search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223809"

    • மஹிந்திரா நிறுவனத்தின் புதிய தலைமுறை ஸ்கார்பியோ N இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
    • இந்த மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஸ்கார்பியோ N மாடலை அறிமுகம் செய்தது. புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ N மாடலின் விலை ரூ. 11.99 லட்சம் என துவங்குகிறது. இந்த மாடலின் முன்பதிவு ஜூலை 30 ஆம் தேதி காலை 11 மணிக்கு ஆன்லைன் மற்றும் மஹிந்திரா விற்பனை மையங்களில் துவங்க இருக்கிறது. வினியோகம் பண்டிகை காலக்கட்டத்தில் துவங்க இருக்கிறது.

    இந்திய சந்தையில் புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ N மாடல் - Z2, Z4, Z6, Z8 மற்றும் Z8L என மொத்தம் ஐந்து வித வேரியண்ட்களில் கிடைக்கிறது. புதிய தலைமுறை மஹிந்திரா ஸ்கார்பியோ N மாடல் டாடா ஹேரியர், டாடா சஃபாரி, ஹூண்டாய் கிரெட்டா மற்றும் ஹூண்டாய் அல்கசார் போன்ற மாடல்களுக்கு இந்திய சந்தையில் போட்டியாக அமைகிறது.


    விலை விவரங்கள்:

    மஹிந்திரா ஸ்கார்பியோ N Z2 பெட்ரோல் மேனுவல் ரூ. 11 லட்சத்து 99 ஆயிரம்

    மஹிந்திரா ஸ்கார்பியோ N Z2 டீசல் மேனுவல் ரூ. 12 லட்சத்து 49 ஆயிரம்

    மஹிந்திரா ஸ்கார்பியோ N Z4 பெட்ரோல் மேனுவல் ரூ. 13 லட்சத்து 49 ஆயிரம்

    மஹிந்திரா ஸ்கார்பியோ N Z4 டீசல் மேனுவல் ரூ. 13 லட்சத்து 99 ஆயிரம்

    மஹிந்திரா ஸ்கார்பியோ N Z6 டீசல் மேனுவல் ரூ. 14 லட்சத்து 99 ஆயிரம்

    மஹிந்திரா ஸ்கார்பியோ N Z8 பெட்ரோல் மேனுவல் ரூ. 16 லட்சத்து 99 ஆயிரம்

    மஹிந்திரா ஸ்கார்பியோ N Z8 டீசல் மேனுவல் ரூ. 17 லட்சத்து 49 ஆயிரம்

    மஹிந்திரா ஸ்கார்பியோ N Z8L பெட்ரோல் மேனுவல் ரூ. 18 லட்சத்து 99 ஆயிரம்

    மஹிந்திரா ஸ்கார்பியோ N Z8L டீசல் மேனுவல் ரூ. 19 லட்சத்து 49 ஆயிரம்

    புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ N மாடல் - டார்மேக், ஸ்னோ, மட் மற்றும் டெசர்ட் என பல்வேறு டிரைவ் மோட்களை கொண்டிருக்கிறது. இந்த எஸ்.யு.வி. மாடல் மூன்றாம் தலைமுறை பாடி ஆன் ஃபிரேம் பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இது காருக்கு ஆஃப் ரோடிங் வசதி மற்றும் அதிவேகமாக பயணிக்கும் போதும் சிறப்பான கண்ட்ரோல் வழங்குகிறது.

    இந்த மாடலில் எம் ஸ்டேலியன் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 200 பி.எஸ். பவர், 380 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் எம் ஹாக் டீசல் என்ஜின் ஆப்ஷனும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 175 பி.எஸ். பவர், 400 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல், ஆட்டோ கியர்பாக்ஸ், ஷிப்ட் பை வயர் தொழில்நுட்பம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. 

    • மஹிந்திரா நிறுவனம் XUV400 எலெக்ட்ரிக் மாடலை உருவாக்கி வருகிறது.
    • புதிய XUV400 EV மாடல் இருவித பேட்டரி ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது.

    மஹிந்திரா ஆட்டோ நிறுவனம் தனது முதல் முழு எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடலை சோதனை செய்யும் பணிகளை துவங்கி உள்ளது. இந்த மாடல் XUV400 என அழைக்கப்பட இருக்கிறது. சமீபத்தில் இந்திய சாலைகளில் சோதனை செய்யப்பட்ட மஹிந்திரா XUV400 மாடல் மஹிந்திரா நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடலாக இருக்கும் என தெரிகிறது. இந்த மாடல் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படலாம்.


    புதிய மஹிந்திரா XUV400 மாடல் XUV300 சப்-காம்பேக்ட் மாடல் உருவாக்கப்பட்ட பிளாட்பார்மிலேயே உருவாகும் என தெரிகிறது. இந்த மாடலின் ஒட்டுமொத்த தோற்றம் XUV300 மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. புதிய மாடல் மஹிந்திரா நிறுவனத்தின் முதல் ஆல்-எலெக்ட்ரிக் மாடல் இல்லை. முன்னதாக மஹிந்திரா நிறுவனம் e20 மற்றும் e20 பிளஸ் எலெக்ட்ரிக் ஹேச்பேக் மாடல்களை வெளியிட்டு இறுக்கிறது.

    ஆகஸ்ட் 15 ஆம் தேதி மஹிந்திரா நிறுவனத்தின் 'Born Electric' அறிமுக நிகழ்வு நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்வில் மஹிந்திரா நிறுவனம் மூன்று எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடல்களை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இவற்றில் புதிய மஹிந்திரா XUV400 மாடல் இடம்பெற்று இருக்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

    Photo Courtesy: B Vinubalan

    ×