search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாடு"

    • மாடு குறுக்கே புகுந்ததால் பைக்கில் சென்ற தம்பதி படுகாயம் அடைந்தனர்.
    • இந்த சம்பவம் குறித்து சிலைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வசந்தம் நகரை சேர்ந்தவர் ஜெயசித்ரா.

    சம்பவத்தன்று இவர் கணவர் பாலசண்முகத்துடன், மோட்டார் சைக்கிளில் மதுரைக்கு வந்தார். சிலைமான் ெரயில்வே மேம்பாலம்- நான்கு வழிச்சாலை பகுதியில் வந்தபோது மாடு குறுக்கே பாய்ந்தது.

    இதில் வாகனம் நிலை தடுமாறி தம்பதியினர் தூக்கி வீசப்பட்டனர். படுகாயமடைந்த பாலசண்முகம்- ஜெயசித்ராவை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஜெயசித்ரா சிலைமான் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து 

    • சாலையில் திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர்.
    • ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? பொதுமக்கள் எதிர்ப்பார்ப்பு.

    மதுரை

    திருப்பரங்குன்றம் யூனியன் நிலையூர் 1-வது பிட், கைத்தறிநகர் ஊராட்சி மன்றம் உள்ளது. இந்த பகுதியில் இரவு நேரங்களில் 50-க்கும் மேற்பட்ட பசுமாடுகள் சாலையில் சுற்றி திரிகின்றன. இது பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறை ஏற்படுத்தி வருகின்றன.

    மாடுகளை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊராட்சி நிர்வாகத்திற்கு கைத்தறிநகர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • புஞ்சை புளியம்பட்டி வாரச்சந்தையில் புதன் மற்றும் வியாழக் கிழமைகளில் மாடு, ஆடு போன்ற கால் நடைகள் விற்பனையாவது வழக்கம்
    • இன்று நடந்த மாட்டுச்சந்தையில் மாடு, ஆடு, கன்றுகள் ரூ.70 லட்சத்திற்கு விற்பனை யானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி வாரச்சந்தையில் புதன் மற்றும் வியாழக் கிழமைகளில் மாடு, ஆடு போன்ற கால் நடைகள் விற்பனையாவது வழக்கம்

    இது தமிழ்நாட்டின் 2-வது பெரிய சந்தை ஆகும்.

    திருப்பூர் நாமக்கல் கரூர் காங்கேயம் போன்ற பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து வாங்கி செல்வது வழக்கம்

    இந்நிலையில் இன்று நடந்த மாட்டுச்சந்தையில் மாடு, ஆடு, கன்றுகள் ரூ.70 லட்சத்திற்கு விற்பனை யானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • சாலையில் திரிந்த மாடுகளை நகராட்சி பணியாளர்கள் பிடித்து அபராதம் விதித்தனர்.
    • மாடுகளை சாலைகளில், தெருக்களில் மேய்ச்சலுக்கு விடக்கூடாது என்று எச்சரித்து ஒப்படைத்தனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகர்பகுதியில் சிவகங்கை ரோடு, ராமேசுவரம் செல்லும் நான்கு வழிசாலை, பழைய பஸ்நிலையம், சுந்தரபுரம், கடைவீதி, சிவகங்கை ரோடு, தாயமங்கலம்ரோடு, கன்னார் தெரு, சிப்காட், மூங்கில் ஊரணி ஆகிய பகுதிகளில் ஏராளமான வீடுகளில் உள்ள பசுமாடுகளை இரவு-பகலாக அதன் உரிமையாளர்கள் மேய்ச்சலுக்கு அவிழ்த்து விடுகின்றனர்.

    சாலையில் சுற்றி திரியும் இந்த மாடுகளால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கி காயமடைந்து வருகின்றனர். இதுகுறித்து நகராட்சி அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது. நகராட்சி நிர்வாகம் மாடுகளை சாலை மற்றும் தெருபகுதியில் மேய்ச்சலுக்கு விடக்கூடாது என்று வாகனத்தில் ஒலி பெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டது. இதை பொருட்படுத்தாமல் வழக்கம்போல் மாடுகள் ரோட்டில் திரிந்தன. நகராட்சி ஆணையாளர் சக்திவேல் உத்தரவின்படி சுகாதார ஆய்வாளர் தங்கதுரை மற்றும் பணியாளர்கள் கடைவீதி மற்றும் சாலையில் திரிந்த 10-க்கும் மேற்பட்ட பசுமாடுகளை பிடித்து நகராட்சி அலுவலக வளாகத்தில் கட்டிபோட்டனர்.

    அந்த மாடுகளுக்கு தண்ணீர், புல், கீரைகளை வழங்கினர். மாடுகளை தேடி வரும் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து மீண்டும் மாடுகளை சாலைகளில் , தெருக்களில் மேய்ச்சலுக்கு விடக்கூடாது என்று எச்சரித்து ஒப்படைக்கப்படும்.

    • இன்று காலை மீண்டும் அந்த வடிகாலில் அருகே சாலையோரம் மேய்ந்து கொண்டிருந்த மாடு தவறி அந்த கழிவுநீர் வடிகாலில் விழுந்துவிட்டது.
    • இதனை பாதுகாப்பான முறையில் மூடி பொதுமக்களுக்கும், கால்நடைகளுக்கும் பாதுகாப்பு வழங்கிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அந்தியூர்:

    அந்தியூர் அடுத்த புதுப்பாளையம் செல்லும் சாலையில் ஆத்தப்பம் பாளையம் பிரிவு என்ற இடத்தில் சாலையோரம் கழிவுநீர் வடிகால் உள்ளது. இந்த வடிகாலில் எப்பொழுதும் அதிக அளவில் கழிவு நீர் தேங்கி குளம் போல இருக்கும்.

    இந்த கழிவு நீர் வடிகாலில் கடந்த மாதம் 12-ந் தேதி எருமை மாடு ஒன்று விழுந்தது. அதனை உரிய நேரத்தில் மாட்டின் உரிமையாளர் இருந்ததால் உயிருடன் மீட்கப்பட்டது.

    இந்த நிலையில் இன்று காலை மீண்டும் அந்த வடிகாலில் அருகே சாலையோரம் மேய்ந்து கொண்டிருந்த மாடு தவறி அந்த கழிவுநீர் வடிகாலில் விழுந்துவிட்டது. இதனை மீட்க முடியாமல் மாட்டின் உரிமையாளர் சிரமப்பட்டு வந்தார்.

    அக்கம் பக்கத்தின் உள்ளவர்கள் உதவியோடு கயிற்றின் மூலம் பாதுகாப்பான முறையில் கட்டி மேலே மீட்டனர். இதனால் அந்தியூர் பர்கூர் சாலையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறுகையில்,

    இந்த சம்பவம் தொடர்கதையாக நடந்து வருகிறது. இரவு நேரத்தில் இந்த பகுதிக்கு நாங்கள் வருவதற்கு மிகவும் அச்சத்தோடும், ஒருவித பயத்தோடுமே வர வேண்டி உள்ளது. புதியதாக இந்த பகுதிக்கு இரவு நேரத்தில் வருபவர்கள் யாரேனும் இந்த கழிவுநீரில் விழுந்து விடுவார்களோ? என்ற பயம் எங்களுக்குள் இருந்து வருகிறது.

    ஆகவே இதனை பாதுகாப்பான முறையில் மூடி பொதுமக்களுக்கும், கால்நடைகளுக்கும் பாதுகாப்பு வழங்கிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • காங்கயம் இன காளைகள் ஜல்லிக்கட்டிகளில் பிடிபடாத வீரத்திற்கு பெயர் பெற்றவை.
    • பாலுக்கு தனி கிராக்கி ஏற்பட்டுள்ளது, ஒரு லிட்டர் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    காங்கயம் :

    காங்கயம் என்றாலே நம் அனைவருக்கும் நினைவிற்கு வருவது காங்கயம் இன பசு மாடுகளும், காளைகளும் தான். காங்கயம் பகுதியை பூர்வீகமாக கொண்டு தோன்றியதால் ஊரின் பெயரிலேயே இந்த இன மாடுகள் அழைக்கப் படுகின்றன.கரிய நிறம், கூரான கொம்புகள், கம்பீரமான உடலமைப்பு, மலை போன்ற திமில்களுடன் காட்சியளிக்கும் காங்கயம் இன காளைகள் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டிகளில் பிடிபடாத வீரத்திற்கு பெயர் பெற்றவை. எருதுகள் சுமார் நான்கு டன் அளவிலான பாரத்தை சாதாரணமாக இழுக்கும் ஆற்றலுடையவை. அதே போல குறைவான தீவனத்தை உண்டு சத்தான பாலைத்தரும் காங்கயம் இன பசுக்களை கொங்கு மண்டல பகுதிகளில் திருமணம் முடித்து செல்லும் பெண்களுக்கு தாய்வீட்டு சீதனமாக தருவது பாரம்பரியமான மரபாக உள்ளது.

    பாலில் இருந்து ஏராளமான உணவுப் பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. இதனால் அன்றாடம் நாம் பயன்படுத்தப்படும் உணவில் பால் ஒரு பகுதியாக உள்ளது. சுத்தமான பால் கிடைப்பதில்லை என சிலர் மாடுகளில் இருந்து பால் கறக்கும் இடத்திற்கே சென்று பால் வாங்கி கொண்டு செல்கின்றனர். காங்கயம் இன மாட்டு பால் உடலுக்கு கேடு விளைவிக்காத ஏ2 ரகத்தை சேர்ந்தது. இதனால் இந்த பாலுக்கு தனி கிராக்கி ஏற்பட்டுள்ளது, ஒரு லிட்டர் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    ஐரோப்பா ,அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளில் சாதரண பாலுக்கும், ஏ2 ரக பாலுக்கும் அதிக விலை வித்தியாசம் உள்ளது. அங்குள்ள பல்பொருள் அங்காடிகளில் ஏ2 ரக பாலுக்கு கிராக்கி உள்ளது. இதன் காரணமாக அந்நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் பிரேசில், அர்ஜென்டினா உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஏ2 ரக பாலை இறக்குமதி செய்கின்றன. திருப்பூர், ஈரோடு, கோவை, கரூர், திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் காங்கயம் இன மாடுகள் தற்போது அதிக அளவில் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதற்கு முக்கிய காரணமாக இருப்பது மேற்கண்ட மாவட்டங்களில் கொரங்காடுகள் என அழைக்கப்படும் மானாவாரி நிலங்களில் வளரும் கொழுக்கட்டை புல் வகையாகும்.

    இந்த புல் கோடை காலங்களில் முழுவதும் காய்ந்து விடும். பின் மழை பெய்யும்போது நன்கு வளர்ந்து வரும். இதை உணவாக உட்கொள்ளும் மாடுகள், அதிக திடகாத்திரமாக உள்ளது. காரணம் இந்த புற்களில் இருந்து கால்சியம், மக்னீசியம், உள்ளிட்ட பல நுண் சத்துக்கள் இப்புல்லில் இருப்பதால் இதிலிருந்து கிடைக்கும் பால் அதிக சத்தானதாக உள்ளது. இதனால் தான் நாட்டு மாட்டு பாலுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. தற்போது மக்கள் இயற்கை சார்ந்து பொருட்கள் வாங்கி பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. இதனால் காங்கயம் இன நாட்டு மாட்டு பால் தேவையும் அதிகரித்து வருகிறது.

    அருகாமை மாவட்டமான ஈரோடு மாவட்டத்தில் பர்கூர் நாட்டு மாட்டின பால் சேகரிப்பு மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையம் அமைத்துள்ளது. இதன் மூலம் நாட்டு மாட்டு பால் சேகரிக்கப்பட்டு பதப்படுத்தி கண்ணாடி குடுவைகளில் அடைக்கப்பட்டு ஈரோடு, கோவை, மைசூர் போன்ற நகரங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இது போல், திருப்பூர் மாவட்ட, ஆவின் நிர்வாகத்தின் சார்பில் காங்கயம் மாடுகள் அதிக செரிவுள்ள பகுதியாக விளங்கும் காங்கயம், வெள்ளகோவில் முத்தூர்,தாராபுரம்,ஊத்துக்குளி பகுதிகளில் மேற்கண்ட ஏதேனும் ஒரு பகுதியில் காங்கயம் நாட்டு மாட்டு பால் சேகரிப்பு மற்றும் விற்பனை மையத்தினை துவங்கினால் அது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெரும் என்பதில் ஐயம் இல்லை. ஏனெனில் தற்போது குழங்தைகளுக்கு நாட்டு மாட்டு பால் தரும் பழக்கம் அதிகரித்து வருகிறது. இதற்காக பால் கிடைக்கும் இடங்களுக்கு சென்று வாங்கி பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

    இது குறித்து பாப்பினி பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் கூறுகையில்:- தற்போது இயற்கை விவசாயத்தில் விளைவிக்கப்பட்ட காய்கறி உள்ளிட்ட பொருட்களை மக்கள் அதிகம் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இது போல் நகர பகுதிகளில் நாட்டு மாட்டு பால் கிடைப்பது அரிதான ஒன்றாகும். எனவே காங்கயம் நாட்டு மாட்டு பால் தேவை உள்ளோருக்கு வழங்கும் வகையிலும், விவசாயிகளிடையே இவ்வின மாடுகளை அதிக அளவில் வளர்க்கும் நோக்கில் விற்பனை மையத்தை அமைத்து கண்ணாடி குடுவைகளில் அடைத்து திருப்பூர் போன்ற நகரங்களுக்கு அனுப்பினால் நல்ல விலை கிடைக்கும்.

    விவசாயிகளிடம் இருந்து நாட்டு மாட்டு பால் உற்பத்தியும் பெருகும். மக்களுக்கு தரமான பால் கிடைக்கும். நாட்டு மாட்டு பால் தேவைப்படுவோர் மையத்தில் சென்று தரமான பாலை வாங்கி பயன்படுத்த முடியும். அதே நேரத்தில் கூட்டுறவு சங்கத்திற்கும் வருவாய் கிடைக்கும். கூட்டுறவு சங்கம் தோற்றுவித்ததற்கான நோக்கத்தையும் பூர்த்தி செய்யும் வகையில் திருப்பூர் ஆவின் நிர்வாகம் முயற்சி எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர் பார்க்கின்றனர்.

    வறட்சியான பகுதியில் மட்டுமே வளர்க்கப்பட்டு வரும் காங்கயம் இன பசுமாடுகள் மற்றும் காளைகள் அப்பகுதியில் கிடைக்கும் தீவினங்களை உண்டு வருவதால் இந்த பகுதியில் நிலவும் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப காங்கயம் கால்நடைகள் தங்களை தகவமைத்து கொள்வதால், காங்கயம் நாட்டுமாட்டு பால் எந்த காலநிலையிலும் எந்த வயதினரும் அருந்தும் வகையில் உள்ளது. இதன் தேவையை கருதி கால்நடைதுறையும் முன்முயற்சி எடுத்து பால் கொள்முதல் நிலையம் அமைக்க ஊக்குவிப்பு செய்ய வேண்டும் என்கின்றனர் அப்பகுதி விவசாயிகள். 

    • ரூ.90 ஆயிரம் மதிப்புள்ள எருமை மாடு ஒன்று வளர்த்து வருகிறார்.
    • வெள்ளிங்கிரி மேட்டுப்பாளையம் போலீசில்புகார் அளித்தார்.

    மேட்டுப்பாளையம் 

    மேட்டுப்பாளையம் அருகே நெல்லித்துறை சாலை சமயபுரம் அண்ணாநகரை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி (32). விவசாயி. இவர் ரூ.90 ஆயிரம் மதிப்புள்ள எருமை மாடு ஒன்று வளர்த்து வருகிறார். கடந்த மே மாதம் 27-ந் தேதி இவரது மாடு காணாமல் போனது.

    இந்த நிலையில் நேற்று பத்ரகாளியம்மன் சாலை வேல் நகர் பகுதியை சேர்ந்த கோவிந்தன் என்பவரது மாட்டு கொட்டகையில் மாடு கட்டியிருந்ததை பார்த்த அவர் அங்கு சென்று விசாரித்தார். அதற்கு கோவிந்தன் இது உங்களின் எருமைமாடு என்பது எனக்கு தெரியாது. நான் இதனை கல்லாறு பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (46) என்பவரிடம் விலைக்கு வாங்கினேன் என்றார்.

    இதையடுத்து வெள்ளியங்கிரி கல்லாறு சென்று ராஜ்குமாரிடம் விசாரித்தார். அப்போது ராஜ்குமார் இந்த எருமை மாடு உன்னுடையது தான், நான் தான் எடுத்து வந்து விற்றேன். உன்னால் என்ன செய்ய முடியும் என்று வெள்ளியங்கிரியை மிரட்டினார்.

    இது தொடர்பாக வெள்ளிங்கிரி மேட்டுப்பாளையம் போலீசில்புகார் அளித்தார். மேட்டுப்பாளையம் காவல் உதவி ஆய்வாளர் முருகநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • தோட்டத்தில் பசுமாடு ஒன்று மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டு வந்தது.
    • கணபதிபாளையம் கால்நடை உதவி மருத்துவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    பல்லடம் :

    பல்லடம் பனப்பாளையத்தை சேர்ந்தவர் சங்கர், விவசாயி. இவரது தோட்டத்தில் பசுமாடு ஒன்று மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டு வந்தது.இது குறித்து கணபதிபாளையம் கால்நடை உதவி மருத்துவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    பரிசோதித்த உதவி மருத்துவர் அறிவு செல்வன், உணவுக் குழாயில் அடைப்பு இருப்பதாகவும், பீட்ரூட் உணவு குழாயில் அடைத்திருப்பதாக தெரிவித்த அவர், மாட்டின் வாய்க்குள் கைகளை நுழைத்து முழு பீட்ரூட்டை வெளியே எடுத்தார். இதன்பின், மாடு சகஜ நிலைக்குத் திரும்பியது. உதவி மருத்துவர் கூறுகையில், பீட்ரூட், முட்டைகோஸ் உள்ளிட்டவற்றை முழுமையாக கால்நடைகளுக்கு உணவாக வழங்குவதை விவசாயிகள் தவிர்க்க வேண்டும். இவற்றை சாப்பிடும் கால்நடைகளின் உணவு குழாயில் அடைத்து கால்நடைகளின் உயிருக்கே ஆபத்தாகும் அபாயம் உள்ளது என்றார்.

    • ராமநாதபுரம் அருகே வேன் கவிழ்ந்து 7 பேர் படுகாயமடைந்தனர்.
    • மாடு குறுக்கே வந்ததால் வேடிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.

    தொண்டி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் நாகராஜ்

    (வயது 65). இவரது சகோதரர் முருகேசன் என்பவர் இறந்து விட்டார். அவரது அஸ்தியை ராமேசுவரம் சேதுக்கரையில் கரைப்பதற்காக ஒரு வேனில் அவரது குடும்பத்தினர்கள் உள்பட 20 பேர் சென்றனர்.

    அந்த வேன் திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் மேல்பனையூர் பாலம் அருகில் சென்றபோது சாலையின் குறுக்கே திடீரென மாடு சென்றதால் வேன், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மாட்டின் மீது மோதி கவிழ்ந்தது. இதில் வேனில் பயணம் செய்த 2 சிறுமிகள் உள்பட 7 பேர் காயமடைந்தனர்.

    இந்த விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் திருவாடானை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்த 7 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருவாடானை தாலுகா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    வேனில் பயணம் செய்த மற்றவர்களுக்கு காயம் ஏற்படவில்லை. அவர்களை மீட்டு மற்றொரு வேனில் அனுப்பி வைத்தனர்.

    மேலும் விபத்து குறித்து திருவாடானை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதே பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு நாய் குறுக்கே பாய்ந்ததால் மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் கீழே விழுந்து காயம் அடைந்து இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×