search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223986"

    • மின்சார சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்.
    • பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை குறைக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    மின்சார சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும், பெட்ரோல், டீவல், சமையல் எரிவாயு விலையை குறைக்க வேண்டும், மின்கட்டணம், சொத்து வரியை மாநில அரசு குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது.

    இதற்கு தெற்கு மாவட்ட செயலாளர் முத்துஉத்திராபதி தலைமை தாங்கினார். தஞ்சை தலைமை அஞ்சலகம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது.

    இந்த போராட்டத்தில் மூத்த தலைவர் கிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் பாலசுப்பிரமணியன், மாநகரச் செயலாளர் பிரபாகரன், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் சந்திரகுமார், பாலசுந்தரம், பக்கிரிசாமி, வீரமோகன், விஜயலட்சுமி, வாசு.இளையராஜா, கருப்பையா, பூபேஷ்குப்தா, எஸ்தர்செயலீமா, பால்ராஜ், விஜயன், அன்பழகன், ஜார்ஜ்துரை, ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட தலைவர் சேவையா, மாவட்ட துணைச் செயலாளர் துரை.மதிவாணன், மாவட்ட பொருளாளர் கோவிந்தராஜன், துணைத் தலைவர் முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    அப்போது அவர்கள் கோஷமிட்டப்படியே சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 28 பெண்கள் உள்பட 176 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த மறியலால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • தடையில்லா மின் சப்ளை வழங்க மின்வாரியம் தயாராகி வருகிறது.
    • மாதாந்திர மின் பராமரிப்பு பணிக்கென காலை, முதல் மாலை வரை மின்தடை செய்யப்படுவது வழக்கம்.

    திருப்பூர் :

    நாளை விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது.இதையொட்டி இந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் கோவில்கள், பொதுஇடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டைசெய்யப்பட்டு, சிறப்பு பூஜை செய்யப்படும். அடுத்த ஓரிரு நாட்களில், சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, விசர்ஜனம் செய்யப்படும்.இந்நாட்களில் தடையில்லா மின் சப்ளை வழங்க மின்வாரியம் தயாராகி வருகிறது.

    மின்வாரிய உட்கோட்டம் சார்ந்த துணை மின் நிலையங்களில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிக்கென காலை, முதல் மாலை வரை மின்தடை செய்யப்படுவது வழக்கம்.விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ள நாட்களில் தடையில்லா மின்சாரம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மின்தடை செய்யப்படும் நாளாக இருந்தால் அது வேறு தேதிக்கு மாற்றப்படும் என மின்வாரியத்தினர் தெரிவித்தனர். 

    • பால் வியாபாரம் செய்யும் ரங்கநாதன் வெகு நேரமாகியும் வராததால் பாலகுமார் அவரது வீட்டுக்கு சென்று பார்த்தார்.
    • மின்சாரம் தாக்கி கீழே விழுந்து கிடந்த ரங்கநாதனை அருகில் இருந்தவர்களின் உதவியுடன் பரமத்திவேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார்.

    பரமத்திவேலூர்:

    கரூர் மாவட்டம் தோட்டக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீரங்கன். இவரது மகன் ரங்கநாதன்(வயது 47).இவர் பரமத்திவேலூர் தாலுகா சானார்பாளையத்தில் ஒரு வீட்டில் தனியாக தங்கி பாலகுமார் என்பவரிடம் பால் வியாபாரம் செய்து வந்தார்.

    இந்த நிலையில் பால் வியாபாரம் செய்யும் ரங்கநாதன் வெகு நேரமாகியும் வராததால் பாலகுமார் அவரது வீட்டுக்கு சென்று பார்த்தார். அங்கு மின்சாரம் தாக்கி கீழே விழுந்து கிடந்த ரங்கநாதனை அருகில் இருந்தவர்களின் உதவியுடன் காப்பாற்றி பரமத்திவேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ரங்கநாதன் ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறினர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், ரங்கநாதனின் உடலை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக சேர்த்தனர். பால் வியா பாரி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • கோத்தகிரி பகுதியில் உள்ள கிராமங்களில் குரும்பர் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர்
    • பல ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றிய மாவட்ட கலெக்டருக்கும், தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.

    அரவேணு

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் உள்ள கிராமங்களில் குரும்பர் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கோத்தகிரி அருகே உள்ள அணில் காடு பழங்குடியின கிராமத்தில் 8க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த பழங்குடி கிராமத்தில் பல ஆண்டு காலமாக மின்சார வசதி இல்லாமல் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர்.


    இந்த கிராமத்தில் சமீபத்தில் நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் ஆய்வு செய்தார். அப்போது மின் இணைப்பு கோரி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த குக்கிராமத்திற்கு மின்சாரம் இணைப்பு வழங்க மின்வாரியம் மற்றும் வனத்துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

    இதனை தொடர்ந்து கிராமத்தில் உள்ள 8 பழங்குடியின குடும்பங்களுக்கு மின்சாரம் இணைப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்படி, தற்போது கம்பம் நடப்பட்டு, மின்கம்பிகள் பொருத்தி வீடுகளுக்கு மின் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் பல ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றிய மாவட்ட கலெக்டருக்கும், தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.

    • தனியார் திருமண மண்டபத்தில் மின்சாரம் தாக்கி மதுரையை சேர்ந்த மெக்கானிக் பலியானார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து பலியான ஷாருத் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் முடங்கியார் ரோட்டில் பொன்விழா மைதானம் பகுதியில் தனியார் திருமண மண்டபம் கட்டப்பட்டு வருகிறது. கட்டிடப்பணிகள் முடிவடைந்த நிலையில் அங்கு ஏ.சி. பொருத்து வதற்கான பணிகள் நடைபெற்றது.

    மதுரை தல்லாகுளத்தைச் சேர்ந்த ஏ.சி. மெக்கானிக் ஷாருத் (வயது 24) என்பவர் இன்று காலை ஏ.சி. பொருத்துவதற்கான பணியில் ஈடுபட்டார். அப்போது அவர் ஏறி நின்ற ஏணி நிலைத்தடுமாறியதால் மின் கம்பி மீது அவரது கைகள் பட்டதால் மின்சாரம் அவர் மீது பாய்ந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுபற்றி ராஜபாளையம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து பலியான ஷாருத் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் ராஜபாளையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • முற்றிலும் இரும்பு துணிகளை கொண்டு இந்த சங்கு அமைக்கப்பட்டது.
    • 1980-ம் ஆண்டுக்கு பின்னர் இந்த சங்கு ஒலிக்காததால் பராமரிப்பு இன்றி கிடந்தது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை ஆயுதப்படை மைதானம் பின்புறம் மின்சார வாரிய அலுவலகம் உள்ளது. தற்போது உள்ள இந்த இடத்தில் போர் சங்கு அமைந்துள்ளது. இரண்டாம் உலகப் போர் நடந்த காலகட்டத்தில் அதாவது 1939 முதல் 1945-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இரண்டாம் உலகப் போர் நடைபெற்றது. இந்த உலகப் போரின் போது இரவு நேரங்களில் விமானங்களால் குண்டுகள் வீசப்பட்டன. அப்போது தஞ்சை நகரம் இருக்கும் இடம் தெரியாமல் இருப்பதற்காக விளக்குகள் அணைக்கப்படும் ‌.

    இந்த விளக்குகள் அமைப்பதற்கு முன்னதாக சங்கு ஒலிக்கும். இந்த சங்கு ஒலித்த உடனே விளக்குகள் அணைக்கப்பட வேண்டும் என்பது உத்தரவு. அவ்வாறு அணைக்கப்பட்டால் நகரம் இருக்கும் இடமே தெரியாது. இந்த காரணத்திற்காக தஞ்சையில் போர் சங்கு நிறுவப்பட்டது. முற்றிலும் இரும்பு துணிகளை கொண்டு இந்த சங்கு அமைக்கப்பட்டது. மின்சாரம் உதவியுடன் இந்த சங்கு ஒலித்தது. தஞ்சை நகரம் முழுவதும் கேட்கும் வகையில் நிறுவப்பட்டது. ஆனால் 1980 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்த சங்கு ஒலிக்கவில்லை. இதனால் பராமரிப்பு இன்றி கிடந்தது.

    இந்த சங்கு மீண்டும் இயக்கப்பட்டு மாநகரில் மீண்டும் சங்கு ஒலிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், பொது நல அமைப்புகள் மாநகராட்சி ஆணையரை சந்தித்து வலியுறுத்தி வந்தனர்.

    இதையடுத்து சங்கை ஒலிக்க வைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க தொடங்கியது. அதன்படி இரும்பு தூண் மீது பொருத்தப்பட்டு இருந்த 100 கிலோ வரை எடை கொண்ட சங்கு சரி செய்யக்கூடிய பணி நடைபெற்றது. இந்த பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்து முடிந்தன.

    பணிகள் முடிந்ததை தொடர்ந்து சுதந்திர தின நாளாக இன்று முதல் சங்கு ஒலிக்க முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி இன்று முதல் பொற்கால சங்கு ஒலித்தது.

    இதனை மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் முன்னிலையில் மேயர் சண்.ராமநாதன் தொடங்கி வைத்தார். சரியாக இன்று மதியம் 12 மணிக்கு மேயர் தொடங்கி வைத்ததும் சங்கு ஒலித்தது. தொடர்ந்து இரண்டு நிமிடங்கள் இந்த சங்கு ஒலித்தது.

    மேலும் தஞ்சை மாவட்டத்தில் கரந்தை, புதிய பேருந்து நிலையம் நீதிமன்ற சாலை , இ.பி. அலுவலகம் அருகே என 6 இடங்களில் சங்கு நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த சங்கானது தினமும் காலை 6 மணி, 9 மணி, மதியம் 12 மணி, மாலை 6 மணி, இரவு 9 மணி 5 முறை ஒலிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 42 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் போரில் ஒலித்த சங்கு ஒலித்ததால் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • புதிதாக விரிவாக்கம் செய்து சாலை அமைக்கும் போது சாலையில் உள்ள மின்கம்பங்களை அகற்றி சாலை ஓரங்களில் நடுவது வழக்கம்.
    • பூதலூர் -காங்கேயம் பட்டி சாலையில் விண்ணனூர்பட்டி கிராமத்தில் சாலையோ–ரத்தில் உள்ள ஒரு சிமெண்ட் மின்கம்பம் நடுவில் முறிந்த நிலையில் உள்ளது.

    பூதலூர்:

    செங்கிப்பட்டி- திருக்காட்டுப்பள்ளி சாலையில் பூதலூர் இருந்து பெரியகாங்கேயன்பட்டி வரை உள்ள சாலை விரிவா–க்கப்பட்டு பணிகள் முடிவடைந்து உள்ளன.8 கி.மீ நீளமுள்ள இந்த சாலை முழுவதும் கிராமப்புற மக்கள் பயன்பாட்டிற்காகவும், வேளாண் விளைபொருட்கள் எடுத்துச் செல்லவும் பயன்பட்டு வருகிறது.

    இந்த வழித்தடத்தில் நகர பேருந்துகள் இயங்கி வருகின்றன.புதிதாகவிரிவாக்கம் செய்து சாலை அமைக்கும் போது சாலையில் உள்ள மின்கம்பங்களை அகற்றி சாலை ஓரங்களில் நடுவது வழக்கம. இதற்காக நெடுஞ்சாலைத்துறை மின்சார வாரியத்திடம் கோரிக்கை எழுப்பினால் மின்சார வாரியம் உடனடியாக செய்து தருவதும் வழக்கமான நடைமுறையில் இருந்து வருகிறது. இது போன்ற ஒரு சூழ்நிலையில் பூதலூர் -காங்கேயம் பட்டி சாலையில் விண்ணனூர்பட்டி கிராமத்தில் சாலையோ–ரத்தில் உள்ள ஒரு சிமெண்ட் மின்கம்பம் நடுவில் முறிந்த நிலையில் உள்ளது.

    அதை மாற்றி புதிதாக அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தும் அந்த கோரிக்கையை மின்சார வாரியத்தால் கவனிக்க–ப்படாமல் அப்படியே உள்ளது. இதுமட்டும் இல்லாமல் சாலை பணிகளுக்காக அகற்றி நட வேண்டிய ஒருமின்கம்பம் நடப்படாததால் அந்த மின் கம்பத்தை சுற்றி தார் சாலை போடப்ப–ட்டுள்ளது.இதனால் எதிரெதிரே 2 வாகனங்கள் வரும்பொழுது மின்கம்பத்தில் மோதக்கூடிய சூழ்நிலை உள்ளது. மின்சார வாரிய அதிகாரிகளின் அலட்சியத்தால் இதுபோன்று ஏற்பட்டதாக அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர்.

    பலமுறை மின்சார வாரிய அலுவலர்களுக்கு மின்கம்ப–ங்கள் குறித்தும், சாலையில் உள்ள மின்கம்பத்தை அப்புறப்படுத்தி சாலையோரம் நட வேண்டும் என்று கோரிக்கைகளை எழுப்பியும் எந்த விதமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று இந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். உடனடியாக மின்வாரியத்துறை அதிகாரிகள் அலட்சியப் போக்கை விடுத்து உடைந்த மின் கம்பத்தை மாற்றியும், சாலையில் உள்ள மின்கம்பத்தை அகற்றி சாலை ஓரத்தில் நட்டு பொதுமக்கள் பயன்பெற ஆவன செய்ய வேண்டும் என்று இந்த பகுதி மக்கள் கோரிக்கை எழுப்புகின்றனர்.

    • தியாகதுருகம் அருகே ஏரியில் மர்ம கும்பல் மின்சாரம் செலுத்தி மீன் பிடிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • மணிமுக்தா ஏரியில் மீன்கள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே பானையங்கால் கிராமத்தில் இருந்து சித்தலூர் பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு செல்லும் வழியில் மணிமுக்தா ஏரி உள்ளது. இந்த ஏரியில் மீன்கள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. இதில் சித்தலூர், பானையங்கால் உள்ளிட்ட கிராமத்தைச் சேர்ந்த பலரும் வலைகளை வீசியும், தூண்டில் போட்டும் மீன் பிடித்து வருகின்றனர். ஒரு சில கும்பல்கள் மட்டும் மின்சாரம் செலுத்தி மீன்களை பிடித்து வருகி ன்றனர். அந்த ஏரி வழியாக வயல்வெளி பகுதிகளுக்கு மின் கம்ப ங்கள் நடப்பட்டு அதில் மின் கம்பிகள் மூலம் மின்சாரம் எடுத்துச் செல்லப்படுகிறது. அந்த மின் கம்பிகளில் திருட்டுத்தனமாக கொக்கி யின் மூலம் மின்சாரம் எடுத்து அதன் மற்றொரு முனையை சுமார் 20 அடி நீளம் உள்ள குச்சியின் நுனி பகுதியில் சல்லடை போன்ற இரும்பு தகடுகளில் பொருத்துகின்றனர். இவ்வாறு பொருத்தும் போது மின் கம்பிகளில் இருந்து கேபிள் வழியாக செல்லும் மின்சாரம் அந்த குச்சியில் பொருத்தப்பட்டுள்ள இரும்பு தகடுக்கு வருகிறது.

    அப்போது நீண்ட குச்சியின் மறுமுனையை அந்த நபர்கள் பிடித்துக் கொண்டு ஏரியில் உள்ள நீரில் அலசுகின்றனர். அப்போது சல்லடை பகுதியில் படும் மீன்கள் மீது மின்சாரம் பாய்வதால் மீன்கள் செத்து மிதக்கி றது. தொடர்ந்து அந்த நீண்ட குச்சியை தண்ணீ ரில் படாதவாறு மேலே தூக்கிப் பிடித்துக் கொண்டு செத்து மிதக்கும் மீன்களை இவர்கள் எடுத்துச் செல்கி ன்றனர். இவ்வாறு மீன் பிடிப்பதால் மீன் பிடிக்கும் நபர்களுக்கே மின்சாரம் பாய்ந்து அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு உண்டு. மேலும் இதே போல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இதே பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் மின்சாரம் பாய்ச்சி மீன் பிடித்த போது இறந்து போனதாகவும் கூறப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகா ரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து மின்சாரம் செலுத்தி ஏரியில் மீன் பிடிக்கும் நபர்களை எச்சரித்து, அவர்களிடம் மின்சாரம் செலுத்தி மீன் பிடித்தால் ஏற்படும் ஆபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அப்பகுதி சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு வருவதாக கிராமமக்கள் புகார்.
    • தேங்காய் எண்ணெய் ஆலைகள் அதிகளவில் உள்ளன.

    காங்கயம் :

    காங்கயத்தை அடுத்துள்ள நால்ரோடு துணை மின்நிலையத்திலிருந்து, நால்ரோடு, மரவபாளையம், கீரனூர், ஆலாம்பாடி, திட்டுப்பாறை உள்ளிட்ட பகுதிகளுக்கு மின்வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு வருவதாக கிராமமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

    இதுபற்றி விவசாயிகள் தரப்பில் கூறியதாவது:- காங்கயம் மற்றும் சுற்றுப்பகுதிகள் பெரும்பாலும் விவசாயம் சார்ந்த பகுதியாகும். இதுதவிர அரிசி ஆலைகள், தவிடு ஆலைகள் மற்றும் தேங்காய் எண்ணெய் ஆலைகள் அதிகளவில் உள்ளன. விவசாய பணிகளான தண்ணீர் பாய்ச்சுதல், போர்வெல்களிலிருந்து தண்ணீர் எடுத்தல் ஆகியவை மின்மோட்டார்கள் மூலமே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் அரிசி ஆலைகள் உள்ளிட்ட தொழில்களும் மின்மோட்டார்கள் மூலமே நடைபெறுகிறது.

    கடந்த சில நாட்களாக அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் விவசாய பணிகள் மட்டுமல்லாமல் அரிசி ஆலை பணிகளும் கடுமையாக பாதிக்கப்படுகிறது. மேலும் கடந்த 2 நாட்களாக இரவு நேரம் முழுவதும் மின்தடை ஏற்படுவதால் கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். ஆலாம்பாடி உள்ளிட்ட கிராம பகுதியில் இரவு முழுவதும் மின்சாரம் தடைபட்டு கிராமமே இருளில் மூழ்கியது.எனவே மின்வாரிய அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்தி மின் கோளாறுகளை உடனடியாக சரிசெய்து சீரான மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • முல்லைப்பெரியார் அணையை திறந்ததால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    • மின்சாரத்துறையை தனியார் மயமாக்கினால் ஏழை எளிய மக்கள் மற்றும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் பேசியபோது கூறியதாவது,

    தமிழக அரசு முல்லைப் பெரியார் அணையை திறந்ததால் இங்குள்ள விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று அ.தி.மு.க சட்டமன்ற துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பேசி வருவதை கண்டிக்கிறோம். அரசியல் ஆதாயத்திற்காக எதை வேண்டுமனாலும் பேசிவருகின்றனர். இதை மையப்படுத்தி அ.தி.மு.க போராட்டம் நடத்தினால், அதற்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தென்மாவட்டங்களில் போட்டி போராட்டாம் நடத்தும். தமிழகம் மற்றும் கேரளா ஆகிய 2 மாநில மக்களையும் தூண்டிவிட்டு கலவர சூழ்நிலையை உருவாக்குவது அரசியல் பிழைப்பு. மின்சாரத்துறையை தனியார் மயமாக்கினால் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படுவதுடன், ஏழை எளிய மக்கள் மற்றும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

    • மணவாளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார்
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    கடியப்பட்டணம் கிறிஸ்து ராஜா தெருவைச் சேர்ந்த ஜேம்ஸ் மகன் நிகிலன் (வயது 15).

    இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று விடுமுறை தினம் என்பதால் இவர் நண்பர்களுடன் மணவா ளக்குறிச்சியில் உள்ள ஐ.ஆர்.இ. குடியிருப்பு வளா கத்தின் மதில் சுவர் ஏறி மறுபக்கம் செல்ல முடிவு செய்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக உயர்மின் அழுத்த மின்சாரம் தாக்கியதில் நிகிலன் தூக்கி வீசப்பட்டான்.

    அவருக்கு முதலுதவி செய்து ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை சோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இதனைத் தொடர்ந்து ஐ.ஆர்.இ. பாதுகாவலர் முரளி மணவாளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நீர் பாய்ச்சுவதற்காக மின்மோட்டாரை இயக்கி உள்ளார்.
    • மின்சாரம் பாய்ந்து மயங்கி கீழே விழுந்துள்ளார்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள வடமலை பாளையம் காலனிபகுதியை சேர்ந்த கிட்டான் என்பவரது மகன் ஆறுச்சாமி (வயது 45 ). கூலி தொழிலாளியான இவர் அதே ஊரைச் சேர்ந்த தேவராஜ் என்பவரது தோட்டத்தில் வேலை செய்து வந்தார்.

    நேற்று வழக்கம்போல் தோட்டத்திற்குச் சென்ற ஆறுச்சாமி நீர் பாய்ச்சுவதற்காக மின்மோட்டாரை இயக்கி உள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஆறுச்சாமி மீது மின்சாரம் பாய்ந்து மயங்கி கீழே விழுந்துள்ளார். சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின்பு தோட்டத்திற்கு வந்து பார்த்தபோது ஆறுச்சாமி மயங்கி கீழே விழுந்து கிடப்பதை கண்டு உடனடியாக அவரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஆறுச்சாமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை செய்து வருகிறார்கள்.

    ×