search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223471"

    • தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
    • இவரது மனைவி தபால் நிலையத்தில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    கன்னியாகுமரி:

    குலசேகரம் அருகே சேக்கல் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (வயது 32). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ரெஞ்சிதா (27). இவர் தபால் நிலையத்தில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். சதீசுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் புதியதாக வீடு ஒன்று கட்டினார். இதற்கு பலரிடம் கடன் வாங்கியிருந்தார். அதனால் குறிப்பிட்ட நாட்களுக்குள் பணத்தை திரும்ப கொடுக்க முடியவில்லை. இதனால் மன முடைந்த நிலை யில் அவர் இருந்து வந்தார்.

    இந்த நிலை யில் நேற்று சதீஷ் தென்னை மரத்துக்கு வைக்கும் விஷ மாத்திரை தின்று மயங்கிய நிலையில் இருந்தார். உடனே அவரை மீட்டு குலசேகரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். டாக்டர் பரிசோதனையின் போது சதீஷ் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. இது குறித்து குலசேகரம் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • கடந்த 11-ந் தேதி வீட்டில் தனியாக இருந்த போது, பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துள்ளார்.
    • முதிய வரை மீட்டு திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். சிகிச்சை அளித்தும் பல னின்றி முத்துசாமி உயிரிழந்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா நல்லூர் கந்தம்பாளையம் அருகே தேவனாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 61).

    இவருக்கு தீராத முழங்கால் வலி இருந்து வந்தது. இதன் காரணமாக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் வலி சரியாகவில்லை. இதனால் விரக்தியில் இருந்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த

    11-ந் தேதி வீட்டில் தனியாக இருந்த போது, பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துள்ளார். இதனால் வயிறு எரிச்சல் ஏற்படவே சத்தம் போட்டு உள்ளார். அதைக் கேட்ட அக்கம் பக்கத்தினர், முதிய வரை மீட்டு திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பல னின்றி முத்துசாமி உயிரி ழந்தார். இதுகுறித்து முத்து சாமியின் மகள் மாலதி (28) கொடுத்த புகாரின்பேரில், நல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குடிப்பழக்கத்தை மனைவி கண்டித்ததால் வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை உத்தப்ப நாயக்கனூர் சுப்பிரமணியன் தெருவை சேர்ந்தவர் ராஜா (வயது 45). இவர் பாணி பூரி வியாபாரம் செய்து வந்தார். ராஜாவுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது.

    இதனால் அவர் பலரிடமும் கடன் வாங்கி செலவழித்து வந்துள்ளார். அதனை அவரது மனைவி ராணி கண்டித்தார்.

    இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த ராஜா, உத்தப்பநாயக்கனூர்- வத்தலகுண்டு ரோட்டில் உள்ள தோட்டம் ஒன்றில், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உத்தப்ப நாயக்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அக்கம்- பக்கம் உள்ளவர்கள் உதவியுடன் அவரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
    • டாக்டர் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

    பல்லடம் :

    பல்லடம் வடுகபாளையத்தை சேர்ந்தவர் லட்சுமி(வயது 72). இவர் அவரது மகள் கலாமணியுடன் வசித்து வந்தார். இதற்கிடையே சம்பவத்தன்று வேலைக்குச் சென்ற கலாமணி வேலை முடிந்து வீடு திரும்பிய போது, அவரது தாயார் லட்சுமி வாயில் நுரை தள்ளியபடி வீட்டிற்குள் கிடந்துள்ளார். இதனால் அலறி துடித்த அவர், அக்கம்- பக்கம் உள்ளவர்கள் உதவியுடன் அவரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதையடுத்து கலாமணி கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • நாய்கள் யாரையும் தொந்தரவு செய்வதில்லை.
    • வீடுகளுக்கு மிகவும் பாதுகாப்பாக இருந்தன.

    பல்லடம் :

    பல்லடம் மாணிக்காபுரம் ரோடு பகுதியில், சுற்றித்திரிந்த தெரு நாய்களை சம்பவத்தன்று மர்ம நபர்கள் விஷம் வைத்து கொன்றுள்ளனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:- நன்றி என்ற சொல்லுக்கு உதாரணமாக விளங்கிவரும் நாய்களை பல்லடத்தில் விஷம் வைத்து கொன்றது அதிர்ச்சி அளிக்கிறது. அந்த நாய்கள் இந்த பகுதியில் யாரையும் தொந்தரவு செய்வதில்லை. அவைகள் இங்குள்ள வீடுகளுக்கு மிகவும் பாதுகாப்பாக இருந்தன. புதியவர்களை கண்டால் மட்டுமே குரைக்கும். அவைகள் இதுவரை யாரையும் கடித்ததில்லை. இந்த நிலையில் கொடூரமனம் படைத்தவர்கள் இங்கு சுற்றிச் திரிந்த சுமார் 10-க்கும் மேற்பட்ட நாய்களுக்கு விஷம் வைத்துக் கொன்று ள்ளனர்.

    இது குறித்து விலங்குகள் நல வாரியம் மற்றும் போலீசாரிடம் புகார் அளிக்க உள்ளோம். விஷம் வைத்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • தென்னை மரத்திற்கு வைக்கக்கூடிய விஷ மாத்திரையை சாப்பிட்டு வீட்டில் வாந்தி
    • அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை

    கன்னியாகுமரி :

    என்.ஜி.ஓ. காலனி அருகே உள்ள குஞ்சன் விளையை சேர்ந்தவர் லெட்சுமணன் (வயது 73) கொத்தனார். கடந்த ஒரு வருடமாக வேலைக்கு செல்ல முடியாமல் இருந்து வந்ததாகவும், குடிப்பழக்கம் உடையவராகவும் இருந்தார்.

    இந்நிலையில் நேற்று பிற்பகல் தென்னை மரத்திற்கு வைக்கக்கூடிய விஷ மாத்திரையை சாப்பிட்டு வீட்டில் வாந்தி எடுத்த நிலையில் இருந்தார். உடனடியாக அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி லெட்சுமணன் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து அவரது தம்பி சிவலிங்கம் சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன், சப்- இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கீரம்பூர் அருகே பொக்லைன் ஆபரேட்ட ராக வேலை பார்த்து வந்த தனசேகரன், தினமும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்தார்.
    • சுண்டக்காம்பாளையம் செல்லும் சாலையில் உள்ள செட்டுக்காரன் குட்டை அருகே விஷம் குடித்த நிலையில் சாலையோரமாக இறந்து கிடந்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கீரம்பூர் அருகே அப்பி நா யக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சந்திரன். இவரது மகன் தனசேகரன் (வயது 32). இவருக்கு திருமணம் ஆகவில்லை.

    பொக்லைன் ஆபரேட்ட ராக வேலை பார்த்து வந்த தனசேகரன், தினமும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்தார். இதனால் அவரது பெற்றோர் தனசேகரனை திட்டினர்.

    இதனால் மனம் உடைந்த அவர், தேசிய நெடுஞ்சாலை யில் உள்ள தனியார் நூல் மில்லில் இருந்து சுண்டக்காம்பாளையம் செல்லும் சாலையில் உள்ள செட்டுக்காரன் குட்டை அருகே விஷம் குடித்த நிலையில் சாலையோரமாக இறந்து கிடந்தார்.

    இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து, பரமத்தி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து வந்து, தனசேகரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராஜி (வயது 45), விவசாயி. இவர் நேற்று புதிதாக மோட்டார சைக்கிள் வாங்க மனைவியிடம் பணம் கேட்டார். அவர் மனைவி பணமில்லை என வாங்கிதர மறுத்திருக்கிறார்,
    • அப்போது ராஜி தன் நிலத்திற்கு சென்று அங்கிருந்த பூச்சிமருந்தை குடித்தார்,

    கடலூர்:

    பண்ருட்டி திருவதிகை திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜி (வயது 45), விவசாயி. இவர் நேற்று புதிதாக மோட்டார சைக்கிள் வாங்க மனைவியிடம் பணம் கேட்டார். அதற்கு தற்பொ ழுது பணம் இல்லை பிறகு வாங்கிக் கொள்ளலாம் என்று அவரது மனைவி கூறியுள்ளார்.

    அப்போது ராஜி தன் நிலத்திற்கு சென்று அங்கிருந்த பூச்சிமருந்தை குடித்தார். மயங்கிய நிலையில் கிடந்த அவரை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக் காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்தி ரிக்கு கொண்டு செல்லப் பட்டார். அங்கு சிகிச்சை பலன்அளிக்காமல் நள்ளிரவு ராஜி உயிரிழந்தார். இதுகுறித்து பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருமங்கலம் அருகே வாலிபர் உள்பட 2 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சிந்துபட்டி போலீஸ் சரகம் நாட்டார்மங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சிவசாமி மகன் ஜெயபாண்டி(31). இவருக்கு திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் குடும்பப் பிரச்சினை காரணமாக வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஜெயபாண்டி பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஜெயபாண்டியின் தாய் பாண்டியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் சிந்துபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பேரையூர் போலீஸ் சரகம் கோபாலபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமாரசாமி. இவருடைய மனைவி பொன்னுத்தாய். இவர்களுக்கு ஈஸ்வரன் என்ற மகன் உள்ளார். பொன்னுத்தாய் கடந்த ஐந்து வருடங்களுக்கு உடல்நல பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் வீட்டில் யாருமில்லாத போது பூச்சி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு பேரையூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து பொன்னுத்தாயின் மகன் ஈஸ்வரன் கொடுத்த புகாரின் பேரில் பேரையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • மனைவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    • பணத்தை அவரால் திருப்பி செலுத்த முடியாமல் அவதி அடைந்து வந்தார்

    கோவை,

    கோவை சேரன் மாநகர் பகுதியை சேர்ந்தவர் விபின்(34). தனியார் நிறுவன ஊழியர்.

    இவருக்கும், ரம்யா என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

    இந்த நிலையில் குடும்ப செலவிற்கு போதிய வருமானம் இல்லாமல் விபின் கஷ்டப்பட்டு வந்ததாக தெரிகிறது. அதற்காக அவர் சிலரிடம் பணம் கடனாக வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது.

    அந்த பணத்தை அவரால் திருப்பி செலுத்த முடியாமல் அவதி அடைந்து வந்தார். வாங்கிய கடனை எப்படி திருப்பி செலுத்தப் போகிறோம் என்ற மனவேதனையில் விபினும் அவரது மனைவியும் இருந்து வந்தனர்.

    இதனால் வாழ்க்கையில் விரட்டியடைந்த விபின் மற்றும் அவரது மனைவி ரம்யா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர்.

    சம்பவத்தன்று விபினும், அவரது மனைவி ரம்யாவும் விஷம் குடித்து வீட்டில் மயங்கி விழுந்தனர்.

    அப்போது அங்கு வந்த விபினின் தாயார் 2 பேரும் மயங்கி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் தனது கணவருக்கு போன் செய்து வரவழைத்தார்.

    பின்னர் அக்கம்பக்க த்தினர் உதவியுடன் கணவன்- மனைவி இருவரையும் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அவர்களை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர்.

    இந்நிலையில் சிகிச்சை பலனின்றி விபின் பரிதாபமாக இறந்தார். ரம்யாவிற்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இது குறித்து தகவல் அறிந்த பீளமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபினின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.   

    • சர்க்கரை மாத்திரையை அதிகமாக சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளதாக கூறப்ப டுகிறது.
    • களியக்காவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    களியக்காவிளை அருகே திருத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் தோமஸ் இவர் டாஸ்மார்க் கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மனைவியும் 2 பெண் குழந்தைகளும் உள்ளன. பிள்ளைகளுக்கு திருமணம் முடிந்து விட்டது. தோமஸ் அதிகமாக மது அருந்தும் பழக்கம் உள்ளவர். இவர் மது அருந்தி விட்டு சரிவர வேலைக்கு செல்வதில்லை என்று கூறப்படுகிறது. இவருக்கு சர்க்கரை நோய் இருந்ததாக கூறப்படுகிறது.

    சம்பவத்தன்று தோமஸ் அதிகமாக மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்து தனது அறையில் சென்று கதவை பூட்டி உள்ளார்.நீண்ட நேரமாகியும் தோமஸ் அறையை விட்டு வெளியே வரவில்லை.

    இதனால் சந்தேகமடைந்த மனைவி அறை கதவை திறந்து பார்த்த போது தோமஸ் வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கிய நிலையில் காணப்பட்டார். தோமஸ் சர்க்கரை மாத்திரையை அதிகமாக சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளதாக கூறப்ப டுகிறது. மனைவி சத்தம் போடவே அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அவர்கள் தோமஸை மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை நடை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அவர் இறந்தார்.

    இது குறித்து களியக்கா விளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். டாஸ்மாக் ஊழியர் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிமக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
    • இளம்பெண் நாகலட்சுமி மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை ராமநாதபுரம் பாப்பம்மாள் லே-அவுட்டை சேர்ந்தவர் ரங்கசாமி. கட்டிட தொழிலாளி. இவரது மனைவி நாக லட்சுமி (வயது 34). இவர்களுக்கு 1½ வயதில் பெண் குழந்தை உள்ளது.

    சம்பவத்தன்று கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டது. பின்னர் ரங்கசாமி வெளியே சென்றார்.வீட்டில் தனியாக இருந்த நாக லட்சுமி கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். இதன் காரணமாக வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் தற்கொலை செய்து என முடிவு செய்தார்.

    அதன்படி நாகலட்சுமி சாணிப்பவுடரை கரைத்து குடித்தார். பின்னர் தனது 1½ பெண் குழந்தைக்கும் சாணிப்பவுடரை கொடுத்தார். சிறிது நேரத்தில் வாயில் நுரை தள்ளிபடி 2 பேரும் மயங்கினர். இதனை பார்த்து அக்கம் பக்கத்ததினர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இது குறித்து இளம்பெண்ணின் கணவர் ரங்கசாமிக்கு தகவல் தெரிவித்தனர்.

    அவர் உடனடியாக வீட்டிற்கு விரைந்து சென்று உயிருக்கு போராடிய தனது மனைவி மற்றும் 1½ வயது மகள் ஆகியோரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இது குறித்து ராமநாதபுரம் போலீசார் இளம்பெண் நாகலட்சுமி மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    ×