search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊழியர்கள்"

    • காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர் வசம் ஒப்படைக்க வேண்டும்.
    • சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநில மைய முடிவின்படி, தமிழ்நாடு அரசின் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர் வசம் ஒப்படைக்க வேண்டும். சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்கிட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் சித்ரா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ராணி துவக்கவுரை–யாற்றினார். மாவட்டச் செயலாளர் இராஜூ விளக்கவுரை–யாற்றினார். அகில இந்திய விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் கோவை.சுப்பிரமணியம், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் முருகையன், நெடுஞ்சாலைத்துறை சாலைப்ப–ணியாளர் சங்க நிர்வாகி ரமேஷ், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் அந்துவன்சே–ரல் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் அன்பழகன் சிறப்புரை–யாற்றினார். நாகைமாலி எம்.எல்.ஏ. நிறைவுரை யாற்றினார். மாவட்டப் பொருளாளர் பாலாம்பாள் நன்றி கூறினார். பின்னர் கோரிக்கைகள் அடங்கிய மனுவை கலெக்டர் ஜானி டாம் வர்க்கீசிடம் அளித்தனர்.

    • கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்துத்துறை ஒட்டுமொத்தமாக சீரழிந்து போய் இருந்தது.
    • எவ்வளவு நிதிச்சுமை இருந்தாலும் உங்களின் கோரிக்கையை அரசு நிச்சயம் நிறைவேற்றித்தரும்.

    சென்னை:

    அடையாரில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று, போக்குவரத்துத்துறை சார்பில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை பணிபுரிந்து ஓய்வுபெற்ற, விருப்ப ஓய்வுபெற்ற, இறந்த பணியாளர்கள் என மொத்தம் 3 ஆயிரத்து 414 பேருக்கு வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்பு, ஓய்வூதிய ஒப்படைப்பு உள்ளிட்ட பணப் பலன்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில், போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் முன்னிலையில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பயனாளிகளுக்கு காசோலைகளை வழங்கினார்.

    இதைத்தொடர்ந்து, நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

    கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்துத்துறை ஒட்டுமொத்தமாக சீரழிந்து போய் இருந்தது. இதை சீரமைக்கும் வகையில் முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறார். போக்குவரத்துத்துறையில் முதலமைச்சர் வகுத்துக்கொடுக்கும் திட்டங்களை அமைச்சர் சிவசங்கர் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். போக்குவரத்துத்துறையில் பல திட்டங்களை தொடங்கி வைக்கும் வாய்ப்பை அமைச்சர் சிவசங்கர் எனக்கு வழங்கியுள்ளார்.

    முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் பணியாளர்களின் சம்பள விகிதம் சீர்குலைக்கப்பட்டது. இது ஊதிய குழுவின் பரிந்துரையின்படி பே-மெட்ரிக்ஸ் முறையில் தற்போது மீண்டும் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் 5 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, போக்குவரத்து துறையில் பணிபுரிந்த 6 ஆயிரத்து 281 நபர்களுக்கு வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்பு உள்ளிட்டவற்றை வழங்கிட உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, 2-வது கட்டமாக 3 ஆயிரத்து 414 பேருக்கு ஓய்வூதிய பலன்கள் வழங்கப்பட உள்ளது.

    இதன் அடையாளமாக 612 பேருக்கு இன்று ரூ.171 கோடியே 23 லட்சம் மதிப்பிலான பணப்பலன்கள் வழங்கப்பட்டு வருகிறது. சுகாதாரம், கல்வி போன்ற துறைகள் எப்படி மக்களுடன் நேரடி தொடர்பில் இருக்கிறதோ அதுபோல போக்குவரத்துத்துறை மக்களுடன் நேரடி தொடர்பில் இருக்கிறது. போக்குவரத்துத்துறை ஊழியர்களின் சிக்கல்களை சரிசெய்யும் அரசாக திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது.

    தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளுக்கு அரசு உடனடியாக செவி சாய்த்து தீர்வு கண்டு வருகிறது. பஸ்களில் பெண்களுக்கு கட்டணமில்லா பயணம் என்ற நமது திட்டத்தை கர்நாடகாவில் புதிதாக அமைந்துள்ள காங்கிரஸ் அரசும் அமல்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் பஸ்களில் பயணம் செய்யும் பெண்களின் எண்ணிக்கை 40 சதவீதத்தில் இருந்து 70 சதவீதமாக உயர்ந்துள்ளது. எவ்வளவு நிதிச்சுமை இருந்தாலும் உங்களின் கோரிக்கையை அரசு நிச்சயம் நிறைவேற்றித்தரும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில், தொ.மு.ச. பேரவை பொதுச்செயலாளர் சண்முகம் எம்.பி., த.வேலு எம்.எல்.ஏ., போக்குவரத்துத்துறை கூடுதல் செயலாளர் பணீந்திரரெட்டி மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

    • விருதுநகரில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
    • துரைப்பாண்டியன் தலைமை தாங்கினார்.

    விருதுநகர்

    விருதுநகர் மின்பகிர்மான மாவட்ட தலைமை அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு மற்றும் தமிழ்நாடு எலெக்ட்ரிசிட்டி போர்டு எம்ப்ளாயிஸ் பெடரேசன் ஆகிய தொழிற் சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எம்ப்ளாயிஸ் பெடரேசன் மாநில இணை செயலாளர் துரைப்பாண்டியன் தலைமை தாங்கினார். மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில துணை தலைவர் திட்ட செயலாளர் சந்திரன் மற்றும் நிர்வாகிகள் சவுந்தர பாண்டியன், பெடரேசன் மாநில உப தலைவர் திட்டச் செயலாளர் ஞானகுரு, இளங்கோவன் ஆகியோர் பேசினர்.

    கடந்த 16-ந் தேதி ஏற்பட்ட ஒப்பந்தத்தில், 1.12.2019க்குப் பின் பணியில் சேர்ந்த 9,500 கேங்மேன் உள்ளிட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு பணப்ப லன்கள் வழங்காதது, 34 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியி டங்களை நிரப்புவதற்கு உத்தரவாதம் தரப்படாதது, ஒப்பந்த தொழிலா ளர்களுக்கு தினமும் ரூ.480 ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை பரிசீலிக்க படாதது ஆகியவற்றை கண்டித்தும், துப்புரவு பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

    • அனுசியாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
    • குழந்தையையும், தாயையும் பரிசோதனை செய்த டாக்டர்கள் இருவரும் நலமாக இருப்பதாக தெரிவித்தனர்

    கோவை,

    கோவை அருகே உள்ள தொப்பம்பட்டியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி அனுசியா (வயது 21). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு இன்று காலை திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் அவர் வலியால் அலறி துடித்தார். இதனையடுத்து அவரது உறவினர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக சாய்பாபா காலனியில் இருந்து ஆம்புலன்சு புறப்பட்டு சென்றது. ஆம்புலன்சில் மருத்துவ நிபுணர் தமிழழகன், டிரைவர் சக்திகுமார் ஆகியோர் விரைந்து சென்றனர். அவர்கள் அனுசியாவின் வீட்டிற்கு சென்று பார்த்த போது குழந்தையின் தலை வெளியே தெரிந்தது.

    உடனடியாக அனுசியா ஆம்புலன்சில் ஏற்றப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மற்றும் உறவினர்கள் உதவியுடன் ஆம்புலன்சில் வைத்து பிரசவம் பார்க்கப்பட்டது. அப்போது அனுசியாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

    இதனையடுத்து ஆம்புலன்சு ஊழியர்கள் தாயையும், குழந்தையையும் சிகிச்சைக்காக துடியலூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

    அங்கு குழந்தையையும், தாயையும் பரிசோதனை செய்த டாக்டர்கள் இருவரும் நலமாக இருப்பதாக தெரிவித்தனர்.

    அவசரம் கருதி ஆம்புலன்சில் வைத்து பிரசவம் பார்க்க நடவடிக்கை மேற்கொண்ட மருத்துவ நிபுணர் தமிழழகன், டிரைவர் சத்திகுமார் ஆகியோருக்கு பொதுமக்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர்.

    • 34 ஆண்டுகளாக பணியாற்றி வரும் அலுவலக அதிகாரிகள்-ஊழியர்கள் இடமாற்றம் எப்போது? என குமுறல் எழுந்துள்ளது.
    • அலுவலக உதவியாளர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

    அருப்புக்கோட்டை

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அலுவலக உதவியாளர்கள் 18 பேர் திடீரென பணி இட மாற்றம் செய்யப்பட்டனர்.நகராட்சி நிர்வாக இயக்குநர் உத்தரவின்பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    அருப்புக்கோட்டையில் இருந்து திருச்செந்தூர், களக்காடு, கங்கை கொண்டான், கொல்லங்கோடு உள்ளிட்ட தொலைதூர பகுதிகளுக்கு அலுவலக உதவியாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த பணி இடமாற்றம் குறித்து அலுவலக உதவியாளர் ஒருவர் கூறுகையில், பல ஆண்டுகளாக நகராட்சி அலுவலகத்தில் பணி யாற்றும் ஊழியர்களை பணியிட மாற்றம் செய்யாமல் கடந்த சில ஆண்டுகளாக குறைந்த சம்பளத்தில் வேலை பார்க்கும் எங்களை பணியிட மாற்றம் செய்துள்ளனர். இதனால் பொருளாதார ரீதியாகவும் குடும்ப சூழ்நிலை ரீதியாகவும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம்.

    இதனை நகராட்சி நிர்வாகம் மறுபரிசீலனை செய்ய வேண்டும். மேலும் அலுவலகத்தில் உள்ள சில ஊழியர்கள் மற்றும் அதிகா ரிகள் 34 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் பணிபுரிந்து வரும் நிலையில் எங்களை மட்டும் குறிப்பாக மாற்ற வேண்டிய அவசியம் என்ன? என்று வேதனை யுடன் தெரிவித்தார்.

    பொதுவாக அரசு பணியில் உள்ள ஒருவர் 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் வேலை பார்த்தால் அந்த நபரை வேறு இடத்திற்கு பணியிட மாற்றம் செய்வார்கள். ஆனால் இந்த நகராட்சியில் ஏன் பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் அலுவலக ஊழியர்களை பணியிட மாற்றம் செய்யாமல் உள்ளனர்? புதிதாக பணியில் சேர்ந்தவர்களை இடமாற்றம் செய்வது என்ன நியாயம்? என்று பாதிக்கப்பட்ட அலுவலக உதவியாளர்கள் கேள்வி விடுக்கின்றனர். எனவே இந்த இடமாற்றம் தொடர்பாக சம்பந்தப்பட் அதிகாரிகள் மீண்டும் பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அலுவலக உதவியா ளர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

    • அங்கன்வாடி உதவியாளர்களுக்கு எந்தவித நிபந்தனையும் இன்றி உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும்.
    • 5 குழந்தைகளுக்கு குறைவாக உள்ள பிரதான மையங்களுடன் இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்.

    தஞ்சாவூர்:

    பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடுவதுபோல, அங்கன்வாடி மையங்களுக்கும் ஒரு மாதம் விடுமுறை வழங்க வேண்டும்.

    தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதிபடி பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

    காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், 10 ஆண்டுகள் பணி முடித்துள்ள அங்கன்வாடி உதவியாளர்களுக்கு எந்தவித நிபந்தனையும் இன்றி உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும்.

    10 குழந்தைகளுக்கு குறைவாக உள்ள பிரதான மையங்களை சிறு மையங்கள் ஆக்குவதையும், 5 குழந்தைகளுக்கு குறைவாக உள்ள பிரதான மையங்களுடன் இணைக்கும் திட்டத்தையும் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தினர் நேற்று மாலை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மாவட்ட நிர்வாகி பாரதி தலைமை தாங்கினார்.

    மாநில செயலாளர் கலா, மாவட்ட செயலாளர் விஜி, துணை செயலாளர் பத்மாவதி, பொருளாளர் புவனேஸ்வரி, மாவட்ட தலைவர் சங்கீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    போராட்டத்தை சி.ஐ.டி.யூ. மாநில செயலாளர் ஜெயபால் தொடங்கி வைத்தார்.

    இதில் அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ரெங்கசாமி, சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், சி.ஐ.டி.யூ. மாவட்ட துணைத்தலைவர் அன்பு, உள்ளாட்சி நிதி தணிக்கை சங்க மாநில தலைவர் அம்பேத்கார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    இந்த போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். மாலையில் தொடங்கிய போராட்டம் இரவு முழுவதும் நீடித்தது.

    விடிய விடிய நடந்த போராட்டம் இன்று 2-வது நாளாகவும் தொடர்ந்தது.

    8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தை நீடித்து வருகின்றனர்.

    அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

    • போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
    • புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

    கோவை,

    கோவையில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று மாலை கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்ட தலைவர் சாந்தி தலைமை தாங்கினார். பின்னர் இரவில் கலைந்து சென்றனர்.

    இன்று 2-வது நாளாக கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடந்தது. போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    அவர்கள் சாலையில் அமர்ந்து தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.இது தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள் கூறியதாவது:-

    10 குழந்தைகளுக்கும் குறைவாக இருக்கும் பிரதான மையங்களை மினி மையங்கள் ஆக்குவதையும், 5 குழந்தைகளுக்கும் குறைவாக இருக்கும் மினி மையங்களை பிரதான மையத்தோடு இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

    பணி நிரந்தரம் மற்றும் காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும், உள்ளூர் பணியிட மாறுதல் வழங்கிட வேண்டும்.காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.

    கோடை காலத்தை கருத்தில் கொண்டு பள்ளி கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடுவது போல் அங்கன்வாடி மையங்களுக்கும் ஒரு மாத கால விடுமுறை விட வேண்டும், அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு ஒரு வருடம் வழங்குவது போல் அங்கன்வாடி ஊழியருக்கும் வழங்கிட வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    இதனால் அந்த பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • அங்கன்வாடி மையங்களுக்கு மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை வழங்க வேண்டும்.
    • கேஸ் சிலிண்டர் பில்லுக்கான முழு தொகையை வழங்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் நுழைவாயிலில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் மே மாதம் விடுமுறை வழங்கும் கோரி காத்திருப்புப் போராட்டத்தை துவங்கி நடத்தி வருகின்றனர்.

    மாவட்டத் தலைவர் பழனியம்மாள் தலைமையில் நடைபெற்று வரும் போராட்டத்தில் அங்கன்வாடி மையங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும், கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அங்கன்வாடி மையங்களுக்கு மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை வழங்க வேண்டும், கேஸ் சிலிண்டர் பில்லுக்கான முழு தொகையை வழங்கிட வேண்டும், 10 வருடம் பணிபுரிந்த பணியாளர்க ளுக்கு எவ்வித நிபந்தனையும் இன்றி உடனடியாக பதவி உயர்வு வழங்கிட வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பாரி வைத்து போராட்ட த்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்தில் 500க்கும் மேற்ப ட்டோர் ஈடுபட்டு ள்ளனர். தொடர்ந்து போராட்டம் நடை பெற்று வருகிறது.

    • ராமநாதபுரம் அருகே அங்கன்வாடி ஊழியர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.
    • பணிக்ெகாடை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது.

    ராமநாதபுரம்

    தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரம கலெக்டர் அலுவலக வளாகத்தில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

    தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியை தி.மு.க. அரசு நிைறவேற்ற வேண்டும். அங்கன்வாடி ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு 9 ஆயிரமும், அங்கன்வாடி உதவியாளர்களுக்கு ரூ. 5 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

    பணிக்ெகாடை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த தர்ணா போராட்டம் நடந்தது. இதில் பெண்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர்.
    • 7 அலுவலர்கள் மீது வழங்கப்பட்ட குற்றச்சாட்டு ஆணையை திரும்ப பெற வேண்டும்.

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் உள்ள ஊரக வளர்ச்சித்துறை அலுவலகங்களில் 500- க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்ற னர். இந்த நிலையில் அவர்கள் பல்வேறு கோரிக் கைகளை நிறைவேற்ற கோரி, தமிழக அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி னார்கள். இதில் உடன்பாடு எட்டப்பட வில்லை.

    இதனைத் தொடர்ந்து ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்களின் கோரிக்கை களை நிறைவேற்ற வலி யுறுத்தி இன்று (20-ந் தேதி) ஒரு நாள் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப் பட்டது. அதன்படி இன்று காலை ஊரக வளர்ச்சி துறையின் ஒட்டுமொத்த ஊழியர்களும் ஒரு நாள் விடுப்பு எடுத்து போராட்ட த்தில் ஈடுபட்டனர்.

    இது தொடர்பாக மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறுகையில், "மேலூர் ஊராட்சி ஒன்றியம் சருகுவளை யப்பட்டி கிராம ஊராட்சியில் பிரதமருக் கான திட்டப் பணிகளை செயல்படுத்திய 7 அலு வலர்கள் மீது வழங்கப்பட்ட குற்றச்சாட்டு ஆணையை திரும்ப பெற வேண்டும்,

    மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி அளவில் பணி யிடை நீக்கம் செய்யப்பட்ட 4 ஊராட்சி செயலாளர்களுக்கு மீண்டும் பணியிடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும், பணியிட மாறுதல் கோரிய அனைத்து நிலை அலுவலர்களுக்கும் உடனடியாக வழங்க வேண்டும், மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி அளவில் இதுவரை நிலுவையில் உள்ள குற்றச்சாட்டு ஆணைகளை இறுதி செய்ய வேண்டும், விடுமுறை நாட்களில் நேரில் மற்றும் காணொளி வாயிலாக நடத்தப்படும் ஆய்வு கூட்டங்களை தவிர்க்க வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி ஒரு நாள் விடுப்பு போராட்டம் நடத்தி வருவதாக தெரிவித்து உள்ளனர்.

    • அங்கன்வாடி மையங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
    • 5 ஆண்டுகள் முடிந்த மினி மைய ஊழியர்களுக்கு நிபந்தனை இன்றி பதவி உயர்வு வழங்க வேண்டும்.

    தரங்கம்பாடி:

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் சங்கம் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பேபி தலைமை தாங்கினார்.

    மாவட்ட தலைவர் லதா முன்னிலை வகித்தனர். செம்பனார்கோயில் ஒன்றிய பொருளாளர் ஷகிலாபானு அனைவரையும் வரவேற்றார்.

    ஆர்ப்பாட்ட த்தில் அங்கன்வாடி மையங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

    அங்கன்வாடி மையங்களுக்கு வெயிலின் தாக்கத்தால் மே மாதம் விடுமுறை வழங்க வேண்டும் 10வருடம் பணிபு ரிந்த பணியாளர்களுக்கு எந்த நிபந்தனையுமின்றி உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும்.

    5 ஆண்டுகள் முடிந்த மினி மைய ஊழியர்களுக்கு நிபந்தனை இன்றி பதவி உயர்வு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்ேவறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

    பின்னர் மாவட்ட கலெக்டர் ஏ.பி மகாபார தியிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுத்தனர்.

    இந்நிகழ்ச்சியில் சிஐடியு மாவட்ட தலைவர் ரவீந்திரன், மாவட்ட துணை செயலாளர் ராமானுஜம், மாவட்ட துணை தலைவர் ராணி எலிசபெத், துணை செயலாளர் மணிமேகலை, மயிலாடுதுறை ஒன்றியம் தலைவர் சுகுணா, செய்லர் கவிதாரூத், பொருளாளர் மரகதம். செம்பனார்கோயில் ஒன்றியம் வள்ளி.

    மகேஸ்வரி, சீர்காழி ஒன்றியம் கிருஷ்ணவேணி, ரேவதி, மல்லிகா, குத்தாலம் ஒன்றியம் லட்சுமி, சுமதி, ராஜலட்சுமி உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.

    முடிவில் மாவட்ட பொருளாளர் பரமேஸ்வரி நன்றி கூறினார்.

    • கூட்டமானது திருத்துறைப்பூண்டி முதல் அகஸ்தியம்பள்ளி வரை செல்லும் ரெயிலில் நடத்தப்பட்டது.
    • ரெயில்வே ஊழியர்களுக்கு இனிப்புகள் வழங்கி, புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    திருத்துறைப்பூண்டி:

    தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திருத்துறைப்பூண்டி நகர புகைப்பட கலைஞர்கள் சங்கத்தின் சார்பாக செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

    இதில் திருத்துறைப்பூண்டி முதல் அகஸ்தியம்பள்ளி வரை செல்லும் ரெயிலில் பொதுமக்கள் அனைவரும் சென்று பயன்பெறவேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சங்க கூட்டமானது திருத்துறைப்பூண்டி முதல் அகஸ்தியம்பள்ளி வரை செல்லும் ரெயிலில் நடத்தப்பட்டது.

    மேலும் ரெயில்வே நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சங்கத்தின் சார்பாக இனிப்புகள் வழங்கி அவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் புகைப்பட கலைஞர்கள் சங்க மாவட்ட செயலாளர் சசிசுந்தர் மற்றும் நகர பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர். 

    ×