search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223923"

    • ஹூண்டாய் நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் 40 பில்லியன் டாலர்களை முதலீடு செய்கிறது.
    • இந்தியாவில் ஆறு புது எலெக்ட்ரிக் கார்களை ஹூண்டாய் அறிமுகம் செய்ய இருக்கிறது.

    தென் கொரிய ஆட்டோமொபைல் உற்பத்தியாளரான ஹூண்டாய் மோட்டார் கம்பெனி இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய புது எலெக்ட்ரிக் கார் மாடலை உருவாக்கி வருகிறது. பிரீமியம் கார் மாடல்கள் மட்டுமின்றி சிறிய ரக எலெக்ட்ரிக் கார்களை உருவாக்கவும் திட்டம் இருப்பதாக அந்நிறுவன அதிகாரி ஒருவர் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.

    சார்ஜிங் உள்கட்டமைப்பு, விற்பனை, உற்பத்தி மற்றும் அசெம்ப்லி வழிமுறைகள் என பல்வேறே பிரச்சினைகளை எதிர்கொள்ள பல்வேறு பிரிவினர் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர் என ஹூண்டாய் இந்தியா நிறுவனத்தின் விற்பனை மற்றும் விளம்பர பிரிவு இயக்குனர் தருன் கார்க் தெரிவித்துள்ளார்.


    "முடிந்தவரை உள்ளூர் பொருட்களை பயன்படுத்தி, விலையை குறைவாக நிர்ணயம் செய்ய முயற்சித்து வருகிறோம். இதற்கான சூழல் தயாராக இருக்க வேண்டும். சார்ஜிங் செய்வதற்கு ஏற்ற வசதி போதுமானதாக இருக்க வேண்டும்," என அவர் மேலும் தெரிவித்தார்.

    இந்திய சந்தையில் நடைபெறும் ஒட்டுமொத்த கார் விற்பனையில் எலெக்ட்ரிக் வாகனங்கள் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளன. மத்திய அரசு 2030-க்குள் இந்த எண்ணிக்கை 30 சதவீதம் வரை அதிகரிக்க செய்வதற்கான முயற்சிகளில் தீவிரம் காட்டி வருகிறது. 

    • ஹூண்டாய் நிறுவனத்தின் வென்யூ பேஸ்லிப்ட் மாடல் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.
    • அதற்குள் இந்த மாடலை வாங்க பலர் முன்பதிவு செய்துள்ளனர்.

    ஹூண்டாய் நிறுவனம் சில தினங்களுக்கு முன் தான் புதிய வென்யூ பேஸ்லிப்ட் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது. புதிய 2022 ஹூண்டாய் வென்யூ பேஸ்லிப்ட் மாடல் விலை ரூ. 7 லட்சத்து 35 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. இந்த மாடலுக்கான முன்பதிவுகள் ஜூன் 3 ஆம் தேதி துவங்கியது. இந்த நிலையில், புதிய ஹூண்டாய் வென்யூ மாடலை வாங்க சுமார் 15 ஆயிரத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளதாக ஹூண்டாய் நிறுவனம் அறிவித்து உள்ளது.

    முன்பதிவு செய்தவர்களில் சுமார் 36 சதவீதம் பேர் முதல் முறை கார் வாங்குவோர் ஆகும். எந்த வேரியண்ட் அதிக முன்பதிவை பெற்றது என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. எனினும், கார் முன்பதிவு தொடங்கிய இரண்டே வாரங்களில் சுமார் 15 ஆயிரம் முன்பதிவுகளை கடந்து இருக்கிறது.


    புதிய ஹூண்டாய் வென்யூ பேஸ்லிப்ட் மாடலில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், D-கட் ஸ்டீரிங் வீல், 2 ஸ்டெப் ரிக்லைனிங் ரியர் சீட்கள், வயர்லெஸ் சார்ஜர், ஆம்பியண்ட் லைட்டிங், அலெக்சா மற்றும் கூகுள் அசிஸ்டண்ட் சேவையை பத்து மொழிகளில் இயக்கும் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளது. புதிய வென்யூ மாடல் ஐந்து வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    2022 ஹூண்டாய் வென்யூ பேஸ்லிப்ட் மாடல் - 1.2 லிட்டர் NA பெட்ரோல் மோட்டார், 1.5 லிட்டர் டீசல் என்ஜின் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது.இந்த என்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் யூனிட், 6 ஸ்பீடு மேனுவல் யூனிட், iMT யூனிட் மற்றும் 7 ஸ்பீடு DCT யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. 

    • ஹூண்டாய் நிறுவனத்தின் மேம்பட்ட வென்யூ மாடல் விரைவில் அறிமுகமாக இருக்கிறது.
    • வெளியீட்டுக்கு முன் இந்த மாடல் விற்பனையகம் வந்தடைந்தது.

    ஹூண்டாய் நிறுவனத்தின் மேம்பட்ட பேஸ்லிப்ட் வென்யூ மாடல் விற்பனையகம் வரத் துவங்கி இருக்கிறது. புதிய 2022 ஹூண்டாய் வென்யூ மாடல் நாளை (ஜூன் 16) இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதுதவிர 2022 வென்யூ எஸ்.யு.வி. மாடலுக்கான முன்பதிவு ஹூண்டாய் விற்பனை மையங்களில் நடைபெற்று வருகிறது. புதிய ஹூண்டாய் வென்யூ மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 21 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    விற்பனையகம் வந்துள்ள புதிய ஹூண்டாய் வென்யூ மாடல் பேஸ் வேரியண்ட் ஆக இருக்கும் என்றே தெரிகிறது. இந்த மாடலில் பெரிய டச் ஸ்கிரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் மற்றும் புஷ் பட்டன் ஸ்டார்ட் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த மாடல் வெள்ளை நிற எக்ஸ்டீரியர் பெயிண்ட் செய்யப்பட்டு உள்ளது. முன்னதாக 2022 ஹூண்டாய் வென்யூ மாடல் டைட்டன் கிரே நிற மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தது.

    2022 ஹூண்டாய் வென்யூ எஸ்.யு.வி. மாடல் ஏழு விதமான நிறங்களில் கிடைக்கும் என தெரிகிறது. இந்த மாடல் டைஃபூன் சில்வர், டைட்டன் கிரே, போலார் வைட், ஃபேண்டம் பிளாக், டெனிம் புளூ, ஃபியரி ரெட் மற்றும் ஃபியரி ரெட் (டூயல்-டோன்) நிறங்களில் கிடைக்கிறது.

    • ஹூண்டாய் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கிரெட்டா N லைன் அறிமுகம் செய்யப்பட்டது.
    • இந்த காரின் இந்திய வெளியீடு பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

    ஹூண்டாய் கிரெட்டா N லைன் மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய எஸ்.யு.வி. மாடல் கிரெட்டா காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடலின் ஸ்போர்ட் வெர்ஷன் ஆகும். கிரெட்டா N லைன் மாடல் இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    புதிய கிரெட்டா N லைன் மாடலில் பிரத்யேக ஸ்டைலிங் டச் மற்றும் மைனர் மெக்கானிக்கல் அப்டேட்களை கொண்டுள்ளது. இதன் முன்புறம் உயரமான பம்ப்பர் உள்ளது. ஏர் இண்டேக் அளவில் பெரியதாக, ஃபாக் லேம்ப் ஹவுசிங் கொண்டிருக்கிறது. முன்புற கிரில்-இல் டார்க் குரோம் உள்ளது. இந்த காரின் கிரில் மீது N லைன் பேட்ஜிங் காணப்படுகிறது.


    மேலும் முன்புற ஃபெண்டர் மீதும் N லைன் பேட்ஜிங் உள்ளது. இத்துடன் 17 இன்ச் அலாய் வீல்கள், பின்புறம் வித்தியாசமான பம்ப்பர், ஃபௌக்ஸ் டிப்யுசர் மற்றும் ட்வின் எக்சாஸ்ட் டிப்கள் உள்ளன. காரினுள் சீட்கள், கியர் நாப், ஸ்டீரிங் வீல் உள்ளிட்டவைகளில் N லைன் தீம் செய்யப்பட்டு இருக்கிறது. இத்துடன் சிவப்பு நிற ஸ்டிட்ச் செய்யப்பட்டு உள்ளது.

    இந்த காரில் 1 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 20 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்துகிறது. இந்திய சந்தையில் புதிய ஹூண்டாய் கிரெட்டா N லைன் மாடல் அடுத்த ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம்.

    • ஹூண்டாய் நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு அசத்தல் சலுகை அறிவித்து இருக்கிறது.
    • கார் மாடல்களுக்கு வேற லெவல் பலன்கள் வழங்கப்படுகிறது.

    ஹூண்டாய் நிறுவனத்தின் தேர்வு செய்யப்பட்ட கார் மாடல்களுக்கு அசத்தல் சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதன்படி கார் மாடல்களுக்கு அதிகபட்சமாக ரூ. 48 ஆயிரம் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன. இந்த சலுகைகள் ஹூண்டாய் சாண்ட்ரோ, ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் மற்றும் ஹூண்டாய் ஆரா போன்ற மாடல்களுக்கு வழங்கப்படுகிறது.

    ஹூண்டாய் சாண்ட்ரோ அந்நிறுவனத்தின் எண்ட்ரி லெவல் ஹேச்பேக் மாடல் ஆகும். இந்த மாடலுக்கு அதிகபட்சமாக ரூ. 28 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது. கிராண்ட் i10 நியோஸ் மாடலுக்கு ரூ. 48 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன.


    அதிக மைலேஜ் வழங்கும் செடான் மாடல் கார்களில் ஒன்றாக ஹூண்டாய் ஆரா இருக்கிறது. இந்த கார் லிட்டருக்கு 25 கிலோமீட்டர் வரையிலான மைலேஜ் வழங்குகிறது. இந்த காருக்கு அதிகபட்சமாக ரூ. 48 ஆயிரம் வரையிலான பலன்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

    ஹூண்டாய் ஆரா மாடலில் கிராண்ட் i10 நியோஸ்-இல் வழங்கப்பட்டு இருக்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 82 ஹெச்.பி. பவர், 121 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    • ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் புதிய வென்யூ பேஸ்லிப்ட் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
    • புது காரின் என்ஜின் விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது.

    ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் 2022 வென்யூ பேஸ்லிப்ட் மாடல் விவரங்களை வெளியிட்டு உள்ளது. புதிய வென்யூ பேஸ்லிப்ட் மாடல் ஜூன் 16 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. 2022 ஹூண்டாய் வென்யூ பேஸ்லிப்ட் மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட உள்ளது.


    புதிய வென்யூ மாடல் மொத்தம் 16 வேரியண்ட்களில், மூன்று வித என்ஜின் மற்றும் மூன்று வித டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. சப்-காம்பேக்ட் எஸ்.யு.வி. பிரிவில் ஏராளமான அதிரடி அம்சங்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டாடா நெக்சான் மாடல் இந்திய சந்தையில் அதிகளவு விற்பனையாகி வருகிறது.

    வென்யூ பேஸ்லிப்ட் மாடலின் என்ஜின் அம்சங்களில் மாற்றங்கள் செய்யப்படவில்லை. அந்த வகையில், இந்த மாடலில் 1.0 லிட்டர் டர்போ GDi மற்ரும் 1.2 லிட்டர் Mpi கப்பா பெட்ரோல் யூனிட் மற்றும் 1.5 லிட்டர் CRDi டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது iMT மற்றும் DCT கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது. 2022 வென்யூ பேஸ்லிப்ட் மாடலில் நார்மல், இகோ மற்றும் ஸ்போர்ட் என மூன்று வித டிரைவிங் ஆப்ஷ்களில் கிடைக்கும் என தெரிகிறது. 

    ×