search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரியல்மி"

    • ரியல்மி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடல் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
    • இந்த ஸ்மார்ட்வாட்ச் மெட்டல் பாடி கொண்டிருக்கிறது.

    ரியல்மி 9i 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீட்டை தொடர்ந்து வாட்ச் 3 ப்ரோ ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்வதாக ரியல்மி அறிவித்து இருக்கிறது. இது கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ரியல்மி வாட்ச் 2 ப்ரோ மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். புதிய ரியல்மி வாட்ச் 3 ப்ரோ வெளியீட்டை உணர்த்தும் டீசர்களின் படி, இந்த மாடல் மெட்டல் பாடி வலது புறத்தில் ஒற்றை பட்டன் கொண்டு இருக்கும் என தெரியவந்துள்ளது.

    பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்வாட்ச் மாடல் என்ற வகையில், இதில் பெரிய AMOLED டிஸ்ப்ளே, ஜிபிஎஸ் மற்றும் ப்ளூடூத் மூலம் வாய்ஸ் காலிங் வசதி உள்ளிட்டவை வழங்கப்படலாம். முந்தைய வாட்ச் 2 ப்ரோ மாடலில் எல்சிடி ஸ்கிரீன் மட்டுமே வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.


    இந்தியாவில் ரியல்மி வாட்ச் 2 ப்ரோ விலை ரூ. 4 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் புதிய ரியல்மி வாட்ச் 3 ப்ரோ மாடலின் விலை சற்று அதிகமாகவே நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது. இதன் விற்பனை ரியல்மி மட்டுமின்றி ப்ளிப்கார்ட் வலைதளத்திலும் நடைபெற இருக்கிறது.

    வாட்ச் 3 ப்ரோ வெளியீட்டு தேதியை ரியல்மி இதுவரை அறிவிக்கவில்லை. எனினும், இந்த ஸ்மார்ட்போன் ரியல்மி 9i 5ஜி வெளியாகும் ஆகஸ்ட் 18 ஆம் தேதியே ரியல்மி வாட்ச் 3 ப்ரோ மாடலும் அறிமுகம் செய்யப்படலாம்.

    • ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் புது சாதனங்களை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
    • தற்போது 50 லட்சம் பேர் ரியல்மி 5ஜி சாதனங்களை பயன்படுத்தி வருகின்றனர்.

    ரியல்மி நிறுவனம் புதிய ரியல்மி 9i 5ஜி ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதை உறுதிப்படுத்தி இருக்கிறது. தற்போதைய தகவல்களின் படி ரியல்மி 9i 5ஜி மாடல் ஆகஸ்ட் 18 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. முன்னதாக இந்த ஆண்டு துவக்கத்தில் ரியல்மி 9i 4ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்து இருந்தது.


    ரியல்மி 7 சீரிஸ் மாடலில் மிரர் டிசைன், ரியல்மி 8 சீரிசில் டைனமிக் லைட் டிசைன், ரியல்மி 9 சீரிசில் ரிப்பில் ஹாலோகிராபிக் டிசைன் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த வரிசையில், ரியல்மி 9i 5ஜி மாடலில் லேசர் லைட் டிசைன் வழங்கப்பட இருக்கிறது. இதில் மீடியாடெக் டிமென்சிட்டி 810 பிராசஸர் வழங்கப்படுகிறது. ஏற்கனவே இதே பிராசஸர் கொண்டு ரியல்மி 9 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    புதிய 5ஜி போன் வெளியீட்டை உணர்த்தும் டீசரை ரியல்மி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருக்கிறது. அதன்படி ரியல்மி 9i 5ஜி போன் மூன்று கேமரா சென்சார்கள், பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்படும் என உறுதியாகி விட்டது. இத்துடன் FHD+ LCD ஸ்கிரீன், 5000 mAh பேட்டரி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • ரியல்மி நிறுவனத்தின் புதுவரவு ஸ்மார்ட்வாட்ச் மாடல் ரியல்மி வாட்ச் 3 பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.
    • இந்த மாடல் ரியல்மி பேட் X உடன் அறிமுகமானது.

    ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்த புது சாதனங்களில் ஒன்று ரியல்மி வாட்ச் 3. ரியல்மி AIoT நிகழ்வில் ரியல்மி பேட் X, ரியல்மி வாட்ச் 3, ரியல்மி மாணிட்டர் மற்றும் பல்வேறு சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. டேப்லெட் மற்றும் மாணிட்டர் மாடல்களின் விற்பனை ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ரியல்மி வாட்ச் 3 விற்பனை துவங்கி இருக்கிறது.

    இந்திய சந்தையில் புதிய ரியல்மி வாட்ச் 3 மாடலின் விலை ரூ. 3 ஆயிரத்து 499 ஆகும். எனினும், முதல் விற்பனையில் இந்த வாட்ச் ரூ. 2 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்பட்டது. விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் ரியல்மி இந்தியா வலைதளங்களில் நடைபெறுகிறது. விலை குறைப்பு மட்டும் இன்றி வங்கி சலுகைகள் மற்றும் கேஷ்பேக் உள்ளிட்டவையும் ரியல்மி வாட்ச் 3 மாடலுக்கு வழங்கப்படுகிறது.

    ரியல்மி வாட்ச் 3 அம்சங்கள்:

    ரியல்மி வாட்ச் 3 மாடலில் 1.8 இன்ச் 240x286 பிக்சல் TFT-LCD பேனல், டச் ஸ்கிரீன் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. தோற்றத்தில் இது சாதாரன டிசைன், செவ்வக வடிவமைப்பு, வலது புறம் பவர் பட்டன் கொண்டிருக்கிறது. இத்துடன் நூற்றுக்கும் அதிக வாட்ச் ஃபேஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றை ஆப் மூலம் கஸ்டமைஸ் செய்து கொள்ளும் வசதியும் வழங்கப்படுகிறது.

    இத்துடன் IP68 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதில் ப்ளூடூத் 5.3 கனெக்டிவிட்டி, ப்ளூடூத் காலிங் வசதி, ஏ.ஐ. சார்ந்த நாய்ஸ் கேன்சலிங் வசதி உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இத்துடன் SpO2 சென்சார், ஸ்டெப்ஸ் ரெக்கார்டர், இதய துடிப்பு சென்சார், ஸ்டிரெஸ் மாணிட்டர் மற்றும் ஸ்லீப் டிராக்கர் போன்ற அம்சங்கள் உள்ளன.

    ரியல்மி வாட்ச் 3 மாடல் 340 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இதனை முழு சார்ஜ் செய்தால் ஏழு நாட்களுக்கான பேட்டரி பேக்கப் கிடைக்கும். இது பயனர் செயல்பாடுகளை பொருத்து மாறுபடவும் வாய்ப்புகள் உண்டு. 

    • ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய புது ஸ்மார்ட்போன் மாடல்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • இந்த ஆண்டின் இரண்டாவது பாதியில் புது பிரிவுகளில் களமிறங்க ரியல்மி முடிவு செய்து இருக்கிறது.

    இந்திய சந்தையில் எதிர்கால திட்டம் பற்றிய தகவல்களை ரியல்மி இந்தியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார். அதன் படி இந்தியாவில் குறைந்தபட்சம் நான்கு புதிய சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. மேலும் நுகர்வோருக்காக புது பிரிவுகளில் களமிறங்கவும் ரியல்மி முடிவு செய்துள்ளது.

    ரூ. 15 ஆயிரம் விலை பிரிவில் புது ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். அந்த வகையில், ரூ. 10 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 15 ஆயிரம் விலை பிரிவில் புது 5ஜி ஸ்மார்ட்போன் கிடைக்கும். இந்திய சந்தையில் அடுத்த சில மாதங்களில் புதிய தலைமுறை கனெக்டிவிட்டி பயன்பாட்டுக்கு வர இருக்கிறது. இந்த நிலையில், இதை பயனர்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் குறைந்த விலை சாதனங்களை மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


    இது தவிர ரியல்மி 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம். தற்போதைய தகவல்களின் படி ரியல்மி 10 சீரிஸ் அக்டோபர் மாத வாக்கில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. இது பண்டிகை காலத்தை குறி வைத்து அறிமுகம் செய்யப்பட உள்ளது.

    ஸ்மார்ட்போன் மட்டுமின்றி நுகர்வோர் சாதனங்கள் சார்ந்து புதிதாக இரண்டு அல்லது மூன்று பிரிவுகளில் களமிறங்க ரியல்மி முடிவு செய்து இருக்கிறது. இது பற்றிய கூடுதல் விவரங்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும். சமீபத்தில் தான் ரியல்மி நிறுவனம் தனது முதலவ் மாணிட்டரை அறிமுகம் செய்து இருந்தது. இந்த மாணிட்டர் ரியல்மி ஃபிளாட் மாணிட்டர் FHD என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது.

    • ரியல்மி நிறுவனம் கடந்த வாரம் ரியல்மி பேட் X டேப்லெட் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.
    • ரியல்மி பேட் X மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ரியல்மி நிறுவனம் கடந்த வாரம் தனது புது டேப்லெட் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. ரியல்மி பேட் X என அழைக்கப்படும் புது டேப்லெட் ஆண்ட்ராய்டு 12 சார்ந்த ரியல்மி யுஐ 3.0 ஓ.எஸ். கொண்டுள்ளது. இது டேப்லெட் மாடல்களுக்கென ஆப்டிமைஸ் செய்யப்பட்டது ஆகும்.

    அறிமுகமாகி ஒரு வாரம் நிறைவுற்ற நிலையில், தற்போது இதன் விற்பனை துவங்கி இருக்கிறது. ரியல்மி பேட் X மாடல் ரியல்மி மற்றும் ப்ளிப்கார்ட் அதிகாரப்பூர்வ வலைதளங்கள் மற்றும் சில்லறை விற்பனை மையங்களில் கிடைக்கிறது. புதிய ரியல்மி பேட் X மாடல் கிளேசியர் புளூ மற்றும் குளோயிங் கிரே போன்ற நிறங்களில் கிடைக்கிறது.

    விலை விவரங்கள்:

    ரி்யல்மி பேட் X 4ஜிபி ரேம், 64ஜிபி மெமரி, வைபை மாடல் ரூ. 19 ஆயிரத்து 999

    ரி்யல்மி பேட் X 4ஜிபி ரேம், 64ஜிபி மெமரி, வைபை + 5ஜி மாடல் ரூ. 25 ஆயிரத்து 999

    ரி்யல்மி பேட் X 6ஜிபி ரேம், 128ஜிபி மெமரி, வைபை + 5ஜி மாடல் ரூ. 27 ஆயிரத்து 999


    புதிய ரியல்மி பேட் X மாடலை வாங்கும் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது ரூ. 2 ஆயிரம் வரை உடனடி தள்ளுபடி பெற முடியும். அறிமுக சலுகை ரியல்மி வலைதளம் மற்றும் ப்ளிப்கார்ட் இடையே வேறுபடும்.

    ரியல்மி பேட் X அம்சங்கள்:

    ரியல்மி பேட் X மாடலில் 10.95 இன்ச் எல்சிடி ஸ்கிரீன், 2000x1200 பிக்சல் ரெசல்யூஷன், 450 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் லெவல், ரியல்மி பென்சில் சப்போர்ட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர், ஆண்ட்ராய்டு 12 சார்ந்த ரியல்மி யுஐ 3.0, பிசி கனெக்ட், ஸ்ப்லிட் வியூ மற்றும் பல்வேறு வசதிகள் உள்ளன.

    இத்துடன் 13MP பிரைமரி கேமரா, 8MP செல்பி கேமரா, டால்பி அட்மோஸ் வசதி, குவாட் ஸ்பீக்கர் சப்போர்ட், டூயல் மைக்ரோபோன்கள், மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட், 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக் உள்ளது. கனெக்டிவிட்டிக்கு டூயல் பேண்ட் வைபை, ப்ளூடூத் 5.1, 5ஜி, யுஎஸ்பி டைப் சி, 8340 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

    • ரியல்மி பட்ஸ் ஏர் 3 நியோவில் 30 மணிநேரம் தாங்கக்கூடிய அளவு பேட்டரி பேக் அப் வழங்கப்பட்டு உள்ளது.
    • வெள்ளை மற்றும் ப்ளூ ஆகிய இரு நிறங்களில் இந்த இயர்பட்ஸ் விற்பனைக்கு வந்துள்ளது.

    ரியல்மி நிறுவனம் அதன் பட்ஸ் ஏர் 3 நியோ என்கிற இயர்பட்ஸை இந்தியாவில் நேற்று அறிமுகப்படுத்தியது. அந்த இயர்பட்ஸ் இன்று முதன் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. ஒரிஜினல் பட்ஸ் ஏர் 3 மாடலை போன்று இந்த புதிய நியோ மாடலும் ஸ்டெம் டிசைனை கொண்டுள்ளது. பட்ஸ் ஏர் 2 நியோவில் உள்ளது போல் இதில் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேசன் வசதி இல்லை.

    அதற்கு பதிலாக டால்பி அட்மாஸ் 3டி சவுண்ட் மற்றும் 30 மணிநேரம் தாங்கக்கூடிய அளவு பேட்டரி பேக் அப் வழங்கப்பட்டு உள்ளது. இதன் கடந்த வெர்ஷனான பட்ஸ் ஏர் 2 நியோவில் 28 மணிநேரம் தாங்கக்கூடிய அளவு பேட்டரி பேக் அப் மட்டுமே வழங்கப்பட்டு இருந்தது. இதில் 10 எம்.எம் டிரைவர்களும் இடம்பெற்று உள்ளன.


    இதில் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேசன் இடம்பெறாவிட்டாலும் என்விராண்மெண்ட் நாய்ஸ் கேன்சலேசன் எனப்படும் ENC இடம்பெற்று உள்ளது. டச் கண்ட்ரோல், ப்ளூடூத் 5.2, யு.எஸ்.பி டைப் சி போர்ட் போன்ற அம்சங்களும் இதில் உள்ளன. வெள்ளை மற்றும் ப்ளூ ஆகிய இரு நிறங்களில் விற்பனைக்கு வந்துள்ள இந்த இயர்பட்ஸின் விலை ரூ.1,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஆனால் அறிமுக சலுகையுடன் ரூ.1,699க்கு இந்த இயர்பட்ஸ் தற்போது ப்ளிப்கார்ட் மற்றும் ரியல்மி ஆன்லைன் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது.

    • ரியல்மி வாட்ச் 3 வாட்டர் மற்றும் டஸ்ட் புரூஃபுக்கான IP68 தரச் சான்று பெற்றுள்ளது.
    • கிரே மற்றும் பிளாக் ஆகிய இரு நிறங்களில் வரும் இந்த ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் ஆகி உள்ளது.

    ரியல்மி நிறுவனம் அதன் புதிய ஸ்மார்ட்வாட்சை இந்தியாவில் இன்று அறிமுகப்படுத்தி உள்ளது. ரியல்மி வாட்ச் 3 என பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்வாட்ச் பெரிய அளவிலான டிஸ்ப்ளேவை கொண்டதாகும். இதன் அளவு 1.8 இன்ச் ஆகும். சதுர வடிவிலான டிஸ்ப்ளே உள்ள இந்த ஸ்மார்ட்வாட்சில் கர்வுடு எட்ஜ்களை கொண்டுள்ளன. அதிகபட்சம் 500 நிட்ஸ் பிரைட்னஸும் இதில் வழங்கப்படுகிறது.

    இது 67.5 சதவீதம் ஸ்கிரீன் டூ பாடி ரேசியோவை கொண்டுள்ளது. இதற்கு முந்தைய மாடலான ரியல்மி வாட்ச் 2-வை விட இது 35 சதவீதம் அதிகமாகும். இதில் பிரத்யேகமாக 100 வாட்ச் பேஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ரியல்மி லிங்க் ஆப்பை பயன்படுத்தி அதை மாற்றிக்கொள்ளலாம். 14 கிராம் எடை கொண்ட ஸ்கின் ஃபிரெண்ட்லி சிலிகான் ஸ்ட்ராப்பையும் இந்த ஸ்மார்ட்வாட்ச் கொண்டுள்ளது.


    இதுதவிர வாட்டர் மற்றும் டஸ்ட் புரூஃபுக்கான IP68 தரச் சான்றும் பெற்றுள்ளது. ப்ளூடூத் காலிங் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட ஸ்போர்ட்ஸ் மோட்களை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்வாட்சில் 340 எம்.ஏ.ஹெச் பேட்டரி இடம்பெற்று உள்ளது. இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 7 நாட்கள் வரை பயன்படுத்திக்கொள்ள முடியுமாம்.

    கிரே மற்றும் பிளாக் ஆகிய இரு நிறங்களில் வரும் இந்த ஸ்மார்ட்வாட்சில் விலை ரூ.3 ஆயிரத்து 499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஆகஸ்ட் 2-ந் தேதி விற்பனைக்கு வர உள்ள இந்த ஸ்மார்ட்வாட்ச்சை அறிமுக சலுகையாக ரூ.2 ஆயிரத்து 999-க்கு பெற முடியும். ப்ளிப்கார்ட் மற்றும் ரியல்மியின் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் விற்பனை செய்யப்பட உள்ளது.

    • முழுவதுமாக மெட்டல் பாடியால் ஆன இந்த லேப்டாப், 54 வாட் ஹவர் பேட்டரி திறன் கொண்டதாகும்.
    • இந்த லேப்டாப் ஸ்கை கிரே மற்றும் ஐஸ் ப்ளூ ஆகிய இரு நிறங்களில் கிடைக்கிறது.

    ரியல்மி நிறுவனம் அதன் புதிய லேப்டாப் ஒன்றை கடந்த வாரம் சீனாவில் அறிமுகப்படுத்தியது. ரியல்மி நோட்புக் ஏர் என பெயரிடப்பட்டுள்ள இந்த லேப்டாப்பில் சிறப்பம்சமே அதன் டிசைன் மற்றும் எடை தான். இந்த புது லேப்டாப்பின் மொத்த எடை வெறும் 1.36 கிலோ தானாம். இதில் உள்ள மற்றொரு கவனிக்கத்தக்க அம்சம் என்னவென்றால் அது இதில் உள்ள மெல்லிய பெசில்கள் தான். இதன் அளவு 4.9 எம்.எம். ஆப்பிள் மேக்புக் ஏர் எம் 1 மாடலோடு ஒப்பிடுகையில் இது மிகவும் மெல்லிசானது.

    ரியல்மி நிறுவனத்தின் இந்த புதிய லேப்டாப்பில் 11-வது ஜென் கோர் ஐ-3 புராசஸர் இடம்பெற்றுள்ளது. 8 ஜிபி ரேம் உடன் வரும் இந்த லேப்டாப்பில் 256ஜிபி மற்றும் 512ஜிபி என இரண்டு மெமரி வேரியண்ட்களில் வருகிறது. இதன் 16 : 10 டிஸ்ப்ளே பேனல் 1920 x 1200 ரெசலியூசனை ஆதரிக்கும் திறன் கொண்டதாகும். மேலும் இது 88 சதவீதம் ஸ்கிரீன் டூ பாடி ரேசியோவை கொண்டுள்ளது.


    முழுவதுமாக மெட்டல் பாடியால் ஆன இந்த லேப்டாப், 54 வாட் ஹவர் பேட்டரி திறன் கொண்டதாகும். 65வாட் பாஸ்ட் சார்ஜிங்கையும் இது ஆதரிக்கிறது. இதன் 8ஜிபி + 256ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை இந்திய மதிப்புப்படி ரூ.35 ஆயிரத்து 300 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அதேபோல் இதன் 8ஜிபி + 512ஜிபி மெமரி வேரியண்டின் விலை ரூ.38 ஆயிரத்து 800 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஸ்கை கிரே மற்றும் ஐஸ் ப்ளூ ஆகிய இரு நிறங்களில் வந்துள்ள இந்த லேப்டாப் இன்று முதல் சீன சந்தைகளில் விற்பனைக்கு வந்துள்ளது.

    • ரியல்மி C30 மாடல் ஸ்மார்ட்போன் பேம்பூ கிரீன், லேக் புளூ மற்றும் டெனிம் பிளாக் ஆகிய மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது.
    • இந்த ஸ்மார்ட்போன் 8MP பிரைமரி கேமரா மற்றும் 5MP செல்பி கேமரா உடன் வருகிறது.

    ரியல்மி நிறுவனம் அதன் புதிய C30 ஸ்மார்ட்போன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. முன்னதாக அறிவிக்கப்பட்டதைப் போல், புதிய ரியல்மி C30 ஸ்மார்ட்போனில் 6.5 இனச் ஹெச்டி+ எல்சிடி டிஸ்ப்ளே, 60Hz புதுப்பிப்பு வீதம், 120Hz டச் சேம்ப்லிங் ரேட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. புராசஸரை பொருத்தவரை C30 மாடல் ஸ்மார்ட்போன் யுனிசாக் T612 பிராசஸரைக் கொண்டுள்ளது.

    இதில் அதிகபட்சம் 3GB ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது. ஆண்ட்ராய்டு 11 சார்ந்த ரியல்மி UI கோ எடிஷன் இயங்குதளத்தைக் கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போன் 8MP பிரைமரி கேமரா மற்றும் 5MP செல்பி கேமரா உடன் வருகிறது. ரியல்மி C30 ஸ்மார்ட்போனில் வெர்டிகல் ஸ்டிரைப் டிசைன் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இதில் 5000mAh பேட்டரி மற்றும் 10 வாட் சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டு உள்ளது.


    ரியல்மி C30 மாடல் ஸ்மார்ட்போன் பேம்பூ கிரீன், லேக் புளூ மற்றும் டெனிம் பிளாக் ஆகிய மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் 2GB ரேம், 32GB மெமரி கொண்ட மாடலின் விலை ரூ. 7 ஆயிரத்து 499 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அதேபோல் 3GB ரேம், 32GB மெமரி ஸ்டோரேஜ் கொண்ட மாடலின் விலை ரூ. 8 ஆயிரத்து 299 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ரியல்மி, பிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் தளங்களிலும், ஆப்லைன் ஸ்டோர்களிலும் வருகிற ஜூன் 27 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வர உள்ளது.

    • இந்த ஸ்மார்ட்வாட்ச் பிளாக் மற்றும் ஒயிட் ஆகிய இரு நிறங்களில் வர உள்ளது.
    • டிஸ்ப்ளேவை பொருத்தவரை 360 x 360 பிக்சல்களுடன் கூடிய 1.32 இன்ச் டச் ஸ்கிரீன் உள்ளது.

    ரியல்மி நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்வாட்ச்சை அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. அதன்படி இந்த ஸ்மார்ட்வாட்ச்சுக்கு ரியல்மி டெக்லைஃப் வாட்ச் R100 என பெயரிடப்பட்டு உள்ளது. இது புளூடூத் காலிங் வசதியுடன் வருகிறது. மேலும் இதில் மிகப்பெரிய பேட்டரி பேக் அப் மற்றும் 100க்கும் மேற்பட்ட ஸ்போர்ட்ஸ் மோடுகளையும் கொண்டுள்ளது.

    இந்த ஸ்மார்ட்வாட்ச் பிளாக் மற்றும் ஒயிட் ஆகிய இரு நிறங்களில் வர உள்ளது. டிஸ்ப்ளேவை பொருத்தவரை 360 x 360 பிக்சல்களுடன் கூடிய 1.32 இன்ச் டச் ஸ்கிரீன் உள்ளது. இதில் இரண்டு ஹார்டுவேர் பட்டனும் இடம்பெற்றுள்ளது. ஒன்று UI நேவிகேஷன் மற்றொன்றும் வேகமாக ஸ்போர்ட்ஸ் மோடுக்கு மாற்றவும் உதவும்.


    இந்த பட்ஜெட் விலை ஸ்மார்ட்வாட்சில் இதய துடிப்பை கண்காணிக்கும் சென்சார், ஸ்லீப் டிராக்கர் ஆகியவை இடம்பெற்றுள்ளது. இது iOS மற்றும் ஆண்ட்ராய்டு சாதனங்கள் இரண்டிற்கும் இணக்கமானது. மேலும் புளூடூத் 5.2 இணைப்பு வழியாக ஸ்மார்ட்போன்களுடன் இணைக்கப்படும் வசதியும் இதில் உள்ளது.

    இது வாட்டர் ரெசிஸ்டண்ட் மற்றும் அலெக்ஸா சபோர்ட் உடன் வருகிறது. மேலும் இதில் திசைகாட்டி, காலண்டர், அலாரம், கடிகாரம் மற்றும் ஸ்பீக்கர் & மைக்ரோஃபோன் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன. இது ஒரு வருட வாரண்டி உடன் வருகிறது. இதன் விலை ரூ.6 ஆயிரத்திற்கு கீழ் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் வருகிற ஜூன் 23-ந் தேதி லான்ச் ஆக உள்ளது.

    ×