என் மலர்
நீங்கள் தேடியது "விலை குறைவு"
- நாமக்கல் மண்டலத்தில் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன.
- இதன் மூலம் நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 3½ கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
நாமக்கல்:
தேசிய அளவில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் முட்டை தொழிலுக்கு பெயர் பெற்று திகழ்கிறது நாமக்கல். இங்கிருந்து வெளி மாநிலங்களுக்கும், நாடுகளுக்கும் முட்டை விற்பனைக்காக அனுப்பப்படுகின்றன.நாமக்கல் மண்டலத்தில் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு 4½ கோடிக்கும் மேற்பட்ட முட்டையின கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 3½ கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நிர்ணயிக்கும் விலைக்கு பணியாளர்களிடமிருந்து வியாபாரிகள் முட்டை கொள்முதல் செய்கின்றனர். இந்த முட்டை கொள்முதல் விலையானது தற்போது திருவிழா பண்டிகை காலங்களில் தேவையை கருத்தில் கொண்டு நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த மாதம் 1-ந் தேதி ரூ.4.10 -க்கு முட்டை கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
இது படிப்படியாக உயர்ந்து நேற்று முன்தினம் கொள்முதல் விலை 510 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது.முட்டை கொள்முதல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு முட்டை கோழி பண்ணையாளர்கள் துணைத் தலைவர் வாங்கிலி சுப்பிரமணியம் கூறியதாவது:-
தமிழகத்தில் முட்டை கொள்முதல் விலை 510 காசாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தாலும் நாமக்கல் முட்டை விற்பனையை நிர்ணய ஆலோசனை குழு 30 காசு குறைத்து விற்க பரிந்துரைக்கிறது. அதன்படி ஒரு முட்டையை 480 காசுக்கே வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். ஆனால் ஹைதராபாத் மண்டலத்தில் கொள்முதல் விலை 500 காசாக நிர்ணயம் செய்யப்பட்ட அதே விலைக்கு வியாபாரிகள் விற்பனை செய்கின்றனர்.
இதனால் விலை குறைவாக உள்ள தமிழக முட்டைக்கு அதிக அளவில் ஆர்டர் வழங்குகின்றனர் .தினமும் 10 லோடு என 35 லட்சம் முட்டைகள் இங்கிருந்து மும்பை, கல்கத்தா போன்ற வட மாநிலங்களில் உள்ள முக்கிய பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. வட மாநிலங்களில் கொள்முதல் விலையை உயர்த்தும்போது தமிழகத்திலும் முட்டை விலை உயர்த்தப்படுகிறது. இனிவரும் நாட்களிலும் முட்டை விலை உயர வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- மழையால் செடிகள் மட்டுமின்றி, காய் மற்றும் பழங்கள் அழுகியுள்ளதோடு பறிக்க முடியாமலும் வீணாகி வருகிறது.
- மழைக்கு தாங்காது என்பதால், வெளி மாவட்ட விவசாயிகள் உடுமலையிலிருந்து தக்காளி கொள்முதல் செய்ய தயக்கம் காட்டுகின்றனர்.
உடுமலை:
உடுமலை பகுதிகளில் தக்காளி சாகுபடி பிரதானமாக உள்ளது. கொடி மற்றும் செடி முறையில், ஏறத்தாழ 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இப்பகுதிகளில் விளையும் தக்காளி, கேரள மாநிலம் மற்றும் பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்குச்செல்கிறது.
வட கிழக்கு பருவ மழை தீவிரமடைந்து கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருவதால், இதனை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கடுமையாக பாதித்துள்ளனர். மழையால் செடிகள் மட்டுமின்றி, காய் மற்றும் பழங்கள் அழுகியுள்ளதோடு பறிக்க முடியாமலும் வீணாகி வருகிறது.
மழையில் பறிக்கும் தக்காளி சந்தைக்கு வருவதற்குள் அதிக அளவு அழுகி விடுகிறது. இதனால் அதன் மகசூல் பெருமளவு பாதித்துள்ளது. இதையடுத்து சாகுபடி செய்த விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.செடிகளிலிருந்து பறிக்கும் தக்காளிகளை உடுமலை பகுதிகளிலுள்ள ரோட்டோரங்களிலும் சந்தை வளாகத்திலும் வீசிச்செல்லும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது.
இப்பகுதிகளில் விளையும் தக்காளி உடுமலை நகராட்சி சந்தை மற்றும் தனியார் விற்பனை மையங்களுக்கு கொண்டு சென்று ஏல முறையில் விற்பனை செய்யப்படுகிறது.மகசூல் சரிந்து, விற்பனைக்கு வரும் தக்காளி வரத்து பெருமளவு குறைந்தாலும் அது விலை சரிவை சந்தித்துள்ளதால் விவசாயிகள் பாதித்துள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன் 14 கிலோ கொண்ட பெட்டி 700 ரூபாய் வரை விற்றது. தற்போது கொடி தக்காளி ஒரு பெட்டி 160 ரூபாய் வரையும், செடி தக்காளி 100 முதல், 120 ரூபாய் வரை மட்டுமே விற்று வருகிறது.மழைக்கு தாங்காது என்பதால், வெளி மாவட்ட விவசாயிகள் உடுமலையிலிருந்து தக்காளி கொள்முதல் செய்ய தயக்கம் காட்டுகின்றனர்.
- கடந்த 2 வாரங்களுக்கு ஒரு கிலோ முட்டைக்கோஸ் ரூ.30-க்கு விற்பனையானது.
- விலை வீழ்ச்சி காரணமாக விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும் நிலை ஏற்பட்டு உள்ளது என்றார்.
கோத்தகிரி,
கோத்தகிரியில் முட்டைக்கோஸ் கொள்முதல் விலை குறைந்தது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தபடியாக கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ், மேரக்காய், நூல்கோல், பீன்ஸ், காலிபிளவர் உள்ளிட்ட மலைக்காய்கறிகள் மற்றும் இங்கிலீஷ் காய்கறிகள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. அறுவடை செய்யப்படும் காய்கறிகள் உள்ளூர் மற்றும் மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளுக்கு சரக்கு வாகனங்கள் மூலம் விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது. கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பப்பட்டு வருகிறது. கோத்தகிரி அருகே ஈளாடா, கதவுத்தொரை, கட்டபெட்டு, குடுமனை, நெடுகுளா உள்ளிட்ட பகுதிகளில் முட்டைகோஸ் அதிகளவில் பயிரிடப்பட்டது. கடந்த 2 வாரங்களாக கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் விளைநிலங்களில் அறுவடைக்கு தயாரான நிலையில் முட்டைக்கோஸ் அழுகி வீணாகும் நிலை ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் முன்கூட்டியே முட்டைக்கோஸ் அறுவடை செய்து வருகின்றனர். தற்போது முட்டைகோஸ் கிலோவுக்கு ரூ.15 முதல் ரூ.20 வரை மட்டுமே விலை கிடைத்து வருகிறது. கடந்த 2 வாரங்களுக்கு ஒரு கிலோ முட்டைக்கோஸ் ரூ.30-க்கு விற்பனையானது. இதற்கிடையே கொள்முதல் விலை குறைந்து உள்ளதால், விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர். இதுகுறித்து கட்டபெட்டு பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் கூறுகையில், சமீபகாலமாக விதை, உரம் மற்றும் இடுபொருட்கள் விலையேற்றம், தொழிலாளர்கள் பற்றாக்குறை, வனவிலங்குகள் தொல்லை போன்றவற்றை எதிர்கொண்டு வருகிறோம். மேலும் வங்கிக் கடன் பெற்று விவசாயம் செய்து வருகிறோம். முட்டைக்கோஸ் கிலோவுக்கு ரூ.20-க்கு மேல் கொள்முதல் விலை கிடைத்தால் மட்டுமே விவசாயிகளுக்கு கட்டுப்படியாக வாய்ப்பு உள்ளது. ஆனால், விலை வீழ்ச்சி காரணமாக விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும் நிலை ஏற்பட்டு உள்ளது என்றார்.
- கோயம்பேடு சந்தைக்கு 35 லாரிகளில் தக்காளி உட்பட மொத்தம் 450-க்கும் மேற்பட்ட லாரிகளில் இன்று காய்கறிகள் விற்பனைக்கு குவிந்தன.
- தற்போது தக்களியின் விலை மெல்ல மெல்ல குறைய தொடங்கி உள்ளது.
போரூர்:
சென்னை கோயம்பேடு, காய்கறி மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, உத்தரபிரதேசம் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது.
இன்று காலை கோயம்பேடு சந்தைக்கு 35 லாரிகளில் தக்காளி உட்பட மொத்தம் 450-க்கும் மேற்பட்ட லாரிகளில் இன்று காய்கறிகள் விற்பனைக்கு குவிந்தன.
ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பரவலாக பெய்த மழையால் உற்பத்தி பாதிக்கப்பட்டதால் கோயம்பேடு சந்தைக்கு வரும் தக்காளியின் வரத்து பாதியாக குறைந்து போனதால் கடந்த மாத இறுதியில் தக்காளி விலை திடீரென அதிகரிக்க தொடங்கியது.
ஒரு கிலோ தக்காளி ரூ.130ஐ கடந்து விற்கப்பட் டது. தற்போது தக்களியின் விலை மெல்ல மெல்ல குறைய தொடங்கி உள்ளது. மொத்த விற்பனையில் அதன் விலை ரூ.100-க்கு கீழ் குறைந்து விற்கப்படுகிறது.
நேற்று 40 லாரிகளில் இருந்த தக்காளியின் வரத்து இன்று 35லாரிகளாக குறைந்து உள்ளது. இதனால் இன்று மொத்த விற்பனையில் முதல் ரக தக்காளி ஒரு கிலோ ரூ.90-க்கும் சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ ரூ110-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதேபோல் வரத்து குறைவால் தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வந்த பீன்ஸ், பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றின் விலை தற்போது படிப்படியாக குறைய தொடங்கி உள்ளது. இன்று மொத்த விற்பனையில் ஒரு கிலோ பீன்ஸ் ரூ.70-க்கும், இஞ்சி ஒரு கிலோ ரூ.210-க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ ரூ.60-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பச்சை காய்கறிகளான கத்தரிக்காய், அவரைக்காய், வெண்டைக்காய், பாகற்காய், முருங்கைக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலை கணிசமாக குறைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் பெரிய வெங்காயம் விலையும் சரிந்து மொத்த விற்பனையில் கிலோ ரூ.20-க்கும், சில்லரை விற்பனையில் ரூ.25-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இனி வரும் நாட்களில் மழை பாதிப்பு ஏதுமின்றி உற்பத்தி நடக்கும் பட்சத்தில் தக்காளி உள்ளிட்ட பச்சை காய்கறிகள் விலை அடுத்த வாரத்தில் மேலும் குறைய வாய்ப்பு உள்ளதாக மொத்த வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.
- நாணல் தட்டுகளை பறித்து வந்து விற்பனை செய்து வருவார்.
- தற்போது 500 ரூபாய்க்கு குறைவாகவே விலை போகின்றது.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் தவிட்டுப்பாளையம் நஞ்சப்பா வீதி பகுதியைச் சேர்ந்தவர் பூசாரி காளியப்பன் (வயது 52). கூலித் தொழிலாளியன இவர் அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ஓடைகளில் முளைத்திருக்கும் நாணல் தட்டுகளை பறித்து வந்து விற்பனை செய்து வருவார்.
இந்த நாணல் தட்டுகள் கட்டைப்பை தயாரிக்கவும், தக்காளி நாற்றுகள் சாயாமல் இருப்பதற்கும், வெற்றிலை கொடி தலைவதற்கும் பயன்படுத்தப்படுகின்றது. 200 குச்சிகள் கொண்ட ஒரு கட்டின் விலை கடந்த சில வாரங்களுக்கு முன் 700 ரூபாய்க்கு விற்பனையாகி வந்தது.
தற்போது 500 ரூபாய்க்கு குறைவாகவே விலை போகின்றது.
மேலும் இதுகுறித்து கூளித்தொழிலாளியான பூசாரி காளியப்பன் கூறுகையில்,
நாணல் தட்டுகளை ஓடைகளில் பறிக்கும் ேபாது அந்த பகுதிகளில் பாம்பு மற்றும் விஷ ஜந்துக்கள் அதிகளவில் இருக்கும்.
அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் பெரிய கட்டுகளாக கட்டி தலையில் சுமந்தபடி அங்கிருந்து கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றோம். தற்போது கிடைக்கும் இந்த விலை உழைப்புக்கு ஏற்ற கூலி கிடைக்கவில்லை.
மேலும் வாரத்தில் 3 அல்லது 4 நான்கு கட்டுகள் மட்டுமே விற்பதால் போதிய வருமானம் கிடைக்கவில்லை என வேதனையுடன் அவர் தெரிவித்தார்.
- விளைவதற்கு ஏற்ற நிலமாக உள்ளதால் கூடுதலாக பயிர் செய்கிறோம்.
- விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு அரசே உரிய விலை நிர்ணயிக்க வேண்டும்.
செங்கோட்டை:
தென்காசி மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.150-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் செங்கோட்டை சுற்றுவட்டார பகுதியில் இருந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அவர்கள் சின்ன வெங்கயம் அதிக அளவில் பயிரிட்டிருந்ததால், விரைவாக அவற்றை எடுத்து மார்க்கெட்டுகளில் விற்பனை செய்தனர்.
இந்நிலையில் திடீரென கடந்த 2 நாட்களாக சின்ன வெங்காயம் விலை ரூ.70 ஆக குறைந்துவிட்டது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். அதே நேரத்தில் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். செங்கோட்டையை அடுத்த இலத்தூர், அச்சன்புதூர், சீவநல்லூர், கரிசல் குடியிருப்பு, சிவராம பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1,000 ஏக்கருக்கு மேல் செய்யவேண்டிய சின்ன வெங்காயம் சாகுபடியானது தென்மேற்கு பருவமழை பொய்த்ததால் குறைந்துவிட்டது. அங்கு நிலத்தடி நீரை மட்டுமே நம்பி உள்ள சுமார் 500 ஏக்கர் அளவிலான நிலங்களில் மட்டுமே சின்ன வெங்காயம் பயிரிடப்பட்டிருந்தது.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், எங்கள் பகுதியில் நெல்லுக்கு அடுத்தப்படியாக சின்ன வெங்காயம் அதிகளவில் சாகுபடி செய்கிறோம். 2 மாத பயிரான சின்ன வெங்காயத்துக்கு தண்ணீர் அதிகம் தேவையில்லை. வாரம் ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினாலே போதும்.
விளைவதற்கு ஏற்ற நிலமாக உள்ளதால் கூடுதலாக பயிர் செய்கிறோம். ஒரு ஏக்கருக்கு உழுவது, பயிரிடுவது, பூச்சிக்கு மருந்து அடித்தல், உரம் களையெடுத்தல், மழை பொய்த்தால் விலைக்கு வாங்கி தண்ணீர் பாய்ச்சல் உள்ளிட்ட வகையில் அறுவடை வரை ரூ.50 ஆயிரம் முதல் ரூ.75 ஆயிரம் வரை கூடுதலாக செலவாகிறது.
அதற்கு தகுந்த மாதிரி அறுவடை தொடங்கிய காலத்தில் சென்ற மாதம் விலை ரூ.140 வரை விலை கிடைத்ததால் லாபகரமாக இருந்த நிலையில் தற்போது அறுவடை முடிந்த சின்ன வெங்காயம் ரூ.70-க்கும் விலை போகிறது. விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு அரசே உரிய விலை நிர்ணயிக்க வேண்டும். மழை காலங்களில் உரிய முறையில் சின்ன வெங்காயத்தை பாதுகாக்க வழிவகை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.400-க்கு விற்பனை
- இந்த சந்தையில் பூக்கள் மாவட்டம் மற்றும் மாநிலம் முழுவதும் விற்பனையாகி வருகிறது
கன்னியாகுமரி :
ஆரல்வாய்மொழி அருகே தோவாளையில் பூ சந்தை உள்ளது. இந்த சந்தைக்கு ஆரல்வாய்மொழி, தோவாளை, குமாரபுரம், ராதாபுரம், பழவூர், மாடநாடார் குடியிருப்பு ஆகிய பகுதிகளில் இருந்து பிச்சிப்பூவும், சங்கரன்கோவில், கோவில்பட்டி, வத்தலகுண்டு, கொடைரோடு, திண்டுக்கல், மதுரை, மானாமதுரை ஆகிய பகுதிகளில் இருந்து மல்லிகை பூவும், பெங்களூர் மற்றும் ஓசூர் பகுதியில் இருந்து மஞ்சள் கிரேந்தியும், பட்ட ரோஷும், திருக்கண்ணங்குடி, தென்காசி, அம்பாசமுத்திரம் ஆகிய ஊர்களில் இருந்து பச்சையும், துளசியும் வருகிறது. அதேபோல் சேலம் பகுதியில் இருந்து அரளிப்பூவும், தோவாளை, ராஜாவூர், மருங்கூர் சுற்றுவட்டார பகுதியில் இருந்து அரளிப்பூவும், சம்மங்கி, கோழி கொண்டை, அருகம்புல், தாமரை உள்ளிட்ட பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.
இந்த சந்தையில் பூக்கள் மாவட்டம் மற்றும் மாநிலம் முழுவதும் விற்பனையாகி வருகிறது. ஆடி மாதம் என்பதால் பூக்கள் விலை குறைந்து காணப்படுகிறது.
பூக்களின் விலை கிலோ ஒன்றுக்கு வருமாறு:-
பிச்சிப்பூ ரூ.600, மல்லிகைப்பூ ரூ.400, சம்பங்கி ரூ.125, ரோஸ் பாக்கெட் ரூ.20, பட்டரோஸ் ரூ.110, மஞ்சள் கிராந்தி ரூ.60, சிவப்பு கிராந்தி ரூ.70 என அனைத்து பூக்களும் விலை குறைந்தே காணப்படுகிறது. இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், வருகிற 19-ந்தேதி முதல் கேரளா முழுவதும் ஓணம் கொண்டாட இருப்பதால் பூக்கள் விலை உயர வாய்ப்புள்ளதாக தெரிவித்தனர்.
- தமிழகம் முழுவதும் வரத்து குறைவு உள்ளிட்ட காரணங்களால் கடந்த சில வாரங்களாக தக்காளி ஒரு கிலோ ரூ.200 வரை விற்பனையானது.
- இந்த நிலையில், நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் பழைய பைபாஸ் சாலையில் தக்காளி கிலோ ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்டது.
நாமக்கல்:
தமிழகம் முழுவதும் வரத்து குறைவு உள்ளிட்ட காரணங்களால் கடந்த சில வாரங்களாக தக்காளி ஒரு கிலோ ரூ.200 வரை விற்பனையானது. இதையடுத்து தமிழக அரசு ரேசன் கடைகளில் ரூ.60-க்கு தக்காளி விற்பனை செய்தது. தற்போது கடைகளில் தக்காளி கிலோ ரூ.80 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் பழைய பைபாஸ் சாலையில் தக்காளி கிலோ ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்டது. விலை குறைவாக விற்பனை செய்யப்பட்டதால் அந்த வழியாக சென்றவர்கள் தக்காளியை போட்டி போட்டு வாங்கி சென்றனர். இதனால் சிறிது நேரத்திலேயே அனைத்தும் விற்று தீர்ந்தது. வெளி மாவட்டங்களில் இருந்து வாங்கி சரக்கு ஆட்டோக்களில் வைத்து விற்பனை செய்து வருகின்றனர். இந்த விலை குறைவால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- இதுவரை இல்லாத அளவுக்கு தக்காளி கிலோ ரூ.200 வரை விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது.
- தருமபுரி உழவர் சந்தையில் கிலோ தக்காளி 23 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.
தருமபுரி,
நாடு முழுவதும் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்ததால், தக்காளி விளைச்சல் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனால், அண்டை மாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து மிகவும் குறைந்தது.
இதனால் தருமபுரி , கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தக்காளி விலை கிலோ ரூ.130 முதல் ரூ.160 வரையும், சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இதுவரை இல்லாத அளவுக்கு தக்காளி கிலோ ரூ.200 வரை விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் முதல் தக்காளியின் வரத்து அதிகரிக்க உயர்ந்ததால் விலை படிப்படியாக குறைந்து கிலோ 40 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. மேலும் தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, மாரண்ட அள்ளி, பெல்ரம்பட்டி, கரகூர், திருமல்வாடி, உசிலம்பட்டி, 5-வது மைல், உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளிலும், அதேபோல் ராயக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளிலும் தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் மேலும் தக்காளி விலை குறைந்து 15 கிலோ கூடை தக்காளி 400 ரூபாயும் , 28 கிலோ எடை உள்ள ஒரு பெட்டி தக்காளி 800 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது.
இன்று தருமபுரி உழவர் சந்தையில் கிலோ தக்காளி 23 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. தக்காளி வரத்து அதிகரித்து விலை தொடர்ந்து குறைந்து வருவதால் இல்லதரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து அதிகரிக்க தொடங்கினால் மேலும் விலை குறைய வாய்ப்பு ள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
- வாரம் தோறும் சனிக்கிழமை அதிகாலையில் ஆடுகள், கோழிகள் விற்பனை சந்தை நடைபெறும்.
- அதிகளவில் ஆடு -கோழிகள் வாங்க ஆர்வம் காட்டாததால் விலையில் கடும் வீழ்ச்சியடைந்தது
குண்டடம்
குண்டடத்தில் வாரம் தோறும் சனிக்கிழமை அதிகாலையில் ஆடுகள், கோழிகள் விற்பனை சந்தை நடைபெறும். இந்த சந்தைக்கு குண்டடம், காங்கயம், தாராபுரம், ஊதியூர், மடத்துக்குளம், பல்லடம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் வெள்ளாடுகள், செம்மறியாடுகள் மற்றும் கோழிகள் ஆகியவைகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இவற்றை ஈரோடு, கோவை, திருப்பூர். பொள்ளாச்சி, கேரளா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் வந்து வாங்கிச் செல்கின்றனர்.
இது குறித்து ஆடு வியாபாரி மகேந்திரன் கூறியதாவது:-
கடந்த மாதங்களில் விறுவிறுப்பாக ஆடுகள் கோழிகள் விற்பனையானது. ஆனால் தற்போது புரட்டாசி மாதம் என்பதால் இறைச்சி சாப்பிடுவோர் எண்ணிக்கை குறைந்துள்ளதால் கடைகளில் இறைச்சி விற்பனை மந்தமாக உள்ளதால் வியாபாரிகள் குறைந்த அளவு எண்ணிக்கையில் ஆடு -கோழிகளை வாங்கிச்செல்கின்றனர். இம் மாதம் இறைச்சி கடை வியாபாரிகள் குறைந்த அளவே சந்தைக்கு வந்திருந்தனர்.
இதனால் அதிகளவில் ஆடு -கோழிகள் வாங்க ஆர்வம் காட்டாததால் விலையில் கடும் வீழ்ச்சியடைந்தது. கடந்த வாரம் 10 கிலோ எடைகொண்ட ஆடு ரூ. 6ஆயிரம் வரை விற்பனையானது. இந்த வாரம 5 ஆயிரத்திற்கு விற்பனையானது. அதேபோல் கோழி கடந்த வாரம் ஒரு கிலோ ரூ. 300 கிலோ முதல் ரூ.350 வரை விற்பனையானது. இந்த வாரம் ரூ.300 வரை மட்டுமே விற்பனையானது.
தீபாவளி பண்டிகை நெருங்கும் சமயத்தில் விலை கூடும்.இவ்வாறு அவர் கூறினார்.
- கடலூர் துறைமுகம் கடந்த பல நாட்களாக பொதுமக்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது
- நெத்திலி மீன் ஒரு கிலோ 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
கடலூர்:
புரட்டாசி மாதம் பெரு மாளுக்கு உகந்த மாதம் என்பதால் பொதுமக்கள் விரத முறையை கடைப் பிடித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று கடைசி வார சனிக்கிழமை முடிந்த நிலையில் இன்று காலை முதல் கடலூர் துறைமுகம் மற்றும் இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அலை மோதியது. தங்களுக்கு தேவையான மீன் மற்றும் இறைச்சிகளை வாங்கி சென்றனர். கடலூர் துறைமுகம் கடந்த பல நாட்களாக பொதுமக்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட் டது.இன்று அதிகாலை 3 மணி முதல் வியாபாரி களும், பொதுமக்களும் ஏராளமான அளவில் அங்கு குவிந்தனர். மேலும் தங்களுக்கு தேவையான மீன் வகைகளை போட்டி போட்டுக் கொண்டு வாங்கி சென்றனர்.
இதில் வஞ்சிரம் கிலோ 700 ரூபாய்க்கும், சங்கரா மீன் 300 ரூபாய் முதல் 350 ரூபாய் வரைக்கும், பன்னி சாத்தான் மீன் 350 ரூபாய்க்கும், பாறை மீன் 350 ரூபாய்க்கும், கனவா வகை மீன்கள் 250 ரூபாய்க்கும், நெத்திலி மீன் ஒரு கிலோ 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதேபோல இறைச்சி கடைகளிலும் பொதுமக்கள் கூட்டம் காலை முதலே அதிகரித்து காணப்பட்டது. கடந்த வாரத்தை விட இந்த வாரம் மீன்கள் விலை சற்று குறைவாக விற்பனை செய்யப்பட்டது.
- மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து 45 லாரிகளில் வெங்காயம் விற்பனைக்கு குவிந்தது.
- பெரிய வெங்காயம் ஒரு கிலோ ரூ.65 வரையிலும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.110வரையிலும் விற்பனை ஆகி வருகிறது.
போரூர்:
கோயம்பேடு மார்க்கெட்டிற்கு கடந்த சில நாட்களாக வரத்து குறைவு காரணமாக சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயத்தின் விலை திடீரென அதிகரிக்க தொடங்கியது. சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ130வரையிலும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ ரூ.85வரையிலும் விற்பனை செய்யப்பட்டது.
தினசரி 70டன் வரை விற்பனைக்கு வரும் சின்ன வெங்காயத்தின் வரத்து திடீரென பாதியாக குறைந்து போனதால் அதன் விலை அதிகரித்தது. அதேபோல் மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள பெரிய வெங்காயத்தின் அறுவடை தொடர்ந்து தாமதமாகி வருவதால் வெங்காயத்தின் வரத்து குறைந்து அதன் விலை திடீரென 2 மடங்கு வரை உயர்ந்தது.
இந்நிலையில் கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து வெங்காயம் அதிகளவில் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வர தொடங்கி உள்ளன. இன்று மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து 45 லாரிகளில் வெங்காயம் விற்பனைக்கு குவிந்தது.
இதையடுத்து தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வந்த பெரிய வெங்காயத்தின் விலை மீண்டும் குறைய தொடங்கியுள்ளது. இன்று மொத்த விற்பனையில் ரகத்தை பொறுத்து பெரிய வெங்காயம் ஒரு கிலோ ரூ.40 முதல் ரூ.50 வரை விற்கப்படுகிறது. வெளி மார்கெட்டில் உள்ள காய்கறி மற்றும் மளிகை கடைகளில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ ரூ.65 வரையிலும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.110வரையிலும் விற்பனை ஆகி வருகிறது.
இதேபோல் பீன்ஸ், அவரைக்காய், கேரட், கத்தரிக்காய் உள்ளிட்ட பச்சை காய்கறிகளின் விலையும் குறைந்து உள்ளது. மொத்த விற்பனையில் பீன்ஸ் ஒரு கிலோ ரூ.50-க்கும், அவரைக்காய் ரூ.40-க்கும், ஊட்டி கேரட் ரூ.20-க்கும், உஜாலா கத்தரிக்காய் ரூ.10-க்கும் விற்கப்படுகிறது.