search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 224037"

    • பட்டாசு கடைகளில் வேறு பொருட்களை விற்க கூடாது
    • கலெக்டர் அரவிந்த் அறிவிப்பு

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது:-

    பட்டாசு விற்பனை செய்யும் கடைகளில் பட் டாசு பொருட்களை தவிர மற்ற பொருட்களை விற் பனை செய்யக்கூடாது. குழந்தை தொழிலாளர் களை பணியில் அமர்த்த கூடாது.பாதுகாப்புக்காக எந்நேரமும் ஈரச்சாக்கு கள், தண்ணீர் மற்றும் மணல் வாளிகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். புகைப்பிடிக்க கூடாது என்ற அறிவிப்பு பலகையை பொதுமக்கள் அறியும் வகையில் கடை யில் வைப்பதுடன் அருகில் யாரையும் புகைப்பிடிக்க அனுமதிக்க கூடாது.

    மின்தடை ஏற்படும் பட் சத்தில் மெழுகுவர்த்தி, எண்ணெய் விளக்குகள், தீக்குச்சிகளை கண்டிப் பாக பயன்படுத்த கூடாது. டார்ச், பேட்டரி விளக்கு களை மட்டும் குறைந்த அளவில் பயன்படுத்த வேண்டும். உதிரி பட்டா சுகளை விற்பனை செய் வதை தவிர்க்க வேண்டும். கடையை மூடும்போது அனைத்து மின் இணைப் புகளையும் துண்டித்த பின்னரே கடையை மூட வேண்டும். எளிதில் தீப் பற்றக்கூடிய பெயின்ட், எண்ணெய் மற்றும் காகி தங்களை கடைகளிலோ அல்லது கடைகளின் அருகி லோ சேமித்தல் கூடாது.உரிமம் பெறப்பட்ட கட்டி டத்தில் மட்டுமே பட்டா சுகளை விற்பனை செய்ய வேண்டும்.

    பட்டாசு, அதிர்வேட்டு போன்ற வெடிபொருட் களை உரிமம் பெறாத இடத்தில் தயார் செய்யக் கூடாது. அவ்வாறு தயார் செய்வது கண்டறியப்பட் டால் வெடி பொருள் சட்ட விதிகளின் படி குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எக்காரணம் கொண்டும் ஓலையால் வேயப்பட்ட கூரையின் கீழ் பட்டாசு பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது. சீன பட் டாசுகள் விற்பனை செய் யக்கூடாது. இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது.
    • சாலைப்பு தூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ.29 லட்சத்து 93 ஆயிரத்து 721-க்கு விற்பனையானது.

    பரமத்தி வேலூர்:

    சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இந்த வாரம் நடந்த ஏலத்தில் 15.63½ குவிண்டால் எடை கொண்ட 4 ஆயிரத்து 201 தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.24.65-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.21.81-க்கும், சராசரி விலையாக ரூ.23.50-க்கும் என மொத்தம் ரூ.35 ஆயிரத்து 880-க்கு விற்பனையானது.

    அதேபோல் 353.52 குவிண்டால் எடை கொண்ட 725 மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.77.79-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.74.05-க்கும், சராசரி விலையாக ரூ.76.79-க்கும் விற்பனை யானது. 2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.74.69-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.64.66-க்கும், சராசரி விலையாக ரூ.71.87-க்கும் என மொத்தம் ரூ.24 லட்சத்து 80 ஆயிரத்து 579-க்கு விற்பனை யானது.

    அதேபோல் 69.81½ குவின்டால் எடை கொண்ட 230 மூட்டை நிலக்கட லைக்காய் விற்பனைக்கு வந்தது. நிலக்கட லைக்காய் அதிக விலையாக ரூ.80.09-க்கும், குறைந்த விலையாக ரூ.65.69-க்கும், சராசரி விலையாக ரூ.73.70 -க்கும் என ரூ 4 லட்சத்து 77ஆயிரத்து 262-க்கு விற்பனை யானது. சாலைப்பு தூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ.29 லட்சத்து 93 ஆயிரத்து 721-க்கு விற்பனை யானது.

    • பல்வேறு சலுகைகளும் வழங்கப்படுகிறது
    • இந்தியாவின் ‘நம்பர்-1 டீலரான ‘வசந்த் அன் கோ’ நிறுவனம் விரைவில் தனது 107-வது கிளையை திறக்க உள்ளது.

    நாகர்கோவில்:

    இந்தியாவின் 'நம்பர்-1 டீலரான 'வசந்த் அன் கோ' நிறுவனம் விரைவில் தனது 107-வது கிளையை திறக்க உள்ளது. இந்த நிலையில் 'வசந்த் அன் கோ' தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்ப னையை தொடங்கியுள்ளது.

    இந்த விற்பனையில். அனைத்து முன்னணி வீட்டு உபயோக பொருட்களும் மிக குறைந்த விலையில், எளிய தவணை முறை வசதி யுடன் கிடைக்கும். ரூ.5 ஆயிரத்துக்கு மேல் பொருட்கள் வாங்குபவர்க ளுக்கு பரிசு போட்டி மூலம் 100 வாடிக்கையாளர்களுக்கு தலா 1 பவுன் வீதம் 100 பவுன் தங்கம் வெல்லும் வாய்ப்பு கிடைக்கும்.

    32 'இன்ச்' எல்.இ.டிடிவி.. 'பிரிட்ஜ்', 'வாஷிங் மெஷின்' ஆகிய ரூ.49 ஆயிரத்து 140 மதிப்புள்ள 3 பொருட்கள் தள்ளுபடி விலையில் ரூ.29 ஆயிரத்து 990-க்கு கிடைக் கும். 32 'இன்ச்' எச்.டி. 'ஸ்மார்ட்' டி.வி. உடன் 32 ''இன்ச்' எச்.டி. எல்.இ.டி டி வி.யை ரூ.10 ஆயிரத்து 990 க்கு வாங்கலாம். 32 'இன்ச்' எல்.இ.டி. டி.வி. சிறப்பு விலையாக ரூ.8 ஆயிரத்து

    990-க்கு கிடைக்கும். இதனை மாத தவணையாக ரூ.749 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.

    1.5 டன் 4 ஸ்டார் 'ஸ்பிலிட்' 'ஏ.சி.' சிறப்பு விலையாக ரூ.35 ஆயிரத்து 990-க்கு வாங்கலாம். மாத தவணை யாகரூ.3.ஆயிரத்து 83 செலுத் தியும் பெறலாம். 7 கிலோ 'பிரண்ட் லோடு' 'வாஷிங் மெஷின்' சிறப்பு விலையாக ரூ.32 ஆயிரத்து 990-க்கு பெறலாம். 'பிரஷர் 'குக்கர்' மற்றும் 'அயர்ன் 'பாக்ஸ்' ரூ.1,111 மட்டும் கொடுத்து வாங்கலாம். கிரைண்டர், மிக்சி, மின்விசிறி, கியாஸ் அடுப்பு போன்றவைகளும் எளிய தவணை முறை வசதியுடன் தள்ளுபடி விலையில் வாங்கலாம். ரூ.15 ஆயிரத்துக்கும் மேல் 'ஸ்மார்ட் போன்' வாங்கு பவர்களுக்கு 'புளுடூத் ஹெட் செட்', 'பவர் பேங்', 'ஹெட் போன்' போன்றவற்றில் ஏதாவது ஒன்று இலவசமாக வழங்கப்படும்.

    பழைய செல்போன் எந்த நிலையில் இருந்தாலும் ரூ.750-ல் இருந்து 'எக்சேஞ்ச்' செய்துகொள்ளலாம். ரூ.55 செலுத்தி 55 'இன்ச்' எல்.இ.டி. டி.வி., ரூ.65 செலுத்தி 65 'இன்ச்' எல்.இ.டி. டி.வி., ரூ.75 செலுத்தி 75 'இன்ச்' எல்.இ.டி. டி.வி., ரூ.85 செலுத்தி 85 'இன்ச்' எல்.இ.டி.டி.வி.களை தவணை முறையில் வாங்க லாம். ரூ.20 ஆயிரத்துக்கு மேல் 'பர்னிச்சர்' வாங்கி னால் உடனடி தள்ளுபடி யாக ரூ.2 ஆயிரம் கிடைக் கும். 'கிரெடிட்', 'டெபிட்' கார்டுகளுக்கு 'கேஷ் பேக்' மற்றும் தள்ளுபடி உள்ளிட்ட சலுகை வழங்கப்படும்.

    முன்பணம் இல்லாமல் குறிப்பிட்ட ஏ.சி., எல்.இ.டி. 'டி.வி., 'பிரிட்ஜ்', 'வாஷிங் 'மெஷின்', 'வாட்டர் பியூரி பையர்', 'மைக்ரோவேவ் 'ஓவன்', செல்போன், 'டிஸ் வாஷர்', 'ஏர் பியூரிபையர்', 'ஏர் கூலர், 'ஹோம் தியேட்டர்' எடுத்துச்செல்லலாம். வட்டி இல்லாமல் ஏராளமான தவணைமுறை வசதிகள், 36 மாதம் வரை வட்டியில்லா தவணை முறை வசதி ஆகியவையும் வழங்கப்படும்.

    எங்களின் 45 ஆண்டு கால அனுபவம் மற்றும் நற்பெயர் காரணமாக கொள்முதலில் எங்களுக்கு கிடைக்கும் சலுகைகள் அனைத்தையும் நாங்களே தக்க வைத்துக்கொள்ளாமல் அவற்றின் பெரும் பகுதியை வாடிக்கையாளர்களுக்கு அளிப்பதை வழக்க மாக கொண்டுள்ளோம். இதன் காரணமாகவே எங்களிடம் எப்போதும் மிக குறைந்த விலை சாத்தியமாக உள்ளது.

    மேற்கண்ட தகவல் 'வசந்த் அன் கோ' நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • வரத்து குறைந்ததால் விலை உயர்ந்தது
    • குமரி மாவட்டத்திற்கு திண்டுக்கல் பகுதியில் இருந்து சின்ன வெங்காயம் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது .

    நாகர்கோவில்:

    சின்ன வெங்காயத்தை சாப்பிட்டால் உடல் நலத்திற்கு நல்லதாகும்.இதனால் பெண்கள் சமையலுக்கு அதிக அளவில் சின்ன வெங்காயத்தை பயன்படுத்தி வருகிறார்கள்.

    சமீபகாலமாக சின்ன வெங்காயத்தின் விலை குறைந்து காணப்பட்டது. இந்த நிலையில் தற்போது சின்ன வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து உள்ளது. நாகர்கோவில் அப்டா மார்க்கெட் மற்றும் கனகமூலம் சந்தை உட்பட கடைகளில் சின்ன வெங்காயத்தின் விலை படிப்படியாக உயர்ந்து உள்ளது.

    குமரி மாவட்டத்திற்கு திண்டுக்கல் பகுதியில் இருந்து சின்ன வெங்காயம் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது .அங்கு கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக சின்ன வெங்காயத்தின் உற்பத்தி குறைய தொடங்கியுள்ளது. இதனால் சின்ன வெங்காயத்தின் விலை உயர்ந்து உள்ளது.

    கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ. 30 முதல்ரூ. 40க்கு விற்கப்பட்டது. தற்பொழுது வரத்து குறைய தொடங்கியதையடுத்து விலை கிடுகிடுவென உயர்ந்தது.

    கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கிலோ ரூ 80 க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் இன்று வெங்காயத்தின் விலைரூ. 120 ஆக உயர்ந்துள்ளது. தக்காளியின் விலையும் கடந்த சில நாட்களாகவே உயர்ந்து காணப்படுகிறது. ஒரு கிலோ தக்காளி கிலோ ரூ. 40க்கு விற்கப்பட்டு வருகிறது .

    இதே போல் பீன்ஸ் கேரட் வெள்ளரிக்காய் புடலங்காய் உள்பட அனைத்து காய்கறிகளின் விலையும் உயர்ந்து உள்ளது. இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில் சின்ன வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளதால் விலை உயர்ந்துள்ளது. வழக்கமாக 100 மூட்டை வெங்காயம் வந்து கொண்டிருந்த நிலையில் தற்போது 10 மூட்டை வெங்காயம் மட்டுமே வருகிறது. வரத்து 90 சதவீதம் குறைந்துள்ளதால் விலை உயர்ந்துள்ளது என்றார்.

    • சந்தையில் அதிகபட்சமாக ரூ.66 ஆயிரத்துக்கு கன்றுக்குட்டியுடன் காங்கேயம் இன மயிலை வகைப் பசு விற்பனையானது.
    • காங்கேயம் இன மாடுகளுக்கான பிரத்யேக சந்தை ஞாயிற்றுக்கிழமைதோறும் நடைபெற்று வருகிறது.

    காங்கயம்:

    திருப்பூா் மாவட்டம், காங்கயம் அருகே நத்தக்காடையூா்-பழையகோட்டையில் காங்கேயம் இன மாடுகளுக்கான பிரத்யேக சந்தை ஞாயிற்றுக்கிழமைதோறும் நடைபெற்று வருகிறது.இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சந்தையில் மாடுகள், காளைகள், இளங்கன்றுகள் என 112 மாடுகள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருந்தன.இதில் 60 மாடுகள் மொத்தம் ரூ.22 லட்சத்துக்கு விற்பனையாயின. இந்த சந்தையில் அதிகபட்சமாக ரூ.66 ஆயிரத்துக்கு கன்றுக்குட்டியுடன் காங்கேயம் இன மயிலை வகைப் பசு விற்பனையானது.

    • சனிக்கிழமைதோறும் தேங்காய், கொப்பரை விற்பனை நடைபெற்று வருகிறது. 3,625 தேங்காய் வரத்து இருந்தது.
    • ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.1.15 லட்சம் என விற்பனைக் கூட அதிகாரி தங்கவேல் தெரிவித்தாா்.

     வெள்ளக்கோவில்:

    வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 2.80 டன் வேளாண் விளைபொருள்கள் சனிக்கிழமை விற்பனையாயின.இந்த விற்பனைக் கூடத்தில் சனிக்கிழமைதோறும் தேங்காய், கொப்பரை விற்பனை நடைபெற்று வருகிறது. 3,625 தேங்காய் வரத்து இருந்தது. இவற்றின் எடை 1,574 கிலோ. விலை கிலோ ரூ.21.25 முதல் ரூ.23.50 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.23.00.

    45 மூட்டை கொப்பரை வரத்து இருந்தது. எடை 1,192 கிலோ. விலை கிலோ ரூ.55.35 முதல் ரூ.74.40 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.73.65. ஏலத்தில் மொத்தம் 54 விவசாயிகள், 10 வணிகா்கள் பங்கேற்றனா். ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.1.15 லட்சம் என விற்பனைக் கூட அதிகாரி தங்கவேல் தெரிவித்தாா்.

    • வடமாநில தொழிலாளர்கள் 70 சதவீதம் பேர் வாடகை வீடுகளில் தங்கி சமைத்து சாப்பிட்டு வேலைக்கு செல்கின்றனர்.
    • விலையை பொறுத்து 250 கிராம் -200 கிராம் பாக்கெட்களாக கட்டி விற்கின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் தொழில் நிமித்தமாக 2லட்சத்திற்கும் அதிகமான வடமாநில இளைஞர்கள் வசிக்கின்றனர். திருப்பூர் மாநகரில் மட்டும் 1.50 லட்சம் பேர் உள்ளனர். வடமாநில தொழிலாளர்கள் 70 சதவீதம் பேர் வாடகை வீடுகளில் தங்கி சமைத்து சாப்பிட்டு வேலைக்கு செல்கின்றனர்.

    கடந்த 6 மாதங்களாக கொல்லிமலை, எடப்பாடி உள்ளிட்ட சேலம் பகுதியை சேர்ந்த வியாபாரிகள், திருப்பூரில் ரோட்டோர மளிகை கடைகளை விரித்து, வடமாநில வாடிக்கையாளருக்கு விற்பனை செய்கின்றனர். அங்குள்ள உற்பத்தியாளரிடம் மொத்தமாக பொருட்களை வாங்கி 250 கிராம் பாக்கெட்களாக தயாரித்து, திருப்பூர், காங்கயம், கொடுவாய் பகுதிகளில் கடை நடத்த துவங்கிவிட்டனர்.

    கடலை பருப்பு, துவரம் பருப்பு, பச்சை பயறு உட்பட, அனைத்து வகை மளிகை பொருட்களையும் தலா 20 ரூபாய் பாக்கெட்டுகளாக மாற்றி விற்கின்றனர். விலையை பொறுத்து 250 கிராம் -200 கிராம் பாக்கெட்களாக கட்டி விற்கின்றனர்.

    இது குறித்து சாலையோர வியாபாரிகள் கூறுகையில், வட மாநிலத்தினர் பலர், ரேஷன் அரிசியை மக்களிடம் கேட்டு வாங்குகின்றனர். அத்துடன் தலா20 ரூபாய்க்கு விற்கும் மளிகை பொருள் பாக்கெட்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். திருப்பூரில் ஞாயிற்றுக்கிழமையும், காங்கயத்தில் திங்கட்கிழமையும், கொடுவாயில் செவ்வாய் கிழமையும் கடை நடத்துகிறோம். மற்ற நாட்களில், பொருட்களை வாங்கி வந்து எடைபார்த்து பாக்கெட் தயாரிக்கிறோம் என்றனர்.

    • பிளாஸ்டிக் கப்புகள் பயன்படுத்துவது, வாங்குவது மற்றும் விற்பனை செய்வதை தவிர்க்க வேண்டும்.
    • பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஊராட்சி மன்ற அலுவலகம் வந்தடைந்தது.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம், ஒன்பத்துவேலி ஊராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை ஊராட்சி மன்ற தலைவர் விஜயாமதியழகன் தொடங்கி வைத்தார்.

    பேரணியில் அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், கேரி பேக் மற்றும் பிளாஸ்டிக் கப்புகள் பயன்படுத்துவது, வாங்குவது மற்றும் விற்பனை செய்வதை தவிர்க்கும்படி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் வலியுறுத்தினார்.

    பேரணி ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஊராட்சி மன்ற அலுவலகம் வந்தடைந்தது.

    இதில் ஊராட்சி துணை தலைவர் திவ்யாசிவக்குமார், ஊராட்சி செயலாளர் குமரமோகன், ஊராட்சி மன்ற உறுப்பினர் அரவிந்த் மற்றும் ஊராட்சி பணியாளர்கள், கிராமமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • யூரியாவிற்கு கைரேகை மற்றும் ஆதார் அட்டை மூலம் விற்பனை முனையத்தின் படி ரசீது வழங்குவதில்லை.
    • அவர்களது வயிற்றில் பால் பார்க்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்த்து வருகின்றனர்.

    கடலூர்:

    புவனகிரி பகுதியில் உள்ள தனியார் உரக்கடைகளில் உரம், யூரியா அரசு நிர்ணயத்தை விலையை விட ரூபாய் 50 முதல் 80 வரை கூடுதலாக விற்பனை செய்து வருகின்றனர். ஆனால் இதற்கு எந்த ஒரு கைரேகை பதிவு செய்து கொடுக்கப்படவில்லை. ஒரு சில கடைகளில் மீறி கேட்டால் உங்களுக்கு உரம், யூரியா போன்ற பொருள்கள் உங்களுக்கு கிடையாது என்று கூறுகின்றனர். விவசாயிகள் தனியார் கடைகளில் வாங்கும் உரம் யூரியாவிற்கு கைரேகை மற்றும் ஆதார் அட்டை மூலம் விற்பனை முனையத்தின்படி ரசீது வழங்குவதில்லை. இதனைப் போக்க மாவட்ட ஆட்சியர்,வேளாண்துறை அதிகாரிகள் மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்து அதிக விற்பனை செய்யும் கடை உரிமையாளர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுத்து அவர்களது லைசன்ஸை ரத்து செய்து விவசாயிகளுக்கு இதனை வெளிப்படுத்தி அவர்களது வயிற்றில் பால் பார்க்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்த்து வருகின்றனர்.

    ஒவ்வொரு கடைகளிலும் டி.ஏபி.உரம் , யூரியா, பொட்டாஷ் மற்றும் காம்ப்ளக்ஸ் ஆகியவர்களின் இருப்பு பட்டியல் மற்றும் விலைப்பட்டியலை அனைவருக்கும் தெரியும்படி விலைப் பலகையில் எழுதி வெளியில் வைக்க வேண்டும். அதில் முறைகேடுகள் நடந்தால் யாருக்கு புகார் அளிக்க வேண்டும் என்று அந்த தொலைபேசி எண்ணையும் அதில் குறிப்பிட வேண்டும். இந்த முறைகேட்டை போக்க தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் அனைத்து உரங்களையும் வரவைத்து விவசாயிகளிடம் ஆதார் அட்டை மற்றும் அடங்களை வாங்கிக் கொண்டு ரொக்க விலைக்கும் விற்பனை செய்ய வேண்டும். அப்படி செய்தால் விவசாயிகளுக்கு பலனாகவும் நாட்டில் முதுகெலும்பான விவசாயத்தை முற்றிலும் பாதுகாக்க நேரிடும். இதனை தமிழக அரசு உடனடியாக பரிசீலனை செய்து அனைத்து கூட்டுறவு சங்கங்களின் மூலம் விவசாயிகளுக்கு கொடுத்தால்அரசுக்கு நற்பெயர் உண்டாகும் என விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர். 

    • அடிக்கடி நகராட்சி சுகாதார துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்
    • கல் வைத்து விற்பனை செய்யும் பழங்கள் மற்றும் அழுகிய பழங்களை நூதன முறையில் விற்பனை

    கன்னியாகுமரி:

    தக்கலை பஸ்நிலையம் அருகில் தாலுகா அலுவலகம், கிராம அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம், காவல் நிலையம், வட்ட வழங்கல் அலுவலகம் உள்ளிட்ட ஏராளமான அரசு அலுவலகங்கள் உள்ளன.இங்கு காலை, மாலை வேளையில் ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர். இங்கு சாலையோரம் பழ வியாபாரங்கள் வியாபாரிகள் செய்து வருகின்றனர்.

    அங்கு வியாபாரம் செய்யும் வியாபாரிகள் போலியான கவர்ச்சி விளம்பரங்கள் செய்து அழுகிய பழங்களை விற்பனை செய்து வருகின்ற னர். நேற்று முன்தினம் காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் மாம்பழம் வாங்கியுள்ளார். பழத்தை வாங்கி பார்த்த போது அழுகி புழுக்கள் இருந்தன. உடனே கடைகாரரிடம் தகராறில் ஈடுபட்டார். இதே நிலைதொடர்ந்து இப்பகுதியில் நடைபெற்று வருகிறது. நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் பொதுமக்கள் பல வகை நோய்களுக்கு உள்ளாகின்றனர்.

    இது குறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறியதாவது:-

    தக்கலை பிரபல பல் மருத்துவமனை அருகில் உள்ள சாலையோர கடைகளில் கல் வைத்து விற்பனை செய்யும் பழங்கள் மற்றும் அழுகிய பழங்களை நூதன முறையில் விற்பனை செய்து வரும் வியாபாரிகள் மீது அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அடிக்கடி நகராட்சி சுகாதார துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என கூறினார்.

    • நடப்பு பருவத்திற்கு தேவையான ஸ்பிக் யூரியாமற்றும் டிஏபி சின்னசேலம் ரயில் நிலையத்திற்கு 673 மெட்ரிக் டன் அளவு வந்தடைந்தது.
    • விவசாயிகள் பயிர்களுக்கு தழைச்சத்து கொண்ட யூரியாவை மட்டும் பயன்படு த்தாமல் தழை, மணி, சாம்பல் சத்துக்கள் கொண்ட காம்ப்ளஸ் உரங்க ளையும் பயன்படுத்த வேண்டும்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் வேல்விழி செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது,

    கள்ளக்குறிச்சி மாவட்ட த்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தனி யார் உர நிறுவன நிலை யங்களில் யூரியா 2 ஆயிரத்து 558 மெட்ரிக் டன், டிஏபி1,243 மெட்ரிக் டன், பொட்டாஷ் 1,113 மெட்ரிக் டன், சூப்பர் பாஸ்பேட் 679 மெட்ரிக் டன்மற்றும் காம்ப்ளக்ஸ் 3,424 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் நடப்பு பருவத்திற்கு தேவையான ஸ்பிக் யூரியாமற்றும் டிஏபி சின்னசேலம் ரயில் நிலையத்திற்கு 673 மெட்ரிக் டன் அளவு வந்தடைந்தது.

    இதனை வேளாண்மை இணை இயக்குநர் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர் (த.க) ஆய்வு செய்து தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

    விவசாயிகள் உர விற்பனை நிலையங்களுக்கு ஆதார் எண்ணுடன் சென்று மண்வள அட்டை பரிந்துரைப்படி பயிர்களு க்கு தேவையான உரங்களை மட்டும் விற்பனை முனைய கருவி மூலம் வாங்கி ரசீது பெற்று பயனடையலாம். விவசாயிகள் பயிர்களுக்கு தழைச்சத்து கொண்ட யூரியாவை மட்டும் பயன்படு த்தாமல் தழை, மணி, சாம்பல் சத்துக்கள் கொண்ட காம்ப்ளஸ் உரங்க ளையும் பயன்படுத்த வேண்டும்.

    மேலும் தனியார் மற்றும் தொடக்க வேளாண் கூட்டு றவு விற்பனை நிலை யங்களில் அரசு நிர்ண யித்த விலையில் மட்டும் விற்பனை விவசாயி களுக்கு விநியோகம் செய்ய வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஏலத்தில் 1, 931 பருத்தி மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.
    • ஒட்டுமொத்த விற்பனைத்தொகை ரூ.50 லட்சத்து 26 ஆயிரம் என்று விற்பனைக்கூட கண்காணிப்பாளா்கள் தெரிவித்தனா்.

    அவிநாசி:

    அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ.50 லட்சத்து 26 ஆயிரத்துக்கு பருத்தி விற்பனை நடைபெற்றது.

    இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 1, 931 பருத்தி மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.இதில், ஆா்.சி.எச். பி.டி.ரகப்பருத்தி குவிண்டால் ரூ.8,000 முதல் ரூ.9,362 வரையிலும், கொட்டுரக (மட்டரக) பருத்தி குவிண்டால் ரூ.2, 000 முதல் ரூ.4, 000 வரையிலும் ஏலம்போனது. ஒட்டுமொத்த விற்பனைத்தொகை ரூ.50 லட்சத்து 26 ஆயிரம் என்று விற்பனைக்கூட கண்காணிப்பாளா்கள் தெரிவித்தனா். 

    ×