search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 224037"

    • மதுரை அருகே கள் விற்ற மூதாட்டி கைது செய்யப்பட்டார்.
    • அங்கு சோதனையிட்டதில் 30 லிட்டர் கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள பி.பி.நத்தம் பகுதியில் கள் விற்பனை நடைபெறுவதாக திருமங்கலம் தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் அந்தப்பகுதியில் ரோந்து சென்று கண்காணித்தனர். அப்போது அங்கு பதநீர் விற்றுக்கொண்டிருந்த ஒரு மூதாட்டியிடம் விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். இதையடுத்து அங்கு சோதனையிட்டதில் 30 லிட்டர் கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணையில், அவர் பேரையூர் அருகே உள்ள மேலப்பட்டியை சேர்ந்த ராஜகுருவின் மனைவி ராஜலட்சுமி(வயது60) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர். 

    • வரத்து குறைவு காரணமாக இஞ்சி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
    • வரத்து குறைவால் பீன்ஸ் விலையும் தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது.

    கோயம்பேடு சந்தைக்கு கர்நாடக மாநிலத்தில் இருந்து அதிக அளவு இஞ்சி விற்பனைக்கு வருகிறது. வரத்து குறைவு காரணமாக இஞ்சி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    இந்த நிலையில் இஞ்சி வரத்து மேலும் குறைந்ததால் அதன் விலை புதிய உச்சம் தொட்டுள்ளது. இதன்படி ஒரு கிலோ இஞ்சி மொத்த விற்பனை கடைகளில் ரூ.200-க்கு விற்கப்பட்டது. சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ இஞ்சி ரூ.240 வரை விற்பனை செய்யப்பட்டது.

    இதுகுறித்து இஞ்சி வியாபாரி ஒருவர் கூறும்போது, "கடந்த 2 ஆண்டுகளாக இஞ்சிக்கு போதிய விலை கிடைக்காததால் பெரும்பாலான விவசாயிகள் இஞ்சி சாகுபடியை நிறுத்திவிட்டனர். இதனால்தான் இஞ்சி வரத்து குறைந்தது. இந்த விலை உயர்வு மேலும் சில நாள்கள் வரை நீடிக்கும்" என்றார். இதேபோல் வரத்து குறைவால் பீன்ஸ் விலையும் தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. மொத்த விற்பனையில் கிலோ பீன்ஸ் ரூ.90-க்கு விற்பனை ஆனது. சில்லரை விற்பனை கடைகளில் ரூ.120 வரை விற்பனை செய்யப்பட்டது.

    • 71 மாடுகள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருந்தன.
    • சந்தையில் அதிகபட்சமாக ரூ. 71 ஆயிரத்துக்கு செவலை வகைப்பசு விற்பனையானது.

    காங்கயம் :

    திருப்பூா் மாவட்டம் காங்கயத்தை அடுத்த நத்தக்காடையூா்-பழையகோட்டையில் காங்கேயம் இன மாடுகளுக்கான சந்தை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இங்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சந்தையில் மாடுகள், காளைகள், இளங்கன்றுகள் என 71 மாடுகள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் 51 மாடுகள் மொத்தம் ரூ. 20 லட்சத்துக்கு விற்பனையாயின.

    இந்த சந்தையில் அதிகபட்சமாக ரூ. 71 ஆயிரத்துக்கு கன்றுக் குட்டியுடன் காங்கேயம் இன செவலை வகைப் பசு விற்பனையானது.

    • பலவேசம் காலங்கரையில் உள்ள பாலம் அருகே மது பாட்டில்களை விற்றுக் கொண்டிருந்தார்.
    • சப்- இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்.

    நெல்லை:

    தென்காசி மாவட்டத்தில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து திருட்டுத்தனமாக விற்பனை செய்பவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    செங்கோட்டை

    செங்கோட்டை அருகே உள்ள காலங்கரை சட்ட நாதன் தெருவை சேர்ந்தவர் பலவேசம் (வயது 44).

    இவர் காலங்கரையில் உள்ள பாலம் அருகே மது பாட்டில்களை விற்றுக் கொண்டிருந்தார்.

    தகவல் அறிந்த சப்-இன்ஸ்பெக்டர் இளவரசி தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 30 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    கடையநல்லூர் அருகே அய்யாபுரத்தை அடுத்த கீழே சிவகாமிபுரம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (36), சங்கரன்கோவில் பாரதி நகரை சேர்ந்தவர் பாலசுப்பி ரமணியன்.

    இவர்கள் 2 பேரும் அப்பகுதியில் சட்ட விரோ தமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலை அடுத்து அய்யாபுரம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 100 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.

    வாசுதேவநல்லூர்

    வாசுதேவநல்லூர் அருகே டி.ராமநாதபுரத்தில் செம்புலிங்கம் கோவில் தெருவை சேர்ந்த முனியாண்டி என்பவர் மது பாட்டில்கள் விற்று கொண்டிருந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.

    சங்கரன்கோவில் காந்திநகர் 4-வது தெருவை சேர்ந்த மூக்காண்டி (60) என்பவர் சங்கரன்கோவில்- சுரண்டை சாலையில் தனியார் பள்ளி அருகே மது விற்றுக் கொண்டிருந்தார்.

    அவரை சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராஜ் தலைமையிலான போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 17 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    • வேலை நாட்கள் மற்றும் பள்ளி, கல்லூரி நாட்கள் நீங்கலாக மற்ற நாட்களில் பனியன் ஆடைகள் அணிவதையே மக்கள் விரும்புகின்றனர்.
    • கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களிலும் பனியன் ஆடை விற்பனை அதிகரித்து வருகிறது.

    திருப்பூர் :

    வேலை நாட்கள் மற்றும் பள்ளி, கல்லூரி நாட்கள் நீங்கலாக மற்ற நாட்களில் பனியன் ஆடைகள் அணிவதையே மக்கள் விரும்புகின்றனர். சிறுவர், சிறுமிகள், இளைஞர்கள், இளம்பெண்கள் மட்டும ல்லாது, நடுத்தர வயதினரும், வயதானவர்களும், டி-சர்ட், பனியன், ஷார்ட்ஸ் என பனியன் ஆடைகள் அணிவதையே விரும்புகின்றனர்.உள்ளாடைகள் மட்டும் வடமாநிலங்களுக்கு விற்பனைக்கு சென்ற நிலை மாறியது. பனியன் ஆடைகளும் அதிகம் விற்கப்படுகிறது. தமிழக மாவட்டங்கள் மட்டுமல்லாது கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களிலும் பனியன் ஆடை விற்பனை அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்றுக்கு பின் விற்பனை பாதிக்கப்பட்டதால், புதிய ஆர்டர் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. பெங்களூரு, கேரளா, புனே, லூதியானா போன்ற பகுதிகளை சேர்ந்த வியாபாரிகளின் கொள்முதலும் குறைந்திருந்தது. கையிருப்பு ஆடைகள் தீர்ந்துவிட்டதால் புதிய ஆர்டர் விசாரணையும், வரத்தும் கணிசமாக உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    திருப்பூர் காதர்பேட்டை வளாகத்தில் உள்ள பனியன் வியாபாரிகளுக்கு பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் நேரில் வந்து ஆர்டர் கொடுக்கின்றனர். அவ்வப்போது நேரில் வந்து மொத்தமாக ஆடைகளை வாங்கி செல்கின்றனர். நூல்விலை உயர்வால் கடந்த ஆண்டு முழுவதும் சோர்ந்து போயிருந்த காதர்பேட்டை வியாபாரம் இயல்புநிலைக்கு திரும்பியுள்ளது.

    கடந்த சில மாதங்களாக, நூல்விலை குறைவான நிலையில் தொடர்கிறது. புதிய ஆர்டர் விசாரணையும், கொள்முதலும் அதிகரித்து ள்ளது. இதன்காரணமாக உள்நாட்டு பனியன் வியாபாரம் மீண்டும் சூடுபிடிக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து பனியன் வியாபாரிகள் சிலர் கூறியதாவது:- கொரோனா ஊரடங்கிற்கு பின் திருப்பூர் பனியன் ஆடை வியாபாரம் குறைந்தது. கடந்த ஆண்டில் ஏற்பட்ட நூல் விலை உயர்வால் வியாபாரமில்லாமல் பல கடைகள் மூடப்பட்டன.வியாபாரம் மிகக்குறைவாக நடந்து வந்தது. தற்போது, வடமாநிலங்களிலும் கேரள சந்தையிலும் சுறுசுறுப்பு ஏற்பட்டுள்ளதால் வியாபார விசாரணை அதிகரித்துள்ளது.நூல்விலை சீராக இருப்பதால், விளையாட்டு சீருடைகள், உள்ளாடைகள், குழந்தைகள் ஆடைகள் விற்பனை மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியுள்ளது. உள்நாட்டு பனியன் வியாபாரத்தை பொறுத்தவரை நூல்விலை இதேநிலையில் இருந்தால் போதும். மேலும் சில மாதங்களில் பழைய நிலைக்கு திரும்ப முடியும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • நத்தக்காடையூா்-பழையகோட்டையில் காங்கேயம் இன மாடுகளுக்கான பிரத்யேக சந்தை ஞாயிற்றுக்கிழமைதோறும் நடைபெற்று வருகிறது.
    • அதிகபட்சமாக ரூ.66 ஆயிரத்துக்கு காங்கேயம் இன மயிலை வகைப் பசு விற்பனையானது.

    காங்கயம்:

    திருப்பூா் மாவட்டம் காங்கயம் அருகே நத்தக்காடையூா்-பழையகோட்டையில் காங்கேயம் இன மாடுகளுக்கான பிரத்யேக சந்தை ஞாயிற்றுக்கிழமைதோறும் நடைபெற்று வருகிறது.இந்த வாரம் நடைபெற்ற சந்தையில் மாடுகள், காளைகள், இளங்கன்றுகள் என 63 மாடுகள் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டிருந்தன. இதில் 43 மாடுகள் மொத்தம் ரூ.15 லட்சத்துக்கு விற்பனையாயின. இந்த சந்தையில் அதிகபட்சமாக ரூ.66 ஆயிரத்துக்கு காங்கேயம் இன மயிலை வகைப் பசு விற்பனையானது.

    • சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
    • விற்பனைக்காக பாக்கெட் சாராயம் இருந்தது தெரிய வந்தது.

    நாகப்பட்டினம்:

    நாகூர் -கங்களாஞ்சேரி சாலையில் நாகூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

    அப்போது சின்ன கண்ணமங்கலம் பஸ் நிலையம் அருகில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர்.

    அதில் விற்பனைக்காக பாக்கெட் சாராயம் இருந்தது தெரிய வந்தது.

    விசாரணையில் அவர் சின்ன கண்ணமங்கலம் வடக்குதெருவை சேர்ந்த நீதிதேவன் மகன் தாய்குமார் (வயது 31) என்பது தெரிய வந்தது.

    இது குறித்து வழக்குப்பதிவு செய்த நாகூர் போலீசார் தாய்குமாரை கைது செய்து, அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.

    • எண்ணூர் கடற்கரை, காட்டுப்பள்ளி ஏரிகளில் இந்த மட்டிகள் அதிகம் காணப்படும்.
    • ஏராளமான தொழிலாளர்கள் சிப்பிகளை மூட்டை மூட்டையாக சேகரித்து விற்பனை செய்து வருகின்றனர்.

    பொன்னேரி:

    மீன்பிடி தடைகாலம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 14-ந்தேதி வரை நடைமுறையில் இருக்கும். இந்த கால கட்டத்தில் ஆழ்கடலில் மீன்பிடிக்கும் விசைப்படகுகள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்படும். இதனால் மார்க்கெட்டுகளில் பெரியவகை மீன்கள் விற்பனைக்கு வராது. மேலும் மீன்களின் விலையும் வழக்கத்தைவிட சற்று அதிகமாக இருக்கும்.

    இந்நிலையில் பழவேற்காடு மற்றும் மீஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் சிப்பிக்கறி (மட்டி) விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

    இந்த சிப்பிகள் எண்ணூர், காட்டுப்பள்ளி, பழவேற்காடு பகுதிகளில் ஏரிக்கரை ஓரம் அதிகமாக காணப்படும். இதனை தற்போது ஏராளமான தொழிலாளர்கள் சிப்பிகளை மூட்டை மூட்டையாக சேகரித்து விற்பனை செய்து வருகின்றனர்.

    ஒருகிலோ சிப்பி ரூ.50 முதல் 60 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனை இல்லத்தரசிகள் போட்டி போட்டு வாங்கி செல்கின்றனர். இது மூல வியாதிக்கு நல்லது என்றும், நோய் எதிர்ப்பு சக்தி இதில் அதிகம் இருப்பதாகவும் நம்பப்படுகிறது. இதனால் தற்போது ஏராளமான பெண்கள் சிப்பிக்கறி விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதுகுறித்து சிப்பிக்கறி வாங்கிய பெண்கள் கூறும்போது, சிப்பியை நன்கு கழுவி வேகவைத்தால் இரண்டாகப் பிரியும். பின்னர் அதனுள் இருக்கும் சதைப் பகுதியை எடுத்து மசாலா போட்டு கிரேவி வைத்து சாப்பிட்டால் அதன் ருசி தனிதான். மேலும் கோடை வெயிலுக்கு குளிர்ச்சி. மூல வியாதிக்கு அருமருந்தாகும். நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகம் உள்ளது. குழந்தை, கர்ப்பிணி பெண்கள் சாப்பிட்டால் நல்லது. இதனால்அதிகமான பெண்கள் போட்டி போட்டு வாங்கி செல்கின்றனர் என்றார்.

    இதுகுறித்து 5 வருடமாக சிப்பி விற்பனை செய்து வரும் மீஞ்சூரை அடுத்த பட்டமந்திரி பகுதியை சேர்ந்த சாவித்ரி என்பவர் கூறும்போது, சிப்பி எனப்படும் மட்டிக்கறி விற்பனை தற்போது அதிகமாக உள்ளது. எண்ணூர் கடற்கரை, காட்டுப்பள்ளி ஏரிகளில் இந்த மட்டிகள் அதிகம் காணப்படும். இதனை சாப்பிட மூலம் நோய் உள்ளவர்கள் அதிகம் விரும்புவார்கள். உடல் சூடு தணியவும் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும் நல்லது. தற்போது மீனின் விலை அதிகம் காணப்படுவதால் மட்டிக் கறியை அதிகமானோர் வாங்குகிறார்கள்.

    இதுகுறித்து மீன்வளத்துறை உதவி இயக்குனர் வேலனிடம் கேட்டபோது பொதுவாக இவற்றை மட்டி என்ற சிப்பி எனவும் பிளாம்ஸ் எனவும் கூறுவார்கள். இவை அண்ணாமலைச்சேரி எண்ணூர் காட்டுப்பள்ளி பழவேற்காடு ஏரிகளில் மண்ணில் புதைந்து கூட்டம் கூட்டமாக காணப்படும். இவற்றைப் பிடித்து சமையல் செய்யும்போது உப்பு தண்ணீரில் மற்றும் மஞ்சள் தண்ணீரில் நன்கு கழுவி சமையல் செய்ய வேண்டும். பச்சை மட்டிக் கறி என்ற வகை ஸ்டார் ஓட்டல்களில் பயன்படுத்தி விற்பனை செய்யப்படுகிறது என்றார்.

    • கோவக்காய் ரூ.40, முள்ளங்கி ரூ. 40, பச்சை மிளகாய் ரூ.60,சுரக்காய் ரூ.10க்கும் விற்பனை செய்யப்பட்டது.
    • வெள்ளகோவிலில் ஞாயிறு தோறும் வாரச்சந்தை செயல்படுகிறது,

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவிலில் ஞாயிறு தோறும் வாரச்சந்தை செயல்படுகிறது, வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் கிடைக்கும் காய்கறிகள் மற்றும் பயிர் வகைகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். இதை பொதுமக்கள் மற்றும் நூல் மில்களில் தங்கி வேலை செய்யும் ஊழியர்கள் தங்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறி மற்றும் மளிகை சாமான்களை வாங்கிச்செல்வார்கள்.

    இன்று வார சந்தையில் தக்காளி ஒரு கிலோ ரூ.15, கத்தரிக்காய் ரூ.40, பீர்க்கங்காய் ரூ.60. பெரிய வெங்காயம் ரூ.20 சின்ன வெங்காயம் ரூ. 30. உருளைக்கிழங்கு ரூ.30, பீட்ரூட் ரூ.40, புடலை காய் ரூ.50, முட்டை கோஸ் ரூ.30, பீன்ஸ் ரூ.80, கேரட் ரூ.50, பாவற்காய் ரூ.60,வெண்டைக்காய் ரூ.60, இஞ்சி ரூ.130, அவரைக்காய் ரூ.100, நேரோ காய் ரூ. 40, கோவக்காய் ரூ.40, முள்ளங்கி ரூ. 40, பச்சை மிளகாய் ரூ.60,சுரக்காய் ரூ.10க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இத்தகவலை வாரச்சந்தை காய்கறி வியாபாரி குமார் தெரிவித்தார்.

    • பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களிடையே அறிவுசார்ந்த புத்தகம் வாசிக்கும் பழக்கம்
    • இளைஞர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் அறிவார்ந்த நிலைக்கு உயர்த்துவதே ஆகும்.

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் இணைந்து நடத்திய புத்தகத் திருவிழா நிறைவுநாள் நிகழ்ச்சி கோணம் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

    இதில் கலெக்டர் ஸ்ரீதர் கலந்து கொண்டு பேசியதாவது:-

    தமிழ்நாடு அரசு இளைஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களிடையே அறிவுசார்ந்த புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை வழக்கப்படுத்திக்கொள்ளும் நோக்கில் அனைத்து மாவட்டங்களிலும் அதற்கென நிதி ஒதுக்கீடு செய்து, புத்தகத்திருவிழா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

    மாவட்டத்தில் கடந்த 14-ந் தேதி தொடங்கிய புத்தக திருவிழா நேற்று வரை தொடர்ந்து 11 நாட்கள் நடந்தது. ஒவ்வொரு நாளும் மாவட்டத்திற்குட்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் புத்தக அரங்குகளை பார்வை யிட்டதோடு, தொடர்ந்து 11 நாட்கள் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் சுமார் ரூ. 50 லட்சம் மதிப்பில் புத்தகங்கள் வாங்கி பயனடைந்துள்ளனர்.

    வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, பள்ளிக்கல்வித்துறையில் எண்ணும், எழுத்தும் மற்றும் இல்லம் தேடி கல்வித்திட்டம், சமூகநலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, பொதுசுகாதாரத்துறை, காவல்துறை, வனத்துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் அரசின் நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

    தமிழ்நாடு அரசால் நடத்தப்படும் இந்த புத்தகக் கண்காட்சியின் முக்கிய நோக்கம் நமது சமுதாயத்தை குறிப்பாக, குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் அறிவார்ந்த நிலைக்கு உயர்த்துவதே ஆகும். புத்தகம் வாசிப்பானது நம்முடைய தனிப்பட்ட வளர்ச்சியில் ஒரு பெரிய பங்கு வகிப்பதால், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை புத்தகம் வாசிப்பதில் ஊக்குவிக்க வேண்டும்.

    மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பொதுமக்கள் மாணவ-மாணவியர்கள் உள்ளிட்ட அனைவரும் புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை ஊக்கப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    மாவட்ட மைய நூலகம் பல்லாயிரக்கணக்கான அறிவுசார்ந்த நூலகங்களை கொண்டு செயல்பட்டு வருகிறது. அதை போல் கிராமப்புற மற்றும் நகர்புற பகுதிகளில் 21 கிளை நூலகங்கள் செயல்பட்டு வருகிறது. மேலும் கிராமப்புறங்களில் மொத்தம் 109 கிராமபுற நூலகங்கள் செயல்பட்டு வருகிறது.

    தற்போதைய தொழில்நுட்பவியல் காலத்தில் மாவட்ட மைய நூலகங்கள் டிஜிட்டல் மையமாக மாற்றும் திட்டம் கொண்டுவரப்பட்டு, மாவட்ட மைய நூலகம் முழுமை யாக கணினி மயமாக்கப்பட் டுள்ளது. அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் நூலகங்கள் மற்றும் வாசிப்பு அறைகள் அமைக்கப்பட்டுள்ளதோடு, ஒவ்வொரு ஆண்டும் நூலகங்களை புதுப்பிக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, இளைய தலை முறையினர், பள்ளி கல்லூரி மாணவ, மாணவியர்கள் உள்ளிட்ட அனைவரும் அறிவு சார்ந்த புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொண்டு வாழ்வில் ஏற்றம் பெற வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

    விழாவில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு நினைவு பரிசினையும், வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள், கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட சிறந்த படைப்பாளிகள் மற்றும் நன்கொடை வழங்கியவர்களுக்கு நினைவு பரிசு வழங்கினார்கள்.

    நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சிவப்பிரியா, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேது ராமலிங்கம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுப்பையா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்புகழேந்தி, மாவட்ட வழங்கல் அலுவலர் விமலா ராணி, தாசில்தார்கள்ராஜேஷ் (அகஸ்தீஸ்வரம்), வினை தீர்த்தான் (தோவாளை), தனிவட்டாட்சியர் கோலப்பன் உட்பட துறைசார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.

    • பள்ளத்தூர் மோட்டார்ஸ் எலக்ட்ரிக் பைக் விற்பனை நிறுவனம் திறப்பு விழா நடந்தது.
    • மகரிஷி பள்ளி தாளாளர் அஜய் யுக்தேஷ் உள்பட தொழிலதிபர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    காரைக்குடி

    காரைக்குடி வ.உ.சி ரோடு செல்வி பெட்ரோல் பங்க் வளாகத்தில் பள்ளத்தூர் மோட்டார்ஸ் எல்.எல்.பி. எலக்ட்ரிக் பைக் நிறுவனம் தொடக்க விழா நடந்தது. நிர்வாகிகளான செல்வி குரூப் ஆப் கம்பெனி மாணிக்கம், விசாலம் சிட்பண்ட் இயக்குநர் அரு.உமாபதி வரவேற்றனர்.

    விசாலம் சிட்பண்ட் நிர்வாக இயக்குநா் அரு. விஸ்வநாதன் முன்னிலை வகித்தார். தொழிலதிபர் பி.எல்.படிக்காசு நிறுவனத்தை திறந்துவைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். முதல் வாகனத்தை தொழில் அதிபர் பெரியசாமி பெற்றுக்கொண்டார்.

    இதில் விசாலம் சிட் பண்ட் இயக்குநர் அரு. மீனாட்சி, தொழில் அதிபர் எம்.எம்.கணேசன், ஓ.பி. ஆர்.ராமையா, சன்னா ராமலிங்கம், எஸ்.கே.எம்.பெரியகருப்பன், கோவை ஒயிட் அண்டு கோ வெள்ளையன், தொழில் வணிகக்கழக தலைவர் சாமிதிராவிடமணி, பல் மருத்துவர் பிரபாகரன், பிரபு டெண்டல் இயக்குநர் டாக்டர் பிரபு, வக்கீல் கமல் தயாளன், மூன் ஸ்டார்

    சி.சி.டி. லட்சுமணன், எஸ்.எல்.பி பிரிண்டர்ஸ் சரவணன், மகரிஷி பள்ளி தாளாளர் அஜய் யுக்தேஷ் உள்பட தொழிலதிபர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • காய்கறிகள் மற்றும் பயிர் வகைகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
    • தங்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறி மற்றும் மளிகை சாமான்களை வாங்கிச்செல்வார்கள்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவிலில் ஞாயிறு தோறும் வாரச்சந்தை செயல்படுகிறது.வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் கிடைக்கும் காய்கறிகள் மற்றும் பயிர் வகைகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். இதை பொதுமக்கள் மற்றும் நூல் மில்களில் தங்கி வேலை செய்யும் ஊழியர்கள் தங்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறி மற்றும் மளிகை சாமான்களை வாங்கிச்செல்வார்கள்.

    நேற்று வார சந்தையில் தக்காளி ஒரு கிலோ ரூ.20, கத்தரிக்காய் ரூ.60, பீர்க்கங்காய் ரூ.60. பெரிய வெங்காயம் ரூ.20, சின்ன வெங்காயம் ரூ. 40. உருளைக்கிழங்கு ரூ.30, பீட்ரூட் ரூ.40, புடலங்காய் ரூ.60, முட்டை கோஸ் ரூ.20, பீன்ஸ் ரூ.100, கேரட் ரூ.40, பாவற்காய் ரூ.60,வெண்டைக்காய் ரூ.60, இஞ்சி ரூ.140, அவரைக்காய் ரூ.100, நேரோ காய் ரூ. 40, கோவக்காய் ரூ.40, முள்ளங்கி ரூ. 40, பச்சை மிளகாய் ரூ.60,சுரக்காய் ரூ.10க்கும் விற்பனை செய்யப்பட்டது. இத்தகவலை வாரச்சந்தை காய்கறி வியாபாரி குமார் தெரிவித்தார்.

    ×