search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாம்பு"

    • மாடு வைத்து பால் கறந்து வியாபாரம் செய்து வருகிறார்.
    • பாம்பு அவருடைய வலது கால் பெருவிரலை கடித்து விட்டது.

    ஊத்துக்குளி :

    ஊத்துக்குளி அடுத்த இச்சிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி மனோகரன். மாடு வைத்து பால் கறந்து வியாபாரம் செய்து வருகிறார். அவருடைய தோட்டத்தில் சம்பவத்தன்று காலை வழக்கம் போல் பால் கறக்கச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அங்கு பதுங்கி இருந்த பாம்பு அவருடைய வலது கால் பெருவிரலை கடித்து விட்டது. இதனை யடுத்து அவரை மீட்டு அவருடைய மகன் மற்றும் உறவினர்கள் பவானியில் உள்ள தனியார் மருத்துவ மனையில்முதலுதவி சிகிச்சைஅளித்தனர். பின்பு மேல் சிகிச்சைக்காக குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்ட தாக தெரிவித்துள்ளார்.

    இது குறித்து உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் ஊத்துக்குளி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாம்பு கடித்து விவசாயி பலியான சம்பவம் அந்த பகுதி மக்கள் மத்தியில்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் வீடுகள் மற்றும் தோட்டங்கள் ஆகியவற்றை தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.
    • சமைக்காத அசைவ கழிவுகளை வீட்டுக்கு அருகில் கொட்ட கூடாது.

    திருப்பூர் :

    மலைக்கிராமங்கள், மற்றும் கிராமப்புற பகுதி களில் கோடைக்காலங்கள் வந்துவிட்டாலே பாம்புகள் நடமாட்டம் அதிகரித்து விடும். குளிர், மற்றும் மழைக்காலங்களில் பதுங்கி கிடக்கும் பாம்புகள் வெயில் காலம் அதற்கு ஏற்ற காலம் என்பதால் வசிப்பிடங்களில் எளிதாக வந்து செல்லும். இரவு நேரங்களில் மனிதர்கள் மிதித்துவிட்டாலோ அல்லது அதன் அருகில் சென்று விட்டாலோ அது தனது சுய பாதுகாப்புகாக கடித்து விடுகிறது. வெயில் காலம் தொடங்கி உள்ள நிலையில் பாம்பு கடியால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    இதுகுறித்து திருப்பூர் மருத்துவர்கள் கூறுகை யில்;- கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் வீடுகள், மற்றும் தோட்டங்கள் ஆகியவற்றை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். செங்கற்கள், தேங்காய் மட்டைகள் மற்றும் பழைய பொருட்கள் வைத்திருக்கும் அறை ஆகியவற்றை அடி க்கடி பராமரித்து வைத்தி ருக்க வேண்டும்.. கூடிய வரைக்கும் செங்கற்கள், தேங்காய் மட்டைகளை வீட்டுக்கு அருகில் வைத்தி ருப்பதை தவிர்ப்பது நல்லது. சமைக்காத அசைவ கழிவுகளை வீட்டுக்கு அருகில் கொட்ட கூடாது. குழித்தோண்டி அதில் புதைத்து விட வேண்டும். இரவு நேரம் மின்விளக்குகள் எரிய வேண்டும்.

    பாம்பு கடித்த உடனே அந்த இடத்தில் வாயை வைத்து உடனடியாக ரத்த த்தை உறிஞ்சி வெளியே எடுத்துவிட்டால் உயிர் பிழைத்துவிடலாம் என்று கூட ஒரு மூட நம்பிக்கை உண்டு. அதனை செய்ய கூடாது. காலம் பொன் போன்றது என்பது பாம்பு கடித்தவருக்கு தான் பொருந்தும். பாம்பு கடிப்ப ட்டவரை விரைவாக அரசு மருத்துவமனை கொண்டு சென்று சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்வது தான் நல்லது. பெரும்பாலான தனியார் மருத்துவமனை களில் பாம்பு கடி மருந்துகள் இருப்பதில்லை.

    இயற்கை மருத்துவம் எனும் பெயரில் பாம்பு கடித்த இடத்தின் அருகே கிடைக்கும் பச்சை இலை சாறை ஊற்ற வேண்டும் என்றும் ஒரு செய்தி உலா வருகிறது. இதுவரை இதற்கு அறிவியல்பூர்வமான நிரூபணம் எதுவும் இல்லை. ஆனால் இவை யாவும் அறிவியலுக்குப் பொருந்தா தவை மட்டு மல்ல, உண்மை யும் அல்ல. இவற்றால் நேரம் வீணாகி பாம்பு கடியால் பாதிக்கப்பட்ட வருக்கு உயிர் போகும் ஆபத்துதான் அதிகமாகும்.

    எந்த வகை பாம்பு கடித்தது என்பதை மருத்து வர்களுக்கு தெரியப்படுத்து வதற்காக அந்தப்பாம்பின் வகையை கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டும்.

    பாம்பு கடித்த இடத்தின் அருகே இறுக்கமான கயிறு உள்ளிட்டவற்றை கொண்டு கட்டுவதால் எந்த ஒரு பயனும் இருக்காது. ஒரு வேளை அப்படி கட்டப்ப ட்டால் ,அந்தக்கட்டு அக ற்றப்படுவதை நல்ல மருத்துவ வசதிகள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் உடைய பெரிய மருத்துவ மனைகள், மருத்துவக்க ல்லூரி மருத்துவமனை கள் உள்ளிட்டவற்றில் செய்வதே நல்லது. ஏனென்றால், இறுக்கமாக கட்டப்பட்டி ருந்த கட்டு பிரிக்கப்படும் பொழுது அந்த இடத்தில் இருந்து ரத்த ஓட்டம் அதிக மாகும். இதன் காரணமாக உடலின் பிற பாகங்களுக்கும் விஷம் சென்றடைந்து பாதிப்பும் அதிகமாகும். நல்ல வசதிகள் உள்ள மருத்துவமனைகளில் இந்த பாதிப்பை குறைப்பதற்கான சிகிச்சைகளை எளிதில் செய்ய முடியும்.

    கடித்தது எந்த வகை பாம்பு என்று ஆராய்ச்சி செய்து நேரத்தை கடத்து வதை விட, விரைவில் பாதிக்கப்பட்டவரை மருத்து வமனைக்கு கொண்டு செல்வதில்தான் கவனத்தை செலுத்த வேண்டும். ஏனெ ன்றால், எந்த வகைப் பாம்பு கடித்து இருந்தாலும் பாம்பு கடிக்கு எதிராக வழங்க ப்படும் மருந்து ஒன்றுதான் கடிப்பட்டவரின் உயிரைக் காப்பாற்றும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    பாம்புக்கடி பட்ட பின்பு கயிறு கட்டுவதால் பலனி ல்லை என்பதையும் தாண்டி அந்த நச்சு கடிபட்ட இடத்திலேயே அதிகமாக தேங்கி இருப்பத ற்கும் கயிறு கட்டப்படுவது வழி வகுக்கும். இதன் காரணமாக கடிபட்ட இடத்தில் அணு க்கள் பாதிக்கப்பட்டு, சீழ் பிடிக்கும் நிலை கூட உண்டாகலாம் என்கிறார் திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர் கோபால கிருஷ்ணன். மேலும் அவர் கூறுகையில், நாக பாம்பு, கட்டு விரியன், சுருட்டை விரியன், கண்ணாடி விரியன். இந்த நான்கு வகைப் பாம்புகளே இந்தியாவில் அதிக பாம்பு க்கடி மரணத்துக்கு காரண மாக உள்ளன.

    ஒருவருக்கு பாம்பு கடித்தது தெரியவந்தாலோ அது கடித்து இருப்பது போல உணர்ந்தாலோ என்ன செய்ய வேண்டும் என்ற சில வழிமுறைகளை உலக சுகாதார அமைப்பு வகுத்துள்ளது. உடனடியாக கடி பட்ட இடத்தில் இறுக்க மான ஆடை அணிந்து இருந்தால் அதை அகற்ற வேண்டும். ஏனென்றால் கடிபட்ட இடத்தில் வீக்கம் ஏற்பட்டால் இவற்றின் காரணமாக அபாயம் ஏற்படலாம். பாம்பு கடித்த உடல் பாகம் அருகே இறுக்க மாகக் கட்டக் கூடாது. அப்படி இறுக்க மாக இருந்தால் ரத்த ஓட்டம் தடைபடும். பாம்பு கடித்த இடத்தில் வீக்கத்தை உண்டாக்காமல் நரம்பு மண்டலத்தைத் தாக்கும் தன்மையுள்ள பாம்புகளின் கடிகளுக்கு மட்டும் கை அல்லது கால் விரல்களில் இருந்து கடிபட்ட இடம் மற்றும் அதற்கும் மேல் பேண்டேஜ் அல்லது எலாஸ்டிக் சுற்றி நச்சு உடலின் பிற பாகங்களுக்கு பரவாமல் தடுக்கலாம். ஆனால், ரத்த ஓட்டம் தடைபடும் அளவுக்கு மிகவும் இறுக்கமாக இருக்கக்கூடாது. தசைப் பிடிப்புக்கு ஒட்டப்படும் பேண்டேஜின் இறுக்கமே போதுமானது. எலாஸ்டிக் அல்லது பேண்டேஜ் இல்லாதபோது துணி, துண்டு ஆகியவற்றை கிழித்து பயன்படுத்தலாம். கடிபட்டவர் இயன்றவரை உடலை அசைக்காமல் இருக்க வேண்டும். பார ம்பரிய மருத்துவ முறை எனும் பெயரில் அறிவியல்பூர்வமாக அங்கீகரிக்கக்கப்படாத அல்லது ஆபத்தை விளை விக்க கூடிய எந்த வகையான முதலுதவி சிகிச்சையையும் செய்யக்கூ டாது. மருத்துவ வசதி கிடைக்கும் வரை பாதிக்க ப்பட்டவரை இடது பக்க மாக ரெக்கவரி பொசி ஷனில் படுக்க வைக்கவும். மேலும் பாம்பு கடிப்பட்ட வரிடம் நம்பிக்கையூட்டும் வகையில் பேசி அவர் மனப்பயத்தை போக்க வேண்டும். வாகன வசதிகள் இல்லாத கிராமப்புறங்கள் என்றால் அரசு ஆம்புலன்ஸ் வசதியை பயன்படுத்தி பாம்பு கடித்து 1 மணி நேரத்துக்குள் அருகில் உள்ள அரசு மருத்துவ மனையில் சேர்த்து சிகிச்சையை மேற்கொ ண்டால் பாம்பு கடிப்பட்ட வர் உயிரை காப்பாற்றி விடலாம். இவ்வாறு அவர் கூறினார். 

    • நடவடிக்கை எடுக்க எஸ்.பி. அலுவலகத்தில் புகார்
    • பூசாரியை நம்பாமல் இருந்ததாலேயே எங்களின் தந்தை இறந்தார் என்று அவர் கூறிவருகிறார்.

    நாகர்கோவில் :

    நடிகர் விவேக் ஒரு படத்தில் சாலையில் எடுத்த கற்களை அதிர்ஷ்ட கற்கள் என்று கூறி பொதுமக்களை ஏமாற்றுவார்.

    இதுபோன்ற ஏமாற்று சம்பவங்கள் பல முறை நடந்தாலும் ஏமாறுபவர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள். நாகர்கோவில் பகுதியில் இதுபோன்ற சம்பவம் ஒன்று இப்போது நடந்துள்ளது. இதுபற்றி எஸ்.பி. அலுவலகத்தில் ஒருவர் புகார் கொடுத்தார்.அதன்விபரம் வருமாறு:-

    நாகர்கோவில் பகுதியை சேர்ந்த ஒருவர் புறநகர் பகுதியில் கோவில் ஒன்று தொடங்கினார். அங்கு வரும் பக்தர்களிடம் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக டெல்லியில் பணிபுரிந்து வந்தேன். ஆன்மீகம் மீது கொண்ட பற்று காரணமாக பதவியை ராஜினாமா செய்து விட்டு இங்கு வந்தேன்.

    இக்கோவிலுக்கு வருவோருக்கு நாக தோஷம் நீங்கும் என்று கூறி பூஜைகள் செய்தார்.

    பாம்புகளுடன் வாழ்வதாகவும், இரவில் பாம்புகள் வாந்தி எடுக்கும் போது மாணிக்க கற்கள் கிடைத்ததாகவும் எங்களிடம் கூறினார்.

    அந்த கற்கள் வீட்டில் இருந்தால் அதிர்ஷ்டம் பெருகும் எனவும் தெரிவித்தார். பக்தர்களிடம் அந்த கற்களை கட்டாயப்படுத்தி வாங்க வைத்தார்.

    இதன்மூலம் லட்சக்கணக் கில் அவருக்கு பணம் கிடைத்தது. இதன்மூலம் குறுகிய காலத்தில் சொகுசு கார்கள் , பங்களாக்கள் கட்டினார்.

    ஆனால் பூசாரி கொடுத்த நவரத்தின கற்கள், மாணிக்க கற்களை வாங்கி சென்றவர்களுக்கு எந்த பலனும் ஏற்படவில்லை. அவர்கள் மேலும் பல இன்னல்களுக்கு ஆளானார்கள்.

    இதுபற்றி பூசாரியிடம் கூறிய போது தன்னிடம் உள்ள ஸ்படிக லிங்கத்தை வாங்கி வீட்டில் வைத்தால் செல்வம் பெருகும், இன்னல்கள் அகலும் என்றார். அந்த ஸ்படிக லிங்கம் ரூ.75 ஆயிரம் எனவும் தெரிவித்தார்.

    இதனை நம்பி ஏராளமான பெண்கள் ஸ்படிக லிங்கத்தை வாங்கி சென்றனர். மேலும் கோவிலுக்கு வரும் பெண்களிடமும் அவர் மோசடி கற்களை கொடுத்து ஏமாற்றினார்.

    பூசாரியின் மோசடி தெரியவந்ததால் நாங்கள் கோவிலுக்கு செல்வதை தவிர்த்ேதாம். இந்த நிலையில் எங்களின் தந்தை உடல் நலக்குறைவால் இறந்தார். ஆனால் பூசாரியை நம்பாமல் இருந்ததாலேயே எங்களின் தந்தை இறந்தார் என்று அவர் கூறிவருகிறார்.

    மேலும் எங்களை தீர்த்து கட்டிவிடுவதாகவும் கூறிவருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் மனுவில் கூறியிருந்தார்.

    இந்த மனு மீது போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இது குமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வீட்டில் கண்ணாடி விரியன் பாம்பு ஒன்று புகுந்தது,
    • பாம்பை ஓகேனக்கல் செக்போஸ்ட் அடுத்துள்ள வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.

    பென்னாகரம்,

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பஞ்சாயத்து அலுவலகம் எதிரில் வசிப்பவர் பாலாஜி. இவரது வீட்டில் கண்ணாடி விரியன் பாம்பு ஒன்று புகுந்தது, இது குறித்து உடனடியாக பென்னாகரம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

    தகவலின் பேரில் பென்னாகரம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய அலுவலர் ரமேஷ் குமார் தலைமையில் சிறப்பு நிலைய அலுவலர் முத்துகிருஷ்ணன் தீயணைப்பு அலுவலர்கள் கேப்டன் ராஜ், சிதம்பரம், மாரியண்ணன், ராஜ்குமார், கார்த்திக் ஆகியோர் அடங்கிய குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாலாஜி வீட்டில் இருந்த கண்ணாடி விரியன் பாம்பை உயிருடன் பிடித்தனர்.

    உயிருடன் பிடிபட்ட கண்ணாடி விரியன் பாம்பை ஓகேனக்கல் செக்போஸ்ட் அடுத்துள்ள வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.

    • 8அடி நீளம்கொண்ட பாம்பு சிக்கிக்கொண்டு தவித்தது.
    • அரைமணிநேரம் போராட்டத்திற்கு பிறகு மீட்டு வனபகுதியில் கொண்டு சென்று விட்டார்.

    சீர்காழி:

    சீர்காழி அருகே செம்மங்குடியில் அரவிந்த் என்பவரின் வீட்டு பின்புறம் அமைத்திருந்த வலையில் 8அடி நீளம்கொண்ட மஞ்சள் சாறை பாம்பு சிக்கிக்கொண்டு தவித்தது.இதனால் அப்பகுதிக்கு செல்லவே அப்பகுதியின் அச்சம் அடைந்து புளிச்சகாடு பகுதியை சேர்ந்த பாம்புபிடி வீரர் தினேஷிடம் தகவல் அளித்தனர்.

    அங்கு சென்ற தினேஷ் வலையில் சிக்கியிருந்த 8அடிநீள பாம்பினை அரைமணிநேரம் போராட்டத்திற்கு பிறகு லாவகமாக மீட்டு ஆள்நடமாட்டம் இல்லாத வனபகுதியில் கொண்டு சென்று விட்டார்.இளைஞருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

    • இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அலுவலகத்திற்குள் சென்றார்.
    • கொம்பேரிமூக்கன் விஷ பாம்பை லாவகமாக பிடித்து சென்றனர்.

    பாலக்கோடு,

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் குப்பன்கொட்டாய் கிராமத்தை சேர்ந்த இளைஞர் அரவிந்த் (வயது 21) என்பவர் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அலுவலகத்திற்குள் சென்றார்.

    திரும்பி மீண்டும் வந்து இருசக்கர வாகனத்தை எடுக்க முற்பட்டபோது 2 அடி நீளமுள்ள கொம்பேரிமூக்கன் விஷப் பாம்பு இருசக்கர வாகனத்தின் என்ஜின் பகுதியில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதையடுத்து பாலக்கோடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தீயனைப்பு வீரர்கள் விரைந்து வந்து இருசக்கர வாகனத்தில் இருந்த கொம்பேரிமூக்கன் விஷ பாம்பை லாவகமாக பிடித்து சென்றனர்.

    இதனால் வாலிபர் நிம்மதியுடன் இருசக்கர வாகனத்தை எடுத்து சென்றார்.இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • குளித்தலை அருகே 6 அடி நீளமுள்ள நல்லபாம்பு பிடிபட்டது
    • வீட்டினுள் இருந்த பாம்பை பத்து நிமிடத்தில் தீயணைப்புத் துறையினர் வந்து பிடித்ததால் அப்பகுதி மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்

    குளித்தலை:

    குளித்தலை நகராட்சிக்குட்பட்ட பெரிய பாலம் சண்முகா நகரில் வசிக்கும் சாந்தி என்பவரது வீட்டினுள் நல்ல பாம்பு சென்று விட்டது. வீட்டில் இருந்தவர்கள் பாம்பை கண்டதும் வெளியில் அலறி அடித்து ஓடி வந்து முசிறி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் கிடைத்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து சுமார் 6 அடி நீளமுள்ள கொடிய விஷத்தன்மை உடைய நல்ல பாம்பை அவர்கள் வைத்திருந்த இடுக்கி இரும்பு கம்பால் லாபகமாக பிடித்தனர். தொடர்ந்து பாம்பை சாக்கு பையில் போட்டு கட்டிச் சென்று வனத்துறையில் விடுவதாக சென்றனர். வீட்டினுள் இருந்த பாம்பை பத்து நிமிடத்தில் தீயணைப்புத் துறையினர் வந்து பிடித்ததால் அப்பகுதி மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். இந்தப் பாம்பு பல நாட்களாக அப்பகுதிகளில் திரிந்துள்ளது. இதனால் மக்கள் அச்சத்தில் இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆலமரத்துேமடு பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்திய பாம்பு பிடிபட்டது
    • அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்

    கரூர்

    திருக்காடுதுறை அருகே ஆலமரத்துமேடு பகுதியில் உள்ள ஒரு தனியாருக்கு சொந்தமான மாட்டுத் தொழுவம் அருகே 6 அடி நீளம் உள்ள நாக பாம்பு படம் எடுத்து ஆடிக் கொண்டிருந்தது. அதை பார்த்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் அந்த பாம்பை விரட்டினார்கள். ஆனால் பாம்பு அந்த இடத்தில் இருந்து வெளியேறாமல் படம் எடுத்து ஆடிக் கொண்டிருந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று பாம்பு பிடிக்கும் குச்சியால் 6அடி நீளமுள்ள நாக பாம்பை பிடித்து சாக்கு பைக்குள் போட்டு வனப்பகுதிக்கு கொண்டு சென்று பாதுகாப்பாக விட்டனர்.


    • பாம்பு பிடிக்கும் வாலிபர் வந்து ஏசிக்குள் பதுங்கியிருந்த 3 அடி நீளமுள்ள பாம்பை பிடித்தார்.
    • ஏ.சி.யில் பாம்பு புகுந்தது எப்படி என்பது புரியாத புதிராக உள்ளது என்று கடையின் உரிமையாளர் கூறினார்.

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி பஸ் நிலையத்தின் அருகே மின்சாதனங்கள் விற்பனை செய்யும் கடை உள்ளது.

    இந்த கடையில் ஏசி பொருத்தப்பட்டுள்ளது. நேற்று மாலை கடையில் அதன் உரிமையாளர் வேலை செய்து கொண்டிருந்தார்.

    ஏசியை இயக்குவதற்காக சுவிட்ச் போடுவதற்காக சென்றார். அப்போது கடையில் பணியாற்றும் ஊழியர்கள் பாம்பு ஒன்று ஏசியில் இருந்து வெளியே வருவதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

    இதனால் கடையில் இருந்து அனைவரும் கூச்சலிட்டபடி வெளியே ஓடி வந்தனர்.

    இதுகுறித்து பாம்பு பிடிக்கும் இளைஞருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த வாலிபர் அங்கு வந்து ஏசிக்குள் பதுங்கியிருந்த 3 அடி நீளமுள்ள பாம்பை பிடித்தார். பிடிப்பட்ட பாம்பை வனப்பகுதியில் விட்டார்.

    இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஏ.சி.யில் பாம்பு புகுந்தது எப்படி என்பது புரியாத புதிராக உள்ளது என்று கடையின் உரிமையாளர் கூறினார். 

    • தீயணைக்கும் படையினர் மீட்டனர்
    • மண்ணுளி பாம்பு வகையை சேர்ந்தது.

    கன்னியாகுமரி:

    இந்தியாவின் தென்கோடி முனையானகன்னியா குமரிக்கு வரும் ஜனாதிபதி, பிரதமர், பல மாநில முதல்வர்கள், கவர்னர்கள், மத்திய-மாநில அமைச்சர் கள், எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் உள்பட முக்கிய பிரமு கர்கள் தங்கும் அரசு விருந்தினர் மாளிகை உள்ளது. பொதுப்பணி துறையின் கட்டிட பிரிவு கட்டுப்பாட்டில் இந்த அரசு விருந்தினர் மாளிகை உள்ளது.

    இந்த அரசு விருந்தினர் மாளிகை முறையான பராமரிப்பு இல்லாமல், புதர்கள் நிறைந்தும், சுற்று சுவர்கள் இடிந்தும், ஹெலிகாப்டர் இறங்கு தளத்தில் செடி, கொடிகள் வளர்ந்தும், பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டும் குப்பை கிடங்காகவும், இரவு வேளைகளில் சமூக விரோதிகளுக்கு மது அருத்தும் கூடாரமாகவும் மாறியுள்ள பரிதாப நிலையில் காணப்படுகிறது.

    இந்தநிலையில் நேற்று இரவு 9 மணி அளவில் இந்த அரசு சுற்றுலா மாளிகையில் உள்ள முக்கிய கட்டிடத்தில் பாம்பு ஒன்று புகுந்தது. இதுகுறித்து அங்குள்ள ஊழியர்கள் கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன் பேரில் கன்னியாகுமரி தீயணைப்பு நிலைய அலுவலர் ஆரோக்கியதாஸ் தலைமையில்தீயணைக்கும் படை வீரர்கள் விரைந்து வந்து அந்த பாம்பை லாவக மாகபிடித்தனர். அந்த பாம்பு சுமார் 3 அடி நீளம் கொண்டதாக இருந்தது. மண்ணுளி பாம்பு வகையை சேர்ந்தது.

    பின்னர் தீயணைக்கும் படையினர் அந்தப் பாம்பை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் அந்த விஷ பாம்பை பாது காப்பான காட்டுப் பகுதியில் கொண்டு விட்டனர்.

    • மதுரை அருகே பாம்பு கடித்து விவசாயி பரிதாபமாக இறந்தார்.
    • இதுகுறித்து உத்தப்பநாயக்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை உத்தப்பநாயக்கனூரை அடுத்த திம்மநத்தத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித் குமார் (வயது 33). இவருக்கு மனைவி பிரேமா உள்ளார். விவசாயியாக வேலை பார்த்து வந்த ரஞ்சித்குமார் சம்பவத்தன்று மதியம் கொப்பிலிப்பட்டி தோட்டத்துக்கு சென்றார்.

    அப்போது அவரை பாம்பு கடித்தது. இதனால் மயங்கி விழுந்த வரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தபோதிலும் சிகிச்சை பலனின்றி ரஞ்சித்குமார் பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக உத்தப்பநாயக்கனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிவன் கோவிலில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    • பக்தர்கள் சிலர் விரட்ட முயன்றனர்

    புதுக்கோட்டை

    விராலிமலை புதிய பஸ் நிலையம் அருகே வன்னிமரத்தடியில் சிவன் கோவில் உள்ளது. நேற்று காலை வழக்கம்போல் கோவிலுக்கு பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். அப்போது கோவிலுக்கு வெளியே சுமார் 8 அடி நீளமுள்ள கருஞ்சாரை பாம்பு ஒன்று கோவில் சுற்றுச்சுவரின் ஓரமாக இருப்பதை கண்ட பக்தர்கள் சிலர் அந்த பாம்பை விரட்ட முயன்றனர். அப்போது அங்கிருந்து சென்ற பாம்பு கோவில் முன்வாசல் வழியாக கோவிலுக்குள் சென்றது. பின்னர் சிறிது நேரம் அப்பகுதியில் சுற்றிய பாம்பு கோவிலின் பின்புறமாக வெளியே சென்றது. இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    ×