search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊழியர்கள்"

    • பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
    • சம்பளம் வழங்காததை கண்டித்து போராட்டம் நடத்தினர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் குன்னூர் அரசு லாலி மருத்துவ மனையில் ஒப்பந்த ஊழியர்கள் 30 பேருக்கு சம்பளம் வழங்காததை கண்டித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இதில் பல்வேறு சமூக அமைப்புக்கள் ஊழியர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளன. மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு சம்பளத்தை பெற்று தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.  

    • நிறுவன ஊழியர்கள் கடந்த 3-ந் தேதி குமார் வீட்டிற்கு நேரில் வந்து பணம் கேட்டு அசிங்கப்படுத்தியதாக கூறப்படுகிறது.
    • குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்‌.

    கடலூர்:

    கடலூர் அருகே பெரிய கண்ணாடி சேர்ந்தவர் குமார் (வயது 47).கூலி தொழிலாளி. இவர் தனியார் நிதி நிறுவனத்தில் 8 ஆயிரம் ரூபாய் முன்பணம் செலுத்தி 5 மாதம் 2400 ரூபாய் வீதம் தவணை முறையில் செல்போன் வாங்கியுள்ளார். இந்த நிலையில் குமார் ஒரு மாதம் தவணை மட்டும் கட்டியுள்ளார். மீதமுள்ள தவணைப்பணம் கட்டாததால் தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் கடந்த 3-ந் தேதி குமார் வீட்டிற்கு நேரில் வந்து பணம் கேட்டு அசிங்கப்படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் 5-ம் தேதி செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பணம் கேட்டு மிரட்டியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த குமார் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைத்தொடர்ந்து அவரது வீட்டில் குமார் இறப்பதற்கு முன்பு என் சாவுக்கு தனியார் நிதி நிறுவனம் தான் காரணம் என கடிதம் எழுதி வைத்ததாக இறந்ததாக கூறப்படுகிறது.

    இதனை தொடர்ந்து குமார் உடலை குறிஞ்சிப்பாடி போலீசார் கைப்பற்றி கடலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்‌. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடலூர் அருகே தனியார் நிதி நிறுவனத்தில் லோன் வாங்கி பணம் கட்டாத பெண்ணை மிரட்டியதால் பெண் தற்கொலை செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலை ஏற்படுத்தியது. தற்போது மீண்டும் தனியார் நிறுவன நிதி நிறுவன ஊழியர்கள் மிரட்டியதால் தவணைப்பணம் கட்டாத கூலி தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சுமார் 5 ஆயிரம் பேர் சுற்று வட்டார பகுதி மக்கள் ஆயக்காரன்புலம் கடைத்தெருவிற்கு வந்து செல்கின்றனர்.
    • இந்த 4 ஊராட்சிகளையும் இணைத்து பேரூராட்சியாக ஆயக்காரன்புலத்தை தரம் உயர்த்த வேண்டும்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் ஒன்றியத்தில் ஆயக்காரன்புலம். நிர்வாக வசதிக்காக ஆயக்காரன புலம் முதல் சேத்தி, இரண்டாம் சேத்தி, மூன்றாம்சேத்தி, நான்காம் சேத்தி என 4 ஊராட்சிகளாக பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

    இங்கு 20000 மக்கள்தொகை உள்ளது. இங்கு ஆண்கள், பெண்கள் என இரண்டுமேல் நிலைப்பள்ளிகள், 2 உயர்நிலைப்பள்ளிகள், 4 நடுநிலைப்பள்ளிகள், 10 தொடக்கப் பள்ளிகள். ஒரு தனியார்மேல்நிலைப்பள்ளி, களில் 15,000 மாணவர்கள் படிக்கிறார்கள்.

    ஒரு கிளை நூலகம், ஒரு கால்நடை மருத்துவமனை, ஒரு கிளை அஞ்சலகம், ஒரு ஆரம்ப சுகாதார நிலையம்.

    ஒரு மத்திய கூட்டுறவு வங்கி, ஒரு அரசுடைமை வங்கி, ஒரு வேளாண், தொடக்கநிலை சங்கம்.

    புகழ்பெற்ற அய்யனார் கோயில் உள்ளது.

    நாள்தோறும் சுமார் 5 ஆயிரம் பேர் சுற்று வட்டார பகுதி மக்கள் ஆயக்காரன்புலம் கடைத்தெருவிற்கு வந்து செல்கின்றனர்.

    அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் நிறைந்த பகுதியாகும் வேதாரண்யம் தாலுகாவின் வலுவான பொருளாதரத்தையும் பெற்ற இந்த 4 ஊராட்சிகளையும் இணைத்து பேரூராட்சியாக ஆயக்காரன்புலத்தை தரம் உயர்த்த வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
    • மாவட்ட தலைவர் மாரிச்சாமி தலைமை தாங்கினார்.

    மதுரை

    மதுரை புதூரில் உள்ள மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு இன்று காலை தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் மாரிச்சாமி தலைமை தாங்கினார். மாநில துணை பொது செயலாளர் பிச்சைராஜன் மற்றும் நிர்வாகிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

    ஜனவரி மாதம் 2022 முதல் 3 சதவீத அகவிலைபடியை வழங்க வேண்டும். மின்துறையை தொடர்ந்து பொது துறையாக இயக்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும். மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் குறைகளை நீக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    • உற்பத்தி செய்யப்பட்ட துணிகள் கொள்முதல் செய்யப்படாமல் கோடிக் கணக்கான ரூபாய் மதிப்பீட்டில் தேக்கம் அடைந்தது.
    • காலத்திற்கேற்ப தறிகளை நவீனப்படுத்தி புதிதாக ஆட்கள் நியமித்து கூலியை உயர்த்தி வழங்க வேண்டும்.

    சிவகிரி:

    ஈரோடு மாவட்டம் சிவகிரி பாலமேட்டு புதூரில் 1982-ம் ஆண்டில் தமிழ்நாடு பஞ்சாலை க்கழகத்தின் மூலம் விசைத்தறி கூடம் அமைக்கப்பட்டது.

    இங்கு பள்ளி மாண வர்களுக்கு அரசின் சார்பில் இலவசமாக வழங்கப்படும் சீருடைகள். போலீஸ் சீரு டைகள், இலவச வேட்டி, சேலைகள் ஆகியவை உற்பத்தி செய்யப்பட்டது.

    தறி ஓட்டுபவர்கள், வைண்டிங்மேன், கிளீனர், ஜாப்பர், ஹெல்ப்பர், தோட்டக்காரர் என 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது.

    குறிப்பாக இலங்கை தமிழர்களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது. தினமும் 3 சிப்ட் இயங்கி வந்தநிலையில் உற்பத்தி செய்யப்பட்ட துணிகள் கொள்முதல் செய்யப்படாமல் கோடிக் கணக்கான ரூபாய் மதிப்பீட்டில் தேக்கம் அடைந்தது.

    இதனால் கடந்த 20 ஆண்டுகள் முன்பு 44 தறிகள் கொண்ட ஒரு யூனிட் நிறுத்தப்பட்டு, தொழி லாளர்களுக்கு விருப்ப ஓய்வு வழங்கப்பட்டு 48 தறிகளுடன் மட்டுமே இயங்கி வந்தது.

    புதிதாக ஆட்கள் நியமிக்கப்பட வில்லை. சம்பளம் பற்றாக்குறை யால் தொழி லாளர்கள் பலர் வெளியேறி விட்டனர்.

    இந்நிலையில் வெறும் 24 தறிகள் மட்டுமே இயங்கி வந்தது. ஆனால் தற்போது இயங்கும் தறிகளின் எண்ணிக்கை 4 ஆக குறைந்து உள்ளது. இதை மட்டுமே நம்பி சுமார் 40 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்த தொழிலாளர்கள் எண்ணிக்கை 20ஆக குறைந்து விட்டது.

    தற்போது பணியில் உள்ள தொழிலாளர்களுக்கு தினமும் 430 ரூபாய் மட்டுமே ஊதியமாக வழங்க ப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு சம்பள ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில் புதிய ஒப்பந்தங்கள் எதுவும் போடப்படவில்லை.

    இந்நிலையில் நிர்வாக த்தின் சார்பில் அறிவிப்பு பலகையில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

    அதில் தற்பொழுது தமிழ்நாடு பஞ்சாலை கழகத்திற்கு சொந்தமான சிவகிரி விசைத்தறிக்கூடம் கடந்த 10 ஆண்டுகளில் ரூ.3 கோடியே 73 லட்சம் நஷ்டத்தில் இயங்கி வருகிறது.

    நடப்பு ஆண்டில் மாதம் ஒன்றுக்கு சுமார் 2 லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்படுகிறது. இதனால் விசைத்தறிக்கூடம் தொடர்ந்து நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    நிர்வாகத்தின் இந்த அறிவிப்பால் தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இந்த விசைகூடம் தொடர்ந்து லாபத்தில் இயங்க நட வடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் காலத்திற்கேற்ப தறிகளை நவீனப்படுத்தி புதிதாக ஆட்கள் நியமித்து கூலியை உயர்த்தி வழங்க வேண்டும். நிறுவனத்தை லாபத்தில் இயக்க ஆலோசனைக்குழு அமைக்க வேண்டும்.

    அந்த குழுவில் தொழிலாளர்களை முன் வைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

    • ரேசன் கடை ஊழியர்கள் சரிவர பணிக்கு வருவதில்லை என கிராம சபை கூட்டத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.
    • சிங்கம்புணரி தாலுகா எஸ்.புதூர் ஒன்றியம் வாராப்பூர் ஊராட்சியில் 75-வது சுதந்திர தினத்தையொட்டி கிராம சபை கூட்டம் நடந்தது.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ்.புதூர் ஒன்றியம் வாராப்பூர் ஊராட்சியில் 75-வது சுதந்திர தினத்தையொட்டி கிராம சபை கூட்டம் நடந்தது.

    இதில் குடிநீர், தெரு விளக்கு, கழிவுநீர் பாதை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி மனுக்களாக கிராம மக்கள் ஊராட்சி மன்ற தலைவர் மலர்விழி நாகராஜனிடம் வழங்கினர். அதனை தொடர்ந்து இந்த பகுதிகளில் செயல்பட்டு வரும் ரேசன் கடை ஊழியர்கள் பணிக்கு சரிவர வருவதில்லை என்றும் கிராம மக்கள் புகார் தெரிவித்தனர்.

    இதற்கு பதில் அளித்த ஊராட்சி மன்ற தலைவர், கிராமத்தின் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளான குடிநீர், தெரு விளக்கு, ஆரம்ப சுகாதார மையம், கழிவு நீர் பாதை போன்றவற்றிக்கு மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்து அதற்கான நடவடிக்கை விரைந்து எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். ரேசன் கடை ஊழியர்கள் பணிக்கு சரிவர வராமல் இருப்பது குறித்து, அதிகாரிகளின் பார்வைக்கு கொண்டு செல்லப்படும் என்றும் தெரிவித்தார்.

    இதில் நூற்றுக்கணக்கான கிராமமக்கள் பங்கேற்றனர்.

    • 20 எண் கொண்ட நகரப் பேருந்து சரி வர இயக்கப்படவில்லை.
    • தனியார் ஊழியர்கள், பள்ளி மாணவர்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

    பாலக்கோடு,

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு போக்குவரத்து பணிமனையில் இருந்து தினந்தோறும் நகர மற்றும் புறநகர் பேருந்துகள் என சுமார் 50-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

    நகர பேருந்துகளில் பள்ளி மாணவர்கள், அரசு ஊழியர்கள், தனியார் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் வேலைக்காக பயணித்து வருகின்றனர்.

    பாலக்கோட்டிலிருந்து வெள்ளிச்சந்தை, அனுமந்தபுரம், காரிமங்கலம், திப்பம்பட்டி கூட்ரோடு வரை இயக்கப்படும் 20 எண் கொண்ட நகரப் பேருந்து சரி வர இயக்கப்படாததால் பயணிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

    இவ்வழியாக நாள் ஒன்றுக்கு 3 முறை இயக்கப்படும் நகர பேருந்து ஒருமுறை மட்டுமே இயக்கப்படுவதால் அவ்வழியே செல்லும் அரசு, தனியார் ஊழியர்கள், பள்ளி மாணவர்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

    திப்பம்பட்டி கூட்டுரோடு முதல் காரிமங்கலம், அனுமந்தபுரம், வெள்ளிச்சந்தை வழியாக பாலக்கோட்டிற்கு இரவு நேரத்தில் போதிய பேருந்து வசதிகள் இல்லாததால் பெரும்பாலும் 20 எண் கொண்ட நகரப் பேருந்தை நம்பி ஊழியர்கள் இருந்து வருகின்றனர்.

    மேலும் பேருந்துகள் முறையாக இயக்கப்படாமல் உள்ளது.

    எனவே மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொண்டு முறையாக பேருந்து இயக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சாலை பணியாளர்கள் பணிபுரிந்த நாட்களுக்கும் விடுப்பு துய்த்த நாட்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும்.
    • பேச்சுவார்த்தைக்கு வரமுடியாது என்று மறுத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை நெடுஞ்சா லை துறை கோட்ட பொறி யாளர் அலுவலகத்தில் சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் நூற்றுக்கணக்கான பணியாளர்கள் வாசலில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஜாக்டோ- ஜியோ போராட்ட காலத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு அரசு உத்தரவிட்டும் சம்பளம் வழங்க மறுக்கும் சீர்காழி நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் ஆனந்தை கண்டித்தும், சங்க நிர்வாகிகளை தனிப்பட்ட முறையில் பழிவாங்கும் நோக்கில் பணி மாறுதல் நடவடிக்கைகள் மேற்கொண்டதை கண்டித்தும், சாலை பணியாளர்கள் பணிபுரிந்த நாட்களுக்கும் விடுப்பு துய்த்த நாட்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும்.

    சீர்காழி மயிலாடுதுறை கோட்ட பொறியாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.சாலை பணியாளர் சங்க மாநில தலைவர் பாலசுப்ர மணியன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் அம்சராஜ் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த சாலை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    கோரிக்கைகளை நிறைவேற்றி பணி மாறுதல் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு மீண்டும் அதே இடத்தில் பணி வழங்கும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்று கூறி வாசலில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பினர்.அதிகாரிகள் சங்கத்தைச் சேர்ந்தவர்களைபேச்சு வார்த்தைக்கு அழைத்த போதும் கோரிக்கைகளை நிறைவே–ற்றாமல் பேச்சுவா ர்த்தைக்கு வரமுடியாது என்று மறுத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு ள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மாவட்ட தலைவர் சிவபழனி, செயலாளர் இளவரசன், மாநில பொருளாளர் தமிழ் உள்ளிட்ட சங்க பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    • சேலம் மாவட்டத்தில் மொத்தம் 218 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன.
    • இதில் 1200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் மொத்தம் 218 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 1200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் டாஸ்மாக் கடைகளில் அரசு நிர்ணயித்த விலையை விட, கூடுதல் விலைக்கு மது விற்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து கடந்த சில மாதங்களாக டாஸ்மாக் அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் ஆய்வு நடத்தினர்.

    இதில் பல்வேறு கடை களில் கூடுதல் விலைக்கு மது விற்ற விற்பனையாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டது. இதில் கடந்த 2 மாதத்தில் மட்டும் ரூ.5 கூடுதலாக மது விற்ற 55 பணியாளர்கள், ரூ.10 கூடுதலாக மது விற்ற 15 பணியாளர்கள் என மொத்தம் 70 பணியாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    இதில் ரூ.10 கூடுதலாக மது விற்ற 15 பேரை இடமாற்றம் செய்ய மண்டல அதகாரிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதனை பரிசீலித்த மண்டல அதிகாரிகள், 15 பணியாளர்களை குறைந்த அளவு விற்பனையாகும் கடைகளுக்கு இடமாற்றம் ெசய்ய உத்தரவிட்டுள்ளார். இதனை டாஸ்மாக் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கம் மற்றும் ஈரோடு மாவட்ட நகர கூட்டுறவு ஊழியர் சங்கம் சார்பில் இன்று தர்ணா போராட்டம் நடைபெற்றது.
    • இதில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பங்கேற்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கம் மற்றும் ஈரோடு மாவட்ட நகர கூட்டுறவு ஊழியர் சங்கம் சார்பில் இன்று ஈரோடு காளை மாட்டு சிலை அருகே தர்ணா போராட்டம் நடைபெற்றது.

    தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தரப்பு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் நிலுவையில் உள்ள பிரச்சனைகளுக்கு மாநில பதிவாளர் உடனடியாக தீர்வு காண வலியுறுத்தி 4 . 7 . 2022 முதல் 12.8.2022 வரை தொடர் போராட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி கடந்த 18-ந் தேதி உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து இன்று தர்ணா போராட்டம் நடைபெற்றது. தர்ணா போராட்டத்திற்கு ஈரோடு மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கத்தின் கவுரவ தலைவர் ஸ்ரீதரன் தலைமை தாங்கினார்.

    ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஓய்வு பெற்ற பணியாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம், ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கத்தின் விநாயகமூர்த்தி, மாவட்ட நகர கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கத்தின் தலைவர் பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு ஊதிய தொடர்பாக பேச்சு வார்த்தை தொடங்கிட வேண்டும்.

    கூட்டுறவு வங்கியில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்றவர்களுக்கு கருணை ஓய்வு ஊதியமாக 10,000, தற்போது பணியில் உள்ள ஊழியர்களுக்கு அகவிலைப்படி உடன் கூடிய மாற்று ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

    மத்திய கூட்டுறவு வங்கிகளில் உதவி மேலாளர் பணியிடங்களுக்கு நேரடி நியமனத்திற்கு 3:1 என்கிற விகிதத்தில் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள 25 சதவீத பணியிடங்களை பதவி உயர்வுகள் மூலம் நிரப்ப வேண்டும்.

    எஸ்.ஆர்.பி மூலம் 2015-16 ஆண்டுகளில் கூட்டுறவு வங்கிகளில் பணியமர்த்தப்பட்ட பணியாளர்களின் பணி மூப்பு பட்டியல் உடனடியாக வெளியிட வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி இந்த தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பங்கேற்றனர்.

    • படகு சவாரி திட்டம் தயார் நிலையில் இருந்தாலும், ஆகம விதிகளின்படி அது ஏற்புடையதாக இல்லை.
    • மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கும்பகோணத்துக்கு ரூ.1,100 கோடியில் திட்ட வரைவு தயார் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

    கும்பகோணம்:

    கும்பகோணத்தில் பல்வேறு இடங்களில் நகரங்க ளுக்கானதூய்மை இயக்கத்தின் சார்பில் தூய்மை பணி மேற்கொள்ள ப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கும்பகோணம் மகாமக குளத்தில் ஒருங்கி ணைந்த தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. இப்பணிக்கு கும்பகோணம் மாநகராட்சி மேயர் சரவ ணன் தலைமை தாங்கினார். ஆணையர் செந்தில் முருகன், துணை மேயர் சு.ப. தமிழழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அன்பழகன் எம்.எல்.ஏ. தூய்மை பணியை தொடங்கி வைத்தார். நகர் நல அலுவலர் பிரேமா, சுகாதார ஆய்வாளர் மணிகண்டன் ஆகியோரின் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்கள் மகாமக குளத்தின் 4 கரைகளிலும் தூய்மை பணி மேற்கொண்டனர்.

    தொடர்ந்து அன்பழகன் எம்.எல்.ஏ. கூறும்போது:- கும்பகோணத்தின் ஆன்மிகச் சின்னமாகவும் மகாமக குளம் விளங்குகிறது. இதில் படகு சவாரி திட்டம் தயார் நிலையில் இருந்தாலும், ஆகம விதிகளின்படி அது ஏற்புடையதாகஇல்லை என்ற கருத்தின் படி படகு சவாரி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கும்பகோ ணத்துக்கு ரூ.1,100 கோடி யில் திட்ட வரைவு தயார் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது. கும்பகோ ணத்தை தனி மாவட்டமாக அறிவிப்பது உறுதி. அதன் பிறகு கும்பகோணம் மாந கரம் புதுப்பொலிவு பெற்று முன்னணி மாநகரங்களில் ஒன்றாக திகழும் என்றார்.

    • மதுரை ரெயில் நிலையம் எதிரே இன்சூரன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர்.
    • ஊழியர்கள்-அதிகாரிகளுக்கு இடையேயான பிரச்சினையை மெத்தனமாக கடைபிடிக்கும் அரசு பொது இன்சூரன்ஸ் நிர்வாகத்தை கண்டிப்பது போன்றவற்றை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மதுரை

    மதுரை ரெயில் நிலையம் எதிரே உள்ள அரசு பொது இன்சூரன்ஸ் அலுவலகம் முன்பு இன்று இன்சூரன்ஸ் நிறுவனங்களின் தொழிற்சங்கங்கள் மற்றும் நலச்சங்கங்களின் மதுரை மண்டல கூட்டு போராட்டக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் புஷ்பராஜன், கண்ணன், மணிமாறன், உமாசங்கர் ஆகியோர் கோரிக்கையகளை வலியுறுத்தி பேசினார்கள். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள ஊதிய உயர்வை உடனடியாக வழங்க வேண்டும், ஊதிய உயர்வு பிரச்சினையில் மத்திய அரசு காலம் தாழ்த்துவதை கைவிட வேண்டும்.

    ஊழியர்கள்-அதிகாரிகளுக்கு இடை யேயான பிரச்சினையை மெத்தனமாக கடைபிடிக்கும் அரசு பொது இன்சூரன்ஸ் நிர்வாகத்தை கண்டிப்பது போன்றவற்றை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

    முன்னதாக மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்சூரன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்த ேபாராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இன்சூரன்ஸ் அலுவலகங்கள் வெறிச்சோடியது.

    ×