search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாம்பு"

    • கழுமங்கலம் கோவிலில் பாம்பு பிடிபட்டது.
    • வனத்துறையினர் அங்கு வந்து அந்த பாம்பை பிடித்து சென்றனர்.

    அரியலூர்:

    உடையார்பாளையம்: கழுமங்கலம் கிராமத்தில் கார்குடி ஏரியின் மேற்கு பகுதியில் விநாயகர், அய்யனார், வீரன், கருப்பு கோவில் உள்ளது. இந்த கோவிலில் அரிய வகை விஷப்பாம்பு ஒன்று வந்தது. பாம்பை கண்டு கோவில் பூசாரி ராமச்சந்திரன் மற்றும் பொது மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வனத்துறையினர் அங்கு வந்து அந்த பாம்பை பிடித்து சென்றனர்.



    • 2-வது முறையும் கடித்ததால் விஷம் உடலில் ஏறி இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.
    • ஜசாப்கானின் மரணத்திற்கு காரணமான பாம்பை அவரது குடும்பத்தினர் பிடித்து அடித்து கொன்றனர்.

    ஜெய்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டத்தில் உள்ள மெக்ரன்கர் கிராமத்தை சேர்ந்தவர் ஜசாப்கான் (வயது 44), தொழிலாளி.

    கடந்த 20-ந்தேதி இவரை பாம்பு ஒன்று கணுக்காலில் கடித்துள்ளது. இதற்காக பொக்ரானில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 4 நாட்களாக அளித்த சிகிச்சையின் பலனாக அவர் பாம்பு கடியில் இருந்து உயிர் பிழைத்து வீடு திரும்பினார்.

    இந்நிலையில் மறுநாள் அவரை மீண்டும் ஒரு பாம்பு கடித்துள்ளது. இந்த முறை அவரது மற்றொரு காலில் பாம்பு கடித்ததால் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஜோத்பூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    முதல் முறை பாம்பு கடியில் இருந்து ஜசாப்கான் மீண்ட நிலையில் 2-வது முறையும் கடித்ததால் விஷம் உடலில் ஏறி அவர் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.

    ராஜஸ்தானில் பாலைவன பகுதிகளில் அதிகமாக காணப்படும் வைபர் என்ற பாம்புகளின் துணை இனமான 'பாண்டி' என்று அழைக்கப்படும் பாம்புகள் தான் ஜசாப்கானை கடித்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே ஜசாப்கானின் மரணத்திற்கு காரணமான பாம்பை அவரது குடும்பத்தினர் பிடித்து அடித்து கொன்றனர்.

    பலியான ஜசாப்புக்கு மனைவி மற்றும் 4 மகள்கள், 5 வயதில் ஒரு மகன் உள்ளனர். 

    • பாம்பு கடித்து பெண் பலியானார்.
    • மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    சாத்தூர்

    சாத்தூர் அருகே உள்ள ஆர். ஆர். நகர் பகுதியைச் சேர்ந்தவர் அய்யப்பன் என்பவரது மனைவி அன்னலட்சுமி (வயது44). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு இயற்கை உபாதை கழிக்க ஊருக்கு ஒதுக்குப்புறமாக சென்ற போது அங்கு பாம்பு கடித்ததாக கூறப்படுகிறது.இதனை அடுத்து அங்கிருந்து வீட்டிற்கு வந்த அன்னலட்சுமி உறவி னர்களிடம் தகவல் தெரிவித்தார்.

    உடனே அவர்கள் அன்னலட்சுமியை சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அன்ன லட்சுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    • கேட்டரிங் தொழிலாளியான தீனா, கடந்த 5 நாட்களுக்கு முன் சேலத்தை அடுத்த அரியானூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் வேலை பார்த்து கொண்டிருந்தார்.
    • அப்போது அப்பகுதியில் திடீரென ஒரு விரியன் பாம்பு ஓட்டலுக்குள் நுழைந்தது.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம் எடப்பாடி க.புதூர் பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் முருகன். இவரது மனைவி சாந்தி. இவர்களது மகன் தீனா (வயது 21).

    கேட்டரிங் தொழிலாளியான தீனா, கடந்த 5 நாட்களுக்கு முன் சேலத்தை அடுத்த அரியானூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் திடீரென ஒரு விரியன் பாம்பு ஓட்டலுக்குள் நுழைந்தது.

    பாம்பை கண்டு அங்கு இருந்தவர்கள் மற்றும் சக ஊழியர்கள் பதறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இந்த நிலையில் ஓட்டலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த தீனா, துணிச்சலுடன் சென்று அந்த பாம்பை பிடித்து அங்கிருந்து அகற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

    இதில் எதிர்பாராத விதமாக பாம்பு தீனாவை கடித்தது. உடனடியாக அவரை மீட்ட சக ஊழியர்கள், சேலம் அரசு ஆஸ்பத்திரியில் தீனாவை சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு கடந்த 5 நாட்களாக தீவிர கண்காணிப்பு பிரிவில் சிகிச்சை பெற்று வந்த தீனா சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிர் இழந்தார்.

    வேலைக்குச் சென்ற இடத்தில் பாம்பு கடித்து இளைஞர் உயிரிழந்த சம்பவம் எடப்பாடி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • மான் தொடர்ந்து பாம்பை கடித்து சாப்பிடுவதை பார்க்க முடிகிறது
    • ஒருவர் தாவரங்களை மட்டும் சாப்பிடுவதில் மானுக்கு சலிப்பு ஏற்பட்டிருக்கலாம் என பதிவிட்டுள்ளார்.

    சைவ உண்ணியான மான் புல் போன்ற தாவர வகைகளை சாப்பிடுவதை பார்த்திருக்கிறோம். ஆனால் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் வன பகுதியில் உலாவும் மான் ஒன்று தனது அன்றாட உணவை போல் பாம்பை கடித்து விழுங்குவதை காணமுடிகிறது.

    வனத்துறை அதிகாரியான பர்வின் கஸ்வான் என்பவர் பகிர்ந்துள்ள அந்த வீடியோவில், வனப்பகுதியில் சாலையோரத்தில் நிற்கும் ஒரு மானின் வாயில் பாம்பு தொங்குகிறது. அந்த மான் தொடர்ந்து பாம்பை கடித்து சாப்பிடுவதை பார்க்க முடிகிறது. பிகேன் என்பவர் டுவிட்டரில் பகிர்ந்துள்ள இந்த வீடியோவை வன அதிகாரியான பர்வின் கஸ்வான் ரீடுவிட் செய்துள்ளார். வீடியோவை பார்த்த பயனர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதில் ஒருவர் தாவரங்களை மட்டும் சாப்பிடுவதில் மானுக்கு சலிப்பு ஏற்பட்டிருக்கலாம் என பதிவிட்டுள்ளார். இதே போல ஏராளமான பயனர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

    • விருதுநகர் அருகே உள்ள அரசு பள்ளி தண்ணீர் தொட்டியில் சாரைப்பாம்பு கிடந்தது.
    • அந்த பாம்பு அருகில் உள்ள வனப்பகுதியில் விடப்பட்டது.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா நரிக்குடி ஒன்றியத்திற்குட்பட்ட ஆனைக்குளம் கிராமத்தில் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளி திறக்கப்படு வதை முன்னிட்டு துப்புரவு பணியாளர்களை கொண்டு பள்ளி முழுவதும் சுத்தம் செய்யும் பணிகள் நடந்தது.

    இந்த நிலையில் பள்ளியில் மாணவர்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியை துப்புரவு பணி யாளர்கள் சுத்தம் செய்த போது, குடிநீர் தொட்டிக்குள் சுமார் 6 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு கிடந்தது. அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த துப்புரவு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள், அதுகுறித்து திருச்சுழி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து தீயணைப்பு நிலைய சிறப்பு அலுவலர் முனீஸ்வரன் தலைமை யிலான வீரர்கள் ஆனைக் குளம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு வந்து, தண்ணீர் தொட்டிக்குள் கிடந்த சாரை பாம்பை பிடித்தனர். பின்னர் அந்த பாம்பு அருகில் உள்ள வனப்பகுதியில் விடப்பட்டது.

    • பாம்பு கடித்து பெண்-முதியவர் பரிதாபமாக இறந்தனர்.
    • சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    விருதுநகர்

    விருதுநகர் அருகே உள்ள சின்னபேராளி கிழக்கு தெருவை சேர்ந்தவர் இந்திராணி(வயது55). இவர் 100 நாள் வேலை திட்டத்தில் கருப்பசாமி கோவில் அருகே உள்ள ஓடை பகுதியில் புதர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்ேபாது அவரது இடது காலில் பாம்பு கடித்துள்ளது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இந்திராணி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து இந்திராணியின் மகன் முத்துமணி கொடுத்த புகாரின்பேரில் விருதுநகர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சாத்தூர் அருகே ஓ.மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் லட்சுமணன் (63). ஆடு மேய்க்கும் தொழிலாளியான இவர் சம்பவத்தன்று காட்டுக்கு சென்றார். அப்போது அவரை பாம்பு கடித்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில் சாத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே லட்சுமணன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • மேற்கு தாம்பரம் காந்தி ரோடு பகுதியில் புதிய குடியிருப்பு ஒன்று கட்டப்பட்டு வருகிறது.
    • தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் 6 அடி நீளம் உள்ள நல்ல பாம்பை லாவகமாக பிடித்தனர்.

    மேற்கு தாம்பரம் காந்தி ரோடு பகுதியில் புதிய குடியிருப்பு ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இதில் வடமாநில தொழிலாளர்கள் சிலர் தங்கி அங்கேயே பணிபுரிந்து வருகின்றனர். இன்று காலை கட்டுமான பணிக்காக அங்கு இருந்த பலகைகளை எடுத்த போது நல்லபாம்பு ஒன்று படமெடுத்து சீறியது.

    இதுகுறித்து தாம்பரம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் 6 அடி நீளம் உள்ள நல்ல பாம்பை லாவகமாக பிடித்தனர்.

    • பாம்பு கடித்து மூதாட்டி இறந்தார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    கள்ளிக்குடி அருகே உள்ள உலகாணி சமத்துவபுரத்தை சேர்ந்தவர் கண்னையா. இவரது மனைவி சக்கம்மாள்(58) அதிகாலை வீட்டு வாசல் தெளிக்க வீட்டிற்கு வெளியே வந்தார். அப்போது அவரை பாம்பு கடித்துள்ளது. அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு சக்கம்மாள் உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் குறித்து கூடக்கோவில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நேற்று காலை ஆடுகளை மேய்ச்சலுக்காக, அருகில் உள்ள பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
    • அப்போது அங்கிருந்த பாம்பு ஒன்று, ஹேமலதாவை கடித்து விட்டது.

    சேலம்:

    சேலம் அருகே உள்ள சின்ன வீராணம் அடுத்த வயக்காடு பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி ஹேமலதா (வயது 37). இவர் நேற்று காலை ஆடுகளை மேய்ச்சலுக்காக, அருகில் உள்ள பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

    அப்போது அங்கிருந்த பாம்பு ஒன்று, ஹேமலதாவை கடித்து விட்டது. இதனால் வலியால் அலறி துடித்த ஹேமலதாவை, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு வலசையூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

    பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஹேமலதா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து வீராணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மேஜை டிராயருக்குள் கருப்பு மற்றும் மஞ்சள் நிறம் கொண்ட பெரிய மலைபாம்பு ஒன்று நிம்மதியாக உறங்குவதை காண முடிகிறது.
    • ஒருவர் அந்த மலைப்பாம்பை பிடித்து காட்டுக்குள் விடுகிறார்.

    ஆஸ்திரேலியாவில் பார் மேலாளர் ஒருவரின் மேஜை டிராயருக்குள் மலைப்பாம்பு சுருண்டு கிடந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    சன்சைன் கோஸ்ட் பாம்பு பிடிப்பவர்கள் மூலம் பேஸ்புக்கில் பகிரப்பட்ட இந்த வீடியோவில் மேஜை டிராயருக்குள் கருப்பு மற்றும் மஞ்சள் நிறம் கொண்ட பெரிய மலைபாம்பு ஒன்று நிம்மதியாக உறங்குவதை காண முடிகிறது. பின்னர் மீட்பு குழுவை சேர்ந்த ஒருவர் அந்த மலைப்பாம்பை பிடித்து காட்டுக்குள் விடுகிறார்.

    பகிரப்பட்டதில் இருந்து 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட பார்வைகளையும், ஆயிரம் விருப்பங்களையும் பெற்றுள்ள இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள். அதில் ஒருவர் வீடியோவை பார்த்து பய்ந்துவிட்டேன். எனது மேஜை டிராயரை பூட்டி விட்டு போக வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

    • சைந்தவி விளையாடிக்கொண்டிருந்த போது அவரை ஒரு பாம்பு கடித்துள்ளது.
    • சைந்தவியை பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    மங்கலம் :

    திருப்பூர் பூமலூர் நடுவேலம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன் (வயது 36). இவருடைய மனைவி தங்கமணி (30). இவர்களுக்கு மதியழகி (12), சைந்தவி (6) ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.

    நேற்று சைந்தவி நடுவேலம்பாளையம் ஓம்சக்தி கோவில் அருகே விளையாடிக்கொண்டிருந்த போது அவரை ஒரு பாம்பு கடித்துள்ளது. பின்னர் அக்கம்பக்கத்தினர் சைந்தவியை பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சைந்தவியை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பிரேத பரிசோதனையில் சிறுமி பாம்பு கடித்து உயிரிழந்தது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    ×