search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நகைகள்"

    • வடிவேலு காமெடி காட்சியில் ஒரு வீட்டில் கொள்ளையடிக்கும்போது, மோப்ப நாயிடம் இருந்து தப்பிக்க மிளகாய் பொடியை தூவிவிட்டு செல்வது போன்று இந்த கொள்ளை அரங்கேறியுள்ளது.
    • பீரோவுக்குள் இருந்த 27 பவுன் நகைகள் மற்றும் ரூ.2 லட்சத்து 90 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

    ஊட்டி;

    நீலகிரி மாவட்டம் கூடலூர் அக்ரஹார தெருவை சேர்ந்த பைனான்சியர் அரசு மணி. இவர் கடந்த மாதம் 27-ந் தேதி கரூரில் நடந்த உறவினர் திருமணத்தில் கலந்துகொள்ள தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சென்றார். பின்னர் இன்று காலையில் வீடு திரும்பினார். அப்போது வீட்டுக்குள் பொருட்கள் சிதறி கிடந்தது.

    மேலும் பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், பீரோவுக்குள் பார்த்தபோது, அதில் இருந்த 27 பவுன் நகைகள் மற்றும் ரூ.2 லட்சத்து 90 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

    மேலும் பீரோவுக்கு முன்பு மிளகாய் பொடி தூவப்பட்டு இருந்தது. மிளகாய் பொடி இதுகுறித்து கூடலூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அருள் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது பின்பக்க கதவின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே நுழைந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    பின்னர் ஊட்டியில் இருந்து நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அங்கு பதிவான கைரேகைகள் பதிவு செய்யப்பட்டது. மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சினிமாவில் நடிகர் வடிவேலு காமெடி காட்சியில் ஒரு வீட்டில் கொள்ளையடிக்கும்போது, மோப்ப நாயிடம் இருந்து தப்பிக்க மிளகாய் பொடியை தூவிவிட்டு செல்வது போன்று இந்த கொள்ளை சம்பவம் அரங்கேறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • போலீசார் வராததால் சாலை மறியல்
    • ஆரல் வாய்மொழி போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனா போராட்டம் நடத்திய பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் உடன் பாடு ஏற்பட்டதை யடுத்து ஒரு மணி நேரமாக நடந்த மறியல் போராட்டம் கை விடப்பட்டது. பொது மக்கள் பிடியில் இருந்த வாலிபர்கள் இருவரையும் போலீசார் அழைத்துச் சென்றனர்.

    கன்னியாகுமரி,

    ஜூன்.17-

    ஆரல்வாய்மொழி சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மோட்டார் சைக்கிள் மற்றும் நகைகள் திருடப்பட்டு வந்தது. தொடர்ந்து நடந்து வந்த கொள்ளை சம்பவங்களால் பொதுமக்கள் பீதியில் இருந்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு பெருமாள்புரம் பகுதி யில் இரண்டு வாலி பர்கள் அந்தப் பகுதியைச் சேர்ந்த சந்திரகுமார் என்பரின் மோட்டார் சைக்கிளை திருட முயன்றனர். இதைப்பார்த்த அக்கம் பககத்தினர் சத்தம் போட்டனர். இதையடுத்து ஊர் பொதுமக்கள் அந்த இரு வாலிபர்களை பிடித்தனர்.

    பிடிபட்ட வாலிபர்களை அந்தபகுதியில் உள்ள மின் கம்பத்தில் கட்டிவைத்தனர். பின்னர் இது குறித்து ஆரல்வாய்மொழி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் அதிகாலை வரை போலீசார் அங்கு வரவில்லை.

    இதனால் ஆத்திர மடைந்த ஆண்களும், பெண்களும் நாகர்கோவில்- திருநெல்வேலி ரோட் டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட னர். போராட்டத்தின் காரண மாக போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. நெல்லையில் இருந்து வந்த பஸ்கள் அனைத்தும் ஆரல்வாய்மொழியில் இருந்து செண்பகராமன்பு தூர், லாயம் வழியாக திருப்பி விடப்பட்டிருந்தது.

    இதை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். ெபாதுமக்கள் கம்பத்தில் கட்டி வைத்திருந்த வாலிபர்கள் இருவரையும் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று பரிசோதித்த பிறகுதான் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்வதாக கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டது.

    அதன் பிறகு ஆரல் வாய்மொழி போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனா போராட்டம் நடத்திய பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் உடன் பாடு ஏற்பட்டதை யடுத்து ஒரு மணி நேரமாக நடந்த மறியல் போராட்டம் கை விடப்பட்டது. பொது மக்கள் பிடியில் இருந்த வாலிபர்கள் இருவரையும் போலீசார் அழைத்துச் சென்றனர்.

    அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, அவர்கள் ரெத்தினபுரத்தைச் சேர்ந்த ஜோசப் (வயது 20) என்பதும், மற்றொருவர் தடிக்காரன்கோணத்தைச் சேர்ந்த ஆகாஷ் (21) என்பதும் தெரிய வந்தது. இருவரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    ×