search icon
என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    செயற்கைக்கோள் மூலம் மெசேஜிங் - ஸ்னாப்டிராகன் சாடிலைட் சேவை அறிவிப்பு!
    X

    செயற்கைக்கோள் மூலம் மெசேஜிங் - ஸ்னாப்டிராகன் சாடிலைட் சேவை அறிவிப்பு!

    • குவால்காம் நிறுவனம் உலகின் முதல் முறையாக இருவழி குறுந்தகவல் சேவையை அறிமுகம் செய்து இருக்கிறது.
    • இந்த குறுந்தகவல் சேவை முழுக்க முழுக்க செயற்கைக்கோள் சார்ந்து இயங்கும் திறன் கொண்டிருக்கிறது.

    குவால்காம் டெக்னாலஜிஸ் நிறுவனம் "ஸ்னாப்டிராகன் சாடிலைட்" பெயரில் புது சேவையை 2023 CES நிகழ்வில் அறிவித்து இருக்கிறது. உலகில் முதல் முறையாக செயற்கைக்கோள் சார்ந்து இயங்கும் முதல் இருவழி குறுந்தகவல் சேவை ஆகும். இது பிரீமியம் ஸ்மார்ட்போன்களுக்கு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஸ்னாப்டிராகன் சாடிலைட் உலக மக்கள் அனைவரையும் மொபைல் மெசேஜிங் மூலம் இணைக்கும் பணியை மேற்கொள்ளும்.

    முதற்கட்டமாக இந்த சேவை ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் கொண்ட சாதனங்களில் மட்டும் வழங்கப்பட இருக்கிறது. புதிய தொழில்நுட்பம் ஸ்னாப்டிராகன் 5ஜி மொடெம்-RF சிஸ்டம் மூலம் இயங்குகிறது. இந்த சேவை முழுமையாக இயங்கிக் கொண்டிருக்கும் இரிடியம் சாடிலைட் கான்ஸ்டெலேஷன் சார்ந்து இயங்கும்.

    இது உதிரி பாகங்கள் உற்பத்தியாளர் மற்றும் இதர சேவை வழங்குவோருக்கு உலகளவில் கவரேஜ் வழங்கும். இரிடியம் வெதர்-ரெசிஸ்டண்ட் L-பேண்ட் ஸ்பெக்ட்ரம் ஸ்மார்ட்போனின் அப்லின்க் மற்றும் டவுன்லின்க் என இரண்டிற்கும் பயன்படுத்தக்கூடியது ஆகும்.

    குவால்காம் மற்றும் இரிடியம் செயற்கைக்கோள் சார்ந்த கனெக்டிவிட்டியை அடுத்த தலைமுறை பிரீமியம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கு வழங்கும். கார்மின் அவசரகால தொலைதொடர்புக்கு சப்போர்ட் செய்யும்.

    ஸ்னாப்டிராகன் சாடிலைட் உலகம் முழுக்க கவரேஜ் கொண்டிருக்கும். இது இருவழி குறுந்தகவல் அனுப்புவது, எஸ்எம்எஸ் அனுப்புவது போன்றவற்றை மேற்கொள்ள செய்கிறது. NTN சாடிலைட் உள்கட்டமைப்பு மற்றும் கான்ஸ்டலெஷன்கள் கிடைக்கும் போது, ஸ்னாப்டிராகன் சாடிலைட் 5ஜி Non-Terrestrial Network (NTN) சப்போர்ட் வழங்கும். இது அவசரகால இருவழிகளில் குறுந்தகவல் சேவையை ஸ்மார்ட்போன்களில் வழங்கும்.

    இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வாக்கில் வெளியாகும் அடுத்த தலைமுறை ஸ்மார்ட்போன்களில் ஸ்னாப்டிராகன் சாடிலைட் மூலம் அவசரகால குறுந்தகவல்களை அனுப்பவும், பெறவும் முடியும்.

    Next Story
    ×