search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குலசேகரம்"

    • இந்த சாலை குலசேகரம், அருமனை, மஞ்சாலுமூடு ஆகிய பகுதி அவசர தேவைக்கு மற்றும் ஆஸ்பத்திரிகளுக்கு திருவனந்தபுரத்திற்கு எளிதாக செல்லும் சாலையாகும்.
    • பொதுமக்களும், போக்குவரத்தும் செல்ல முடியாத சூழ்நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அந்த சாலை மழை நீரால் குளங்கள் போல் காட்சியளிக்கிறது

    கன்னியாகுமரி:

    அருமனை அருகே மஞ்சாலுமூட்டிலிருந்து மாலைக்கோடு வரையிலான சாலை சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது.

    பொதுமக்களும், போக்குவரத்தும் செல்ல முடியாத சூழ்நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அந்த சாலை மழை நீரால் குளங்கள் போல் காட்சியளிக்கிறது. இச்சாலைக்காக பல ஆண்டுகாலமாக அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் போராட்டம் நடத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் குமுறலுடன் இருக்கின்றனர்.

    இச்சாலையானது தமிழக அரசு நெடுஞ்சாலைதுறைக்கு சொந்தமானதாகும். இந்த சாலை குலசேகரம், அருமனை, மஞ்சாலுமூடு ஆகிய பகுதி அவசர தேவைக்கு மற்றும் ஆஸ்பத்தி ரிகளுக்கு கேரளாவுக்கு (திருவனந்த புரம்) எளிதாக செல்லும் சாலையாகும்.

    தற்போது பெய்துவரும் தொடர்மழையால் சாலையில் நீர் தேங்கி குளங்கள் போல் காட்சியளிக்கிறது. இச்சாலையை காலம் கடத்தாமல் உடனடியாக சீர்செய்ய நெடுஞ்சாலை துறையும் மாவட்ட நிர்வாகத்தையும் பொதுமக்களும் அரசிய கட்சியினரும் கேட்டு கொண்டுள்ளனர்.

    • குலசேகரம் ஷீரடி சாய் கிருஷ்ணா பஜனை மண்டலியின் 8-ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் சிறப்பு ஆராதனை திருவிழா குலசேகரம் எஸ்.ஆர்.கே.பி.வி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
    • விழா ஏற்பாடுகளை ஷீரடி சாய் கிருஷ்ணா பஜனை குழுவினர் செய்து இருந்தனர்.

    கன்னியாகுமரி:

    குலசேகரம் ஷீரடி சாய் கிருஷ்ணா பஜனை மண்டலியின் 8-ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் சிறப்பு ஆராதனை திருவிழா குலசேகரம் எஸ்.ஆர்.கே.பி.வி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. காலையில் 501 லிட்டர் பால் அபிஷேகமும் அதை தொடர்ந்து பஜனை, ஆரத்தி, அருளுரை, கூட்டு பிரார்த்தனை, தியானம், புஷ்பாபிஷேகம் நடந்தது.

    பாலபிஷேகம், ஆரத்தி, புஷ்பாபிஷேகம் பக்தர்கள் தங்களாகவே பாபாவிற்கு அபிஷேகம் செய்தனர், தொடர்ந்து சிறப்பு அன்ன தானம் நடந்தது தரிசன நிகழ்ச்சியில் சுவாமி பத்மேந்திரா மற்றும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.விழா ஏற்பாடுகளை ஷீரடி சாய் கிருஷ்ணா பஜனை குழுவினர் செய்து இருந்தனர்.

    • கடன் தொல்லையால் பரிதாபம்
    • போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    கன்னியாகுமரி:


    குலசேகரம் அருகே கல்வெட்டான்குழி, கூடைதூக்கி பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ் (வயது 32) இவருக்கு அபிநயா என்ற மனைவியும் 6 வயதில் ஒரு மகனும் 4 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இவர் பெயின்டிங் வேலை செய்து குடும்பம் நடத்தி வந்தார்.


    இவர் அந்த பகுதியில் உள்ள சுய உதவி குழுக்களில் கடன் வாங்கியிருந்தார். சரிவர வேலை இல்லாததால் குழுவில் பணம் கட்ட முடியவில்லை இதனால் மன விரக்தியில் இருந்தார். நேற்று மனைவியையும் பிள்ளைகளையும் உறவினர் வீட்டுக்கு அனுப்பி விட்டு வீட்டின் பின்பக்க வாசல் மூலம் வீட்டில் வந்து உத்திரத்தில் கயிற்றில் தூக்கில் தொங்கி இருந்தார்.


    இரவு மனைவியும் பிள்ளைகளும் வந்து கதவை திறந்து பார்க்கும் போது ராஜேஸ் இறந்து இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே குலசேகரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.


    இன்ஸ்பெக்டர் பாலமுருகன் சம்பவ இடத்துக்கு வந்து பிணத்தை கைப்பற்றி குலசேகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். மனைவி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    • குலசேகரம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது கஞ்சா பாக்கெட்டுகள் வைத்திருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

    கன்னியாகுமரி:


    குலசேகரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடு பட்ட போது அதிவேகமாக 2 இருசக்கர வாகணத்தில் 3 பேர் வந்தனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்யும் போது முன்னுக்கு பின் முரணாக பேசினர்.

    இதனால் வாகனத்தை சோதனை செய்த போது 1 கிலோ 100 கிராம் கஞ்சா பாக்கெட்டுகள் இருந்தன. அதனை பறிமுதல் செய்த போலீசார், 3 பேரையும் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் குலசேகரம் நாகக்கோடு பகுதியை சேர்ந்த ஆகாஷ் (வயது 20), பிரவின் (23),வெண்டலிகோடு பகுதியை சேர்ந்த ஆகாஷ் (20) என தெரிய வந்தது.

    இதில் ஆகாஷ், பிரவின் மீது ஏற்கனவே தக்கலை காவல் நிலையத்தில் 2 கஞ்சா வழக்குகள் உள்ளன. எங்கு இருந்து கஞ்சா வருகிறது? யார் மூலம் சப்ளை செய்து வருகிறார்கள்? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ×