search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்மார்ட்போன்"

    • பிக்சல் 8 ஸ்மார்ட்போனுக்கு இந்த சலுகைகள் வழங்கப்படுகின்றன.
    • ப்ளிப்கார்ட் தளத்தில் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 8 ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் வலைதளத்தில் சிறப்பு தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டதை விட தற்போது ரூ. 14 ஆயிரம் வரை குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    விலை குறைப்பு மட்டுமின்றி இந்த ஸ்மார்ட்போன் வாங்குவோர் வங்கி சார்ந்த சலுகைகள் பயன்படுத்தும் போது கூடுதல் பலன்கள் பெற முடியும். தற்போது பிக்சல் 8 ஸ்மார்ட்போனுக்கு மட்டுமே இத்தகைய சலுகைகள் வழங்கப்படுகின்றன.

     


    சலுகை விவரங்கள்:

    இந்தியாவில் பிக்சல் 8 ஸ்மார்ட்போன் ரூ. 75 ஆயிரத்து 999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த ஸ்மார்ட்போனிற்கு ப்ளிப்கார்ட் வலைதளத்தில் ரூ. 14 ஆயிரம் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் பயனர்கள் பிக்சல் 8 ஸ்மார்ட்போனை ரூ. 61 ஆயிரத்து 999 விலையில் வாங்கிட முடியும்.

    பிக்சல் 8 ஸ்மார்ட்போன் வாங்குவோர் ஐசிஐசிஐ வங்கி கார்டு பயன்படுத்தும் போது ரூ. 4 ஆயிரம் வரை கூடுதல் பலன் பெற முடியும். இவ்வாறு செய்யும் போது ஸ்மார்ட்போனின் விலை ரூ. 57 ஆயிரத்து 999 என மாறிவிடும்.

    ப்ளிப்கார்ட் வலைதளத்தில் பிக்சல் 8 ஸ்மார்ட்போனிற்கு எவ்வளவு காலம் வரை இந்த விலை குறைப்பு வழங்கப்படும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. 

    • ஆறு ஆண்டுகள் செக்யூரிட்டி அப்டேட் வழங்குவதாக ஒன்பிளஸ் அறிவித்துள்ளது.
    • இந்த ஸ்மார்ட்போன் 5500 எம்ஏஹெச் பேட்டரி கொண்டுள்ளது.

    ஒன்பிளஸ் நிறுவனம் தனது புதிய நார்டு சீரிஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் நார்டு 4 என அழைக்கப்படுகிறது.

    அம்சங்களை பொருத்தவரை ஒன்பிளஸ் நார்டு 4 மாடலில் 6.74 இன்ச் curved AMOLED ஸ்கிரீன், 120Hz வேரியபில் ரிப்ரெஷ் ரேட் மற்றும் ப்ரோ XDR வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 3 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது.

    இத்துடன் ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஆக்சிஜன் ஓஎஸ் 14 உள்ளது. இந்த ஸ்மார்ட்போனிற்கு 4 ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்களும், ஆறு ஆண்டுகள் செக்யூரிட்டி அப்டேட்களும் வழங்குவதாக ஒன்பிளஸ் அறிவித்து இருக்கிறது.

    புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 16MP செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் இடதுபுறம் அலெர்ட் ஸ்லைடர் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 5500 எம்ஏஹெச் பேட்டரி, 100 வாட் சூப்பர்வூக் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது. இது ஸ்மார்ட்போனை 28 நிமிடங்களில் முழு சார்ஜ் ஏற்றிவிடும்.

    ஒன்பிளஸ் நார்டு 4 ஸ்மார்ட்போன் மெர்குரியல் சில்வர், அப்சிடியன் மிட்நைட் மற்றும் ஓயாசிஸ் கிரீன் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 29 ஆயிரத்து 999 என்றும் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 32 ஆயிரத்து 999 என்றும் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 35 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    • போக்கோ C61 ஸ்மார்ட்போன் 10 வாட் சார்சிங் வசதி கொண்டுள்ளது.
    • இந்த ஸ்மார்ட்போன் மூன்றுவித நிறங்களில் கிடைக்கிறது.

    போக்கோ நிறுவனத்தின் C61 ஏர்டெல் எடிஷன் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் வெளியிட போக்கோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் கூட்டணி அமைத்துள்ளன.

    புதிய போக்கோ C61 மாடலில் 6.71 இன்ச் HD+ டிஸ்ப்ளே, கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு, அதிகபட்சம் 6 ஜிபி ரேம், 128 ஜிபி வரையிலான மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 சார்ந்த MIUI ஓ.எஸ். கொண்டிருக்கிறது.

    புகைப்படங்களை எடுக்க 8MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் கேமரா மற்றும் 5MP முன்புற கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. 5000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் போக்கோ C61 ஸ்மார்ட்போன் 10 வாட் சார்சிங் வசதி கொண்டுள்ளது.

     


    போக்கோ மற்றும் ஏர்டெல் கூட்டணி காரணமாக இந்த ஸ்மார்ட்போன் வாங்குவோர் 50 ஜிபி வரை இலவச டேட்டா பெற முடியும். இத்துடன் ரூ. 750 வரை கூடுதல் தள்ளுபடி பெறலாம். மேலும் ப்ளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கி கார்டு பயன்படுத்தும் போது 5 சதவீதம் தள்ளுபடி பெற முடியும். இந்த ஸ்மார்ட்போனை வாங்கிய முதல் 18 மாதங்களுக்கு ஏர்டெல் சேவையை மட்டுமே பயன்படுத்த முடியும்.

    இந்திய சந்தையில் போக்கோ C61 ஸ்மார்ட்போனின் விலை ரூ. 8 ஆயிரத்து 999 என்று நிர்ணம் செய்யப்பட்டு உள்ளது. எனினும், பயனர்கள் இந்த ஸ்மார்ட்போன் வாங்க ரூ. 3 ஆயிரம் வரை தள்ளுபடி பெறலாம். அதன்படி இதன் விலை ரூ. 5 ஆயிரத்து 999 என மாறிவிடும்.

    போக்கோ C61 ரெகுலர் வெர்ஷன் விலை ரூ. 6 ஆயிரத்து 499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட்போன் டைமண்ட் டஸ்ட் பிளாக், எதிரியல் புளூ மற்றும் மிஸ்டிக்கல் கிரீன் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. புதிய ஏர்டெல் எடிஷன் விற்பனை நாளை (ஜூலை 17) மதியம் துவங்குகிறது.

    • மூன்று ஆண்டுகள் செக்யுரிட்டி அப்டேட்களை பெறும்.
    • இந்த ஸ்மார்ட்போன் இருவித நிறங்களில் கிடைக்கிறது.

    ஐகூ நிறுவனத்தின் முற்றிலும் புதிய Z9 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 6.56 இன்ச் HD+ LCD ஸ்கிரீன், 8MP செல்பி கேமரா, மீடியாடெக் டிமென்சிட்டி 6300 பிராசயர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், 6 ஜிபி வரை விர்ச்சுவல் ரேம் கொண்டிருக்கிறது.

    இந்த ஸ்மார்ட்போன் புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 2MP லென்ஸ் கொண்டிருக்கிறது. இதன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் கொண்டுள்ள ஐகூ Z9 லைட் 5ஜி மாடல் இரண்டு ஆண்டுகள் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் மூன்று ஆண்டுகள் செக்யுரிட்டி அப்டேட்களை பெறும்.

     


    5000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் ஐகூ Z9 லைட் 5ஜி மாடலில் 15 வாட் சார்ஜிங் வசதி உள்ளது. இத்துடன் டூயல் சிம் ஸ்லாட், 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.4, யுஎஸ்பி டைப் சி போன்ற வசதிகள் உள்ளன.

    ஐகூ Z9 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் அக்வா ஃபுளோ மற்றும் மோச்சா பிரவுன் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 10,499 என துவங்குகிறது. இதன் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 11,499 ஆகும்.

    புதிய ஐகூ ஸ்மார்ட்போனின் விற்பனை ஜூலை 20 ஆம் தேதி துவங்குகிறது. விற்பனை அமேசான், ஐகூ இந்தியா இ ஸ்டோர்களில் நடைபெற இருக்கிறது. 

    • பிளேஸ் எக்ஸ் ஸ்மார்ட்போன் 6.67″ FHD+ 3D Curved Screen AMOLED டிஸ்ப்ளே 120Hz ரிப்ரெஷ் ரேட் உள்ளது.
    • லாவா பிளேஸ் எக்ஸ் ஸ்டார்லைட் பர்பிள் மற்றும் டைட்டானியம் கிரே வண்ணங்களில் கிடைக்கிறது.

    லாவா நிறுவனத்தின் புதிய பிளேஸ் எக்ஸ் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் இன்று அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

    பிளேஸ் எக்ஸ் ஸ்மார்ட்போன் 6.67″ FHD+ 3D Curved Screen AMOLED டிஸ்ப்ளே 120Hz ரிப்ரெஷ் ரேட் உள்ளது. இது இந்த பிரிவில் முதன்மையானது என்று நிறுவனம் கூறுகிறது.

    இது MediaTek Dimensity 6300 மூலம் இயக்கப்படுகிறது. 8GB ரேம் + 8GB விர்ச்சுவல் ரேம் மற்றும் 128GB மெமரி உள்ளது.

    இந்த ஸ்மார்ட்போன் விளம்பரங்கள் இன்றி ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் கொண்டிருக்கிறது. மேலும் இரண்டு வருடங்களுக்கு காலாண்டு முறையில் செக்யூரிட்டி அப்டேட்களையும், ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அப்டேட் வழங்குவதாக லாவா நிறுவனம் உறுதியளித்துள்ளது.

    பிளேஸ் எக்ஸ் ஸ்மார்ட்போன் சோனி சென்சார் கொண்ட 64MP மெயின் கேமரா, 2MP செகண்டரி கேமரா, 16MP முன்பக்க கேமரா, 33வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5000mAh பேட்டரியை கொண்டுள்ளது.

    லாவா பிளேஸ் எக்ஸ் ஸ்டார்லைட் பர்பிள் மற்றும் டைட்டானியம் கிரே வண்ணங்களில் கிடைக்கிறது. இதன் விலை 4GB + 128GB மாடலுக்கு ரூ.14,999, 6GB + 128GB மாடலுக்கு ரூ.15,999 மற்றும் 8GB + 128GB மாடலின் விலை ரூ.16,999 ஆகும்.

    • இந்த மாடல் அளவில் மெல்லியதாக இருக்கும்.
    • சற்றே மெல்லிய டைனமிக் ஐலேண்ட் வழங்கப்படுகிறது.

    ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 16 சீரிஸ் மாடல்களை வருகிற செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்ய இருக்கிறது. எனினும், ஐபோன் 17 சீரிஸ் பற்றிய தகவல்கள் வெளியாக துவங்கிவிட்டன. இது குறித்து வெளியான தகவல்களில் அடுத்த ஆண்டு ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 17 பிளஸ் மாடலை அறிமுகம் செய்யாது என்று கூறப்படுகிறது.

    புதிய பிளஸ் மாடலுக்கு பதிலாக ஐபோன் 17 ஸ்லிம் மாடலை ஆப்பிள் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மாடல் அளவில் மெல்லியதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

    இது அலுமினியம் சேசிஸ் கொண்டிருக்கும் என்றும் அதில் கேமரா சென்சார்கள் பிக்சல் மாடல்களில் உள்ளதை போன்றே பொருத்தப்பட்டு இருக்கும் என்று தெரிகிறது.

    முன்புறமாக சற்றே மெல்லிய டைனமிக் ஐலேண்ட் வழங்கப்படுகிறது. டிசைன் அடிப்படையில் புதிய ஐபோன் 17 ஸ்லிம் மாடல் ஐபோன் X போன்றே இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். ஸ்லிம் மாடலில் 6.55 இன்ச் ஸ்கீரன், 120Hz ஸ்கிரீன் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. 

    • ஒன்பிளஸ் சம்மர் லாஞ்ச் நிகழ்ச்சி இத்தாலியில் நடைபெறுகிறது.
    • ஒன்பிளஸ் நார்ட் 4 ஸ்மார்ட்போன் மெட்டல் டிசைன் கொண்டுள்ளது.

    ஒன்பிளஸ் நிறுவனம் வருகிற 16 ஆம் தேதி ஒன்பிளஸ் சம்மர் லாஞ்ச் நிகழ்ச்சியை நடத்த இருக்கிறது. இந்த நிகழ்வில்- நார்டு 4, ஒன்பிளஸ் பேட் 2, ஒன்பிளஸ் வாட்ச் 2R மற்றும் நார்டு பட்ஸ் 3 ப்ரோ என மொத்தம் நான்கு சாதனங்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.

    இதில் ஒன்பிளஸ் நார்ட் 4 5ஜி ஸ்மார்ட்போன் வித்தியாசமான டிசைன் கொன்ட ஒன்பிளஸ் ஏஸ் 3V மாடலின் ரிபிரான்ட் செய்யப்பட்ட மாடல் என்று கூறப்படுகிறது. இதேபோன்று ஒன்பிளஸ் பேட் 2 மாடல் ஒன்பிளஸ் பேட் ப்ரோ மாடலின் ரிபிரான்ட் செய்யப்பட்ட வெர்ஷன் என்று கூறப்படுகிறது.

    புதிய ஒன்பிளஸ் நார்ட் 4 5ஜி மாடலில் மெட்டல் யுனிபாடி டிசைன் வழங்கப்படுகிறது. பட்ஸ் 3 ப்ரோ மாடல் பட்ஜெட் பிரிவில் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதியை வழங்கும் என்று கூறப்படுகிறது. ஒன்பிளஸ் வாட்ச் 2R மாடல் குறைந்த எடை மற்றும் வயர் ஓ.எஸ். கொண்டிருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய சாதனங்கள் அதன் சர்வதேச அறிமுகத்தின் போதே, இந்திய சந்தையில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. 

    • பல்வேறு டீசர்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது.
    • இந்த ஸ்மார்ட்போன் இரு நிறங்களில் கிடைக்கும்.

    லாவா நிறுவனத்தின் புதிய பிளேஸ் எக்ஸ் ஸ்மார்ட்போன் ஜுலை 10 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. புதிய ஸ்மார்ட்போனின் வெளியீட்டை ஒட்டி அந்நிறுவனம் பல்வேறு டீசர்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது.

    அந்த வகையில், தற்போது வெளியாகி இருக்கும் டீசர்களில் புதிய லாவா பிளேஸ் எக்ஸ் ஸ்மார்ட்போன் டூயல் பிரைமரி கேமரா சென்சார்கள், கிளாஸி ஃபிரேம் மற்றும் கர்வ்டு ஸ்கிரீன் கொண்டிருக்கும் என்று தெரியவந்துள்ளது.

    இத்துடன் இந்த ஸ்மார்ட்போன் 4 ஜி.பி., 6 ஜி.பி. மற்றும் 8 ஜி.பி. ரேம் ஆப்ஷன்களிலும் பர்பில் மற்றும் சில்வர் என இரண்டு நிறங்களில் கிடைக்கும்.

     


    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி லாவா பிளேஸ் எக்ஸ் ஸ்மார்ட்போன் FHD+ ஸ்கிரீன், டிமென்சிட்டி 7050 பிராசஸர், 128 ஜி.பி., 256 ஜி.பி. மெமரி, 64MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு லென்ஸ், 32MP செல்பி கேமரா மற்றும் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசசதி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

    இந்தியாவில் புதிய லாவா பிளேஸ் எக்ஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ. 15 ஆயிரம் பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அமேசான் வலைதளத்தில் விற்பனைக்கு வரவுள்ளது. 

    • மெட்டல் டிசைன் கொண்ட ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் என தகவல்.
    • 5500 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

    ஒன்பிளஸ் நிறுவனம் ஜூலை 16 ஆம் தேதி இத்தாலியில் நடத்தும் நிகழ்ச்சியில் தனது புதிய நார்ட் சீரிஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், ஒன்பிளஸ் நார்ட் 4 ஸ்மார்ட்போனின் ஸ்கெட்ச் அடங்கிய படம் ஒன்று இணையதளத்தில் வெளியாகி உள்ளது.

    புதிய புகைப்படத்தின் படி ஒன்பிளஸ் நார்ட் 4 ஸ்மார்ட்போனின் கேமரா பகுதியை தவிர மற்ற இடங்களில் மெட்டல் ஃபிரேம் வழங்கப்படும் என்று தெரியவந்துள்ளது. இதன் மூலம் ஒன்பிளஸ் நிறுவனம் 2017 ஆம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் மெட்டல் டிசைன் கொண்ட ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஒன்பிலஸ் நார்ட் 4 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 3 பிராசஸர், 6.74 இன்ச் 1.5K 2.8D கர்வ்டு AMOLED 120Hz ஸ்கிரீன், 50MP பிரைமரி கேமரா, OIS, 8MP அல்ட்ரா வைடு கேமரா, அலர்ட் ஸ்லைடர் மற்றும் 5500 எம்ஏஹெச் பேட்டரி உள்ளிட்ட அம்சங்களை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

    • விவோ T3 லைட் 5ஜி மாடல் இருவித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
    • இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

    விவோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது முற்றிலும் புதிய 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. விவோ T3 லைட் 5ஜி என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போனில் 6.56 இன்ச் HD+ LCD ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட் வழங்கப்பட்டு இருக்கிறது. மீடியாடெக் டிமென்சிட்டி 6300 பிராசஸர் கொண்டுள்ள விவோ T3 லைட் 5ஜி மாடலில் அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம், 6 ஜி.பி. வரை விர்ச்சுவல் ரேம் உள்ளது.

    புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 2MP லென்ஸ், 8MP செல்பி கேமரா உள்ளது. இத்துடன் பக்கவாட்டில் கைரேகை சென்சார், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

     


    இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஃபன்டச் ஓ.எஸ். 14 கொண்டிருக்கிறது. இத்துடன் ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட், IP64 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி, 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.4 மற்றும் யுஎஸ்பி டைப் சி வழங்கப்பட்டு உள்ளது.

    இந்திய சந்தையில் விவோ T3 லைட் 5ஜி மாடல் வைப்ரண்ட் கிரீன் மற்றும் மஜெஸ்டிக் பிளாக் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 10 ஆயிரத்து 499 என்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 11 ஆயிரத்து 499 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

    • கேம் அல்லது வீடியோ ஸ்ட்ரீமிங் போன்றவைகளால் செல்போன் அதிக வெப்பமடையும்.
    • நேரடி சூரிய ஒளியில் இருந்து செல்போனை தவிர்க்கலாம்.

    இந்தியாவில் கோடையில் வெப்ப அலை அதிகரிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. டெல்லி மற்றும் பல்வேறு மாநிலங்களில் வெப்ப அலையின் தாக்கம் அதிகரித்துள்ளது. வெப்ப அலையில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்வது போல் நம்முடைய ஸ்மார்ட் போன்களுக்கும் சில கவனிப்பு தேவை.

    உங்கள் ஸ்மார்ட்போனை குளிர்ச்சியாக வைத்திருக்கவும், அதிக வெப்பமடைவதை தடுக்கவும் 5 எளிமையான வழிகள்:

    1. நேரடி சூரிய ஒளியை தவிர்க்க வேண்டும்

    செல்போன்கள் செயல்படுவதன் மூலம் அதிக வெப்பத்தை வெளிப்படுத்தும். நேரடி சூரிய ஒளியில் செல்போன்களை பயன்படுத்தினால், அதன் ஸ்கிரீன் வெளிச்சத்தை அதிகரிக்கலாம். னை நிழலில் பயன்படுத்த வேண்டும். இது ஸ்கிரீன் வெளிச்சத்தை குறைவாக வைத்திருக்க உதவும்.

    2. போனுக்கு சிறிது ஓய்வு கொடுங்கள்

    கேம் அல்லது வீடியோ ஸ்ட்ரீமிங் போன்றவைகளால் செல்போன் அதிக வெப்பமடையும். பயனாளர்கள் செல்போனுக்கு ஓய்வு கொடுத்தால் செல்போன் குளிர்ந்து அதிக வெப்பமடைவதை தடுக்கும் வாய்ப்பு உள்ளது.

    3. background apps நிர்வகித்தல்

    background apps-ஆல் செல்போன் அதிக வெப்பமடையும், பேட்டரி பவர் குறையும். போனில் செயலியை பயன்படுத்தவில்லை என்றால், பயனர் ஆப்களை off செய்துவிட வேண்டும். உங்கள் மொபைலை குளிர்ச்சியாக வைத்திருக்க, டேட்டா அல்லது அழைப்புகள் தேவையில்லாதபோது பயனர், பின்புல செயல்முறைகளைக் குறைக்க Airplane mode-க்கு மாறலாம்.

    4. செல்போன் கவரை நீக்க வேண்டும்

    ஸ்மார்ட்போன் கவர்கள் போனை பாதுகாக்கும் அதே வேளையில் அவை வெப்பத்தையும் ஏற்படுத்தும். செல்போன்கள் கூடுதல் வெப்பத்தை உருவாக்குவதால், அது சார்ஜிங்-ல் இருக்கும்போது போனை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மலிவான அல்லது சேதமடைந்த சார்ஜர்கள் அதிக வெப்பத்திற்கு பங்களிக்கும்.

    5. நேரடி சூரிய ஒளியைத் தவிர்க்க வேண்டும்

    நேரடி சூரிய ஒளியில் இருந்து செல்போனை தவிர்க்கலாம். வீட்டிற்குள் வேலை செய்கிறீர்கள் என்றால், சூரிய ஒளி நேரடியாக விழும் ஜன்னல்களிலிருந்து போனை ஒதுக்கி வைக்க வேண்டும். அதேபோல, வாகனம் ஓட்டும்போது காரின் டேஷ்போர்டில் செல்போனை வைப்பதை தவிர்க்க வேண்டும்.

    இந்த எளிய வழிகளை பின்பற்றுவதன் மூலம் கடுமையான வெப்பத்தின்போது செல்போனை குளிர்ச்சியாகவும் பயனுடையதாகவும் வைத்திருக்கலாம்.

    • ஐகூ Z9 லைட் பெயரில் விற்பனை செய்யப்படலாம்.
    • விவோ T3 லைட் மாடல் மீடியாடெக் பிராசஸர் கொண்டிருக்கும் என்று தகவல்.

    ஐகூ நிறுவனம் துவங்கப்பட்டதில் இருந்து அந்நிறுவனம் இதுவரை என்ட்ரி லெவல் அல்லது குறைந்த விலை ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யவில்லை. தற்போது வரை ஐகூ நிறுவனம் மிட் ரேஞ்ச் மற்றும் பிரீமியம் பிளாக்ஷிப் சீரிஸ் ஸ்மார்ட்போன்களை மட்டுமே அறிமுகம் செய்து வருகிறது.

    இந்த நிலையில், ஐகூ நிறுவனம் விரைவில் என்ட்ரி லெவல் 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஐகூ Z9 லைட் பெயரில் விற்பனை செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

    இது குறித்து டிப்ஸ்டரான முகுல் ஷர்மா வெளியிட்டுள்ள தகவல்களில், ஐகூ Z9 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் ஜூலை மாத வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவித்து இருக்கிறார். இந்த ஸ்மார்ட்போன் புளூ மற்றும் பிரவுன் என இரண்டு நிறங்களில் கிடைக்கும் என்று தெரிகிறது.

     

    கோப்புப்படம் 

    கோப்புப்படம் 


    இவைதவிர இந்த ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் மர்மமாகவே உள்ளன. இந்த ஸ்மார்ட்போன் விவோ T3 லைட் ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷனாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் விவோ T3 லைட் ஸ்மார்ட்போன் ஜூன் 27 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது விவோ நிறுவனத்தின் குறைந்த விலை 5ஜி ஸ்மார்ட்போனாக இருக்கும்.

    விவோ T3 லைட் 5ஜி மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி 6300 பிராசஸர் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில், புதிய ஐகூ Z9 லைட் மாடலிலும் இதே பிராசஸர் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். விலையை பொருத்தவரை இரு மாடல்களும் ரூ. 15 ஆயிரம் பட்ஜெட்டில் கிடைக்கும் என்று தெரிகிறது.

    ×