search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அகழாய்வு"

    • விஜயகரிசல்குளத்தில் 3-ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.
    • சமையல் பாத்திரத்தை உடையாத வகையில் சுடு மண்ணால் நுணுக்கமாக செய்யப்பட்டுள்ளது.

    தாயில்பட்டி:

    வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளத்தில் 3-ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை சூதுபவளம், சங்கு வளையல், அச்சு பதிக்கும் எந்திரம், சுடுமண் முத்திரை, பெண்கள் அணியக்கூடிய தொங்கட்டான், செப்பு காசுகள், மண்பாண்ட பொருட்கள் உள்பட 1,700-க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

    வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதால் அகழாய்வு பணிகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சேதமடையாத நிலையில் பெரிய அளவிலான மண்பாண்ட பாத்திரம் முதல் முறையாக கிடைத்துள்ளது. முன்னோர்கள் சமையல் பாத்திரமாக இதனை பயன்படுத்தி உள்ளனர்.

    சமையல் பாத்திரத்தை உடையாத வகையில் சுடு மண்ணால் நுணுக்கமாக செய்யப்பட்டுள்ளது. அகழாய்வு பணியை தீவிரப்படுத்துவதற்காக கூடுதலாக குழிகள் தோண்ட தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அகழாய்வு இயக்குனர் பொன் பாஸ்கர் தெரிவித்தார்.

    • பயணம் சரியான திசையில் செல்வதை உறுதிசெய்கிறது.
    • நம் முழக்கம் மெய்ப்படப் பணிகளைத் தொடர்வோம்.

    முதலமைச்சர் மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது,

    மூடியுடன் பானை, பாசிமணிகள், சுடுமண் கிண்ணங்கள் - தொட்டி, உறைகிணறு, வெள்ளியிலான முத்திரைக் காசு, சிவப்பு வண்ணக் கொள்கலன், தமிழி பானை ஓடு, இரும்பிலான ஏர்க்கலப்பையின் கொழுமுனை, தக்களி, தந்தத்தாலான பகடைக்காய், சுடுமண் சிற்பம், உணவுக் கிண்ணம், செம்பினாலான அஞ்சனக்கோல் - ஆணி என இப்படித் தொடர்ந்து அகழாய்வுகளில் கண்டுபிடிக்கப்படும் பொருட்கள், தமிழரின் வரலாற்றையும் பண்பாட்டையும் அறிவியல் சான்றுகளுடன் உலகுக்கு எடுத்துக்கூற நாம் மேற்கொண்டுள்ள பயணம் சரியான திசையில் செல்வதை உறுதிசெய்கிறது!

    இந்தியத் துணைக்கண்ட வரலாறு தெற்கிலிருந்து தொடங்கி எழுதப்பட வேண்டும் என்ற நம் முழக்கம் மெய்ப்படப் பணிகளைத் தொடர்வோம்! என்று கூறியுள்ளார்.

    • இத்தகைய விளையாட்டுகள் பாண்டி விளையாட்டு என்று தற்போது அழைக்கப்படுகிறது.
    • பல்வேறு அளவுகளில் சுடுமண்ணால் ஆன வட்டச்சில்லுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

    தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தன் எக்ஸ் தளத்தில் மருங்கூர் அகழாய்வில் இராசராசன் கால வட்டச்சில்லுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

    தமிழர்கள் பொதுவாக ஓய்வு நேரங்களில் தங்களது பொழுதுப்போக்கிற்காக உடல் உழைப்பு மற்றும் அறிவு சார்ந்த விளையாட்டுகளை விளையாடுவது வழக்கம். மருங்கூரில் வாழ்விடப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில் கடந்த வாரம் இராசராசன் காலச் செம்புக் காசு ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

    தற்போது, பல்வேறு அளவுகளில் சுடுமண்ணால் ஆன வட்டச்சில்லுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பெண்களும் சிறுவர்களும் இந்த வட்டச்சில்லுகளைப் பயன்படுத்தி விளையாடியுள்ளனர்.

    இத்தகைய விளையாட்டுகள் பாண்டி விளையாட்டு என்று தற்போது அழைக்கப்படுகிறது. வட்டச்சில்லுகள் கண்டறியப்பட்டுள்ளதன் வாயிலாகத் தற்போது அகழாய்வு செய்யப்படும் இடம் மக்கள் கூடி வாழ்ந்த ஒரு வாழ்விடப்பகுதிதான் என்பது உறுதியாகின்றது.

    • தக்கலை போன்ற தொல்பொருள் பொருட்கள் கண்டுபிடிக்கபட்டது.
    • பண்டைய காலத்தில் விவசாயம் மேற்கொள்ள ஏர் கலப்பையில் பயன்படுத்தப்பட்ட பொருளாக தெரிகிறது.

    சிங்காரப்பேட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே உள்ள சென்னானூர் கிராமத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில் புதிய கற்கால கருவி, சூடு மண்ணால் ஆன முத்திரை, சங்கு வளையல் துண்டுகள், வட்டசில்லுக்கள், கண்ணாடி வளையல் துண்டுகள், தக்கலை போன்ற தொல்பொருள் பொருட்கள் கண்டுபிடிக்கபட்டது.

    இந்த நிலையில் மேலும் ஏ 2 அகழாய்வு குழியில் 75 செ.மீ ஆழத்தில் இரும்பிலான கலப்பையின் கொலுமுனை கிடைக்கப் பெற்றுள்ளது. இதன் எடை 1.292 கிகி, நீலம் 32 செ.மீ, அகலம் 4.5 செ.மீ, தடிமன் 3 செ.மீ உள்ளது. இக்கொழுமுனை பண்டைய காலத்தில் விவசாயம் மேற்கொள்ள ஏர் கலப்பையில் பயன்படுத்தப்பட்ட பொருளாக தெரிகிறது.

    தொல்லியல் சூழ்நிலை கொண்டு இவற்றின் காலம் இடைக்கால வரலாறு காலமாக இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

    • புதிய கற்காலத்தில் தான் முதன்முதலில் விவசாயம் தொடங்கியது.
    • இரும்புக் கழிவுகள், பாறை ஓவியங்கள் எனப் பொருள்கள் கிடைத்துள்ளன.

    சிங்காரப்பேட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், சென்னானூரில் இதற்குமுன் நடைபெற்ற அகழாய்வின்போது பழங்காலப் பொருள்கள் அதிக அளவில் கிடைத்துள்ளன. இங்குள்ள மலையடிவாரத்தின் மேற்பரப்பில் 5,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட நுண்கற்கருவிகள், புதிய கற்கால கைக்கோடாரிகள், இரும்புக் காலத்தைச் சோ்ந்த கருப்பு, சிவப்பு பானை ஓடுகள், இரும்புக் கழிவுகள், பாறை ஓவியங்கள் எனப் பொருள்கள் கிடைத்துள்ளன.

    இங்குள்ள ஒரு கிணற்றில் கிடைத்த செங்கற்கள் 2,000 ஆண்டுகள் பழமையானவை என்பதால் இந்த இடம் சங்ககால மக்களின் வாழ்விடமாக இருக்கக் கூடும் என கருதப்படுகிறது. இதையடுத்து இங்கு அகழாய்வுப் பணிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. கடந்த ஒரு வாரமாக இங்கு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் திங்கள்கிழமை, உடைந்த நிலையில் புதிய கற்காலத்தைச் சோ்ந்த கருவி ஒன்றை அகழாய்வுக் குழுவினா் கண்டெடுத்தனா்.


    இதுகுறித்து சென்னானூா் அகழாய்வு இயக்குநா் பரந்தாமன் கூறியிருப்பதாவது:-

    சென்னானூரில் நடைபெறும் அகழாய்வுப் பணியின்போது பி2 எனும் அகழாய்வுக் குழியில் 53 செ.மீ. ஆழமுள்ள குழியில் உடைந்த புதிய கற்கால வெட்டுக் கருவி ஒன்று எங்களுக்குக் கிடைத்துள்ளது. இந்தக் கருவியின் நீளம் 6 செ.மீ., அகலம், 4 செ.மீ. உள்ளது. இந்தக் கருவி 4,000 ஆண்டுகள் பழமையானது. புதிய கற்காலத்தில் தான் முதன்முதலில் விவசாயம் தொடங்கியது. அப்போது விவசாயத்திற்கு 30 செ.மீ.முதல் 25 செ.மீ., நீளமுள்ள கற்கருவியைத்தான் மக்கள் பயன்படுத்தினா்.

    இந்தக் கருவி அதைவிட அளவில் சிறியது என்பதால் மரக்கிளை, இறைச்சிகளை வெட்டவும், வேட்டையாடுவதற்கும் ஆயுதமாக இதை மனிதன் பயன்படுத்தியிருக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 2-ம் கட்ட அகழாய்வில் திமில் காளை சிற்பம் கண்டெடுக்கப்பட்டது.
    • மாணவ மாணவிகள் நேரில் பார்வையிட்டு வருகின்றனர்.

    சிவகாசி

    சிவகாசி அருகே உள்ள விஜய கரிசல் குளத்தில் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து இரண்டாம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 16 குழி தோண்டப் பட்டு தங்கத் தாலி, எடைகற்கள், கண்ணாடி மணிகள், ஏற்றுமதிக்கு பயன்படுத்த கூடிய முத்திரைகள், யானை தந்ததால் செய்யப் பட்ட ஆபரணங்கள், சங்கினால் செய்யப்பட்ட வளையல்கள், ஏராளமான மண்பானை கள், நாயக்கர் காலத்தில் பயன் படுத்தப்பட்ட செப்பு காசுகள், உட்பட 4,500 க்கு மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

    நேற்று தோண்டப்பட்ட அகழாய்வு குழியில் சுடு மண்னால் செய்யப்பட்ட திமில் உருவம் கொண்ட காளையின் சிற்பம் சேத மடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. முதல் கட்ட அகழாய்வில் திமிழுடைய காளை சிற்பம் கிடைத்தது. அன்றைய கால கட்டத்தில் வாழ்ந்த முன் னர்கள் வீர விளை யாட்டுகளில் பயன்படுத்து வதற்காக இதனை சின்ன மாக பயன்படுத்தி இருக்க லாம் என அகழாய்வு துறையினர் தெரிவித்தனர்.

    மேலும் அகழாய்வு பணிகள் இன்னும் ஒரு வாரம் மட்டுமே நடைபெற இருப்பதால் இதுவரை கண்டெடுக்கப்பட்ட பொருளை ஆவணப் படுத்தும் பணி விறு விறுப் பாக நடைபெற்று வருகிறது.

    வெம்பக்கோட்டை பஸ் நிறுத்தத்தில் இருந்து அகழாய்வு மற்றும் முதலாம் கட்ட அகழாய்வில் கிடைத்த பொருட்கள் வைக்கப்பட்ட கண்காட்சி நடைபெறும் இடம் வரை 2 கிலோ மீட்டர் தூரம் புதிய தார் சாலை போடப்பட்டதால் கூடுதலாக கண்காட்சியும் அகழாய்வியும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் நேரில் பார்வையிட்டு வருகின்ற னர்.

    • விஜயகரிசல்குளம் அகழாய்வில் தங்கத்தாலியும், செப்பு நாணயங்களும் கிடைத்தன.
    • செப்பு நாணயங்களில் சிங்க உடல், யானை தலை, சங்கு போன்ற அடையாளங்களும் உள்ளன.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளத்தில் தொல்லியல் துறை சார்பில் 2-ம் கட்ட அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது. முதல் கட்ட அகழாய்வில் பல்லாயிரக்கணக்கான பொருட்கள் கிடைத்த நிலையில், 2-வது கட்ட அகழாய்விலும் வித்தியாசமான பொருட்கள், ஆபரணங்கள் கிடைத்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில், நேற்று ஒரு அகழாய்வு குழியை தோண்டியபோது, பழங்காலத்தில் பயன்படுத்திய அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய தங்கத்தாலி கிடைத்தது. காண்பதற்கு வித்தியாசமானதாகவும், அதே நேரத்தில் ஆச்சரியப்படுத்தும் வகையிலும் இந்த தாலி உள்ளதாக தொல்லியல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பண்டைய காலத்திலேயே ஆபரணங்களை நேர்த்தியாக வடிவமைப்பதில் நம் முன்னோர் நிபுணத்துவம் பெற்றவர்கள் என்பதற்கு இந்த தாலியே சிறந்த எடுத்துக்காட்டு என்றும் கூறினர்.

    மதுரை நாயக்க மன்னர் ஆட்சி காலத்தில் முத்துவீரநாயக்கர் வெளியிட்ட நாணயம், செஞ்சி நாயக்கர் நாணயம் உள்பட 4 செப்பு நாணயங்களும் அகழாய்வு குழிகளில் இருந்து கிடைத்துள்ளன. இந்த செப்பு நாணயங்களில் சிங்க உடல், யானை தலை, சங்கு போன்ற அடையாளங்களும் உள்ளன.

    இதுவரை 16 அகழாய்வு குழிகள் தோண்டப்பட்டு உள்ளன. அதில் 12 குழிகள் 15 அடி ஆழம் வரை முழுமையாக தோண்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 2-ம் கட்ட அகழாய்வில் இதுவரை 3,480 பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளதாக தொல்லியல் இயக்குனர் பொன் பாஸ்கர் தெரிவித்தார்.

    • அகழாய்வில் தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கிடைத்துள்ளது.
    • கி.மு. 3-ம் நூற்றாண்டு முதல் கி.மு. முதலாம் நூற்றாண்டு வரை தமிழ் பிராமி எழுத்துகளே பயன்படுத்தப்பட்டன.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே உள்ள வடக்குப்பட்டு ஊராட்சி பகுதியில் கடந்த மே மாதம் 19-ந் தேதி 2-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன.

    இங்கு நடந்த முதல்கட்ட அகழாய்வில் இந்த பகுதி கற்கால கருவிகளை தயார் செய்யும் இடமாக இருந்திருக்கலாம் என்பதற்கான சாத்தியக்கூறுகள் தென்பட்டன. இதனை உறுதிப்படுத்த தற்போது 2-ம் கட்ட அகழாய்வு தொடங்கி நடைபெற்று வருகின்றன. தொல்லியல் துறை கண்காணிப்பாளர் எம்.காளிமுத்து தலைமையில் இந்த அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன.

    இந்த பணியின்போது பல்வேறு தொல் பொருட்கள் கண்டறியப்பட்டு உள்ளன. விளையாட்டு பொருட்கள், பானை ஓடுகள், கூம்பு வடிவ ஜாடிகள் போன்ற பல பொருட்கள் கிடைத்து உள்ளன. இந்த நிலையில் தற்போது அகழாய்வில் தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கிடைத்துள்ளது. இதுகுறித்து தொல்லியல் துறை கண்காணிப்பாளர் காளிமுத்து கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட 42 பானை ஓடுகள் பல்வேறு தொல்பொருள் அகழ்வாராய்ச்சி தளங்களில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. அவைகளில் பெரும்பாலானவை தென் தமிழ்நாட்டை சேர்ந்தவை. வட தமிழ்நாட்டில் தமிழ் பிராமி எழுத்துகளுடன் கூடிய பானை ஓடுகள் கிடைப்பது அரிதானது என்றார்.

    மேலும் இதுகுறித்து உதவி தொல்லியல் துறை அதிகாரியான ரமேஷ் கூறும்போது, "காஞ்சீபுரம் மற்றும் பட்டறை பெரும்புதூரில் மட்டுமே எழுத்துகளுடன் கூடிய பானை ஓடுகள் இதுவரை கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

    கி.மு. 3-ம் நூற்றாண்டு முதல் கி.மு. முதலாம் நூற்றாண்டு வரை தமிழ் பிராமி எழுத்துகளே பயன்படுத்தப்பட்டன. எனவே பானை ஓடுகளில் உள்ள கல்வெட்டு இந்த தளத்தின் முக்கியமான கண்டுபிடிப்புகளில் ஒன்றாகும். தமிழ் மொழியின் தொன்மையை நிரூபிக்க இது முக்கியமானது ஆகும்" என்றார்.

    • விஜயகரிசல் குளம் அகழாய்வில் பச்சை குத்தும் கருவி கண்டெடுக்கப்பட்டது.
    • மேற்கண்ட தகவலை தொல்லியல் துறை இயக்குனர் பொன் பாஸ்கர் தெரிவித்தார்.

    சிவகாசி

    சிவகாசி அருகே உள்ள விஜய கரிசல்குளத்தில் 2-ம் கட்ட அகழாய்வு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இதுவரை 16 குழிகள் தோண்டப்பட்ட நிலையில் சங்கு வளையல்கள், மண் சட்டி, நீர்க்கிண்ணம், யானைத் தந்ததால் செய்யப்பட்ட பகடைக்காய், சுடு மண்ணால் செய்யப்பட்ட பொம்மை, எடை கற்கள், நெசவுத் தொழிலுக்கு பயன்படு த்தப்பட்ட தக்களி, ஏற்றுமதிக்கு பயன்ப டுத்தப்பட்ட முத்திரை கருவி, கல் மணிகள், பாசிமணிகள் என 2800-க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத் துள்ளன. நேற்று தோண்டப்பட்ட குழியில் பச்சை குத்துவதற்காக பயன்படுத்தப்பட்ட அச்சு கிடைத்துள்ளது. அதில் இலைகளுடன் கூடிய அழகாக வடிவமைக் கப்பட்டது. இதன்மூலம் பழங்கா லத்தில் நம் முன்னோர்க ளிடம் பச்சை குத்தும் வழக்கம் இருந்துள்ளது உறுதிப்ப டுத்தப்பட்டுள்ளது. மேலும் அகழாய்வு தோண்டப்பட்டதில் 6 குழிகள் முழுமையாக பணிகள் முடிவ டைந்துள்ளன.

    இந்த குழியில் கிடைத்த பொருட்களின் நீளம், அகலம் ஆகியவற்றை வரைபடம் மூலம் ஆவணப்படுத்த முயற்சி மற்றும் அளவீடு செய்யும் முயற்சியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆவணப்படுத்தும் பணி தொடர்ந்து ஒரு வாரம் நடைபெறும். மேற்கண்ட தகவலை தொல்லியல் துறை இயக்குனர் பொன்பாஸ்கர் தெரிவித்தார்.

    • கடந்த 6 மாதங்களுக்கு முன்பு முதல் முறையாக வாழ்விடப்பகுதிகளை கண்டறிய திருக்கோளூரில் அகழாய்வு பணிகள் தொடங்கியது.
    • சுடுமண் சிலைகள், கண்ணாடி வளையல் துண்டுகள், சீன பானை ஓடுகள் என 324 தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    செய்துங்கநல்லூர்:

    கடந்த 2020-ம் ஆண்டு நடந்த மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்து இருந்தார்.

    இதையடுத்து ஆதிச்சநல்லூரில் முதல்கட்டமாக அகழாய்வு பணிகள் கடந்த ஆண்டு தொடங்கி நடந்து வருகிறது. தொடர்ந்து அருங்காட்சியக பணிகளும் நடந்து வருகிறது.

    இதற்கிடையில் ஆதிச்சநல்லூரில் புதைக்கப்பட்ட மக்களின் வாழ்விடப் பகுதிகளை கண்டறிய ஆதிச்சநல்லூரை சுற்றியுள்ள திருக்கோளூர், அகரம், கொங்கராயகுறிச்சி, ஆதிச்சநல்லூர், கருங்குளம் ஆகிய 5 இடங்களில் அகழாய்வு மேற்கொள்ளப்படும் என்று அறிவித்தனர்.

    இதையடுத்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு முதல் முறையாக வாழ்விடப்பகுதிகளை கண்டறிய திருக்கோளூரில் அகழாய்வு பணிகள் தொடங்கியது. இந்த அகழாய்வு பணியில் தற்போது வரை 324 தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அகழாய்வு பணியில் இடைக்கால நாணயங்கள், வெண்கல வளையல், வெண்கல மோதிரம், கண்ணாடி மணிகள், சுடுமண் மணிகள், சுடுமண் சிலைகள், கண்ணாடி வளையல் துண்டுகள், சீன பானை ஓடுகள் என 324 தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து வல்லநாடு அருகே உள்ள அகரம் கிராமத்தில் வாழ்விடப் பகுதிகளை கண்டறியும் பணிகள் தீவிரமாக நடந்து வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

    • கடந்த மே மாதம் 19-ந் தேதி 2-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி இந்த பகுதியில் தொடங்கப்பட்டது.
    • அகழ்வாராய்ச்சி பணி முழுமை அடைந்தால் பல்வேறு பொருட்கள் கிடைக்கப்படுவது தெரிய வரும் என தொல்லியல் துறை சார்பில் தெரிவித்தனர்.

    ஒரகடம்:

    காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் வடக்குப்பட்டு ஊராட்சியில் உள்ள நத்தமேடு பகுதியில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 3-ந்தேதி தொல்லியல் துறை சென்னை வட்டார தொல்லியல் துறை கண் காணிப்பாளர் காளிமுத்து தலைமையில் அகழ்வாராய்ச்சி பணியை தொடங்கியது.

    பணி தொடங்கப்பட்டு 3 மாதம் நடைபெற்று வந்தது. தொல்லியல்துறை அகழ்வாராய்ச்சி மேற்கொண்டதில் அரியவகை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது.

    கண்ணாடி மணிகள். வட்ட சில்கள், இரும்பாலான ஆயுதம், சுடுமண்ணால் ஆன பொம்மைகள், முத்திரை சீல், 0.86 மில்லிகிராம் அளவில் 2 தங்க அணிகலன்கள் மற்றும் பழைய கற்காலத்தில் பயன்படுத்திய கருவிகள் உள்ளிட்டவை கிடைத்தது.

    இந்த நிலையில் கடந்த மே மாதம் 19-ந் தேதி 2-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி இந்த பகுதியில் தொடங்கப்பட்டது. தொடர்ந்து ஒரு மாதமாக நடைபெற்று வந்த அகழ்வாராய்ச்சி பணியில் தங்க ஆபரணத்திலான சிறு தகடு, ராஜராஜ சோழன் காலத்து நாணயங்கள், சுடுமன் கருவி, செப்பு சிறிய கிண்ணம், செப்பு கிண்ண மூடி, சுடுமண் பொம்மைகள், செப்பு வளையங்கள் உள்ளிட்ட அரிய பொருட்கள் கிடைத்துள்ளது. அகழ்வாராய்ச்சி பணி முழுமை அடைந்தால் பல்வேறு பொருட்கள் கிடைக்கப்படுவது தெரிய வரும் என தொல்லியல் துறை சார்பில் தெரிவித்தனர்.

    தொல்லியல் துறை அகழ்வாராய்ச்சியின்போது தங்க ஆபரணங்கள் கண்டெடுக்கப்படும் போது சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். ஆனால் தொல்லியல் துறை சார்பில் கிராம நிர்வாக அலுவலர், வருவாய்த்துறையினருக்கு எந்த தகவலும் தெரிவிப்பதில்லை என்று வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    • கடந்த ஆண்டு இறுதியில் முதல் முறையாக வாழ்விடப் பகுதிகளை கண்டறிய திருக்களூரில் அகழாய்வு பணிகள் தொடங்கியது.
    • கடந்த ஆண்டு இறுதியில் முதல் முறையாக வாழ்விடப் பகுதிகளை கண்டறிய திருக்களூரில் அகழாய்வு பணிகள் தொடங்கியது.

    செய்துங்கநல்லூர்:

    கடந்த 2020-ம் ஆண்டு நடந்த மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். இதனையடுத்து ஆதிச்சநல்லூரில் முதல்கட்டமாக அகழாய்வு பணிகள் கடந்த வருடம் தொடங்கி நடந்து வருகிறது. தொடர்ந்து அருங்காட்சியக பணிகளும் நடந்து வருகிறது.

    இதற்கிடையில் ஆதிச்சநல்லூரில் புதைக்கப்பட்ட மக்களின் வாழ்விடப் பகுதிகளை கண்டறிய ஆதிச்சநல்லூரைச் சுற்றியுள்ள திருக்களூர், அகரம், கொங்க ராயகுறிச்சி, ஆதிச்சநல்லூர், கருங்குளம் ஆகிய 5 இடங்களில் அகழாய்வு மேற்கொள்ளப்படும் என்று அறிவித்தனர்.

    இதனையடுத்து கடந்த ஆண்டு இறுதியில் முதல் முறையாக வாழ்விடப் பகுதிகளை கண்டறிய திருக்களூரில் அகழாய்வு பணிகள் தொடங்கியது. இதற்காக வரலாற்று கால கல்வெட்டுகளை கொண்ட சேர, சோழ, பாண்டீஸ்வரர் கோவில் அருகே பணிகள் தொடங்கியது.

    அகழாய்வு பணிக்காக 3 அகழாய்வு குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இதில் வரலாற்று காலம் முதல் இரும்பு காலம் வரையிலான மண்ணடுக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மற்றுமொரு அதிசயமாக 20 செ.மீ. ஆழத்தில் 5 வரிசை கொண்ட சுடப்படாத மண் செங்கல் கண்டுபிடிக்கப்பட்டது.

    இந்த செங்கல்கள் 26 செ.மீ. நீளம், 18 செ.மீ. அகலம், 8 செ.மீ. உயரத்தில் கிடைக்கப்பட்டுள்ளது. மற்றொரு அகழாய்வுக் குழியில் 4 தரைத்தளங்கள் உள்ளது. முதல் மற்றும் 2-ம் தரைத்தளங்களில் சுடுமண் குழாய்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. 4-ம் தரைத் தளத்தில் அடுப்பு ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

    இங்கு வரலாற்று காலம் முதல் இரும்பு காலம் வரையிலான பானை ஓடுகள் அதாவது சிவப்பு பானை, கருப்பு சிவப்பு பானை, மெருகேற்றப்பட்ட கருப்பு பானை, மெருகேற்றப்பட்ட சிவப்பு பானை மற்றும் பழுப்பு நிறப்பானை வகை ஓடுகள் கிடைக்கின்றன.

    மேற்பரப்பு முதல் 2 மீட்டர் ஆழம் வரை பல வண்ணங்கள் கொண்ட பாசிகள் மற்றும் உடைந்த வளையல்கள் கிடைக்கப்பெறுகின்றன. பச்சை, சிவப்பு, கருப்பு, வெள்ளை ஆகிய வண்ணங்களிலும் வட்டம், உருளை, தட்டு ஆகிய வடிவங்களில் பாசிகள் உள்ளது. அதுமட்டுமின்றி இரும்பு பொருட்கள், செம்பு காசுகள் மற்றும் சுடுமண் உருவங்கள் கிடைத்துள்ளது.

    ×