என் மலர்
நீங்கள் தேடியது "தி.மு.க."
- தமிழ் மொழி வளர்ச்சிக்கு எதுவும் செய்யாமல் மொழியை வைத்து அரசியல் செய்து வருவதாக பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்.
- பா.ஜ.க.வினர் தி.மு.க. அரசை கண்டிக்கும் வகையில் கோஷங்கள் எழுப்பி எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
திருப்பூர் :
தி.மு.க. அரசு பொறுப்பேற்றது முதல் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்ற கவனம் செலுத்தாமல் தமிழ் மொழியை பாதுகாப்பதாக கூறி தமிழ் மொழி வளர்ச்சிக்கு எதுவும் செய்யாமல் மொழியை வைத்து அரசியல் செய்து வருவதாக குற்றம் சாட்டி திருப்பூர் குமரன் நினைவகம் முன்பாக திருப்பூர் வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் செந்தில்வேல் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகர் சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் தி.மு.க. அரசை கண்டிக்கும் வகையில் கோஷங்கள் எழுப்பி எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
- பல்லடம் மேற்கு ஒன்றிய தி.மு.க.வினர் மீது வழக்குகள் போடப்பட்டது.
- வழக்கில் இருந்து அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளோம் என்றார்.
பல்லடம் :
அ.தி.மு.க. ஆட்சியில் போடப்பட்ட வழக்கிலிருந்து தி.மு.க.வினர் விடுவிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து பல்லடம் மேற்கு ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:-
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் போடப்பட்ட வழக்கிலிருந்து பல்லடம் மேற்கு ஒன்றிய தி.மு.க.செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் நகரமன்ற தலைவர் ராமமூர்த்தி, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் சண்முகசுந்தரம், முன்னாள் நகர செயலாளர் லோகநாதன், நகர பொருளாளர் குங்குமம் ரத்தினசாமி,முன்னாள் மாவட்ட பிரதிநிதி சிவக்குமார், மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் மோகன்தாஸ் காந்தி, நகர பிரதிநிதி சம்பத் உள்ளிட்டோர் மீது வழக்குகள் ேபாடப்பட்டது. அந்த வழக்கில் இருந்து அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளோம் என்றார்.
- அம்பை, சேரன்மகாதேவி உள்ளிட்ட தாலுகாக்களில் 44 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன.
- பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும் என அதில் ஆவுடையப்பன் கூறியுள்ளார்.
நெல்லை:
நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது:-
நெல்லை மாவட்டத்தில் அம்பை, சேரன்மகாதேவி உள்ளிட்ட தாலுகாக்களில் 44 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, பிசான சாகுபடிக்காக பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும்.
இப்பகுதியில் உள்ள வடக்கு, தெற்கு கோடை மேலழகியான் கால்வாய், நதியுண்ணி கால்வாய், கன்னடியன் கால்வாய், பாளையங்கால்வாய், நெல்லை கால்வாய் பாசன விவசாயிகள் தங்கள் விவசாய பணிகளை செய்ய அத்தியாவசியமாகவும், அவசரமாகவும் உள்ளதால், பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
- ஒன்றிய அரசின் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் மாநிலம் முழுவதும் நடைபெறவுள்ளது.
- ஸ்ரீ சக்தி திரையரங்கம் முன்பு வருகிற 4-ந் தேதி அன்று மாலை 6மணியளவில் நடைபெற உள்ளது.
திருப்பூர் :
திருப்பூர் வடக்கு மாவட்டதி.மு.க. செயலாளரும் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான செல்வராஜ் எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஒன்றிய அரசின் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் மாநிலம் முழுவதும் நடைபெறவுள்ளது. அதன்படி திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் திருப்பூர் வாலிபாளையம் யூனியன் மில் சாலை ஸ்ரீ சக்தி திரையரங்கம் முன்பு வருகிற 4-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று மாலை 6மணியளவில் திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான செல்வராஜ் தலைமையில் நடைபெற உள்ளது.
கூட்டத்தில் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் அந்தியூர் செல்வராஜ் எம்.பி., மற்றும் தலைமை கழக பேச்சாளர் தாம்பரம் ஜின்னா சிறப்புரையாற்றுகின்றனர். இதன் ஒரு பகுதியாக நாளை 3-ந்தேதி இந்தி திணிப்பை ஏன் எதிர்க்க வேண்டும் என்கின்ற தலைப்பில் தலைமை கழகத்தால் அனுப்பப்பட்ட துண்டு பிரசுரங்கள் வீடு வீடாக வழங்கப்படவுள்ளது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் வீடு வீடாக பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கவுள்ளார். இதில் மாவட்ட நிர்வாகிகள், மாநகர நிர்வாகிகள், நகர, பகுதி, ஒன்றிய, பேரூர், வட்ட கழக நிர்வாகிகள், இந்நாள் முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், தொ.மு.ச., நிர்வாகிகள், சார்பு அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் அனைவரும் கலந்துகொண்டு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டுமெனவும், நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் பெரும் திரளாக கலந்துகொள்ள வேண்டுமெனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- ராமநாதபுரத்தில் தி.மு.க.வினர் துண்டு பிரசுரம் விநியோகம் செய்தனர்.
- மாவட்ட செயலாளா் காதா்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரத்தில் அரண்மனை அருகே தி.மு.க. சாா்பில் இந்தி திணிப்பு முயற்சியை கண்டித்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு நகா் செயலாளா்கள் காா்மேகம், பிரவீன் தங்கம் ஆகியோா் தலைமை தாங்கினர். இதில் மாவட்ட செயலாளா் காதா்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கினாா்.
இதில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் இன்பா ஏ.என்.ரகு, தலைமை செயற்குழு உறுப்பினா் அகமது தம்பி மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராம லிங்கம் எம்.எல்.ஏ. அறிவு றுத்தலின்படி பாரதி நகர் பஸ் நிறுத்தத்தில் மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் கே.ஜே. பிரவின் தலைமை யில் கிளை செயலா ளர்கள் உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகள் பொது மக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கினர்.
- இந்தி திணிப்பை எதிர்த்து தி.மு.க.வினர் துண்டுபிரசுரம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
- தமிழகத்தில் இந்தி திணிக்கப்படுவதை எதிர்த்து கோஷம் எழுப்பினர்.

பரமக்குடி நகர் பகுதியில் நகர்மன்ற தலைவர் சேது.கருணாநிதி தலைமையில் இந்தி திணிப்புக்கு எதிராக துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது.
பரமக்குடி
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகர் பகுதியில் தி.மு.க. நகர செயலாளர்கள் சேது.கருணாநிதி, ஜீவரத்தினம் ஆகியோர் தலைமையில் 36 வார்டுகளில் இந்தி திணிப்புக்கு எதிராக தி.மு.க. அரசு கொண்டு வந்த தீர்மானங்கள் மற்றும் இந்தி திணிப்பால் தமிழகத்துக்கும் தமிழ் மொழிக்கும் ஏற்படும் தீமைகள் குறித்த துண்டு பிரசுரங்களை பொது மக்களுக்கு விநியோகம் செய்தனர்.
மேலும் சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் தலைமையில் தெருக்களில் தி.மு.க.வினர் கொடிகளை ஏந்தி தமிழகத்தில் இந்தி திணிக்கப்படுவதை எதிர்த்து கோஷம் எழுப்பினர். இதில் மாவட்ட துணைச் செயலாளர் கருப்பையா, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் செந்தில் செல்வானந்த் மற்றும் கவுன்சிலர்கள், கட்சியினர் கலந்து கொண்டனர்.
போகலூர் மேற்கு ஒன்றியம் பொட்டிதட்டி கிராம சாலையில் போக லூர் மேற்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன் தலைமையில் அவைத் தலைவர் அப்பாஸ் கனி பொதுக்குழு உறுப்பினர் பூமிநாதன், ஒன்றிய துணைச் செயலாளர் முதலூர் ரவி, மஞ்சூர் கனகராஜ், கலைச்செல்வி முன்னிலையில் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட உறுப்பினர் தனிக்கொடி, ராமகிருஷ்ணன், கார்த்திக் பாண்டியன், பொட்டிதட்டி ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் பங்கேற்று நோட்டீசுகளை பொதுமக்களுக்கு விநியோகம் செய்தார்.
- இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான பொதுக்கூட்டம்
- தமிழ் மொழியை காக்கவே தொடங்கப்பட்ட இயக்கம்தான் திராவிட முன்னேற்ற கழகம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சினார்.
அரியலூர்:
அரியலூர் அண்ணா சிலை அருகில் மாவட்ட தி.மு.க. சார்பில் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் மாணிக்கம் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி, போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கலந்து கொண்டனர்,
இந்நிகழ்ச்சியில், மாவட்ட துணை செயலாளர் சந்திரசேகர் வரவேற்று பேசினார். மாநில சட்ட திருத்த குழு உறுப்பினர் சுபா சந்திரசேகர் கொள்கை பரப்பு துணை செயலாளர் பெருநெற்கிள்ளி, ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. கண்ணன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தெய்வஇளையராசன், துணை அமைப்பாளர் லூயி கதிரவன், சசிகுமார், மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும் மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி பேசியதாவது:
தமிழ் மொழியின் படைப்புகள் பல்வேறு நாடுகளில் மொழி பெயர்த்து வெளியிட்டு வரும் அறிஞர்கள் பலரும் இந்த போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர். மறைந்த மொழிப்போர் தியாகி கீழப்பழுவூர் சின்னச்சாமி தமிழுக்காக தன்னுயிரை விட்டவர். அவர் வாழ்ந்த மண்ணில் பேசுவதை பெருமையாக கருதுகிறேன். வங்கி, தபால் நிலையங்களில் பலரும் இந்திகாரர்களே பணியில் உள்ளனர். அங்கு தமிழர் செல்லும் போது எதுவும் புரியாமல் தவிக்கின்றனர். திராவிட முன்னேற்ற கழகம் என்பது தமிழ் மொழியை காக்கவே தொடங்கப்பட்ட இயக்கமாகும். இந்தி மொழிக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. திணிக்க வேண்டாம் என்பதே எங்கள் கொள்கையாகும். பிரதமரை சந்தித்த போது தமிழக முதல்வர் முதல் கோரிக்கையாக வைத்தது நீட் வேண்டாம் என்பது. இருமொழி கொள்கையை வர வேற்போம். இந்தி திணிப்பு என்று வந்தாலும் தொடர்ந்து தி.மு.க. எதிர்த்து நிற்கும் என பேசினார், நிகழ்ச்சி முடிவில் மாவட்ட துணை செயலாளர் கணேசன் நன்றி கூறினார்.
- பயிற்சி பாசறை கூட்டத்திற்கு இளைஞர் அணி துணை அமைப்பாளர் அம்பாசங்கர் வரவேற்றார்.
- அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தை நிறைவேற்றியது தி.மு.க. ஆட்சி என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசினார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி சார்பில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி திராவிட மாடல் பயிற்சி பாசறை புதுக்கோட்டையில் நடைபெற்றது.
மாநில சுயாட்சி
தெற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம் தலைமை தாங்கினார். சண்முகையா எம்.எல்.ஏ., மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரிசங்கர், முன்னாள் எம்.எல்.ஏ. டேவிட் செல்வின், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் பாலமுருகன், அனஸ், சுதாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இளைஞர் அணி துணை அமைப்பாளர் அம்பாசங்கர் வரவேற்றார்.தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசியதாவது:-
மனிதனை மனிதர்களாக மதிக்க வேண்டும் என்று கொண்டு வந்தது தான் திராவிட இயக்க வரலாறு. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தை நிறைவேற்றியது தி.மு.க. ஆட்சி.
இந்தி திணிப்பை அமல் படுத்துவதற்கு அமித்ஷா, ஜனாதிபதியிடம் கடிதம் கொடுத்துள்ளார். மற்ற மொழிகளை அழிக்க நினைக்கின்றனர். அது நடக்காது.
மாநில சுயாட்சி திராவிட வரலாறு என்ன என்பதை இளைஞர்கள் முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும்.
அதை புரிந்து கொண்டு 234 தொகுதிகளிலும் இது போன்ற கருத்துகளை மனதில் ஏற்றிக் கொண்டு நமக்கு எதிராக கருத்துகள் சொல்லுபவர்கள் மத்தியில் கிராமங்கள் தோறும் இளைஞர்கள் திராவிட இயக்க வரலாறை சேர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கலந்து கொண்டவர்கள்
கூட்டத்தில் மாவட்ட அவைத் தலைவர் அருணாச்சலம், துணைச்செயலாளர்கள் ஆறுமுகபெருமாள், ஜெயக்குமார் ரூபன், பொருளாளர் ராமநாதன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் செந்தூர்மணி, மாடசாமி, ஆவின் சேர்மன் சுரேஷ்குமார், மாவட்ட கவுன்சிலர்கள் செல்வகுமார், பிரம்மசக்தி, பொதுக்குழு உறுப்பினர் ஆறுமுகப்பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் சரவணக்குமார், ஜெயக்கொடி, சுப்பிரமணியன், இளையராஜா, சுரேஷ்காந்தி, ராமசாமி, இசக்கிபாண்டியன், பகுதி செயலாளர்கள் ஆஸ்கர், சிவக்குமார், ஒன்றிய குழு தலைவர்கள் வசுமதி அம்பா சங்கர், ரமேஷ், கோமதி, அணி அமைப்பாளர்கள் அருண்குமார், பேரின்பராஜ் லாசரஸ், ஆனந்த், வீரபாகு, துணை அமைப்பாளர்கள் ஆறுமுகம், ரகுராமன், பூங்குமார், மாவட்ட பிரதிநிதிகள் வெயில்ராஜ், கோபால், ஒன்றிய துணைச்செயலாளர் ஹரிபால கிருஷ்ணன், ஒன்றிய அமைப்பாளர்கள் பால்ராஜ், ஸ்டாலின், பரியேறும் பெருமாள், அனிட்டன், ஜெகன், கொம்பையா, மற்றும் புதுக்கோட்டை யூனியன் கவுன்சிலர் முத்துகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- தி.மு.க. திருப்பூர் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
- வாக்குச்சாவடி முகவர்கள் நடைபெற உள்ள சிறப்பு வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாமில் கவனமுடன் பணியாற்ற வேண்டும்.
திருப்பூர் :
தி.மு.க. திருப்பூர் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் திருப்பூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு வடக்கு மாவட்ட செயலாளர் க.செல்வராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார். தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராஜன், வடக்கு மாநகர செயலாளர் மேயர் தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.வின் பிறந்தநாள் விழா வருகிற 27-ந் தேதி வருகிறது. அந்த நாளில் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும், கொடியேற்றியும், இனிப்புகள் வழங்கியும், மரக்கன்று நட்டும் சிறப்பான முறையில் கொண்டாட வேண்டும். வாக்குச்சாவடி முகவர்கள் வருகிற 26, 27-ந் தேதிகளில் நடைபெற உள்ள சிறப்பு வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாமில் கவனமுடன் பணியாற்ற வேண்டும். வட்ட, கிளை செயலாளர்கள் தங்களுக்கு உரிய வாக்குச்சாவடிகளுக்கு 100 வாக்காளர்களுக்கு ஒரு முகவரை நியமிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகம் முழுவதும் இல்லந்தோறும் இளைஞரணி உறுப்பினர் சேர்க்கையை வேகப்படுத்த மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர், வட்ட, கிளை இளைஞரணியினர் பங்காற்ற செயலாளர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் கவுன்சிலர்கள் ராதாகிருஷ்ணன், பி.ஆர்.செந்தில்குமார், செந்தூர் முத்து, பகுதி செயலாளர்கள் ராமதாஸ், ஜோதி, இளைஞரணி துணை அமைப்பாளர் எம்.எஸ்.ஆர்.ராஜ், முன்னாள் கவுன்சிலர்கள் சிவபாலன், கோட்டா பாலு மற்றும் மாநகர, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், பகுதி செயலாளர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- பூத் கமிட்டி முகவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கப்பட்டது.
- தி.மு.க. ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பல்லடம் :
பல்லடத்தில் நாடாளுமன்றத் தேர்தலைமுன்னிட்டு, தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்குபல்லடம் மேற்கு ஒன்றிய அவை தலைவர் சு.சாமிநாதன் தலைமை தாங்கினார்.பல்லடம் மேற்கு ஒன்றிய செயலாளர் சு.கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் திருப்பூர் வடக்கு மாவட்ட அவைத்தலைவர் நடராஜன், மாவட்ட பொருளாளர் சாமிநாதன், தலைமை செயற்குழு உறுப்பினர் சரவணன் நம்பி ஆகியோர் கலந்துகொண்டு பூத் கமிட்டி முகவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி பேசினர்.
இதில் ஒன்றிய குழு தலைவர் தேன்மொழி, ஒன்றிய துணை செயலாளர்கள் ஆட்டோ குமார், செந்தில்குமார், கலைவாணி சசிகுமார், ஒன்றிய பொருளாளர் அம்மாபாளையம் குமார், மாவட்ட பிரதிநிதிகள் முத்துகுமாரசாமி, துரைமுருகன், அன்பரசன், தொண்டரணி அமைப்பாளர் பானுமதி,மற்றும் தி.மு.க. ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதே போல, பல்லடம் நகர தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நகர செயலாளர் ராஜேந்திரகுமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் திருப்பூர் வடக்கு மாவட்ட அவைத்தலைவர் நடராஜன், மாவட்ட பொருளாளர் சாமிநாதன் ,பொதுக்குழு உறுப்பினர் ரபிதீன் ஆகியோர் கலந்துகொண்டு பூத் கமிட்டி முகவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி பேசினார்கள். இந்த கூட்டத்தில்,மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் செ.ராஜசேகரன்,மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஜெகதீஷ்,நகர தி.மு.க. நிர்வாகிகள் நடராஜன்,வசந்தாமணி,வேலுச்சாமி,குட்டி பழனிச்சாமி,கதிர்வேல்,கவுஸ் பாஷா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- தி.மு.க. இளைஞரணி உறுப்பினர் சேர்த்தல் விழாவை மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன் தொடங்கி வைத்தார்.
- கட்சிக்கொடியை ஏற்றி வைத்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
காங்கயம் :
காங்கயத்தில் திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் நடைபெற்ற இல்லம் தேடி தி.மு.க. இளைஞரணி உறுப்பினர் சேர்த்தல் விழாவை மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன் தொடங்கி வைத்தார். காங்கயம், சிவன்மலை ஊராட்சி பகுதியில், திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில், இல்லம் தேடி தி.மு.க. இளைஞரணி உறுப்பினர் சேர்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கே.கே.ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். காங்கயம் தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் சிவானந்தன் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் திருப்பூர் தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளரும், திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டல தலைவருமான இல.பத்மநாபன் கலந்துகொண்டு கட்சிக்கொடியை ஏற்றி வைத்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து சிவன்மலை பகுதியில் புதிய தி.மு.க. இளைஞரணி உறுப்பினர்களுக்கு இல்லம் தேடி சென்று இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை படிவத்தை வழங்கினார். மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள், காங்கயம் தெற்கு ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகள், மாவட்ட, ஒன்றிய இளைஞரணி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
- பயிற்சி பாசறைக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம் தலைமை தாங்கினார்.
- திருச்சி சிவா எம்.பி. கலந்து கொண்டு திராவிட இயக்க வரலாறு குறித்த விளக்கமாக பேசினார்.
திருச்செந்தூர்:
தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுயில் உள்ள இளைஞர்களுக்கு திருச்செந்தூர் ஐ.எம்.ஏ. மஹாலில் திராவிட மாடல் பயிற்சி பாசறை நடந்தது.
இதற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம் தலைமை தாங்கினார். ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, தி.மு.க. மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி,
திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவஆனந்தி, துணை தலைவர் செங்குழி ரமேஷ், தலைமை செயற்குழு உறுப்பினர் டேவிட் செல்வின், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் அம்பாசங்கர், பாலமுருகன், அனஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார்.
பின்னர் பயிற்சி ஆசிரியர்களாக தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா எம்.பி. கலந்து கொண்டு திராவிட இயக்க வரலாறு குறித்த விளக்கமாக பேசினார்.
முன்னதாக மாநில சுயாட்சி குறித்து எழுத்தாளர் மதிமாறன் விளக்கி பேசினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட அவைத்தலைவர் அருணாச்சலம், யூனியன் தலைவர்கள் ஜனகர் (ஆழ்வார்்திருநகரி), பாலசிங் (உடன்குடி), காயல்பட்டினம் நகராட்சி தலைவர் முத்து முகமது, மேலாத்தூர் பஞ்சாயத்து தலைவர் சதீஸ்குமார், ஒன்றிய செயலாளர்கள் இளங்கோ, சுப்பிரமணியன், கானம் நகர செயலாளர் ராமஜெயம், பொதுக்குழு உறுப்பினர்கள் செந்தில், ஜெயக்குமார் ரூபன் முன்னாள் கவுன்சிலர் கோமதி நாயகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில், நகர இளைஞரணி அமைப்பாளர் முத்துகிருஷ்ணன், துணை அமைப்பாளர் தினேஷ் கிருஷ்ணா ஆகியோர் நன்றி கூறினர்.