search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 224037"

    • இல்லம் தேடிச்சென்று பண்னை காய்கறிகள் விற்பனை செய்திடும் வகையில் நடமாடும் காய்கனி விற்பனை அங்காடி முதல் -அமைச்சரால் கடந்த 7-ந்தேதி சென்னையில் தொடங்கி வைக்கப்பட்டது.
    • முதற்கட்டமாக சேலம் மாநகராட்சி பகுதிக்கு 10 வார்டுகளுக்கு 1 நடமாடும் காய்கனி வாகனம் என 6 வாகனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை மேயர் ராமச்சந்திரன், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    சேலம்:

    தமிழ்நாடு அரசு வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை மூலம் நுகர்வோர்களுக்கு இல்லம் தேடிச்சென்று பண்னை காய்கறிகள் விற்பனை செய்திடும் வகையில் நடமாடும் காய்கனி விற்பனை அங்காடி முதல் -அமைச்சரால் கடந்த 7-ந்தேதி சென்னையில் தொடங்கி வைக்கப்பட்டது.

    முதற்கட்டமாக சேலம் மாநகராட்சி பகுதிக்கு 10 வார்டுகளுக்கு 1 நடமாடும் காய்கனி வாகனம் என 6 வாகனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை மேயர் ராமச்சந்திரன், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் காய்கறிகளின் தரம் மற்றும் விற்பனை விலை குறித்தும் கேட்டறிந்தார்.

    இல்லம் தேடி வரும் நடமாடும் காய்கனி அங்காடியில் அனைத்து வகையான காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படும் மதிப்பு கூட்டப்பட்ட கடலை எண்ணை, நல்லெண்ணை, தேங்காய் எண்ணை போன்ற வீட்டு உபயோகத்திற்கான பொருட்களும் விற்பனை செய்யப்படும். நடமாடும் காய்கனி வாகனத்தில் நுகர்வோருக்கு உழவர் சந்தை விலையிலேயே காய்கறிகள் கிடைக்கும். எனவே பொதுமக்கள் தரமான காய்கறிகளை மலிவான விலையில் பெற்று பயன்பெறுமாறு மேயர் மற்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்நிகழ்ச்சியில் துணை மேயர் சாரதாதேவி, இணை இயக்குநர் வேளாண்மை சிங்காரம், துணை இயக்குநர் ( வேளாண் வணிகம் ) பாலசுப்பிரமணியன், விற்பனை குழு முதுநிலை செயலாளர் கண்ணன், தாதகாப்பட்டி உழவர் சந்தை நிர்வாக அலுவலர் மகேந்திரன் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்கள் சிவகுமார், தனசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • புதன் சந்தையில் நேற்று காலை 5 மணிக்கு தொடங்கி மாலை 3 மணி வரை மாட்டுச்சந்தை நடந்தது.
    • மொத்தம் ரூ. 2 கோடிக்கு மாடுகள் விற்பனை நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்த புதன் சந்தையில் நேற்று காலை 5 மணிக்கு தொடங்கி மாலை 3 மணி வரை மாட்டுச்சந்தை நடந்தது.

    மாடுகளை வாங்கவும், விற்கவும் கேரளா, கர்நாடகா மாநிலம் மற்றும் கோவை, சேலம், ஈரோடு, நாமக்கல், நீலகிரி, திண்டுக்கல் உட்பட பல மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வந்திருந்தனர்.

    இதில் இறைச்சி மாடு ரூ.15,000-க்கும், கன்று குட்டி ரூ. 8000-க்கும், பசு மாடு ரூ.20,000-க்கும், எருமை மாடு ரூ.25,000-க்கும் விற்பனை

    செய்யப்பட்டது. மொத்தம் ரூ. 2 கோடிக்கு மாடுகள் விற்பனை நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • இந்த விற்பனைக் கூடத்தில் சனிக்கிழமைதோறும் தேங்காய், கொப்பரை விற்பனை நடைபெற்று வருகிறது.
    • சராசரி விலை ரூ.84.65.ஏலத்தில் மொத்தம் 105 விவசாயிகள், 12 வணிகா்கள் பங்கேற்றனா்.

    வெள்ளகோவில்:

    வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் 6.70 டன் வேளாண் விளைபொருள்கள் விற்பனையாயின.இந்த விற்பனைக் கூடத்தில் சனிக்கிழமைதோறும் தேங்காய், கொப்பரை விற்பனை நடைபெற்று வருகிறது.இந்த வார ஏலத்துக்கு 10,371 தேங்காய்கள் வரத்து இருந்தது. இவற்றின் எடை 4,430 கிலோ. விலை கிலோ ரூ.20.80 முதல் ரூ.30.70 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.29.65.74 மூட்டைகள் கொப்பரை வரத்து இருந்தது. எடை 2,282 கிலோ. விலை கிலோ ரூ.66.15 முதல் ரூ.88.65 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.84.65.ஏலத்தில் மொத்தம் 105 விவசாயிகள், 12 வணிகா்கள் பங்கேற்றனா். ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ.3.11 லட்சம் என விற்பனைக் கூட அதிகாரி தங்கவேல் தெரிவித்தாா்.

    • கடும் பனிப்பொழிவால் வரத்து குறைவு
    • தோவாளை சந்தையில் விற்பனை அமோகம்

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் மலர் சந்தை செயல்பட்டு வருகிறது.

    இந்த சந்தைக்கு தோவாளை, ஆரல்வாய் மொழி, காவல்கிணறு, புதியம்புத்தூர், மாடநாடார் குடியிருப்பு பகுதிகளில் இருந்து பிச்சிப்பூவும், மதுரை, மானாமதுரை, கொடைரோடு, திண்டுக்கல், சங்கரன்ேகாவில், ராஜ பாளையம் ஆகிய பகுதிகளில் இருந்து மல்லிகைப் பூவும் வருகின்றன.

    இதேபோல், சேலத்தில் இருந்து அரளிப்பூ, பெங்களூரூவில் இருந்து மஞ்சள் கேந்தி, பட்டர் ரோஸ் போன்றவையும், திருக்குறுங்குடி, அம்பாசமுத்திரம், தென்காசி, புளியங்குடி பகுதிகளில் இருந்து பச்சை, துளசி போன்றவையும், ஆரல்வாய்மொழி, தோவாளை, ராஜாவூர், மருங்கூர் பகுதிகளில் இருந்து கோழிப்பூ, அரளி உள்ளிட்ட மற்ற பூக்களும் தினமும் விற்பனைக்கு வரு கின்றன. அவை மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு மட்டுமின்றி, கேரள மாநிலத்துக்கும் அனுப்பி வைக்கப்படு கின்றன.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக தோவளை சந்தைக்கு பூக்களின் வரத்து குறைந்து உள்ளது. பனிப்பொழிவு காரணமாக பூக்கள் வரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையில் நாகர்கோவில் சவேரியார் ஆலய திருவிழா மற்றும் சுபமுகூர்த்த தினம் போன்றவை காரணமாக பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. ஆனால் வரத்து குறைவாக இருப்பது பூக்களின் விலை உயர்வை ஏற்படுத்தி உள்ளது.

    இன்று தோவாளை சந்தையில் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ. 4 ஆயிரத்துக்கு விற்கப்பட்டது. பிச்சிப்பூ ரூ.ஆயிரத்து 750-க்கும், சம்பங்கி ரூ.250க்கும், சேலம் அரளி ரூ.220-க்கும், உள்ளூர் அரளி ரூ.200-க்கும், பட்டர் ரோஸ் ரூ. 200-க்கும், முல்லைப்பூ ரூ. ஆயிரத்து 700-க்கும், கனகாம்பரம் ரூ.700-க்கும், கோழிப்பூ ரூ.80-க்கும்,மஞ்சக் சேந்தி ரூ.60-க்கும், சிகப்பு கேந்தி ரூ.80-க்கும் விற்பனையானது.

    இதேபோல், மரிக்கொழுந்து, தாமரை, அருகம்புல் போன்றவற்றின் விலையும் உயர்ந்துள்ளது.

    • தேங்காய் பூவில் அதிகமான ஊட்டச்சத்து இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி இருமடங்கு அதிகரிக்கும்.
    • ஜீரண சக்தி குறைவாக இருந்தால் தேங்காய் பூ சிறந்த மருத்துவமாகவும் பயன்படுகிறது என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

    பல்லடம் :

    தேங்காய் பூ என்பது முற்றிய தேங்காயில் உண்டாகும் கரு வளர்ச்சி ஆகும். தேங்காய் பூவில் தேங்காய் மற்றும் இளநீரில் இருப்பதைவிட அதிக சத்துக்கள் உள்ளது. இளநீரில் இருக்கும் சதை பற்றினை போல ருசி இருக்கும் என்பதால் இதை சர்க்கரை உடன் கலந்து விற்பனை செய்கின்றனர்.மேலும் தேங்காய் பூவில் அதிகமான ஊட்டச்சத்து இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி இருமடங்கு அதிகரிக்கும்.

    தேங்காய் பூ இன்சுலின் சுரப்பை தூண்டுகிறது. இதனால் ரத்தத்தில் அதிகப்படியான சர்க்கரை கட்டுப்படுத்த இயல்கிறது. ஜீரண சக்தி குறைவாக இருந்தால் தேங்காய் பூ சிறந்த மருத்துவமாகவும் பயன்படுகிறது என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

    தேங்காய் பூ கிடைக்க முற்றிய தேங்காயை மண்ணில் புதைத்து வைக்க வேண்டும். பின்னர் 20 நாட்களுக்கு பின்னரே தேங்காய் குருத்து வளர ஆரம்பிக்கும். அந்தப் பக்குவத்தில் தேங்காய் உடைத்தால் தேங்காய் பூ கிடைக்கும். பல்லடம்- தாராபுரம் ரோட்டில் வேலுமணி என்ற விவசாயி தேங்காய் பூ விற்பனை செய்து வருகிறார்.

    இது குறித்து அவர் கூறுகையில், முன்பு சரிவர விற்பனை இல்லாமல் இருந்தது. தற்போது தேங்காய் பூவின் மகத்துவம் தெரிய வந்துள்ளதால்,மக்கள் விரும்பி உண்கின்றனர்.மேலும் வாகனங்களில் செல்வோர் வாகனங்களை நிறுத்தி தேங்காய் பூவை சர்க்கரையுடன் வாங்கி சாப்பிட்டு விட்டு செல்கின்றனர் என்று அவர் தெரிவித்தார்.

    • கார்த்திகை தீப சிறப்பு கிப்ட் பேக் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது
    • அஸ்வீன்ஸ் பேக்கரியில்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் அஸ்வின்ஸ் ஹோம் ஸ்பெஷல் ஸ்வீட் அன்ட் பேக்கரியில் கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு சிறப்பு கிப்ட் பேக் விற்பனை துவங்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து அஸ்வின்ஸ் குழும தலைவர் கணேசன், தலைமை செயல் அலுவலர் அஸ்வின் ஆகியோர் கூறுகையில்,

    பெரம்பலூரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் அஸ்வின்ஸ் ஹோம் ஸ்பெஷல் ஸ்வீட் அண்டு பேக்கரி நிறுவனம் பெரம்பலூர் - கல்பாடி பிரிவு சாலையிலுள்ள அஸ்வின்ஸ் ஹோம் ஸ்பெஷல் நிறுவன தொழிற்சாலையுடன் ஸ்வீட்ஸ் அன்ட் ஸ்நாக்ஸ், பேக்கரி ஆகியவை செயல்பட்டு வருகிறது. மேலும், திருச்சி, சென்னை, துறையூர், சேலம், ஆத்தூர், உளுந்தூர்பேட்டை, பெரம்பலூர், அரியலூர், பாண்டிச்சேரி உள்பட 26 கிளைகளுடன் பேக்கரி செயல்பட்டு வருகிறது.

    எங்களது நிறுவனத்தின் மூலம் அனைத்து பண்டிகை நாட்களையும் சிறப்பாக கொண்டாடிடும் வகையில் அந்தந்த பண்டிகைக்கு ஏற்ப இந்திய பண்பாடு மற்றும் கலாச்சாரத்துக்கு உகந்த, இனிப்பு மற்றும் பட்சணங்களை பாரம்பரிய முறையில் தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறோம்.

    இதன்படி வரும் 6ம்தேதி கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் வீட்டில் நிவேதனம் செய்து வழிபட வசதியாக அவல் பொரி உருண்டை, நெல்பொரி உருண்டை, அதிரசம், கடலை உருண்டை, மனவலம் உருண்டை, அகல்விளக்கு ஆகியவை அடங்கிய சிறப்பு கிப்ட் பேக் விற்பனையை தொடங்கியுள்ளது.

    தற்போது கிப்ட் பேக் தேவை படுவோருக்கு முன்பதிவு செய்யப்படுகிறது.அஸ்வின்ஸ் உணவுத் தொழிற்சாலையின் அவுட் லெட் மற்றும் அனைத்து கிளைகளிலும் தரமாகவும், சுவையாகவும், குறைந்த விலையில் கார்த்திகை தீப சிறப்பு கிப்ட் பேக் கிடைக்கும் என தெரிவித்தனர்.

    • பெண்களிடம் இருந்து பணத்தை ஏமாற்றி சென்று விடுகின்றனர்.
    • குறைந்த விலையில் வீட்டு உபயோக பொருட்களை விற்பனை செய்ய வரும் நபர்களை நம்பி ஏமாற வேண்டும்.

    திருப்பூர் :

    கடந்த சில நாட்களாக குறைந்த விலையில் வீட்டு உபயோக பொருட்களை விற்பனை செய்வதாக கூறி வீட்டில் தனியாக இருக்கும் பெண்களிடம் பணத்தை ஏமாற்றும் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக திருமுருகன்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் தலைமையில் போலீசார் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    அதில் வடமாநில இளைஞர்கள் உள்பட ஒருசிலர் வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களிடம் சென்று, குறைந்த விலையில் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்வதாக நைசாக பேச்சு கொடுக்கின்றனர். பின்னர் ஏதாவது மூளைச்சலவை செய்து பெண்களிடம் இருந்து பணத்தை ஏமாற்றி சென்று விடுகின்றனர். இதுபோன்ற ஒருசில சம்பவங்கள் திருப்பூரில் நடைபெற்றுள்ளது.

    எனவே வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள், அதுபோன்று குறைந்த விலையில் வீட்டு உபயோக பொருட்களை விற்பனை செய்ய வரும் நபர்களை நம்பி ஏமாற வேண்டும். சந்தேகப்படும்படியாக அந்த நபர்கள் இருந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கலாம் என்றும்திருமுருகன்பூண்டி போலீசார் பெண்கள் உள்பட பொதுமக்களுக்கு சமூக வலைத்தளங்கள் மூலமாக அறிவுரையுடன் கூடிய விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளனர்.

    • 56 மாடுகள் மொத்தம் ரூ.20 லட்சத்துக்கு விற்பனையாயின.
    • ரூ.76 ஆயிரத்துக்கு கன்றுக்குட்டியுடன் காங்கேயம் இன மயிலை வகைப் பசு விற்பனையானது.

    காங்கயம் : 

    திருப்பூா் மாவட்டம் காங்கயம் அருகே நத்தக்காடையூா்-பழையகோட்டையில் காங்கேயம் இன மாடுகளுக்கான பிரத்யேக சந்தை ஞாயிற்றுக்கிழமைதோறும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த வாரம் நடைபெற்ற சந்தையில் மாடுகள், காளைகள், பசு மாடுகள், இளங்கன்றுகள் என 117 மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் 56 மாடுகள் மொத்தம் ரூ.20 லட்சத்துக்கு விற்பனையாயின.இந்த சந்தையில் அதிகபட்சமாக ரூ.76 ஆயிரத்துக்கு கன்றுக்குட்டியுடன் காங்கேயம் இன மயிலை வகைப் பசு விற்பனையானது.

    • சேலம் புதிய பஸ் நிலையம் அருகே புத்தகத் திருவிழாவினை அமைச்சர் கே.என். நேரு கடந்த 20-ந்தேதி தொடங்கி வைத்தார்.
    • சேலம் மாவட் டத்தைச் சேர்ந்த உள்ளூர் படைப்பாளர்களின் 456 புத்தகங்கள் ரூ.63,578/-க்கு விற்பனை செய்யப் பட்டுள்ளன.

    சேலம்:

    சேலம் புத்தக திருவிழா வில் இதுவரை ரூ.1.50 கோடி மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையானது.

    சேலம் மாவட்ட பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் சேலம் புதிய பஸ் நிலையம் அருகே புத்தகத் திருவிழாவினை அமைச்சர் கே.என். நேரு கடந்த 20-ந்தேதி தொடங்கி வைத்தார்.

    இந்த புத்தகத் திருவிழா வருகிற 30-ந்தேதி வரை தொடர்ந்து 11 நாட்களுக்கு நடைபெறுகின்றது. இப்புத்தகக் கண்காட்சி யானது தினமும் காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை நடைபெறுகிறது. இதில் தென்னிந்தியா முழுவதிலும் இருந்து பல்வேறு பதிப்பாளர்கள் மற்றும் புத்தக வெளியீட்டாளர்கள் கலந்துகொள்ளும் வகையில் 210 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

    சேலம் புத்தகத் திருவிழா வினை இதுவரை சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தக ஆர்வலர்கள், மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டுகளித்தனர். இதுவரை ரூ.1.50 கோடி மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, சேலம் மாவட் டத்தைச் சேர்ந்த உள்ளூர் படைப்பாளர்களின் 456 புத்தகங்கள் ரூ.63,578/-க்கு விற்பனை செய்யப் பட்டுள்ளன.

    இங்கு தினமும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான பல்வேறு போட்டிகள் மற்றும் பொதுமக்களைக் கவரும் வகையிலான கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது. அந்தவகையில், 9-ம் நாளான இன்று காலை பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்கேற்கும் ஸ்பெல் பீ போட்டி, பென்சில் ஓவியப்போட்டிகள் மற்றும் வினாடி வினாப் போட்டிகள் நடத்தப்பட்டன.

    தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் புல்லாங்குழல் இசை நிகழ்ச்சியும், கலைமாமணி மைக்கேல் வழங்கும் டிரம்ஸ் இசை நிகழ்ச்சி, கராத்தே நிகழ்ச்சி மற்றும் திருச்செங்கோடு டாக்டர்.ஜெயக்குமாரின் சாக்ஸஃபோன் இசை நிகழ்ச்சியும் நடைபெற வுள்ளது.

    மாலையில் சேலம் பெரி யார் பல்கலைக்கழ கத்தின் துணை வேந்தர் ஜெகநாதன் "காலநிலை மாற்றம்" என்ற தலைப்பிலும், கவிஞர் ஆத்தூர் சுந்தரம் "தட்டி எழுப்பும் தாலாட்டுகள்" என்ற தலைப்பிலும் பேசுகிறார்கள். 

    • கரூரில் குல்லா, ஸ்வெட்டர் விற்பனை சூடுபிடித்துள்ளது
    • குளிர் காலத்தை முன்னிட்டு

    கரூர்:

    வடகிழக்கு பருவமழை காரணமாக கரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக குளிர்ந்த காற்றும் பரவலாக மழையும் பெய்து வருகிறது. பகல் நேரத்தில் குளிர்ந்த காற்று வீசுவதாலும், தற்போது குளிர் காலம் வர உள்ளதாலும் பொதுமக்கள் ஸ்வெட்டர், குல்லா போன்ற ஆடைகளை விரும்பி வாங்க துவங்கியுள்ளனர். இதனால் திருப்பூர், பெங்களூர், டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள் கரூரில் முகாமிட்டுள்ளனர். குறிப்பாக கரூரில் கோவை சாலை, கலெக்டர் அலுவலக சாலை மற்றும் வர்த்தக நிறுவனங்கள் நிறைந்த ஜவகர் பஜார் உள்ளிட்ட பகுதிகளில் ஸ்வட்டர், தலைக்கு அணியும் குல்லா விற்பனை சூடு பிடித்துள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு அளவுகளில் ஸ்வட்டர் 350 ரூபாய் லிருந்து 850 வரையிலும், குல்லா 80 ரூபாயிலிருந்து 120 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

    • போலி வியாபாரிகள் தரமற்ற விதைகளை விவசாயிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
    • சேமிப்பு கிடங்கு ஏற்பாடு செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் இன்று மாவட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார்.

    அப்போது தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் நிர்வாகிகள் ஏராள மானோர் கலெக்டர் அலுவல கத்துக்கு வந்தனர்.

    திடீரென அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு, திருவோணம், மதுக்கூர், பட்டுக்கோட்டை மற்றும் வல்லம் பகுதிகளில் எண்ணெய் வித்து பயிரான நிலக்கடலை ஆண்டுதோறும் சாகுபடி செய்யப்படுகிறது.

    ஆனால் இதற்கான விதை தரமான முறையில் வழங்கப்படவில்லை , போலி வியாபாரிகள் தரமற்ற விதைகளை விவசாயிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

    இதனை கண்டித்தும், விவசாயிகளுக்கு தரமான விதை சான்று பெற்ற வியாபாரிகள் மட்டும் விற்பனை செய்வதை உறுதி செய்ய வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்.

    மேலும் கோரிக்கைகளை நிறைவேற்றுவதோடு விவசாயிகள் உற்பத்தி செய்யும் நிலக்கடலையை கட்டுப்படியான விலை கிடைத்திடவும், சேமிப்பு கிடங்கு ஏற்பாடு செய்தி டவும் நடவடிக்கைஎடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

    பின்னர் கோரிக்கைகள் அடங்கிய மனுவை தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் கொடுத்தனர்.

    • டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை மதுபானகடைகள் அனைத்தும் மூட வேண்டும்.
    • மேற்படி நாட்களில் மதுபா னங்கள் ஏதும் விற்பனை செய்யக்கூடாது.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம், முத்துப்பேட்டை தர்ஹா பெரிய கந்தூரி விழா தொடர்பாக 25.11.2022 கொடியேற்றம் மற்றும் 04.12.2022 அன்று சந்தனகூடு நடைபெறவுள்ளதை முன்னிட்டு 25.11.2022 வெள்ளி கிழமை மற்றும் 04.12.2022 ஞாயிற்று கிழமை ஆகிய இரண்டு நாட்களுக்கு முத்துப்பேட்டை மற்றும் முத்துப்பேட்டையை சுற்றியுள்ள பகுதிகளில் செயல்படும் டாஸ்மாக் மதுபான சில்லரைவிற்பனை மதுபா னகடைகள் அனைத்தும் மூடவும் அன்றைய நாட்களை விடுமுறை நாட்களாக அறிவித்து முத்துப்பேட்டை மற்றும் முத்துப்பேட்டையை சுற்றியுள்ள பகுதிகளில் செயல்படும் டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை மதுபானகடைகள் அனைத்தும் மூடவும், மேற்படி நாட்களில் மதுபா னங்கள் ஏதும் விற்பனை செய்யக்கூடாது என தொடர்புடைய டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை மதுபான கடைகளின் மேற்பார்வையாளர்களுக்கு ஆணையிடப்படுகிறது.

    மேற்படி ஆணையை செயல்படுத்த தவறும்ப ட்சத்தில் தொடர்புடைய மதுபானக் கடைகளின் மேற்பார்வையாளர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட கலெக்டர்காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    ×