search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223339"

    • வாரத்தில் 2 முறையாவது கம்பை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
    • சர்க்கரை நோயாளிக்கு கம்பு ஒரு வரப்பிரசாதம் ஆகும்.

    தேவையான பொருட்கள்:

    கம்பு - ஒரு கப்,

    வெங்காயம் - 3,

    பச்சை மிளகாய் - 6,

    கடுகு - அரை ஸ்பூன்,

    உளுத்தம்பருப்பு - ஒரு ஸ்பூன்,

    கடலைப்பருப்பு - ஒரு ஸ்பூன்,

    உப்பு - ஒன்றரை ஸ்பூன்,

    கறிவேப்பிலை - ஒரு கொத்து,

    கொத்தமல்லித்தழை - ஒரு கொத்து,

    எண்ணெய் - 6 ஸ்பூன்.

    செய்முறை:

    * கம்பை மிக்ஸியில் சேர்த்து ரவை பதத்திற்கு அரைக்க வேண்டும். பிறகு அதை சலித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

    * ஒரு கடாயை அடுப்பில் வைத்து, கடாய் சூடானதும் சலித்து வைத்த கம்பு மாவை சேர்த்து மிதமான தீயில் வறுத்து கொள்ள வேண்டும்.

    * வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

    * மறுபடியும் கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

    * வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் ஒரு கப் கம்பிற்கு இரண்டு கப் தண்ணீர் என தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

    * தண்ணீர் நன்றாக கொதித்ததும் வறுத்து வைத்துள்ள கம்பு, உப்பு சேர்த்து கலந்து விட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து மூடி போட்டு வேக விட வேண்டும்.

    * கம்பு வெந்ததும் இறுதியாக கொத்தமல்லி தழை சேர்த்து கலந்து விட்டு இறக்கி பரிமாறவும்.

    * இப்போது சூப்பரான கம்பு உப்புமா ரெடி.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • சர்க்கரை நோயாளிகளுக்கு கோதுமை ரவை உகந்தது.
    • டயட்டில் இருப்பவர்கள் கோதுமை ரவை உணவுகளை எடுத்துகொள்ளலாம்.

    தேவையான பொருட்கள் :

    கோதுமை ரவை - 1 கப்

    பெரிய வெங்காயம் - 1

    தக்காளி - 1

    வரமிளகாய் - 2

    இஞ்சி - சிறிது

    தேங்காய் துருவல் - அரை கப்

    கடலைப்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்

    உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்

    கடுகு - 1/2 டீஸ்பூன்

    பெருங்காயத்தூள் - சிறிது

    கறிவேப்பிலை - சிறிது

    எண்ணெய் - தேவையான அளவு

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை :

    * வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * கோதுமை ரவையை வெறும் கடாயில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து கொள்ளவும்.

    * இஞ்சியை தட்டி வைத்து கொள்ளவும்.

    * வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, கடலைப்பருப்பு, வரமிளகாய், தட்டி வைத்த இஞ்சியை போட்டு தாளித்த பின் அதில் பொருங்காயத்தூளை தூவி, ஒரு முறை கிளற வேண்டும்.

    * அடுத்து அதில் வெங்காயம் மற்றும் தக்காளியை போட்டு நன்கு வதக்கவும்.

    * வெங்காயம், தக்காளி நன்றாக வதங்கியதும் பின்னர் அதில் ஒரு 1 1/2 கப் தண்ணீரை ஊற்றி உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.

    * தண்ணீர் கொதித்ததும், அதில் வறுத்த கோதுமை ரவை, தேங்காய் துருவல் சேர்த்து, நன்றாக கிளறி சிறிது நேரம் மூடி போட்டு மூடி அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்.

    * பின் மூடியை திறந்து ரவை அடி பிடிக்காமல், தண்ணீர் சுண்டும் வரை நன்கு கிளறி இறக்கிவிட வேண்டும்.

    * இப்போது சுவையான கோதுமை ரவை உப்புமா ரெடி!!!

    * இதனை தேங்காய் சட்னியுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • ரவை உப்புமாவா என்று முகம் சுளிப்பவர்கள் கூட இந்த உப்புமாவை விரும்பி சாப்பிடுவார்கள்.
    • சத்துக்கள் நிறைந்த இந்த உப்புமாவை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

    அரிசி நொய் தயாரிக்க:

    பச்சரிசி – 1 கிலோ

    துவரம்பருப்பு- கால் கிலோ

    மிளகு, சீரகம்- தலா 10 கிராம்

    பெருங்காயம் கட்டி- சிறிய கோலி அளவு.

    செய்முறை:

    பச்சரிசியைச் சுத்தம் செய்து நன்றாக கழுவி ஈரம் போக வெயிலில் காயவைக்கவும். துவரம் பருப்பையும் சுத்தம் செய்து கழுவி காய வைக்கவும். நன்றாகக் காய்ந்ததும் இரண்டையும் கலந்து மிளகு, சீரகம், பெருங்காயம் சேர்த்து மிஷினில் நொய்யாக உடைத்து வைத்துக் கொள்ளவும். ஆறு மாதங்கள் வரை இந்த அரிசி நொய் கெடாமல் இருக்கும்.

    தேவையான பொருள்கள்:

    நொய் அரிசி - 1 கப்,

    தாளிக்க:

    கடுகு- 1 டீஸ்பூன்,

    உ.பருப்பு, க.பருப்பு – 1 தேக்கரண்டி,

    வெந்தயம், சீரகம்- தலா 3 டீஸ்பூன்

    வரமிளகாய் -2 பெருங்காயம்,

    நல்லெண்ணெய், கறிவேப்பிலை - தேவையான அளவு.

    செய்முறை:

    வாணலியில் நல்லெண்ணெய்விட்டு கடுகு சேர்த்து பொரிந்ததும், உ.பருப்பு, க.பருப்பு, சீரகம், வரமிளகாய், வெந்தயம் போட்டு தாளித்த பின்னர் ஒருகப் அரிசி நொய்க்கு ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

    தண்ணீர் கொதித்ததும் நொய் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து மூடி போட்டு இருபது நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைக்கவும்.

    இப்போது சூப்பரான நொய் அரிசி உப்புமா ரெடி.

    • காலையில் வித்தியாசமான டிபன் செய்ய விரும்பினால் இதை செய்யலாம்.
    • குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் பிடிக்கும்.

    தேவையான பொருட்கள்:

    பிரெட் - 3 துண்டுகள்,

    முட்டை - 1,

    பெரிய வெங்காயம் - 1

    மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்,

    உப்பு - தேவையான அளவு.

    தாளிப்பதற்கு:

    கடுகு - 1/2 டீஸ்பூன்,

    உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்,

    சீரகம் - 1/4 டீஸ்பூன்,

    பச்சை மிளகாய் - 1 ,

    பெருங்காயத் தூள் - சிட்டிகை,

    கறிவேப்பிலை - சிறிது,

    எண்ணெய் - தேவையான அளவு.

    செய்முறை:

    வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பிரெட்டை துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்த பின்பு அதில் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் அதில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கிளறி, அத்துடன் உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

    முட்டை உதிரியாக வந்ததும் அதில் பிரெட் துண்டுகளை சேர்த்து 2 நிமிடம் நன்கு டோஸ்ட் செய்து இறக்கினால், பிரெட் முட்டை மசாலா ரெடி!!!

    • காலையில் செய்த அடை மீந்து விட்டால் கவலைப்படாதீங்க.
    • மீந்த அடையை வைத்து சூப்பரான உப்புமா செய்யலாம்.

    தேவையான பொருட்கள் :

    அடை - 3

    வெங்காயம் - 1

    எண்ணெய் - தேவையான அளவு

    கடுகு - கால் டீஸ்பூன்

    கறிவேப்பிலை - சிறிதளவு

    மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்

    புளி கரைச்சல் - ஒரு டீஸ்பூன்

    தேங்காய் துருவல் - இரண்டு டீஸ்பூன்

    கொத்தமல்லி - சிறிதளவு

    உப்பு - தேவைகேற்ப

    செய்முறை:

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அடையை நன்றாக உதிர்த்து கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேபில்லை சேர்த்து தாளிக்கவும்.

    பிறகு, வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் மிளகாய் தூள், புளி கரைச்சல், உப்பு சிறிதளவு, உதிர்த்த அடை சேர்த்து நன்றாக கலக்கவும்.

    கலவை உதிரியாக வந்ததும் தேங்காய் துருவல், கொத்தமல்லி தூவி கிளறி சூடாக பரிமாறவும்.

    சூப்பரான அடை உப்புமா ரெடி.

    • உப்புமா என்றாலே சிலருக்கு முகம் சுருங்கிவிடும்.
    • இட்லி உப்புமாவை செய்து கொடுங்க மிச்சமின்றி கடாய் காலியாகும்.

    தேவையான பொருட்கள் :

    இட்லி - 7

    நல்லெண்ணெய் - 4 டீஸ்பூன்

    கடுகு - அரை டீஸ்பூன்

    உளுந்து - 1 டீஸ்பூன்

    கடலை பருப்பு - 1/2 டீஸ்பூன்

    ப.மிளகாய் - 3

    வேர்க்கடலை - சிறிதளவு

    முந்திரி - 10

    சின்ன வெங்காயம் - 50 கிராம்

    கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை - சிறிதளவு

    சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்

    மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை :

    இட்லியை நன்கு உதிரி உதிரியாக உதிர்த்து வைக்கவும்.

    வெங்காயம், கொத்தமல்லி தழை, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாய் அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு போட்டு தாளித்த பின்னர் வேர்க்கடலை, முந்திரி சேர்த்து பொன்னிறமாக மாறியதும் நறுக்கிய சின்ன வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து வதக்குங்கள்.

    வெங்காயம் நன்கு வதங்கிய பிறகு சாம்பார் பொடி மற்றும் மிளகுப்பொடி சேர்த்து பச்சை வாசனை போக வதக்குங்கள்.

    அடுத்து அதில் உதிர்த்து வைத்திருக்கும் இட்லியை சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து உதிரி உதிரியாக வரும் வரை கிளறவும்.

    உதிரியாக வந்தவுடன் கடைசியாக கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்துவிடுங்கள்.

    அவ்வளவுதான் இட்லி உப்புமா ரெடி... சுட சுட பரிமாறுங்கள்.

    • உப்புமா இந்தியா முழுவதும் செய்யப்படும் ஒரு பிரபலமான உணவு.
    • உப்புமாவில் பல வகைகள் உண்டு.

    தேவையான பொருட்கள்:

    சேமியா - 1 பாக்கெட்

    வெங்காயம் - 1

    இஞ்சி - 1 இன்ச்

    பச்சை மிளகாய் - 1

    நெய் - 1 டீஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    தாளிப்பதற்கு...

    எண்ணெய் - 3-4 டீஸ்பூன்

    கடுகு - 1 டீஸ்பூன்

    உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்

    பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை

    வரமிளகாய் - 2

    கறிவேப்பிலை - சிறிது

    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை:

    வெங்காயம், ப.மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், சேமியாவைப் போட்டு பொன்னிறமாக வறுத்து, தட்டில் கொட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக போட்டு தாளித்த பின்னர் இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.

    பிறகு அதில் வெங்காயத்தைப் போட்டு, சிறிது உப்பு தூவி நன்கு பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.

    அடுத்து அதில் 1 கப் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு தூவி, தண்ணீரை கொதிக்க விட வேண்டும்.

    தண்ணீர் நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் வறுத்து வைத்துள்ள சேமியாவை சேர்த்து கிளறி, மூடி வைத்து, வேக வைக்க வேண்டும்.

    தண்ணீரானது வற்றி, சேமியா மென்மையாக வெந்த பின், அதனை இறக்கி பரிமாறினால், சேமியா உப்புமா ரெடி!!!

    • காலையில் செய்ய தோசை மீந்து விட்டால் மாலையில் இந்த ரெசிபியை செய்யலாம்.
    • 10 நிமிடத்தில் இந்த ரெசிபியை செய்து விடலாம். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

    தேவையான பொருட்கள்

    கல் தோசை - 4

    வெங்காயம் - 1

    தக்காளி - 1

    கறிவேப்பிலை - தேவைக்கு

    மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்

    தனி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

    கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்

    ப.மிளகாய் - 3

    கொத்தமல்லி - தேவைக்கு

    உப்பு - சுவைக்கு

    எண்ணெய் - 2 டீஸ்பூன்

    தாளிக்க

    கடுகு, உளுந்தம் பருப்பு - தலா 1 டீஸ்பூன்

    செய்முறை

    கல் தோசையை சிறிய துண்டுகளாக பிய்ந்து வைக்கவும்.

    தக்காளி, வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் ப.மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.

    அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

    அனைத்தும் நன்றாக வதங்கியதும் பிய்ந்து வைத்துள்ள தோசையை சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து கிளறவும்.

    மசாலாவுடன் தோசை நன்றாக சேர்ந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.

    இப்போது சூப்பரான தோசை உப்புமா ரெடி.

    • அவல் உடல் சூட்டை தணித்து நல்ல புத்துணர்ச்சியை தருகிறது.
    • நீரிழிவு நோயாளிகள் பசிக்கும்போது கொஞ்சம் அவலை வாயில் போட்டு மென்று சாப்பிடலாம்.

    தேவையான பொருட்கள்:

    அவல் - முக்கால் ஆழாக்கு

    காய்ந்த மிளகாய் - 2

    தேங்காய்த் துருவல் - 3 ஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    உளுத்தம் பருப்பு - அரை ஸ்பூன்

    கடுகு - கால் ஸ்பூன்

    பெரிய வெங்காயம் - 1

    முந்திரிப் பருப்பு - 4 உடைத்தது

    செய்முறை

    வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அவலை நன்றாகத் தண்ணீரில் களைந்து, ஒரு பாத்திரத்தில் நீர் விட்டு சில மணி நேரம் ஊறவைக்கவும். பின் நீரை ஒட்ட வடித்து விட வேண்டும்.

    வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு உளுத்தம் பருப்பு, கடுகு, மிளகாய் உடைத்த முந்திரி இவற்றைப் போட்டு வறுத்து பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    அடுத்து ஊற வைத்த அவலையும் போட்டு உப்பு சேர்த்து நன்றாகக் கிளறவும்.

    பின்னர் துருவிய தேங்காயையும் சேர்க்கவும்.

    இப்போது சுவையான அவல் உப்புமா ரெடி.

    இந்த உப்புமாவை சர்க்கரையுடனோ அல்லது சட்னியுடனோ உண்டால் சுவை மிகுதியாக இருக்கும்.

    ×