search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 224037"

    • எடப்பாடி அடுத்த கொங்கணாபுரம் பகுதியில் கால்நடை சந்தை இயங்கி வருகிறது.
    • குறிப்பாக இறைச்சிக்கான ஆடுகள் மற்றும் கோழிகள் அதிக அளவில் விற்பனையாகி வருகிறது.

    எடப்பாடி:

    எடப்பாடி அடுத்த கொங்கணாபுரம் பகுதியில் கால்நடை சந்தை இயங்கி வருகிறது. வாரம் தோறும் சனிக்கிழமை அன்று அதிகாலை முதலே நடைபெறும் இச்சந்தையில் ஆடுகள், கோழிகள்,சண்டை சேவல், பந்தயப்புறா, பசு மாடுகள் மற்றும் விவசாய பயன்பாட்டிற்கான காளை மாடுகள் அதிக எண்ணிக்கையில் விற்பனையாவது வழக்கம்.

    ஆடிப்பண்டிகை நெருங்கி வரும் நிலையில், இச்சந்தையில் வழக்கத்தை விட கூடுதலான எண்ணிக்கையில் கால்நடை விற்பனையாகி வருகிறது. குறிப்பாக இறைச்சிக்கான ஆடுகள் மற்றும் கோழிகள் அதிக அளவில் விற்பனையாகி வருகிறது. மேச்சேரி, பென்னாகரம்,தர்மபுரி மற்றும் சேலம் மாவட்டத்தின் மேற்கு எல்லைப் பகுதிகளில் உள்ள கிராமங்களில் இருந்தும் அதிகப்படியான கால்நடைகள் விற்பனைக்கு வந்திருந்தன.

    மாநிலத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் கால்நடைகளை மொத்தமான கொள்முதல் செய்தனர். ஆடு மற்றும் கோழிகளின் விலை வழக்கத்தை விட சற்று கூடுதலாக இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • விவசாயிகள் சுமார் 11 ஆயிரம் பருத்தி மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
    • தொடர்ந்து 4 வாரமாக அதிக பருத்தி மூட்டைகள் வரத்து வந்து ரூ.3 கோடிக்கு மேல் விற்பனையாவது இதுவே முதல் முறையாகும்.

    அம்மாப்பேட்டை:

    அம்மாபேட்டை அருகே உள்ள பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் புதன்கிழமை பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது.

    இந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு கர்நாடக மாநிலம் மைசூர், மற்றும் தருமபுரி, சேலம், கொளத்தூர், கொங்கணாபுரம், மேட்டூர், ஈரோடு மாவட்டம் பெருந்துறை, பவானி, அந்தியூர், அம்மாபேட்டை ஆகிய சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான விவசாயிகள் சுமார் 11 ஆயிரம் பருத்தி மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

    ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்கா ணிப்பாளர் சந்திரசேகரன் முன்னிலையில் ஏலம் நடைபெற்றது. இதில் பி.டி ரக பருத்தி குவிண்டால் குறைந்தபட்சமாக ரூ.8 ஆயிரத்து 879-க்கும், அதிகபட்சமாக ரூ.9 ஆயிரத்து 919-க்கும் என ஏலம் போனது. மொத்தம் சுமார் 3 கோடியே 50 லட்சத்துக்கு விற்பனையானது.

    இதனை ஆந்திர மாநில வியாபாரிகள் மற்றும் கோவை, அன்னூர், புளியம்பட்டி, சத்தியமங்கலம், தர்மபுரி, திருப்பூர், கொங்கணாபுரம், பெருந்துறை, பவானி, அந்தியூர் ஆகிய பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்து போட்டி போட்டு ஏலம் எடுத்து சென்றனர்.

    தொடர்ந்து 4 வாரமாக அதிக பருத்தி மூட்டைகள் வரத்து வந்து ரூ.3 கோடிக்கு மேல் விற்பனையாவது இதுவே முதல் முறையாகும்.

    • மீன் மார்க்கெட் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிழக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • கஞ்சா விற்று கொண்டிருந்த கீழவாசலை சேர்ந்த காதர் உசேனை போலீசார் கைது செய்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கீழவாசல் பழைய மீன் மார்க்கெட் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிழக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    அங்கு கஞ்சா விற்று கொண்டிருந்த கீழவாசலை சேர்ந்த காதர் உசேன் (வயது 70) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 750 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    • சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 12,174 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
    • இதேபோல் ஒரு மூட்டை கொப்பரை தேங்காய்கள் விற்பனைக்கு வந்தது. இது கிலோ 64 ரூபாய்க்கு ஏலம் போனது.

    சென்னிமலை:

    சென்னிமலை அருகே வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய்கள் ஏலம் நடைபெற்றது. ஏலத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 12,174 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    இதில் ஒரு கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக 22 ரூபாய் 22 காசுக்கும், அதிகபட்ச விலையாக 28 ரூபாய் 10 காசுக்கும், சராசரி விலையாக 25 ரூபாய் 30 காசுக்கும் ஏலம் போனது.

    மொத்தம் 5,993 கிலோ எடையுள்ள தேங்காய்கள் ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 116 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

    இதேபோல் ஒரு மூட்டை கொப்பரை தேங்காய்கள் விற்பனைக்கு வந்தது. இது கிலோ 64 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம் 31 கிலோ எடையுள்ள கொப்பரை தேங்காய்கள் 1,984 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றது.

    தேங்காய் மற்றும் கொப்பரை தேங்காய்கள் இரண்டும் சேர்த்து ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 100 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றதாக விற்பனை கூடத்தின் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

    • அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வரப்பட்ட தேங்காய், நிலக்கடலை.
    • தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வரும் வியாபாரிகள், எண்ணைய் நிறுவனங்களின் முகவர்கள் ஏல முறையில் வாங்கி செல்கின்றனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பெருங்குறிச்சி, குப்பிரிக்காபாளையம், சுள்ளிப்பாளையம் ,சோழசி ராமணி, மணியனூர், கந்தம்பாளையம், நல்லூர், குரும்பலமகாதேவி, சிறு நல்லிக்கோவில்,தி.கவுண்டம்பாளையம், திடுமல், ஆனங்கூர்,

    பிலிக்கல்பாளையம், அண்ணாநகர் ,பெரிய மருதூர், சின்ன மருதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தென்னை பயிரிட்டுள்ளனர். தேங்காய் பருப்புகளை உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், அருகாமையில் சாலைப்புதூரில் செயல்பட்டு வரும்

    அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

    இதில் கரூர் ஒன்றியம் மற்றும் பரமத்திவேலூர் பகுதி விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். அதை தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வரும் வியாபாரி கள், எண்ணைய் நிறுவனங்க– ளின் முகவர்கள் ஏல முறை யில் வாங்கி செல்கின்றனர். அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் 74.34 குவிண்டால் எடை கொண்ட 21ஆயிரத்து 822 தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.27.39-க்கும், குறைந்த விலையாக ரூ.21.36-க்கும், சராசரி விலையாக ரூ.24.39-க்கும் என ரூ.ஒரு லட்சத்து78ஆயிரத்து 191க்கு விற்பனை ஆனது.

    அதேபோல் 353.05 குவிண்டால் எடை கொண்ட 724 மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.87.20-க்கும், குறைந்த விலையாக ரூ.82.49-க்கும் சராசரி விலையாக ரூ.85 .60-க்கும் விற்பனையானது. இரண்டாம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.82.76ம், குறைந்த விலையாக ரூ.66.30ம், சராசரி விலையாக ரூ.77.69-க்கும் என ரூ.28 லட்சத்து 51ஆயிரத்து 345-க்கு விற்பனை ஆனது. இந்த வாரம் நடந்த ஏலத்தில் 115.37 1/2 குவிண்டால் எடை கொண்ட 347 மூட்டை நிலக்கடலை காய் விற்பனைக்கு வந்தது. நிலக்கடலை காய் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.70.60-க்கும், குறைந்த விலையாக ரூ.61.70-க்கும், சராசரி விலையாக ரூ.67.50-க்கும் என ரூ.7 லட்சத்து 65 ஆயிரத்து 352க்கு விற்பனை ஆனது.

    இந்த வாரம் சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்தில் தேங்காய் மற்றும் தேங்காய் பருப்பு மற்றும் நிலக்கடலை காய் ஆகியவை ரூ. 37 லட்சத்து94ஆயிரத்து 536க்கு விற்பனை ஆனது.

    • விலை கிலோ ரூ.20.15 முதல் ரூ.24.25 வரை விற்பனையானது.
    • 69 மூட்டை கொப்பரை வரத்து இருந்தது.

    வெள்ளகோவில்:

    வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 6.25 டன் வேளாண் விளைபொருள்கள் சனிக்கிழமை விற்பனையாயின.இந்த விற்பனைக்கூடத்தில் சனிக்கிழமைதோறும் எள், தேங்காய், கொப்பரை விற்பனை நடைபெற்று வருகிறது. 8 மூட்டைகள் சிவப்பு எள் வரத்து இருந்தது. எடை 455 கிலோ. விலை கிலோ ரூ. 81.10 முதல் ரூ. 110.30 வரை விற்பனையானது.8,988 தேங்காய்கள் வரத்து இருந்தது. எடை 3,840 கிலோ. விலை கிலோ ரூ.20.15 முதல் ரூ.24.25 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.24.05.

    69 மூட்டை கொப்பரை வரத்து இருந்தது. எடை 1,963 கிலோ. விலை கிலோ ரூ.56 முதல் ரூ.84.15 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.80.15.ஏலத்தில் மொத்தம் 97 விவசாயிகள், 13 வணிகா்கள் பங்கேற்றனா். ஒட்டு மொத்த விற்பனைத்தொகை ரூ.2.85 லட்சம் என விற்பனைக்கூட அதிகாரி தங்கவேல் தெரிவித்தாா்.

    • சீனந்தோப்பு விலக்கு ரோடு அருகே நின்றிருந்த ஒரு நபர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். போலீசார் அவரை மடக்கி பிடித்தனர்.
    • பூலோக பாண்டியன் அரசு மதுபான வகைகளை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்றுக் கொண்டிருந்ததும் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி சப்-இன்ஸ்பெக்டர் பிரபகுமார் மற்றும் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது சீனந்தோப்பு விலக்கு ரோடு அருகே நின்றிருந்த ஒரு நபர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். போலீசார் அவரை மடக்கி பிடித்தனர்.

    விசாரணையில் அந்த நபர் காயல்பட்டினம் ஓடக்கரையைச் சேர்ந்த பூலோக பாண்டியன் (47) என்பதும், அவர் அரசு மதுபான வகைகளை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்றுக் கொண்டிருந்ததும் தெரியவந்தது.

    அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 8 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    • போக்குவரத்திற்கோ, பொதுமக்களுக்கோ எவ்வித இடையூறு இல்லாமல் சாலையோரம் பழங்களை வியாபாரம் செய்து வருகிறோம்.
    • அரசு அதிகாரிகள் சாலையோரம் வியாபாரம் செய்யக்கூடாது, உழவர்சந்தை வியாபாரம் பாதிப்பதாக தெரிவித்துள்ளனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பாலன் திருப்பூர் மாவட்ட வருவாய்த்துைற அதிகாரியிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    எங்கள் சங்கத்தை சேர்ந்த வியாபாரிகள் திருப்பூர்பல்லடம் ரோடு தெற்கு உழவர்சந்தை அருகே சாலையோரம் காலை 4மணி முதல் 8மணி வரை பழங்களை விற்பனை செய்து வருகிறோம். ேபாக்குவரத்திற்கோ, பொதுமக்களுக்கோ எவ்வித இடையூறு இல்லாமல் வியாபாரம் செய்து வருகிறோம். கடந்த 29-6-2022 அன்று அரசு அதிகாரிகள் சாலையோரம் வியாபாரம் செய்யக்கூடாது, உழவர்சந்தை வியாபாரம் பாதிப்பதாக தெரிவித்துள்ளனர். உழவர்சந்தைக்கு 100 மீட்டர் தொலைவில் உள்ள சில தனியார் கடை உரிமையாளர்கள் நாங்கள் காலை 9மணிக்கு மேல்தான் திறப்போம். அதுவரை கடைவாசலில் வியாபாரம் செய்து கொள்ளுங்கள் என்று கூறியுள்ளனர். அதன்பேரில் வியாபாரம் செய்து வந்த நிலையில் சாலையோர கடைகளை மாநகராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்தி உள்ளது.

    இதனால் சிறு சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுத்து சாலையோர சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.  

    • ஆடிப்பண்டிகை சீசன் விற்பனை இந்த வாரம் முதல் தொடங்கி உள்ளது. மொத்த வியாபாரம் 30 சதவீதம் வரையிலும், சில்லரை வியாபாரம் 40 சதவீதம் வரையும் நடந்துள்ளது.
    • கடந்த சில நாட்களாக நூல் விலை குறைந்து வருவதால் ஜவுளிகளின் விலையும் சற்று குறையும் வாய்ப்பு உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு ஜவுளி சந்தையானது வாரந்தோறும் செவ்வாய்கிழமை நடை பெறுவது வழக்கமாகும். கடந்த சில வாரங்களாக வெளியூர் மொத்த வியாபாரிகள், உள்ளூர் சில்லரை வியாபாரிகள் வருகை குறைவாக இருந்ததால் வியாபாரம் மந்த நிலையில் இருந்து வந்தது.

    இந்நிலையில் ஆடி பண்டிகையொட்டி இந்த வாரம் முதல் மீண்டும் வெளியூர் வியாபாரிகள் வரத்தொடங்கி உள்ளதாகவும், மொத்த வியாபாரிகள் 30 சதவீதத்தை தாண்டி நடந்ததாகவும், ஒரு சில ரகங்களுக்கு ஆடித்தள்ளுபடி வழங்கப்ப ட்டுள்ளதால் சில்லரை விற்பனை அதிக அளவில் நடந்ததாக வியாபாரிகள் கூறினர்.

    இது குறித்து ஜவுளி சந்தை வியாபாரிகள் தரப்பில் கூறியதாவது:-

    ஆடிப்பண்டிகை சீசன் விற்பனை இந்த வாரம் முதல் தொடங்கி உள்ளது. மொத்த வியாபாரம் 30 சதவீதம் வரையிலும், சில்லரை வியாபாரம் 40 சதவீதம் வரையும் நடந்துள்ளது.

    குறிப்பிட்ட ரெடிமேடு ரகங்களுக்கு ஆடித்தள்ளுபடி வழங்கப்ப ட்டுள்ளதால் சில்லரை வர்த்தகம் அதிகமாக நடந்தது. வேட்டி, சட்டை, பேண்ட், துண்டு, சேலை, சுடிதார், லுங்கி, துண்டு உள்ளிட்டவைகள் அதிக அளவில் விற்பனையானது.

    கடந்த சில நாட்களாக நூல் விலை குறைந்து வருவதால் ஜவுளிகளின் விலையும் சற்று குறையும் வாய்ப்பு உள்ளது.

    இந்த வாரம் ஏற்னவே இருந்த ஜவுளிகளை பழைய விலைக்கு விற்பனை செய்துள்ளோம். அடுத்த வாரத்தில் இருந்து புதிய ரகங்கள் வரும் போது, விலையும் சற்று குறைய வாய்ப்பு உள்ளது. ஆடிப்பண்டிகை வரை தினசரி கடைகளிலும் வியாபாரம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • உடன்குடி பகுதியில் பலாப்பழங்களை கிராமம் கிராமமாக கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர்.
    • தற்போது ஒரு கிலோ ரூ.20-க்கு பலாப்பழம் விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

    உடன்குடி:

    தற்போது பல வகையான பழங்களின் விற்பனை சீசன் தொடங்கிவிட்டது. மாம்பழம், அன்னாசி பழம், தர்பூசணி, கொய்யாபழம் உட்பட பல வகையான பல்வேறு பழங்களின் சீசன் தொடங்கி வீதி வீதியாக விற்பனை செய்யப்படுகிறது.

    இதில் பலாப்பழம் விற்பனையும் ஒன்றாகும். உடன்குடி பகுதியில் பலாப்பழங்களை மினி லாரி, தள்ளுவண்டி போன்ற பல்வேறு வாகனங்களில் ஏற்றி கிராமம் கிராமமாக கொண்டு சென்று ஒரு கிலோ ரூ.20-க்கு விற்பனை செய்கின்றனர்.

    இதை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சாப்பிடுகின்றனர். முக்கனிகளில் ஒன்றான கனி பலாப்பழம் ஆகும். தற்போது குறைந்த விலையில் அனைவரும் வாங்கும் படியாக விற்பனை செய்வது குறிப்பிடத்தக்கது.

    • ஓட்டல்களில் காய்ச்சிய குடிநீர் வழங்க வேண்டும் எனவும் சூடான உணவுகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார்.
    • குடிநீர் குழாயில் உடைப்பு அல்லது கசிவு இருந்தால் உடன் பேரூராட்சிக்கு தகவல் தெரிவிக்கலாம் என தெரிவித்தார்.

    வேதாரண்யம்:

    காரைக்கால் பகுதிகளில் காலரா நோய் தொற்று எற்பட்டுள்ளதை தொடர்ந்து தலைஞாயிறு பேரூராட்சியில் உள்ள உணவகங்களில் முன்னெ ச்சரிக்கை நடவடிக்கையாக செயல் அலுவலர் குகன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    ஓட்டல்களில் காய்ச்சிய குடிநீர் வழங்க வேண்டும் எனவும் சூடான உணவுகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் எனவும் சமையலறை தூய்மையாக பராமரிக்க வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார். தூய்மையாக பராமரிக்க தவறினால் உரிமம் ரத்து செய்யப் படும் என தெரிவித்துள்ளார்.

    காலரா முன்னெச்ச ரிக்கை குறித்து செயல் அலுவலர் குகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது,

    பொது மக்கள்திறந்த வெளியில் மலம் கழிக்க கூடாது எனவும் , கழிவ றைக்கு சென்று வந்த பின்னர் கைகளை கழுவ வேண்டும் எனவும் குறைந்தபட்சம் தண்ணீரை 20 நிமிடம்காய்ச்சிய பிறகே குடிக்க வேண்டும் எனவும் காலரா அறிகுறிகள் காண ப்பாட்டில்அரிசி கஞ்சி நீர் மோர் இளநீர் நீராகாரம் என்ற பானங்களை அதிக அளவில் எடுத்துக்கொள்ளலாம் இந்த காலரா அறிகுறிதென்பட்ட அருகில் உள்ள மூத்த குடிம க்களுக்கு உதவி செய்யுங்கள் எனவும் குடிநீர் குழாயில் உடைப்பு அல்லது கசிவு இருந்தால் உடன் பேரூராட்சிக்கு தகவல் தெரிவிக்கலாம் எனவும் தெரிவித்தார்.

    மேலும் வயிற்று வலி, வயிற்று போக்கு மற்றும் வாந்தி அறிகுறி இருப்பின் உடன் அரசு மருத்துவமனயை அணுக வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். ஆய்வின்போது இளநிலை உதவியா ளர் குமார் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் உடன் சென்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×