என் மலர்
நீங்கள் தேடியது "அடி-உதை"
- லேட்டா வந்த ஆப்செண்ட் போடுவியா என வாக்குவாதம்
- போலீசார் விசாரணை
அணைக்கட்டு:
ஒடுகத்தூர் அடுத்த புளியமரத்தூர் அருகே உள்ள கட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தாமோதரன் (வயது 35). இவர் நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணித்தள பொறுப்பாளராக உள்ளார். அதே கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் மனைவி ஜெயலட்சுமி(40). இவர் நூறு நாள் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று வழக்கம்போல் தாமோதரன் நூறு நாள் வேலை செய்து கொண்டிருக்கும் ஆட்களை வருகை பதிவேட்டில் பெயர்களை பதிவு செய்து கொண்டிருந்தார். மேலும், பணிக்கு வராதவர்களுக்கு ஆப்சென்ட் போட்டு விட்டார்.
அப்போது, ஜெயலட்சுமி பணிக்கு தாமதமாக வந்ததாக கூறப்படுகிறது. இதை பார்த்த தாமோதரன் உங்களுக்கு ஆப்சென்ட் போட்டு விட்டேன் என்று கூறியுள்ளார். இதனால், இருவருக்கும் கடும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. மற்றவங்க லேட்டா வந்தா ஏத்துப்ப நான் லேட்டா வந்த ஆப்செண்ட் போடுவியா என வாக்குவாதம் ஏற்ப்பட்டது.
வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த ஜெயலட்சுமி மற்றும் அவரின் கணவர் ராஜேந்திரன் சேர்ந்து பணித்தள பொறுப்பாளர் தாமோதரனை தாக்கியுள்ளார்.
இதில் காயமடைந்த தாமோதரன் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து, தாமோதரன் கொடுத்த புகாரின் பேரில் வேப்பங்குப்பம் சப்-இன்ஸ்பெக்டர் இன்பரசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.
- தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கினார்.
கோவை,
கோவை இடையர் வீதியை சேர்ந்தவர் மனோகரன் (வயது 52). இவர் ராஜா வீதியில் சிறுதானிய கடை வைத்து நடத்தி வருகிறார்.
இந்நிலையில், சம்பவத்தன்று மனோகரன் மோட்டார் சைக்கிளில் அப்பகுதியில் சென்றார். அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் மோட்டார் சைக்கிளை நிறுத்தி காத்திருந்தார். அப்போது பின்னால், வந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் வழி விடுமாறு தொடர்ந்து ஹாரன் அடித்தார். இதனை மனோகரன் கண்டித்தார். இதில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த ஆட்டோ டிரைவர் மனோகரனை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கினார். மேலும் தான் வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி விட்டு அங்கிருந்து சென்றார். இதுகுறித்து மனோகரன் கடைவீதி போலீசில் புகார் அளித்தார்.புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், மனோகரனை தாக்கியது கோவை செல்வபுரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் தினேஷ் (26) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதால் இருவருக்கிடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
- இந்த நிலையில் சம்பவத்தன்று பணம் தருவதாக கூறி அனிஷை ஆஷிக் றோஸ் கூப்பிட்டுள்ளார்.
கன்னியாகுமரி:
புதுக்கடை அருகே உள்ள விழுந்தயம்பலம் பகுதி காட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் அனிஷ் ராஜன் (வயது 35). இவர் வேங்கோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இந்தி ஆசிரியராக உள்ளார். வேங்கோடு பகுதியை சேர்ந்தவர் ஜாண் றோஸ் மகன் ஆஷிக்றோஸ் ஆகியோர் அதே பகுதியில் மரப்பட்டறை நடத்தி வருகிறார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு ஆஷிக் றோசின் திருமண செலவுக்காக அனிஷ் தனது கார் மற்றும் இரு சக்கர வாகனத்தை நிதி நிறுவனத்தில் அடமானம் வைத்து ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் ஆஷிக்றோசுக்கு கொடுத்துள்ளார். கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதால் இருவருக்கிடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் சம்பவத்தன்று பணம் தருவதாக கூறி அனிஷை ஆஷிக் றோஸ் கூப்பிட்டுள்ளார். இதையடுத்து பணம் வாங்க அனிஷ் மற்றும் அவர் மனைவி டெலிஷா என்பவருமாக சென்றனர். அங்கு பணம் கொடுக்காமல் ஆசிரியர் அனிஷை ஆஷிக் தாக்கியுள்ளார். தடுக்க முயற்சி செய்த அனிஷின் மனைவியை அவதூறாக பேசியுள்ளார். இதில் காயமடைந்த அனிஷ் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பான புகாரின் பேரில் புதுக்கடை போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மாட்டு கொட்டகை கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே உள்ள பாச்சல் கிராமம், ஜே.பி. நகரை சேர்ந்தவர் மலர்கொடி (வயது 35). இவருக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.1.60 லட்சம் மதிப்பில் மாட்டு கொட்டகை கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து ஜோலார்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் மலர்கொடி வீட்டில் நேரில் சென்று நேற்று ஆய்வு செய்தனர்.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (29) மலர்கொடியிடம் தகராறு செய்துள்ளார்.
இதனைப் பார்த்த வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணிபுரியும் தற்காலிக ஊழியர் ராஜேஷ், கார்த்திக்கை தட்டி கேட்டுள்ளார். 2 பேருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த கார்த்திக் அருகில் இருந்த கட்டையை எடுத்து ராஜேஷை சரமாறியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.
இது குறித்து ராஜேஷ் ஜோலார்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்திகை தேடி வருகின்றனர்.
- தாரமங்கலம் பாட்டப்பன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் யுவராஜ் (23 )இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
- நேற்று இரவு யுவராஜ் வீட்டிற்கு சென்ற பெண்ணின் உறவினர் சிலர் யுவராஜுக்கு கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளனர்.
தாரமங்கலம்:
தாரமங்கலம் பாட்டப்பன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் யுவராஜ் (23 )இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
காதலுக்கு எதிர்ப்பு
இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர் அந்த பெண்ணை வேறொரு வருக்கு திருமணம் செய்து வைத்தனர். தற்போது 9 மாத கர்ப்பிணியாக உள்ள அந்த பெண் தனது கணவருடன் தாரமங்கலம் கண்ணனூர் மாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு வந்தார்.
தாரமங்கலம் பஸ் நிலை யம் அருகில் உள்ள பேக்கரி ஒன்றின் முன்பு நின்று இருந்த அந்த பெண்ணை பின் தொடர்ந்து வந்ததாக கருதி அவருடைய அண்ணன்கள் 2 பேர் யுவ ராஜை பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர்.
மேலும் நேற்று இரவு யுவராஜ் வீட்டிற்கு சென்ற பெண்ணின் உறவினர் சிலர் யுவராஜுக்கு கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளனர்.
2 பேர் கைது
இந்த நிலையில் ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் யுவராஜ் கொடுத்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து பெண்ணின் அண்ணன்கள் 2 பேரை கைது செய்தனர்.
- கடனை திருப்பி கேட்ட தம்பதிக்கு அடி-உதை விழுந்தது.
- விருதுநகர் மேற்கு போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரை சேர்ந்தவர் சரண்யா (வயது33). இவரது கணவர் ரத்தினராஜின் தாய் மற்றும் அண்ணன் கிருஷ்ணன் குடும்பத்தினர் விருதுநகரில் உள்ளனர். அவர்களது தேவைக்காக ரத்தின ராஜிடம் ரூ.41 லட்சம் கடன் வாங்கி யுள்ளனர். நீண்ட நாட்களா கியும் பணத்தை திருப்பித்தர வில்லை.
இந்தநிலையில் திருப்போரூரில் ரத்தினராஜ் சொந்தமாக வீடு கட்டத் தொடங்கி யுள்ளார். அதற்கு பணம் தேவைப்பட்டதால் அண்ணனிடம் கடனை திருப்பித்தருமாறு கேட்டுள்ளார். அப்போது அவர் ஊருக்கு வருமாறு கூறினார்.
ரத்தினராஜூம் ஊருக்கு சென்று பேசியுள்ளார். ஆனால் அதன் பின்னரும் பணம் கிடைக்கவில்லை.
இதையடுத்து விருதுநகர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ரத்தினராஜ் புகார் கொடுத்தார். இதையடுத்து மீண்டும் கிருஷ்ணன் குடும்பத்தினர், ரத்தினராஜை ஊருக்கு வருமாறு அழைத்தனர். ரத்தினராஜ் தனது மனைவியுடன் ஊருக்கு வந்தார். கிருஷ்ணன் வெளியே சென்றிருந்த போது அவரது தாயார் நிர்மலா, மகன்கள் யோகவேல்ராஜ், கார்த்திக்ராஜ் மற்றும் சிலர் சேர்ந்து பணம் கேட்டு வரக்கூடாது என்று கூறி ரத்தினராஜையும், சரண்யாவையும் தாக்கியுள்ளனர். மேலும் மீண்டும் பணத்தை கேட்டு வந்தால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி யுள்ளனர்.
இதுகுறித்து விருதுநகர் மேற்கு போலீஸ் நிலையத்தில் ரத்தினவேல் புகார் கொடுத்தார். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போக்சோவில் கைது
- போலீசார் விசாரணை
வேங்கிக்கால்:
திருவண்ணாமலை வேங்கிக் கால் குபேர நகரை சேர்ந்தவர் அசோக் (வயது 28). நேற்று அந்த பகுதியில் உள்ள ஒரு கட்டிடத் தில் பெயிண்டர் ஒருவர் அவ ரது 5 வயதுடைய பெண் குழந் தையுடன் வந்து பணியாற்றி கொண்டிருந்தார்.
தந்தையின் கண்காணிப்பில் இருந்த சிறுமி திடீரென மாயமானார். அப் போது அருகில் இருந்த காலி கட்டிடத்தில் இருந்த சிறுமியின் அழுகுரல் கேட்டது. இதைய டுத்து பெயிண்டர் அங்கு சென்று பார்த்தார்.
அப்போது சிறுமியிடம் அசோக் தகாத முறையில் ஈடுபட முயன்று உள்ளார். இதை கண்டு ஆத்திரம் அடைந்த பெயிண்டர் கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு வந்து அசோக்கை சுற்றி வளைத்து பிடித்து அடித்து உதைத்தனர்.
அப்போது அசோக் மதுபோதையில் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீசில் அசோக்கை ஒப்படைத்தனர்.
அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக் குப்பதிவு செய்து அசோக்கை கைது செய்தனர்.
- விருதுநகர் அருகே கணவர், கர்ப்பிணி மனைவிக்கு அடி-உதை விழுந்தது.
- 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்து இன்ஸ்பெக்டர் சார்லஸ் விசாரணை நடத்தி வருகிறார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சிவகாமிபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் சுஷ்மிதா தேவி (வயது 23). அதே பகுதியை சேர்ந்தவர் முனீஸ்வரன் (19). இவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலை முனீஸ்வரன் வீட்டில் ஏற்றுக் கொண்ட னர். ஆனால் சுஷ்மிதா தேவியின் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு முனீஸ்வரனின் உறவி னர்கள் முன்னிலையில் காதல் ஜோடி திருமணம் செய்து கொண்டுள்ளனர். பின்னர் முனீஸ்வரனின் பெற்றோர் வீட்டில் புதுமண தம்பதி வசித்து வந்தனர். இந்த நிலையில் சுஷ்மிதா தேவி கர்ப்ப மடைந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த சுஷ்மிதா தேவியின் பெற்றோர் சமாதானம் அடைந்து தலை தீபா வளிக்கு தம்பதிகளை முறைப்படி அழைத்துச் சென்றனர். சுஷ்மிதா தேவி கர்ப்பமாக இருப்பதால் ஒரு வாரமாக பெற்றோர் வீட்டில் இருந்து வருகிறார். அவரைப் பார்க்க முனீஸ்வ ரன் அடிக்கடி சென்று வந்தார். சம்பவத்தன்று முனீஸ்வரன் தெருவில் நடந்து சென்று கொண்டி ருந்தார்.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த வெங்கல வடியான்-ராதா தம்பதி யின் மகன் மோகன் என்பவர் அவர் காதல் திருமணம் செய்து கொண்டதை கிண்டல் செய்து பேசியுள்ளார். இது குறித்து சுஷ்மிதா தேவியின் பெற்றோரிடம் முனீஸ்வரன் தெரிவித்துள்ளார். இதையடுத்து முனீஸ்வரன், சுஷ்மிதா தேவி மற்றும் அவரது பெற்றோர் மோகனின் வீட்டிற்கு சென்று நடந்ததை கூறி உள்ளனர்.
அப்போது மோகனின் குடும்பத்தாரும் அவர்களை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்க ளுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அருகில் இருந்த உறவினர்களும் மோகனுக்கு ஆதரவாக அங்கு திரண்ட னர். இருதரப்புக்கும் வாக்கு வாதம் முற்றிய நிலையில் முனீஸ்வரனை மண்வெட்டி கம்பால் அவர்கள் தாக்கி னர். இதில் அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.
இதை தடுப்பதற்காக குறுக்கே புகுந்த சுஷ்மிதா தேவியையும் கர்ப்பிணி என்றும் பாராமல் அவர்கள் அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் மோகன், அவரது பெற்றோர், சக்தி வேல், வனிதா, வில்லரசி, கற்பகமணி, மாரியம்மாள், முருகன் உள்பட 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்து இன்ஸ்பெக்டர் சார்லஸ் விசாரணை நடத்தி வருகிறார்.
- பெண் கடத்தலில் தட்டிக்கேட்ட மாமியார் தாக்கப்பட்டார்.
- ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
திருச்சி:
திருச்சி லால்குடி ஆங்கரை மலையப்பபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி அம்பிகா.
இவருக்கும் அதே பகுதியில் மாரியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் அருண்குமார்(வயது 26) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.
பின்னர் அது கள்ளக்காதலாக மாறியதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு அம்பிகாவை அருண்குமார் கடத்திச் சென்று மறைத்து வைத்துள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில் அருண்குமார் நேற்று முன்தினம் ஊருக்கு திரும்பி வந்துள்ளார். இதை அறிந்த
அம்பிகாவின் மாமியார் ஜோதி (65) நேராக சென்று அருண்குமாரிடம் மருமகளை எங்கு மறைத்து வைத்திருக்கிறாய் என கேட்டார். இதில் இருவருக்கும் இடையே வாய் தகராறு முற்றியது. ஆத்திரமடைந்த அருண்குமார் ஜோதியை கல்லால் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். இதில் படுகாயம் அடைந்த ஜோதி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து லால்குடி சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சேகர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- பொதுமக்களும் வாலிபரை சூழ்ந்து கொண்டு தர்ம அடி கொடுத்தனர்.
- கோழி பண்ணையில் பொறுப்பாளராக பணி யாற்றி வருகிறார்.
சூலூர்:
சூலூர் அருகே ராவுத்தூர் நெய்காரக்குட்டை பகுதியில் வசிப்பவர் முருகன் (வயது 37). இவர் கருமத்தம்பட்டி பகுதியில் ஒரு கோழி பண்ணையில் பொறுப்பாளராக பணி யாற்றி வருகிறார்.
சம்பவத்தன்று இவரது வீட்டு முன்பு தனது மோட்டார்சைக்கிளை நிறுத்தி இருந்தார். திடீரென அந்த மோட்டார்சைக்கிள் மாயமானது. இதுபற்றி அவர் கருமத்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுப்பதற்காக சென்று கொண்டிருந்தார். குரும்ப பாளையம் வழியாகச் சென்றபோது ஒரு கடை முன்பு திருடு போன அவரது மோட்டார்சைக்கிள் நின்றுகொண்டிருந்தது. வாலிபர் ஒருவர் முருகனிடம் வந்து தனது மோட்டார்சைக்கிள் ரிப்பேர் ஆகி விட்டது, ஒர்க்ஷாப் எப்போது திறப்பார்கள் என்று கேட்டார்.
இதை கேட்டு முருகன் அதிர்ச்சி அடைந்தார். தனது மோட்டார்சைக்கிளையே திருடி வந்து விட்டு தன்னிடமே அதனை ரிப்பேர் பார்க்க உதவி கேட்கிறானே என்று எண்ணிய அவர் வாலிபரை மடக்கி பிடித்தார்.
2 பேரும் தகராறில் ஈடுபடுவதை பார்த்த பொதுமக்கள் அங்கு திரண்டனர்.
முருகன் தனது மோட்டார்சைக்கிள் திருட்டு போனதையும், அதனை திருடிச் சென்றவன் சிக்கிக் கொண்ட விவரத்தையும் தெரிவித்தார்.
உடனே பொதுமக்களும் வாலிபரை சூழ்ந்து கொண்டு தர்ம அடி கொடுத்தனர்.
பின்னர் சூலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வாலிபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவரது பெயர் பாலு என்ற பாலசுப்பிரமணியன் (30), தொட்டிப்பாளையத்தைச் சேர்ந்தவன் என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். பாலசுப்பிரமணியன் மீது பீளமேடு, சிங்காநல்லூர், ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் 18 வழக்குகள் உள்ளன.
- குடிபோதையில் கனகராஜின் வீட்டின் முன்பு வெகு நேரமாக சத்தம் போட்டு கொண்டு இருந்தார்.
- கணவரின் சத்தத்தை கேட்டு கவிதா ஓடி வந்தார். அவர் மொய்தீனை தகராறில் ஈடுபடாமல் செல்லுமாறு கூறினார்
கோவை:
கோவை மாவட்டம் பொள்ளாச்சி ெதாழில்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 42). மில் தொழிலாளி. இவரது மனைவி கவிதா (38).
அதேபகுதியை சேர்ந்தவர் முகமது மொய்தீன் (47). கார் டிரைவர். இவர் அடிக்கடி குடிபோதையில் அந்த பகுதியில் தகராறில் ஈடுபட்டு வந்தார். சம்பவத்தன்று அதே போன்று குடிபோதையில் கனகராஜின் வீட்டின் முன்பு வெகு நேரமாக சத்தம் போட்டு கொண்டு இருந்தார்.
இதனை பார்த்த கனகராஜ் அவரிடம் சென்று வீட்டின் முன்பு சத்தம் போட வேண்டாம் இங்கு இருந்து சென்று விடு என்றார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கணவரின் சத்தத்தை கேட்டு கவிதா ஓடி வந்தார். அவர் மொய்தீனை தகராறில் ஈடுபடாமல் செல்லுமாறு கூறினார்.
இதனால் ஆத்திரம் அடைந்த மொய்தீன் கணவன்-மனைவி 2 பேரையும் தகாத வார்த்தைகளால் திட்டினார். பின்னர் கனகராஜை தாக்கி விட்டு 2 பேரையும் மிரட்டி அங்கிருந்து சென்றார்.
இதுகுறித்து கவிதா பொள்ளாச்சி கிழக்கு போலீசில் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மொய்தீனை கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- போதையில் அட்டூழியம்
- 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்
வேலூர்:
வேலூரை அடுத்த பெருமுகை ஆட்டோ நகர் வழியாக நேற்று முன்தினம் ஒரே மோட்டார் சைக்கிளில் 4 வாலிபர்கள் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அவர்கள் எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி கீழே விழுந்தனர். இதைக்கண்ட அப்பகுதியை சேர்ந்த பாஞ்சாலி, தணிகாசலம் ஆகியோர் அங்கு ஓடி சென்று 4 பேரையும் தூக்கி விட்டு உதவி செய்தனர்.
அதற்கு 4 வாலிபர்களும் எங்களை எப்படி தூக்கி விடலாம் என்று கூறி பாஞ்சாலி, தணிகா சலத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் திடீரென 4 பேரும் சேர்ந்து சரமாரியாக அவர்களை தாக்கினர்.
இதில், தணிகாசலத்தின் தலையிலும், பாஞ்சாலியின் கைவிரலிலும் பலத்த காயம் ஏற்பட்டது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் 4 பேரையும் பிடித்து அடித்து உதைத்தனர்.பின்னர் அவர்கள் தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.
படுகாயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
4 வாலிபர்களும் போதை யில் இருந்ததாகவும், அதனால் தான் உதவி செய்த பெண் உள்பட 2 பேரையும் தாக்கினார்கள்.
விபத்தில் கீழே விழுந்தவர்களை தூக்கி விட்டவர்கள் மீது இப்படி தாக்கினால் எப்படி அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் எண்ணம் வரும்.அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கூறினர்.
குடிபோதையில் தாக்கிய ஒருவர் பெருமுகை பகுதியை சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. அவருடன் வந்த மற்ற 3 பேர் யார் என்று தெரியவில்லை.
4 பேரையும் தேடி வருகிறோம். விரைவில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.