search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223986"

    • படுகாயம் அடைந்த பெருமாள், முருகன் ஆகியோா் ஊத்துக்குளி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
    • கருப்பசாமி மகன் ரமேஷ் பூபதி (27),பழனி மகன் முருகன் (45) ஆகியோா் உதவியுடன் சீரமைத்துக் கொண்டிருந்தாா்.

    ஊத்துக்குளி:

    செங்கப்பள்ளி சென்னிமலைபாளையம் புதுக்காலனியைச் சோ்ந்தவா் பெருமாள் (வயது 52), கேபிள் ஆபரேட்டா். அதே பகுதியில் சாய்ந்த நிலையில் கேபிள் கம்பம் இருந்துள்ளது. அதை அதே பகுதியைச் சோ்ந்த கருப்பசாமி மகன் ரமேஷ் பூபதி (27),பழனி மகன் முருகன் (45) ஆகியோா் உதவியுடன் சீரமைத்துக் கொண்டிருந்தாா். அப்போது, எதிா்பாராத விதமாக கேபிள் கம்பம் மின்கம்பியின் மீது உரசியதில் மின்சாரம் பாய்ந்து 3பேரும் தூக்கி வீசப்பட்டனா். இதில் ரமேஷ் பூபதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். படுகாயம் அடைந்த பெருமாள், முருகன் ஆகியோா் ஊத்துக்குளி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

    சம்பவம் குறித்து ஊத்துக்குளி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

    • எதிர்பாராத விதமாக திடீரென மின்சாரம் தாக்கியது.
    • கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது.

    கன்னியாகுமரி :

    ராஜாக்கமங்கலம் அருகே கணபதிபுரம் கோவில்புரம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் தனிஷ் (வயது 24), எலக்ட்ரீசியன். இவர் தனியார் கம்பெனியில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்தார்.

    நாகர்கோவில் அருகே உள்ள தம்மத்துக்கோணம் பகுதியில் தனிஷ் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென மின்சாரம் தாக்கியது.

    இதில் தனிஷ் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். உடனடியாக அவரை மீட்டு நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இருப்பினும் சிகிச்சை பலனின்றி தனிஷ் பரிதாபமாக இறந்தார். இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது. இவரது மனைவி 4 மாத கர்ப்பிணியாக உள்ளார். சம்பவம் குறித்து ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தனிஷ் இறந்துபோன சம்பவம் தெரிந்ததும் அவரது கர்ப்பிணி மனைவி மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • தமிழகத்தில் தடையின்றி மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் கூறினார்.
    • பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பிரான்பட்டி, கட்டுக்குடிப் பட்டி ஆகிய பகுதிகளிலும் மற்றும் சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியத்திற்குட் பட்ட செல்லியம்பட்டி, தேனம்மாள்பட்டி ஆகிய பகுதிகளிலும், தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகத்தின் சார்பில் புதிய மின்மாற்றி கள் அமைக்கப்பட்டுள்ளது.

    இதனை மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கினார். இதில் அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு மின்மாற்றி களை இயக்கி தொடங்கி வைத்து பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பொது மக்களுக்கு பயனுள்ள வகையில் எண்ணற்ற திட்டங்களை தொலை நோக்கு பார்வையுடன் சிந்தித்து செயல்படுத்தி வருகிறார்.

    அடிப்படை தேவைகள் அனைத்தையும் நிறை வேற்றும் பொருட்டு, பொது மக்களின் தேவைகளை அறிந்து திட்டங்கள் செயல் படுத்தப்பட்டு வருகிறது. அதில் மனித வாழ்வில் முக்கிய அங்கமாகவும், அத்தியாவசியமாகவும் திகழ்ந்து வரும் மின்சாரத்தை தங்கு தடையின்றியும், சீராக வும் வழங்கிடும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

    நாட்டின் முதுகெலும்பாக திகழ்ந்து வரும் விவசாயி களின் நலனை காக்கின்ற வகையிலும், விவசாயப் பயன்பாட்டிற்கான புதிய மின் இணைப்புக்களை வழங்கும் வகையில் நடவ டிக்கைகள் மேற்கொள்வ தற்கென 2021-22-ம் நிதியாண்டில் விவசாயி களுக்கென 1 லட்சம் புதிய மின் இணைப்புக்கள், நடப்பாண்டில் 50 ஆயிரம் புதிய மின் இணைப்புக்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சிகளில் தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மானக்கழக செயற்பொறியாளர் செல்லத்துரை, உதவி செயற்பொறியாளர்கள் ஜான் கென்னடி, சோலை செல்வி, திருப்புவனம் பேரூராட்சித் தலைவர் சேங்கைமாறன், சிங்கம்புணரி வட்டாட்சியர் சாந்தி, ஊராட்சி மன்றத்தலை வர்கள் ஜெயலெட்சுமி (பிரான்பட்டி), புகழேந்தி (கட்டுக்குடிப்பட்டி), சண்முகம் (செல்லியம்பட்டி), ஜெயலெட்சுமி (தேனம்மாள் பட்டி) மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நாளொன்றுக்கு 24 ஆயிரம் டன் நிலக்கரி எரியூட்டப்பட்டு 1,440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
    • நிலக்கரி எரிப்பதால் 7 ஆயிரம் டன் வரை சாம்பல் வெளியேறுகிறது.

    மேட்டூர்:

    மேட்டூர் அனல்மின் நிலையத்தில், 840 மற்றும் 600 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 பிரிவுகள் செயல்பட்டு வருகிறது. நாளொன்றுக்கு 24 ஆயிரம் டன் நிலக்கரி எரியூட்டப்பட்டு 1,440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

    நிலக்கரி எரிப்பதால் 7 ஆயிரம் டன் வரை சாம்பல் வெளியேறுகிறது. இவை உலர் சாம்பலாகவும், ஈர சாம்பலாகவும் வெளியேற்றப்பட்டு வருகிறது. நாள்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகளில் சாம்பல் சிமெண்ட் ஆலைகளுக்கும், செங்கல் உற்பத்திக்கும் கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில், தமிழ்நாடு மின்சார வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி, மேட்டூர் அனல்மின் நிலையத்தை நேற்று பார்வையிட்டார். அப்போது ஈர சாம்பல் விநியோகம் முன்னறிவிப்பின்றி திடீரென நிறுத்தப்பட்டது.

    சாம்பல் அதிக அளவில் காற்றில் கலந்து பறப்பதால் லாரிகள், அனல்மின் நிலையத்திலிருந்து வெளியேற்றப்பட்டது. இதனால் மேட்டூர்-எடப்பாடி சாலையிலும், மேட்டூர்-சேலம் சாலையிலும் 2 கிலோமீட்டர் தொலைவிற்கு, லாரிகள் நீண்ட வரிசையில் நிறுத்தப்பட்டிருந்தன. ஈர சாம்பல் விநியோகம் நிறுத்தப்பட்டதால், அனல்மின் நிலையத்திற்கு ரூ.50 லட்சத்துக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது.

    • தினசரி மின் நுகர்வு கணக்கெடுப்பின் படி நேற்று முன்தினம் (13- ந் தேதி) 18,252 மெகாவாட் அளவு அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியது.
    • முந்தைய உச்சபட்ச நுகர்வு ஏப். 12-ந் தேதி 39.92 கோடி யூனிட்டாக இருந்தது.

    சென்னை:

    கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாகி வருவதால் மின் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால், தினசரி மின் தேவை 16 ஆயிரம் மெகா வாட் என்ற அளவைத் தாண்டி வருகிறது. மேலும், வேளாண் பிரிவில் கூடுதலாக வழங்கப்பட்ட 1.50 லட்சம் மின் இணைப்பு களால், அந்தப் பிரிவுக்காக மட்டும் கூடுதலாக 727 மெகாவாட் செலவாகிறது.

    இத்தகைய காரணங்களால், மார்ச் 4-ந் தேதி தினசரி மின் நுகர்வு முதல் முறையாக 17,584 மெகா வாட்டாக அதிகரித்தது. இதற்கு முன் 29.4.22-ல் தினசரி மின் நுகர்வு 17,563 மெகாவாட் என்பதே சாதனை அளவாக இருந்தது. விவசாயத்துக்கான 18 மணி நேர மின் விநியோகம், பள்ளிகளில் பொதுத் தேர்வுகள் உள்ளிட்ட காரணங்களால் மின் பயன்பாடு அதிகரித்தது.

    இதனால், முன்னெப்போதும் இல்லாத அளவாக மார்ச் 15-ந் தேதி தினசரி மின் நுகர்வு 17,647 மெகா வாட்டாக அதிகரித்தது. ஆனால், அதற்கு அடுத்த நாள் மார்ச் 16-ந் தேதி, தினசரி மின் நுகர்வு 18,053 மெகாவாட் அதி கரித்து புதிய உச்சத்தை எட்டி முந்தைய நாள் சாதனையை முறியடித்தது.

    இந்நிலையில், தினசரி மின் நுகர்வு கணக்கெடுப்பின் படி நேற்று முன்தினம் (13- ந் தேதி) 18,252 மெகாவாட் அளவு அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியது. இதற்கிடையே, ஒரு நாள் முழுவதும் பயன்படுத்தப்படும் ஒட்டுமொத்த மின்சாரத்தின் அளவு, யூனிட்டாக தற்போது கணக்கெடுக்கப் பட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில் ஒரே நாளில் (ஏப்.13) அதிகபட்சமாக மின் நுகர்வு 40 கோடி யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

    இது குறித்து, அவர் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், தமிழக வரலாற்றில் முதல்முறையாக ஏப்.13-ந் தேதி 40 கோடியூனிட்டுகள் மின்நுகர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தேவை எவ்வித மின் தடையுமின்றி ஈடுசெய்யப்பட்டது. இதற்கு முந்தைய உச்சபட்ச நுகர்வு ஏப். 12-ந் தேதி 39.92 கோடி யூனிட்டாக இருந்தது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • வாடகை முறையை ரத்து செய்து முந்தைய குத்தகை முறையை அமல்படுத்த வேண்டும்.
    • மின்சாரம், குடிநீர், கழிவுநீர் இணைப்பு பெற சமீபத்தில் விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும்.

    வேதாரண்யம்:

    கோவில் நிலங்களுக்கு வாடகை முறையை ரத்து செய்து முந்தைய குத்தகை முறையை அமல்படுத்த வேண்டும், கோவில் உரிமை கோரும் கிராம நத்தம், இனாம் நத்தம், இனாம் நிலம், குடிக்காணி, பட்டின மனை போன்ற இடங்களின் உண்மை நிலையை உயர்மட்ட குழு அமைத்து கண்டறிந்து அவர்களுக்கே பட்டா வழங்க வேண்டும், மின்சாரம், குடிநீர், கழிவுநீர் இணைப்பு பெற சமீபத்தில் விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் குடிக்காணி குத்தகை சாகுபடிதாரா்கள் சங்கம் சார்பில் வேதாரண்யத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்பாட்டத்திற்கு விவசாய சங்க ஒன்றிய செயலாளர் செங்குட்டுவன், குடிக்காணி சங்க தலைவா் பாஸ்கரன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சிவகுரு. பாண்டியன், மாவட்ட நிர்வாகக்குழு நாராயணன் ஆகியோர் விளக்கவுரை ஆற்றினர்.

    மேலும், ஏராளமானோர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    பின்னர், கோவில் செயல் அதிகாரி அறிவழகனிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

    முடிவில் விவசாய சங்க ஒன்றிய துணை செயலாளர் தனியரசு நன்றி கூறினார்.

    • பர்கிட் மாநகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆற்றல் மன்றம் கூட்டம் நடைபெற்றது.
    • மாணவ-மாணவிகளுக்கு மின் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    நெல்லை:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நெல்லை மின் பகிர்மான வட்டத்திற்க்கு உட்பட்ட மத்திய அரசின் ஆற்றல் திறன் பணியகம் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் இணைந்து நெல்லை மற்றும் தென்காசி மாவட்டத்தில் 60 பள்ளிகளில் ஆற்றல் மன்றம் அமைக்கப்பட்டு தொடர்ச்சி யாக மாணவ-மாணவிகள் மத்தியில் மின் சிக்கனம், மின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டு வருகிறது.

    அதன்தொடர்ச்சியாக பர்கிட் மாநகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆற்றல் மன்றம் கூட்டம் அப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் இருதயராஜ் தலைமையில் நடைபெற்றது. மன்ற ஒருங்கிணைப்பாளர் செல்வநாயகம் வரவேற்றார்.

    மின் சிக்கனம் மற்றும் மின் பாதுகாப்பு சம்பந்தமாக நடந்த பேச்சுபோட்டி, கட்டுரை போட்டி, ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவி களுக்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக நெல்லை மின்பகிர்மான வட்ட ஆற்றல் மன்ற ஆய்வு அதிகாரியான பொது பிரிவு செயற்பொறியாளர் வெங்கடேஷ் மணி பரிசு வழங்கினார்.

    நிகழ்ச்சியில் செயற் பொறியாளர் வெங்கடேஷ் மணி மாணவ-மாணவி களுக்கு மின் சிக்கனம் மற்றும் மின் பாதுகாப்பு குறித்து விழிப்பு ணர்வு ஏற்படுத்தினார்.

    மேலும் மாணவர்களுக்கு அவர்கள் வீடுகளில் விதிக்கப்பட்ட கடந்த மின் கட்டணத் தொகைக்கும், அடுத்து விதிக்கப்படும் கட்டண தொகைக்கும் உள்ள வித்தியாசத்தை கணக்கிட்டு தங்கள் முன்னெடுத்த மின் சிக்கனத்தை அறிந்து கொள்ள அறிவுரை வழங்கி னார்.

    நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் ராஜன் மற்றும் அன்பு ஸ்டார்லின், ஆற்றல் மன்ற குழுவினர் மற்றும் மாணவ-மாணவிகள் திரளாக கலந்து கொண்ட னர்.

    • மின்சாரம் பாய்ந்து குணசேகரன் தூக்கி வீசப்பட்டார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் கோரிக்குளம் புது தெருவை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 45 ) விவசாயி. இவர் புதிய வீடு ஒன்று கட்டி வந்தார்.

    சம்பவத்தன்று இவர் வீட்டின் கட்டுமான பணிக்காக கீழ் தளத்தில் கடப்பாரையால் பள்ளம் தோண்டி கொண்டிருந்தார். அப்போது கீழே கிடந்த மின்சார வயர் மீது கடப்பாரை பட்டது.

    இதில் மின்சாரம் பாய்ந்து குணசேகரன் தூக்கி வீசப்பட்டார். பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி குணசேகரன் இறந்தார். இது குறித்து தஞ்சாவூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது

    • மன்னார்குடி பகுதியில் இடியுடன் பலத்த மழை பெய்தது.
    • அறுந்து கிடந்த மின்கம்பியை மாதவன் மதித்துள்ளார்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்த மேலவாசல் கிராமம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் மாதவன் (வயது 27).

    நேற்று மன்னார்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் 1 மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

    இந்த நிலையில் மழை பெய்த போது வீட்டில் இருந்த மாதவன், மழை விட்ட பிறகு வீட்டில் இருந்து வெளியே வந்துள்ளார்.

    அப்போது மேலே சென்ற மின் கம்பி அறுந்து கீழே கிடந்துள்ளது.

    இதை கவனிக்காத மாதவன் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்துள்ளார்.

    அப்போது மாதவன் மீது மின்சாரம் பாய்ந்தது.

    இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து மன்னார்குடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாதவன் உடலை கைப்பற்றி மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து மன்னார்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    • சவுண்ட் சிஸ்டத்தில் விடுமுறை நாட்களில் உதவியாளராக செல்வது வழக்கம்
    • தந்தை ஹரி கோபால் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் விஜய் வழக்கு பதிவு

    கன்னியாகுமரி :

    ராஜாக்கமங்கலம் அருகே எள்ளுவிளையைச் சேர்ந்தவர் ஹரி கோபாலன். இவரது மகன் சதீஷ்குமார் (வயது 20). இவர் அருகில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு டிப்ளமோ படித்து வந்தார். இவர் பிள்ளையார் விளையில் உள்ள ஒரு சவுண்ட் சிஸ்டத்தில் விடுமுறை நாட்களில் உதவியாளராக செல்வது வழக்கம். அது போல் நேற்று அவர் பிள்ளையார்விளையில் நடைபெற்ற திருமண விழா முடிந்து சவுண்ட் சிஸ்டத்தை அவிழ்த்துக் கொண்டிருந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக சதீஷ்குமாரை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட சதீஷ்குமார் வயிற்றில் கம்பி குத்தி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். உடனடியாக அவரை மீட்டு பொதுமக்கள் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பின்னர் சிகிச்சை பலனின்றி சதீஷ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து அவரின் தந்தை ஹரி கோபால் கொடுத்த புகாரின் பேரில் ராஜாக்கமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் விஜய் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றார்.

    • விருதுநகர் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியானார்.
    • இந்த சம்பவம் தொடர்பாக அருப்புக்கோட்டை டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மணி நகரத்தை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகன் ராம்குமார் (வயது23). சுமை தூக்கும் தொழிலாளியான இவர் அருப்புக்கோ ட்டையில் உள்ள நெல்பேட்டையில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று தான் பணிபுரிந்த இடத்தில் ராம்குமார் குப்பைகளை அகற்ற பரண் மேல் ஏறியுள்ளார். அப்போது அங்குள்ள மின்வயரை தொட்டதில் ராம்குமார் மின்சாரம் தாக்கி மயங்கினார்.

    குப்பைகளை அகற்ற மேலே ஏறியவர் நீண்ட நேரமாகியும் வராததால் சந்தேகமடைந்த ஊழியர்கள் சென்று பார்த்த போது ராம்குமாரை மின்சாரம் தாக்கியது தெரியவந்தது. உடனே அவரை விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்ததில் ராம்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக அருப்புக்கோட்டை டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • இன்று காலைகரும்புதோட்டத்தில் களை எடுப்ப தற்காக விஜயா (50), சரோஜா (70) ஆகியோர் சென்றனர். அப்போது திடீரென கரும்பு தோட்டத்தின் மேல் சென்ற மின் கம்பி திடீரென அறுந்து களை எடுக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த விஜயா மற்றும் சரோஜா மீது விழுந்தது.
    • இதில் அவர்கள் தூக்கி வீசப்பட்டு காயம் அடைந்தனர்

    கடலூர்:

    பண்ருட்டி அருேக மின்சாரம் தாக்கி 2 பெண்கள் படுகாயம் அடைந்தனர்.பண்ருட்டி அருகே உள்ள திருவத்தூரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். விவசாயி. இவர் தனது தோட்டத்தில் கரும்பு பயிரிட்டு உள்ளார். இதில் களை எடுப்ப தற்காக அதே பகுதியை சேர்ந்த முனுசாமி மனைவி விஜயா (50), ராஜகோபால் மனைவி சரோஜா (70) ஆகியோர் இன்று காலை சென்றனர். அப்போது திடீரென கரும்பு தோட்டத்தின் மேல் சென்ற மின் கம்பி  திடீரென அறுந்து களை எடுக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த விஜயா மற்றும் சரோஜா மீது விழுந்தது. இதில் அவர்கள் தூக்கி வீசப்பட்டு காயம் அடைந்தனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அங்கு மயங்கிய நிலையில் இருந்த சரோஜா மற்றும் விஜயாவை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் இருவரும் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனு மதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது குறித்து புதுப்பேட்ைட போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் நந்த குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.    களை எடுக்க சென்ற 2 பெண்கள் மின்சாரம் தாக்கி காயம் அடைந்த சம்பவம் அப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தகவலனுமதிக்க ப்பட்டுள்ளனர்.

    ×