search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எச்சரிக்கை"

    • மின்வேலி அமைப்பது இந்தியா மின்சார சட்டம் 2003-ன் படி தண்டனைக்குரிய குற்றமாகும்.
    • தரமான ஐ.எஸ்.ஐ. குறியீடு பெற்ற மின்சாதனங்களை உபயோகிக்கவும்.

    கோவை,

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் கோவை மண்டல தலைமை பொறியாளர் வினோதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விவசாய நிலங்களில் காட்டு விலங்குகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதை தவிர்க்கவும், மனிதர்கள் விவசாய நிலங்களில் அத்துமீறி நுழைவதை தடுக்கவும், சட்டத்திற்கு புறம்பாக மின்வேலி அமைக்கப்பட்டதினால் மின்வேலிகளில் மனிதர்களும், விலங்குகளும் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

    மின் வேலி அமைப்பது இந்தியா மின்சார சட்டம் 2003-ன் படி தண்டனைக்குரிய குற்றமாகும். விவசாய நிலங்களில் மின் வேலி அமைத்தால் சம்பந்தப்பட்ட மின் இணைப்பு துண்டிக்கப்படுவதுடன் சம்பந்தப்பட்ட மின் நுகர்வோர் மீது குற்ற வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். எனவே விவசாய நிலங்களில் மின் வேலி அமைக்கக் கூடாது என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் அந்த அறிவிப்பில் கூறி உள்ளார்.

    பொதுமக்கள் மின் விபத்துகளை தவிர்ப்பது குறித்து அவர் வெளியிட்டுள்ள மற்றொரு அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    தரமான ஐ.எஸ்.ஐ. குறியீடு பெற்ற மின்சாதனங்களை உபயோகிக்கவும், மின் பணிகளை அங்கீகரிக்கப்பட்ட எலக்ட்ரீசியனை கொண்டு பணி செய்யுமாறும் கேட்டுக் கொள்கிறோம்.

    மின் கம்பிகள் மற்றும் இழுவை கம்பிகளில் ஈரத்துணிகளை உலர்த்தக்கூடாது. மின் நுகர்வோர்கள் தங்களது மின் வயரிங்குகளை முறையாக ஆய்வு செய்து பழுதடைந்த வயரிங்குகளை புதுப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    மின் நுகர்வோர் தங்களது வீடுகள், வளாகத்தில் மின் இணைப்பில் ஆர்சிடி, இஎல்சிபி-யை பொருத்து மாறு கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள்.

    கட்டுமான பணிகள் மேற்கொள்ளும் போது அருகில் மின் பாதைகள் இருப்பின் உரிய இடை வெளியோடும், உரிய பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றியும் பணிகள் மேற்கொண்டு விபத்தினை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • உரிமம் புதுப்பிக்காத கல்குவாரிக்கு கலெக்டர் சீல் வைத்தார்.
    • கல்குவாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ஜெயசீலன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் கலெக்டர் ஜெயசீலன் செங்குன்றாபுரம் பகுதியில் ஆய்வுக்காக சென்றார். அவர் அங்கிருந்த கல்குவாரி ஒன்றில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அந்த குவாரிக்கான உரிமம் 2022-ம் ஆண்டே முடிந்து விட்டதும், உரிமத்தை புதுப்பிக்காமல் சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து கல்குவாரிக்கு உடனடியாக சீல் வைக்கவும், அங்கிருந்த எந்திரங்கள் மற்றும் வாகனங்களை பறிமுதல் செய்யவும் கலெக்டர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் தாசில்தார் பாஸ்கரன் மற்றும் அதிகாரிகள் அந்த கல்குவாரிக்கு சீல் வைத்தனர். இதைத்தொடர்ந்து மாவட்டம் முழுவதும் அனுமதியின்றி செயல்படும் கல்குவாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ஜெயசீலன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • தற்காக சமீப காலங்களில் மின்வேலி அமைக்கும் செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
    • தகுந்த ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:-கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காப்பு காடுகள் மற்றும் காப்பு நிலங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள நிலங்களில் சட்டத்திற்கு புறம்பாக மின்வேலி மற்றும் கம்பி வேலிகள் அமைப்பதால் வன விலங்குகள், மனித உயிரிழப்பு ஏற்படுகிறது. இவ்வாறு விவசாயிகள் தங்களின் நிலங்களில் சாகுபடி செய்துள்ள பயிர்களை வனவிலங்குகள் சேதப்படுத்துவதை தடுப்ப தற்காக சமீப காலங்க ளில் மின்வேலி அமைக்கும் செயல்களில் ஈடுபடுகிறார்கள். இதனால் பொதுமக்கள் மற்றும் விலங்குகளின் உயிர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் யானைகள் உயிரிழப்பு ஏற்படுகிறது. இவ்வாறு மின்வேலி அமைத்தல் வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972 மற்றும் தமிழ்நாடு மின்சார சட்டம் 2003 பிரிவு 138-ன்படி மிகக் கடுமையான தண்ட னைக்குரிய குற்றமாகும்.

    எனவே கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் மின்வேலி அமைக்கக்கூடாது என கடுமையாக எச்சரி க்கப்படு கிறார்கள். இந்த எச்சரிக்கையை மீறி மின்வேலி அமைத்தால் அதனால் ஏற்படும் அனைத்து விளைவு களுக்கும் சம்மந்தப்பட்ட நபரே பொறுப்பேற்க நேரிடும். மேலும் மின்வாரிய மற்றும் வன அதிகாரி கள் ஆய்வு மேற்கொள்ளும் போது மின்வேலி அமைத்தி ருப்பது கண்டறியப்பட்டால் சம்மந்தப்பட்ட நபர்கள்மீது சட்டப்படி கடுமையான குற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே விவசாயிகள் மின்வேலி அமைப்பதை தவிர்த்து மற்ற உயிர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய மாவட்ட நிர்வாகத்திற்கு தகுந்த ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • போலீசார் குறித்து தவறாக பதிவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
    • சமூக வலைதளங்களில் பதிவிடுவோர் மீது நடவடிக்கை

    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட காவல் துறையினர் மீது தவறாக சமூக வலைத்தளங்களில் பதிவிடுபவர்கள் மீது சட்டப் படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா தெரிவித்தார்.இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது, அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட சொந்தமான இடத்தை அதே பகுதியை சேர்ந்த கார்த்திக்குமார் என்பவர் ஆக்கிரமித்ததை தொடர்ந்து, கடந்த 7-ந் தேதி அந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. அதனை திசை திருப்பும் விதமாக காவல் துறையினர் குறித்து தவறான பிரசாரங்களை பல்வேறு இந்து இயக்கங்கள் மூலம் சிவனடியார் மீது தாக்குதல் என்று தவறாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு சமூக அமைதி மற்றும் சட்டம் ஒழுங்குக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பொய் பிரசாரங்களை செய்து வருவதாக தெரியவருகிறது.இது போன்ற பதிவுகளை பதிவிடுபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இதுபோன்று மதத்தின் பெயரால் மக்களின் கவனத்தை திசை திருப்பி தங்களது சுயலாபத்திற்காக சமூக நல்லிணக்கத்தை குலைக்க முயலும் சமூக விரோதிகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று எச்சரித்துள்ளனர்.

    • படுகொலை செய்யப்பட்டதாக பீகாரில் உள்ள நாளிதழ்களில் செய்தி வெளியானது.
    • வீட்டின் குளியலறை அருகே கையின் நரம்பை அறுத்துக் கொண்டு அவர் தற்கொலை செய்து கொண்டார்.

    திருப்பூர் :

    பீகார் மாநிலம் மதுபானியை சேர்ந்த இளைஞர் திருப்பூரில் படுகொலை செய்யப்பட்டதாக பீகாரில் உள்ள நாளிதழ்களில் செய்தி வெளியானது. இந்த செய்தியை ஆய்வு செய்தபோது மதுபானியைச் சேர்ந்த ஷம்பு முகையா என்ற இளைஞர் திருப்பூரில் வேலை பார்த்து வந்தார்.

    ஷம்பு முகையா தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து இருந்தார். தனது தங்கையின் திருமணம் நின்று விட்டதால் அவர் வருத்தத்தில் இருந்து உள்ளார். இதனால் கடந்த 5-ந் தேதி தனது வீட்டின் குளியலறை அருகே கையின் நரம்பை அறுத்துக் கொண்டு அவர் தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை பார்த்த மனைவி சரண்யா போலீசில் புகார் அளித்துள்ளார்.

    ஆனால் ஷம்பு முகையா மீன் வாங்கும்போது கூறிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார் என்று செய்திகள் வெளியாகி இருக்கிறது. இது முற்றிலும் தவறானது. இதுபோன்று பொய்யான செய்தியை பரப்பிய நபர் மீது திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் தெரிவித்துள்ளார்.

    • கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு மின்சார வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
    • அனுமதி இன்றி மின்கம்பத்தில் கட்டப்பட்டுள்ள கேபிள் டிவி வயர்களை மின்வாரியமே அப்புறப்படுத்தும் என கூறியுள்ளது.

    கமுதி

    கமுதி மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் பகிர்மானம் விஜயன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் கமுதி உபகோட்டத்திற்கு உட்பட்ட பகுதியான கமுதி நகர், கமுதி தெற்கு, கமுதி வடக்கு மற்றும் பெருநாழி அபிராமம் பிரிவு உட்பட்ட பகுதிகளில் மின்வாரிய அனுமதி இன்றி மின் கம்பத்தில் கட்டப்பட்டுள்ள கேபிள் டிவி வயர்கள் மற்றும் சாதனங்களை மின் விபத்துகளை தவிர்க்கும் பொருட்டு உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் கேபிள் டிவி உரிமையாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தவறும் பட்சத்தில் பொதுமக்கள், மாணவ-மாணவியர் நலன் கருதி மின் கட்டமைப்புகளில் அனுமதி இன்றி மின்கம்பத்தில் கட்டப்பட்டுள்ள கேபிள் டிவி வயர்களை மின்வாரியமே அப்புறப்படுத்தும் என இதன் மூலம் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • எங்கள் மாவட்டத்தில் வட மாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக பணியாற்றி வருகிறார்கள்.
    • சமூக வலைதளங்கள் அனைத்தையும் காவல் துறையினர் கண்காணித்து வருகிறார்கள்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் இந்தியில், தனது சமூக வலைதள டிவிட்டரில் ஒரு வீடியோவை நேற்று இரவு பதிவிட்டார். அதில் அவர் கூறியதாவது:-

    நான் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரான சரோஜ் குமார் தாக்கூர் பேசுகிறேன். எங்கள் மாவட்டத்தில் வட மாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக பணியாற்றி வருகிறார்கள்.

    பல்வேறு வட மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் எங்கள் மாவட்டத்தில் பாதுகாப்புடன் இருக்கிறார்கள். இந்த நிலையில் சமூக வலைதளங்களில் சிலர் எப்போதோ, வேறு எந்த மாநிலத்திலோ நடந்த வீடியோக்களை போட்டு வட மாநில தொழிலாளர்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை என்பதை போன்று அவதூறு பரப்பி வருகிறார்கள்.

    தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் பாதுகாப்புடன் நன்றாக உள்ளார்கள். அவதூறு வீடியோக்களை யாரும் பரப்ப கூடாது. அவ்வாறு பரப்புபவர்கள் மீது காவல் துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும். சமூக வலைதளங்கள் அனைத்தையும் காவல் துறையினர் கண்காணித்து வருகிறார்கள். இவ்வாறு அந்த வீடியோவில் அவர் பேசி உள்ளார்.

    • போக்குவதற்கு இடையூறாக நிறுத்தும் வாகனங்களுக்கு அபராத தொகை விதிக்க வேண்டும்.
    • பொன்னேரி நகராட்சியில் முக்கியமான வீதிகளில் பேனர்கள் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளன.

    பொன்னேரி:

    பொன்னேரி பகுதியில் கடந்த சில நாட்களாக கடுமையான வாகன நெரிசல் காரணமாக போக்குவரத்து பல மணி நேரமாக பாதிக்கப்பட்ட நிலையில் 2 கிலோமீட்டர் தூரம் வாகனங்கள் வரிசையில் நின்றன.

    இதனால் விபத்து உயிர் இழப்பு, தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ் செல்ல வழி இல்லாமல் அவதிப்பட்டனர்.

    இது குறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்த நிலையில் நகராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை, வியாபாரிகள் சங்கம் மற்றும் பொதுமக்கள் வியாபாரிகளுடன் கலந்தாலோசனை கூட்டம் எம்.எல்.ஏ. துரை சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது.

    இதில் சாலை ஓர நடைபாதை வியாபாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றவும் சாலையில் குறிக்கப்பட்ட அளவிற்கு கயிறுகள் கட்டி அளவீடு செய்யவும், போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் எனவும், போக்குவதற்கு இடையூறாக நிறுத்தும் வாகனங்களுக்கு அபராத தொகை விதிக்க வேண்டும் எனவும், பள்ளி கல்லூரி நேரங்களில் போலீசார் வாகன நெரிசலை சரிபடுத்த வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது.

    பொன்னேரி நகராட்சியில் முக்கியமான வீதிகளில் பேனர்கள் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளன எனவும் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டுள்ளதாகவும் இனிவரும் காலங்களில் அனுமதி பெற்று ஒரு நாள் மட்டும் வைத்துக் கொள்ளவும் மீறினால் நகராட்சி ஊழியர்களைக் கொண்டு காவல்துறை நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டது.

    பொன்னேரி தேரடி தெருவில் கடைகளில் நடைபாதையில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகளை ஆய்வு செய்து போக்குவரத்திற்கு இடையூறாக இருந்தால் அபராததொகை மற்றும் கடைகள் அகற்றப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டு மீறினால் நகராட்சி நிர்வாகம் காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • சிவில் சப்ளை சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
    • நேரடி நெல் கொள்முதல் நிலைய அலுவலர்களுடன் கலந்தாய்வு

    திருச்சி, 

    திருச்சி மண்டல குடி–மைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா திருச்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலைய அலுவலர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசுகையில், நேரடி நெல் கொள்முதல் நிலை–யங்களில் பணியாற்றும் அலுவலர்கள் விவசாயிகளி–டம் உரிய ஆவணங்களை பெற்றுக்கொண்டு நெல்லை கொள்முதல் செய்ய வேண் டும்.மேலும் கையூட்டு வாங் காமல், விவசாயிகளை காக்க வைக்காமலும் செயல்பட வேண்டும். குறிப்பாக வியா–பாரிகளிடமிருந்து நெல்லை கொள்முதல் செய்யக் கூடாது. இந்த உத்தர–வுகளை மீறி முறைகேட்டில் ஈடுபடும் அலுவலர்கள் மீது கடுமையான சட்ட நட–வடிக்கைகள் எடுக்கப்படும் என்றார். கூட்டத்தில் திருச்சி சரக துணை போலீஸ் சூப்பிரண்டு சுதர்சன், நுகர் பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் பாலமுருகன், தரகட்டுப்பாட்டு மேலா–ளர் வனிதாமணி, இன்ஸ்பெக் டர் கோபிநாத் மற்றும் சப்-–இன்ஸ்பெக்டர் கண்ண–தாசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • ரவுடி பட்டியலில் உள்ளவர்களை கண்காணிக்கவும், அவர்களின் நடவடிக்கைகள் குறித்து விசாரிக்கவும் ஒவ்வொரு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்களுக்கு போலீஸ் உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
    • குற்றச் செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்து வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் குற்றச்ெசயல்கள் நடைபெறாமல் இருக்க வேண்டி போலீஸ் நிலையத்தில் ரவுடி பட்டியலில் உள்ளவர்களை கண்காணிக்கவும், அவர்களின் நடவடிக்கைகள் குறித்து விசாரிக்கவும் ஒவ்வொரு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்களுக்கு போலீஸ் உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அதன்படி டி.எஸ்.பி., உதவி கமிஷனர்கள் மேற்பார்வை யில் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார், ரவுடிகளிடம் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது, திருந்தி வாழுங்கள் என அறிவுரை கூறியும், குற்றச் செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்து வருகின்றனர். அதுபோல், கொடுங்குற்றங்களில் ஈடுபடும் ரவுடிகள், கூலிப்படையினரின் நடவடிக்கைகள் குறித்து, உளவுப்பிரிவு போலீசார் தீவிரமாக கண்காணிக்கின்றனர்.

    • 15 கிலோ பிளாஸ்டிக் கேரி பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
    • பிளாஸ்டிக் கேரி பைகள் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கை.

    பாபநாசம்:

    தஞ்சை மாவட்டம், பாபநா சம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட பாலிதீன் பைகள் பயன்பாட்டில் உள்ளதா என செயல் அலுவலர் குமரேசன், சுகாதார ஆய்வாளர் பரமசிவம் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் ஆகியோர் வணிக வளாகம், மளிகை கடை, மருந்து கடை, பூக்கடை, ஹார்டுவேர்ஸ், ஹோட்டல்களில் கேரி பைகள் பயன்பாட்டில் உள்ளதா என ஆய்வு மேற்கொண்டனர்.

    ஆய்வின்போது கடைகளில் பயன்பாட்டில் இருந்த 15 கிலோ பிளாஸ்டிக் கேரி பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து உரிமையாளர்களுக்கு பிளாஸ்டிக் கேரி பைகள் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கை செய்யப்பட்டும், மீறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.

    துணை இயக்குநர் எச்சரிக்கை

    அரியலூர்,

    அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் விதைகளை அதிகபட்ச விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்சி விதை ஆய்வு துணை இயக்குநர் கோவிந்தராசு தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டத்தில் நீர் பாசன வசதி உள்ள இடங்களில், வரும் கோடைபருவத்தில் கம்பு, மக்காச் சோளம், பருத்தி, உளுந்து, எள் போன்ற பயிர்கள் பயிரிடப்படுகின்றன.தரமான விதைகளை விவசாயிகளுக்கு கிடைக்க செய்வதே விதை ஆய்வு துறையின் முக்கியநோக்கமாகும்.விவசாயிகள் சான்று பெற்ற தரமான விதைகளை விதைப்பதற்கு பயன்படுத்த வேண்டும். சான்று பெற்ற விதை களைபயன்படுத்தினால் தேவையான பயிர் எண்ணிக்கை பராமரிக்கப்படும், விதையின் அளவுகுறையும். சீரான வேகமான முளைப்பு திறன் உள்ள நாற்றுகள் கிடைக்கும். பூச்சிநோய் தாக்குதல் குறையும், 5 முதல் 20 சதவீதம் கூடுதல் மகசூல் கிடைக்கும். விதை விற்பனையாளர்கள் விதைகளை விற்பனை செய்யும் போது அதிகபட்ச சில்லறை விலைக்கு மிகாமல் விற்பனை செய்யவேண்டும்.

    விவ சாயிகள் விதைகளை வாங்கும் போது விற்பனைப் பட்டியல் கேட்டு பெறவேண்டும். இதில் ஏதேனும் குறைபாடு காணப்பட்டால் விற்பனையாளர்கள் மீது விதைச் சட்டம் , விதை விதிகள் , விதை கட்டுப்பாடுஆணையின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

    ×