search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223986"

    • மின்சாரம் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதால் உடனடியாக மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது
    • தீயணைப்பு துறையினர் தீயை விரைந்து பரவாமல் அணைத்தனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை

    நாகர்கோவில் :

    சுசீந்திரம் ஆனைபாலம் அருகே லாரவிளை சாலையோரத்தில் ஏராளமான தென்னை மரங்கள் உள்ளன. இந்நிலையில் இன்று காலை அப்பகுதியில் உள்ள தென்னை மரம் ஒன்று எதிர்பாராதவிதமாக முறிந்து மின் வயர் மீது பட்டு சாலையில் விழுந்தது.

    இதனால் திடீரென தென்னை மரம் தீப்பற்றி எரிந்தது. இது குறித்து அந்த வழியாக வந்தவர்கள் நாகர்கோவில் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். நிலைய அலுவலர் முகமது சலீம் தலைமையில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மின்சாரம் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதால் உடனடியாக மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக மின்வாரிய ஊழியர்கள் விரைந்து வந்து மின் இணைப்பை துண்டித்தனர்.

    இதையடுத்து தீயணைப்பு துறையினர் தீயை விரைந்து பரவாமல் அணைத்தனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால் சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    வெல்டிங் பட்டறையில் வேலை செய்தபோது பரிதாபம்

    கன்னியாகுமரி:

    ஆரல்வாய்மொழி அருகே மாதவலாயம் பகுதியைச் சேர்ந்தவர் சாகுல் ஹமீது. இவரது மகன் முகமது அசாருதீன் (வயது 23).

    இவர், ஆரல்வாய்மொழி அருகே மாதவராயன் கைகாட்டி பகுதியில் உள்ள வெல்டிங் பட்டறையில் வேலை பார்த்து வந்தார். நேற்று மாலையில் முகமது அசாருதீன் வெல்டிங் பட்டறையில் வேலை செய்து கொண்டிருந்தார்.அப்போது எதிர்பாராத விதமாக அவரது மீது மின்சாரம் தாக்கியது. தூக்கி வீசப்பட்ட முகமது அசாருதீன் மயங்கிய நிலை யில் கிடந்தார்.

    உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்தி ரிக்கு கொண்டு சென்றனர். முகமது அசாருதீனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

    இது குறித்து ஆரல்வாய் மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.பலி யான முகமது அசாருதீன் உடல் பிரேத பரிசோதனை இன்று நடக்கிறது. இதை யடுத்து அவரது உறவினர்கள் அங்கு திரண்டு இருந்தனர்.

    • மயிலாடுதுறை, மணக்குடி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
    • சுற்றியுள்ள கிராமங்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை, மணக்குடி ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது. இதை முன்னிட்டு இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான மயிலாடுதுறை நகரம், மூவலூர், வடகரை, சோழசக்கரநல்லூர், மங்கநல்லூர், ஆனதாண்டவபுரம், வழுவூர், கிளியனூர் ஆகிய பகுதிகளுக்கும் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கும் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை மயிலாடுதுறை மின்வாரிய இயக்குதல் மற்றும் பராமரித்தல் செயற்பொறியாளர் (பொறுப்பு) கலியபெருமாள் தெரிவித்துள்ளார்.

    • செல்லப்பாண்டிக்கு விஜயா என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது.
    • ஒரு மரத்தில் சீரியல் லைட் அமைக்கும் போது மின்சாரம் தாக்கி செல்லப்பாண்டி கீழே விழுந்தார்.

    சாயர்புரம்:

    சாயர்புரம் அருகே உள்ள தங்கம்மாள் புரம் நடுத்தெருவை சேர்ந்தவர் செல்லப்பாண்டி (வயது 45). இவருக்கு திருமணம் ஆகி விஜயா என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது.

    செல்லபாண்டி தங்கம்மாள் புரத்தில் சொந்தமாக சவுண்ட் சர்வீஸ் வைத்து நடத்தி வந்தார். நேற்று காலை 9 மணியளவில் அங்குள்ள ஒரு மரத்தில் சீரியல் லைட் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மெயின் லைனில் சீரியல் செட் உரசி மின்சாரம் தாக்கியதில் செல்லப்பாண்டி மரத்திலிருந்து கீழே விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து இவரது மனைவி விஜயா சாயர்புரம் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் ஏரல் இன்ஸ்பெக்டர் மேரி ஜெமிதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • அரசாயி அரசாயி வயல்வெளியில் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார்.
    • அருந்து கிடந்த மின்கம்பியின் மீது எதிர்பாராத விதமாக அரசாயி மிதித்தார்.

    கடலூர் :

    வடலூர் அருகே பெரிய கோவில்குப்பம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மனைவி அரசாயி (வயது 40) இந்நிலையில் நேற்று மாலை அரசாயி வயல்வெளியில் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது மாட்டின் கன்று குட்டி அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தது. அந்த கன்று குட்டியை பிடிக்க அரசாயி சென்றார்.

    அப்போது வயல்வெளியில் அருந்து கிடந்த மின்கம்பியின் மீது எதிர்பாராத விதமாக அரசாயி மிதித்தார். இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இதனை அருகில் இருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்து இதுகுறித்து நெய்வேலி டவுன்ஷிப் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அரசாயி உடலை மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து நெய்வேலி டவுன்ஷி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராமநாதபுரம் அருகே மின்சாரம் தாக்கி பெட்டிக்கடைக்காரர் பலியானார்.
    • இதுகுறித்து திருப்பாலைக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி பழங்கோட்டையை சேர்ந்தவர் பாலு (வயது 53).இவர் பெட்டிகடை மற்றும் டீக்கடை நடத்தி வருகிறார்.

    இவரது வீட்டின் மேல் பகுதியில் தேவி பட்டினத்தில் இருந்து திருப்பாலைக்குடி செல்லும் பிரதான மின்கம்பி செல்கிறது. மழையின் காரணமாக தொய்வடைந்து இருந்த இந்த மின்கம்பி குறித்து மின் வாரியத்திற்கு புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    இந்த நிலையில் பாலு மாடிக்கு செல்லும் போது தலையில் மின் கம்பி உரசியதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதை கண்ட பாலு மனைவி மற்றும் அவரது தம்பி மனைவி ஆகியோர் அவரை காப்பாற்ற சென்றனர்.

    இதில் பாலுவுக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது. அவர் திருப்பாலைக்குடி அரசு ஆரம்ப சுகதார நிலையத்தில் முதலுதவி பெற்று ராமநாதபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்தபோது பாலு இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தார். காயமடைந்த பாலு தம்பி மனைவி காளிஸ்வரி (39) ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து திருப்பாலைக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெரியம்மாவை காப்பாற்ற முயன்றவரையும் மின்சாரம் தாக்கியது.
    • படுகாயமடைந்தவரை மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    குத்தாலம்:

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா வழுவூர் ஊராட்சி பெரியேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகள் சந்திரா (வயது 45).

    திருமணமாகாத இவர் தனது தங்கை மகன் 11-ம் வகுப்பு படிக்கும் மணிகண்டனுடன் வாழை கொல்லையில் மேய்ந்து கொண்டிருந்த தனது ஆட்டை ஓட்டச் சென்றார்.

    அப்போது காற்றின் காரணமாக அறுந்து விழுந்து கிடந்த மோட்டாருக்கு செல்லும் மின்சார கம்பியை எதிர்பாராத விதமாக சந்திரா மிதித்தார். இதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.

    தனது பெரியம்மாவை காப்பாற்ற முயற்சித்த மணிகண்டனையும் மின்சாரம் தாக்கியது.

    இதில் சம்பவ இடத்திலேயே சந்திரா பரிதாபமாக உயிரிழந்தார்.

    படுகாயம் அடைந்த மணிகண்டனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு மணிகண்டனை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து பெரம்பூர் போலீசார் வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கை வைத்து பக்கெட்டில் இருந்த தண்ணீர் சூடாகி விட்டதா என பார்த்தபோது மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டார்.
    • இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே உள்ள வில்லுக்குறி எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் ஏசு ராஜேந்திரன். இவரது மனைவி பிரேமா (வயது 48) நேற்று காலை குளிப்ப தற்காக ஹீட்டரை ஆன் செய்து உள்ளார். சிறிது நேரம் கழித்து வழக்கம் போல கை வைத்து பக்கெட்டில் இருந்த தண்ணீர் சூடாகி விட்டதா என பார்த்ததாக கூறப்படுகிறது.

    அப்போது மின்சாரம் தாக்கியதில் பிரேமா தூக்கி வீசப்பட்டார். அவரை உறவினர்கள் மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப்பின் மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே பிரேமா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து அவரது கணவர் ஏசு ராஜேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • மின்சாரம் தாக்கி வாலிபர் பலியானார்.
    • சப்-இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் ஆசிரியர் குடியிருப்பை சேர்ந்த முருகன் என்பவரது மகன் கார்த்திக் (வயது 25). இவரும், முத்துப்பாண்டி என்பவரும் சிவகாமிபுரம் தெருவில் வீட்டு உபயோக பொருட்கள் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் கார்த்திக் ஒரு பிரிட்ஜை பழுது பார்க்கும்போது அவரை மின்சாரம் தாக்கியது. இதில் அவர் பரிதாபமாக இறந்தார். இதுபற்றிய புகாரின்பேரில் ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாணவர் பரிதாப இறந்தார்.
    • மின்மோட்டாரை இயக்க முற்பட்டபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியது.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா மகிபாலன்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சாலபட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் ரமேஷ்(15). இவர் மகிபாலன்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் இன்று அதிகாலை வீட்டில் இருந்த மின்மோட்டாரை இயக்க முற்பட்டபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட ரமேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கண்டவராயன்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக மின்சாரம் தாக்கி உயிரிழந்த மாணவனின் உடலை பார்த்து பெற்றோர், குடும்பத்தினர் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

    • தென்னை மரத்தில் தேங்காய் பறிப்பதற்காக இரும்பு கம்பியால் தேங்காய் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்.
    • அவினாசிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள கொடுவாய் வினோபா நகரை சேர்ந்த ராமசாமி என்பவரது மகன் பழனிசாமி (வயது 47). இவருக்கு சொந்தமாக தென்னந்தோப்பு உள்ளது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று தென்னை மரத்தில் தேங்காய் பறிப்பதற்காக இரும்பு கம்பியால் தேங்காய் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது இரும்பு கம்பி அருகில் இருந்த உயர் அழுத்த மின்சார கம்பியில் எதிர்பாராத விதமாக பட்டதில் பழனிசாமி மீது மின்சாரம் பயந்து உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவினாசி பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பழனிசாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை செய்து வருகிறார்கள்.

    • 8 எம்.வி.ஏ. திறன் கொண்ட மின்மாற்றி ஊழியர்கள் இல்லாமல் பணிபுரியும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
    • சுமார் 800 மின் நுகர்வோர்களுக்கு புதிய கீழ்மாத்தூர் மின்பாதை மூலம் மின்சாரம் விநியோகம்.

    தரங்கம்பாடி:

    செம்பனார்கோயில் அருகே மேமாத்தூர் ஊராட்சியில் 33/11 கேவி துணை மின் நிலையம் கடந்த 2006-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

    இந்நிலையில் தற்போது கூடுதலாக மின் நுகர்வோர்கள் மற்றும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் மேற்படி துணை மின் நிலையத்தில் ரூ.1.75 கோடி மதிப்பீட்டில் கூடுதலாக 8 எம்.வி.ஏ. திறன் கொண்ட மின்மாற்றி ஊழியர்கள் இல்லாமல் பணிபுரியும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கூடுதல் திறன் மின்மாற்றியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

    இதற்கான நிகழ்ச்சி துணை மின் நிலையத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மின்வாரிய நாகை மாவட்ட மேற்பார்வை பொறியாளர் சசிதரன் தலைமை தாங்கினார். சீர்காழி கோட்ட பொறியாளர் லதா மகேஸ்வரி, ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினர்களாக மயிலாடு துறை எம்.பி. ராமலிங்கம், பூம்புகார் எம்.எல்.ஏ. நிவேதா முருகன் ஆகியோர் கலந்து கொண்டு கூடுதல் திறன் மின்மாற்றியை இயக்கி வைத்து பேசினர்.

    தற்போது செம்பனார்–கோயில் பிரிவிற்குட்பட்ட கீழ்மாத்தூர், திருச்சம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 800 மின் நுகர்வோர்களுக்கு புதிய கீழ்மாத்தூர் மின்பாதை மூலம் மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது.

    நிகழ்ச்சியில் தி.மு.க மாவட்ட துணை செயலாளர் ஞானவேலன், ஒன்றியக்குழு துணை தலைவர் மைனர் பாஸ்கரன், மேமாத்தூர் ஊராட்சி தலைவர் தெட்ஷிணாமூர்த்தி, மற்றும் மின்வாரிய அதிகாரிகள், ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    ×