search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223610"

    • மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
    • முந்திரி ஆலை சுவற்றில் மோதியதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து இறந்தார்.

    கன்னியாகுமரி:

    மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட திக்குறிச்சி சேம்புவிளை பகுதியை சேர்ந்தவர் பிபின் (வயது 20). கட்டிட தொழிலாளியான இவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது நிலை தடுமாறி வெலிகல் அருகே முந்திரி ஆலை சுவற்றில் மோதியதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.

    அவரை அக்கம் பக்கத்தி னர் மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.அங்கு அவரை பரி சோதித்துப் பார்த்த டாக்டர்கள் இவர் ஏற்கனவே இறந்து விட்ட தாக தெரிவித்தனர். இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெண் உள்பட 5 பேர் மீது வழக்கு
    • மார்த்தாண்டம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட மடத்துவிளை பகுதியைச் சேர்ந்தவர் ராஜா விஜயகுமார் (வயது 45). இன்சூரன்ஸ் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் திருணமாகி குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

    சம்பவத்தன்று அவரது குடும்பத்தினர் அனைவரும் வெளியூருக்கு சென்ற நிலையில் ராஜா விஜயகுமார் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த அனிக்குமார் (27), ஆஷிக் (21), ஆஷிப் (19), விஜிகுமார் (36), ஷகிலா (47) ஆகியோர் முன்விரோதம் காரணமாக வீட்டு காம்பவுண்டு சுவர் ஏறி குதித்து உள்ளே புகுந்து வீட்டின் பின் பக்க கதவை உடைத்து உருட்டு கட்டையால் ராஜா விஜயகுமாரை அடித்தனர்.

    இதில் அவருக்கு இடது கண், அடி வயிறு மற்றும் உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் வலியால் அலறியுள்ளார்.

    இதைடுத்து அப் பகுதியைச் சேர்ந்வர்கள் விரைந்து வந்தனர். அவர் களை கண்டதும் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றுள்ளது. இதையடுத்து அவரை ஆம்புலன்ஸ் மூலம் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரி யில் சேர்த்தனர்.இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் பெண் உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நிழற்குடையை சரி செய்ய வேண்டும்
    • சேதமடைந்த நிழற்குடையை அப்புறப்படுத்த வேண்டும்

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தின் 2-வது பெரிய வர்த்தக நகரமான மார்த்தாண்டம் பகுதியில் தொடர் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டதை தொடர்ந்து மார்த்தாண்டம் பம்மத்தில் இருந்து வெட்டு மணி வரை 2¾ கிலோமீட்டர் நீளம் மிகப் பிரம்மாண்டமான இரும்பு மேம்பாலம் அமைக்கப்பட்டது.

    இதையடுத்து கனரக வாகனங்கள் மற்றும் தொலைதூரங்களுக்கு செல்லும் வாகனங்கள் பாலத்தின் மேற்பகுதி வழியாக சென்று வருகிறது. இதனை அடுத்து பள்ளி, கல்லூரி நேரங்கள் மற்றும் காலை மாலை நேரங்களில் நெரிசல் வெகுவாக குறைந்தது.

    இதற்காக பாலத்தின் மேற்பகுதியில் பயணி கள் அமர்ந்து செல்ல நாகர்கோவில் - திருவனந்த புரம் வழியாக செல்லும் பயணிகளுக்காக இடது பக்கம் இரும்பிலான நிழல் குடை அமைக்கப்பட்டி ருந்தது, அதன் மேற்பகுதியில் பிளாஸ்டிக் சீட்டுகள் அமைக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் திடீரென அந்த நிழற் குடை சரிந்து தொங்கிய நிலையில் காணப்பட்டது. இன்று காலையில் பார்க்கும் பொழுது அந்த நிழல் கூடை வெளிப்பக்கமாக சரிந்துள்ளது.

    இந்த நிழற் குடை பெயர்ந்து கீழே விழுந்தால் உயிர் சேதம் ஏற்படும் ஆபத்து உள்ளது. மேலும் நிழல் குடை எவ்வாறு சரிந்தது என தெரியவில்லை, காற்றின் வேகத்தால் சரிந்ததா அல்லது, ஏதேனும் விஷமிகள் பெயர்துள்ள னரா என தெரியவில்லை.

    சம்பந்தப்பட்ட அதி காரிகள் விரைந்து சென்று நிழற்குடையை சரி செய்ய வேண்டும் எனவும், சேதமடைந்த நிழற்குடையை அப்புறப்படுத்த வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவம் மார்த்தாண்டம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • வாகன ஓட்டிகள் அவதி
    • இந்த சாலையில் தினமும் அதிகளவு கணரக வாகனங்களில் கனிம வளங்கள் வெட்டி கேரளாவுக்கு இரவு நேரத்தில் கொண்டு செல்கிறார்கள்.

    கன்னியாகுமரி:

    மார்த்தாண்டம் - பேச்சிப்பாறை நெடுஞ்சா லையில் ஏராளமான வாக னங்கள் செல்கிறது. கடந்த ஆண்டு புதியதாக தார் போடப்பட்டது.

    இதில் திருவட்டார் அரசு உயர்நி லைப்பள்ளி எதிரில் திடீரென வெடிப்பு ஏற்பட்டது. இது குறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர் அவர்கள் வந்து பார்த்து ஆய்வு செய்து அவசரகதியில் தற்காலிக மாக அந்த பகுதியை தார் போட்டு சரி செய்தனர்.

    இந்நிலையில் நேற்று முன் தினம் காலையில் மீண்டும் திருவட்டார் அரசு உயர்நிலைப்பள்ளி எதிர் புறமிருந்து சுமார் 200 அடி தூரத்துக்கு பல இடங்களில் ரோட்டில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. ரோட்டை யொட்டியுள்ள பகுதியில் இருந்து தார்க்கலவை முழுமையாக பெயர்ந்து சிதறியது.

    "காங்கரை தேரி" எனப்ப டும் இந்த பகுதி மேடான பகுதியாகும். சாதாரணமாக வாகனங்கள் இந்த ரோட்டில் வரும் போது மேடான பகுதியாக இருப்பதால் மிகவும் சிரமத்துடன் ஊர்ந்து ஊர்ந்து செல்லும். அதிலும் அதிக பாரத்துடன் வரும் கனரக வாகனங்கள் சிலவேளைகளில் நகர முடி யாமல் திணறும். அவ்வாறு திணறும் லாரி உள்ளிட்ட கனரக வாகனத்தில் இருந்து சிறிய வாகனங்களில் பொருட்கள் மாற்றப்பட்ட

    பின்னரே கனரக வாக னங்கள் நகர்ந்து செல்லும். இவ்வாறு வாகனங்கள் அதிக அளவில் வரும்போது ரோட்டில் அழுத்தம் ஏற்படுகிறது. மேலும் தினசரி ஆயிரக்கணக்கான லோடு கனிம வளங்கள் இந்த ரோட்டின் வழியாக சென்றுவருவதால் ரோடு பாதிப்புக்குள்ளாகிறது

    இந்நிலையில் நேற்று முன் தினம் இரவோடு இரவாக ஒப்பந்தக்காரர் தரப்பில் இருந்து வெடித்திருந்த சாலையின் ஒரு பகுதியில் உள்ள தார்க்கலவையை பொக்லைன் இயந்திரம் மூலமாக அகற்றி விட்டு புதிய தார்க்கலவை போட்டு ரோடு ரோலர் இயந்திரத்தை ஓட்டிச்சென்றுள்ளனர். இதனால் தற்போது தார்க்கலவை போடப்பட்ட இடத்திலிருந்து, சாலையில் தார்க்கலவை செட் ஆகாமல் மீண்டும் வெடிப்பு ஏற்படத்துவங்கி விரிசல் ஏற்பட்டது.

    இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் தடுமாறுகின்றன. இரு சக்கர வாகன ஒட்டிகள் பெரும் அவதிக்குளாகின்றனர்.

    எனவே நெடுஞ்சா லைதுறை அதிகாரிகள் மீண்டும் ஆய்வு மே ற்கொண்டு போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையில் தரமான முறையில் சாலையை செப்பனிட முன்வரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்த பகுதி வழியாக தான் தினமும் அதிகளவு கணரக வாகனங்களில் கனிம வளங்கள் வெட்டி கேர ளாவுக்கு இரவு நேரத்தில் கொண்டு செல்கிறார்கள்.

    இப்பகுதி ரோட்டின் இருபுறமும் நடைபாதை ரோட்டில் இருந்து 1 முதல் 2 அடி பள்ளத்தில் உள்ளதால் பொதுமக்கள் ரோட்டின் இருபுறமும் நடைபாதையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே இப்பகுதியில் ரோட்டை சரி செய்வதோடு ரோட்டின் இருபுறமும் வர்ண கற்கள் பதித்து நடைபாதை வசதி செய்யவும் நெடுஞ்சாலைத்துறை முன்வரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

    • குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை
    • மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    கோயம்புத்தூர் பி.ஆர். எஸ் வடக்கு தெருவை சேர்ந்தவர் வித்யாஸ்ரீ (வயது 24). இவர் திருவட்டார் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் மார்த தாண்டம் வடக்கு தெருவில் உள்ள தனியார் வாடகை குடியிருப்பு விடுதியில் கடந்த ஒரு வருடமாக தங்கி வருகிறார். அவரது அறையில் ஏற்கனவே அவருடன் தங்கி இருந்த பெண்மணி அந்த அறையை விட்டு சென்று விட்டதால், கடந்த 5 தினங்களுக்கு முன்பு வேறொரு பெண் அவரது அறையில் தங்கியுள்ளார்.

    நேற்று மாலை அவர் திடீரென வித்யாஸ்ரீயை தாக்கி கடித்து காயப்படுத்தி யதாக கூறப்படுகிறது. இதனால் வித்யா ஸ்ரீ கத்தி கூச்சலிட்டுள்ளார்.இதில் இருவரும் கட்டிலில் இருந்து கீழே விழுந்துள்ளனர்.இதில் இருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதை அடுத்து இருவரையும் குழித்துறை அரசு மருத்துவம னையில் சிகிச் சைக்காக சேர்த்துள்ள னர்.

    இது குறித்து வித்யா ஸ்ரீ கூறும்போது :- அந்த பெண் வேலை எதுவும் இன்றி சும்மா அறையில் இருப்பதாகவும், அவர் தன்னை கொலை செய்யும் நோக்கத்துடன் காயப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். வித்யா ஸ்ரீ கொடுத்த புகாரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்கு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மார்க்கெட்டின் பின்புறம் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டல்
    • பெற்றோருக்கு போன் செய்து மிரட்டி, ‘ஜிபே’ மூலமும் பணம் பறிப்பு

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் மஞ்சாலு மூடு நாரகத்தின் குழி பகுதி யைச் சேர்ந்த ஜிஸ்னு (வயது 26), சுர்ஜித் (22) ஆகியோர் பெங்களூருவில் உள்ள ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினியர்களாக பணி புரிந்து வருகின்றனர்.

    இவர்கள் புத்தாண்டை முன்னிட்டு மார்த்தாண்டம் படர்ந்த பாறை பகுதியில் உள்ள தங்களது நண்பர் சோனு ஜோஸ்பின் வீட்டிற்கு வந்தனர். கடந்த 4-ம் தேதி ஜிஸ்னு, சுர்ஜித் இருவரும் இரவு 11.30 -மணி அளவில் மார்த்தாண்டம் சென்று விட்டு மார்க்கெட்டின் பின்புறம் உள்ள வழி வழியாக நடந்து சென்ற னர்.

    அப்போது 5 பேர் கும்பல் அவர்களை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி உள்ளது. மேலும் அந்தக் கும்பல் 2 பேரையும் தாக்கி மலைப்பகுதிக்கு கொண்டு சென்றுள்ளது. அங்கு வைத்து பணத்தை பறித்துக் கொண்டதோடு, அவர்களது பெற்றோருக்கு போன் செய்து மிரட்டி, 'ஜிபே' மூலமும் பணம் பறித்து உள்ளனர்.

    பின்னர் 2 வாலிபர்களின் செல்போன்களை பறித்துக் கொண்டு அந்தக் கும்பல் தப்பிச் சென்று விட்டது. இது குறித்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் விசாரணை நடத்தி, மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த ஜெனால்ட் (27) என்பவரை கைது செய்தனர்.

    மேலும் தலை மறைவாக இருந்த 4 பேரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று இரவு மார்த்தாண்டத்தை அடுத்த ஆளுவிளை குமாரதாஸ் என்பவரின் மகன் அஜின் மோன்ஸே (23), மார்த்தாண்டம் கொடுங் குளத்தை சேர்ந்த பீட்டர் ரகு ராஜ் என்பவரது மகன் சிபின் இம்மானுவேல் (22), பாகோடு ஒற்றை விளைைய சேர்ந்த தேவசகாயம் மகன் அஸ்வின் (19 ) ஆகியோரை கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

    • தீராத வயிற்று வலி இருந்து வந்ததால், மன வருத்தத்தில் எலி மருந்தை தின்றதாக கூறியுள்ளார்.
    • மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட வடக்கு தெரு மேல குளத்தைச் சேர்ந்தவர் பாபு.

    இவரது 2-வது மகள் அபிஷா (வயது 19). இவர் இரவு வீட்டின் அறையில் தூங்கினார். இன்று காலை யில் அவர் வாந்தி எடுக்கும் சத்தம் கேட்டு குடும்பத்தினர் சென்று பார்த்தனர்.

    அப்போது அவர் தீராத வயிற்று வலி இருந்து வந்ததால், மன வருத்தத்தில் எலி மருந்தை தின்றதாக கூறியுள்ளார். இதையடுத்து அவரை சிகிச்சைக்காக குழித்துறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரி பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அபிஷா பரிதாப மாக இறந்தார்.

    இதுகுறித்து மார்த்தாண் டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • துணை தலைவர் உட்பட 2 பேர் மீது வழக்கு
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து தாக்குதலில் ஈடுபட்ட 2 பேரை தேடி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்டம் காஞ்சிரகோடு விரிகோடு நெல்லிக்கன்விளையை சேர்ந்தவர் பமலா (வயது 51).இவர் உண்ணாமலை கடை பேரூராட்சி தலைவியாக உள்ளார்.

    சம்பவத்தன்று பேரூராட்சியில் மன்ற கூட்டம் நடந்து முடிந்த போது மீண்டும் 14-வது வார்டு உறுப்பினரும், பேரூராட்சி துணை தலைவருமான செல்வின் தலைவரிடம் பேச சென்றுள்ளார். அதற்கு தலைவி கூட்டம் முடிந்து விட்டது என கூறியுள்ளார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த துணை தலைவர் செல்வின் மற்றும் அவரது தம்பி பிரவீன் ஆகியோர் பேரூராட்சி தலைவி பமலாவை தாக்கியுள்ளனர். மேலும் அவர்கள் அவதூறாக பேசி மிரட்டல் விடுத்து சென்றுள்ளனர்.

    இது குறித்து மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாக்குதலில் ஈடுபட்ட 2 பேரை தேடி வருகின்றனர்.

    • குற்றவாளியை பிடிக்க தனிப்படை ராஜஸ்தானுக்கு விரைந்தது
    • தப்பி ஓடிய கணேஷ் மற்றும் அவரது சக கூட்டாளிகளை பிடிக்க ராஜஸ்தான் போலீசின் உதவியை நாட குமரி மாவட்ட போலீசார் முயற்சி

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் மற்றும் கேரளாவில் போதைப் பொருள்களின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் விதத்தில் போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    நேற்று படந்தாலு மூடு சோதனை சாவடி யில் தனிப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வர ராஜ் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்ட போது சொகுசு கார் வேகமாக வந்தது.

    அந்த காரை போலீசார் நிறுத்தும்படி கூறியும் நிற்காமல் சென்றதால் அதனை விரட்டிச் சென்று குழித்துறை சப்பாத்து பாலம் பகுதியில் போலீசார் மடக்கினர்.

    காரில் இருந்த ஓட்டுநர் மற்றும் 2 பேரை பிடித்து விசாரித்த போது அவர்களி டமிருந்து எம். டி .எம். ஏ. என்ற 300 கிராம் போதை பொருள் கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து போலீஸார் நடத்திய விசாரணையில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கணேஷ் என்பவர் தான் இதனை கடத்தி வந்ததாகவும் அவர் காரில் இருந்து தப்பி சென்று விட்டதும் தெரியவந்தது. மேலும் காரில் வந்த 2 பேர்

    மார்த்தாண்டத்தில் ஜவுளிக்கடை நடத்தி வரும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த புத்தாரம் மகன் பிரகாஷ் (வயது30) மற்றும் கிருஷ்ணாலால் மகன் ராஜேஷ் (27) என தெரியவந்தது.

    இவர்கள் மூலம் ராஜஸ்தா னிலிருந்து கணேஷ் போதைப் பொருளை கடத்தி வந்து குமரி மாவட்டம், கேரளா, பெங்களுர் உட்பட பல இடங்களில் புழக்கத்தில் விட்டுள்ளான்.

    இந்தநிலையில் தப்பி ஓடிய கணேஷ் மற்றும் அவரது சக கூட்டாளிகளை பிடிக்க ராஜஸ்தான் போலீசின் உதவியை நாட குமரி மாவட்ட போலீசார் முயற்சி மேற்கொண்டுள்ளனர். மேலும் அவர்களை பிடிக்க குமரி மாவட்ட தனிப்படை ராஜஸ்தான் சென்றுள்ளது.

    • 2 பேர் கைது - ஒருவர் தப்பி ஓட்டம்
    • போலீசார் தீவிர வாகன சோதனை

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் கேரளாவில் போதைப் பொருள்களின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது இதனை தடுக்கும் விதத்தில் போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று மதியம் படந்தாலு மூடு சோதனை சாவடியில் தனிப்பிரிவு சப்- இன்ஸ்பெக்டர் மகேஸ்வரராஜ் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது வேகமாக வந்த சொகுசு காரை தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் கார் நிற்காமல் வேகமாக சென்றது. அந்த காரை போலீசார் இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து விரட்டிய போது, கார் குழித்துறை சப்பாத்து பாலம் அருகாமையில் சென்றபோது தொடர்ந்து செல்ல முடியாமல் நின்றது. அப்போது காரில் இருந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கடத்தல் கும்பல் தலைவன் கணேஷ் தப்பி ஒடிவிட்டார்.

    காரில் இருந்த டிரைவர் மற்றும் 2 பேர் சிக்கினர்.அவர்களிடமிருந்து 300 கிராம் போதை பொருளும் சிக்கியது. பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது அதன் விவரம் வருமாறு:-

    ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கணேஷ் குட்கா கடத்தல் தொழில் செய்து வருகிறார்.இவர் மார்த்தாண்டம் பழைய தியேட்டர் ஜங்ஷன் அருகில் துணிக்கடை நடத்தி வருவருகிறார். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த புத்தாரம் மகன் பிரகாஷ் (வயது 30) மூலம் ராஜஸ்தானிலிருந்து போதைப் பொருள் கடத்தி வந்து குமரி மாவட்டம், கேரளா, பெங்களுர் உட்பட பல இடங்களில் புழக்கத்தில் விட்டுள்ளனர்.

    இந்நிலையில் ராஜஸ்தானை சேர்ந்த கிருஷ்ணாலால் மகன் ராஜேஷ் (27) என்பவர் மூலம் கல்லூரி மாணவர்களுக்கும் போதைப்பொருள் சப்ளை செய்து வந்தது தெரிய வந்தது. தொடர்ந்து பிரகாஷ், ராஜேஷ் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்

    மேலும் ஓட்டுனருக்கு இந்த கடத்தல் சம்பவத்தில் தொடர்பு உள்ளதா எனவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முக்கிய குற்றவாளியான கணேசை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றார்.போலீசார் நடத்திய விசாரணையில் மார்த்தாண்டத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் வடநாட்டு கும்பல்களுக்கும், குமரி மாவட்டத்தைச் சேர்ந்த பல முக்கிய புள்ளிகளுக்கும் தொடர்புள்ளதாக கூறப்படுகிறது. கணேஷ் கைதாகும் பட்சத்தில் மேலும் பலர் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த போதைப்பொருள் கடத்தல் சம்பவம் குமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

    • இறந்த 80 வயது மதிக்கத்தக்கவர் யார்? எந்த இடத்தைச் சேர்ந்தவர்? என்று விவரம் தெரியவில்லை
    • மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    மார்த்தாண்டம் பஸ் ஸ்டாண்டில் நேற்று மாலை 80 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்த நிலையில் காணப்பட்டார் இது குறித்து சமூக சேவகர் ராஜகோபால் மார்த்தாண்டம் போலீசுக்கு தகவல் கொடுத்தார்.

    உடன் அவரது வாகனத்தில் குழித்துறை அரசு மருத்துவமனை கொண்டு சென்றார் ஆனால் இவர் யார்? எந்த இடத்தைச் சேர்ந்தவர்? என்று விவரம் தெரிய வில்லை. மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • ஆட்டோ டிரைவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு
    • பெற்றோர் மார்த்தாண்டம் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார்

    நாகர்கோவில்:

    கோழிப்போர் விளையைச் சேர்ந்த 8 வயது சிறுமி ஒருவர் அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தினமும் வீட்டிலிருந்து ஆட்டோவில் பள்ளிக்கு செல்வது வழக்கம். இவரை ஆட்டோ டிரைவர் சுஜின் என்பவர் அழைத்து செல்வார்.

    சம்பவத்தன்று பள்ளிக்குச் சென்ற குழந்தை அழுது கொண்டே வீட்டிற்கு வந்தது. இது குறித்து தாயார் சிறுமியிடம் கேட்டார். அப்போது ஆட்டோ டிரைவர் சுஜின் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த விபரத்தை தெரிவித்தார். இது குறித்து வெளியே கூறினால் கொன்று விடுவதாகவும் மிரட்டியதாக சிறுமி கூறினார்.

    இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மார்த்தாண்டம் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் சுஜின் மீது போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். தலைமறைவாகியுள்ள சுஜினை பிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர். 8 வயது சிறுமிக்கு ஆட்டோ டிரைவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×