என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "குவால்காம்"
- புதிய 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருக்கிறது.
- முழுமையான 5ஜி அனுபவத்தை வழங்கும் என தெரிகிறது.
இந்திய சந்தையில் ஜியோ பிரான்டிங்கில் மலிவு விலை 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படுவதாக பலமுறை தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அந்த வரிசையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஜியோ மற்றும் குவால்காம் நிறுவனங்கள் இணைந்து முற்றிலும் புதிய 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.
புதிய 5ஜி போன் என்ட்ரி லெவல் மாடல் என்றும் இதன் விலை ரூ. 10 ஆயிரத்திற்கும் குறைவாகவே நிர்ணயம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. இதில் குவால்காம் நிறுவனத்தின் அதிநவீன சிப்செட் வழங்கப்படும் என்று தெரிகிறது. இந்த பிராசஸர் அதிக செலவின்றி முழுமையான 5ஜி அனுபவத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கலாம்.
முன்னதாக ஜியோ பிரான்டிங்கில் 4ஜி ஃபீச்சர் போன் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவை ஜியோ போன் மற்றும் ஜியோ பாரத் என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகின்றன. இவை ஸ்மார்ட்போன்களுக்கு இணையான திறன் கொண்டிருக்காத காரணத்தால், அந்நிறுவனம் எதிர்பார்த்த அளவுக்கு விற்பனையாகவில்லை.
இந்த போன்களில் யூடியூப் மற்றும் வாட்ஸ்அப் போன்ற செயலிகள் பிரீஇன்ஸ்டால் செய்யப்பட்டிருந்த போதிலும், இதில் மற்ற செயலிகளை இன்ஸ்டால் செய்ய முடியவில்லை. ஜியோ 5ஜி போன் மூலம் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இந்திய சந்தையில் ஜியோ பிரான்டிங்கில் மொபைல் போன் மட்டுமின்றி, ஜியோபுக், ஜியோ டைவ், ஜியோ வைபை மெஷ் எக்ஸ்டென்டர், ஜியோ ப்ளூடூத் கேம் கண்ட்ரோலர், ஜியோஃபை, ஜியோ எக்ஸ்டென்டர், யு.எஸ்.பி. கேமரா என பல்வேறு சாதனங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
- சாம்சங் நிறுவனம் குவால்காம் உடன் இணைந்து புது மொபைல் பிராசஸரை அறிமுகம் செய்து இருக்கிறது.
- புது ஸ்னாப்டிராகன் பிராசஸர் கேலக்ஸி மாடல்களுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது.
சாம்சங் நிறுவனத்தின் எதிர்கால ஸ்மார்ட்போன் மாடல்களுக்காக சாம்சங் மற்றும் குவால்காம் நிறுவனங்கள் கூட்டணி அமைத்துள்ளன. முன்னதாக குவால்காம் ஸ்னாப்டிராகன் ப்ரோ சீரிஸ் மாடல்களுக்காக இரு நிறுவனங்கள் கூட்டணி அமைத்து இருந்தன. தற்போது கேலக்ஸி S23 சீரிஸ் மாடல்களில் "குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 ஃபார் கேலக்ஸி" பெயரில் பித்யேக பிராசஸர் வழங்கப்பட உள்ளன.
புது பிராசஸரின் பெயர் நீண்டு இருக்கும் போதிலும், புது ஃபிளாக்ஷிப் மாடல்களில் விசேஷ சிப்செட் உள்ளதை பயனர்களுக்கு நினைவூட்ட பிரத்யேகமாக மாற்றப்பட்ட ஸ்னாப்டிராகன் லோகோவை சாம்சங் தேர்வு செய்து இருக்கிறது. இந்த லோகோ விளம்பர பொருட்களில் அதிகளவில் பயன்படுத்தப்பட இருக்கிறது. அடுத்த வாரத்தில் இருந்தே பயனர்கள் புது லோகோவை விளம்பர பதாகை மற்றும் வலைதளத்தில் காண முடியும்.
இந்த பிராசஸர் சாம்சங் சாதனங்களில் மட்டும் பிரத்யேகமாக பயன்படுத்தப்பட இருக்கிறது. எனினும், இரு நிறுவனங்கள் இடையிலான ஒப்பந்தம் பற்றிய தகவல்கள் ரகசியமாகவே உள்ளன. முன்னதாக புது சாம்சங் ஸ்மார்ட்போன் விலை விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருந்தது. மேலும் இந்த ஸ்மார்ட்போன்களின் விலை விவரங்களும் வெளியாகி இருக்கிறது.
அதன்படி கேலக்ஸி S23 அல்ட்ரா மாடலில் 6.8 இன்ச் QHD+ 3088x1440 பிக்சல் AMOLED ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட், 200MP பிரைமரி கேமரா, 5000 எம்ஏஹெச் பேட்டரி, 45 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்டவை வழங்கப்படும் என கூறப்படுகிறது.
- குவால்காம் நிறுவனம் உலகின் முதல் முறையாக இருவழி குறுந்தகவல் சேவையை அறிமுகம் செய்து இருக்கிறது.
- இந்த குறுந்தகவல் சேவை முழுக்க முழுக்க செயற்கைக்கோள் சார்ந்து இயங்கும் திறன் கொண்டிருக்கிறது.
குவால்காம் டெக்னாலஜிஸ் நிறுவனம் "ஸ்னாப்டிராகன் சாடிலைட்" பெயரில் புது சேவையை 2023 CES நிகழ்வில் அறிவித்து இருக்கிறது. உலகில் முதல் முறையாக செயற்கைக்கோள் சார்ந்து இயங்கும் முதல் இருவழி குறுந்தகவல் சேவை ஆகும். இது பிரீமியம் ஸ்மார்ட்போன்களுக்கு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஸ்னாப்டிராகன் சாடிலைட் உலக மக்கள் அனைவரையும் மொபைல் மெசேஜிங் மூலம் இணைக்கும் பணியை மேற்கொள்ளும்.
முதற்கட்டமாக இந்த சேவை ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் கொண்ட சாதனங்களில் மட்டும் வழங்கப்பட இருக்கிறது. புதிய தொழில்நுட்பம் ஸ்னாப்டிராகன் 5ஜி மொடெம்-RF சிஸ்டம் மூலம் இயங்குகிறது. இந்த சேவை முழுமையாக இயங்கிக் கொண்டிருக்கும் இரிடியம் சாடிலைட் கான்ஸ்டெலேஷன் சார்ந்து இயங்கும்.
இது உதிரி பாகங்கள் உற்பத்தியாளர் மற்றும் இதர சேவை வழங்குவோருக்கு உலகளவில் கவரேஜ் வழங்கும். இரிடியம் வெதர்-ரெசிஸ்டண்ட் L-பேண்ட் ஸ்பெக்ட்ரம் ஸ்மார்ட்போனின் அப்லின்க் மற்றும் டவுன்லின்க் என இரண்டிற்கும் பயன்படுத்தக்கூடியது ஆகும்.
குவால்காம் மற்றும் இரிடியம் செயற்கைக்கோள் சார்ந்த கனெக்டிவிட்டியை அடுத்த தலைமுறை பிரீமியம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கு வழங்கும். கார்மின் அவசரகால தொலைதொடர்புக்கு சப்போர்ட் செய்யும்.
ஸ்னாப்டிராகன் சாடிலைட் உலகம் முழுக்க கவரேஜ் கொண்டிருக்கும். இது இருவழி குறுந்தகவல் அனுப்புவது, எஸ்எம்எஸ் அனுப்புவது போன்றவற்றை மேற்கொள்ள செய்கிறது. NTN சாடிலைட் உள்கட்டமைப்பு மற்றும் கான்ஸ்டலெஷன்கள் கிடைக்கும் போது, ஸ்னாப்டிராகன் சாடிலைட் 5ஜி Non-Terrestrial Network (NTN) சப்போர்ட் வழங்கும். இது அவசரகால இருவழிகளில் குறுந்தகவல் சேவையை ஸ்மார்ட்போன்களில் வழங்கும்.
இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வாக்கில் வெளியாகும் அடுத்த தலைமுறை ஸ்மார்ட்போன்களில் ஸ்னாப்டிராகன் சாடிலைட் மூலம் அவசரகால குறுந்தகவல்களை அனுப்பவும், பெறவும் முடியும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்