search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்மார்ட்வாட்ச்"

    • ஃபிட்ஷாட் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் பிரீமியம் பாகங்களால் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
    • இந்த ஸ்மார்ட்வாட்ச்-இல் டேலைட் ஸ்கிரீன் அம்சம், 60-க்கும் அதிக வாட்ச் ஃபேஸ்கள் உள்ளன.

    ஃபிட்ஷாட் நிறுவனம் இந்திய சந்தையில் மகளிருக்கான தனது முதல் ஸ்மார்ட்வாட்ச்- ஃபிட்ஷாட் ஃபிளேர் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் அழகாக காட்சியளிப்பதோடு, அன்றாட வாழ்க்கைக்கு தேவையான தொழில்நுட்பங்கள் மற்றும் சவுகரியத்தை வழங்குகிறது. முன்னதாக ஃபிட்ஷாட் நிறநுவனத்தின் க்ரிஸ்டல் ஸ்மார்ட்வாட்ச் மாடல் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது இந்த மாடல் அறிமுகமாகி இருக்கிறது.

    புதிய ஃபிட்ஷாட் ஃபிளேர் ஸ்மார்ட்வாட்ச் பிரீமியம் பாகங்களால் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் 450-நிட்ஸ் IPS எல்சிடி ஸ்கிரீன், காஸ்மிக் டிஸ்ப்ளே உள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச்-இல் டேலைட் ஸ்கிரீன், 60-க்கும் அதிக வாட்ச் ஃபேஸ்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன் IP68 தர வாட்டர் ரெசிஸ்டண்ட், UV சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் உள்ள UV சென்சார்கள், பயனர்களுக்கு UV பற்றி எச்சரிக்கை கொடுக்கும்.

    சூரியனின் UV இண்டெக்ஸ் பயனப்டுத்தி பயனர்கள் தொப்பி, கண் கண்ணாடி அல்லது சன்-ஸ்கிரீன் அணிந்து கொள்ள பரிந்துரைக்கிறது. ஸ்மார்ட்வாட்ச் மட்டுமின்றி இது பெண்களுக்கு தேவையான வெல்னஸ் டிராக்கர் போன்றும் செயல்படுகிறது. இதில் SpO2, UV லைட், இதய துடிப்பு, உடல் வெப்பநிலை, மென்ஸ்டுரேஷன் டிராக்கர் போன்ற வசதிகள் உள்ளன.

    இத்துடன் கால் ரிமைண்டர்கள், ஷெட்யுல் ரிமைண்டர்கள், ஆப் புஷ் ரிமைண்டர்கள், அலாரம் நோட்டிஃபிகேஷன், சமூகவலைதள அலெர்ட் போன்ற வசதிகள் உள்ளன. பயனர்களுக்கு அழைப்பு அல்லது குறுந்தகவல் வரும் பட்சத்தில் இதில் உள்ள குயிக் மெசேஜஸ் அம்சம் மூலம் அதற்கு பதில் அளிக்க முடியும். ஃபிட்ஷாட் ஃபிளேர் மாடலில் உள்ள 300 எம்ஏஹெச் பேட்டரி முழு சார்ஜ் செய்தால் பத்து நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்குகிறது.

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    ஃபிட்ஷாட் ஃபிளேர் ஸ்மார்ட்வாட்ச் பின்க், புளூ மற்றும் கிரீன் என மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை கிறிஸ்துமஸ் சலுகையாக ரூ. 1,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச்-க்கு ஒரு வருட வாரண்டியும் வழங்கப்படுகிறது.

    • நாய்ஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலில் டேப் டு வேக் அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது.
    • இந்த ஸ்மார்ட்வாட்ச் அலுமினியம் அலாய் பாடி, IP68 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது.

    நாய்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. கலர்ஃபிட் ப்ரோ 4 ஆல்ஃபா என அழைக்கப்படும் புது ஸ்மார்ட்வாட்ச் இந்திய சந்தையில் கலர்ஃபிட் ப்ரோ 4 சீரிசில் நாய்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்த மூன்றாவது மாடல் ஆகும். புது வேரியண்டில் சிறு மாற்றங்கள், புது அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ரூ. 4 ஆயிரத்திற்கும் குறைந்த விலையில் கிடைக்கும் புதிய நாய்ஸ் கலர்ஃபிட் ப்ரோ ஆல்ஃபா 4 ஸ்மார்ட்வாட்ச் இந்திய சந்தையில் ரியல்மி வாட்ச் 3 ப்ரோ, ஒன்பிளஸ் நார்டு வாட்ச் மற்றும் சில மாடல்களுக்கு போட்டியாக அமைந்துள்ளது. புதிய நாய்ஸ் கலர்ஃபிட் ப்ரோ ஆல்ஃபா 4 மாடலில் 1.78 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, சதுரங்க வடிவம் கொண்ட டயல், 368x448 பிக்சல் ரெசல்யுஷன், 60Hz ரிப்ரெஷ் ரேட் வழங்கப்பட்டுள்ளது.

    இத்துடன் பால்ம் கண்ட்ரோல் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதை கொண்டு டிஸ்ப்ளேவை ஆஃப் செய்ய முடியும். இதற்கு கைகளை ஸ்கிரீன் மீது வைத்தாலே போதுமானது. இத்துடன் டேப்-டு-வேக் அம்சம் மூலம் ஸ்கிரீன் மீது ஒரே க்ளிக் செய்தால் ஸ்கிரீனை ஆன் செய்து கொள்ளலாம். இந்த ஸ்மார்ட்வாட்ச் வலது புறத்தில் ஆப்பிள் வாட்ச் மாடல்களில் உள்ளதை போன்ற டிஜிட்டல் கிரவுன் இடம்பெற்று இருக்கிறது.

    அலுமினியம் அலாய் பில்டு கொண்டிருக்கும் கலர்ஃபிட் ப்ரோ 4 ஆல்ஃபா மாடலில் IP68 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் இதய துடிப்பு சென்சார், SpO2 சென்சார், ஸ்லீப் மற்றும் ஸ்டிரெஸ் டிராக்கர், மென்ஸ்டுரல் சைக்கில் மாணிட்டர், 100-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்களை கொண்டிருக்கிறது. நாய்ஸ் கலர்ஃபிட் ப்ரோ 4 ஆல்ஃபா மாடலில் பில்ட்-இன் ஸ்பீக்கர், மைக்ரோபோன் மற்றும் ப்ளூடூத் 5.3 வசதி வழங்கப்பட்டுள்ளது.

    இந்த ஸ்மார்ட்வாட்ச் ஏழு நாட்களுக்கு தேவையான பேட்டரி பேக்கப் மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது. இத்துடன் வானிலை, பங்கு சந்தை அப்டேட்கள், நோட்டிஃபிகேஷன் மற்றும் அதிக அம்சங்கள் உள்ளன. இந்திய சந்தையில் புதிய நாய்ஸ் கலர்ஃபிட் ப்ரோ 4 ஆல்ஃபா மாடலின் விலை ரூ. 3 ஆயிரத்து 799 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் பிளாக், பின்க், புளூ, வைன் மற்றும் டியல் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விற்பனை டிசம்பர் 28 ஆம் தேதி துவங்குகிறது.

    • பெபில் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் மிக குறைந்த விலையில் இந்தியாவில் அறிமுகமாகி இருக்கிறது.
    • புதிய பெபில் ஸ்மார்ட்வாட்ச் போட், நாய்ஸ், ஃபயர் போல்ட் நிறுவன மாடல்களுக்கு போட்டியாக அமைந்துள்ளது.

    பெபில் நிறுவனம் இந்திய சந்தையில் முற்றிலும் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. பெபில் ஃபிராஸ்ட் என அழைக்கப்படும் புது ஸ்மார்ட்வாட்ச் ரூ. 2 ஆயிரம் பட்ஜெட்டில் கிடைக்கிறது. தோற்றத்தில் இந்த ஸ்மார்ட்வாட்ச் ஆப்பிள் வாட்ச் போன்றே காட்சியளிக்கிறது. இதில் மெட்டாலிக் கேசிங், மல்டி-ரோடேடிங் கிரவுன் பட்டன் உள்ளது.

    IP67 தரச் சான்று பெற்று இருக்கும் பெபில் ஃபிராஸ்ட் சதுரங்க வடிவம் கொண்ட டயல், 1.87 இன்ச் டிஸ்ப்ளே, HD ரெசல்யூஷன், 100-க்கும் அதிக வாட்ச் ஃபேஸ்கள் உள்ளன. இத்துடன் இதய துடிப்பு சென்சார், SpO2 சென்சார், ஸ்லீப் டிராக்கர், செடண்டரி ரிமைண்டர், பல்வேறு ஸ்போர்ட்ஸ் மோட்கள், கலோரி டிராக்கர், பயண விவரங்கள் மற்றும் எத்தனை பயனர் தூரம் நடந்தார் என்ற விவரங்களை டிராக் செய்யும்.

    பெபில் ஃபிராஸ்ட் பில்ட்-இன் மைக்ரோபோன் மற்றும் ஸ்பீக்கர் கொண்டிருக்கிறது. இதை கொண்டு ப்ளூடூத் காலிங் வசதி செயல்படுத்தப்பட்டு இருக்கிறது. இத்துடன் டயல் பேட் மற்றும் சமீபத்திய அழைப்பு விவரங்களை காண்பிக்கிறது. இதில் ஏஐ சார்ந்த வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி, வானிலை விவரங்கள், நோட்டிஃபிகேஷன்கள், மியூசிக் பிளேபேக் கண்ட்ரோல், கால்குலேட்டர் என ஏராள அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இந்திய சந்தையில் பெபில் ஃபிராஸ்ட் ஸ்மார்ட்வாட்ச் பிளாக், புளூ, கிரே மற்றும் ஆரஞ்சு என நான்கு வித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் பெபில் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் நடைபெறுகிறது.

    • அமேஸ்ஃபிட் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடல் பிரீமியம் பிரிவில் அறிமுகமாகி இருக்கிறது.
    • புதிய ஸ்மார்ட்வாட்ச் 150-க்கும் அதிக பில்ட்-இன் ஸ்போர்ட்ஸ் மோட்கள், இன்-பில்ட் ஸ்டோரேஜ் கொண்டிருக்கிறது.

    அமேஸ்ஃபிட் நிறுவனம் கடந்த மாதம் அறிமுகம் செய்த ஃபால்கன் ஸ்மார்ட்வாட்ச் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இது அமேஸ்ஃபிட் நிறுவனத்தின் முதல் பிரீமியம் மல்டி-ஸ்போர்ட் GPS வாட்ச் ஆகும். இதில் ஏர்கிராஃப்ட் கிரேடு TC4 அலுமினியம் யுனிபாடி, சஃபையர் க்ரிஸ்டல் கிலாஸ் ஸ்கிரீன், 20 ATM வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, டூயல் பேண்ட் GPS டிராக்கிங், ஆறு செயற்கைக்கோள் பொசிஷனிங் சிஸ்டம்களுக்கான சப்போர்ட் கொண்டிருக்கிறது.

    இதில் உள்ள செப் கோச் ஸ்மார்ட் கோச்சிங் அல்காரிதம் ஒவ்வொருத்தரின் உடல்நிலை, உடற்பயிற்சி அனுபவம் உள்ளிட்டவைகளுக்கு ஏற்ப பயிற்சி வழங்கும் திறன் கொண்டுள்ளது. இதன் மூலம் பயனர் தங்களின் ஸ்போர்ட் திறனை வளர்த்துக் கொள்ள முடியும். செப் கோச் பயனர் அதிக சோர்வு அடைவது கண்டறிந்து அதற்கு ஏற்ப உடற்பயிற்சியின் தீவிரத்தை மாற்றும் திறன் கொண்டிருக்கிறது.

     இந்த ஸ்மார்ட்வாட்ச்-இல் 150-க்கும் அதிக பில்ட்-இன் ஸ்போர்ட்ஸ் மோட்கள், இன்-பில்ட் ஸ்டோரேஜ், மியூசிக் வசதி உள்ளது. இதை ப்ளூடூத் ஹெட்போனுடன் கனெக்ட் செய்து பாடல்களை கேட்கலாம். இதில் பதிவாகும் உடற்பயிற்சி விவரங்களை ஸ்டார்வா, ஆப்பிள் ஹெல்த், கூகுள் ஃபிட், ரிலிவ் மற்றும் அடிடாஸ் ரன்னிங் ஆப் உள்ளிட்டவைகளுடன் சின்க் செய்து கொள்ளலாம். இந்த வாட்ச் 15 மிலிட்டரி தர டெஸ்ட்களில் வெற்றி பெறும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    அமேஸ்ஃபிட் ஃபால்கன் அம்சங்கள்:

    1.28 இன்ச் 416x416 பிக்சல் 326 PPI டிஸ்ப்ளே

    ப்ளூடூத் 5.0, டூயல் பேண்ட் 6 செயற்கைக்கோள் பொசிஷனிங்

    பயோடிராக்கர் 3.0 PPG பயோமெட்ரிக் சென்சார்

    ஹார்ட் ரேட், SpO2, ஸ்டிரெஸ், ஸ்லீப், பிரீதிங், மென்ஸ்டுரல் சைக்கிள் மற்றும் ஹெல்த் ரிமைண்டர்கள்

    ஜெப் ஆப் வழியே 150-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள்

    ஆண்ட்ராய்டு 7.0 அல்லது ஐஒஎஸ் 12.0 அல்லது அதற்கும் பின் வெளியான ஒஎஸ் சப்போர்ட்

    20ATM வாட்டர் ரெசிஸ்டண்ட்

    15 ராணுவ தர சோதனைகளில் வெற்றி பெற்று இருக்கிறது

    500 எம்ஏஹெச் பேட்டரி

    அதிகபட்சம் 14 நாட்களுக்கான பேட்டரி பேக்கப்

    பேட்டரி சேவர் மோடில் 30 நாட்களுக்கு பேக்கப்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    அமேஸ்ஃபிட் ஃபால்கன் ஸ்மார்ட்வாட்ச் டைட்டானியம் நிறத்தில் கிடைக்கிறது. இத்துடன் சூப்பர்சோனிக் பிளாக் ஸ்டிராப் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 44 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் முன்பதிவு இன்று (டிசம்பர் 01) துவங்கி விட்டது. விற்பனை டிசம்பர் 03 ஆம் தேதி துவங்க இருக்கிறது.

    • டிசோ பிராண்டின் புது ஸ்மார்ட்வாட்ச் மாடல் சமீபத்தில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
    • புதிய டிசோ ஸ்மார்ட்வாட்ச் 150-க்கும் அதிக வாட்ச் ஃபேஸ்கள் மற்றும் ப்ளூடூத் காலிங் வசதி கொண்டிருக்கிறது.

    டிசோ பிராண்டு தனது டிசோ வாட்ச் ஆர் டாக் கோ ஸ்மார்ட்வாட்ச் மாடலை இம்மாத துவக்கத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்து இருந்தது. முன்னதாக இந்த ஸ்மார்ட்வாட்ச் சர்வதேச சந்தையிலும் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த மாடலின் இந்திய விற்பனை துவங்கி இருக்கிறது.

    புதிய டிசோ வாட்ச் ஆர் டாக் கோ மாடலில் ப்ளூடூத் காலிங், 150-க்கும் மேற்பட்ட வாட்ச் ஃபேஸ்களை கொண்டிருக்கிறது. இதில் 110-க்கும் மேற்பட்ட ஸ்போர்ட்ஸ் மோட்கள், ப்ளூடூத் 5.1 கனெக்டிவிட்டி போன்ற வசதிகள் உள்ளன. இத்துடன் 1.39 இன்ச் 360x360 பிக்சல் டிஸ்ப்ளே, 550 நிட்ஸ் பிரைட்னஸ் உள்ளது. தோற்றத்தில் சாம்சங் கேலக்ஸி வாட்ச் போன்ற தோற்றம் கொண்டிருக்கும் டிசோ வாட்ச் ஆர் டாக் கோ மாடலின் பக்கவாட்டில் இரு பட்டன்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த வாட்ச் ரிம் அலுமினியம் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் 7H அளவு உறுதியான டெம்பர்டு கிளாஸ் வழங்கப்பட்டுள்ளது. ப்ளூடூத் 5.2 சார்ந்த ப்ளூடூத் காலிங் வசதி பில்ட்-இன் ஜிபிஎஸ், இதய துடிப்பு சென்சார்,ஸ SpO2 மாணிட்டரிங், மூட், ஸ்டிரெஸ், ஃபாடிக் மாணிட்டரிங், ஸ்லீப் டிராக்கிங், ஸ்டெப் மற்றும் கலோரி டிராக்கிங் மற்றும் ஏராளமான உடல் நல அம்சங்கள் உள்ளன.

    டிசோ வாட்ச் ஆர் டாக் கோ மாடல் முழு சார்ஜ் செய்தால் பத்து நாட்கள் வரையிலான பேட்டரி பேக்கப் வழங்குகிறது. ப்ளூடூத் காலிங் பயன்படுத்தும் போது அதிகபட்சம் 9 நாட்களுக்கான பேக்கப் வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் முழுமையாக சார்ஜ் ஆக இரண்டு மணி நேரம் ஆகும். இத்துடன் கிளாசிக் பிளாக், தண்டர் புளூ மற்றும் சில்வர் வைட் என மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது.

    இந்திய சந்தையில் புதிய டிசோ வாட்ச் ஆர் டாக் கோ மாடலின் விலை ரூ. 3 ஆயிரத்து 499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்யேகமாக நடைபெற்று வருகிறது. இந்த வாட்ச் வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது 5 சதவீதம் வரை கேஷ்பேக் பெறலாம்.

    • ஃபயர் போல்ட் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது.
    • பெயருக்கு ஏற்றார் போல் புதிய ஸ்மார்ட்வாட்ச் ப்ளூடூத் காலிங் வசதியுடன், ஏராளமான அம்சங்களை கொண்டிருக்கிறது.

    ஃபயர் போல்ட் நிறுவனம் தனது அணியக்கூடிய சாதனங்கள் பிரிவில் புதிதாக "நின்ஜா கால் ப்ரோ பிளஸ்" பெயர் கொண்ட ஸ்மார்ட்வாட்ச்-ஐ அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஃபயர் போல்ட் நின்ஜா கால் ப்ரோ பிளஸ் மாடலில் 1.83 இன்ச் டிஸ்ப்ளே, ப்ளூடூத் காலிங், 100-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள், அதிகபட்சம் ஆறு நாட்களுக்கான பேட்டரி லைஃப் போன்ற அம்சங்கள் உள்ளன.

    இத்துடன் மேம்பட்ட அளவில் உடல் ஆரோக்கியம் பற்றிய விவரங்களை டிராக் செய்யும் வசதி கொண்டுள்ளது. இதில் SpO2, இதய துடிப்பு மற்றும் ஸ்லீப் மாணிட்டரிங் வசதி உள்ளது. வியர்வை, நீர் மற்றும் டஸட் ப்ரூஃப் வழங்கும் வகையில் இந்த ஸ்மார்ட்வாட்ச் IP67 ரேட்டிங் கொண்டிருக்கிறது. மேலும் வானிலை நோட்டிஃபிகேஷன்களை வழங்குகிறது.

    இதில் AI சார்ந்து இயங்கும் வாய்ஸ் அசிஸ்டண்ட், பில்ட்-இன் கேம்ஸ், ஆறு நாட்களுக்கு பேட்டரி லைஃப் வழங்குகிறது. இத்துடன் 15 நாட்களுக்கு ஸ்டாண்ட்-பை பேட்டரி லைஃப் கொண்டுள்ளது.

    ஃபயர் போல்ட் நின்ஜா கால் ப்ரோ பிளஸ் அம்சங்கள்:

    1.83 இன்ச் 240x280 பிக்சல் LCD ஸ்கிரீன்

    100-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள்

    இதய துடிப்பு, SpO2 மற்றும் ஸ்லீப் மாணிட்டரிங்

    ஆக்டிவிட்டி டிராக்கர், கலோரி டிராக்கர்

    ப்ளூடூத் காலிங் வசதி

    பில்ட்-இன் மைக் மற்றும் ஸ்பீக்கர்

    IP67 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட்

    ஸ்மார்ட் நோட்டிஃபிகேஷன், வாய்ஸ் அசிஸ்டண்ட்

    கேம்ஸ், ஃபைண்ட் மோட், கேமரா கண்ட்ரோல்

    மியூசிக் பிளேயர், அலாரம்

    அதிகபட்சம் ஆறு நாட்களுக்கு பேட்டரி லைஃப்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    ஃபயர் போல்ட் நின்ஜா கால் ப்ரோ பிளஸ் மாடல் பிளாக், கோல்டு பிளாக், பின்க், கிரே மற்றும் நேவி புளூ நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் விலை அறிமுக சலுகையாக ரூ. 1,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை அமேசான் மற்றும் ஃபயர் போல்ட் அதிகாரப்பூர்வ வலைதளங்களில் நடைபெற்று வருகிறது.

    • அமேஸ்பிட் நிறுவனம் குறைந்த விலை ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை அறிமுகம் செய்வதில் பிரபலமாக இருக்கிறது.
    • அமேஸ்பிட் அறிமுகம் செய்ய இருக்கும் புது ஸ்மார்ட்வாட்ச் பத்து நாட்களுக்கு பேக்கப் வழங்கும் என தெரிகிறது.

    அமேஸ்பிட் நிறுவனம் இந்திய சந்தையில் அமேஸ்பிட் பாப் 2 பெயரில் புது ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதற்கான டீசர் அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது. டீசரில் புது ஸ்மார்ட்வாட்ச் அம்சங்கள் பற்றிய தகவல்களும் இடம்பெற்றுள்ளன.

    இந்த மாடல் இந்தியாவில் நவம்பர் 22 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. அறிமுக சலுகையாக இதன் விலை ரூ. 3 ஆயிரத்து 299 என நிர்ணயம் செய்யப்படும் என தெரியவந்துள்ளது. டீசர்களின் படி புதிய அமேஸ்பிட் பாப் 2 மாடலில் 1.78 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, செவ்வக வடிவம், மெட்டல் ரிம் கேஸ், வட்ட வடிவில் ஒற்றை டயல் வழங்கப்படும் என தெரியவந்துள்ளது.

    அமேஸ்பிட் பாப் 2 மாடலின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக ப்ளூடூத் காலிங் வசதி இருக்கும். இதை கொண்டு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுடன் வாட்ச்-ஐ கனெக்ட் செய்தால் அழைப்புகளை எளிதில் மேற்கொள்ளவும், ஏற்கவும் முடியும். இந்த அம்சம் பிரீமியம் ஸ்மார்ட்வாட்ச் மாடல்களில் மட்டுமே வழங்கப்பட்டு வரும் நிலையில், தற்போது இந்த நிலை மெல்ல மாறி பட்ஜெட் வாட்ச் மாடல்களிலும் வழங்கப்படுகிறது.

    இவைதவிர அமேஸ்பிட் பாப் 2 மாடல் முழு சார்ஜ் செய்தால் பத்து நாட்களுக்கு தேவையான பேக்கப் வழங்கும் என டீசரில் தெரியவந்துள்ளது. எனினும், இதன் முழு திறன் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. இத்துடன் 100-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள், அதிகபட்சம் 150-க்கும் வாட்ச் ஃபேஸ்கள், ஆக்சிஜன் மாணிட்டர், 24 மணி நேர இதய துடிப்பு மாணிட்டரிங், மியூசிக் கண்ட்ரோல் வசதி வழங்கப்படும் என தெரிகிறது.

    • டிசோ பிராண்டின் புது ஸ்மார்ட்வாட்ச் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
    • புது ஸ்மார்ட்வாட்ச் அலுமினியம் ஃபிரேம் கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    டிசோ பிராண்டின் புதிய டிசோ வாட்ச் D பிளஸ் ஸ்மார்ட்வாட்ச் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதில் 1.85 இன்ச் ஸ்கிரீன், 550 நிட்ஸ் பிரைட்னஸ், 2.5D வளைந்த டெம்பர்டு கிளாஸ், 17 சதவீத பெரிய டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் அலுமினியம் ஃபிரேம், 22mm, கழற்றக்கூடிய சிலிகான் ஸ்டிராப், 3ATM வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு உள்ளது.

    இத்துடன் 110-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள், ப்ளூடூத் 5.1, ஹார்ட் ரேட் சென்சார், வைப்ரேஷன் மோட்டார், 3.-ஆக்சிஸ் அக்செல்லோமீட்டர், 150-க்கும் அதிக வாட்ச் ஃபேஸ்கள், வளைந்த டெம்ப்பர்டு கிளாஸ், மியூசிக் கண்ட்ரோல், கேமரா கண்ட்ரோல், வானிலை விவரங்கள், கால் நோட்டிபிகேஷன், மெசேஜ் ரிமைண்டர், அலாரம், வாட்டர் ரெசிஸ்டண்ட், 300 எம்ஏஹெச் பேட்டரி, 14 நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்குகிறது.

    புதிய டிசோ வாட்ச் D பிளஸ் மாடல் கிளாசிக் பிளாக், சில்வர் கிரே மற்றும் டீப் புளூ என மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை அறிமுக சலுகையாக ரூ. 1,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை நவம்பர் 15 ஆம் தேதி ப்ளிப்கார்ட் தளத்தில் துவங்குகிறது. 

    • போட் நிறுவனத்தின் புது ஸ்மார்ட்வாட்ச் மாடல் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகமாகி இருக்கிறது.
    • புது ஸ்மார்ட்வாட்ச் அளவில் பெரிய டிஸ்ப்ளே, ஏராளமான உடல்நல அம்சங்களை கொண்டிருக்கிறது.

    இந்திய சந்தையில் அணியக்கூடிய சாதனங்களை விற்பனை செய்வதில் முன்னணி பிராண்டாக விளங்கும் போட், "வேவ் அல்டிமா" பெயரில் புது ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புது போட் வேவ் அல்டிமா ஸ்மார்ட்வாட்ச் அளவில் பெரிய, கிராக் ரெசிஸ்டண்ட் கர்வ் ஆர்க் டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது. இதுதவிர ஏராளமான ஆரோக்கிய அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளது.

    போட் வேவ் அல்டிமா ஸ்மார்ட்வாட்ச்-இல் 1.8 இன்ச், 500 நிட் சூப்பர் பிரைட், எட்ஜ்-டு-எட்ஜ் ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே, குறைந்த எடை கொண்ட அலுமினியம் அலாய் டயல், சருமத்திற்கு மென்மையான உணர்வை தரும் சிலிகான் ஸ்டிராப்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை ரேஜிங் ரெட், ஆக்டிவ் பிளாக் மற்றும் டியல் கிரீன் போன்ற நிறங்களில் கிடைக்கின்றன.

    புதிய வேவ் அல்டிமா மாடலில் ப்ளூடூத் காலிங் வசதி, பில்ட்-இன் HD ஸ்பீக்கர், மைக்ரோபோன், ப்ளூடூத் 5.3 சிப் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள மைக்ரோபோன் அதிக சத்தமுள்ள பகுதிகளில் உங்களுக்கு உதவும். மேலும் இதில் ஏராளமான சென்சார்கள், மாணிட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை உடல் நலனை பாதுகாக்க உதவுகிறது. இத்துடன் 100-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள், இதய துடிப்பு சென்சார், SpO2 மாணிட்டரிங் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்திய சந்தையில் புதிய போட் வேவ் அல்டிமா ஸ்மார்ட்வாட்ச் விலை ரூ. 2 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் போட் லைப்ஸ்டைல் வலைதளங்களில் நடைபெற்று வருகிறது.

    • ஃபயர் போல்ட் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடல் இந்திய சந்தையில் அறிமுகமாகி இருக்கிறது.
    • புதிய ஸ்மார்ட்வாட்ச் ப்ளூடூத் காலிங், வளைந்த டிஸ்ப்ளே என ஏராளமான அம்சங்களை கொண்டிருக்கிறது.

    ஃபயர் போல்ட் நிறுவனம் இந்திய சந்தையில் டேசில் பிளஸ் பெயரில் புது ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் டிசைன் அதன் முந்தைய மாடல்களில் இருப்பதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது. சதுரங்க வடிவம் கொண்ட டயல் கொண்டிருக்கும் ஸ்மார்ட்வாட்ச் 1.83 இன்ச் அளவில் வளைந்த டிஸ்ப்ளே, ப்ளூடூத் காலிங் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.

    புதிய ஃபயர் போல்ட் டேசில் பிளஸ் ஸ்மார்ட்வாட்ச் 60-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்களை கொண்டிருக்கிறது. எனினும், இவை பற்றி எந்த தகவலும் வழங்கப்படவில்லை. இத்துடன் IP68 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, SpO2 மாணிட்டரிங், ஹார்ட் ரேட் டிராக்கிங், ஸ்லீப் மாணிட்டரிங் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

    வானிலை விவரங்கள், செடண்டரி ரிமைண்டர் மற்றும் வாட்டர் ரிமைண்டர் போன்ற தகவல்களை வழங்க ஸ்மார்ட் அசிஸ்டண்ட் வசதியும் இந்த ஸ்மார்ட்வாட்ச்-இல் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் முழு சார்ஜ் செய்தால் 5 முதல் 8 நாட்கள் வரையிலான பேட்டரி பேக்கப் வழங்குகிறது. ஸ்டாண்ட்-பை மோடில் இந்த ஸ்மார்ட்வாட்ச் 30 நாட்கள் வரையிலான பேக்கப் வழங்குகிறது.

    புதிய ஃபயர் போல்ட் டேசில் பிளஸ் ஸ்மார்ட்வாட்ச் பிளாக், புளூ, கோல்டு, சில்வர் மற்றும் பிளாக் கோல்டு போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1,599 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை அமேசான் தளத்தில் நடைபெறுகிறது.

    • கூகுள் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி பிக்சல் வாட்ச் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.
    • புதிய பிக்சல் வாட்ச் பிக்சல் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது.

    கூகுள் நிறுவனத்தின் மேட் பை கூகுள் 22 நிகழ்வில் பிக்சல் வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டது. இது கூகுள் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்வாட்ச் ஆகும். பிரீமியம் ஸ்மார்ட்வாட்ச் பிரிவில் அறிமுகமாகி இருக்கும் பிக்சல் வாட்ச் வியர் ஒஎஸ் 3.5 மற்றும் 4ஜி எல்டிஇ கனெக்டிவிட்டி கொண்டிருக்கிறது. இத்துடன் உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் சார்ந்த அம்சங்களை வழங்க பிட்பிட் இண்டகிரேஷன் வழங்கப்பட்டு உள்ளது.

    புதிய பிக்சல் வாட்ச் மாடலில் வட்வ வடிவில் 3டி டோம்டு கிளாஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இது ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாடி கொண்டிருக்கிறது. பிக்சல் வாட்ச் ஸ்கிராட்ச் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது. இது வலதுபுறம் கிரவுனிற்கு மேல் பட்டன் ஒன்று வழங்கப்பட்டு இருக்கிறது. இது சமீபத்தில் பயன்படுத்தப்பட்ட செயலிகளை காண்பிக்கும். இத்துடன் 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட AMOLED டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது.

    இந்த ஸ்மார்ட்வாட்ச் இதய துடிப்பு விவரங்களை கச்சிதமாக டிராக் செய்வதோடு, ஜிபிஎஸ் வசதி, இசிஜி ஆப் சப்போர்ட், உறக்கத்தை டிராக் செய்யும் சென்சார்களை கொண்டிருக்கிறது. இத்துடன் பிட்பிட் செயலியுடன் இணைந்து செயல்படும் வசதியை பிக்சல் வாட்ச் கொண்டிருக்கிறது. புதிய பிக்சல் வாட்ச் 32 ஜிபி மெமரி, மூன்று மாதங்களுக்கு இலவச யூடியூப் பிரீமியம் சந்தா வழங்கப்பட்டு இருக்கிறது.

    கூகுள் பிக்சல் வாட்ச் மாடல் ஷேம்பெயின் கோல்டு கேஸ் மற்றும் ஹசெல் ஆக்டிவ் பேண்ட், மேட் பிளாக் கேஸ் மற்றும் அப்சிடியன் ஆக்டிவ் பேண்ட், பாலிஷ்டு சில்வர் கேஸ் மற்றும் சார்கோல் ஆக்டிவ் பேண்ட் மற்றும் சாக் ஆக்டிவ் பேண்ட் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இத்துடன் 20-க்கும் மேற்பட்ட பேண்ட் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.

    புதிய பிக்சல் வாட்ச் ப்ளூடூத் வெர்ஷன் விலை 349.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 28 ஆயிரத்து 750 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் எல்டிஇ வெர்ஷன் விலை 399.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 32 ஆயிரத்து 870 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை அக்டோபர் 13 ஆம் தேதி துங்குகிறது. இதன் இந்திய வெளியீடு பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.

    • ஒன்பிளஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய நார்டு வாட்ச் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.
    • புதிய நார்டு வாட்ச் மாடலில் 100-க்கும் அதிக ஆன்லைன் கஸ்டமைசேஷன் வசதி கொண்ட வாட்ச் பேஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.

    ஒன்பிளஸ் நிறுவனம் இந்தியாவில் நார்டு சீரிசில் முதல் ஸ்மார்ட்வாட்ச்-ஐ இந்தியாவில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய நார்டு வாட்ச் மாடலில் 1.78 இன்ச் 325PPI AMOLED ஸ்கிரீன், 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 60Hz ரிப்ரெஷ் ரேட் மற்றும் ஆன்லைன் கஸ்டமைசேஷன் வசதியுடன் 100-க்கும் அதிக வாட்ச் பேஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இந்த ஸ்மார்ட்வாட்ச் கேஸ் சின்க் அலாய் மற்றும் பிளாஸ்டிக் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதன் வலதுபுறம் ஒரு பட்டன் மற்றும் சிலிகான் ஸ்டிராப் மற்றும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பக்கிள் வழங்கப்பட்டுள்ளது. இது 105-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்களை கொண்டுள்ளது. இதில் நடைபயிற்சி, ஓட்ட பயிற்சி, யோகா, கிரிகெட் உள்பட பல்வேறு விளையாட்டுகள் அடங்கும்.

    ஒன்பிளஸ் நார்டு வாட்ச் அம்சங்கள்:

    1.78 இன்ச் 325PPI AMOLED ஸ்கிரீன், 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 60Hz ரிப்ரெஷ் ரேட்

    SF32LB555V406 பிராசஸர்

    ஆண்ட்ராய்டு 6.0 மற்றும் ஐஒஎஸ் 11 மற்றும் அதன் பின் வெளியான ஒஎஸ் சப்போர்ட்

    ப்ளூடூத் 5.2 LE

    105-க்கும் அதிக வொர்க்அவுட் மோட்கள்

    வாட்டர் ரெசிஸ்டண்ட் IP68

    3 ஆக்சிஸ் அக்செல்லோமீட்டர், இதய துடிப்பு சென்சார், SpO2 மாணிட்டரிங் சென்சார்

    மியூசிக் கண்ட்ரோல்கள்

    52.4 கிராம் எடை

    230 எம்ஏஹெச் பேட்டரி

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    ஒன்பிளஸ் நார்டு வாட்ச் மாடல் மிட்நைட் பிளாக் மற்றும் டீப் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 4 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை அக்டோபர் 4 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு ஒன்பிளஸ் மற்றும் அமேசான் வலைதளங்களில் துவங்குகிறது.

    புதிய ஒன்பிளஸ் நார்டு வாட்ச் வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 500 உடனடி தள்ளுபடி பெறலாம். எனினும், இந்த சலுகை ஒன்பிளஸ் அதிகாரப்பூர்வ வலைதளம், ஒன்பிளஸ் ஸ்டோர் ஆப் மற்றும் தேர்வு செய்யப்பட்ட ஒன்பிளஸ் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர்களில் மட்டுமே பொருந்தும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி அமேசான் தளத்தில் நார்டு வாட்ச் வாங்கும் போது ரூ. 500 உடனடி தள்ளுபடி பெறலாம்.

    ×