search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குலசேகரம்"

    • கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு நடப்பது வழக்கம்
    • குலசேகரம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் வினிஷ்பாபு விசாரனை செய்து வருகிறார்.

    கன்னியாகுமரி:

    குலசேகரம் அருகே அரமன்னம் பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது (42). இவரது மனைவி ஜெனிகா (31) இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகளும், 12 வயதில் ஒரு மகனும் உள்ளனர். ஜெயராஜ் அந்த பகுதியில் பால்வெட்டும் தொழில் செய்து வருகிறார்.

    கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு நடப்பது வழக்கம் கடந்த 3 மாதங்களுக்கு முன் அவர்கள் 2 பேருக்கும் இடையே தகராறு நடந்தது. உடனே மகளை அழைத்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்றார். அதன் பிறகு தாய்வீட்டில் இருந்தார்.

    மகன் தந்தை ஜெயராஜ் பாதுகாப்பில் வளர்ந்து வந்தான். தினமும் காலையில் பள்ளிக்கு வேனில் சென்று விட்டு மாலையில் வருவது வழக்கம். நேற்று காலையில் பள்ளிக்கு சென்ற மகன் மாலையில் வீடு திரும்பவில்லை. உடனே ஜெயராஜ் பள்ளியில் சென்று கேட்டபோது தாய் ஜெனிகா அழைத்து சென்றது தெரிய வந்தது. உடனே ஜெனிகாவின் தாய் வீட்டுக்கு சென்று பார்த்த போது அங்கு அவர்களை காணவில்லை

    உடனே உறவினர்கள், நண்பர்கள் வீடு என பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். எங்கு தேடியும் மகளை காணவில்லை. செல்போனை தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் ஆக இருந்தது. உடனே குலசேகரம் போலீசில் ஜெயராஜ் தன் மனைவியையும் 2 குழந்தைகளையும் காணவில்லை என்று புகார் செய்தார். புகாரை பெற்றுக் கொண்ட குலசேகரம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் வினிஷ்பாபு விசாரனை செய்து வருகிறார்.

    • டெம்போ பறிமுதல் செய்யப்பட்டது
    • 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது

    கன்னியாகுமரி:

    குலசேகரம் அருகே சுருளோடு பகுதியில் பாறைகள் அதிகம் உள்ளது. இந்த பகுதியில் குவாரி ஒன்று செயல்பட்டு வந்தது.

    இதுபற்றி திருவட்டார் தாசில்தார் தினேஷ்சுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவர் குவாரிக்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது குவாரி எந்தவித அரசு அனுமதி பெறாமல் இயங்கி வந்தது தெரியவந்தது.

    மேலும் அந்த குவாரியை வேர்கிளம்பி காப்புவிளை பகுதியை சேர்ந்த சுபிஷ் (வயது 40) மற்றும் அவரது சகோதரர்கள் 2 பேர் சேர்ந்து நடத்தி வந்தது தெரிய வந்தது.

    உரிய அனுமதி இல்லாமல் குவாரி நடத்தப்பட்டதால் அதனை தாசில்தார் தலைமையிலான அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். மேலும் அங்கு கல் ஏற்றுவதற்காக நிறுத்தப்பட்டிருந்த டெம்போவை அதிகாரிகள் பறிமுதல் செய்து போலீசில் ஒப்படைத்தனர்.

    மேலும் இது தொடர்பாக 3 பேர் மீது கொடுத்த புகாரின் பேரில் குலசேகரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    • கணவருடன் செல்ல மறுத்ததால் பரபரப்பு
    • குலசேகரம் போலீசார் விசாரணை

    கன்னியாகுமரி:

    குலசேகரம் அருகே அண்ணாநகர், சானல்கரை பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி ஒருவருக்கு மனைவியும், 6 வயதில் மகனும், 4 வயதில் மகளும் உள்ளனர்.

    தொழிலாளியின் மனைவி மார்த்தாண்டம் பகுதியில் ஒரு தனியார் செல்போன் கடையில் வேலை பார்த்து வந்தார். தினமும் காலையில் பஸ்சில் வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்புவது வழக்கம்.அப்போது ஆற்றூர்பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    அந்த வாலிபர் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனவர். அதன்பிறகு தனிமையில் வசித்து வந்தார். இதனால் தொழிலாளியின் மனைவியும், வாலிபரும் நெருங்கி பழகினர். அடிக்கடி பல்வேறு இடங்களுக்கு சென்று உல்லாசமாக வாழ்ந்தனர். இதற்காக கணவருக்கு தெரியாமல் அருகில் உள்ளவர்களிடம் இருந்து சுமார் ரூ. 8 லட்சத்துக்கு மேல் கடன் வாங்கி கள்ள காதலனுடன் பல்வேறு இடங்களில் சுற்றி வந்தார்.

    கடன்காரர்கள் இவரிடம் கடன் கொடுத்த பணத்தை கேட்டு தொந்தரவு செய்தவுடன் கணவர் தலையிட்டு 4 லட்சம் பணத்தை கடன்காரர்களுக்கு திருப்பி கொடுத்தார்.கடந்த ஒரு வருடத்துக்கு முன் அந்த பெண் கணவர், இரண்டு குழந்தைகளையும் தவிக்க விட்டு கள்ள காதலனுடன் சென்றார். அதன் பிறகு ஒரு வாரம் கழித்து கண்டுபிடித்து கொண்டு வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த வாரம் கணவர் வேலைக்கு சென்ற பிறகு இரண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு கள்ள காதலனுடன் மாயமானார்.கணவர் வேலை முடிந்து மாலையில் வீட்டுக்கு வந்த பார்த்த போது வீட்டில் மனைவி இரண்டு பிள்ளைகளையும் காணவில்லை உடனே அவர் குலசேகரம் போலீசாரிடம் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் தேடி வந்தனர். இவர்களின் செல்போன் நம்பரை வைத்து தேடிய போது நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டி பகுதியில் ஒரு வீட்டில் இருந்தனர். உடனே உள்ளுர் போலீசார் உதவியுடன் மீட்டு குலசேகரம் போலீஸ் நிலையத்திற்கு நேற்று மாலை அழைத்து வந்தனர்.

    அங்கு கணவருடன் செல்ல மாட்டேன், கள்ள காதலனுடன் தான் செல்வேன் என்று அந்த பெண் அடம் பிடித்தார். போலீசாரும் பேச்சுவார்த்தை நடத்தி பிறகும் அவரது முடிவு மாறவில்லை. அதன் பிறகு குழந்தைகளின் பாச போராட்டம் நடத்தியும் பலன் அளிக்கவில்லை

    அதன் பிறகு இரண்டு குழந்தைகளையும் தவிக்க விட்டு அந்த பெண் கள்ள காதலுடன் காரில் ஏறி சென்றார்.

    இதனால் குலசேகரம் போலீஸ்நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது அது சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது.
    • குலசேகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    குலசேகரம் அண்ணா நகர் சாணல்கரை பகுதியைச் சேர்ந்தவர் தினுகுமார் (வயது 31), தொழிலாளி.

    இவரது மனைவி நிஷாந்தி (26). இவர்களுக்கு 6 வயதில் மகனும் 4 வயதில் மகளும் உள்ளனர். கடந்த 31-ந் தேதி தினு குமார் வழக்கம் போல் வேலைக்குச் சென்று விட்டார். மாலையில் அவர் திரும்பிய போது வீட்டில் மனைவி மற்றும் குழந்தைகள் இல்லை. அவர்களை பல இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைக்க வில்லை. உறவினர் வீடுகளில் விசா ரித்த போதும் நிஷாந்தி மற்றும் குழந்தைகள் பற்றிய விவரம் தெரியவில்லை.

    நிஷாந்தியின் செல்போ னுக்கு தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது. எனவே குல சேகரம் போலீசில் தினு குமார் புகார் செய்தார்.

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப் பதிவு செய்து நிஷாந்தி மற்றும் அவரது மகன், மகளை தேடி வருகிறார். 

    • சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் உடனே வந்து தீயை மேலும் பரவாமல் கட்டுக்குள் கொண்டுவந்தார்கள்.
    • டிபன் கடைக்கு எதிரே பெட்ரோல் பங்க் ஒன்று செயல்பட்டு வருகிறது.

    கன்னியாகுமரி:

    குலசேகரம் அருகே கல்லடிமாமூடு பகுதியில் சாலையோர டிபன்கடை நடத்தி வருபவர் ஜாண். இவர் அதே பகுதியில் வசித்து வருகிறார். தினமும் காலை, மாலை வேளைகளில் டிபன் விற்பனை செய்துவந்தார். இரவு 10 மணிவரை தினமும் கடை திறந்து இருக்கும். இதன் எதிரே பெட்ரோல் பங்க் ஒன்று செயல்பட்டு வருகிறது.

    நேற்று மாலை டிபன் கடை நடத்தி கொண்டு இருக்கும்போது கியாஸ் சிலிண்டரில் இருந்து திடீரென கியாஸ் கசிந்து தீ பிடித்தது. இதில் கடைமுழுவதும் தீயில் கருகியது. அங்கு உணவு சாப்பிட்டு கொண்டு இருந்தவர்கள் அலறி அடித்து கொண்டு ஓடினார்கள். அந்த பகுதி பொதுமக்களும், ரோட்டில் நடந்து சென்றவர்களும் தீயை அணைக்கும் முயற்சியில் உடனே குலசேகரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

    சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் உடனே வந்து தீயை மேலும் பரவாமல் கட்டுக்குள் கொண்டுவந்தார்கள். டிபன் கடையின் மேற்கூரை இரும்பு தகடுகளால் மாட்டப்பட்டு இருந்தது இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இது அந்த பகுதியில் பெரும் பரப்பரப்பு ஏற்படுத்தியது.

    • கொடியேற்றத்துடன் இன்று தொடங்குகிறது
    • 8-ம் நாள் திருவிழாவன்று இரவில் புனித அகுஸ்தினார் தேர்ப்பவனி நடைபெறுகிறது.

    கன்னியாகுமரி:

    குலசேகரம் புனித அகுஸ்தினார் ஆலய திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு இன்று மாலை 6.30 மணிக்கு திருவிழா கொடியேற்றம் நடைபெறுகிறது. கொடியேற்ற நிகழ்ச்சிக்கும், தொடர்ந்து நடைபெறும் திருபலிக்கும் பாளையங்கோட்டை மறைமாவட்ட முன்னாள் ஆயர் ஜூடு பால்ராஜ் தலைமை தாங்கி மறையுரையாற்றுகிறார்.

    2- ம் நாள் திருவிழாவான நாளை ( 27 - ந் தேதி) மாலையில் சூசையன் தலைமையில் நடைபெறும் திருப்பலியில், மனோஜ் மற்றும் பல்லோட்டின் சபை குருக்கள் மறையுரை யாற்றுகின்றனர். இத்திருப்பலியில் திரு முழுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 3- ம் நாள் திருவிழாவான நாளை மறுநாள் ( 28 - ந் தேதி) காலையில் குழித்துறை மறைமாவட்ட தொடர்பாளர் யேசு ரெத்தினம் தலைமையில் நடைபெறும் திருப்பலிக்கு திருச்சி தூய பவுல் இறையியல் கல்லூரி பேராசிரியர் சேவியர் பெனடிக்ட் மறையுரையாற்றுகிறார். இத்திருப்பலியில் முதல் திருவிருந்து வழங்கப்படுகிறது.

    4 -ம் நாள் திருவிழா வான வருகிற 29- ந் தேதி மாலையில் புத்தன்கடை மறைவட்டார முதல்வர் பென்னி லூக்காஸ் தலைமையில் நடைபெறும் திருப்பலியில் திரித்துவபுரம் வட்டார முதல்வர் புஷ்பராஜ் மறையுரையாற்றுகிறார். 5- ம் நாள் விழாவான 30 - ந் தேதி மாலையில், தும்பாலி ஜெரி தலைமையில் நடைபெறும் திருப்பலியில் தமிழ்நாடு மாகாண தலைவர் ஜாண் சர்ச்சில் பாஸ் மறையுரையாற்றுகிறார்.

    6- ம் நாள் திருவிழாவான 31-ந் தேதி மாலையில் சேவியர் லாரன்ஸ் தலைமையில் நடைபெறும் திருப்பலியில் மயிலாடி சைமன் மறையுரையாற்றுகிறார். 7- ம் நாள் திருவிழாவான அடுத்த மாதம் 1-ந் தேதி முளகுமூடு வட்டார முதல்வர் மரிய ராஜேந்திரன் தலைமையில் நடைபெறும் திருப்பலியில், வெட்டுவெந்தி மரிய மார்டின் மறையுரை யாற்றுகிறார்.

    8-ம் நாள் திருவிழாவான 2-ந் தேதி மாலையில் நடைபெறும் பணிக்குழுக்களின் இயக்குனர் ஜெலஸ்டின் ஜெரால்டு தலைமையில் நடைபெறும் திருப்பலிக்கு கொல்வேல் ஒய்ஸ்லின் சேவியர் மறையுரையாற்றுகிறார். இரவில் புனித அகுஸ்தினார் தேர்ப்பவனி நடைபெறுகிறது.

    9- ம் நாள் திருவிழாவான 3-ந் தேதி கூட்டாண்மை பள்ளிகளின் இயக்குனர் கலிஸ்டஸ் தலைமையில் நடைபெறும் திருப்பலியில், குலசை பெலிக்ஸ் மறையுரையாற்றுகிறார்.

    விழா நிறைவு நாளான 4- ந் தேதி காலையில் குழித்துறை மறைமாவட்ட செயலாளர் ரசல்ராஜ் தலைமையில் நடைபெறும் திருப்பலியில், கோட்டார் பணிக்குழு இயக்குனர் எட்வின் மறையுரையாற்றுகிறார். தொடர்ந்து கொடியிறக்கம் நடைபெறுகிறது. விழா நாட்களில் தினமும் மாலை 6 மணிக்கு ஜெபமாலை, நவநாள் மற்றும் இரவில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

    விழாவுக்கான ஏற்பாடு களை ஜோண்ஸ் கிளீட்டஸ் தலைமையில் சேவியர் ஆரோக்கியசாமி மற்றும் பங்கு அருட்பணி பேரவை, ஐ.சி.எம். அருள் சகோதரிகள், பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.

    • கடந்த 2 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார்.
    • குலசேகரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    குலசேகரம் அருகே ஈஞ்சகோடு பகுதியை சேர்ந்தவர் அஜிகுமார். கட்டிட தொழிலாளி. இவரது வீட்டில் கட்டிட வேலை நடந்து வந்தது.

    ஆணையடி செங்கோடி பகுதியை சேர்ந்த மோசஸ் (வயது 33) என்பவர் இங்கு கட்டிட வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று இவர் கட்டிடத்தின் மேல் பகுதியில் நின்று வேலை செய்து கொண்டிருந்தார்.

    அப்போது எதிர்பாராதவிதமாக கட்டிடத்தின் மேல் பகுதியில் இருந்து தவறி விழுந்தார்.

    இதில் பலத்த காயமடைந்து மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு கடந்த 2 நாட்களாக மோசஸ் சிகிச்சை பெற்று வந்தார். இன்று காலை சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக இறந்து விட்டார்.

    இதுபற்றி குலசேகரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • திற்பரப்பில் இருந்து சித்திரங்கோடு வரை நடைபெற்றது
    • மத்திய பா.ஜ.க. ஆட்சியின் மக்கள் விரோத போக்கு மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து நடைபெற்றது

    கன்னியாகுமரி:

    மத்திய பா.ஜ.க. ஆட்சியின் மக்கள் விரோத போக்கு மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருவட்டார் மேற்கு வட்டார காங்கிரஸ் சார்பில் பாதயாத்திரை நடைபெற்றது. திற்பரப்பில் இருந்து சித்திரங்கோடு வரை நடைபெற்ற இந்த யாத்திரைக்கு மாவட்ட காங். தலைவர் பினுலால்சிங் தலைமை தாங்கினார்

    வட்டார தலைவர்கள் காஸ்டன்கிளிட்டஸ், ஜெகன் ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் வக்கீல் ஜான் இக்னேஷியஸ், மாநில பொதுக்குழு உறுப்பினர் ரெத்தினகுமார், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் செலின்மேரி, மாவட்ட துணைதலைவர் ராஜ ரெத்தினம், மாவட்ட பொது செயலாளர் மோகன் தாஸ், திற்பரப்பு பேருராட்சி தலைவர் பொன்.ரவி.

    திற்பரப்பு நகர தலைவர் எட்வின், மாநில இளைஞர் காங். பொது செயலாளர் பினிஷ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பாத யாத்திரை திற்பரப்பில் தொடங்கி அரசமூடு, மாமூடு, பொன்மனை, குல சேகரம், திருவட்டார், வியனூர், வேர்கிளம்பி வழியாக சித்தரங்கோட்டில் நிறைவடைகிறது.

    • ரூ.30 லட்சம் கொடுத்ததாக கூறிய வாலிபரை பிடித்து விசாரணை
    • செல்போனையும் கைப்பற்றி போலீசார் ஆய்வு

    கன்னியாகுமரி:

    குலசேகரம் அருகே உள்ள சூரியகோடு பகுதியை சேர்ந்தவர் ஜாண் ஐசக் (வயது 35), பிளம்பர். இவரது மனைவி சந்தியா (32).

    இவர்களுக்கு திருமண மாகி 10 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லை. இந்த நிலையில் கடந்த 30-ந் தேதி இரவு சந்தியா தூக்கில் தொங்கிய நிலையிலும் ஜாண் ஐசக் விஷம் குடித்த நிலையிலும் வீட்டில் பிணமாக மீட்கப்பட்டனர்.

    இருவரும் கடன் விவகாரத்தில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. இதுதொடர்பாக போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலை யில் குலசேகரம் போலீஸ் நிலையத்தில் சந்தியாவின் தாயார் காந்தி ஒரு புகார் கொடுத்தார். அதில், தட்டான் விளை பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் சந்தியாவுக்கு ரூ.30 லட்சம் பணம் கொடுத்ததாக என்னிடம் கூறினார்.

    அவரிடம் எதற்காக பணம் கொடுத்தீர்கள் என்று கேட்டபோது, அவரை திருமணம் செய்து கொள்வதாக கூறியதால் பணம் கொடுத்ததாக தெரிவித்தார்.

    அந்த பணத்தை திரும்ப வாங்கி தரும்படி என்னிடம் கேட்டார். இல்லாவிட்டால் போலீசில் புகார் கொடுத்து விடுவேன் என்று மிரட்டி னார். இந்த சூழலில் தான் எனது மகளும் மருமகனும் தற்கொலை செய்துள்ளனர். எனவே இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் கூறியிருந்தார்.

    அதன் அடிப்படையில் பணம் கொடுத்ததாக கூறிய வாலிபரிடம் தக்கலை போலீஸ் சூப்பிரண்டு கணேசன் தலைமையிலான போலீசார் இன்று விசாரணை நடத்தி னர்.

    பணம் கொடுத்ததற்கான ஆதாரங்கள் என்ன? எவ்வ ளவு பணம் கொடுக்க ப்பட்டது? என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகி றார்கள்.

    இதற்கிடையே சந்தியா மற்றும் அவரது கணவர் செல்போன்களையும் கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். பணம் கொடுத்ததற்கான ஆதாரம் மற்றும் அவர்களை யாரும் மிரட்டினார்களா? என்பது பற்றியும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    ஜாண் ஐசக் - சந்தியா உடல்கள் நேற்று பிரேத பரிசோதனைக்குப் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இன்று பிரேத பரிசோதனை அறிக்கை வந்ததும் அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்த திட்ட மிட்டுள்ளனர்.

    • ‘சிகரெட்‘ கேட்ட 2 பேர் கைவரிசை - மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.
    • சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்து தீவிர விசாரணை

    கன்னியாகுமரி:

    குலசேகரம் அருகே சரக்கல்விளை, வலியாற்று முகம் பகுதியை சேர்ந்தவர் வேதக்கண். இவரது மனைவி சரசம் (வயது 67) இவர்கள் வீட்டின் அருகில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார்கள்.

    நேற்று இரவு 7 மணி அளவில் சரசம் மட்டும் கடையில் இருந்த போது 2 மர்ம நபர்கள் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்து சிகரெட் கேட்டார்கள். சரசம் சிகரெட் எடுத்து திரும்பும் போது அவர் கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க தாலி செயினை அந்த வாலிபர்கள் பறித்தனர். அதனை எதிர்பாராத சரசம் அதிர்ச்சி அடைந்தார். அதற்குள் 2 வாலிபர்களும் மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.

    வாலிபர்கள் பறித்த செயினில் இருந்த டாலர் கீழே விழுந்தது. இதனை அவசரத்தில் விட்டு சென்று விட்டார்கள். நகையின் மதிப்பு ரூ 1 லட்சம் 30 ஆயிரம் ஆகும். சரசத்தின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தார்கள்.

    அவர்கள் அந்த பகுதி முழுவதும் தேடினார்கள். உடனே இதுகுறித்து குலசேகரம் போலீஸ் நிலையத்தில் சரசம் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சிசிவிடி காமிராக்களை ஆய்வு செய்து தீவிர விசாரணை செய்து வருகிறார்.

    • பொதுப்பணித்துறைக்கு கோரிக்கை
    • பொதுமகக்கள் நலன் கருதி போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்

    கன்னியாகுமரி:

    அஞ்சுகண்டறை சந்திப்பிலிருந்து சானல்கரை வழியாக பேச்சிப்பாறை செல்லும் சாலையில் அயனிமரம் ஒன்று பட்டுபோய் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது.

    அந்த வழியாக தினமும் இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் தினமும் ஏராளமானோர் கடந்து செல்கிறார்கள். பெரும் விபத்து நடைபெறும் முன் அந்த அயனி மரத்தை வெட்டி அகற்ற வேண்டும்.

    பொதுமகக்கள் நலன் கருதி போர்க்கால அடிப்படையில் பட்டுபோன அயனி மரத்தை ஏலமிட்டு அப்புறபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திற்பரப்பு பேரூராட்சி துணைத் தலைவர் ஸ்டாலின்தாஸ் பொதுபணித்துறைக்கு கோரிக்கை விடுத்தார்.

    • எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. உள்பட 613 பேர் மீது வழக்கு
    • தேரை வடம் பிடித்து இழுக்க அமைச்சர் மனோ தங்கராஜுக்கு பாரதிய ஜனதாவினர் எதிர்ப்பு

    நாகர்கோவில்:

    வேளிமலை முருகன் கோவில் தேரோட்ட நிகழ்ச்சியில் தேரை வடம் பிடித்து இழுக்க அமைச்சர் மனோ தங்கராஜுக்கு பாரதிய ஜனதாவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இது தொடர்பாக எம்.எல்.ஏ. எம்.ஆர்.காந்தி, பாரதிய ஜனதா மாவட்ட தலைவர் தர்மராஜ் மற்றும் இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்ட னர். போராட்டத்தில் ஈடு பட்ட 63 பேரை போலீசார் கைது செய்து அங்குள்ள மண்டபத்தில் தங்க வைக்க ப்பட்டனர். கைது செய்யப்பட்ட 63 பேரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ. உள்பட 63 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். எம்.ஆர். காந்தி மற்றும் பாரதிய ஜனதாவினர் கைது செய்யப்பட்டதை அறிந்த கட்சி நிர்வாகிகள் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நாகர்கோவில் அண்ணா சிலை முன்பு நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் ஜெகநாதன் தலைமையில் போராட்டம் நடந்தது. மாநிலச் செயலாளர் மீனாதேவ், மகளிரணி மாநில தலைவர் உமாரதி ராஜன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். பாரதிய ஜனதாவினர் மீது வடசேரி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    குலசேகரம் சந்திப்பில் மாவட்ட துணை தலைவர் முருகன் தலைமையிலும், தக்கலை பஸ் நிலையம் பகுதியில் விவசாய அணி தலைவர் முருகராஜன் தலைமையிலும், கொல்லங்கோடு கண்ண நாகம் சந்திப்பு பகுதியில் கொல்லங்கோடு நகராட்சி உறுப்பினர் பத்மகுமார் தலைமையிலும் மறியல் போராட்டம் நடந்தது.

    புதுக்கடை பகுதியில் பைங்குளம் ஊராட்சி முன்னாள் தலைவர் செந்தில்குமார் தலைமை யிலும், திங்கள்நகர் பஸ் நிலையம் முன்பு மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் சிவகுமார் தலைமையிலும் மறியல் போராட்டம் நடந்தது.மறியல் போராட்டத்தில் வில்லுகுறி பஞ்சாயத்து தலைவர் விஜயலட்சுமி, கவுன்சிலர்கள் சரவணன், முத்துக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    தோவாளையில் மாவட்ட பொதுச் செயலாளரின் சொக்கலிங்கம் தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது. சுசீந்திரம், மேல்புறம், மார்த்தாண்டம் உள்பட மாவட்டம் முழுவதும் 11 இடங்களில் நடந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 550 பேரை போலீசார் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர். மறியலில் ஈடுபட்ட எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. உள்பட 613 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    ×