திருவிழா கொண்டாடப்பட்டது. இதை தொடர்ந்து கடந்த 3-ந் தேததி கொடியேற்றத்துடன் கோவில் திருவிழா தொடங்கியது.

    தொடர்ந்து தினசரி மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இந்த நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 10-ந் தேதி குந்தாபாலம் ஆற்றில் இருந்து கம்பம் கொண்டு வரப்பட்டது.

    இதை தொடர்ந்து நேற்றுமுன்தினம் குந்தா சிவன் கோவிலில் இருந்து மேள, தாளங்களுடன் கரகம் எடுத்து வரப்பட்டது.

    இதில் ஏராளமான பக்தர்கள் தீச்சட்டிகளை ஏந்தி குந்தாபஜார், பழைய தாலுகா அலுவலகம், மின்வாரிய மேல்முகாம் வழியாக மாரியம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர்.

    இதை தொடர்ந்து பல்வேறு அபிஷேகங்களுடன் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் மஞ்சூர், மஞ்சூர்அட்டி, மணிக்கல், கண்டிபிக்கை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டதுடன் படுகரின மக்களின் கலாச்சார நடனம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    இதை தொடர்ந்து நேற்று கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்தல், மாவி ளக்கு ஊர்வலம் நடந்தது. இன்று மஞ்சள் நீராட்டு மற்றும் அம்மன் திருவீதி உலா நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

    • கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • தினமும் திரளான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

    குன்னூர்,

    குன்னூரில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த தந்தி மாரியம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் வருடந்தோறும் தேர்த்திருவிழா வெகு விமரி சயைாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்காரங்கள் செய்யப்பட்டு வருகின்றன. தினமும் திரளான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

    முக்கிய திருவிழாவான திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதனை யொட்டி காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடை பெற்றது.

    தொடர்ந்து மதியம் வேணுகோபால் கோவிலில் இருந்து 100க்கும் மேற்பட்ட பெண்கள் தாலி மற்றும் பூஜை பொருட்களுடன் சீர் தட்டு ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். அதனை தொடர்ந்து அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

    பின்னர் அனைவருக்கும் கல்யாண உபசரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை கம்பு நடுதல், அக்னி சட்டி ஊர்வலம் மற்றும் அம்மன் தேர் வீதி உலா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • இந்த பகுதியில் காலை மற்றும் மாலை வேளைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
    • காவலரை பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை மக்களிடம் எழுந்துள்ளது.

    கோத்தகிரி,

    கோத்தகிரி டானிங்டன் எம்ஜிஆர் சிலை சதுக்கம் பகுதியில் உள்ள சாலைகள் கோத்தகிரி நகரின் முக்கிய பகுதியாக உள்ளது.

    கோத்தகிரியின் முக்கிய சுற்றுலா தலமான கொடநாடு காட்சி முனையை பார்ப்பதற்காக சமவெளிப்பகுதியில் இருந்து சுற்றுலா பயணிகள் ஏராளமான வாகனங்களில் வருகின்றனர்.

    அவ்வாறு வரும் வாகனங்கள் அனைத்தும் டானிங்டன் எம்ஜிஆர் சதுக்கம் பகுதிக்கு வந்து, அதன் பின்னரே பிரிந்து செல்ல வேண்டும்.

    இதனால் இந்த பகுதியில் எப்போதும் மக்கள் கூட்டமும் வாகன நெரிசலும் காணப்படும். இதுபோக உள்ளூர் மக்கள் பணி முடிந்து பஸ்சுக்காக காலை மற்றும் மாலை வேளைகளில் அதிக அளவில் திரண்டு நிற்பார்கள்.

    இப்படி எப்போதும் பரபரப்பாகவும், வாக னங்கள் சென்று கொண்டி ருக்கும் இந்த சாலையின் அருகே டீக்கடை, மளிகை கடை, உணவகங்களும் உள்ளன.

    இந்த கடைகளுக்கு வரும் பொதுமக்கள் தங்கள் வாகனங்களையே சாலை யிலேயே நிறுத்திவிட்டு செல்கின்றனர்.

    மேலும் இப்பகுதியில் தேநீர் அருந்த வரும் உள்ளூர் வாசிகள் தங்களின் நான்குசக்கர வாகனங்களை மணிக்கணக்கில் சாலையில் நிறுத்திவிட்டு வாகனத்தி னுள் அமர்ந்து தேநீர் அருந்திக்கொண்டு இருப் பர்.

    இதனால் இந்த பகுதியில் காலை மற்றும் மாலை வேளைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    சில சமயம் பஸ் நிறுத்த இடமில்லாமல் சாலையின் நடுவிலேயே நிற்பதால் பின்னால் வரும் வாக னங்கள் ஒலி எழுப் பிக்கொண்டே இருக்கும். அப்போது பெண்கள் குழந்தைகள் பஸ்சில் ஏறுவதற்கு முன்பாகவே பஸ் நகர்ந்து விடும்.

    அந்த சமயங்களில் அவர்கள் கீழே விழுந்து விபத்தில் சிக்கும் அவல நிலையும் காணப்படுகிறது. இதுகுறித்து பல முறை சமூக ஆர்வலர்கள் கோத்த கிரி போக்குவரத்து போலீ சாருக்கு தகவல் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது. எனவே இனியாவது சம்மந்தப்பட்ட போக்கு வரத்து போலீசார் இந்த பகுதியில் நிரந்தரமாக ஒரு காவலரை பணியில் ஈடுப டுத்த வேண்டும் என்ற கோரிக்கை மக்களிடம் எழுந்துள்ளது.

    • 2 பேர் அமர்ந்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருந்தனர்.
    • திருடிய நகைகளை பங்கு போடும்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

    ஊட்டி

    நீலகிரி மாவட்டம் ஊட்டி நகர தி.மு.க. அலுவலகம் செல்லும் சாலையில் 2 பேர் அமர்ந்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருந்தனர். ஒரு கட்டத்தில் தகராறாக மாறியது.

    அப்போது அங்கு வந்த சிலர் சந்தேகத்தின் பேரில் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது மது போதையில் இருந்த அவர்கள் நிலை தடுமாறியவாறு முன்னுக்குப் பின் முரணாக பேசினர். மேலும் அவர்களிடம் நகை இருந்தது.

    இதுகுறித்து ஊட்டி மத்திய போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் கனகராஜ், சுசீந்திரன், சிவகுமார் ஆகியோர் தலைமையான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    இதில் அவர்கள் மிஷனரி ஹில் பகுதியை சேர்ந்த கண்ணன்(50), உட்லான்ஸ் குப்பத்தை சேர்ந்த மோகன் (57) என்பதும், இவர்கள் கீழ் தலையாட்டுமந்துவை சேர்ந்த வருவாய் துறை அலுவலரான திம்மையா என்பவர் வீட்டில் 5 பவுன் நகை திருடியதும் தெரியவந்தது.

    மேலும் திருடிய நகைகளை பங்கு போடும்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதால் சிக்கிக் கொண்டதும் தெரியவந்தது.

    இதைத் தொடர்ந்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து 5 பவுன் நகையை மீட்டனர்.

    5 பவுன் நகை திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட கண்ணன் மீது, ஊட்டி மத்திய போலீஸ் நிலையம் உள்பட பல்வேறு இடங்களில் ஏற்கனவே திருட்டு, அடிதடி, வழிப்பறி உள்ளிட்ட 33 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதற்காக கைது செய்யப்பட்டு பலமுறை சிறைக்கு சென்றுள்ளார். மேலும் கடைசியாக குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு, ஒரு வருட சிறை தண்டனை முடிந்து மீண்டும் வெளியில் வந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    ×