search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாம்பு"

    • திருப்பத்தூரில் குடியிருப்பு பகுதியில் புகுந்த ஐந்து அடி நீளபாம்பு பிடிபட்டது.
    • அப்பகுதியில் சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது வீட்டிற்குள் பாம்பு ஒன்று புகுந்தது. இதனை அறிந்த அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் ஆனந்த் சுப்பிரமணியன் தலைமையிலான குழுவினர் வீட்டில் இருந்த சுமார் 5 அடி நீளம் உள்ள சாரைப்பாம்பை உயிருடன் மீட்டு வனச்சரக அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இதனால் அப்பகுதியில் சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • இத்தலம், “ஸ்ரீ காலஹஸ்தி” என பெயர் பெறுவதற்கு ஒரு காரணம் உள்ளது.
    • “ஸ்ரீ” என்பது சிலந்தியை குறிக்கிறது. “கால” என்பது பாம்பினை குறிக்கிறது. மற்றும் “ஹஸ்தி” என்பது யானையை குறிக்கிறது.

    திருமலை திருப்பதி பற்றி தெரியாத இந்துவே இருக்க முடியாது. ஏன் இந்தியனே கூட இருக்க முடியாது. உலகிலேயே இரண்டாவதாக அதிக வசூல் ஆகும் புனிததலம். இந்த திருப்பதி பற்றி தெரிந்தவர்கள், கண்டிப்பாக "ஸ்ரீ காலஹஸ்தி" ஐ பற்றியும் தெரிந்து வைத்து இருப்பார்கள். திருப்பதியில் இருந்து சுமார் 36 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த புனிததலம், "தென்னகத்தின் கைலாயம்" என்றும் அழைக்கபடுகிறது. ஏன் எனில், இந்த தலம், கைலாயத்திருக்கு ஒரு மாதிரி போலவே அமைந்து உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தலத்தின் அருகே அமைந்து உள்ள ஒரு குன்று, கைலாயத்தை குறிப்பதாகவும், அந்த குன்றில் இருந்து வடக்கு நோக்கி பாயும் ஸ்வர்ணமுகி என்ற சிறு ஆறு, கங்கைக்கு ஒப்பாகவும் கூறப்படுகிறது. இந்த கோவில் சுமார் ஐந்தாம் நூற்றாண்டில், கட்டப்பட்டதாகவும், 12 ம் நூற்றாண்டில் ராஜேந்திர சோழனால் புதுப்பிக்க பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் 5 நூற்றாண்டுகளுக்கு முன் ஸ்ரீ கிருஷ்ண தேவராயரால் புதுப்பிக்கபட்டது.

    இத்தலம், "ஸ்ரீ காலஹஸ்தி" என பெயர் பெறுவதற்கு ஒரு காரணம் உள்ளது. "ஸ்ரீ" என்பது சிலந்தியை குறிக்கிறது. "கால" என்பது பாம்பினை குறிக்கிறது. மற்றும் "ஹஸ்தி" என்பது யானையை குறிக்கிறது. இந்த தலத்தில் "சிவ பெருமானின்" லிங்கத்திற்கு மேலாக கூடு கட்டி வாழ்ந்து வந்த ஒரு சிலந்தி, ஒருநாள், காற்றில் சிதறி விழுந்த தீயை அணைப்பதற்காக , அதாவது லிங்க வடிவிலான சிவபெருமானை காப்பதற்காக, தன் வலைகளை இடைவிடாது பின்னி, அதன் உயிரையே தீயிற்கு இரையாக்க முனைந்தது. அதன் பக்திக்கு மெச்சிய சிவபெருமான், அந்த சிலந்திக்கு நேரடியாக காட்சி தந்து முக்தியும் அளித்ததாக ஒரு கதை உண்டு.

    மேலும் இத்தலத்தில், ஒரு யானையும் பாம்பும் இடை விடாது, சிவ பெருமானிடம் பக்தி செய்து வந்தது. பாம்பு, அதற்கு கிடைக்கும் விலை உயர்ந்த பாசனங்கள், மணிகள், ரத்தினங்கள் ஆகியவற்றை கொண்டு கர்ப்ப கிரகத்தை அலங்கரித்து வந்தது. இதே போலவே, யானையும் தினமும் ஆற்றில் நீராடி, தன் தும்பிக்கை மூலம் சுத்தமான நீரினை கொண்டு வந்து சிவ பெருமானை குளிப்பாட்டியும் வந்தது. மேலும் அது தனக்கு மேலானவை என்று படும் இலைகளையும், மலர்களையும் கொண்டு வந்து சிவபெருமானை அலங்கரித்து வந்தது. இந்த யானை, பாம்பின் அலங்கரிப்பை அகற்றி தன்னுடைய பணியினை செய்தும் வந்தவாறு இருந்தது. இதனால் கோபமுற்ற பாம்பு, ஒருநாள் யானையிடம் நேரடியாக சண்டை செய்தது. பாம்பின் கொடிய விஷத்தினால் யானையும், யானையின் அசுர பலத்தினால் பாம்பும் இறந்து போனது. இவர்கள் தனக்கு தெரிந்த உன்னதமான முறையில் முழு பக்தியுடன் தன்னை வழிபட்டு வந்ததால் சிவபெருமான், இருவரையும் உயிர்ப்பித்து மோக்ஷத்தையும் வழங்கியதாக ஒரு கதை உண்டு. மனிதம் அல்லாத பிற உயிர்களும் பக்தி கொண்ட சிறப்பு காரணமாக, இத்தலம் இப்பெயர் கொண்டதாக கூறப்படுகிறது.

    மேலும் இத்தலம் பல சிறப்புகளை தன்னகம் கொண்டுள்ளது.

    63 நாயன்மார்களில் ஒருவரான, "கண்ணப்பர்", தன் இரு கண்களையும், "கடவுள் குருடு ஆகி விட கூடாது" என்பதற்காக கடவுளுக்கு கொடுத்த தலம் என்ற பெருமை, இத்தலத்திற்கு உண்டு.

    இந்த தலத்தில் "ராகு" மற்றும் "கேது" பகவானுக்கு என்று தனி சிலை வழிபாடு உண்டு. மேலும் ராகு மற்றும் கேது தோசங்களைகளையும் தலம் என்றும் நம்பப்படுகிறது. "கால சர்ப்ப தோசம்" உடையவர்கள் நிவர்த்தி அடையும் தலமாகவும் கருதப்படுகிறது.

    ஒருமுறை பார்வதி தேவி, தான் சிவபெருமானிடம் பெற்ற சாபத்தினால் மனித பிறவி எடுத்து, அதை இந்த தலத்தில் உள்ள சிவபெருமானை பூஜித்து, முன்பை விட பல மடங்கு சக்தியுடன் தேவலோக உடலை அடைந்ததாக ஒரு கருத்து உண்டு. "பஞ்சாக்ஷரி மந்திரம்" என்னும் மந்திரங்களை பார்வதி தேவி உதிர்த்த தலமும் இதுவே. இந்த தலத்தில் "சிவ ஞானம்" அடைந்ததால் பார்வதி தேவி, "ஞான பிரசுன்னாம்பிகை தேவி" என்று போற்றபடுகிறார்.

    இந்த தலம் பஞ்ச பூத தலங்களில் ஓன்று. பஞ்ச பூத தலங்களில் "வாயு" வை குறிக்கும் தலமாக இத்தலம் இருக்கிறது. மற்ற பஞ்ச பூத தலங்கலாவன:

    நிலம் - ஏகாம்பரேஸ்வரர் கோவில் (காஞ்சிபுரம்)

    ஆகாயம் - சிதம்பரம் கோவில்

    நீர் - திருவானைக்காவல் கோவில்

    நெருப்பு - திருவண்ணாமலை கோவில்

    "மயூரா", "தேவேந்திரன்", மற்றும் "சந்திரன்" முதலிய தேவர்கள் இங்கே பாவ விமோச்சனம் அடைந்ததாக ஒரு வரலாறும் உண்டு.

    "ஞான கலா" என்ற பூதம், இந்த தலத்தில் தான் 15 வருடம் பிரார்த்தனை செய்து தன் மனித உடலை திரும்ப பெற்றதாகவும் ஒரு கதை உண்டு.

    இவ்வளவு சிறப்பு மிக்க "ஸ்ரீ காலஹஸ்தி" கோவிலின் ராஜ கோபுரம், மே 26 ம் தேதி இடிந்து தரை மட்டம் ஆனது. இதன் ராஜகோபுரம் சுமார் 135 அடிகளை உயரமாக கொண்டது. சில மாதங்களுக்கு முன் ஏற்பட்ட விரிசல்கள் பெரிதாகி, அவை கோவில் கோபுரமே முற்றிலுமாக தரை மட்டம் ஆகும் நிலைக்கு ஆளாகி இருக்கிறது. சரித்திர புகழ் வாய்ந்த இந்த புனித தலம், ஒரு மோசமான நிலையை தன் அனுபவத்தில் கண்டுள்ளது. "எவ்வளவு செலவு ஆனாலும், கோபுரம் மறுபடியும் பழைய நிலைக்கு சீரமைக்கபடும்" என்ற அரசின் ஆறுதல் வார்த்தைகள் ஒரு புறம் இருக்க, கோவில் இடிந்து தரை மட்டம் ஆனது, என்னுள் அழுத்தமான ஒரு சோக பதிவை ஏற்படுத்தவே செய்து இருக்கிறது. நல்ல வேலையாக, முன் கூட்டியே எச்சரிக்கை விடுக்கபட்டதால், பெரும் உயிர் சேதம் தடுக்கபட்டு இருக்கிறது. எனினும் கோபுரத்தை தாய் வீடாக கொண்ட குரங்கு கூட்டங்கள் அடியோடு அழிபட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. அவையும் உயிர்கள் தானே!!!.

    இந்த நிகழ்வு வெறும் வருத்தத்தை மட்டும் ஏற்படுத்தும் நிகழ்ச்சியாக நான் கருதவில்லை. இது மற்ற எல்லா கோவில்களின் கண்காணிப்புக்கும் இடப்பட்ட ஒரு எச்சரிக்கை. நம் இந்தியா, இவ்வாறான புராண சிறப்பு வாய்ந்த பல இடங்களை கொண்டு உள்ளது. அவற்றை நாம் கண்டிப்பாக போற்றி பாதுகாக்கவே வேண்டும். "ஆன்மிகம்" என்ற ஒரு அற்புதமான ஒரு உணர்வை நம்மில், "கோவில்", "மசூதி", "சர்ச்" மற்றும் எல்லா மதத்தின் கோவில்களுமே தான் வளர்த்து வருகின்றன. "கடவுள்", என்பவர் உண்மையா, பொய்யா என்ற சர்ச்சைக்கு அப்பாற்பட்டு, கோவில்கள் நம் புராதான சின்னங்கள் என்பதை யாராலும் மறுத்து விட முடியாது. நம் பெருமைகள், இவ்வாறான சின்னங்களை காப்பாற்றுவதிலும் அடங்கி உள்ளது.

    கண்டிப்பாக அரசு, இனி நல்ல முறையில் நம் புனித தலங்களை காக்கும் என்ற நம்பிக்கை உடன் இந்த பதிவை நிறைவு செய்கிறேன்.

    ஓம் நம சிவாய!...

    • பாம்பை அந்த முதியவர் தனது லுங்கிக்குள் போட்டு மடித்து கட்டிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார்.
    • பாம்புடன் விளையாட்டு காட்டியவர் பரனூர் பகுதியை சேர்ந்த சங்கர் என்பது தெரிய வந்தது.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மேம்பாலம் அருகே டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இங்கு சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் தோளில் சுமார் 7 அடி நீள பாம்பை சுற்றியபடி வந்தார்.

    இதனை கண்டு மதுவாங்க வரிசையில் நின்ற குடிமகன்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். அந்த முதியவர் லாவகமாக அந்த பாம்பை கையாண்டார். அவரது சொல்லுக்கு கட்டுப்பட்டு அந்த பாம்பும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் அவரது தோளில் நெளிந்து கொண்டு இருந்தது.

    இதனை கண்டு அவ்வழியே வாகனத்தில் சென்றவர்கள் ஆச்சரியம் அடைந்தனர். அவர்கள் வாகனத்தை நிறுத்தி முதியவர் பாம்புடன் நிற்கும் காட்சியை கண்டு ரசித்தனர். சிலர் இதனை தங்களது செல்போனிலும் வீடியோவாக எடுத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    சிறிது நேரம் கழித்து அந்த பாம்பை அந்த முதியவர் தனது லுங்கிக்குள் போட்டு மடித்து கட்டிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார்.

    பின்னர் அவர் அந்த பாம்பை அருகில் உள்ள புலிப்பாக்கம் ஏரிக்கரையில் உள்ள புதரில் விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.

    பாம்புடன் விளையாட்டு காட்டியவர் பரனூர் பகுதியை சேர்ந்த சங்கர் என்பது தெரிய வந்தது. இதுகுறித்து அவர் கூறும்போது, "நான் வந்தபோது சாலையின் குறுக்கே இந்த பாம்பு ஊர்ந்து சென்றது. வாகனத்தில் அடிபட்டு இறந்துவிடக்கூடாது என்பதால் அதனை பிடித்து மீண்டும் வனப்பகுதியில் விட்டேன்" என்றார்.

    • இந்த நிலையில் இவரது வீட்டின் மின் இணைப்பு அறையில் 6 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு திடீரென புகுந்தது.
    • பின்னர் அந்த பாம்பை சாக்குப்பையில் போட்டு அருகில் உள்ள வனப்பகுதியில் விட்டனர்.

    பாபநாசம்:

    பாபநாசம் அருகே வங்காரம் பேட்டை தஞ்சை மெயின் சாலையில் வசித்து வருபவர் அரங்கராஜன் (வயது 55) இவர் நகை வேலை செய்து வருகிறார்

    இந்த நிலையில் இவரது வீட்டின் மின் இணைப்பு அறையில் 6 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு திடீரென புகுந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அரங்கராஜன் உடனடியாக பாபநாசம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

    தகவல் அறிந்ததும் பாபநாசம் தீயணைப்பு நிலைய அலுவலர் இளங்கோவன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து வீட்டின் மின் இணைப்பு அறையில் புகுந்த சாரைப்பாம்பை பிடித்தனர்.

    பின்னர் அந்த பாம்பை சாக்குப்பையில் போட்டு அருகில் உள்ள வனப்பகுதியில் விட்டனர்.

    • தெய்வக்கனி மாடுகளை ஓட்டிக் கொண்டு தோட்டத்திற்கு சென்றுள்ளார்.
    • சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் தெய்வக்கனியை சேர்த்தனர்.

    நெல்லை:

    பாளை தியாகராஜ நகரை அடுத்த ராஜகோபாலபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் தங்கராஜ். விவசாயி. இவருக்கு தெய்வக்கனி (வயது 50) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இவர்களுக்கு சொந்தமான தோட்டம் அதே பகுதியில் உள்ளது.

    நேற்று தெய்வக்கனி வீட்டில் வளர்த்து வரும் மாடுகளை ஓட்டிக் கொண்டு தோட்டத்திற்கு சென்றுள் ளார். அங்கு அவரை பாம்பு கடித்துள்ளது. இதனால் மயங்கி விழுந்த தெய்வக் கனியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாட்டு கொட்டகையில் புகுந்த 7 அடி நீள பாம்பு
    • வனத்துறையில நாகலாபுரம் காப்புக்காட்டில் விட்டனர்

    துறையூர்,

    திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் உள்ள தனலட்சுமி நகரை சேர்ந்தவர் கேசவன் என்பவருக்கு துறையூர் - ஆத்தூர் செல்லும் சாலையில் சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. அதில் வாலீஸ்புரம் கிராமத்தை சேர்ந்த உதயசூரியன் என்பவர் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வைத்து வளர்த்து வருகிறார். இந்நிலையில் கால்நடைகளுக்கு தீனி போடுவதற்காக உதயசூரியன் மாட்டு கொட்டகைக்கு சென்றுள்ளார். அப்பொழுது அங்கு சுமார் 7 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு ஒன்று இருந்துள்ளது. இது பற்றி துறையூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் துறையூர் தீயணைப்பு நிலைய அலுவலர் பாலச்சந்தர், சதீஷ் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் அங்கு சென்று, லாவகமாக பாம்பை பிடித்து துறையூர் வனத்துறை அலுவலரிடம் ஒப்படைத்தனர். வனத்துறை அலுவலர்கள் பாம்பை நாகலாபுரம் காப்புக்காட்டில் பத்திரமாக விட்டனர்.

    • ராஜபாளையம் அருகே பாம்பு கடித்து பெண் பரிதாபமாக இறந்தார்.
    • இதுகுறித்து தளவாய்புரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள புனல்வேலி நீராசிலிங்கம் பிள்ளை தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மனைவி சீதாலட்சுமி (வயது54). சம்பவத்தன்று அருந்ததியர் காலனி தெருவில் உள்ள மாரியம்மன் கோவில் அருகே நடந்து சென்றபோது சீதாலட்சுமியை பாம்பு கடித்தது. அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தளவாய்புரம் போலீஸ் நிலையத்தில் கிருஷ்ணன் புகார் கொடுத்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • மறைமலைநகர் அரசு மேல்நிலை பள்ளியில் 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
    • பள்ளி மாடிப்படியின் கீழ் பகுதியில் ஒரு பாம்பு ஊர்ந்து சென்று கொண்டிருந்தது.

    மறைமலைநகர்:

    செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அரசு மேல்நிலை பள்ளியில் 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் வழக்கம்போல் பள்ளிக்கு வந்த மாணவர்கள் பள்ளி வகுப்பறைக்கு செல்லும்போது திடீரென பள்ளி மாடிப்படியின் கீழ் பகுதியில் ஒரு பாம்பு ஊர்ந்து சென்று கொண்டிருந்தது. இதை பார்த்த மாணவர்கள் அலறியடித்து கொண்டு பள்ளி தலைமை ஆசிரியரிடம் தகவல் தெரிவித்தனர். உடனே பள்ளி தலைமை ஆசிரியர் மறைமலைநகர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

    விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மாடிப்படி கீழ் பகுதியில் மின்சார மீட்டர் அருகே மறைந்திருந்த 3 அடி நீளமுள்ள நல்ல பாம்பை லாவகமாக பிடித்து அருகில் உள்ள வனப்பகுதியில் பாதுகாப்பாக விட்டனர்.

    • நேற்று இரவு கடலூர் முதுநகர் சான்றோர் பாளையம் பகுதியை சேர்ந்த ஒரு நபர் தங்களது வீட்டில் பாம்பு இருப்பதாக நள்ளிரவு தகவல் தெரிவித்துள்ளார்.
    • அவர்கள் செல்லா மற்றும் அஜய்யை சரமாரியாக தாக்கியதோடு செல்லா வைத்திருந்த செல்போனை உடைத்து நொறுக்கினர்

    கடலூர்:

    கடலூர் மஞ்சக்குப்பத்தை சேர்ந்தவர் செல்லா (வயது 30). வன ஆர்வலர். இவரது உதவியாளர் செல்லங்குப்பம் சேர்ந்த அஜய் (வயது 23). இவர்கள் கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பாம்பு பிடித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு கடலூர் முதுநகர் சான்றோர் பாளையம் பகுதியை சேர்ந்த ஒரு நபர் தங்களது வீட்டில் பாம்பு இருப்பதாக நள்ளிரவு தகவல் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து செல்லா மற்றும் அவரது உதவியாளர் அஜய் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் சான்றோர் பாளையம் பகுதியில் சென்றனர். பின்னர் பாம்பு இருப்பதாக தகவல் கொடுத்த நபருக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு தெரிவித்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு வாலிபர் செல்லா மற்றும் அஜய்யிடம் நீங்கள் யார்? எதற்காக நிற்கிறீர்கள்? என கேட்டார்.

    அப்போது பாம்பு பிடிப்பதற்காக இங்கு வந்துள்ளோம் என தெரிவித்தனர். இந்த நிலையில் அந்த வாலிபர் திடீரென்று செல்லா மற்றும் அஜய்யை சரமாரியாக தாக்கினார். மேலும் அதே பகுதியை சேர்ந்த தனது ஆதரவாளர்களுக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டார். இதனை தொடர்ந்து சுமார் 20-க்கும் மேற்பட்ட கும்பல் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

    அவர்கள் செல்லா மற்றும் அஜய்யை சரமாரியாக தாக்கியதோடு செல்லா வைத்திருந்த செல்போனை கீழே போட்டு உடைத்து நொறுக்கினர். மேலும் செல்லாவை தாக்கியபோது அவர் கழுத்தில் இருந்த 2 பவுன் தங்க சங்கிலி அறுந்து கீழே விழுந்த நிலையில் அதனை பத்திரமாக செல்ல எடுத்துக்கொண்டு அங்கிருந்து உயிர் பிழைத்து தப்பித்து வந்தனர். இதில் காயமடைந்த செல்லா மற்றும் அஜய் ஆகியோர் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது குறித்து கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் அருகே வன ஆர்வலர் செல்லா மற்றும் அவரது உதவியாளரை ஒரு கும்பல் தாக்கி செல்போைன அடித்து நொறுக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • 4 அடி நீளம் உள்ள சாரைப்பாம்பு வந்துள்ளது.
    • வெள்ளகோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் உப்புபாளையம் ரோடு, சக்தி நகரில் விஜயகுமார் என்பவரது வீட்டின் காம்பவுண்டுக்குள் சுமார் 4 அடி நீளம் உள்ள சாரைப்பாம்பு வந்துள்ளது.இதைக்கண்ட விஜயகுமார் வெள்ளகோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.

    தகவலின் பேரில் தீயணைப்பு நிலைய அதிகாரி வேலுச்சாமி தலைமையில், தீயணைப்பு படையினர் விரைந்து வந்து 4 அடி நீளமுள்ள சாரைப்பாம்பை உயிருடன் பிடித்து காட்டுப் பகுதியில் விட்டனர்.

    • பாம்பு கடித்து விவசாயி இறந்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே உள்ள உலக்குடியை சேர்ந்தவர் பூமிநாதன் (வயது 49). சம்பவத்தன்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது அவரை பாம்பு கடித்தது.

    உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பூமிநாதனின் மனைவி ஆறுமுகம் நரிக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

    • மதுப்பிரியர்கள் ஓடுவதை பார்த்துவிட்டு சந்தையில் காய்கறி வாங்க வந்த பெண்களும் ஓட்டம் பிடித்தனர்.
    • மது வாங்க வந்த ஒருவர் பாம்பை பிடித்து அருகில் உள்ள குன்று பகுதியில் விட்டார்.

    கச்சிராயப்பாளையம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப்பாளையம் புதிய பஸ் நிலையத்தில் டாஸ்மாக் மதுபான கடை செயல்பட்டு வருகிறது.

    மேலும் இந்த பஸ் நிலையத்தில் வாரம் தோறும் புதன்கிழமை வார சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் நேற்று புதன்கிழமை என்பதால் கச்சிராயப்பாளையத்தை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பெண்கள் காய்கறி வாங்குவதற்காக அதிக அளவில் வார சந்தையில் கூடியிருந்தனர். வாரச்சந்தை நடக்கும் இடம் அருகே டாஸ்மாக் மதுபான கடையும் உள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 8 மணி அளவில் மதுபானம் வாங்குவதற்காக மதுப்பிரியர்கள் கடை முன்பு வரிசையில் நின்று கொண்டிருந்தனர். அபோது மதுபான கடைக்குள் இருந்து பாம்பு ஒன்று வெளிய வந்தது.

    இதை பார்த்த மது பிரியர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். மதுப்பிரியர்கள் ஓடுவதை பார்த்துவிட்டு சந்தையில் காய்கறி வாங்க வந்த பெண்களும் ஓட்டம் பிடித்தனர். இதையடுத்து மது வாங்க வந்த ஒருவர் பாம்பை பிடித்து அருகில் உள்ள குன்று பகுதியில் விட்டார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    ×