search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எச்சரிக்கை"

    • விதி மீறல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    • பட்டாசு ஆலைகளின் படைக்கலச்சட்ட உரிமத்தினை தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட அளவிலான பாதுகாப்புக் குழுக்கூட்டம் கலெக்டர் மேகநாதரெட்டி தலைமை யில் நடந்தது.

    இதில் கலெக்டர் பேசிய தாவது:-

    விருதுநகர் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் பட்டாசு உற்பத்தி ஆலைகளில் சுப்ரீம் கோர்ட்டு தனது 29.10.2021-ந் தேதியிட்ட தீர்ப்பில் தெரிவித்துள்ளவாறு, பேரியம் உப்பு கலந்து தயார் செய்யப்பட்ட பட்டாசுகள் மற்றும் சரவெடி போன்ற பட்டாசுகளை தயாரித்தல், சேமித்து வைத்தல் மற்றும் விற்பனை செய்தல் போன்ற நடவடிக்கைகளைத் தடுக்கும் வகையில், மாவட்ட நிர்வாகத்தால் பட்டாசு உற்பத்தி ஆலை களை தொடர் ஆய்வு செய்ய வருவாய்த்துறை, காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மற்றும் தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் ஆகிய துறைகளை உள்ளடக்கிய ஆய்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டு, மாவட்டத்தில் இயங்கிவரும் பட்டாசு உற்பத்தி ஆலைகளில் தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதிகளவிலான விதிமீறல்கள் கண்டறியப்பட்ட இனங்களில் தொடர்புடைய பட்டாசு ஆலைகளின் படைக்கலச்சட்ட உரிமத்தினை தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், படைக்கலச்சட்ட உரிமங்கள் தற்காலிக இடைநிறுத்தம் செய்யப்பட்ட காரணத்தினால், தொடர்ச்சியாக உற்பத்திப் பணிகள் ஏதும் மேற்கொள்ளப்படாததால், இந்த ஆலைகளில் பணி யாற்றிய தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்ப டுவதை கருத்தில் கொண்டு, குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பின்னர் படைக்கலச்சட்ட உரிமத்தின் மீதான தற்காலிக இடைநிறுத்த ஆணைகள் விலக்கி ஆணையிடப்பட்டுள்ளது.

    மேலும், விருதுநகர் மாவட்டத்தில் இயங்கிவரும் பட்டாசு ஆலைகளில் குழந்தைத் தொழிலாளர் (18 வயதிற்குட்பட்ட) இருப்பினும், பட்டாசு தொழிற்சாலைகளில் இரவு நேரங்களில் பணிபுரியும் பட்டாசு ஆலைகள் மற்றும் பட்டாசு தொழிற்சாலைகளிலேயே இரவு நேரங்களில் தொழி லாளர்கள் தங்கி இருந்தாலும் உரிமம் நிரந்தமாக ரத்து செய்யப்படும்.

    இதை தடுக்கும் வகையில் இரவு நேரங்களில் ஆய்வுக்குழு அமைக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். இனி வரும் காலங்களிலும், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பினை செயல்படுத்தும் வகையில் ஆய்வுக் குழுக்களின் மூலமாக தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, விதிமீறல்களில் ஈடுபடு வோர் மீது விதிமுறைகளின்படி கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர், மாவட்ட வருவாய் அலுவலர் மங்கள ராமசுப்பிரமணியன், சார் ஆட்சியர் (சிவகாசி) பிருத்திவிராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • சேலம் மாவட்டத்தில் அரிசி கடத்தலில் ஈடுபடும் நபர்களின் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
    • மாவட்டத்தில் ஆங்காங்கே சில பகுதிகளில் சட்டவிரோதமாக கடத்தப்படும் ரேசன் அரிசி கைப்பற்றப்பட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சேலம் மாவட்டத்தில் 1,156 முழுநேரம் மற்றும் 445 பகுதி நேரம் என மொத்தம் 1,601 நியாய விலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் ஆங்காங்கே சில பகுதிகளில் சட்டவிரோதமாக கடத்தப்படும் ரேசன் அரிசி கைப்பற்றப்பட்டு, குடிமைபொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறையால் வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது.

    எனவே அரிசி விநியோகத்தில் நியாய விலைக் கடை விற்பனையாளர்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டாலோ அல்லது அரிசி கடத்துபவர்களுக்கு துணைபோனாலோ அவர்கள் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன், இன்றியமையா பண்டங்கள் சட்டம்1955-ன்படி குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

    அரிசி கடத்தலில் ஈடுபடும் நபர்களின் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் குடும்ப அட்டைதாரர்கள் தங்களுக்குரிய அரிசியினை நியாய விலைக் கடையிலிருந்து பெற்று வெளிச்சந்தையில் விற்பனை செய்தால், அவர்களின் குடும்ப அட்டையினை ரத்து செய்திட பரிந்துரைக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்
    • குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    2009-ம் ஆண்டு இலவச மற்றும் கட்டாயக் கல்விக்கான குழத்தைகள் உரிமை சட்டத்தின் அடிப்படையில் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவச கல்வி அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தை, அடிப்படையாக கொண்டு ஆண்டு குழந்தை மற்றும் வளர் இளம்பருவ தொழிலாளர் (தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல்) சட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது.

    இத்தசட்டத்தின் கீழ் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை எவ்வித வேலைக்கு அனுப்புவதும், 14 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட வளர் இளம் பருவத்தினரை அபாயக ரமான தொழில் களில் ஈடுபடுத் துவதும் தடை செய்யப்பட்ட டுள்ளது. இந்த சட்டத்தை மீறுவோர்களுக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராத மாகவே அல்லது 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனையோ அல்லது இரண்டும் சேர்த்தோ தண்டனையாக வழங்கப்படும்.

    இந்த சட்டத்துக்கு புறம்பாக குழந்தைகளை அல்லது வளர் இளம் பருவத்தினரை வேலைக்கு அனுப்பும் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர் ஆகியோர்களுக்கு தண்ட னை வழங்க இந்த சட்டத்தின் வழி வகை செய்யப் பட்டுள்ளது. அதன்படி 2-வது முறை யாக இச்சட்ட விதி களை மீறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட குழந்தை தொழிலாளர்களின் பெற்றோர்களுக்கும் அல்லது பாது காவலருக்கும் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது.

    எனவே மாவட்டத்தில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், பேக்கரி மற்றும் உணவு நிறுவ னங்கள், தியேட்டர்கள், மருத்துவமனைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், பெட்ரோல் விற்பனை நிலையம் மற்றும் தொழிற்சாலைகளில் 14 வயதிற்குட்பட்டட குழந்தைகளை எந்தவித வேலைக்கும் அனுப்புவதோ, வளர் இளம் பருவத்தினரை அபாயகரமான வேலை களில் ஈடுபடுத்தவோ கூடாது.

    இவ்வாறு அறிக்கையில் கூறி உள்ளார்.

    • இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் வாகனத்தை ஓட்டுபவர்கள் மற்றும் வாகனத்தின் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணியவேண்டும்.
    • 18 வயது நிரம்பாத சிறுவர், சிறுமிகளை வாகனம் ஓட்ட அனுமதித்தால் சிறார்களின் பெற்றோர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்

    கரூர்:

    கரூர் மாவட்ட எஸ்.பி. சுந்தரவதனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:

    கரூர் மாவட்டத்தில் விபத்துக்களை தடுக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் வாகனத்தை ஓட்டுபவர்கள் மற்றும் வாகனத்தின் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணியவேண்டும்.

    இதேபோன்று நான்கு சக்கர வாகனங்களில் பயணம் செல்பவர்களை அனைவரும் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும். மேலும், இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை மது அருந்திவிட்டு ஓட்டினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்து சிறை தண்டனை பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேலும் 18 வயது நிரம்பாத சிறுவர், சிறுமிகளை வாகனம் ஓட்ட அனுமதித்தால் சிறார்களின் பெற்றோர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மதுரை மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்ற கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
    • கடைக்கான உரிமம் ரத்து செய்து சீல் வைக்கப்படும் என்று மதுரை போலீஸ் சூப்பிரண்டு எச்சரித்துள்ளார்.

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் குட்கா புகையிலை விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் மாவட்டம் முழுவதும் சோதனை நடத்தி வருகின்றனர்.

    சமயநல்லூர் பஜாரில் போலீசார் சோதனை செய்தபோது அங்கு டீக்கடை நடத்தி வரும் ஊர்மெச்சிகுளம் மீனாட்சிசுந்தரம், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்றது தெரியவந்தது.

    இதனைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அந்த டீக்கடை மற்றும் பூக்கடைக்கு சீல் வைத்தனர்.

    மதுரை மாவட்டத்தில் குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது 53 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் தொடர்புடைய 54 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    அவர்களிடம் இருந்து ரூ.85ஆயிரம் மதிப்பு உள்ள 44. 397 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    7 கடைகளின் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை, பதுக்கல் மற்றும் கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேலும் சம்பந்தப்பட்டவரின் கடைக்கான உரிமம் ரத்து செய்ய பரிந்துரைக்கப்பட்டு சீல் வைக்கப்படும் என்று மதுைர மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் எச்சரித்தார்.

    • குட்கா விற்பனை செய்த கடைக்கு சீல்; உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
    • உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    சிவகங்கை

    சிவகங்கை பஸ் நிலையம் எதிரே உள்ள நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போதை பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக சிவகங்கை டவுன் போலீசுக்கு தகவல் கிடைத்தது.

    அதனடிப்படையில் போலீசார் அங்கு சென்று சோதனை செய்தபோது மாதவன் என்பவருக்கு சொந்தமான பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட 50 பாக்கெட் குட்கா விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.அதனை பறிமுதல் செய்ததுடன் உணவு பாதுகாப்பு துறையினர் வரவழைக்கப்பட்டு அந்த கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

    மேலும் கடை உரிமையாளர் மாதவன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதன் அருகில் இருந்த மலைச்சாமி என்பவருக்கு சொந்தமான பெட்டிக்கடையில் 5 பாக்கெட் குட்கா விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன.

    அவற்றையும் பறிமுதல் செய்து உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    • கெடிலம் ஆற்றில் தேங்கிய தண்ணீரில் மூழ்கி 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    • மாவட்ட நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே கீழ் அருங்குணம் கிராமம் கெடிலம் ஆற்றில் தேங்கிய தண்ணீரில் மூழ்கி, 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் இந்தியாவையே உலுக்கி உள்ளது. இதனை தொடர்ந்து ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பல்வேறு கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்தார்.

    இச்சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்த முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், "நீர்நிலைகளில் குளிக்கச் செல்லும் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும். வந்தபின் தவிப்பதை விட வருமுன் பாதுகாக்க வேண்டும்.

    நீர்நிலைகளில் ஏற்படும் ஆபத்துக்களை சிறுவர், சிறுமியர், இளைஞர்களுக்கு எடுத்துக்கூற வேண்டும், காக்க ஆழமான ஆறு, குளம் அருகே எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும்" என, மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தினார்.

    அதன்படி கடலூர் மாவட்டத்தில் ஆறு, குளம், ஏரி மற்றும் தடுப்பணை உள்ளிட்ட நீர்நிலைகளில் இறங்கி குளிப்பதை கண்டிப்பாக தவிர்க்கும்படியும், சிறுவர்களையும் உரிய முறையில் பெற்றோர் கண்காணிக்க வேண்டும் எனவும், மாவட்ட நிர்வாகம் சார்பில் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    கடலூர் மாவட்டத்தில் ஆபத்தான நீர்நிலை பகுதிகளில் குளிக்க வேண்டாம் என, எச்சரிக்கை பலகை வைக்க, பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

    அதன்பேரில், மாவட்டம் முழுவதும் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டு வருகிறது. 7 பேர் பலியான சம்பவம் நடந்த கெடிலம் பண்ருட்டி முதல் கடலூர் வரையில் தண்ணீர் தேங்கியுள்ள 4 இடங்களிலும், பெண்ணையாற்றில் கண்டரக்கோட்டை பகுதியில் இருந்து கடலுார் மஞ்சக்குப்பம் வரையில் நெல்லிக்குப்பம், சாவடி, செம்மண்டலம் உள்ளிட்ட 5 இடங்களிலும் முதல் கட்டமாக எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது.

    எச்சரிக்கை பலகைவைப்பதுடன், போலீசார் மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவதில் மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்தினால், இனி மாவட்டத்தில் நீர்நிலை உயிரிழப்புகளை முற்றிலும் தடுக்க முடியும்

    • செல்போனில் பேசும் நபர்களிடம் வங்கி கணக்கு விபரங்களை அளிக்க வேண்டாம் என போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் எச்சரித்துள்ளார்.
    • மதுரை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் மூலம் இதுவரை ரூ.1.01 கோடி மதிப்பு உடைய 726 மொபைல் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன.

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் செல்போன்கள் காணாமல் போன வழக்குகளில், சைபர் கிரைம் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கடந்த 2 வாரங்களில் மட்டும் தொலைந்துபோன ரூ.4.67 லட்சம் மதிப்பு உடைய 30 மொபைல் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. அந்த செல்போ ன்களை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உரியவர்க ளிடம் ஒப்படைத்தார். இதனைத்தொடர்ந்து பாஸ்கரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மதுரை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் மூலம் இதுவரை ரூ.1.01 கோடி மதிப்பு உடைய 726 மொபைல் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரிய நபர்களிடம் ஒப்படை க்கப்பட்டு உள்ளன.

    அடுத்தபடியாக வங்கி களில் இருந்து பேசு வதாக கூறி, பொதுமக்களின் வங்கி கணக்கு விபரங்களை தெரிந்து கொண்டு நூதன திருட்டு சம்பவங்கள் நடந்து வருகின்றன. அது தொடர் பாகவும் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் விளைவாக கடந்த 2 வாரங்களில் ரூ.1.69 லட்சம் மீட்கப்பட்டு, ஊழியர்களின் வங்கி கணக்குகளில் மீண்டும் செலுத்தப்பட்டு உள்ளன.

    மதுரை மாவட்டத்தில் சைபர் கிரைம் போலீசார் மூலம் இதுவரை ரூ.26.64 லட்சம் மீட்கப்பட்டு உள்ளது. எனவே வங்கியில் இருந்து பேசுவதாக கூறி ஏமாற்றும் நபர்களிடம் விழிப்புணர்வோடு இருப்பது அவசியம். முன்பின் தெரியாதவர்களிடம் வங்கிகணக்கு எண், சி.வி.வி மற்றும் ஓ.டி.பி ஆகிய விபரங்களை கொடுத்து ஏமாற வேண்டாம்.

    இதேபோல பண இரட்டிப்பு வாக்குறுதி தரும் இன்வெஸ்ட் மெண்ட் ஆப்-களை நம்பியும், ஆன்லைன் வேலைவாய்ப்பு வாக்குறுதியை நம்பியும் முன்பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். ஆன்லைன் லோன் ஆப்களிடம் ஏமாற வேண்டாம். தெரியாத நபர்களிடம் இருந்து வரும் வீடியோ அழைப்புகளை எடுக்க வேண்டாம், வங்கி கணக்கு விபரங்களை அப்டேட் செய்யுமாறு வரும் லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம், ரிமோட் ஆக்சஸ் ஆப்-களான 'எனி டெஸ்க்', 'டீம் வியூவர்' போன்ற செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம்.

    அப்படி யாரேனும் மேற்கண்ட வகையில் பணம் இழக்க நேர்ந்தால் 1930 இலவச அழைப்பு எண் அல்லது www.cybercrime.gov.in இணையதள முகவரியில் தொடர்புகொண்டு 24 மணிநேரமும் புகார் அளிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வாகன ஓட்டுனர்களை அறிவுறுத்தும் வகையில் ஆங்காங்கே அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
    • போதை தலைக்கேறும் ஆசாமிகள், ஆர்வக்கோளாறு காரணமாக வனவிலங்குகளை மையப்படுத்தி செல்பி புகைப்படம் எடுக்க முற்படுகின்றனர்.

    உடுமலை:

    ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை வனச்சரகத்தில் உடுமலை - மூணாறு ரோடு அமைந்துள்ளது. அதில் ஏழுமலையான் கோவில் பிரிவில் இருந்து எல்லைப்பகுதியான சின்னாறு சோதனைச்சாவடி வரையுள்ள 20 கி.மீ., ரோடு தமிழக வனப்பகுதியின் நடுவேநீள்கிறது.

    இதனால் வனவிலங்குகள் பாதுகாப்புக்கருதி வாகன ஓட்டுனர்களை அறிவுறுத்தும் வகையில் ஆங்காங்கே அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. அதில்வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழையக்கூடாது, சமைத்தல் கூடாது, மது அருந்துதல் கூடாது, பிளாஸ்டிக் மற்றும் உணவுக்கழிவுகள் வீசக்கூடாது என்பன உள்ளிட்ட அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன.

    இருப்பினும் இந்த ரோடு வழியே செல்லும் சுற்றுலாப்பயணிகள் அத்துமீறலில் ஈடுபடுகின்றனர். ரோட்டோரத்தில்அவ்வப்போது, வாகனத்தை நிறுத்துவதுடன் காலி மதுபாட்டில்கள், பிளாஸ்டிக் டம்ளர், உணவு எடுத்து வர பயன்படுத்திய பாலித்தீன் பைகள் ஆகியவற்றை விட்டுச்செல்கின்றனர்.

    தற்போது யானைகள் அடிக்கடி ரோட்டை கடந்து செல்வதால் வனத்துறையினர், வாகன ஓட்டுனர்களை 'அலர்ட்' செய்தும் வருகின்றனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-

    போதை தலைக்கேறும் ஆசாமிகள், ஆர்வக்கோளாறு காரணமாக வனவிலங்குகளை மையப்படுத்தி செல்பி புகைப்படம் எடுக்க முற்படுகின்றனர். இதனால் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி துரத்தும் நிலை ஏற்படும்.

    வன விலங்குகளின் அருகே சுற்றுலா பயணிகள் செல்லக்கூடாது. செல்போனில் செல்பி எடுப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். ரோந்துப்பணியில் இத்தகைய செயலில் எவரேனும் ஈடுபடுவது கண்டறியப்பட்டால் அபராதம் விதிக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×