search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223314"

    • அச்சன்புதூர் செவகாட்டு பகுதியில் செய்யது முகமதுவின் தேங்காய் நார் தொழிற்சாலை உள்ளது.
    • நேற்று இரவு திடீரென தேங்காய் நார் தொழிற்சாலை தீப்பிடித்து எரிந்தது.

    கடையநல்லூர்:

    தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே அச்சன்புதூர் செவகாட்டு பகுதியில் அச்சன்புதூரை சேர்ந்த செய்யது முகமது என்பவருக்கு சொந்தமான தேங்காய் நார் தொழிற் சாலை உள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் வேலை செய்கின்றனர்.

    இப்பகுதியில் உள்ள விவசாயிகளிடம் இருந்து தேங்காய் வாங்கி அதன் கூந்தல் நார்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. நேற்று இரவு 10 மணி அளவில் திடீரென தேங்காய் நார் தொழிற்சாலை தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்து உடனே சம்பவ இடத்திற்கு கடையநல்லூர், செங்கோட்டை, சுரண்டை ஆகிய பகுதியில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் விவசாயிகள் அருகில் உள்ள தோட்டங்களில் இருந்து டேங்கர் லாரிகளில் தண்ணீரை கொண்டு வந்து தீயை அணைக்க உதவினர். தேங்காய் நார் தொழிற்சாலைகளில் உள்ள எந்திரங்கள், தேங்காய் நார் தும்பைகள் அனைத்தும் சேதமடைந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.75 லட்சம் ஆகும் என கூறப்படுகிறது. 

    • சவுந்தரராஜன் தனது வீட்டின் சுற்றுபுறம் தென்னந் தட்டிகளால் வேலி அமைத்துள்ளார்.
    • தீ மளமளவென பரவி தென்னந்தட்டிகள் முழுவதும் எரிந்து சாம்பலாயின.

    கடையம்:

    கடையம் அருகே உள்ள மேட்டூர் தெற்கு தெரு பகுதியை சேர்ந்தவர் சவுந்தரராஜன் (வயது53). பாத்திர வியாபாரி. இவரின் வீட்டின் சுற்றுபுறம் தென்னந் தட்டிகளால் வேலி அமைத்துள்ளார்.

    இந்நிலையில் நள்ளிரவில் மர்ம நபர்கள் சிலர், தென்னந்தட்டிகள் மீது தீ வைத்து விட்டு சென்றுள்ளனர். இதில் தீ மளமளவென பரவி தட்டிகள் முழுவதும் எரிந்து சாம்பலாயின. தட்டிகள் முழுவதும் எரிந்து சாம்பலாகி கிடப்பதை கண்ட சவுந்த ரராஜன் அதிர்ச்சியடைந்தார். இது குறித்து அவர் கடையம் போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். முன்விரோதம் காரணமாக இச்சம்பவம் நடந்ததா? அல்லது வேறு காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தரம் பிரிக்கும் குப்பைகளை சாக்கு மூட்டைகளில் கட்டி வைப்பது வழக்கம்.
    • இரவு 1 மணி வரை போராடி தீயனைப்பு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து தீயை அணைத்தனர்.

    கன்னியாகுமரி:

    குலசேகரம் அருகே திற்பரப்பு பேரூராட்சிக்குட்பட்ட திருநந்திக்கரையில் சந்தை ஒன்று செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியில் திற்பரப்பு பேரூராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை சேகரித்து இந்த பகுதியில் கொட்டி வைத்து பிளாஸ்டிக் குப்பை, மக்கும் குப்பை மக்காத குப்பை என்று தரம் பிரித்து எடுத்து செல்கிறார்கள்.

    தினமும் தரம் பிரிக்கும் குப்பைகளை சாக்கு மூட்டைகளில் கட்டி வைப்பது வழக்கம். இந்த பகுதியில் வேறு கடைகள் எதுவும் இல்லை. இதனால் குப்பைகள் மட்டும் ஒரு பகுதியில் சேகரிக்கப்பட்டு வந்தனர். நேற்று இரவு அந்த பகுதியில் இருந்து திடீரென தீ மளமளவென எரிந்தது. உடனே அந்த பகுதியில் உள்ளவர்கள் திற்பரப்பு பேரூராட்சி தலைவர் பொன்.ரவி, துணை தலைவர் ஸ்டாலின்தாஸ் ஆகி யோர்களுக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் இது குறித்து குலசேகரம் தீய ணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீர் பீய்த்து அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இரவு 1 மணி வரை போராடி தீயனைப்பு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து தீயை அணைத்தனர்.

    குலசேகரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீ எவ்வாறு பரவியது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அந்த பகுதியில் உள்ள கன்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

    • தீ விபத்து நடந்த நிறுவனம் அருகே தனியார் வங்கி, தனியார் நிதி நிறுவனம் உட்பட ஏராளமான நிறுவனங்கள் செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
    • ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு அடுத்த திண்டல் வேலன் நகரை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (40). இவர் ஈரோடு மேட்டூர் ரோட்டில் சொந்தமாக பிளக்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் விலை உயர்ந்த பிரிண்டிங் மிஷின்கள், கம்ப்யூட்டர்கள் உள்ளன.

    நேற்று இரவு வழக்கம் போல் பணி முடிந்ததும் ஊழியர்கள் நிறுவனத்தை பூட்டி விட்டு சென்று விட்டனர். இந்நிலையில் இன்று அதிகாலை நிறுவனத்திலிருந்து புகை வெளியேறியது. பின்னர் சிறிது நேரத்தில் தீ மளமளவென பிடித்தது.

    இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து உரிமையாளர் சுரேஷ்குமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அவர் இது குறித்து ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். சுமார் 30 நிமிடம் போராடி தீயை அணைத்தனர்.

    எனினும் இந்த விபத்தில் ரூ.15 லட்சம் மதிப்பிலான சி.என்.சி. மெஷின், அதிநவீன பிரின்டிங் மிஷின், ஏ.சி, கம்ப்யூட்டர் உள்ளிட்ட சாதனங்கள் எரிந்து சேதம் அடைந்தன. நல்ல வாய்ப்பாக அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. அதே நேரம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து உரிய நேரத்தில் தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    தீ விபத்து நடந்த நிறுவனம் அருகே தனியார் வங்கி, தனியார் நிதி நிறுவனம் உட்பட ஏராளமான நிறுவனங்கள் செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. மின் கசிவு காரணமாக தீ விபத்து நடந்ததா என தெரிய வில்லை. இது குறித்து ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அடிமர பகுதி தீயினால் சேதம்
    • தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்

    புதுக்கோட்டை,

    விராலிமலை தாலுகா காளப்பனூர் கிராமத்தில் ஆலங்குளம் ஆலடியான் கோவில் உள்ளது. கோவிலின் ஒரு பகுதியில் பழமைவாய்ந்த ஆலமரம் உள்ளது. இந்நிலையில் நேற்று காலை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அவ்வழியாக சென்றபோது மரத்தின் அடிப்பகுதியில் புகையுடன் தீப்பிடித்து எரிந்ததை பார்த்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் இலுப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இலுப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் மகேந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் ஆலமரத்தின் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். பழமைவாய்ந்த ஆலமரத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • 5 ஏக்கர் வயலில் அறுவடை செய்த வைக்கோல் கட்டுகளை தனது வீட்டு அருகில் வைத்திருந்தார்.
    • வைக்கோல் கட்டுகள் திடீரென்று தீப்பற்றி எரிந்தது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே உள்ள பெருகவாழ்ந்தான் வேளாண் தெருவில் வசிப்பவர் கிருஷ்ணமூர்த்தி. விவசாயி.

    இவர் தனது 5 ஏக்கர் வயலில் அறுவடை செய்த வைக்கோல் கட்டுகளை தனது வீட்டு அருகில் வைத்திருந்தார்.

    நேற்று காலை இந்த வைக்கோல் கட்டுகள் திடீரென்று தீப்பற்றி எரிந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்த முத்துப்பேட்டை தீயணைப்பு படை வீரர்கள் அங்கு விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் அணைத்தனர்.

    இதில் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள வைக்கோல்கள் முற்றிலும் எரிந்து சாம்பலானது.

    இது குறித்து பெருகவாழ்ந்தான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • காரின் முன்பாகம் முழுவதுமாக எரிந்தது.
    • தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

     உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த புதுப்பாளையத்தை சேர்ந்தவர் மனிகண்டன். இவரது மனைவிக்கு பிரசவசவலி ஏற்படவே உறவினரின் காரில் உடுமலை அரசு மருத்துவமனைக்கு அழைத்துவந்துள்ளார்.

    அரசு மருத்துவமனை வாயிலில் வரும்போது காரிலிருந்து லேசாக புகைவர அவசரமாக மனைவி கவிதா மற்றும் அவரது உறவினர்களுடன் இறங்கிய மணிகண்டன் அவர்களை உள்ளே செல்ல சொல்லிவிட்டு காரின் அருகே வருவதற்குள் காரில் தீ பற்றி மளமளவென எரிந்தது. இதில் காரின் முன்பாகம் முழுவதுமாக எரிந்தது. தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். 

    • தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்
    • லாரியில் இருந்து குதித்து டிரைவர் உயிர் தப்பினார்

    திருச்சி,

    திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே சி.ஆர். பாளையத்தைச் சேர்ந்தவர் பாரதிதாசன். இவர் திருச்சியில் இருந்து சி.ஆர். பாளையம் செல்வதற்காக தனது லாரியில் கரியமாணிக்கம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது லாரியின் டீசல் டேங்கில் ஏற்பட்ட கசிவினால் திடீரென லாரி தீப்பிடித்து எரிந்தது.தீ விபத்து ஏற்பட்டவுடன் டிரைவர் பாரதிதாசன் லாரி இருந்து குதித்து உயிர்த் தப்பினார். இதுகுறித்து ஸ்ரீரங்கம் மற்றும் சமயபுரம் தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் வந்தனர். சமயபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துக்குமார், ஸ்ரீரங்கம் தீயணைப்பு நிலைய அலுவலர் கணேசன் தலைமையில் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்தில் லாரி பலத்த சேதம் அடைந்தது.சமயபுரம் போலீசார் இது குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது
    • போலீசார் வழக்கு பதிந்து விசாரணை

    பெரம்பலூர்,

    செட்டிகுளம் அருகே உள்ள புதுவிராலிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணுசாமி (வயது 62). இவர் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் கிராமத்தில் பேன்சி கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு அருகே அப்பகுதியை சேர்ந்த விஜய் ஆனந்த்(33) பேன்சி கடை வைத்துள்ளார். கடந்த ஒரு வாரமாக கண்ணுசாமிக்கு உடல்நிலை சரியில்லாததால் கடையை திறக்காமல் இருந்தார். இந்நிலையில் அவரது கடையில் திடீரென வயரில் ஏற்பட்ட மின் கசிவால் தீப்பற்றி எரிந்தது. இதில் பேனா, பென்சில், நோட்டு புத்தகங்கள், அழகு சாதன பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் எரிந்து நாசமானது. மேலும் அருகே உள்ள விஜய் ஆனந்த் கடைக்கும் தீ பரவியது. இதனைக் கண்ட அருகில் இருந்த பொதுமக்கள் தீயை அணைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • சுமார் ரூ.1 லட்சம் மதிப்பிலான வைக்கோல் கட்டுகள் எரிந்து நாசம்.
    • தீயணைப்பு துறையினர் தீ மேலும் பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    சீர்காழி:

    சீர்காழி கடலோர கிராமங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

    இதன் காரணமாக நெப்பத்தூர் கிராமத்தில் லலிதா என்பவரது பழைய ஓட்டு வீட்டில் வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.1 லட்சம் மதிப்பிலான வைக்கோல் கட்டுகள் எரிந்து சேதமானது மேலும் ஓட்டு கட்டிடத்தில் உள்ள கோடுகள் சேதம் ஆகி உள்ளது.

    தகவல் அறிந்த சீர்காழி மற்றும் மேலையூர் பகுதிகளில் இருந்து தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் அனைத்தனர்.

    இதுகுறித்து திருவெண்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    • பழுது பார்ப்பதற்காக திருப்பூரில் உள்ள ஒர்க்ஷாப்பில் நிறுத்தி இருந்தார்.
    • அவிநாசிபாளையம் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென காரின் முன் பகுதியில் இருந்து கரும்புகை கிளம்பியது.

     திருப்பூர் :

    மதுரையை சேர்ந்தவர் தேவேந்திரன் (வயது 30). இவர் கார் ஒன்றை வாங்கி அதனை பழுது பார்ப்ப தற்காக திருப்பூரில் உள்ள ஒர்க் ஷாப்பில் நிறுத்தி இருந்தார். இந்த நிலையில் நேற்று இரவு காரின் வேலை முடிந்து காரை எடுத்துக் கொண்டு மதுரைக்கு கொண்டு சென்றார்.

    திருப்பூர் அடுத்த அவிநாசி பாளையம் அருகே சென்று கொண்டி ருந்தபோது திடீரென காரின் முன் பகுதியில் இருந்து கரும்புகை கிளம்பி யது. இதனைப்பார்த்து சுதாரித்து கொண்ட தேவேந்திரன் உடனடியாக காரில் இருந்து இறங்கினார்.சிறிது நேரத்தில் கார் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக அருகில் உள்ள தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.இருந்த போதிலும் கார் முழுவதும் எரிந்து நாசமானது.இது தொடர்பாக அவிநாசிபா ளையம் போலீசார் வழக்குப்ப திவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பழ கிட்டங்கியில் தீ விபத்து ஏற்பட்டது.
    • மின் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே நம்புதாளையில் கிழக்கு கடற்கரை சாலையில் பன்னீர் என்பவருடைய பழக்கடை கிட்டங்கி உள்ளது. அங்கு நேற்று திடீரென தீப்பற்றி மளமளவென கொளுந்துவிட்டு எரியத்தொடங்கியது. இதில் பழம் அடுக்கி வைத்திருந்த பிளாஸ்டிக் கூடைகள் எரிந்து சாம்பலாயின. அருகில் டிராஸ்பார்மர் இருந்ததால் பெரும் விபத்தை தவிர்க்கும் வகையில் மின் இணைப்பு துண்டிக்கபபட்டது.

    மஞ்சள் கரச்சான் ஊரணியில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து பொதுமக்கள் தீயை அணைத்தனர். திருவாடானையில் இருந்து தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டனர். மின் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

    ×