search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223809"

    • மஹிந்திரா நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஸ்கார்பியோ N மாடல் வினியோகம் துவங்கியது.
    • இந்த கார் முன்பதிவு துவங்கிய 30 நிமிடங்களில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்தனர்.

    மஹிந்திரா ஸ்கார்பியோ N மாடலுக்கான வினியோகம் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்திய சந்தையில் ஜூலை 30 ஆம் தேதி மஹிந்திரா ஸ்கார்பியோ N முன்பதிவு துவங்கியது. முன்பதிவு துவங்கிய முதல் 30 நிமிடங்களில் இந்த காரை வாங்க சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்தனர்.

    தற்போது வினியோகம் துவங்கி இருக்கும் நிலையில், புதிய ஸ்கார்பியோ N மாடலின் 25 ஆயிரம் முன்பதிவுகளையும் இந்த ஆண்டு நவம்பர் மாத இறுதிக்குள் வினியோகம் செய்து முடிக்க மஹிந்திரா நிறுவனம் முடிவு செய்து இருக்கிறது. மேலும் வினியோகம் துவங்கிய பத்து நாட்களுக்குள் குறைந்தபட்சம் 7 ஆயிரம் யூனிட்களை வினியோகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

    இந்திய சந்தையில் புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ N மாடல் Z2, Z4, Z6, Z8 மற்றும் Z8L போன்ற வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த கார் ஆறு மற்றும் ஏழு பேர் பயணம் செய்யும் வகையில் கிடைக்கிறது. புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ N காரில் 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இருவித என்ஜின்களுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

    புதிய ஸ்கார்பியோ N மாடலின் விலை ரூ. 11 லட்சத்து 99 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 23 லட்சத்து 90 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    • மஹிந்திரா நிறுவனம் இந்திய சந்தையில் தனது தார் மாடல் விலையை மாற்றி அமைத்து இருக்கிறது.
    • காரின் வேரியண்டுக்கு ஏற்ப விலை உயர்வு மற்றும் குறைக்கப்பட்டு இருக்கிறது.

    மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் தனது தார் எஸ்யுவி மாடல் விலையை மாற்றி இருக்கிறது. தார் எஸ்யுவி வேரியண்டிற்கு ஏற்ப விலை உயர்வு மற்றும் குறைக்கப்பட்டு உள்ளது. மஹிந்திரா தார் AX வேரியண்ட் புதிய விலை விவரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

    எனினும், மஹிந்திரா தார் பெட்ரோல் AT, கன்வெர்டிபில் ஹார்டு டாப் வேரியண்ட்களின் விலை முறையே ரூ. 20 ஆயிரத்து 678 மற்றும் ரூ. 21 ஆயிரத்து 271 குறைக்கப்பட்டு இருக்கிறது. மஹிந்திரா தார் பெட்ரோல் MT மாடல் விலை ரூ. 5 ஆயிரத்து 711 உயர்த்தப்பட்டு இருக்கிறது.

    மஹிந்திரா தார் டீசல் வேரியண்ட் விலைகளும் உயர்த்தப்பட்டு இருக்கிறது. டீசல் MT ஹார்டு டாப் வேரியண்ட் மற்றும் கன்வெர்டிபில் விலை முறையே ரூ. 28 ஆயிரத்து 278 மற்றும் ரூ. 28 ஆயிரத்து 096 உயர்த்தப்பட்டு உள்ளது. இதே போன்று மஹிந்திரா தார் டீசல் AT வேரியண்ட் கன்வெர்டிபில் மற்றும் ஹார்டு டாப் வேரியண்ட் விலை முறையே ரூ. 52 ஆயிரத்து 780 மற்றும் ரூ. 53 ஆயிரத்து 411 உயர்த்தப்பட்டு உள்ளது.

    முன்னதாக இதே மாதத்தில் மஹிந்திரா தார் நிற ஆப்ஷன்கள் மாற்றப்பட்டன. இத்துடன் மஹிந்திரா XUV700 விலைகளும் மாற்றப்பட்டன. அந்த வரிசையில் தான் தற்போது தார் மாடல் விலை மாற்றப்பட்டு இருக்கிறது.

    • மஹிந்திரா நிறுவனம் அல்டுராஸ் G4 புது வேரியண்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது.
    • இது ஏற்கனவே விற்பனை செய்யப்பட்ட 4WD வேரியண்டிற்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

    மஹிந்திரா நிறுவனம் இந்திய சந்தையில் தனது அல்டுராஸ் G4 புது வேரியண்டை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய அல்டுராஸ் மாடல் விலை ரூ. 30 லட்சத்து 68 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புது வேரியண்ட் 2WD ஹை என அழைக்கப்படுகிறது. இந்த வேரியண்ட் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வந்த 4WD மாடலுக்கு மாற்றாக அமைகிறது.

    தற்போதைய 4WD வேரிண்ட் உடன் ஒப்பிடும் போது மஹிந்திரா அல்டுராஸ் G4 2WD ஹை வேரியண்டில் 4 வீல் டிரைவ் சிஸ்டம் நீக்கப்பட்டு இருக்கிறது. புது வேரியண்ட் காரணமாக அல்டுராஸ் G4 விலை தற்போது ரூ. 1 லட்சத்து 20 ஆயிரம் வரை குறைந்து இருக்கிறது. அல்டுராஸ் G4 4WD வேரியண்ட் விலை தற்போது ரூ. 31 லட்சத்து 88 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. இதன் 2WD வேரியண்ட் விலை ரூ. 30 லட்சத்து 68 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் ஆகும்.

    அம்சங்களை பொருத்தவரை மஹிந்திரா அல்டுராஸ் G4 2WD ஹை வேரியண்ட் ஹெச்ஐடி ஹெட்லேம்ப்கள், எல்இடி டிஆர்எல்கள், எல்இடி பாக் லைட்கள், கார்னரிங் வசதி, 18 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்கள், எல்இடி டெயில் லைட்கள், டிண்ட் செய்யப்பட்ட கிளாஸ், 8 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, 360 டிகிரி கேமரா, ஆம்பியண்ட் லைட்டிங், 8 ஏர்பேக், குரூயிஸ் கண்ட்ரோல் மற்றும் எலெக்ட்ரிக் சன்ரூப் வழங்கப்பட்டு உள்ளது.

    புதிய மஹிந்திரா அல்டுராஸ் G4 2WD ஹை மாடலில் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 178 ஹெச்பி பவர், 420 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 7 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது.

    • மஹிந்திரா நிறுவனம் இந்திய சந்தையில் தனது பொலிரோ மற்றும் பொலிரோ நியோ மாடல்கள் விலையை மாற்றி இருக்கிறது.
    • இரு கார்களிலும் தேர்வு செய்யப்பட்ட வேரியண்ட்களின் விலை மட்டும் மாற்றப்பட்டு உள்ளது.

    மஹிந்திரா நிறுவனம் தனது பொலிரோ மற்றும் பொலிரோ நியோ மாடல்கள் விலையை இந்தியாவில் உயர்த்தி இருக்கிறது. விலை உயர்வின் படி மஹிந்திரா பொலிரோ B4 மற்றும் B6 (O) வேரியண்ட்களின் விலை முறையே ரூ. 20 ஆயிரத்து 701 மற்றும் ரூ. 22 ஆயிரம் உயர்த்தப்பட்டு உள்ளது. இதே போன்று பொலிரோ நியோ N4, N10 மற்றும் N10(O) மாடல்கள் விலை முறையே ரூ. 18 ஆயிரத்து 800, ரூ. 21 ஆயரத்து 007 மற்றும் ரூ. 20 ஆயிரத்து 501 உயர்த்தப்பட்டு இருக்கிறது.

    விலை உயர்வு தவிர இரு மாடல்களின் அம்சங்களிலும் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. தோற்றத்தில் இரு கார்களிலும் மஹிந்திரா நிறுவனத்தின் புதிய லோகோ மட்டும் இடம்பெற்று உள்ளது. காரின் ஸ்டீரிங் வீல், முன்புற கிரில், வீல் ஹப் கேப்கள் மற்றும் டெயில் கேட் உள்ளிட்ட இடங்களில் லோகோ இடம்பெற்று இருக்கிறது.

    இந்திய சந்தையில் புதிய மஹிந்திரா பொலிரோ மாடல் விலை ரூ. 9 லட்சத்து 45 ஆயிரம் என துவங்குகிறது. பொலிரோ நியோ மாடல் விலை ரூ. 9 லட்சத்து 48 ஆயிரம் என துவங்குகிறது. மஹிந்திரா பொலிரோ நியோ டாப் எண்ட் மாடல் விலை ரூ. 11 லட்சத்து 99 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    மஹிந்திரா பொலிரோ மாடலில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 75 ஹெச்பி பவர், 210 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. மஹிந்திரா பொலிரோ நியோ மாடலில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 100 ஹெச்பி பவர், 240 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இரு என்ஜின்களுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது.

    • மஹிந்திரா நிறுவனத்தின் புதிய XUV700 மாடல் விலை இந்தியாவில் உயர்த்தப்பட்டு இருக்கிறது.
    • முன்னதாக இதே காரின் சில வேரியண்ட்கள் விலை குறைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    மஹிந்திரா நிறுவனம் XUV700 மாடல் விலையை உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது. இம்முறை விலை உயர்வு XUV700 அனைத்து வேரியண்ட்களுக்கும் பொருந்தும். விலை உயர்வு ஒவ்வொரு வேரியண்டிற்கு ஏற்ப ரூ. 20 ஆயிரத்து 072 துவங்கி அதிகபட்சம் ரூ. 36 ஆயிரத்து 814 வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது.

    புதிய மஹிந்திரா XUV700 AX7 டீசல் AT லக்சரி பேக் 7 சீட்டர் வேரியண்ட் விலை அதிகளவாக ரூ. 36 ஆயிரத்து 814 உயர்த்தப்பட்டு இருக்கிறது. XUV700 AX3 டீசல் மேனுவல் டிரான்ஸ்மிஷ் 5 சீட்டர் வேரியண்ட் விலை ரூ. 20 ஆயிரத்து 072 உயர்த்தப்பட்டு இருக்கிறது.


    விலை உயர்வின் படி மஹிந்திரா XUV700 மாடல் தற்போது ரூ. 13 லட்சத்து 45 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 24 லட்சத்து 95 ஆயிரம் என மாறி இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்தியாவில் இந்த கார் இருவித இருக்கை அமைப்புகள் மற்றும் இருவித பவர்டிரெயின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    மஹிந்திரா XUV700 மாடலில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் 2.2 லிட்டர் டர்போ டீசல் யூனிட் என இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் பெட்ரோல் என்ஜின் 197 ஹெச்.பி. பவர், 380 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    டீசல் என்ஜின் மேனுவல் வேரியண்ட் 182 ஹெச்.பி. பவர், 420 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. ஆட்டோமேடிக் வேரியண்ட் 182 ஹெச்.பி. பவர், 450 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதன் பேஸ் வேரியண்ட்கள் 153 ஹெச்.பி. பவர், 360 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

    • மஹிந்திரா நிறுவனத்தின் பொலிரோ நியோ மாடல் புதிய மஹிந்திரா லோகோவுடன் விற்பனையகம் வந்தடைந்துள்ளது.
    • முன்னதாக XUV700, ஸ்கார்பியோ கிளாசிக் மற்றும் ஸ்கார்பியோ N போன்ற மாடல்களில் மட்டுமே புது லோகோ வழங்கப்பட்டு இருக்கிறது.

    மஹிந்திரா நிறுவனம் தனது புது லோகோவை அனைத்து மாடல்களிலும் வழங்கும் பணிகளை மெல்ல துவங்கி இருக்கிறது. தற்போது மஹிந்திராவின் புது லோகோ XUV700, ஸ்கார்பியோ கிளாசிக் மற்றும் ஸ்கார்பியோ N என மூன்று மாடல்களில் மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த வரிசையில் மஹிந்திரா பொலிரோ நியோ மாடலும் விரைவில் புது லோகோவுடன் விற்பனைக்கு வருகிறது.


    புகைப்படத்தில் இருப்பதை போன்றே மஹிந்திரா பொலிரோ நியோ மாடல் நாட்டின் விற்பனையகம் ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரில் மஹிந்திரா நிறுவனத்தின் புதிய ட்வின் லோகோ வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் காரின் கிரில், வீல் மற்றும் ஸ்டீரிங் வீல் உள்ளிட்டவைகளில் புதிய பேட்ஜ் இடம்பெற்று இருக்கிறது. புகைப்படத்தில் இருப்பது மஹிந்திரா பொலிரோ நியோ டாப் எண்ட் N10 (O) வேரியண்ட் ஆகும்.

    காரை சுற்றி புது லோகோ தவிர வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில் மஹிந்திரா பொலிரோ நியோ மாடலில் 1.5 லிட்டர், மூன்று சிலிண்டர்கள் கொண்ட எம் ஹாக் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 100 ஹெச்பி பவர், 260 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது.

    Photo Courtesy: The Car Show

    • மஹிந்திரா நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் தனது எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்து இருக்கிறது.
    • மஹிந்திரா நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் கார் வினியோகம் அடுத்த ஆண்டு ஜனவரி மாத இறுதியில் துவங்க உள்ளது.

    மஹிந்திரா நிறுவனம் XUV400 எலெக்ட்ரிக் கார் விவரங்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. வரும் மாதங்களில் இந்த காரின் வெளியீடு நடைபெற இருக்கிறது. புதிய XUV400 எலெக்ட்ரிக் எஸ்யுவி மூலம் மஹிந்திரா நிறுவனம் இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் களமிறங்கி உள்ளது.

    டிசைனை பொருத்தவரை புதிய மஹிந்திரா XUV400 மாடல் டூயல் டோன் பெயிண்ட், மூடப்பட்ட கிரில் பகுதி, X வடிவ இன்சர்ட்கள், ட்வின் பீக் லோகோ, ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், இண்டகிரேட் செய்யப்பட்ட எல்இடி டிஆர்எல்கள், ஃபாக் லைட்கள், இவி சார்ஜிங் அவுட்லெட் உள்ளிட்டவைகளை கொண்டிருக்கிறது. இத்துடன் முன்புறம் மற்றும் பின்புற பம்ப்பர்களில் சில்வர் நிற அக்செண்ட்கள் செய்யப்பட்டுள்ளன.


    புதிய மஹிந்திரா XUV400 எலெக்ட்ரிக் காரில் 16 இன்ச் டூயல் டோன் அலாய் வீல்கல், டூயல் டோன் ORVMகள், பிளாக்டு அவுட் பி பில்லர்கள், ரூப் ரெயில்கள், முன்புறம் மற்றும் பின்புற ஸ்கிட் பிளேட்கள், எல்இடி டெயில் லைட்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. XUV300 மாடலை விட புதிய XUV400 அளவில் பெரியதாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரில் 39.4 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு உள்ளது.

    இந்த காரில் உள்ள பேட்டரியை 50 கிலோவாட் டிசி பாஸ்ட் சார்ஜர் மூலம் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 50 நிமிடங்களே ஆகும். இதுவே 7.2 கிவோவாட் 32 ஏ அவுட்லெட் மூலம் 0 முதல் 100 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 6 மணி 30 நிமிடங்கள் ஆகும். ஸ்டாண்டர்டு 3.3 கிலோவாட் 16 ஏ சாக்கெட் பயன்படுத்தினால் 13 மணி நேரம் ஆகும். இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 456 கிமீ ரேன்ஜ் வழங்கும் திறன் கொண்டுள்ளது.

    • மஹிந்திரா நிறுவனம் இன்னும் சில தினங்களில் புது எலெக்ட்ரிக் கார் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
    • புதிய XUV400 எலெக்ட்ரிக் காரின் டீசரை மஹிந்திரா வெளியிட்டு உள்ளது.

    இந்திய சந்தையில் செப்டம்பர் 8 ஆம் தேதி மஹிந்திரா நிறுவனம் புது எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த நிலையில், புது எலெக்ட்ரிக் கார் டீசர்களை மஹிந்திரா தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில் தற்போது புது டீசர் அந்நிறுவன சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது.

    புதிய டீசர் வீடியோவில் மஹிந்திரா காரின் வெளிப்புறம் எலெக்ட்ரிக் புளூ நிறம் கொண்டிருக்கும் என்பதை தெரிவித்து இருக்கிறது. இத்துடன் காரின் முன்புறம் முழுமையாக சீல் செய்யப்பட்டு மஹிந்திராவின் புது லோகோ காப்பர் நிறத்தில் வைக்கப்பட்டு உள்ளது. இத்துடன் வித்தியாசமான பம்ப்பர், சிறிய ஹெட்லைட்கள், புளூ டோன் கொண்ட எல்இடி டிஆர்எல்கள், புதிய ரியர் பம்ப்பர், டெயில் லைட் மற்றும் வித்தியாசமான கிராபிக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.


    இந்த டீசரிலும் காரின் இண்டீரியர் பற்றி அதிக விவரங்கள் இடம்பெறவில்லை. எனினும், இதன் உள்புறம் மஹிந்திரா XUV300 மாடலில் இருந்ததை போன்ற டிசைன் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். இத்துடன் 9 இன்ச் அளவில் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, புதிய ஏசி வெண்ட்கள் வழங்கப்படும் என தெரிகிறது. இவை தவிர புதிய கார் XUV300-ஐ விட அளவில் சற்று நீளமாக உள்ளது.

    புதிய மஹிந்திரா XUV400 எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடலில் 40 முதல் 45 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்படலாம். இது 140 முதல் 150 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கும். XUV400 எலெக்ட்ரிக் மாடல் நெக்சான் EV மேக்ஸ்-ஐ விட அளவில் பெரியதாக இருக்கும் என தெரிகிறது. இதன் விலை ரூ. 20 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.

    • மஹிந்திரா நிறுவனம் எலெக்ட்ரிக் கார் மாடல்களை உருவாக்கி வருவது அனைவரும் அறிந்ததே.
    • அந்த வகையில் முற்றிலும் புதிய XUV400 எலெக்ட்ரிக் கார் வெளியீட்டு தேதி தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்திய கார் உற்பத்தியாளரான மஹிந்திரா நிறுவனம் முற்றிலும் புதிய XUV400 எலெக்ட்ரிக் எஸ்யுவி வெளியீட்டை உணர்த்தும் டீசரை வெளியிட்டுள்ளது. டீசர் வீடியோவில் மஹிந்திரா XUV400 எலெக்ட்ரிக் எஸ்யுவி டிசைன் பற்றிய விவரங்கள் இடம்பெற்று இருக்கிறது. இதில் மஹிந்திராவின் புதிய லோகோ காணப்படுகிறது. புதிய XUV400 எலெக்ட்ரிக் எஸ்யுவி இந்தியாவில் செப்டம்பர் 8 ஆம் தேதி அறிவிக்கப்படுகிறது.

    முற்றிலும் புதிய மஹிந்திரா XUV400 மாடல் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் கான்செப்ட் வடிவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய XUV400 மாடல் ப்ரோடக்‌ஷன் வடிவில் காட்சியளிக்கிறது. ஆகஸ்ட் 15 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட மஹிந்திராவின் ஆல் எலெக்ட்ரிக் கான்செப்ட்களை விட XUV400 தனித்துவம் மிக்க மாடல் ஆகும். புதிய XUV400 மாடல் XUV300 உருவாக்கப்பட்ட சங்யங் ரெக்ஸ்டன் பிளாட்பார்மிலேயே உருவாக்கப்பட்டுள்ளது.


    2020 ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்ட eXUV300 கான்செப்ட் மாடலில் இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்கள் உள்ளன. அந்த வகையில் இதன் ப்ரோடக்‌ஷன் வேரியண்ட் இதே போன்ற செட்டப் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கலாம். இரு வேரியண்ட்களும் நெக்சான் EV பிரைம் மற்றும் மேக்ஸ் மாடல்களுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது.

    புதிய மஹிந்திரா XUV400 மாடல் முழு சார்ஜ் செய்தால் 400 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களும் ஒற்றை எலெக்ட்ரிக் மோட்டார் செட்டப் கொண்டிருக்கும். இந்த கார் அதிகபட்சம் 150 ஹெச்பி பவர் கொண்டிருக்கும் என தெரிகிறது.

    • மஹிந்திரா நிறுவனம் புதிய ஸ்கார்பியோ N மாடலின் வினியோக விவரங்களை அறிவித்து இருக்கிறது.
    • இந்தியாவில் புதிய ஸ்கார்பியோ N மாடலின் துவக்க விலை ரூ. 11 லட்சத்து 99 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    மஹிந்திரா நிறுவனம் ஜூன் மாத வாக்கில் முற்றிலும் புதிய ஸ்கார்பியோ N மாடலை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்து இருந்தது. புதிய ஸ்கார்பியோ N மாடலின் விலை ரூ. 11 லட்சத்து 99 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. தற்போது ஸ்கார்பியோ N மாடலுக்கான வினியோக விவரங்களை மஹிந்திரா அறிவித்து இருக்கிறது. அதன்படி ஸ்கார்பியோ N மாடலின் வினியோகம் அடுத்த மாதம் 26 ஆம் தேதி துவங்ககிறது.

    முதற்கட்டமாக ஸ்கார்பியோ N Z8L வேரியண்ட் வினியோகம் செய்யப்பட இருக்கிறது. ஸ்கார்பியோ N மற்ற வேரியண்ட் வினியோகம் அதன் பின் தொடங்கும். இந்த காரை முதலில் முன்பதிவு செய்த 25 ஆயிரம் பேருக்கு தற்போது வினியோகம் செய்யப்பட இருக்கிறது. இந்த முன்பதிவுகளின் போது காரின் வினியோகம் நான்கு மாதங்களில் துவங்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.


    இந்த ஆண்டு நவம்பர் மாத இறுதிக்குள் 25 ஆயிரம் முன்பதிவுகளையும் வினியோகம் செய்து முடிக்க மஹிந்திரா நிறுவனம் முடிவு செய்து இருக்கிறது. மேலும் வினியோகம் துவங்கிய பத்து நாட்களுக்குள் குறைந்தபட்சம் 7 ஆயிரம் யூனிட்களை வினியோகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

    இந்திய சந்தையில் புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ N மாடல் Z2, Z4, Z6, Z8 மற்றும் Z8L போன்ற வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த கார் ஆறு மற்றும் ஏழு பேர் பயணம் செய்யும் வகையில் கிடைக்கிறது. இந்த காரில் 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இருவித என்ஜின்களுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

    • மஹிந்திரா நிறுவனத்தின் புதிய ஸ்கார்பியோ N மாடல் உற்பத்தி துவங்கி இரப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • இந்த காரின் வினியோகம் பற்றியும் புது தகவல் வெளியாகி இருக்கிறது.

    மஹிந்திரா நிறுவனம் ஜூன் மாத வாக்கில் ஸ்கார்பியோ N மாடலை அறிமுகம் செய்தது. புது காரை அறிமுகம் செய்த கையோடு, அதன் உற்பத்தியும் துவங்குவதாக அறிவித்து இருந்தது. இந்த நிலையில், புதிய ஸ்கார்பியோ N உற்பத்தி நிறைவுற்று சில மாடல்கள் ப்ரோடக்‌ஷன் லைனில் இருந்து வெளியேறுவதாக மஹிந்திரா நிறுவனம் அறிவித்து இருக்கிறது.

    ஜூன் மாத துவக்கத்தில் புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ N மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த காரின் துவக்க விலை ரூ. 11 லட்சத்து 99 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் ஆகும். இந்தியாவில் மஹிந்திரா ஸ்கார்பியோ N மாடலின் வினியோகம் செப்டம்பர் மாதம் 26 ஆம் தேதி துவங்க இருக்கிறது. இந்த மாடல் Z2, Z4, Z6, Z8 மற்றும் Z8 பிளஸ் என ஐந்து வேரியண்ட்களில் கிடைக்கிறது.


    இத்துடன் டேஸ்லிங் சில்வர், டீப் பாரஸ்ட், கிராண்ட் கேன்யன், எவரெஸ்ட் வைட், நபோலி பிளாக், ரெட் ரேஜ் மற்றும் ராயல் கோல்டு போன்ற நிறங்களில் கிடைக்கிறது. புதிய ஸ்கார்பியோ N மாடலில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எம் ஸ்டேலியன் என்ஜின், 2.2 லிட்டர் எம்ஹாக் டீசல் என்ஜின் ஆப்ஷன்களை கொண்டிருக்கிறது.

    இதன் பெட்ரோல் என்ஜின் 200 ஹெச்பி பவர், 370 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. டீசல் என்ஜின் 130 ஹெச்பி பவர், 300 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷனில் இந்த என்ஜின் 172 ஹெச்பி பவர், 370 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    • மஹிந்திரா நிறுவனத்தின் முற்றிலும் புதிய XUV700 மாடல் இந்திய சந்தையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
    • இந்த காரை டெலிவரி எடுப்பதற்கான காத்திருப்பு காலம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.

    மஹிந்திரா நிறுவனம் தனது புதிய XUV700 மாடலில் ஆப்பிள் கார்பிளே அம்சம் வழங்குவது பற்றி முக்கிய தகவலை தெரிவித்து இருக்கிறது. அதன்படி செப்டம்பர் 5 ஆம் தேதி முதல் மஹிந்திரா XUV700 மாடலில் ஆப்பிள் கார்பிளே அம்சம் வழங்கப்பட இருக்கிறது. இந்திய சந்தையில் புதிய மஹிந்திரா XUV700 மாடல் அக்டோபர் 2021 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது.

    நாடு முழுக்க இயங்கி வரும் எந்த விற்பனை மையத்திற்கு சென்றாலும் XUV700 மாடலில் ஆப்பிள் கார்பிளே வசதியை பெற முடியும். இந்த அம்சம் கொண்டு மேம்பட்ட சிரி சப்போர்ட், கார் பிளே நேவிகேஷன் மற்றும் பல்வேறு வசதிகளை பெறலாம்.

    புதிய மஹிந்திரா XUV700 மாடல் கடந்த மாதம் தான் விற்பனையில் 1.50 லட்சம் யூனிட்களை கடந்து அசத்தி இருந்தது. இந்த காலக்கட்டத்தில் கார் வேரியண்டில் உள்ள அம்சங்களை மாற்றியமைக்கும் பணிகளில் மஹிந்திரா ஈடுபட்டு வந்தது. இந்திய சந்தையில் புதிய மஹிந்திரா XUV700 மாடல் MX, AX3, AX5 மற்றும் AX7 போன்ற வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    இந்தியாவில் மஹிந்திரா XUV700 மாடலின் விலை ரூ. 13 லட்சத்து 18 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. இந்த மாடல் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் 2.2 லிட்டர் டர்போ டீசல் யூனிட் என இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் பெட்ரோல் என்ஜின் 197 ஹெச்.பி. பவர், 380 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    டீசல் என்ஜின் மேனுவல் வேரியண்ட் 182 ஹெச்.பி. பவர், 420 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. ஆட்டோமேடிக் வேரியண்ட் 182 ஹெச்.பி. பவர், 450 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதன் பேஸ் வேரியண்ட்கள் 153 ஹெச்.பி. பவர், 360 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

    ×