search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இரணியல்"

    • கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தாயார் வீட்டில் மகனுடன் வசித்து வந்தார்.
    • இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே நுள்ளிவிளையை அடுத்த மூலச்சன்விளையை சேர்ந்தவர் ராஜா (வயது 28). இவரது மனைவி சிந்து (25). இவர்களுக்கு ரெஜன் (2) என்ற மகன் உள்ளான்.

    கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு சிந்து வடக்கு நுள்ளிவிளையில் உள்ள அவரது தாயார் வீட்டில் மகனுடன் வசித்து வருகிறார்.

    இந்நிலையில் கடந்த 19-ந்தேதி தாய் வீட்டில் இருந்த சிந்துவை குழந்தையுடன் காணவில்லை. அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சிந்துவின் தாயார் ராணி இரணியல் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிந்துவையும், அவரது மகனையும் தேடி வருகின்றனர்.

    • பஸ்ஸை முந்தி செல்ல முயன்றபோது எதிரே வந்த லாரியுடன் மோதல்
    • இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    அழகியமண்டபம் பனங்காலவிளையைச் சேர்ந்தவர் நேசமணி இவ ரது மகன் ஜெரின் (வயது31).கட்டிட தொழிலாளி.

    இவர் தனது நண்பர் பூஞ்சான்விளையைச் சேர்ந்த ஜெபிஷன் (24) என்பவருடன் நாகர்கோ விலுக்கு சென்று விட்டு பைக்கில் வீடு திரும்பினர்.

    தோட்டியோடு அடுத்த வில்லுக்குறியில் வந்த போது முன்னால் சென்ற பஸ்ஸை ஜெபிஷன் முந்தி செல்ல முயன்றுள்ளார்.

    அப்போது எதிரே பார்சல் ஏற்றி வந்த லாரியும் பைக்கும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட நண்பர்கள் இருவரும் காயமடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    ஜெரினை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பலத்த காயமடைந்த ஜெபிஷன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ஜெரின் உறவினர் சிசில்தங்கம் (55) கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • நகையின் மதிப்பு சுமார் ரூ.3 லட்சத்து 30 ஆயிரம் என புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
    • புகாரின்பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே உள்ள வில்லுக்குறியை அடுத்த கொன்னக்குழிவிளையை சேர்ந்தவர் ஹைஜின்ஜோஸ் (வயது 40). இவர் வெளிநாட்டில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மனைவி சுஜா (38), நுள்ளிவிளையில் வீடுகளுக்கு உள் அலங்காரம் செய்யும் கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு அவர் வீட்டின் படுக்கை அறையில் தூங்கிக் கொண்டு இருந்தார்.

    அதிகாலை சுமார் 1.45 மணி அளவில் இந்த வீட்டு மாடியின் கதவை உடைத்து 2 பேர் வீட்டிற்குள் நுழைந்து உள்ளனர். அதில் ஒருவன் சுஜாவின் வாயை பொத்தி சத்தம் போட்டால் கொன்று விடுவதாக மிரட்டி உள்ளான்.

    அப்போது மற்றொருவன் சுஜா கழுத்தில் கிடந்த சுமார் 11 பவுன் தங்கத்தாலி சங்கிலியை பறித்துள்ளான். பின்னர் 2 பேரும் வீட்டின் பின்பக்க வாசல் வழியாக தப்பிச் சென்று விட்டனர்.

    இது குறித்து இரணியல் போலீசில் சுஜா புகார் செய்தார். அதில் நகையின் மதிப்பு சுமார் ரூ.3 லட்சத்து 30 ஆயிரம் என குறிப்பிட்டுள்ளார். புகாரின்பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உலக சாதனை புரியும் போது அவரது வயது 4 வருடம் 11 மாதம் ஆகும்.
    • தனது கண்களை கட்டி ஒரு நிமிடத்தில் 165 கார் லோகோ பெயர்களை சொல்லி உலக சாதனை புரிந்துள்ளார்.

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே உள்ள நெட்டாங்கோடு என்ற இடத்தை சேர்ந்தவர் சுப்ரமணிய பிரசாத் துபாயில் பணிபுரிகிறார். இவரது மனைவி ஒலினா. இவர்களது மகன் லெயான்ஷ் பிராசாத்(வயது5). தற்பொழுது துபாயில் யூ.கே.ஜி. பயின்று வருகிறார். இவர் தனது கண்களை கட்டி ஒரு நிமிடத்தில் 165 கார் லோகோ பெயர்களை சொல்லி உலக சாதனை புரிந்துள்ளார். இதன் மூலம் உலக சாதனையாளர் புத்தகம் மற்றும் கலாம் சாதனையாளர் புத்தகங்களில் இடம் பெற்றுள்ளார். உலக சாதனை புரியும் போது அவரது வயது 4 வருடம் 11 மாதம் ஆகும்.

    இதற்கான விருதுகளை இரணியல் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சுந்தர பாண்டியனிடமிருந்தும் தனித்துவம் வாய்ந்த சாதனையாளர் விருதினை குளச்சல் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ஜூலியட்டிடமிருந்தும் பெற்றுக்கொண்டார்.

    இவர் மேலும் பல உலக சாதனைகள் புரிந்து பல புத்தகங்களில் இடம் பெற முயற்சி எடுத்துக்கொண்டு இருக்கிறார். இவரது தந்தை ஏற்கனவே தனது இரு கைகளையும் எதிரெதிர் திசையில் ஒருநிமிடத்தில் அதிக அளவில் சுற்றி உலக சாதனை புரிந்து உலக சாதனையாளர் புத்தகம், ஆசிய சாதனையாளர் புத்தகம், இந்திய சாதனையாளர் புத்தகம் ஆகியவற்றில் இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்த இவர் மாவடிகுளத்தில் குளித்த போது வலிப்பு ஏற்பட்டதில் தண்ணீரில் மூழ்கியதாக தெரிகிறது.
    • இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே உள்ள ஆரோக்கியபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆல்பின் பெனட் (வயது 45). கூலித் தொழிலாளி. இவர் வலிப்பு நோய் வந்து அடிக்கடி அவதிப்பட்டு வந்தார். ஆல்பின் பெனட் தனது 2 குழந்தைகளுடன் மாடத்தட்டுவிளையில் உள்ள அவரது சகோதரி வீட்டில் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று மாலை ஆல்பின் பெனட் மாடத்தட்டுவிளையில் உள்ள மாவடிகுளத்திற்கு குளிக்க சென்றார். அப்போது அவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. தண்ணீரில் மூழ்கிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அவரது சகோதரர் ஜாண் ஜஸ்டஸ் கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காணிக்கை பணம் சுமார் ஆயிரம் ரூபாயை திருடி சென்றிருப்பதாக தகவல்
    • இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே உள்ள கண்ணாட்டுவிளை அடுத்த கக்கோடு என்ற இடத்தைச் சேர்ந்தவர் ராமதாஸ் (வயது 70). இவருக்கு சொந்தமான ஆலமூடு போற்றி குடும்ப கோவில் மேலகக்கோட்டில் உள்ளது.

    சம்பவத்தன்று இரவு பூஜை வழிபாடுகளை முடித்து விட்டு கோவில் நடையை சாத்தி விட்டு ராமதாஸ் சென்றுவிட்டார். மறுநாள் வந்து பார்த்தபோது கோவிலின் முன்பு இருந்த உண்டியல் உடைக்கப்பட்ட நிலையில் காணிக்கை பணம் சுமார் ஆயிரம் ரூபாயை திருடி சென்றிருப்பது தெரிய வந்தது.

    இதுகுறித்து ராமதாஸ் கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை
    • இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே உள்ள காரங்காட்டு அடுத்த புல்லுவிளையை சேர்ந்தவர் பால்பாண்டி யன் (வயது 67). இவர் பேயன்குழியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.

    இவருக்கும் பூமி நாதன் தெருவைச் சேர்ந்த அஜி (43) என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் நேற்று மாலை பேயன்குழி வந்த அஜி, பால்பாண்டியனிடம் தனக்கு தரவேண்டிய ரூ.4 லட்சம் பணத்தை கேட்டு தகராறு செய்துள்ளார். பின்னர் ஆத்திரமடைந்த அஜி, பால்பாண்டியனை அரிவாளால் வெட்டியதில் பால்பாண்டியனின் இடது உள்ளங்கை மற்றும் முதுகில் வெட்டுக்காயம் ஏற்பட்டது. அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    இதுகுறித்து பால்பாண் டியன் கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீ சார் வழக்குப் பதிவு செய்து அஜியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட அஜி முன்னாள் ராணுவ வீரர் ஆவார்.

    • இவருக்கு உடல்நிலை பாதிப்பு இருந்ததாக கூறப்படுகிறது.
    • இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே ஆளூர் அடுத்த ஸ்ரீகிருஷ்ணபுரத்தை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 45). இவரது மனைவி பிரியா என்ற ராமலெட்சுமி (44). இவருக்கு உடல்நிலை பாதிப்பு இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று மதியம் ராமலெட்சுமி அப்பகுதியில் உள்ள நெடுங்குளத்தில் குளிக்க சென்றார். அப்போது ராம லெட்சுமி தண்ணீரில் எதிர்பாராதவிதமாக மூழ்கியுள்ளார்.

    இதனை பார்த்து உறவி னர்கள் அவரை உடனடி யாக மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ராமலெட்சுமியை பரிசோதனை செய்த போது அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து அவரது கணவர் சசிகுமார் கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இவருக்கு அதிக கடன் சுமை இருந்ததாக தெரிகிறது
    • இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    அஞ்சுகிராமம் அடுத்த அழகப்பபுரம் வளன்நகரை சேர்ந்தவர் விஜயராஜ் (வயது 38). சொந்தமாக ஆட்டோ ஓட்டி வந்த இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. விஜயராஜிக்கு அதிக கடன் சுமை இருந்ததாக தெரிகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த விஜயராஜ் கண்டன்விளை அடுத்த தெற்கு தோப்புவிளையில் உள்ள குடும்ப வீட்டிற்கு சென்றுள்ளார். இந்த நிலையில் மன உளைச்சலில் இருந்த விஜயராஜ் குடும்ப வீட்டின் அருகிலுள்ள மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அருகில் உள்ளவர்கள் அழகப்பபுரத்தில் உள்ள அவரது உறவினர்களுக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த இரணியல் போலீசார் விஜயராஜ் உடலை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து அவரது சகோதரர் மகேந்திரன் (39) கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • விபத்தில் படுகாயம் அடைந்தவருக்கு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை

    கன்னியாகுமரி:

    குளச்சல் மதனாவிளையை சேர்ந்தவர் வில்சன் (வயது 62). மண்டைக்காடு காரியாவிளையை சேர்ந்தவர் ஸ்டாலின் (51). நண்பர்களான இருவரும் கொத்தனார் வேலை செய்து வருகின்றனர். சம்பவத்தன்று மதியம் இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் திங்கள்நகர் - தோட்டியோடு ரோட்டில் கண்டன்விளை நோக்கி சென்று கொண்டு இருந்தனர். இரணியல் ஆமத்தன்பொத்தை வளைவில் சென்றபோது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்தது. இதில் வில்சனுக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது.

    ஸ்டாலினுக்கும் முகத்தில் சிராய்ப்பு காயம் ஏற்பட்டது. இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். வில்சன் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வில்சன் கொடுத்த புகாரின் பேரில் அஜாக்கிரதையாகவும் வேகமாகவும் பைக்கை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக ஸ்டாலின் மீது இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தென்னைக்கு தெளிக்க தண்ணீரில் கலக்கி வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை தவறுதலாக எடுத்து குடித்ததாக தெரிகிறது.
    • இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே வில்லுக்குறி அடுத்த மணக்கரை அவரிவிளையை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் ஐயப்பகோபு (வயது 46).

    எல்லை பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வந்தார். இவர் விடுமுறையில் கடந்த 4-ம் தேதி ஊருக்கு வந்திருந்தார். ஐயப்பகோபுக்கு அதிக குடிப்பழக்கம் இருந்து வந்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் நேற்று மதியம் வீட்டில் இருந்த ஐயப்பகோபு போதையில் தென்னைக்கு தெளிக்க தண்ணீரில் கலக்கி வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை தவறுதலாக எடுத்து குடித்ததாக தெரிகிறது. இதில் வாயில் நுரை தள்ளிய நிலையில் கிடந்த அவரை மீட்டு நாகர்கோவிலில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ஐயப்பகோபு இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து அவரது மனைவி துர்கா (36) இரணியல் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா விற்பனையை தடுக்க போலீசார் அதிரடி நடவ டிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    கன்னியாகுமரி, நாகர் கோவில், தக்கலை, குளச்சல் சப்- டிவிஷனுக்கு உட்பட்ட பகுதிகளில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் மேற் பார்வையில் 7 தனிப்படை கள் அமைக்கப்பட்டு கண் காணிப்பு பணி மேற்கொள் ளப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் இரணியல் அருகே நெட்டாங்கோடு பகுதியில் வீடு ஒன்றில் போதை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று இரவு போலீசார் அந்த வீட்டிற்கு சென்று அதிரடி சோதனை நடத்தி னார்கள்.

    அப்போது வீட்டில் ஒரு கிலோ கஞ்சா மற்றும் 2 கிலோ போதைப் பொருட் கள் இருந்தது கண்டுபிடிக் கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்கள் விலை உயர்ந்த போதை பொருட்கள் என்று கூறப்படுகிறது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் அந்த போதை பொருளை பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர். அங்கிருந்த 3 பேரும் சிக்கினார்கள். பிடிபட்ட மூன்று பேரி டமும் போலீசார் விசா ரணை நடத்தினார்கள்.

    விசாரணையில் அவர்கள் நரைன் (வயது 34), விமல் (21), அசாருதீன் (29) என்பது தெரிய வந்தது. இவர்களை இரணியல் போலீஸ் நிலை யத்திற்கு கொண்டு சென்று விசாரணை மேற் கொண்ட னர். கஞ்சா மற்றும் போதை பொருட்கள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

    விசாரணையில் வெளி மாநிலங்களில் இருந்து வாங்கி வந்து இங்கு அதிக விலைக்கு விற்பனை செய்வதாக தெரிவித்தனர்.இந்த கஞ்சா மற்றும் போதை பொருட்கள் சப்ளையில் வேறு நபர்களுக்கு தொடர்பு உண்டா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கஞ்சா மற்றும் 2 கிலோ போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தியுள்ளது.

    வடசேரி பகுதியில் போலீசார் ரோந்து பணி யில் ஈடுபட்டபோது சந்தேகப்படும் படியாக நின்ற மூன்று நபர்களை பிடித்து விசாரித்தனர்.அப்போது அவர்களிடம் 450 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கஞ்சாவை பள்ளி மாண வர்களுக்கு சப்ளை செய்ய வைத்திருந்ததும் தெரிய வந்தது.

    இதையடுத்து வடக்கு சூரங்குடியைச் சேர்ந்த சிவன், வாழை யத்துவயலை சேர்ந்த ஆதிஸ் (20) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் தெற்குச் சூரங்கு டியைச் சேர்ந்த அரவிந்த் மீது வழக்குப்பதிவு செய்து வடசேரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×